Posted tagged ‘தெரிந்தோ அல்லது தெரியாமலோ’

நக்கீரன், முத்தாரம், தினமலர், தி ஹிந்து……………………?

மார்ச் 29, 2010

நக்கீரன், முத்தாரம், தினமலர், தி ஹிந்து……………………?

இவற்றிற்குள்ள தொடர்பு என்ன?

ஆமாம்,

தெரிந்தோ அல்லது தெரியாமலோ, அத்தகைய ஒன்றை

பார்த்தோ அல்லது பார்க்காமலோ, அத்தகைய ஒன்றை

யாரோ வரைந்து விட்டாராம்!

சித்தரித்து விட்டாராம்!

மற்றொருவருக்கும், தெரிந்தோ அல்லது தெரியாமலோ, பார்த்தோ அல்லது பார்க்காமலோ, இருக்கும்-இருந்த-ஒன்றை, அவர் – அந்நிலையிலேயே அச்சிட கொடுத்து விட்டாராம்!

ஒன்றுமேத் தெரியாத அச்சடிக்கும் தொழிலாளியும் [இப்பொழுது மிஷின்-தான்] தெரிந்தோ அல்லது தெரியாமலோ, பார்த்தோ அல்லது பார்க்காமலோ, இருக்கும்-இருந்த-ஒன்றை அச்சடித்து விட்டாராம் [தொழிலாளிக்கும் மரியாதை].

பிறகெப்படி,தெரிந்தோ அல்லது தெரியாமலோ, பார்த்தோ அல்லது பார்க்காமலோ, இருக்கும்-இருந்த-ஒன்றை மற்றவர்கள் அடையாளம் காணுகிறார்கள், கண்டுகொள்கிறார்கள்?