யாகூப் மேமன் தூக்கும், 257 பேர் பலியும், 150 பேர் காயமும், ரத்தமும், சதைகளும், பிண்டங்களும், மனித உரிமைகளும், மனித உயிர்களும்! (3)

The Memons at the wedding of Yakub and Ayub- The occasion provided a valuable photo album to the police- India today photo
கசாப்பை அடுத்து யாகூப் மேமன்[1]: மகாராஷ்டிர மாநிலத்தில் பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாப் 2012 நவம்பரில் தூக்கிலிடப்பட்டார். அதற்கு அடுத்தபடியாக இப்போது அங்கு யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் கசாப் புணே எரவாடா சிறையிலும், யாகூப் மேமன் நாக்பூர் சிறையிலும் தூக்கிலிடப்பட்டனர். மும்பையில் புகுந்து தாக்குதல் நடத்திய கசாப் தூக்கிலிடப்பட்ட பிறகு. 2013 பிப்ரவரியில் நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றவாளியான அப்சல் குருவுக்கு டெல்லி திகார் சிறையில் தூக்கு நிறைவேற்றப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் அடுத்தடுத்து இரு தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது[2]. முன்னதாக சுதந்திர இந்தியாவில் முதல் தூக்கு தண்டனை, மகாத்மா காந்தி படுகொலை வழக்கில் குற்ற வாளிகளான நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகியோருக்கு நிறை வேற்றப்பட்டது. அவர்கள் இருவரும் பஞ்சாப் மாநிலம் அம்பாலா சிறையில் 1949-ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டனர். அதன் பிறகு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை படுகொலை செய்த சத்வந்த் சிங், கேஹார் சிங் ஆகியோருக்கு 1989-ம் ஆண்டு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் இதுவரை சுமார் 50 தூக்கு தண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனினும் சமீப ஆண்டுகளில் தூக்கு தண்டனைகள் விதிக்கப்படுவதும், நிறைவேற்றப் படுவதும் அதிகரித்துள்ளதாக தூக்கு தண்டனைக்கு எதிராக போராடி வரும் அமைப்புகள் தெரிவித்துள்ளன[3]. ஆனால், அவர்களால் கொலையுண்டவர்களைப் பற்றி ஏன் ஒன்றும் சொல்வதில்லை? தீவிரவாதிகள் தொடர்ந்து இவ்வாறு குண்டுகளை வெடித்து, அப்பாவி மக்களைக் கொண்டு வந்தால், அது மனித உரிமைகளில் ஏற்கப்படுமா?
அம்புகளுக்கு ஆயுள், அம்பை ஏவியவருக்கு தூக்கு: உச்ச நீதிமன்றம் கருத்து[4]: மும்பை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக 129 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் யாகூப் மேமன் உட்பட 12 பேருக்கு மும்பை தடா நீதிமன்றம் கடந்த 2007-ம் ஆண்டில் மரணதண்டனை விதித்தது. வழக்கு விசாரணையின்போதே ஒருவர் உயிரிழந்துவிட்டார். எனினும் உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் 10 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுளாகக் குறைக்கப்பட்டது. யாகூப் மேமனுக்கு மட்டும் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதுகுறித்து உச்ச நீதிமன்றம் அப்போது கூறியதாவது: “பத்து பேரின் மரண தண்டனை ஆயுளாகக் குறைக்கப் பட்டிருக்கிறது. அந்த 10 பேரும் சமுதாயத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் வாழ்ந்த வர்கள். அவர்களுக்கு நிரந்தர வேலை இல்லை. இதனால் வறுமையில் வாடிய அவர்கள் சிலரின் சதிவலையில் சிக்கியுள்ளனர். இதை ஏற்க முடியாது என்றாலும் அவர்கள் வெறும் அம்புகள்தான். அவர்களை வில்லில் இருந்து ஏவியவர்களை மன்னிக்க முடியாது. அவர்கள்தான் திட்டமிட்டு மும்பை தொடர் குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளனர். அந்தந்த வழக்கின் பின்னணி, உண்மைகளை ஆதாரமாகக் கொண்டே தீர்ப்பளிக்க வேண்டும்”, இவ்வாறு உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது[5]. இங்கும், தீர்ப்பின் பகுதியை வெளியிட்டு அலசுவதைக் கவனிக்க வேண்டும். மேலே ஆரம்பத்தில் அதற்காகக் தான், மற்ற பத்திகளையும் சேர்த்துக் கொடுத்துள்ளேன்.
