Posted tagged ‘தெஹ்ரீக்’

சட்டத்திருத்த உறுதிமொழியில் முகமது நபியே கடைசி தூதர் என்று குறிப்பிடும் வாசகம் விடுபட்டதால், பாகிஸ்தானில் கலாட்டா, கலவரம், துப்பாக்கி சூடு!

நவம்பர் 26, 2017

சட்டத்திருத்த உறுதிமொழியில் முகமது நபியே கடைசி தூதர் என்று குறிப்பிடும் வாசகம் விடுபட்டதால், பாகிஸ்தானில் கலாட்டா, கலவரம், துப்பாக்கி சூடு!

Pakistan draft electoral bill, 2017

ஜிஹாதிஇஸ்லாமிஸ்டுகளின் தீவிரவாதங்களினின்று தப்ப சீர்திருத்தங்கள் அவசியம் என்ற நிலையில் கலவரம் உண்டானது: 1947ல் இந்தியாவிலிருந்து துண்டாகி உருவான பாகிஸ்தான், சாவுகள், ரத்தம் சிந்தல், கலவரம் முதலியவற்றுடன் தான் இருந்தது. இஸ்லாமிய நாடாக இருந்து, ஜனநாயக ஆட்சியில்லாமல், ராணுவமும், இஸ்லாமிய முல்லாக்கள், காஜிக்கள், மததலைவர்கள் என்று தான் ஆதிக்கம் செல்லுத்தப் பட்டு ஆட்சி நடந்து வருகின்றது. ஜனநாயகம் என்றாலும் பெயரளவுக்குத் தான் இருக்கிறது. நகரங்களில் மட்டும்நாகரிகமாக, இக்காலத்தவர் போன்று மக்கள் நடந்து கொண்டாலும், மற்ற இடங்களில் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்ள முடியாது. இருப்பினும் மற்ற நாடுகளுடன் இயைந்து செல்ல வேண்டிய நிலையில் சீர்திருத்தம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப் பட்டனர். உலகம் முழுவதும் ஜிஹாதி-இஸ்லாமிஸ்டுகளின் தீவிரவாதங்கள் நகரங்களை அழித்து, மக்களைக் கொன்று, குரூரங்களையே உருவாக்கி வருவதால், அதனை எதிர்க்க இஸ்லாமிய நாடுகள் ஆரம்பித்துள்ளான. சவுதி அரேபியாவே, அத்தகை சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு செயல்படுத்த ஆரம்பித்து விட்டது. அந்நிலையில், சில மாறுதல்களை பாகிஸ்தான் கொண்டு வரலாம் என்று முயலும் நிலையில், இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

