Posted tagged ‘துலுக்கி’

“தலித்-முஸ்லிம்” மோதல்கள் [24-04-2018, 05-05-2018], இழப்பீடு அறிவிப்பு 07-05-2018 மற்றும் 12-05-2018 அன்று திருமாவளவன் விஜயம், தலித் பெண்கள் எதிர்ப்பு ஏன்? (4)

மே 13, 2018

தலித்முஸ்லிம்மோதல்கள் [24-04-2018, 05-05-2018], இழப்பீடு அறிவிப்பு 07-05-2018 மற்றும் 12-05-2018 அன்று திருமாவளவன் விஜயம், தலித் பெண்கள் எதிர்ப்பு ஏன்? (4)

Thiruma VALmeets Muslims-at Bomminaicketpatti- 12-05-2018

பொம்மிநாயக்கன்பட்டி என்கின்ற துலுக்கப்பட்டியில்….மதநல்லிணக்கம் சீர்குலைகிறது: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “பொம்மிநாயக்கன்பட்டி என்கின்ற துலுக்கப்பட்டி…….” என்று ஆரம்பித்தது, அவரது போலித்தனத்தை காட்டியது. கலவரம் நடந்தவுடன் என்னால் உடனே வரமுடியவில்லை. ஆனால் எனது கட்சியினர் ஏராளமான உதவிகளை செய்துள்ளனர். நடந்து முடிந்த கலவரம் குறித்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன். கலவரத்தில் கைதானவர்களை ஜாமீனில் எடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய உள்ளோம். மத நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் நோக்கிலே சில அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன”, இவ்வாறு திருமாவளவன் கூறினார்[1]. “குடிசைகள் எரிந்த காலத்தில் வராத சில அமைப்புகள் தற்போது இங்கு வர ஆர்வம் காட்டுகின்றனர். மத நல்லிணக்கத்தைச் சீர் குலைக்கும் நோக்கிலே செயல்படுகின்றனர்,” என இந்து அமைப்புகளைச் சாடினார் திருமாவளவன்[2]. 12-05-2018 அன்று மாலை ஹெச்.ராஜா பொம்மி நாயக்கன்பட்டிக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இரு தரப்பினரும் சமாதானம் பேசி பிரச்னையைத் தீர்க்க வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர்[3].

Thiruma-at Bomminaicketpatti- 12-05-2018-1

திருமாவளவனை பாதிக்கப்பட்ட பெண்கள் கேள்விகள் கேட்டது: முன்னதாக, இஸ்லாமியர் மற்றும் தலித் சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து திருமாவளவன் இதுவரை நேரில் சென்று பார்வையிடவில்லை என பல்வேறு பிரிவினர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்[4]. இதனால், வேறு வழியில்லாமல், அங்கு செல்ல தீர்மானித்தார்[5]. தினசரி, “திருமாவளவனை திருப்பியனுப்பிய பொம்மிநாயக்கன்பட்டி மக்கள்” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[6]. “தேவதானப்பட்டி அருகே கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் ஆறுதல் கூறினார். அப்போது, பெண்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.” என்று தினத்தந்தியும் குறிப்பிட்டுள்ளது[7]. திருமா கொடுத்த விளக்கம், “கலவரம் நடந்த இடத்துக்கு நான் தாமதமாக வந்ததாக கூறுகிறார்கள். நான் வராவிட்டாலும், என்னுடைய கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் இங்கு வந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்[8]. பல ஊர்களில் தலித் மக்களின் குடிசைகள் எரிக்கப்பட்டு இன்னல்களுக்கு ஆளானார்கள். அங்கெல்லாம் ஆர்வம் காட்டாத சிலர், இந்த ஊர் பிரச்சினையில் மட்டும் ஆர்வம் காட்டுவது ஆச்சரியமாக உள்ளது…..எங்கள் கட்சி பொறுப்பாளர்கள் இருதரப்பிடமும் ஒற்றுமையாக இருக்க கூறினர். ஆனால் காழ்ப்புணர்ச்சியில் எங்கள் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. ஒற்றுமையை சீர்குலைக்க பார்க்கிறார்கள். மக்கள் அதற்கு இடம் தரமாட்டார்கள்…….” என்றார்[9].

Tiruma meets affected-at Bomminaicketpatti -ABR Mahal -12-05-2018

திருமாவளவனின் போக்கு, மனப்பாங்கு முதலியன: திருமா நிச்சயமாக, துலுக்கரிடம் “தாசன்” போன்றுதான் நடந்து கொள்கிறார். அதன் பின்னணி என்ன என்பதனை காரரியங்களுடன் தெரியப் படுத்தப் பட வேண்டும், அறியப் பட வேண்டும். இங்கு தனது இனத்தவரிடமும், துலுக்கருடனும் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது மேலே எடுத்துக் காட்டப்பட்டது:

மசூதிக்குச் சென்று குல்லா போட்டுக் கொண்டு பேசுகிறார். ஏ.பி.ஆர். மஹாலில் “தலித்துகளுடன்” பேசுகிறார். அதாவது, கோவிலில் உட்கார்ந்து பேசவில்லை, எந்தவித இந்துமத சின்னங்களையும் திக்கவில்லை.
துலுக்கர் முன்பு நின்று கொண்டு பேசுகிறார். தலித்துகள் தரையில் உட்கார, இவர் சேரில் உட்கார்ந்து கொண்டு பேசுகிறார்[10].
முஸ்லிம் சொல்வதை பவ்யமாக, தரையில் உட்கார்ந்து கொண்டு கேட்கிறார். கையை நீட்டி பேசுகிறார், ஒரு பெண் எழுந்து நின்று பேசும் போது, முகத்தை இருக்கமாக வைத்துக் கொள்கிறார்.
துலுக்கரைக் கட்டிப்பிடித்தும், பணிவோடும் பேசுகிறார். ஒரு இந்து பெண்ணிடம் பேசும் போது, இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு முறைத்துப் பார்க்கிறார்.
40 நிமிடம் உட்கார்ந்ததால், இடது பக்கம் என்றெல்லாம் சாய்ந்து உட்காருகிறார், தண்ணீர் குடிக்கிறார். இங்கோ, பேசிவிட்டு முஸ்லிம்களிடம் சென்று விடுகிறார்.
முஸ்லிம் பெண்கள் – அங்கு அப்படி கேட்டதாகத் தெரியவில்லை. பெண்கள் கலவரம் நடந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆனநிலையில் தற்போது தான் வழி தெரிந்ததா? இவ்வளவு நாள் எங்கே சென்றீர்கள்? என்று அவரிடம் கேள்வி கேட்டனர்.

இப்படி துலுக்கர்-தலித்துகளிடம் வித்தியாசமாக நடந்து கொண்டதையும் செக்யூலரிஸ, நடுநிலைவாதிகள் கவனமாக கவனிக்க வேண்டும் அரசியல், அரசியல் கூட்டு, நாளைக்கு பாராளுமன்ற எம்.பி பதவி என்ற ஆசையில், தில்லிக்குச் சென்றதால், தேனி பிரச்சினை அவௌக்கு தேனாகவில்லை போலும். அவரது “துலுக்க சார்பு, ஆதாவு” முதலியவை, எஸ்சிக்களை தனிமைப் படுத்துகிறது என்று தெரிகிறது. இவரது முந்தைய இந்து-விரோத பேச்சுகள் முதலியவற்றையும் இங்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Thiruma-at Bomminaicketpatti- with Muslims sitting on the floor-12-05-2018-1

