தீவிரவாதத்தை ஊக்குவிக்கும், ஆதரிக்கும் மற்றும் வளர்க்கும் ஜாகிர் நாயக்கின் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் விதம்.
இஸ்லாமிய ஆராய்ச்சி பவுண்டேசனின் நடவடிக்கைகள்: மும்பையில் இஸ்லாமிக் ஆராய்ச்சி அறக்கட்டளை (ஐஆர்எப்) [Islamic Research Foundation (IRF)] நடத்தி வந்தவர் மதபோதகர் ஜாகிர் நாயக். இவர் தனது அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த நிதிகளை எல்லாம் ‘பீஸ் டிவி’ என்ற சேனலுக்கு வழங்கி தனது பேச்சுக்களை ஒளிபரப்பச் செய்தார்[1]. இவரது பேச்சுக்கள் தீவிரவாதத்தை தூண்டும் வகையில் இருந்ததால், அதை ஒளிபரப்ப இங்கிலாந்து, கனடா, மலேசியா ஆகிய நாடுகளில் தடை விதிக்கப்பட்டது[2]. இப்போது இந்தியாவிற்கு வெளியில் இருக்கும் ஷாகிர் நாயக், ஒவ்வொரு முஸ்லிமும் தீவிரவாதியாக இருக்க வேண்டும் என்றும், அதாவது அமெரிக்காவை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் முன்பு பல பிரசாரங்களில் கூறியிருக்கிறார்[3]. அனைத்து விசாரணைகளுக்கும் ஷாகிர் நாயக் ஒத்துழைப்பார் என்று அவருடைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்[4]. இருப்பினும் வெளிநாடு சென்ற நாயக் இந்தியாவுக்கு திரும்பி வரவில்லை[5]. சென்ற வாரம் தனது தந்தை இறந்த போது கூட, வந்தால், கைது செய்யப் படுவோம் என்று அஞ்சி வராமல் தவிர்த்தார் என்று சொல்லப்பட்டது. இதையெல்லாம் கவனிக்கும் போது, வெளிநாட்டில் இருக்கும் நாயக்கிற்கு, விசயங்கள் சென்று சேர்ந்து வருகின்றன என்று தெரிகிறது.
மாநில மத்திய அரசுகள் நடவடிக்கை எடுத்தது: மஹாராஷ்ட்ரா அரசு முஸ்லிம் இளைஞர்களை மதவாதிகளாக்கி, தீவிரவாதத்தில் ஈடுபடுத்துகிறார் என்று வழக்குகள் பதிவு செய்துள்ளது[6]. மும்பை சிறப்புப் பிரிவு [Special Branch (SB) போலீஸார், Mumbai police] மற்றும் பொருளாதார குற்றப் பிரிவு [Economic Offences Wing (EOW)] முதலிய அதிகாரிகள், மேற்குறிப்பிடப்பட்ட அலுவலங்களில் சோதனையிட்டு, குற்றஞ்சாட்டப்படக் கூடிய வகையில் உள்ள ஆவணங்களைக் கைப்பற்றினர்[7]. அயல்நாட்டு பணம் வரவு கட்டுப்பாடு சட்டத்தின் பிரிவுகளை மீறி பணம் பெறப்பட்டதும் தெரிந்தது. அதை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியது[8]. விசாரணையில் வெளிநாட்டு அன்பளிப்பு கட்டுப்பாடுகள் சட்டத்தை (எப்சிஆர்ஏ) ஐஆர்எப் கல்வி அறக்கட்டளை மீறி செயல்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது[9]. இந்திய ரிசர்வ் வங்கியின் [RBI] முன்னனுமதி இல்லாமல் பணம் பெற்றதும் உறுதி செய்யப்பட்டது[10]. அந்த அமைப்புக்கு சட்ட விரோதமாக வெளிநாடுகளில் நிதி வருவது ஆதாரப்பூரமாக தெரியவந்தது. மேலும், பயங்கரவாதத்திற்கு ஆதரவாக பரப்புரை செய்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக, உளவுத் துறை அளித்துள்ள பல்வேறு ஆதாரங்களின் அடிப்படையில் ஜாகீர் நாயக் நடத்தும் என்ஜீஓ நிறுவனம் சட்டத்திற்கு புறம்பான நிறுவனம் என அடையாளப் படுத்தப்படுவதாக உறுதியானது.
19-11-2016 அன்று நடந்த சோதனைகள்: மத போதகர் ஜாகிர் நாயக் மீது வழக்கு பதிவு செய்த தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் [National Investigation Agency], அவரது தொண்டு நிறுவனங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். மும்பையை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் மதபோதகர் ஜாகிர் நாயக், தனது வெறுப்பு பேச்சுக்கள் மூலம் இளைஞர்களை பயங்கரவாதிகளாக மாற்றுவதாக புகார் எழுந்தது. அந்தவகையில் மும்பை புறநகர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலரை ஜாகிர் நாயக் ஐ.எஸ். அமைப்பில் இணைய வைத்ததாக கூறப்பட்டது. வங்காளதேசத்தில் கடந்த ஜூலை மாதம் 2016 நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட பயங்கரவாதி ஒருவர், ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களால் தான் கவரப்பட்டதாக தெரிவித்து இருந்தார். பங்களாதேசமே இதை அறிவித்து, தடை செய்யுமாறுஈந்தியாவைக் கேட்டுக் கொண்டது. இதனால் அவரது உரைகளை இங்கிலாந்து, கனடா மற்றும் மலேசியா நாடுகள் தடை செய்துள்ளன. இதைத்தொடர்ந்து ஜாகிர் நாயக் நடத்தி வரும் தொண்டு நிறுவனம் மற்றும் அவரது கல்வி அறக்கட்டளைகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய மராட்டிய போலீசார் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பினர்.