Pakistan draft electoral bill, 2017-2

பிரதிநிதிகள் சத்திய பிரமாணம் பற்றிய சட்டத் திருத்தமும், உண்டான பிரச்சினையும்: பாகிஸ்தானில் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகள் சத்திய பிரமாணம் செய்யும்போது அதில் சில வரிகளை மாற்றி பிரமாணம் எடுக்கலாம் என சட்டத்துறை மந்திரி ஜஹித் ஹமீது சமீபத்தில் ஒரு சட்டத்திருத்தம் [the Electoral Reforms Bill 2017] கொண்டுவர முயன்றார்[1]. அதாவது, மசோதா நிலையில் இது விவாதத்திற்குட்பட்டதாக இருக்கிறது. பலரிடத்தில் கருத்துக் கேட்கப் பட்டு வருகின்றது. ஆனால், பல கட்சிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. முஸ்லிம் அல்லாதோருக்கு இடவொதிக்கீடு என்பதை இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்கள் எதிர்த்து வருகிறன. இவ்வாறிருக்கும் நிலையில் தான் பிரச்சினை வேறு வழியில் திருப்பட்டது. தேர்தல் சீர்திருத்தச் சட்டம் 2017ல் செய்யப்பட்ட திருத்தத்துக்கு எதிராக ஏற்பாடு செய்யப்பட்ட இப் போராட்டம் 20 நாளாக நடந்து வந்தது. இந்த சட்டத் திருத்தத்தின்படி நடாளுமன்ற உறுப்பினர்கள் எடுக்கவேண்டிய ஓர் உறுதிமொழியில் முகமது நபியே இறைவனின் கடைசி தூதர் என்று குறிப்பிடும் பழைய வாசகம் ஒன்று விடுபட்டிருந்தது என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், அது தற்செயலானது, பிழை என்று அரசு விளக்கம் அளித்தது. இந்த வாசகம் விடுபட்டது இஸ்லாமிய மறுப்பு எனவும், மத நிந்தனை எனவும் விமர்சிக்கப்பட்டது. இஸ்லமிய பாகிஸ்தானில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உலகமே கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது. சட்ட அமைச்சர் ஜாஹித் ஹமீத்தை பதவி நீக்கவேண்டும் என்று கடும்போக்கு இஸ்லாமியவாத அமைப்பான டெஹ்ரீக்-ஐ-லபைக் யா ரசூல் அல்லா கட்சியின் அஷ்ரஃப் ஜலாய் அணியும், சுன்னி டெஹ்ரீக் அமைப்பும் கோரி வருகின்றன. கவனத்துக்கு வந்தவுடனேயே இந்தப் பிழையினை சரி செய்யப்பட்டுவிட்டதாக அரசு விளக்கமளித்தாலும், இதை கடும்போக்காளர்கள் ஏற்கவில்லை. நவம்பர் 6-ம் தேதி லாகூரில் இருந்து ‘நீண்ட பயணமாகத்’ தொடங்கிய இந்தப் போராட்டம் இஸ்லாமாபாத்தில் முற்றுகையாக மாறித் தொடர்ந்தது. அதாவது உட்கார்ந்து செய்த போராட்டம் தெருக்களில் நடக்க ஆரம்பித்தது.

Pakistan riots- 25-11-2017-1

பைஸாபாதில் ஆரம்பித்த போராட்டம், மற்ற நகரங்களுக்கும் பரவி கலவரமானது: முதலில் பைஸாபாதில் இப்பிரச்சினை ஆரம்பித்தது[2]. “உட்கார்ந்து செய்யும் போராட்டம்மென்று ஆரம்பித்து, வன்முறையில் இறங்கினர்.

  1. தெஹ்ரீக் –இ-லபைக் யா ரஸூல் அல்லா [Tehreek-e-Labaik Ya Rasool Allah (TLYR) led by firebrand cleric Khadim Hussain Rizvi] கதீம் ஹுஸைன் ரிஸ்வி என்ற அழுத்தமான அடிப்படைவாதியின் கீழ் இயங்கும் இயக்கம்,
  2. பாகிஸ்தான் சுன்னி தெஹ்ரீக் [Pakistan Sunni Tehreek (PST)], இன்னொரு அடிப்படைவாத இயக்கம்,
  3. தெஹ்ரீக்-இ-கடம்-இ-நபுவத் [Tehreek-e-Khatam-e-Nabuwat] என்ற இன்னொரு அடிப்படைவாத இயக்கம்.

இந்த மூன்றும் தான், கலவரத்தை பெரிய அளவுக்கு உண்டாக்கக் காரணமாக இருந்தன[3]. பைஸாபாத், ராவல் பின்டி, லாஹுர் என்று பரவியதற்கு, அவர்களது தூண்டுதல்கள் தான் காரணம்[4]. அங்கேயே அதனை அடக்கியிருந்தால் மற்ற நகரங்களுக்குப் பரவியிருக்காது[5]. உண்மையில் அங்கு பலத்தை உபயோகப் படுத்தி, அடக்கத்தான் பார்த்தது, ஆனால், அடிப்படைவாத இயக்கத்தினர், வன்முறையில் ஈடுபட்டதால், கட்டுப்பாட்டை மீறியது[6]. அடிப்படைவாதிகள், தீவிரவாதிகளைப் போல கல்லெறி கலாட்டா மற்றும் இரும்பு கம்புகளைக் கொண்டு தாக்கினர். இதனால், போலீஸ், பாதுகாப்புப் படையினர் என்றில்லாமல், பொது மக்களும் தாக்கப்பட்டனர். இதனால், கலவரம் பெரிய அளவில் மாறியது[7].

