அப்துல் கரீம் துண்டா என்கின்ற அப்துல் குட்டூஸ் மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தளபதி கைது – வெளிவரும் விவகாரங்கள்!

கடினமானஉழைப்பிற்குப்பிறகுதுண்டாவைப்பிடித்தது: இந்திய புலன்விசாரணைக் குழுக்கள் மிகவும் கஷ்டப்பட்டுத்தான், இவனைப் பிடித்திருக்கிறார்கள்[1]. இன்டர்போலில் விவரங்களைக் கொடுத்து, தொடர்ந்து எல்லை போக்குவரத்து, நேபாளத்தில் செயல்படும் தீவிரவாதக் குழுக்களைக் கண்காணிப்பது, ஆப்கானிய தீவிரவாதிகளின் ஊடுருவல் முதலியவற்றை பின்பற்றித்தான் இவனைப் பிடிக்க முடிந்தது. பாபரி மஸ்ஜித் பிரச்சினையை வைத்துக் கொண்டு ஜிஹாதி தீவிரவாதத்தை, இந்தியாவிற்கு எதிராக, ஒரு மாற்றுப் போராக உருவாக்கியது, இந்த துண்டா, தாவூத் இப்ராஹிம் மற்ற பயங்கரவாதிகள் தாம். லஸ்கர்-இ-தொய்பாவின் சித்தாந்தியாக செயல்பட்டவன் பிடிபட்டதில் பல உண்மைகள் தெரியவருகின்றன[2]. இந்தியாவின் மீது இப்படி எல்லா வழிகளிலும் ஜிஹாதி செயல்பட்டு வரும் போது, செக்யூலரிஸ அரசியல்வாதிகள் தமக்கேற்ற வழிகளில் செயல்படுவதால், எந்த சாதகமான முடிவுகளையும், இந்தியாவின் நலன், பாதுகாப்பு, அமைதி முதலியவற்றிற்காக வேண்டிய நன்மைகளும் கிடைக்காமல் போய்விடும். அத்தகைய நிலையைத்தான் சோனியா காங்கிரஸ், முல்லாயம் சிங் யாதவ், கம்யூனிஸ கட்சிகள் செய்து வருகின்றன.

அப்துல்கரீம்துண்டாவின்குடும்பத்தாரின்நிலை: அப்துல் மாலிக் என்ற அவனுடைய சகோதரர், அவன் பிடிபட்டது பற்றி கூறும் போது, “அவன் மரவேலை செய்து கொண்டிருந்தான் என்றுதான் எனக்குத் தெரியும். 1991க்குப் பிறகு அவனைப் பார்க்கவில்லை. அவனை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. ஒருவேளை பார்த்தால், செய்துள்ள இக்காரியங்களால், நீ செய்த சாதித்தாய்?”, என்று கேட்பேன்[3]. அவனுடைய மைத்துனி தஹிரா கூறும் போது, “அவனுக்குரிய தண்டனை கிடைக்கவேண்டும். அவனால்தான் எங்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டன. எப்பொழுதெல்லாம் குண்டு வெடித்ததோ அப்பொழுதெல்லாம் போலீஸார் எங்களிடம் வந்து விசாரிப்பார்கள்”, என்றார்[4]. தொடர்ந்து, “துண்டாவின் இரு மனைவிகள் – ஜரினா மற்றும் மும்தாஜ் மற்றும் ஆறு குழந்தைகள் 1993ல் ஒரு இரவில் எங்கோ சென்றுவிட்டனர். துண்டா மறைந்த பிறகு அதற்குப் பிறகு அவர்கள் எங்குசென்றனர் என்று தெரியவில்லை”, என்றும் சொன்னார்[5]. போலீஸார், துண்டாவிடம் அவனுடைய குடும்பத்தைப் பற்றி கேட்டபோது, தானும் தன்னுடைய குடும்பத்தை சந்திக்க விரும்பவில்லை என்றான்[6]. ஒருவன் தீவிரவாதியாக மாறும் போது, குடும்பம் எப்படி கஷ்டப்படுகிறது என்றும் தெரிகிறது.