முறைப்படி மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கைகள்: ஊடகங்கள் தினமும், அரசு நடவடிக்கைகளை பலவிதமாக வர்ணித்து செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. முக்கிய பிரச்சினைகளை விடுத்து, ஜாகிர் நாயக்கின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் படும், கைது செய்யப் பட்டால் என்ன செய்வார், ய்ஜடை செய்யப் பட்டால் மேல்முறையீடு செய்வாரா, என்றெல்லாம் விவாதம் என்ற பெயரில் நாயக்கிற்கு சாதகமாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. தீவிரவாத செயல்களை உலகளவில் கட்டுப் படுத்த எல்லா நாடுகளும் இறங்கியுள்ளன. இந்தியாவில் ஜி.எஸ்.டி அமூல் படுத்தியவுடன், அந்நிய நாடுகளின் முதலீடு அதிகமாகி, தொழிற்சாலைகள் நிறுப்பப்படும். அந்நிலையில், தீவிரவாதிகள் ஒன்றும் செய்யக் கூடாது. அத்தகைய, சுமூகமான நிலையை இந்தியா ஏற்ப்டுத்த வேண்டியுள்ளது. ஆகவே, ஜாகிர் நாயக்கின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க அரசு தீர்மானித்தது.
முறைப்படி விசாரணை, ஆதாரங்கள் முதலியவற்றுடன் வழக்கு பதிவு செய்த விதம்: சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதனால், ஜாகிர் நாயக்கின் ஐ.ஆர்.எப். நிறுவனத்தில் வேலை செய்பவஎகளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. நாயக்கின் பேச்சுகள் அடங்கிய வீடியோக்கள், புத்தகங்கள் முதலியவை கொண்டு வரப்பட்ட முழுமையாக அலசிப் பார்க்கப்பட்டது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தை போதிக்கிறேன் என்ற போர்வையில், எவ்வாறு முஸ்லிம்-அல்லாதர்களின் மீது ஜிஹாத் என்ற போரை நடத்துவது, போன்ற தீவிரவாதத்தை போதிக்கும் போக்கு அறியப்பட்டது. இவரால் ஈர்க்கப் பட்டு, ஐசிஸ்.சில் சேர்ந்து, ஓடி வந்தவர்களிடம் விசாரித்து திட்டத்தையும் அறியப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த தொண்டு நிறுவனத்தை சட்ட விரோத அமைப்பு என மத்திய அரசு கடந்த 15–ந்தேதி [செவ்வாகிழமை 15-11-2016] அறிவித்தது[11]. மேலும் இந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது. இதில் அடுத்த நடவடிக்கையாக ஜாகிர் நாயக் மீது இந்திய தண்டனை சட்டம் 153 ஏ (மத அடிப்படையில் பகை வளர்த்தல் மற்றும் நல்லிணக்கத்துக்கு கேடு விளைவித்தல்) மற்றும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் [ Unlawful Activities (Prevention) Act and the Indian Penal Code] பல்வேறு பிரிவுகளின் கீழ் வெள்ளிக்கிழமை 18-11-2016 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டது[12]. தேசிய புலனாய்வுத்துறையின் மும்பை பிரிவு அதிகாரிகள் இந்த வழக்கை பதிவு செய்தனர்.
© வேதபிரகாஷ்
20-11-2016
[1] தினகரன், ஜாகிர் நாயக் மீது வழக்கு: 10 இடங்களில் சோதனை: என்.ஐ.ஏ நடவடிக்கை, Date: 2016-11-20@ 00:02:37.
[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=260007
[3] பிபிசி.தமிழ், இஸ்லாமிய போதகர் ஷாகிர் நாயக்கோடு தொடர்புடைய மும்பையின் 10 இடங்களில் சோதனை, நவம்பர் 20,2016,11.25 pm.
[4] http://www.bbc.com/tamil/india-38040016
[5]http://www.dinamani.com/india/2016/nov/16/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-5-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-2599256.html
[6] Deccan Herald, Govt bans Zakir Naik’s organisation, Wednesday 16 November 2016
News updated at 2:37 AM IST.
http://www.deccanherald.com/content/581315/govt-bans-zakir-naiks-organisation.html
[7] The Hindustan Times, IRF ban: Mumbai police await notification, clarity before initiating action, Saurabh M Joshi, Hindustan Times, Mumbai, Updated: Nov 16, 2016 01:10 IST
[8] http://www.hindustantimes.com/mumbai-news/irf-ban-mumbai-police-await-notification-clarity-before-initiating-action/story-iagR2YPHn98Qdxqq8OYIrL.html
[9] http://tamil.oneindia.com/news/india/zakir-naik-ngo-banned-five-years-267327.html
[10] http://www.deccanherald.com/content/581315/govt-bans-zakir-naiks-organisation.html
[11] தினத்தந்தி, தொண்டு நிறுவனங்களில் சோதனை: மத போதகர் ஜாகிர் நாயக் மீது வழக்கு பதிவு தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் அதிரடி, பதிவு செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 20,2016, 2:26 AM IST; மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 20,2016, 3:45 AM IST
[12] http://www.dailythanthi.com/News/India/2016/11/20022625/Religious-preacher-Zakir-Naik-cases–National-intelligence.vpf
அண்மைய பின்னூட்டங்கள்