யாகூப் மேமனுக்கு தூக்கு நிறைவேற்றம்: மரண தண்டனையை ஒழிப்பதே கலாமுக்கான உண்மையான அஞ்சலி – தலைவர்கள் கருத்து[6]: இந்தியாவில் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிப்பதே கலாமுக்கு செலுத்தப்படும் உண்மையான அஞ்சலி என்று தமிழக அரசியல் தலைவர்கள் கூறி யுள்ளனர். யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், “மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. யாகூப் மேமனை தூக்கிலிடுவதில் காட்டப்பட்ட அவசரம் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். தூக்கு தண்டனையை ஒழிக்கக் கோரிய கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் நாளில் ஒருவரை தூக்கிலிடுவது அவருக்கு செலுத்தப்பட்ட கொடிய அஞ்சலியாகும். இந்தியாவில் தூக்கு தண்டனையை ஒழிப்பதுதான் காந்தியடிகளுக்கும், கலாமுக்கும் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்”, என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மற்ற தலைவர்களும் – தொல்.திருமாவளவன் (விசிக தலைவர்), எஸ்.ஜே.இனாயத்துல்லாஹ் (அகில இந்திய தேசிய லீக்), கே.கே.எஸ்.எம்.தெகலான் பாகவி (எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர்) முதலியோரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
- இந்தியாவில் மரண தண்டனையை முற்றிலுமாக ஒழிப்பதே கலாமுக்கு செலுத்தப்படும் உண்மையான அஞ்சலி என்றால் 1993 முதல் 2011 வரை கொல்லப்பட்டவர்களுக்கு இவர்கள் எப்படி அஞ்சலி செல்லுத்துவ்வார்கள்?
- யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை நிறைவேற்றியது இஸ்லாமிய சமூகம் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார் ஒருவர், அப்படியென்றால் அவர்களால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டது அதிர்ச்சியைக் கொடுக்கவில்லையா?
- இங்கு இஸ்லாமிய சமூகம் என்று குறிப்பிட்டு பேச வேண்டிய அவசியம் என்ன? அப்படியென்றால், பாதிக்கப்பட்ட இந்து சமூகத்தினைப் பற்றி இவர்களுக்கு கவலை இல்லை என்றாகிறது.
- இது செக்யூலரிஸ இந்தியாவில், இத்தகையோர்களுக்கு இன்னும் பக்குவம் வரவில்லை, சமத்துவம் ஒத்துப் போகல்லை, மனிதநேயம் நோகடிக்கவில்லை, மனிதனுக்கு மனிதன் வித்தியாசம் பார்க்கச் சொல்கிறது என்றாகிறது.
- தீவிரவாதிகளின் உரிமைகள், பயங்கரவாதிகளின் உரிமைகள், குண்டுத் தயாரிப்பவர்களின் உரிமைகள், குண்டுவெடிப்பவர்களின் உரிமைகள், குண்டுவெடித்து ம்மக்களைக் கொல்பவர்களின் உரிமைகள்,……………..என்று பேசும் இவர்கள் மற்றவர்களின் உரிமைகளைப் பற்றி ஏன் நினைப்பதில்லை?
- அந்த பலிக்கடாக்களுக்கு அஞ்சலியை, பரஸ்பர கருணையை, சமரச தீர்ப்பை, சமூகநீதி போன்ற முடிவை இவர்கள் எப்படி அளிப்பார்கள் என்று யோசிக்கவில்லையே?
- தீவிரவாதிகளை இனிமேல் குண்டு தயாரிக்காதே, குண்டு வைக்காதே, குண்டுவெடிக்க வைத்து அப்பாவி மக்களைக் கொல்லாதே என்று ஒருவனும் சொல்லக் காணோமே?
- பயங்கரவாதிகள் அவ்வாறு தொடர்ந்து செய்து வந்தபோது, அவர்கள் எந்த சட்டங்களையும், நீதிகளையும், விதிமுறைகளையும் மீறவில்லையா?
- மரண தண்டனைக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றார் இன்னொருவர், சரி மரணத்தை ஏற்படுத்தும் தீவிரவாய்திகள், பயங்கரவாதிகள், இவர்களுக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று சொல்ல ஏன் எண்ணம் வரவில்லை அல்லது தைரியம் இல்லை?
© வேதபிரகாஷ்
02-08-2015
[1] தி இந்து, கசாப்பை அடுத்து யாகூப் மேமன், Published: July 31, 2015 08:53 ISTUpdated: July 31, 2015 08:56 IST.
[2] தி இந்து இவ்வாறு விவரிப்பது ஏன் என்று கவனிக்க வேண்டும், ஏனெனில், எங்குமே பலிக்கடாக்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய பேச்சே இல்லை!
[3]http://tamil.thehindu.com/india/%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D/article7484494.ece
[4] தி இந்து, அம்புகளுக்கு ஆயுள், அம்பை ஏவியவருக்கு தூக்கு: உச்ச நீதிமன்றம் கருத்து, Published: July 31, 2015 08:48 ISTUpdated: July 31, 2015 09:20 IST
[5]http://tamil.thehindu.com/india/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article7484487.ece
[6] தி இந்து, யாகூப் மேமனுக்கு தூக்கு நிறைவேற்றம்: மரண தண்டனையை ஒழிப்பதே கலாமுக்கான உண்மையான அஞ்சலி – தலைவர்கள் கருத்து, Published: July 31, 2015 08:18 ISTUpdated: July 31, 2015 08:18 IST
அண்மைய பின்னூட்டங்கள்