துருக்கம், துருக்கர், துலுக்கர், துலுக்கி முதலிய சொற்கள் பிரயோகம், அவற்றைப் பற்றிய விளக்கம் (2)
கல்வெட்டுகளில் துருக்கர் / துலுக்கர் பிரயோகம்; துருக்கி நாட்டில் இருந்து வந்த இஸ்லாமியர்கள் என்ற பொருளில் இந்தச் சொல் துருக்கர் என்றும், நாளைடைவில் துதக்கர் – எனவும் மருவி வழங்கியுள்ளது[1] என்று சிலர் விளக்கம் அளித்தாலும், எந்த இடத்தில், காலத்தில் உபயோகப்படுத்தப் பட்டது என்று கவனிக்க வேண்டும். இந்தச் சொல் வடமொழி, தெலுங்கு, இலக்கியங்களிலும் கல்வெட்டுக்களிலும் ‘துருஷகா / துருஷ்கா” என பயன்படுத்தப்பட்டு உள்ளது.
- “மேத்த சனி கார துலுஸ்க தானுஸ்க,’’ என்பது தாராபுரம் கல்வெட்டுத் தொடரில் உள்ள விருதாவளியாகும்[2].
- விஜய நகர மன்னர்களுக்கு [1336-1646] ‘துலுக்க மோகந் தவிழ்ந்தான்’ ‘துலுக்க தள விபாடன்’ என்பனவும், அவர்கள் விருதாவளி (சிறப்புப் பெயர்கள்) எனத் தெரிய வருகிறது[3].
- வீரபாண்டிய தேவரது [1309-1345] நிலக் கொடையொன்றில் எல்லை குறிப்பிடும்பொழுது கோவை மாவட்ட பாரியூர் கல்வெட்டு, “கிழக்கு புரட்டலுக்கு மேற்கு, துலுக்கன்பட்டி நேற் மேற்கு,” என வரையறுத்துள்ளது[4].
- கொங்குநாட்டில், துலுக்கர் பன்னிரண்டாம் நூற்றாண்டில் நிலைத்துவிட்டதை இந்தக் கல்வெட்டு உறுதிசெய்கிறது.
- மற்றும் தாராபுரம் கல்வெட்டு துலுக்கர் பள்ளியாகி தானம் தெரியாமலாகிவிட்ட[5]….’ என்ற 14வது நூற்றாண்டின் கல்வெட்டுத் தொடரும்
- முன்னாள் ராஜராஜன் பூரீ.சுந்தரபாண்டியத் தேவர் துலுக்கருடன் வந்த நாளையில் … …” என்ற திருக்களர் கல்வெட்டும்[6]:
- “துலுக்கர் பலசேமங்கள் தப்பித்து ….” என்ற திருவொற்றியூர் கல்வெட்டுத் தொடரும், துலுக்கர் பற்றிய வரலாற்றுச் செய்திகளை குறிப்பிட்டு, துலுக்கர் தமிழ் மண்ணில் தழைத்துவிட்ட பாங்கினை கோடிட்டு காட்டுகின்றன.