பொம்மிநாயக்கன்பட்டி சம்பவத்தில் இந்துக்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்,” எச்.ராஜா 12—05-2018: தேனி, ”பொம்மிநாயக்கன்பட்டி சம்பவத்தில் இந்துக்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்,”என, பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா வலியுறுத்தினார். தேனியில், பொம்மிநாயக்கன்பட்டி இருபிரிவினர் மோதல் தொடர்பாக இந்து முன்னணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது[11]: “கம்பத்தில் போலீஸ் செக்போஸ்ட், ஒட்டி இருந்த கோயிலை ஒருவர் இடித்து தரைமட்டாக்கி உள்ளார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. ஆனால் பொம்மிநாயக்கன்பட்டியில் நடந்த பிரச்னையில் பாதிக்கப்பட்ட இந்துக்கள் மீதே வழக்குப்போட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்ட 58 பேர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்பிரச்னை குறித்து ஸ்டாலின், வைகோ, சீமான் பேசாதது, வராதது ஏன். இந்துக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அத்தனையும் ரத்து செய்யவேண்டும்”, என்றார். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் உமையராஜ், நகரத் தலைவர் கார்த்திக், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்[12]. எச்.ராஜா, பாதிக்கப் பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டவர்களை நேரில் சென்று, கண்டு, நலம் விசாரித்தார். இவ்வாறு “இந்துக்களை” ஒன்று சேர்க்கும்முயற்சியில், பிஜேபி ஈடுபடும் நேரத்தில், “தி இந்து” போன்ற நாளிதழ்கள், “இந்து தலித்துகள்” என்று குறிப்பிட ஆரம்பித்து விட்டன. முன்னெரே குறிப்பிட்டப் படி, எஸ்சி என்றாலே இந்துதான் எனும்போது, “இந்து தலித்” பிரயோகம் தேவையில்லை.

© வேதபிரகாஷ்

13-05-2018

Thiruma-with Muslims sitting on the floor obediently-12-05-2018

[1] தமிழ்.ஒன்.இந்தியா, தேனி பொம்மிநாயக்கன்பட்டி மோதல்இரு சமூகத்தினரையும் சந்தித்து திருமாவளவன் சமாதான பேச்சு!, Posted By: Hemavandhana Published: Saturday, May 12, 2018, 18:10 [IST] .

https://tamil.oneindia.com/news/tamilnadu/thirumavalavan-is-the-comfort-the-periyakulam-incident/articlecontent-pf307398-319537.html

[2] விகடன், `மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கப் பார்க்கிறார்கள்!’ − பொம்மிநாயக்கன்பட்டியில் திருமாவளவன்,வீ.சக்தி அருணகிரி, Posted Date : 16:30 (12/05/2018) Last updated : 16:30 (12/05/2018)

[3] https://www.vikatan.com/news/tamilnadu/124849-thirumavalavan-visited-bomminayakanpatti.html

[4] ஈநாடு.இந்தியா, இஸ்லாமியர்-தலித் மோதல் எதிரொலி: திருமாவளவன் ஆறுதல்!, Published 12-May-2018 17:59 IST

[5] http://tamil.eenaduindia.com/State/South/Theni/TheniDistrict/2018/05/12175910/IslamDalit-conflict-Thirumavalavan-comfort.vpf

[6] தினசரி, திருமாவளவனை திருப்பியனுப்பிய பொம்மிநாயக்கன்பட்டி மக்கள், பொதிகைச்செல்வன், மே.12, 2018. 6.37 மாலை.

http://dhinasari.com/local-news/madurai-news/38487-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81.html

[7] தினத்தந்தி, கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருமாவளவன் ஆறுதல் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு, மே 13, 2018, 03:45 AM

[8] https://www.dailythanthi.com/News/State/2018/05/13013352/Thirumavalavan-comfort-for-the-victims-of-the-riots.vpf

[9] தினமலர், காழ்ப்புணர்ச்சியால் விமர்சனம் திருமாவளவன் குற்றச்சாட்டு, Added : மே 13, 2018 05:31

http://www.dinamalar.com/news_detail.asp?id=2020083

[10] சங்கராச்சிரியார் முன்பு, பொன்.ராதாகிருஷ்ணன் கீழே உட்கார்ந்தார், சுப்ரமணியம் சுவாமி, இணையாக நாற்காலியில் உட்கார்ந்தார் என்றெல்லாம் படம் போட்டு விவாதிக்கும் ஆட்கள் இதையெல்லாமும் கவனிக்க வேண்டும்.

[11] தினமலர், இந்துக்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், Added : மே 13, 2018 04:25.

[12] http://www.dinamalar.com/news_detail.asp?id=2020009

துருக்கம், துருக்கர், துலுக்கர், துலுக்கி முதலிய சொற்கள் பிரயோகம், அவற்றைப் பற்றிய விளக்கம் (4)

திசெம்பர் 1, 2017

துருக்கம், துருக்கர், துலுக்கர், துலுக்கி முதலிய சொற்கள் பிரயோகம், அவற்றைப் பற்றிய விளக்கம் (4)

Malikafur, Ranganatha, Tulukka nachi

முன்னுக்கு முரணான வர்ணனை கட்டுக்கதை என்பதனை வெளிப்படுத்துகிறது:

சொல்லப்பட்ட விவரங்கள் பெறப்படும் விவரங்கள்
1.       ஸ்ரீரங்கத்தை முஸ்லீம்கள் கொள்ளையிட்டுச் சென்ற போது டில்லி பாதுஷாவினால் கொண்டு செல்லப்பட்ட ஒரு ரங்கநாதன் விக்கிரக ஸ்ரீரங்கத்தை முஸ்லீம்கள் கொள்ளையிட்டனர்.

ஒரு ரங்கநாதன் விக்கிரகம், .டில்லி பாதுஷாவினால் கொண்டு செல்லப்பட்டது.

2.       விக்கிரகத்தின் மீது பாதுஷாவின் மகள் மனதைப் பறிகொடுத்து அப்பெருமானிடமே அடைக்கலமாகிவிட்டாள் பாதுஷாவின் மகள் மனதைப் பறிகொடுத்தது தில்லியில் என்றால், விக்கிரகம் அங்குதான் இருக்க வேண்டும்
3.       பின்னால் அந்த விக்கிரகத்தை மீட்டுக் கொண்டு வந்தபோது ….. அப்படியென்றால், தில்லி சுல்தான் ஶ்ரீரங்கத்தின் மீது இரண்டாம் முறை படையெடுத்து வந்து, விக்கிரகத்தை கொள்ளையெடித்தானா?
4.       பாதுஷாவின் மகளும் பிரிவாற்றாமையால் பின்தொடர்ந்து வந்து அந்த ரங்கநாதனிடமே ஐக்கியமாகிவிட …. இதன் படி பார்த்தால், மகள் ஶ்ரீரங்கம் வந்தாள், என்றாகிறது. நிச்சயமாக, துலுக்கன் தனது மகளை அப்படி அனுப்பப் பாட்டான், மாறாக கொலை செய்வான்.
5.       அப்பெண்ணுக்குத் துலுக்க நாச்சியார் என்றே பெயரிட்டு பெருமைபடுத்திப் போற்றித் துதித்தனர் வைணவர்கள். வைணவர்களுக்கு அந்த அளவுக்கு புத்தி பேதலித்து விட்டதா என்று தெரியவில்லை. ஸ்ரீரங்கத்தை முஸ்லீம்கள் கொள்ளையிட்டனர். ஒரு ரங்கநாதன் விக்கிரகம், .டில்லி பாதுஷாவினால் கொண்டு செல்லப்பட்டது. என்றெல்லாம் ஆரம்பித்து இப்படி முடிப்பதே விசித்திரமாக உள்ளது.

இது இந்து கோவில் என்பதால், அத்தகைய விளக்கமே தேவையில்லை. ஒருமசூதியில் அவ்வாறிருந்து, அங்கு விக்கிரகம் இல்லையென்றால், அத்தகைய விளக்கம் பொறுந்தும். எனவே, பொய்கதையை எப்படியெல்லாம் வளர்க்கிறார்கள் என்று தெரிகிறது.

