“தலித்–முஸ்லிம்” மோதல்கள் [24-04-2018, 05-05-2018], இழப்பீடு அறிவிப்பு 07-05-2018 மற்றும் 12-05-2018 அன்று திருமாவளவன் விஜயம், தலித் பெண்கள் எதிர்ப்பு ஏன்? (4)
“பொம்மிநாயக்கன்பட்டி என்கின்ற துலுக்கப்பட்டியில்….மதநல்லிணக்கம் சீர்குலைகிறது”: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “பொம்மிநாயக்கன்பட்டி என்கின்ற துலுக்கப்பட்டி…….” என்று ஆரம்பித்தது, அவரது போலித்தனத்தை காட்டியது. கலவரம் நடந்தவுடன் என்னால் உடனே வரமுடியவில்லை. ஆனால் எனது கட்சியினர் ஏராளமான உதவிகளை செய்துள்ளனர். நடந்து முடிந்த கலவரம் குறித்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். கலவரத்தில் கைதானவர்களை ஜாமீனில் எடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய உள்ளோம். மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் நோக்கிலே சில அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன”, இவ்வாறு திருமாவளவன் கூறினார்[1]. “குடிசைகள் எரிந்த காலத்தில் வராத சில அமைப்புகள் தற்போது இங்கு வர ஆர்வம் காட்டுகின்றனர். மத நல்லிணக்கத்தைச் சீர் குலைக்கும் நோக்கிலே செயல்படுகின்றனர்,” என இந்து அமைப்புகளைச் சாடினார் திருமாவளவன்[2]. 12-05-2018 அன்று மாலை ஹெச்.ராஜா பொம்மி நாயக்கன்பட்டிக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இரு தரப்பினரும் சமாதானம் பேசி பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்[3].
திருமாவளவனை பாதிக்கப்பட்ட பெண்கள் கேள்விகள் கேட்டது: முன்னதாக, இஸ்லாமியர் மற்றும் தலித் சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து திருமாவளவன் இதுவரை நேரில் சென்று பார்வையிடவில்லை என பல்வேறு பிரிவினர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்[4]. இதனால், வேறு வழியில்லாமல், அங்கு செல்ல தீர்மானித்தார்[5]. தினசரி, “திருமாவளவனை திருப்பியனுப்பிய பொம்மிநாயக்கன்பட்டி மக்கள்” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[6]. “தேவதானப்பட்டி அருகே கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் ஆறுதல் கூறினார். அப்போது, பெண்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.” என்று தினத்தந்தியும் குறிப்பிட்டுள்ளது[7]. திருமா கொடுத்த விளக்கம், “கலவரம் நடந்த இடத்துக்கு நான் தாமதமாக வந்ததாக கூறுகிறார்கள். நான் வராவிட்டாலும், என்னுடைய கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் இங்கு வந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்[8]. பல ஊர்களில் தலித் மக்களின் குடிசைகள் எரிக்கப்பட்டு இன்னல்களுக்கு ஆளானார்கள். அங்கெல்லாம் ஆர்வம் காட்டாத சிலர், இந்த ஊர் பிரச்சினையில் மட்டும் ஆர்வம் காட்டுவது ஆச்சரியமாக உள்ளது…..எங்கள் கட்சி பொறுப்பாளர்கள் இருதரப்பிடமும் ஒற்றுமையாக இருக்க கூறினர். ஆனால் காழ்ப்புணர்ச்சியில் எங்கள் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. ஒற்றுமையை சீர்குலைக்க பார்க்கிறார்கள். மக்கள் அதற்கு இடம் தரமாட்டார்கள்…….” என்றார்[9].
திருமாவளவனின் போக்கு, மனப்பாங்கு முதலியன: திருமா நிச்சயமாக, துலுக்கரிடம் “தாசன்” போன்றுதான் நடந்து கொள்கிறார். அதன் பின்னணி என்ன என்பதனை காரரியங்களுடன் தெரியப் படுத்தப் பட வேண்டும், அறியப் பட வேண்டும். இங்கு தனது இனத்தவரிடமும், துலுக்கருடனும் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது மேலே எடுத்துக் காட்டப்பட்டது:
மசூதிக்குச் சென்று குல்லா போட்டுக் கொண்டு பேசுகிறார். | ஏ.பி.ஆர். மஹாலில் “தலித்துகளுடன்” பேசுகிறார். அதாவது, கோவிலில் உட்கார்ந்து பேசவில்லை, எந்தவித இந்துமத சின்னங்களையும் திக்கவில்லை. |
துலுக்கர் முன்பு நின்று கொண்டு பேசுகிறார். | தலித்துகள் தரையில் உட்கார, இவர் சேரில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார்[10]. |
முஸ்லிம் சொல்வதை பவ்யமாக, தரையில் உட்கார்ந்து கொண்டு கேட்கிறார். | கையை நீட்டி பேசுகிறார், ஒரு பெண் எழுந்து நின்று பேசும் போது, முகத்தை இருக்கமாக வைத்துக் கொள்கிறார். |
துலுக்கரைக் கட்டிப்பிடித்தும், பணிவோடும் பேசுகிறார். | ஒரு இந்து பெண்ணிடம் பேசும் போது, இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு முறைத்துப் பார்க்கிறார். |
40 நிமிடம் உட்கார்ந்ததால், இடது பக்கம் என்றெல்லாம் சாய்ந்து உட்காருகிறார், தண்ணீர் குடிக்கிறார். | இங்கோ, பேசிவிட்டு முஸ்லிம்களிடம் சென்று விடுகிறார். |