துலுக்கப்பட்டிகள் / துலுக்கர் வாழ்ந்த இடங்கள்: இன்றைக்கும் தமிழ்நாட்டில், சில பகுதிகளில் உள்ள சிற்றுார்கள் “துலுக்கர்’ குடியிருப்பைக் குறிக்கும் வகையில் அவைகளின் ஊர்ப்பெயர்கள் அமைந்துள்ளன. அவை,
- துலுக்கபட்டி – வில்லிபுத்துர் வட்டம்
- துலுக்கபட்டி – சாத்துரர் வட்டம்
- துலுக்கபட்டி – விருதுநகர் வட்டம்
- துலுக்கன் குளம் – நெல்லை வட்டம்
- துலுக்கன் குளம் – ராஜபாளையம் வட்டம்
- துலுக்கன் குளம் – அருப்புக்கோட்டை வட்டம்
- துலுக்கன் குறிச்சி – முதுகுளத்துார் வட்டம்
- துலுக்க முத்துார் – அவினாசி வட்டம்
- துலுக்க மொட்டை – கோவை வட்டம்
- துலுக்க தண்டாளம் – காஞ்சி வட்டம்
பதவிகளில் இருந்த துருக்கர் / துலுக்கர் / நாயக்கத் துருக்கர்: பன்னிரண்டாவது நூற்றாண்டைச் சேர்ந்த திருப்பத்துளர் கல்வெட்டில் துலுக்கராயன் குழி’ என்ற நில அளவை குறிப் இடப்பட்டுள்ளது[7]. இதிலிருந்து துலுக்கர்களில் சிறப்புடையவரன் ..துலுக்கராயன்’ என அழைக்கப்பட்டாரன் என்பது புலனாகிறது என்று கமால் கூறுகிறார். ஆனால், இடைக்காலத்தில், இந்து அரசர் ஆண்ட காலத்தில் ராணுவங்களில் கூட துருக்கர் / துலுக்கர் பணியில் அமர்த்தப் பட்டிருந்தனர். அதனால், அவன், நாயக் என்ற பதவியை அடைந்தபோது, துலுக்க நாயக் என்றழைக்கப் பட்டான் என்பதில் எந்த வியப்பும் இல்லை. மேலும், தமிழகத்தில் இந்த துலுக்கர்களது குடியிருப்பை குறிக்க துலுக்காணம் என்ற புதிய சொல் வழக்கில் வந்துள்ளது. இந்தச் சொல்லும் அதே 12ம் நூற்றாண்டில் உருவானதாக இருக்கவேண்டும். “துலுக்காணம்” என்ற பெயரில் இன்றும் தனி நபர்கள் இருக்கிறார்கள், ஆனால், அவர்கள் இந்துக்களாக இருக்கிறார்கள். திரிகடராஜப்பகவிராயரது திருக்குற்றாலக் குறவஞ்சியிலும்[8], இராமநாதபுரம் மன்னர் திருமலை சேதுபதி பற்றிய வண்ணத்திலும்[9]‘ இந்தச் சொல் ஆளப்பட்டுள்ளது. இத்தகைய துலுக்காணத்தில் இருந்த நாயக்கர் ஒருவரது பெயரில் இந்தச் சொல் ஒட்டிக் கொண்டுள்ளதை பதினாறாவது நூற்றாண்டு கல் வெட்டு செய்திகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவரது பெயர் ஏரமஞ்சி துலுக்கான நாயக்கர் என்பதாகும். இவர் பல திருப்பணிகளைச் செய்துள்ளார். அதன் காரணமாக சேலம் ஆறகழுர் வட்டம் பணத்தளை என்ற ஊர், ”துலுக்கான நாயக்கர் பேட்டை” என்ற புதுப் பெயருடன் வழங்கப்பட்டது[10].
துலுக்காணம், துலுக்காயம், துலுக்க ராஜ்யம் முதலியன; இவை போன்றே துலுக்கரது ஆட்சியைக் குறிக்க துலுக்காணியம்’ என்ற புதுச் சொல் உருவாக்கப்பட்டது. பதினான்காவது நூற்றாண்டில் மதுரையைச் ஆட்சி செய்த மதுரை சுல்தான்களின் ஆட்சியை துலுக்கானியமாக இருந்து” என மதுரைத் தல வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது[11]. காளையார் கோவிலில் உள்ள கி.பி. 1532 ஆண்டில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, தமிழகத்தில் நிலவிய துலுக்கர் ஆட்சியை துலுக்க அவாணம்’ துலுக்க அவாந்தரம்” எனவும் குறிப்பிடுகிறது[12]. இன்னும், ‘துருக்கர் ராச்சியமாய் பல சேமங்கள் தப்பித்து’ என்ற திருவொற்றியூர் கல்வெட்டுத் தொடரும்[13]. துலுக்கர் பற்றிய வரலாற்றுச் செய்திகளைக் குறிப்பிட்டு, துலுக்கர் தமிழ் மண்ணில் தழைத்துவிட்ட விவரங்களை கோடிட்டுக் காட்டுகின்றன.