தாவூத்இப்ராஹிமைப்பற்றிபத்துநாட்களில்செய்திகள்வந்துக்கொண்டிருக்கின்றன: பத்து நாட்களுக்கு முன்னால் தான், ஷார்யார் கான் என்ற பாகிஸ்தானின் சிறப்பு தூதர் “தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இருந்தான். ஆனால், அவன் பாகிஸ்தானிலிருந்து விரட்டப்பட்டான். அப்படி அவன் இருந்தால், பிடிக்கப்பட்டு கைது செய்யப்படவேண்ட்டும். அவன் அமீரகத்தில் [United Arab Emirates] இருக்கக்கூடும்”, என்றார்[7]. வளைகுடா நாடுகள் ஜிஹாதிகளுக்கு சொர்க்க பூமி போல உள்ளதும் தெரிய வருகிறது. துபாயில் எப்படி யார் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம் என்றால், சவுதியில், வேண்டிய உதவி, பயிற்சி முதலியவற்றைப் பெறலாம் என்றுள்ளது. ஹாவிஸ் சையது இங்கு வந்து படித்துச் சென்றதை கவனிக்க வேண்டும். துண்டாவின் நெருங்கிய நண்பர்தான் ஹாவிஸ் சையது. அதற்கு முன்னால் 14-08-2013 அன்று லண்டனில் தாவூதின் வலதுகை போன்றிருந்து வேலை செய்து வந்த இக்பால் மிர்சி (63) என்பவன் ஹார்ட்ட் அட்டாக்கினால் இறந்து போனான் என்ற செய்தி வந்தது[8]. 1994ல் இந்தியா இன்டர்போல் மூலம் சிவப்பு அறிக்கை கொடுத்திருந்தது. ஸ்காட்லான்ட் யார்ட் போலீஸாரால் 1995ல் பிடிக்கப்பட்டாலும், இந்தியாவிற்கு அனுப்ப உள்ளூர் மாஜிஸ்ட்ரேட் மறுத்து விட்டார்[9]. அதுமட்டுமல்லது இங்கிலாந்தில் தங்கிக் கொள்ள அனுமதியும் கொடுக்கப்பட்டது. இப்பொழுது ஹாவிஸ் சையதிடம் தாவூத் இப்ராஹிமை தான்தான் அறிமுகப்படுத்தினேன் என்று துண்டா ஒப்புக் கொண்டுள்ளான்[10]. அதுமட்டுமல்லாது ஐ.எஸ்.ஐ, சீக்கிய தீவிரவாத இயக்கமான பப்பர் கல்ஸாவிற்கும் உதவி செய்து கொண்டிருந்தது என்பதையும் உறுதி செய்தான்[11] என்ற விவரங்கள் வருகின்றன. மொத்தமாக, பாகிஸ்தான் எப்படி இந்திய விரோதத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது என்று தெரிகிறது.

டெல்லிகாமன்வெல்த்போட்டியில்குண்டுவைக்கதிட்டமிட்டான்: துண்டாவிடம்நடந்தவிசாரணையில்தகவல்:[12] டெல்லியில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் வைத்து அப்துல் கரீம் துண்டாவிடம் சிறப்புப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று நடந்த முதல் நாள் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. லஷ்கர்–இ– தொய்பாவின் முக்கிய தலைவர்கள் எங்கெங்கு இருக்கிறார்கள்? இந்தியாவில் எங்கெங்கு ரகசிய ஆதரவாளர்கள் உள்ளனர்? எங்கெல்லாம் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது? அவை எப்படி நடத்தப்பட்டன என்பன போன்று பல கேள்விகள் அவனிடம் கேட்கப்பட்டன. அதற்கு பதில் அளித்த அப்துல் கரீம் துண்டா 2010-ம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியின்போது தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி மிகப்பெரும் நாசவேலைக்கு திட்டமிட்டதாக கூறினான். ஆனால் குண்டு வெடிப்பை நடத்த இருந்த 2 பேர் போலீசாரிடம் பிடிபட்டுவிட்டதால் தனது தாக்குதல் திட்டம் தோல்வி அடைந்துவிட்டதாக கூறினான். 1993–ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் தான் முக்கிய பங்கு வகித்ததாக தெரிவித்தான். 1980ம் ஆண்டுகளில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மூலம் வெடிகுண்டுகள் தயாரிப்பது குறித்து இவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. இதன்பின்னர் வங்க தேசம் சென்ற இவர் லஷ்கர் இயக்கத்தின் தலைவர் ஷகிவுர் லக்வியின் நேரடி மேற்பார்வையில் செயல்பட்டு வந்ததாக தெரியவந்துள்ளது[13]. இதைத்தொடர்ந்து இந்தியாவில் தீவிரவாதிகள் அடுத்து எத்தகைய தாக்குதல் திட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று போலீசார் துண்டாவிடம் விசாரித்து வருகிறார்கள்.