Location of Tulukka nachi in temple

மேல்கோட்டையில் இன்னொரு துலுக்க நாச்சியார் / பீவிநாச்சியார்: “இதே போன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள மேல்க்கோட்டை திருநாராயணபுரத்தில் செல்லப்பிள்ளைப் பெருமாளிடம் இரண்டறக் கலந்த துலுக்க நாச்சியாரின் வரலாறும் மேற்படி நிகழ்வோடு  ஒப்பு நோக்கத்தக்கதாகும்”, என்றும் அக்குறிப்பு எடுத்துக் காட்டுகிறது. அப்படியென்றால், இரண்டு இடங்களிலும், துலுக்கர்கள் விக்கிரங்களை, கோவில்களை இடித்து எடுத்துச் சென்றுள்ளனர். இரண்டு இடங்களிலும், இரண்டு துலுக்கநாச்சிகள் ரங்கநாதனிடம் காதல் கொண்டு ஐக்கியமாகி இருக்கவேண்டும். வைணவர்கள் இவ்வாறு கதைகளைக் கட்டி விட்டாலும், துலுக்கர்கள் / முஸ்லிம்கள் இக்கதைகளை ஏற்றுக் கொள்வதில்லை. பிறகு இவர்கள் ஏன் இப்படி துலுக்கச்சியைக் கட்டிக் கொண்டு அழவேண்டும்? ஏற்கெனவே, மாலிகாபூர் வந்து இடிக்க முற்பட்டபோது, விக்கிரங்கள் மறைத்து வைக்கப் பட்டன, என்ற குறிப்புகள் உள்ளன, அந்நிலையில், செக்யூலரிஸத்தை வளர்க்கும் முறையில், இத்தகைய கட்டுக் கதைகளை வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

Bharathiyar, poem and Turukkar

பாரதியார் பாடல்களில் துருக்கர்: பாரதியும் துருக்கர் என்ற பிரயோகத்தை தன்னுடைய பாடல்களில் செய்துள்ளதைக் காணலாம். “நித்தம் திக்கை வணங்கும் துருக்கர்,என்று குறிப்பிட்டதை சிலர் திரிபு விளக்கம் கொடுக்கின்றனர். ஆனால், துருக்கரது கொடுமைகளை அறிந்துதான்,

 

 “தாய்த்திரு நாட்டைத் தறுகண் மிலேச்சர்,
பேய்த்தகை கொண்டோர், பெருமையும் வன்மையும்
ஞானமும் அறியா நவைபடு துருக்கர்  (வரிகள் 44-46)

என்று பாடினார். ஆனால், இப்பொழுது, சில செக்யூலரிஸ்டுகள் அல்லது துருக்கர் ஆதரவு கோஷ்டிகள்,

இதில் “நவைபடு துருக்கர்” என்பது, “நவைபுரி பகைவர்” என்று மாற்றப் பட்டிருக்கிறது.

 

சோதரர் தம்மைத் துருக்கர் ஆண்டழிப்ப
மாதரார் நலத்தின் மகிழ்பவன் மகிழ்க! (வரிகள் 83-84)

இதில் “துருக்கர் ஆண்டழிப்ப” என்பது “துரோகிகள் அழிப்ப” என்று மாற்றப் பட்டிருக்கிறது. திருமந்திரத்தில் எப்படி பாடல்களை எடுத்து, இடைசெருகல்கள் செய்தனரோ, அத்தகைய மோசடிகள் இப்பொழுதும் நடைபெறுகிறது.

Tamil muslim map, Joshua project

இந்துக்கள் கவனிக்க வேண்டிய விசயங்கள்: முகமதியர், தங்களை முஸ்லிம்கள் என்று குறிப்பிட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார்கள், வற்புருத்தினார்கள். பிறகு, அரேபிய-உருது பிரயோகங்களின் மூலம் வரும் வார்த்தைகளைப் புகுத்தினார்கள். சுன்னி என்பதை சன்னி, மெக்காவை மக்கா என்றெல்லாம் சொல்ல வேண்டும் என்றார்கள். ஆனால் இந்துக்கள் அவற்றின் தன்மையினை அறிந்து கொள்ளவில்லை. அடிப்படைவாதத்தை, தம் மீது திணிக்கிறார்கள் என்பதனையும் உணரவில்லை. ஆகவே, கீழ் காணும் விவரங்களை கருத்தில் கொள்ளவேண்டும்:

  1. இந்துக்கள் துலுக்கர், துருக்கியர் முகமதியர், முசல்மான், முஸ்லிம், என இவர்களுடன் யாதாவது ஒரு முறையில், வழியில், சமயத்தில் உரையாடல், சந்திப்பு என ஆதாவது நிகழ்ந்திருந்தாலும், அவர்களைப் பற்றி சரிவர அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்.
  2. துலுக்கர், துருக்கியர் முகமதியர், முசல்மான், முஸ்லிம் முதலியோர் 600 வருடங்கள் இந்தியாவின் பகுதிகளை ஆண்டுவந்தோம் என்ற மமதை இன்றும் இருக்கிறது.
  3. உண்மையில் இந்துக்கள் 200 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திரதரைக்கடல் நாடுகளில் இருந்தனர். 675 முதல் 710 வாக்கில் இஸ்லாத்தின் தாக்குதல்களால் தாக்குப் பிடிக்க முடியாமல் மதம் மாற்றப்பட்டனர்; கொலை செய்யப்பட்டனர்; மலைகள், காடுகள் போன்ற மறைவிடங்களில் வாழ்ந்தனர்.
  4. சோழர்கள் காலம் (13ம் நூற்றாண்டு வரை) வரையில் அவர்களால் தென்னிந்தியாவில் ஆதிக்கம் செல்லுத்த முடியவில்லை.
  5. அவர்கள் இந்துக்கள் பற்றி எதிர்மறையான விசயங்கள் தெரிந்து வைத்திருப்பதால், அடிக்கடி விமர்சித்தில் ஈடுபடுகிறார்கள்.
  6. ஆனால், இந்துக்களில் பெரும்பாலோருக்கு, இஸ்லாத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது.
  7. துருக்கியர் முகமதியர், முசஸமான், முஸ்லிம் என்ற வார்த்தைகளுக்கு உள்ள வேறுபாடு தெரியாது.
  8. உருவ வழிபாடு பற்றி இந்துக்களை அதிகமாக விமர்சிப்பார்கள். ஆனால், அவர்களது உருவ வழிப்பாட்டை பற்றி அப்படியே மறைத்து, மற்றவர்களை குறைகூறுவார்கள்.
  9. பௌத்தம் மத்திரதரைக்கடல் நாடுகளில் அதிகமாகப் பரவியிருந்ததால், அதன் தாக்கம் கிருத்துவம் ,மற்றும் இஸ்லாம் இரண்டின் மீதும் அதிகமாக இருக்கும்.
  10. பௌத்தம் ஏற்கெனவே, இந்துமதத்தில் உள்ளவற்றை தலைகீழாக மாற்றியுள்ளதால், இஸ்லாத்தில் அத்தகைய பழக்க-வழக்கங்களை எளிதாக அறிந்து கொள்ளமுடிகிறது.

எனவே இப்பொழுதுள்ள இந்துக்கள் தங்களது மதநூல்களை படிக்க வேண்டும் , பிறகு வ்அவர்கள் மதநூல்களை படிக்க வேண்டும். அப்பொழுதுதான், அவர்களுடன் சரியானபடி உரையாடல் நடத்த முடியும்.