Pakistan riots- 25-11-2017-2

கலவரம் ஏற்பட்ட பிறகு அறிவுரை கூறும் எதிர்கட்சிகள்: பிடிஐயின் தலைவர்-இம்ரான் கான், ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர்-சிராஜுல் ஹக் முதலியோர், சட்டம் ஒழுங்குமுறை சீர்கெட்டுள்ளதை சுட்டிக் காட்டினர். ஆயுதங்களோடு அடக்குமுறையில் ஈடுபட்டதை தவிர்த்து, உரையாடல் மூலம் பிரச்சினையை அணுகியிருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்தனர்[8]. அதனால், அரசு அங்கேயே அதனை சரிசெய்திருந்தால் மற்ற நகரங்களுக்கு ஆர்பாட்டம் பரவியிருக்காது என்றும், அரசு வேண்டுமென்றே அலட்சியமாக இருந்தது என்றும் எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன[9]. மேலும் ஜஹித் ஹமீது ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்[10]. இதற்கு பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் சில இஸ்லாமிய அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்[11]. குறிப்பாக, இதனால் அவர் பதவி விலகக்கோரி தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த ஒரு வார காலமாக தெஹ்ரிக் இ லபாயிக் ரா ரசூல் அல்லா அமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்[12]. இதில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்காததால் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் அதிருப்தி அடைந்து அரசின்மீது கடும் கண்டனம் தெரிவித்தன.இதனால் பல லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்[13].

Pakistan riots- 25-11-2017-3

பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததால் தான் துணை ராணுவம் அழைக்கப்பட்டது: பேச்சு வார்த்தைகள் நடத்தாமல் இல்லை, இருப்பினும், மேலே குறிப்பிட்ட அடிப்படைவாத இயக்கங்கள் ஒப்புக் கொள்வதாக இல்லை. தலைவர்களிடமும் விளக்கப்பட்டது. ஆனால், இஸ்லாமிய அரசாக இருப்பதால், அது எல்லா முறைகளையும் தான் கையாண்டு பார்த்தது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. இதையடுத்து தான், பாகிஸ்தான் போலீஸ் மற்றும் துணை ராணுவம், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தடியடி நடத்தி விரட்டும் நடவடிக்கையை நேற்று முதல் ஆரம்பித்துள்ளது. இந்த நடவடிக்கையின் போது, போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் மோதல் வெடித்தது. போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் போராட்டம் நடைபெற்ற இடம் போர்க்களமானது.

Pakistan restricts broadcast 25-11-2017 letter

பாகிஸ்தான் தனது நிலையை பாதுகாத்துக் கொள்ள ஊடக சென்சார் உத்தரவு போட்டது: ஹாவிஸ் சையது விடுதலை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அமெரிக்கா வேறு அவனை மறுமடியும் கைது செய்யப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் தனது நிலையை பாதுகாத்துக் கொள்ள முயல்கிறது. ஆனால் போராட்டக்காரர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையை நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று பாகிஸ்தானில் உள்ள தனியார் தொலைக்காட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு டிவி சேனல்களில் அரசியல் தொடர்பான விவாதங்கள்தான் காட்டப்படுகின்றன. போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையை நேரடியாக ஒளிபரப்புக்கூடாது என்ற உத்தரவை பாகிஸ்தானில் மின்னணு ஊடகங்கள் ஒழுங்கு முறை ஆணையமான ‘பெம்ரா’ பிறப்பித்துள்ளது. சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் போன்ற சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன[14]. போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒளிபரப்பக்கூடாது என்ற உத்தரவை மீறியதாகக் கூறி எல்லா செய்தி தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பையும் பாகிஸ்தான் மின்னணு ஊடக முறைப்படுத்தல் ஆணையம் துண்டித்துள்ளது[15]. அரசுத் தொலைக் காட்சியான பாகிஸ்தான் டிவி தவிர எந்த தொலைக்காட்சி சேனலும் தற்போது செயல்படவில்லை. இந்தக் கலவரத்தைப் பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற பல பத்திரிகையாளர்களும் காயமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன[16].