பாகிஸ்தானின்ஜிஹாதிப்போரைஇந்தியாஎதிர்கொள்ளவேண்டும்: இந்தியாவில் பிறந்தும், முஸ்லிம் அடிப்படைவாதம், மதவாதம் என்ற சித்தாந்திங்களால், முஸ்லிம்கள் எளிதில் ஜிஹாதி வெறியினால், தீவிரவாதத்தில் இறங்குகிறார்கள் என்று தெரிகிறது. பாகிஸ்தானின் ஊக்குவிக்கும் போக்கையும் கவனிக்க வேண்டியுள்ளது. பாகிஸ்தானிய ஆட்சியாளர்கள், ஒரு பக்கம் நட்பு, பேச்சு வார்த்தை என்றெல்லாம் பேசிக் கொண்டு, மறுபக்கத்தில் தொடர்ந்து, தீவிரவாததை இந்தியாவின் மீது ஜிஹாதாக – புனிதப் போராக நடத்தி வருகிறது. அதாவது, மதரீதியில் போரை நிகழ்த்தி வருகிறது. 1965, 1972, 2003 ஆண்டுகளுக்குப் பிறகு, நேரிடையான போர்களைத் தவிர்த்து, இத்தகைய தீவிரவாதிகளின் தாக்குதல்களை போராக நடத்தி வருகின்றது. அதே நேரத்தில், எல்லைகளிலும், “தனது நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை – நாடற்ற மக்களின் வேலை” என்று சாக்கு சொல்லிக் கொண்டு, எல்லைமீறல் தீவிரவாதத்திலும் ஈடுபட்டுள்ளது. எப்பொழுதெல்லாம், பேச்சு வார்த்தைகள் நடக்கின்றனவோ அல்லது நடக்கப் போகின்றதோ, அந்நேரத்தில் இப்படி, அழுத்தத்தை ஏற்பட எல்லைகளில் சுடுதல், ஊடுருவல், எல்லைகளில் வாழும் மக்களைத் தாகுதல், பீதி கிளப்புதல் முதலிய வேலைகளில் ஈடுபடுவதையும் காணலாம். ஆனால், இந்திய ஆட்சியாளர்கள் தொடைநடுங்கிப் பேர்வழிகளாக இருப்பதனால், பாகிஸ்தான் அத்தகைய செக்யூலரிஸ நிலையை சாதகாமாக ஆக்கிக் கொள்கிறது.

Susanna-geelaani-2010
மனிதஉரிமைஆட்கள்இந்தஉண்மையினைஅறிந்துசெயல்படவேண்டும்: அருந்ததி ராய், தாரிக் அலி, ஷப்னம் ஹஸ்மி, போன்றோர் மனித உரிமைகள் என்ற சாக்கை வைத்துக் கொண்டு, பிரிவினைவாதிகளுடன் ஜோடி சேர்ந்து கொண்டு உபன்யாசம் செய்து வந்துள்ளனர். ஆனால், இத்தகைய நேரத்தில் அவர்கள் எல்லோரும் காணாமல் போய்விடுவர். நட்சத்திர ஹோட்டல்கள், பாதுகாப்பாக உள்ள ஏசி அரங்குகள் முதலியவற்றில் தான் இவர்களது சொற்பொழிவுகள் இருக்கும். பொது நிகழ்சிகளில் அவ்வாறு பேச மாட்டார்கள். இருப்பினும் “தி ஹிந்து” போன்ற பிரபல நாளிதழ் முதல் “பாம்பேட் கம்யூனலிஸம்” போன்ற வடித்தெடுத்த மதவெறி பிரச்சார ஏடுகள் வரை இவற்றைப் பற்றி விவரங்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கும். ஆனால், இவ்வாறான தீவிரவாதிகள் பிடிபடும் போது, குண்டுகள் வெடிக்கும் போது காணாமல் போய்விடுவர். செய்திகள் வாசிக்கப்படும் அல்லது அச்சடிக்கப் படும், தலையங்கத்தில், நடுபக்கத்தில் அவர்களை எதிர்த்து எதுவும் எழுதப்பட மாட்டாது. மனித உரிமை ஆட்கள் தங்களது போலித்தனத்தை மாற்றிக் கொண்டு, உருப்படியான பேச்சுகளை பேச வேண்டும்.