 

© வேதபிரகாஷ்

30-11-2017

Sri Lankan Arabic inscription- clearly made from Hindu sculpture

துருக்கம், துருக்கர், துலுக்கர், துலுக்கி முதலிய சொற்கள் பிரயோகம், அவற்றைப் பற்றிய விளக்கம் (3)

திசெம்பர் 1, 2017

துருக்கம், துருக்கர், துலுக்கர், துலுக்கி முதலிய சொற்கள் பிரயோகம், அவற்றைப் பற்றிய விளக்கம் (3)

Goods, items mentioned with Tulukka

துலுக்கர் என்ற அடைபொழியில் வழங்கும் சொற்கள்[1]: இன்னும், இந்த துருக்கர்”, துலுக்கர்” என்ற சொற்களை வேராகக் கொண்டு பல புதிய தமிழ்ச் சொற்கள் தமிழ் வழக்கிற்கு வந்துள்ளன அவை :

துருக்கம் – செல்லுதற் கரிய இடம், காடு, மலையரசன்

துருக்கம் – கஸ்துாரி, குங்குமம்

துருக்க வேம்பு – மலை வேம்பு

துருக்கற்பொடி – செம்பிளைக் கற்பொடி

துருக்கமாலை –  குங்கும மலர்மாலை

துருக்கத்தலை –கரு நிறமுள்ள கடல் மீன் வகை

துலுக்கி – சிங்காரி

துலுக்கடுவன் – ஒருவகை நெல்

துலுக்கப்பூ – துலுக்கச் செவ்வந்தி

துலுக்க மல்லிகை – பிள்ளையார் பூ என வழங்கப் படும் மலர், செடி

துலுக்க பசளை –  கீரை வகை

துலுக்க பயறு – பயறு வகை

துலுக்க கற்றாழை – கரிய பவளம் (நாட்டு மருந்து)

மற்றும், துருக்கர்நாடு’ என்ற நிலக்கூறு இருந்ததை பதின்மூன்றாவது நூற்றாண்டு இலக்கிய கர்த்தாவான பரஞ்சோதி முனிவர், தமது திருவிளையாடல் புராணத்தில் குறிப்பிட்டுள்ளதும் இங்குபொருத்தமுடையதாக உள்ளது[2]. மற்றும், தமிழில், ஷர்பத், சிப்பாய், மணங்கு, தர்பார், தைக்கா, வக்கீல், அமீர், உலமா, காஜி, ஜாகிர், ஜமீன்தார் போன்ற துருக்கி மொழிச் சொற்களும், தமிழ்ச் சொற்களாக வழக்கிற்கு வந்துள்ளன.

Engraving of Tamil calendar for prayer found inside the mosque -as claimed

நிகண்டுகள், அகராதிகள் தொகையகராதிகள் து, துருக்கர், துலுக்கர், துலுக்கி – பற்றி சொல்வது: இனி நிகண்டுகள், அகராதிகள் தொகையகராதிகள், இதைப் பற்றி என்ன சொல்கின்றன என்பதனை பார்க்கலாம்.

  1. “து” என்றாலே “வெறுப்பு” என்பதால், வெறுப்பை வெளிப்படுத்தும் சொற்களுடன் வருகிறது (துப்பு, துவேசம், துவர்ப்பு, முதலியன).
  2. துக்கம், துச்சம், துணுக்கம் (அச்சம், பயம், திகில், பீதி), துண்ணிடல் (திடுக்கிடல், பயமுருத்தல்),
  3. துத்து (பொய், ஏமாற்றுதல்), துப்பு, தும்பன் (கெட்ட எண்ணம் கொண்டவன்), துயர், துயரம்,
  4. துணக்கம் (திடுக்கிடுதல், பயமடைதல், பீதியடைதல்), துணுங்கர் (தீய காரியங்களால் அத்தகைய நிலையை ஏற்படுத்துபவர்கள்). திருஞானசம்பந்தர் இதனை ஜைனர் மற்றும் பௌத்தர்களுக்கு உபயோகப்படுத்தினார்.
  5. துர (செலுத்து, ஓடி போதல்), துரக்கம் (குதிரை), ரத-கஜ-துருக்க-பதாதி என்பதிலிருந்தும் அறியலாம்.
  6. துருக்கம் (காடு, பாலைவனம், குழப்பம்),
  7. துருக்கு, துலுக்கு (துருக்கி நாடு, துருக்கியர், துருக்கி மொழி, முகமதியர்)
  8. துர் (எதிர்மறை உண்டாக்கும் சொற்களுக்கு முன் வருவது) துர்மார்க்கம், துராச்சாரம், துராசை, துர்க்குணம், துர்புத்தி, துர்மரணம், முதலியன.
  9. துர்க்கம் (கோட்டை)
  10. துலுக்கு (முகமதியன், பாஷை, பேச்சு, ஆட்டுதல், ஆடுதல், தலையை-உடலை ஆட்டிக் கொண்டு நடத்தல், “துலுக்கி-துலுக்கி” நடத்தல், ”அவ்வாறு செய்யும் பெண் துலுக்கி எனப்பட்டாள்)
  11. துலுக்கி (சிருங்காரி, மயக்கி, மயக்கும் பெண், துலுக்கர் பெண்களை வைத்து மயக்கியதால், அத்தகைய பெண்கள் அவ்வாறே அழைப்பட்டனர்)

இவற்றிலிருந்து அச்சொற்கள் எல்லாமே, எதிர்மறையான, ஒவ்வாத, தீய, கொடிய, திகில்-பீதி-பயங்கரம் முதலியவற்றைக் குறிப்பதாகவே உள்ளது. அதாவது, அத்தகைய கொடிய-குரூர-பீதியைக் கிளப்பும் மக்களைக் குறிக்க பிறகு உபயோகப்படுத்தப் பட்டது தெரிகிறது. மேலும், இவையெல்லாம் பொது வழக்கில் இருந்ததால், 60 ஆண்டுகள் வரையிலும் இருந்ததால், அவற்றின் தாக்கத்தை நன்றாகவே தெரிந்து கொள்ளலாம்.

Yagaush yamuhyidheen- temple converted-front

சீனப் பொருட்கள் போலத்தான் துலுக்கப் பொருட்களும்: பெரும்பாலும் அரேபியர், துருக்கர் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரிந்த விசயமே. அவர்கள் குறிப்பிட்ட பொருட்களை கொண்டு வந்து விற்றதால், அவர்கள் பெயரில் அப்பொருட்கள் அறியப்பட்டன. சீனப்பொருட்கள் எப்படி, சீனா பீங்கான், சைனா பொம்மை, சீன படிகாரம், சீன சுண்ணாம்பு……என்றெல்லாம் அழைக்கப்பட்டனவோ, அதுபோல, அவையெல்லாம், துலுக்கர் / துலுக்கன் / முஸ்லிம் பொருட்கள் என்று சொல்ல முடியாது. இன்றும் கற்பூரம், பன்னீர், சந்தனம், ரோஸ் வாட்டர், சமித்துகள், வெற்றிலை, பாக்கு போன்ற பூஜைப் பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்களை முஸ்லிம்கள் தான் அதிகமாக கடைகள் வைத்து விற்கிறார்கள். ஆனால், அவற்றை, துலுக்க சந்தனம், துலுக்க கற்பூரம், துலுக்க பன்னீர், துலுக்க சமித்து, துலுக்க சாம்பிராணி, துலுக்க வெற்றிலை, துலுக்க பாக்கு, துலுக்க ஜவ்வாது……………………..என்றெல்லாம் பெயர் வைத்து விற்பதில்லை.  அதாவது, துலுக்கராக / முஸ்லிமாக இருந்தும், தங்களது அடையாளங்களை அமுக்கி வாசித்தும், மறைத்தும் தான் வியாபாரம் செய்கின்றனர் என்பதுதான் நிதர்சனம், உண்மை. ஆனால், பெருமையாக, தங்களை வெளிப்படுத்திக் கொண்டு அப்பொருட்களை அவ்வாறு விற்பதில்லை. துலுக்கர் என்பது பெருமையான பெயர், பிரயோகம் என்றால், இன்றும் தாராளமாக வெளிப்படையாக உபயோகிக்கலாம்.