Pakistan riots- 25-11-2017-4

உயிரிழப்பு, காயம் முதலியன: இந்த போராட்டத்தினால் ஏற்பட்ட கலவரங்களில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் உண்மையான செய்திகள், நிலவரங்களைத் தெரிந்து கொள்ளாத நிலைதான் உள்ளது. இதனால், பாகிஸ்தானில் அவசர காலநிலை பிறப்பிக்கப்பட்டதை போன்ற சூழல் உருவாகியுள்ளது. நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதையடுத்து அதை சமாளிப்பதற்காக ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். மொத்தத்தில்  அறிவிக்கப்படாத அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது[17].

© வேதபிரகாஷ்

26-11-2017

Pakistan draft electoral bill, 2017-3

[1] மாலைமலர், பாகிஸ்தான்: கலவரத்தில் 6 பேர் பலி, 200 க்கும் மேற்பட்டோர் காயம்ராணுவம் வரவழைப்பு, பதிவு: நவம்பர் 25, 2017 23:31

[2] Pakistan Today, Crackdown on Faizabad protest sparks unrest in Karachi, Pakistan, Saturday Nov 25, 2017.

[3] PakistanToday, Twin cities bear the brunt as govt fails to quell Faizabad protest, Sunday Nov 26, 2017.

[4] https://www.pakistantoday.com.pk/2017/11/25/twin-cities-bear-the-brunt-as-govt-fails-to-quell-faizabad-protest/

[5] https://www.pakistantoday.com.pk/2017/11/25/crackdown-on-islamabad-protests-sparks-protest-in-karachi/

[6] GeoNews, Islamabad protest: Use of force complicated the situation, says Siraj,

By GEO NEWS, Pakistan, Saturday Nov 25, 2017.

[7] https://www.geo.tv/latest/169334-isb-protest-use-of-force-has-complicated-the-situation-says-siraj

[8] Expressing concerns over the deteriorating law and order situation in the federal capital, PTI chairman Imran Khan and Jamaat-i-Islami chief Sirajul Haq insisted that instead of launching an armed operation the government should have tried to reach a solution through dialogue.

[9] Dawn, JI, PTI lamblast fedral govt for failing to maintain its writ, November 26, 2017.

[10] https://www.dawn.com/news/1372852

[11] http://www.maalaimalar.com/News/TopNews/2017/11/25233157/1131032/Army-called-out-in-Pak-as-violence-leaves-over-200.vpf

[12] தினத்தந்தி, பாகிஸ்தான் தலைநகரில் பதற்றம் ரப்பர் குண்டுகளை வெடித்து போராட்டக்காரர்கள் விரட்டியடிப்பு, பதிவு செய்த நாள் : நவம்பர் 26, 2017, 01:42 AM

[13] http://www.dailythanthi.com/News/World/2017/11/26014248/Clashes-in-Pakistan-capital-as-police-move-to-disperse.vpf

[14] தினகரன், அறிவிக்கப்படாத அவச்சர நிலை பிரகடனம் பாகிஸ்தானில் பயங்கர கலவரம், 2017-11-26@ 01:04:45

[15] பிபிசி.செய்திகள், பாகிஸ்தானில் கலவரம்: போலீஸ் அதிகாரி கொலைதொலைக்காட்சிகள் முடக்கம், 25 நவம்பர் 2017

[16] http://www.bbc.com/tamil/global-42121258

[17] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=354282