முஸ்லிம் பெண்கள் – அங்கு அப்படி கேட்டதாகத் தெரியவில்லை. | பெண்கள் கலவரம் நடந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆனநிலையில் தற்போது தான் வழி தெரிந்ததா? இவ்வளவு நாள் எங்கே சென்றீர்கள்? என்று அவரிடம் கேள்வி கேட்டனர். |
இப்படி துலுக்கர்-தலித்துகளிடம் வித்தியாசமாக நடந்து கொண்டதையும் செக்யூலரிஸ, நடுநிலைவாதிகள் கவனமாக கவனிக்க வேண்டும் அரசியல், அரசியல் கூட்டு, நாளைக்கு பாராளுமன்ற எம்.பி பதவி என்ற ஆசையில், தில்லிக்குச் சென்றதால், தேனி பிரச்சினை அவௌக்கு தேனாகவில்லை போலும். அவரது “துலுக்க சார்பு, ஆதாவு” முதலியவை, எஸ்சிக்களை தனிமைப் படுத்துகிறது என்று தெரிகிறது. இவரது முந்தைய இந்து-விரோத பேச்சுகள் முதலியவற்றையும் இங்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
‘‘பொம்மிநாயக்கன்பட்டி சம்பவத்தில் இந்துக்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்,” எச்.ராஜா 12—05-2018: தேனி, ”பொம்மிநாயக்கன்பட்டி சம்பவத்தில் இந்துக்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்,”என, பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா வலியுறுத்தினார். தேனியில், பொம்மிநாயக்கன்பட்டி இருபிரிவினர் மோதல் தொடர்பாக இந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது[11]: “கம்பத்தில் போலீஸ் செக்போஸ்ட், ஒட்டி இருந்த கோயிலை ஒருவர் இடித்து தரைமட்டாக்கி உள்ளார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. ஆனால் பொம்மிநாயக்கன்பட்டியில் நடந்த பிரச்னையில் பாதிக்கப்பட்ட இந்துக்கள் மீதே வழக்குப்போட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்ட 58 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்பிரச்னை குறித்து ஸ்டாலின், வைகோ, சீமான் பேசாதது, வராதது ஏன். இந்துக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அத்தனையும் ரத்து செய்யவேண்டும்”, என்றார். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் உமையராஜ், நகரத் தலைவர் கார்த்திக், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்[12]. எச்.ராஜா, பாதிக்கப் பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டவர்களை நேரில் சென்று, கண்டு, நலம் விசாரித்தார். இவ்வாறு “இந்துக்களை” ஒன்று சேர்க்கும்முயற்சியில், பிஜேபி ஈடுபடும் நேரத்தில், “தி இந்து” போன்ற நாளிதழ்கள், “இந்து தலித்துகள்” என்று குறிப்பிட ஆரம்பித்து விட்டன. முன்னெரே குறிப்பிட்டப் படி, எஸ்சி என்றாலே இந்துதான் எனும்போது, “இந்து தலித்” பிரயோகம் தேவையில்லை.
© வேதபிரகாஷ்
13-05-2018
[1] தமிழ்.ஒன்.இந்தியா, தேனி பொம்மிநாயக்கன்பட்டி மோதல்– இரு சமூகத்தினரையும் சந்தித்து திருமாவளவன் சமாதான பேச்சு!, Posted By: Hemavandhana Published: Saturday, May 12, 2018, 18:10 [IST] .
[2] விகடன், `மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கப் பார்க்கிறார்கள்!’ − பொம்மிநாயக்கன்பட்டியில் திருமாவளவன்,வீ.சக்தி அருணகிரி, Posted Date : 16:30 (12/05/2018) Last updated : 16:30 (12/05/2018)
[3] https://www.vikatan.com/news/tamilnadu/124849-thirumavalavan-visited-bomminayakanpatti.html
[4] ஈநாடு.இந்தியா, இஸ்லாமியர்-தலித் மோதல் எதிரொலி: திருமாவளவன் ஆறுதல்!, Published 12-May-2018 17:59 IST
[5] http://tamil.eenaduindia.com/State/South/Theni/TheniDistrict/2018/05/12175910/IslamDalit-conflict-Thirumavalavan-comfort.vpf
[6] தினசரி, திருமாவளவனை திருப்பியனுப்பிய பொம்மிநாயக்கன்பட்டி மக்கள், பொதிகைச்செல்வன், மே.12, 2018. 6.37 மாலை.
[7] தினத்தந்தி, கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருமாவளவன் ஆறுதல் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு, மே 13, 2018, 03:45 AM
[8] https://www.dailythanthi.com/News/State/2018/05/13013352/Thirumavalavan-comfort-for-the-victims-of-the-riots.vpf
[9] தினமலர், காழ்ப்புணர்ச்சியால் விமர்சனம் திருமாவளவன் குற்றச்சாட்டு, Added : மே 13, 2018 05:31
http://www.dinamalar.com/news_detail.asp?id=2020083
[10] சங்கராச்சிரியார் முன்பு, பொன்.ராதாகிருஷ்ணன் கீழே உட்கார்ந்தார், சுப்ரமணியம் சுவாமி, இணையாக நாற்காலியில் உட்கார்ந்தார் என்றெல்லாம் படம் போட்டு விவாதிக்கும் ஆட்கள் இதையெல்லாமும் கவனிக்க வேண்டும்.
[11] தினமலர், இந்துக்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், Added : மே 13, 2018 04:25.
அண்மைய பின்னூட்டங்கள்