Tuluka nachi added in Ramanuja film 2013

ஶ்ரீரங்கத்தில் ஒரு  துலுக்கநாச்சியார் / பீவிநாச்சியார்: 2013ல் ஶ்ரீநாமானுஜர் திரைப்படம் விசயத்தில், சரித்திர ஆதாரம் இல்லாத “துலுக்க நாச்சியார்” விசயத்தையும் இதில் சேர்த்துள்ளனர்[3]. “ ஸ்ரீரங்கத்தை முஸ்லீம்கள் கொள்ளையிட்டுச் சென்ற போது டில்லி பாதுஷாவினால் கொண்டு செல்லப்பட்ட ஒரு ரங்கநாதன் விக்கிரகத்தின் மீது பாதுஷாவின் மகள் மனதைப் பறிகொடுத்து அப்பெருமானிடமே அடைக்கலமாகிவிட்டாள். பின்னால் அந்த விக்கிரகத்தை மீட்டுக் கொண்டு வந்தபோது பாதுஷாவின் மகளும் பிரிவாற்றாமையால் பின்தொடர்ந்து வந்து அந்த ரங்கநாதனிடமே ஐக்கியமாகிவிட அப்பெண்ணுக்குத் துலுக்க நாச்சியார் என்றே பெயரிட்டு பெருமைபடுத்திப் போற்றித் துதித்தனர் வைணவர்கள். இந்நிகழ்வை நினைவுகூறும் முகத்தான் ஸ்ரீரங்கத்தில் மார்கழி மாதம் நடைபெறும் ஏகாதசி திருவிழா பகல் பத்துத் திருநாளிலே உற்சவப் பெருமாளான நம்பெருமாள் முஸ்லீம் இனத்தவரைப் போன்று லுங்கி வஸ்திரம் கட்டிக்கொண்டு இந்த துலுக்க நாச்சியாருக்கு காட்சி தரும் வழக்கம் தொன்று தொட்டு இன்றும் நடந்துவருகிறது.       துலுக்க நாச்சியாருக்கு எம்பெருமான் ஒருவனே புகலிடம். அவனின்றி தனக்கு வேறு கதியில்லை என்ற (சரணாகதி பூண்ட) வைணவ சித்தி விளைந்ததால் ஆச்சார்ய ஸ்தானத்தில் வைத்துத் தொழத்தக்கப் பெருமை பெறுகிறார்.” என்றெல்லாம் குறிப்புகள் காணப்படுகின்றன[4]. ஆனால், இதற்கு ஆதாரங்கள் எவையும் இல்லாமல், வாய்வழி வந்தவை பிறகு எழுதி வைத்ததாகத் தெரிகிறது[5].  இஸ்லாமியர்களுக்கு உருவ வழியாடு இல்லை என்பதால் இந்தச் சந்நிதியில் துலுக்க நாச்சியார் வண்ணச் சித்திரம் மட்டுமே இருப்பதைப் பார்க்கலாம்[6], என்கிறது ஒரு இணைதளம்.

 

© வேதபிரகாஷ்

30-11-2017

Kilakkarai temple converted into mosque

[1] எஸ். எம். கமால், முஸ்லிம்களும், தமிழகமும், இஸ்லாமிய ஆய்வு பண்பாட்டு மையம், சென்னை, 1990.

[2] பரஞ்சோதிமுனிவர் – திருவிளையாடற்புராணம்-மாணிக்கம் விற்ற படலம். பாடல் : எண் 65,

[3] https://evilsofcinema.wordpress.com/2014/02/07/ramanuja-filming-adding-controversies-in-incorporating-myths/

[4] http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=3

[5] 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு, ஆசிரியர்:
டாக்டர். வைணவச் சுடராழி, ஆ.எதிராஜன் B.A., காரைக்குடி; http://www.tamilvu.org/ta/library-l4211-html-l4211ind-141584

[6]http://thtsiteseminars.wordpress.com/2013/04/04/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/

துருக்கம், துருக்கர், துலுக்கர், துலுக்கி முதலிய சொற்கள் பிரயோகம், அவற்றைப் பற்றிய விளக்கம் (2)

திசெம்பர் 1, 2017

துருக்கம், துருக்கர், துலுக்கர், துலுக்கி முதலிய சொற்கள் பிரயோகம், அவற்றைப் பற்றிய விளக்கம் (2)

Tuluka in inscriptions- Tamilnadu

கல்வெட்டுகளில் துருக்கர் / துலுக்கர் பிரயோகம்; துருக்கி நாட்டில் இருந்து வந்த இஸ்லாமியர்கள் என்ற பொருளில் இந்தச் சொல் துருக்கர் என்றும், நாளைடைவில் துதக்கர் – எனவும் மருவி வழங்கியுள்ளது[1] என்று சிலர் விளக்கம் அளித்தாலும், எந்த இடத்தில், காலத்தில் உபயோகப்படுத்தப் பட்டது என்று கவனிக்க வேண்டும். இந்தச் சொல் வடமொழி, தெலுங்கு, இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் ‘துருஷகா / துருஷ்கா” என பயன்படுத்தப்பட்டு உள்ளது.

  1. “மேத்த சனி கார துலுஸ்க தானுஸ்க,’’ என்பது தாராபுரம் கல்வெட்டுத் தொடரில் உள்ள விருதாவளியாகும்[2].
  2. விஜய நகர மன்னர்களுக்கு [1336-1646] ‘துலுக்க மோகந் தவிழ்ந்தான்’ ‘துலுக்க தள விபாடன்’ என்பனவும், அவர்கள் விருதாவளி (சிறப்புப் பெயர்கள்) எனத் தெரிய வருகிறது[3].
  3. வீரபாண்டிய தேவரது [1309-1345] நிலக் கொடையொன்றில் எல்லை குறிப்பிடும்பொழுது கோவை மாவட்ட பாரியூர் கல்வெட்டு, “கிழக்கு புரட்டலுக்கு மேற்கு, துலுக்கன்பட்டி நேற் மேற்கு,” என வரையறுத்துள்ளது[4].
  4. கொங்குநாட்டில், துலுக்கர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் நிலைத்துவிட்டதை இந்தக் கல்வெட்டு உறுதிசெய்கிறது.
  5. மற்றும் தாராபுரம் கல்வெட்டு துலுக்கர் பள்ளியாகி தானம் தெரியாமலாகிவிட்ட[5]….’ என்ற 14வது நூற்றாண்டின் கல்வெட்டுத் தொடரும்
  6. முன்னாள் ராஜராஜன் பூரீ.சுந்தரபாண்டியத் தேவர் துலுக்கருடன் வந்த நாளையில் … …” என்ற திருக்களர் கல்வெட்டும்[6]:
  7. “துலுக்கர் பலசேமங்கள் தப்பித்து ….” என்ற திருவொற்றியூர் கல்வெட்டுத் தொடரும், துலுக்கர் பற்றிய வரலாற்றுச் செய்திகளை குறிப்பிட்டு, துலுக்கர் தமிழ் மண்ணில் தழைத்துவிட்ட பாங்கினை கோடிட்டு காட்டுகின்றன.