துலுக்கு-தீய செயல் செய்யும் இந்துவையும் குறித்தது: இன்னும் ‘துலுக்கர் இனத்தைக்” குறிப்பிட, “துலுக்கு’ என்ற சொல் கூட கையாளப் பட்டுள்ளது. வடவிந்தியாவைப் போல, கொடுமைகளை செய்பவரை, துலுக்கன் என்று உருவகமாக குறிக்கப்பட்டதும் தெரிகிறது. திருவிழிமழலை திருக்கோயிலில் அர்ச்சகர் ஒருவர் புரிந்த அட்டுழியத்தை தத்துவப் பிரகாசர் என்ற புலவர், விஜயநகரப் பேரரசருக்கு ஒரு செய்யுள் மூலமாக தெரிவித்தார்.
ஊழித் துலுக்கல்ல, ஒட்டியான் துலுக்குமல்ல
வீழித்துலுக்கு வந்துற்றதே … … …'”[14]
என்பது அந்தக் கவியின் பகுதியாகும். இவ்விதம் துலுக்கர் என்ற சொல், “துலுக்கு’ என மருவி பிற்காலத்தில் மலுக்கு’ என்று கூட பிரயோகம் பெற்றிருப்பதைப் பல நூல்களில் காணலாம். இல்லை, இதனை, துலுக்கர் கோவிலுக்கு எவ்விதமாக இடித்தல், கொள்ளையடித்தல் போன்ற அட்டூழியங்களை செய்வதால், அத்தகைய அநியாயங்களை செய்பவர்களையும், அவ்வாறே குறிப்பிட்டனர் போலும். இக்காலத்தில் நாத்திகர் போர்வையில் திராவிட ஆட்சியாளர்களும், துலுக்கர் போலவே கோவில்களைக் கொள்ளையடித்து வருவதாலும், அவர்கள் துலுக்கருடன் அந்நியோன்யமாக இருப்பதாலும், அவர்களும் அவ்வாறே கருதப்படுகின்றனர் என்பது தெரிந்த விசயமாகிறது. கருணாநிதி, ஸ்டாலின் போன்றோரது இந்து-விரோத செயல்களும் மக்களால் அறியப்பட்டுள்ளன.
© வேதபிரகாஷ்
30-11-2017
[1] எஸ். எம். கமால், முஸ்லிம்களும், தமிழகமும், இஸ்லாமிய ஆய்வு பண்பாட்டு மையம், சென்னை, 1990.
[2] தென்னிந்திய கோவில் சாசனங்கள் எண் 309AD-2949-1 தாராபுரம்
[3] சுப்பிரமணியம் பூ – மெய்கீர்த்திகள் (1885) பக் 294-95 கணோச 68/D – 2871
[4] தென்னிந்திய கோயில் சிலாசாசனங்கள் (l) தொகுதி சாசனம் பக்கம் 309/D2949 – 1.
[5] A. R. 642/1902 திருக்களர்
[6] தென்னிந்திய கோயில் சாசனங்கள் தொகுதி – – எண். 523. பக்கம். 82-17
[7] வள்ளியம்மை – திருப்புத்துரர் (1981) பககம் 17
[8] மக்கம், மராடம், துலுக்காணம், மெச்சி குறமகளும் … பாடல் எண் 63-1 திரிகூடராசப்ய கவிராயர் – திருக்குற்றால குறவஞ்சி
[9] வழுமன் மரகதர், துலுக்காணர், சோழர் …” திருமலை ரகுநாத சேதுபதி வண்ணம் (செந்தமிழ் தொகுதி)
[10] A. R. * 4O9, 406 | 1913.
[11] மதுரைத்தல வரலாறு – (மதுரை தமிழ் சங்க பதிப்பு
[12] A. R. 587 / 1902
[13] தென்னிந்திய கோயில் சாசனங்கள் தொகுதி 1.L.R. 52, திருவொற்றியல்.
[14] பெருந்தொகை : மதுரை தமிழ் சங்கப்பதிப்பு (1935) பாடல் எண் 1638
அண்மைய பின்னூட்டங்கள்