கருப்புதினமாகக் கொண்டாடிய காஷ்மீர மக்களும், குண்டுகளைப் பொழிந்த பாகிஸ்தானியரும், குண்டுகள் வெடிக்கப்பட்ட மணிப்பூரும்: சுதந்திரநாள் கொண்டாடப்பட்டவிதம்!
சுதந்திர நாள் கொண்டாட்டம் என்றால் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதை விட்டு, ஏதோ தீவிரவாத தாக்குதல் தடுப்பு தினமாகக் கொண்டாடப்படுவதைப் போன்ற சூழ்நிலை இந்தியாவில் உருவாகி வருகிறது. இப்படி பயந்து கொண்டே கொண்டாடுவது கொண்டாட்டமா என்று தெரியவில்லை.
வழக்கம்போல பிரிவினைவாத, அடிப்படைவாத, இந்திய-எதிர்ப்பு காஷ்மீர முஸ்லீம் மக்கள் சுதந்திரதினத்தை கருப்பு நாளாகக் கொண்டாடி பெருமை சேர்த்துள்ளனர்[1].
பாகிஸ்தானியர்கள் கடந்த 11 நாட்களில், ஏழு முறை சட்டங்களை / ஒழுங்கை மீறி எல்லைப்புறங்களில் துப்பாக்கி சூட்டை நடத்தி, இந்திய வீரர்களுக்கு குண்டுகளை கொடுத்துள்ளது[2].
மணிப்பூரிலேயோ, குண்டுகள் வெடித்தே சுதந்திர நாள் கொண்டாடப்பட்டுள்ளது[3].
ஆனால், பிரதமந்திரியோ பத்திரமாக, குண்டு துளைக்காத கண்ணாடி கவசத்தின் பின்னாக நின்று கொண்டு, உணர்ச்சியே இல்லாமல் தயார் செய்து கொடுத்த பேச்சை தட்டுத் தடுமாறி இந்தியில் பேசி முடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது, பல இடங்களில் உளறிக் கொட்டியுள்ளார் என்று ஊடகங்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்[4].
அண்மைய பின்னூட்டங்கள்