Tulukka patti, kulam, kurichi etc

துலுக்கப்பட்டிகள் / துலுக்கர் வாழ்ந்த இடங்கள்: இன்றைக்கும் தமிழ்நாட்டில், சில பகுதிகளில் உள்ள சிற்றுார்கள் “துலுக்கர்’ குடியிருப்பைக் குறிக்கும் வகையில் அவைகளின் ஊர்ப்பெயர்கள் அமைந்துள்ளன. அவை,

  1. துலுக்கபட்டி – வில்லிபுத்துர் வட்டம்
  2. துலுக்கபட்டி – சாத்துரர் வட்டம்
  3. துலுக்கபட்டி – விருதுநகர் வட்டம்
  4. துலுக்கன் குளம் – நெல்லை வட்டம்
  5. துலுக்கன் குளம் – ராஜபாளையம் வட்டம்
  6. துலுக்கன் குளம் – அருப்புக்கோட்டை வட்டம்
  7. துலுக்கன் குறிச்சி – முதுகுளத்துார் வட்டம்
  8. துலுக்க முத்துார் – அவினாசி வட்டம்
  9. துலுக்க மொட்டை – கோவை வட்டம்
  10. துலுக்க தண்டாளம் – காஞ்சி வட்டம்

Horses imported Vijayanagar

பதவிகளில் இருந்த துருக்கர் / துலுக்கர் / நாயக்கத் துருக்கர்: பன்னிரண்டாவது நூற்றாண்டைச் சேர்ந்த திருப்பத்துளர் கல்வெட்டில் துலுக்கராயன் குழி’ என்ற நில அளவை குறிப் இடப்பட்டுள்ளது[7]. இதிலிருந்து துலுக்கர்களில் சிறப்புடையவரன் ..துலுக்கராயன்’ என அழைக்கப்பட்டாரன் என்பது புலனாகிறது என்று கமால் கூறுகிறார். ஆனால், இடைக்காலத்தில், இந்து அரசர் ஆண்ட காலத்தில் ராணுவங்களில் கூட துருக்கர் / துலுக்கர் பணியில் அமர்த்தப் பட்டிருந்தனர். அதனால், அவன், நாயக் என்ற பதவியை அடைந்தபோது, துலுக்க நாயக் என்றழைக்கப் பட்டான் என்பதில் எந்த வியப்பும் இல்லை. மேலும், தமிழகத்தில் இந்த துலுக்கர்களது குடியிருப்பை குறிக்க துலுக்காணம் என்ற புதிய சொல் வழக்கில் வந்துள்ளது. இந்தச் சொல்லும் அதே 12ம் நூற்றாண்டில் உருவானதாக இருக்கவேண்டும். “துலுக்காணம்”  என்ற பெயரில் இன்றும் தனி நபர்கள் இருக்கிறார்கள், ஆனால், அவர்கள் இந்துக்களாக இருக்கிறார்கள். திரிகடராஜப்பகவிராயரது திருக்குற்றாலக் குறவஞ்சியிலும்[8], இராமநாதபுரம் மன்னர் திருமலை சேதுபதி பற்றிய வண்ணத்திலும்[9]‘ இந்தச் சொல் ஆளப்பட்டுள்ளது. இத்தகைய துலுக்காணத்தில் இருந்த நாயக்கர் ஒருவரது பெயரில் இந்தச் சொல் ஒட்டிக் கொண்டுள்ளதை பதினாறாவது நூற்றாண்டு கல் வெட்டு செய்திகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவரது பெயர் ஏரமஞ்சி துலுக்கான நாயக்கர் என்பதாகும். இவர் பல திருப்பணிகளைச் செய்துள்ளார். அதன் காரணமாக சேலம் ஆறகழுர் வட்டம் பணத்தளை என்ற ஊர், ”துலுக்கான நாயக்கர் பேட்டை” என்ற புதுப் பெயருடன் வழங்கப்பட்டது[10].

Horses imported Vijayanagar-Persian trader

துலுக்காணம், துலுக்காயம், துலுக்க ராஜ்யம் முதலியன; இவை போன்றே துலுக்கரது ஆட்சியைக் குறிக்க துலுக்காணியம்’ என்ற புதுச் சொல் உருவாக்கப்பட்டது. பதினான்காவது நூற்றாண்டில் மதுரையைச் ஆட்சி செய்த மதுரை சுல்தான்களின் ஆட்சியை துலுக்கானியமாக இருந்து” என மதுரைத் தல வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது[11]. காளையார் கோவிலில் உள்ள கி.பி. 1532 ஆண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, தமிழகத்தில் நிலவிய துலுக்கர் ஆட்சியை துலுக்க அவாணம்’ துலுக்க அவாந்தரம்” எனவும் குறிப்பிடுகிறது[12]. இன்னும், ‘துருக்கர் ராச்சியமாய் பல சேமங்கள் தப்பித்து’ என்ற திருவொற்றியூர் கல்வெட்டுத் தொடரும்[13]. துலுக்கர் பற்றிய வரலாற்றுச் செய்திகளைக் குறிப்பிட்டு, துலுக்கர் தமிழ் மண்ணில் தழைத்துவிட்ட விவரங்களை கோடிட்டுக் காட்டுகின்றன.

Madurai sultanate

துலுக்கு-தீய செயல் செய்யும் இந்துவையும் குறித்தது: இன்னும் ‘துலுக்கர் இனத்தைக்” குறிப்பிட, “துலுக்கு’ என்ற சொல் கூட கையாளப் பட்டுள்ளது. வடவிந்தியாவைப் போல, கொடுமைகளை செய்பவரை, துலுக்கன் என்று உருவகமாக குறிக்கப்பட்டதும் தெரிகிறது. திருவிழிமழலை திருக்கோயிலில் அர்ச்சகர் ஒருவர் புரிந்த அட்டுழியத்தை தத்துவப் பிரகாசர் என்ற புலவர், விஜயநகரப் பேரரசருக்கு ஒரு செய்யுள் மூலமாக தெரிவித்தார்.

ஊழித் துலுக்கல்ல, ஒட்டியான் துலுக்குமல்ல

வீழித்துலுக்கு வந்துற்றதே … … …'”[14]

என்பது அந்தக் கவியின் பகுதியாகும். இவ்விதம் துலுக்கர் என்ற சொல், “துலுக்கு’ என மருவி பிற்காலத்தில் மலுக்கு’ என்று கூட பிரயோகம் பெற்றிருப்பதைப் பல நூல்களில் காணலாம். இல்லை, இதனை, துலுக்கர் கோவிலுக்கு எவ்விதமாக இடித்தல், கொள்ளையடித்தல் போன்ற அட்டூழியங்களை செய்வதால், அத்தகைய அநியாயங்களை செய்பவர்களையும், அவ்வாறே குறிப்பிட்டனர் போலும். இக்காலத்தில் நாத்திகர் போர்வையில் திராவிட ஆட்சியாளர்களும், துலுக்கர் போலவே கோவில்களைக் கொள்ளையடித்து வருவதாலும், அவர்கள் துலுக்கருடன் அந்நியோன்யமாக இருப்பதாலும், அவர்களும் அவ்வாறே கருதப்படுகின்றனர் என்பது தெரிந்த விசயமாகிறது. கருணாநிதி, ஸ்டாலின் போன்றோரது இந்து-விரோத செயல்களும் மக்களால் அறியப்பட்டுள்ளன.

© வேதபிரகாஷ்

30-11-2017

Madurai sultanate-coins issed

[1] எஸ். எம். கமால், முஸ்லிம்களும், தமிழகமும், இஸ்லாமிய ஆய்வு பண்பாட்டு மையம், சென்னை, 1990.

[2] தென்னிந்திய கோவில் சாசனங்கள் எண் 309AD-2949-1 தாராபுரம்

[3] சுப்பிரமணியம் பூ – மெய்கீர்த்திகள் (1885) பக் 294-95 கணோச 68/D – 2871

[4] தென்னிந்திய கோயில் சிலாசாசனங்கள் (l) தொகுதி சாசனம் பக்கம் 309/D2949 – 1.