Arundhati-Roy-SAR.Jilani-2010
செக்யூலரிஸசித்தாந்தத்தைவைத்துக்கொண்டுபாகிஸ்தானைஎதிர்கொள்ளமுடியாது: இந்தியாவின் மீது இப்படி எல்லா வழிகளிலும் ஜிஹாதிகள் செயல்பட்டு வரும் போது, செக்யூலரிஸ அரசியல்வாதிகள் தமக்கேற்ற தாஜா செய்யும் வழிகளில் செயல்படுவதால், எந்த சாதகமான முடிவுகளையும், இந்தியாவின் நலன், பாதுகாப்பு, அமைதி முதலியவற்றிற்காக வேண்டிய நன்மைகளும் கிடைக்காமல் போகின்றன. அத்தகைய நிலையைத்தான் சோனியா காங்கிரஸ், முல்லாயம் சிங் யாதவ், கம்யூனிஸ கட்சிகள் செய்து வருகின்றன. இங்கு இந்திய அரசியல்வாதிகள், செக்யூலரிஸ போர்வையில் இந்த தீவிவாதிகளுக்கு, தங்களது கொள்கைகளினால், மெத்தனமான போக்குகளால், மறைமுக ஆதரவினால் உதவி வருகிறார்கள். இதனால் தான். “உள்ளூர் தீவிரவாதம்” என்பதனை கண்டு கொள்ளாமல், முஸ்லிம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர், ஓட்டு கிடைக்காமல் போகுமே என்று கணக்கு போடுகின்றனர்.

இந்தியத்தனமா-இஸ்லாமியத்தனமா-ஜிஹாதித்தனமா
இந்தியமுஸ்லிம்கள்தீவிரவாதத்தைக்கண்டறிந்துஅதனைஇஸ்லாத்திலிருந்துபிரித்துப்பார்க்கவேண்டும்: இந்திய முஸ்லிம்கள் இப்பொழுதுவது, இத்தகைய இந்திய விரோத செயல்களை அவ்வாறு அறிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம், முஸ்லிம்கள் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. பாகிஸ்தானிலேயே, இஸ்லாம் பெயரில் முஸ்லிம்கள் அடித்துக் கொள்கின்றனர், குண்டுவெடிப்பு நடத்துகின்றனர், மசூதிகளில் கூட முஸ்லிம்களை கொலை செய்கின்றனர் என்பதனையெல்லாம் அறிந்து புரிந்து கொள்ளும். இஸ்லாம் தான் தீர்வு என்ற மூடநம்பிக்கையைக் கொண்டு இருக்கக் கூடாது.
© வேதபிரகாஷ்
18-08-2013
[7] For the first time, Pakistan has admitted to the presence of one of India’s most wanted terrorists Dawood Ibrahim but said he has been “chased out” and could be in the United Arab Emirates. “Dawood [Ibrahim] was in Pakistan but I believe he was chased out of Pakistan. If he is in Pakistan, he should be hounded and arrested. We cannot allow such gangsters to operate from the country,” said Shahryar Khan, Pakistan Prime Minister Nawaz Sharif’s special envoy for improving relations with India.
http://www.thehindu.com/news/national/dawood-chased-out-of-pakistan-shahryar-khan/article5008042.ece?ref=relatedNews
[9] Underworld don Dawood Ibrahim’s close aide Iqbal Mirchi, an accused in the 1993 Mumbai serial blasts case, died of a heart attack in London on Wednesday night. Mirchi, 63, the right-hand man of India’s topmost terrorist, was also facing drug smuggling charges in India. He had been living in a large six-bedroom home in an exclusive part of Hornchurch, a town in Essex, north-east of London. Ranked among the world’s top 50 drug barons, Muhammed Iqbal Memon or Iqbal Mirchi had been issued an Interpol Red Corner Notice in 1994 on Central Bureau of Investigation’s request. In April 1995, officers from Scotland Yard had raided Mirchi’s home and arrested him on drugs and terrorism charges in connection with the blasts in Mumbai. However, an extradition request by India was turned down by magistrates here. Scotland Yard’s investigation of Mirchi, which ended in 1999, found no evidence of criminal activity and in 2001 the UK Home Office granted him indefinite leave to remain in the U.K. India’s most-wanted criminal Dawood Ibrahim is on FBI’s list of top terrorists in the world.
அண்மைய பின்னூட்டங்கள்