[5] A. R. 642/1902 திருக்களர்

[6] தென்னிந்திய கோயில் சாசனங்கள் தொகுதி – – எண். 523. பக்கம். 82-17

[7] வள்ளியம்மை – திருப்புத்துரர் (1981) பககம் 17

[8] மக்கம், மராடம், துலுக்காணம், மெச்சி குறமகளும் … பாடல் எண் 63-1 திரிகூடராசப்ய கவிராயர் – திருக்குற்றால குறவஞ்சி

[9] வழுமன் மரகதர், துலுக்காணர், சோழர் …” திருமலை ரகுநாத சேதுபதி வண்ணம் (செந்தமிழ் தொகுதி)

[10] A. R. * 4O9, 406 | 1913.

[11] மதுரைத்தல வரலாறு – (மதுரை தமிழ் சங்க பதிப்பு

[12] A. R. 587 / 1902

[13] தென்னிந்திய கோயில் சாசனங்கள் தொகுதி 1.L.R. 52, திருவொற்றியல்.

[14] பெருந்தொகை : மதுரை தமிழ் சங்கப்பதிப்பு (1935) பாடல் எண் 1638

துருக்கம், துருக்கர், துலுக்கர், துலுக்கி முதலிய சொற்கள் பிரயோகம், அவற்றைப் பற்றிய விளக்கம் (1)

திசெம்பர் 1, 2017

துருக்கம், துருக்கர், துலுக்கர், துலுக்கி முதலிய சொற்கள் பிரயோகம், அவற்றைப் பற்றிய விளக்கம் (1)

Kushanas were turushkas

துருஷ்காவிலிருந்து தோன்றிய வார்த்தைகள்அவர்களின் மூலம்: துருஷ்கா (Sanskrit: तुरुष्क) என்ற சமஸ்கிருத வார்த்தை, துருஸ்கா, துருசகா, துருஷ்கரா, துருக்கா, துருக்க என்று பலவாறு உச்சரிக்கப்பட்டு, உபயோகத்தில் இருந்தன. இந்திய-ஸ்கைத்திய வம்சாவளியினரைக் குறிக்க அச்சொற்கள் பிரயோகிக்கப்பட்டன. அதாவது குஷான வம்சத்தவரும் இதில் வருவர். துருக்கிய என்ற சொல் கலாச்சார-மொழி ரீதியில் பற்பல சமூகக் குழுக்களை குறிப்பதாக இருந்தது. அட்லை, அஜெர்பெய்ஜான், பாக், பாஸ்கிர், சாவெஸா, கிரீமியாவின் கரைட், காகுஸ், கராச, கரகல்பக், காஸா, காக், கிரிம்செக், கிர்கிஸ், நகோய், காஸ்கை, தாதார், துர்க்மென், துருக்கியர், ஹுவான், உகுர், உஸ்பெக், யாகுத் போன்ற பழங்கால மக்கள், மற்றும் டிங்லிங், பல்கர், அலத், பாஸ்மில், ஓங்கூர், சடோவ், சுபன், கோக்துர்க், ஒகுஸ் துருக், கங்காலிஸ், கஸார், கில்ஜி, கிப்சக், குமன், கார்லுக், பஹ்ரி கார்லுக், செல்ஜுக் துர்க், திம்ரூத், துர்கேஷ், ஓட்டோமேன் துர்க், என்று மற்றாவரையும் குறிப்பதாக இருந்தது. பிறகு, துருக்கிஸ்தான், துருக்கி பகுதி / நாட்டை ஆண்டவர்களை, சேர்ந்தவர்களைக் குறிக்க உபயோகப் படுத்தப் பட்டது[1].  300 BCE – 100 CE காலகட்டத்தில் ஆண்ட குஷானர்களும் பௌத்தம் மற்றும் இந்துமதங்களை ஆதரித்தது அவர்கள் வெளியிட்டுள்ள, நாணயங்கள் மூலம் அறியலாம். அரேபிய தீபகற்பம் மற்றும் இப்பொழுதைய பாரதம் – இடைப்பட்ட பகுதிகளில் இந்து மதம் இருந்ததற்கு, c.1250 BCE தேதியிட்ட பொகோஸ்காய் போன்ற கல்வெட்டுகள் எடுத்துக் காட்டுகின்றன. துருக்கி/துருக்கிய என்று பார்க்கும் போது, ஐரோப்பிய-ஆசிய பகுதிகளையும் அடக்குவதாக உள்ளது[2].

Turkish covers the Europe culturally etc

அரேபியாவிலிருந்து வந்தவர் எல்லாம் முகமதியர் / முஸ்லிம்கள் இல்லை என்பது போல, துருக்கி மற்றும் துருக்கிப் பகுதிகளிலிருந்து வந்தவர் எல்லாரும் முகமதியர் / முஸ்லிம்கள் இல்லை: ஆக முதல் நூற்றாண்டுகள் வரையில், இப்பொழுது துருக்கி பகுதிக்கு சம்பந்தமே இல்லாதவர் அப்பெயர்களில் அழைகப்பட்டனர். மொஹம்மதுவிற்குப் (570-632 CE) பிறகு காலிபேட் என்ற ஆட்சி 7ம் நூற்றாண்டில் தொடங்கி 13 நூற்றாண்டு வரை தோன்று, வளர்ந்து, அரேபிய தீபகற்பம் பகுதிக்கு வெளியே பரவ ஆரம்பித்தது. அதிலும், அப்பாஸித் காலிபேட் காலத்தில் [750–1258 CEமற்றும் 1261–1517 CE] சமஸ்கிருத பண்டிதர்கள் பாக்தாத்திற்கு வரவேற்க்கப்பட்டு, வானியல், கணிதம், மருத்துவம் போன்ற புத்தகங்கள் அரேபித்தில் மொழிபெயர்க்கப்பட்டன. அதாவது, அப்பொழுது முகமதியம் தீவிரமாக அறியப்படவில்லை என்றாகிறது. 712 CEல் தான் சிந்து பகுதி மீது, அரேபியர் படையெடுத்ததாக உள்ளது. அப்பொழுது இந்து அரசர்கள் ஆண்டு வந்தனர். முகமது கஜினி (971-1030 CE) மற்றும் கோரி முகமது (1149-1206 CE),  ஆண்டது (1202-1206 CE) (1206 CE சோமநாத படையெடுப்பு, கோவில் அழிப்பு) காலங்களில் தான், “முகமதியர்” என்ற ரீதியிலான படையெடுப்புகள் ஏற்பட்டன. ஆக, 712 CE முதல் 1206 CE வரை அதாவது 8-13 நூற்றாண்டுகளில் தான் “இஸ்லாம் அல்லது கத்தி” வேலை செய்து கொண்டிருந்தது. கடல்வழி போக்குவரத்து மூலம் கிரேக்க- ரோமானிய தொடர்புகள் இருந்தது போல, அரேபியரும் மேற்குக் கடற்கரை, தென்னாட்டு பகுதிகளுக்கு வந்திருக்கலாம். ஆனால், அவர்கள் முகமதியர் / முஸ்லிம்கள் இல்லை. அரேபியாவிலிருந்து வந்தவர் எல்லாம் முகமதியர் / முஸ்லிம்கள் இல்லை என்பது போல, துருக்கி மற்றும் துருக்கிப் பகுதிகளிலிருந்து வந்தவர் எல்லாரும் முகமதியர் / முஸ்லிம்கள் இல்லை.

Malikafur, Alavuddhin Kilji, LBT

காபூலிவாலா / ஈட்டிக் காரன், போன்றுதான் கொடூர, குரூர, தீவிரவாதிகள் போன்றவர்களைக் குறிப்பிட்டுக் காட்ட, துருக்கர் / துலுக்கர் என்ற பிரயோகம் ஏற்பட்டது: “கத்தி-இஸ்லாம்” என்ற தீவிரவாதத்துடன், முகமதியர்-அல்லாதவரைக் கொன்று, வலுக்கட்டாயமாக மதமாற்றி, அவர்களது வழிபாட்டு ஸ்தலங்களை இடித்து-அழித்து-ஆக்கிரமித்து மாற்ற ஆரம்பித்த போது, அத்தகைய கொடூர, குரூர, தீவிரவாதிகள் போன்றவர்களைக் குறிப்பிட்டுக் காட்ட, துருக்கர் / துலுக்கர் என்ற பிரயோகம் ஏற்பட்டது. எப்படி, காபூலிவாலா / ஈட்டிக் காரன், போன்றவை உபயோகப்படுத்தப் பட்டபனவோ, அது போன்று, துருஷ்கா வடவிந்தியாவில் பிரபலமாகியது போல, துருக்கர் / துலுக்கர், துலுக்கச்சி, துருக்கவாடு போன்ற வார்த்தைகள் தென்னிந்தியாவில் பிரபலமாகின. இது, மாலிகாபூரின் கொள்ளை-படையெடுப்பிற்குப் பிறகு அதிகமாகியது. மாலிகாபூரின் கொடுமை-குரூரம்-தீவிரவாதம் தேவகிரி (1308), வாரங்கல் (1310) துவாரசமுத்திரம் (1311), பாண்டிய ராஜ்ய பகுதிகள் (1311) முதலிய நகரங்களை தாக்கி, கோவில்களை தரை மட்டமாக்கி, தங்கம்-முதலியவற்றைக் கொள்ளையடித்து சென்றபோது அப்பிரயோகம் வலுப்பட்டது. மேலும், இவர்கள் குழந்தைகள், இளம்பிள்ளைகள் முதலியோரைப் பிடித்துக் கொண்டு போகும் பழக்கமும் உண்டு, இதனால், அவர்களை, “பிள்ளைப் பிடிக்கிறவன்” என்றும் குறிப்பிட்டனர். “அலிகளை” உண்டாக்குவதும் அவர்களின் வேலையாக இருந்தது. மாலிகாபூரே ஒரு அலிதான்.

Turkey map

முகமதியம் தோன்றி 8-9ம் நூற்றாண்டுகளில் தான் வடகிழக்கில் முகமதியருக்கு அச்சொல் பிரயோகம் ஆரம்பித்தது: துருக்க என்ற சொல் இடைகாலத்தில் கடுமையான, கொடுமையான அரசர்களைக் குறித்தது. முகமதியம் தோன்றி 8-9ம் நூற்றாண்டுகளில் தான் வடகிழக்கில் முகமதியருக்கு அச்சொல் பிரயோகம் ஆரம்பித்தது. மேலும் மிலேச்சர் என்ற வார்த்தையும் பொதுவாக உபயோகப்படுத்தப் பட்டு வந்தது. இது கிரேக்கர் முதல் துருக்க வரை குறிப்பதாக இருந்தது. அரேபியாவில் வாழ்ந்தவர் மற்றும் அங்கிருந்து வந்தவர் எல்லாம் முகமதியர் இல்லை. 12ம் நூற்றாண்டிற்குப் பிறகு தான் அந்த ரீதியில் அறியப்பட்டனர். தென்னகத்தைப் பொறுத்தவரை, இவர்கள் அறியப்படவில்லை என்றே தெரிகிறது. அதாவது, வணிகர்களாக வந்து சென்றவர், முகமதியராகவில்லை என்றாகிறது.

Tuluka and others wearing topi-kulla

11ம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழ் இலக்கியங்களில் காணப்படும் வார்த்தை: துலுக்கர், பிற்காலத் தமிழ் இலக்கியங்களில் சோனகர் எனவும், துருக்கர் எனவும், ராவுத்தர் எனவும், இனம்பிரித்துக் காட்டியுள்ளன[3]. முருகன் கூட, குதிரை ஏறும் ராவுத்தன் என்று அழைக்கப்பட்டது கவனிக்கத் தக்கது. அதாவது, இவர்கள் எல்லோருமே துருக்கர் ஆகாது அல்லது துருக்கியிலிருந்து வந்தவர் அல்ல என்று பிரித்துக் காட்டுவதாக இருந்தன. இந்தச் சொல் தமிழகத்தில் பதினோராவது நூற்றாண்டிலேயே வழக்கில் இருந்தமைக்குச் சான்றாக பதினோராவது நூற்றாண்டு இலக்கியமான ஜெயங்கொண்டாரது கலிங்கத்துப்பரணி, காஞ்சிபுரம் மாளிகையில், முதற் குலோத்துங்க சோழ மன்னனுக்கு [1070-1120] திறையளந்த நாற்பத்து எட்டுத் தேய மன்னர்களின் பட்டியலில் ‘துருக்கரையும் சேர்த்துள்ளது[4]. அதே மன்னன் மீது புனையப்பட்டுள்ள பிள்ளைத் தமிழில், கவியரசு ஒட்டக்கூத்தரும் துருக்கரைப்பற்றிய குறிப் பினைத் தருகிறார்[5]. மகாகவி கம்பனது இராமாவதாரமும், துருக்கர் தரவந்த வயப்பரிகள்…..” என துருக்கர்களைக் குறிப்பிட்டுள்ளது[6]. ஆக, சோழர்காலத்தில், அரேபியர்களின் தொடர்புகள் இருந்தமையால், அவ்வாறு குறிப்பிடப்பட்டதில் வியப்பில்லை. இங்கும் துருக்கர், முகமதியர் என்று உறுதியாக சொல்லப்படவில்லை. குதிரை விற்பவர்கள் என்ற ரீதியில் தான் பெரும்பாலான குறிப்புகள் உள்ளன.

© வேதபிரகாஷ்

30-11-2017

Arabia, Turkey map

 

[1] The Turushka (turuṣka; also Turuška, Turushaka, Turuksha, Tushkara or Turukha) were the people of Turkistan. In Sanskrit and Persian sources they are known as the Indo-Scythians.

[2] The Turkic peoples are a collection of ethnic groups that live in central, eastern, northern, and western Asia as well as parts of Eastern Europe. They speak languages belonging to the Turkic language family. They share, to varying degrees, certain cultural traits and historical backgrounds. The term Turkic represents a broad ethno-linguistic group of peoples including existing societies such as Altai, Azerbaijanis, Balkars, Bashkirs, Chuvashes, Crimean Karaites, Gagauz, Karachays, Karakalpaks, Kazakhs, Khakas, Krymchaks, Kyrgyz people, Nogais, Qashqai, Tatars, Turkmens, Turkish people, Tuvans, Uyghurs, Uzbeks, and Yakuts and as well as ancient and medieval states such as Dingling, Bulgars, Alat, Basmyl, Onogurs, Shatuo, Chuban, Göktürks, Oghuz Turks, Kankalis, Khazars, Khiljis, Kipchaks, Kumans, Karluks, Bahri Mamluks, Ottoman Turks, Seljuk Turks, Tiele, Timurids, Turgeshes, Yenisei Kirghiz, and possibly Huns, Tuoba, and Xiongnu.

[3] எஸ். எம். கமால், முஸ்லிம்களும், தமிழகமும், இஸ்லாமிய ஆய்வு பண்பாட்டு மையம், சென்னை, 1990.

[4] புலவர் ஜெயங்கொண்டார் கலிங்கத்துபரணி பாடல் 333 வத்தலர், மத்திகர், மாளுவர் மாகதர் மச்சர் மிலேச்சர்களே சூத்திரர் குத்தர் குடக்கர் பிடக்கர் குருக்கர் துருக்கர்’

[5] கவியரசு ஒட்டக்கூத்தர்; குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ் (முத்தபருவம் பாடல் எண் 52)

[6] மகாகவி கம்பன் – இராமாவதாரம் பாலகாண்டம் : வரை காட்சி படலம் பாடல் எண் : 208.