கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவில் ஆடித் திருவிழாவை துலுக்கர் எதிர்த்த காரணம் என்ன? செக்யூலரிஸ நாட்டில் இந்துக்களின் உரிமைகளைப் பறிக்க முடியுமா? (2)
திருவிழாவை நடத்த விடமாட்டோம் என்றும் கூறி கோஷங்களை எழுப்பினர்: இதுபற்றிய தகவல் அப்பகுதியில் வேகமாக பரவியதால் இருதரப்பினரை சேர்ந்த ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதுகுறித்து அறிந்த போலீஸ் துணை கமிஷனர் சுப்புலட்சுமி, உதவி கமிஷனர் அன்பு, இன்ஸ்பெக்டர்கள் சரவணன், குமார், குமரேசன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். பிறகு இரு தரப்பினரிடமும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ஒரு தரப்பினர் கோவிலில் திருவிழாவை நடத்துவோம் என்றும், அதற்கு மற்றொரு தரப்பினர் திருவிழாவை நடத்த விடமாட்டோம் என்றும் கூறி கோஷங்களை எழுப்பினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. அப்போது ஒரு தரப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதுதான் துலுக்கரின் லட்சணம் என்று தெரிந்து விட்டது! செக்யூலார் நாட்டில் துலுக்கருக்கு உரிமைகள் இருந்தால், இந்துக்களுக்கு இல்லை என்று எப்படி இருக்கலாம். இதனால் தான் அடக்கப் படும் இந்துக்கள் பொங்கி எழுகிறார்கள்.
ஜூன் 2016ல் முஸ்லிம்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டது[1]: இந்தியா, விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டி சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பூஜை பொருட்களுடன் முஸ்லிம்கள் பங்கேற்றனர். தம்பிபட்டி சந்தன மாரியம்மன் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஜமாத்தலைவர் மீராமுகைதீன், மசூதி இமாம் ஜாபர்அலி தலைமையில் முஸ்லிம்கள், பூஜைக்கு உரிய தட்டுகளுடன் கோயிலுக்கு வந்தனர். கோயில் நிர்வாகிகள் அவர்களை ஆரத்தழுவி வரவேற்றனர். முஸ்லிம்கள், யாகசாலை பந்தலுக்கு முன் அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இக்கோயிலுக்கு கிறிஸ்தவ, முஸ்லிம் மதத்தினரும் நன்கொடை வழங்கி உள்ளனர். ஜமாத் தலைவர் மீரா முகைதீன், ‘மத பாகுபாடு இன்றி ‘மாமா’, ‘அண்ணன்’ என்ற உறவு முறை சொல்லித் தான் இன்று வரை பழகி வருகிறோம். இல்ல விழாக்களில் இருமதத்தினரும் பங்கேற்க தவறுவது இல்லை. இந்த உறவு என்றும்தொடரும்,’ என்றார். மசூதி இமாம் ஜாபர் அலி கூறுகையில், ‘ரமழான் நோன்பு காலத் தடையை கடந்து கோயிலுக்கு வந்துள்ளோம். எங்களுக்கும், அவர்களுக்கும் உள்ள உறவு எவ்வளவு வலுவானது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம்,’ என்றார். ஆனால், இதை பதிவு செய்த முஸ்லிம் கேட்பது[2], “எங்கே செல்கிறது முஸ்லிம் சமூகம்?”! அதாவது, “இந்து-முஸ்லிம்” வளர்க்கலாம் என்றாலும், தூண்டிவிடும் முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்று தெரிகிறது.
60 ஆண்டுகளுக்கு மேலாக கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடத்தி வரும் போது, தற்போது மட்டும் எதிர்ப்பு தெரிவிக்க என்ன காரணம்?: இது ஒருபுறம் இருக்க, கிச்சிபாளையம் மெயின்ரோட்டில் ஒரு தரப்பினரும், பிரிவு ரோட்டில் மற்றொரு தரப்பினரும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் மீண்டும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. அந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனிடையே மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரிடமும் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், சேலம் உதவி கலெக்டர் குமரேஸ்வரன், தாசில்தார் (பொறுப்பு) மாதேஸ்வரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் அங்கு வந்தனர். அப்போது, சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக கஞ்சி தொட்டி மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நடத்தி வருவதாகவும், ஆனால் தற்போது மட்டும் எதிர்ப்பு தெரிவிக்க என்ன காரணம் என்று ஒரு தரப்பினர் போலீசாரிடம் தெரிவித்தனர். இதை கேட்ட போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார், அந்த தகவலை மற்றொரு தரப்பினரிடம் தெரிவித்தனர்.
மதவாத காரணங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: அவர்கள் சொல்லியது மதவாதமாக இருந்தது. ஆண்டாண்டுகளாக கோவில்கள் இருக்கும் போது, திடீரென்று முஸ்லிம்கள் வந்து, முழுத் தெருவையும் ஆக்கிரமித்துக் கொண்டு, எங்கள் தெருவின் வழியாக வராதே என்பது எப்படி சட்டப் படி சரியாகும். அவர்களைத் தானே, போலீஸார் முதலில் தடுத்திருக்க வேண்டும்? அதைத்தொடர்ந்து இரு தரப்பிலும் தலா ஐந்து பேர் வீதம் பேச்சுவார்த்தைக்கு வருமாறும், இந்த பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது[3]. இதனால் சமாதானம் அடைந்த இரு தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்[4]. இந்த விவகாரம் தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இருதரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழல் உருவானதையொட்டி கிச்சிபாளையம் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்[5]. மறியலில் ஈடுபட்டு, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, 85 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்[6].
ராமநாதபுரம், ஏர்வாடி அம்மன் முளைப்பாரி ஊர்வலங்களை வரவேற்கும் முஸ்லிம்களைப் போல சேலம் முஸ்லிம்கள் ஏன் செயல்படவில்லை?: மனித நேயம், மத நல்லிணக்கம், ஒற்றுமை, அமைதி என்றால் பேசினால் வந்து விடாது. மக்களை மக்களாக மதிக்கத் தெரியாமல் இருந்தால், முஸ்லிம்களும் அமைதியாக மற்றவரோடு வாழ முடியாது. இதனால் தான் முஸ்லிம்கள் தேசிய நீரோட்டத்துடன் கலக்க வேண்டும், இந்தியன் என்ற உணர்வு இருக்க வேண்டும் என்று எடுத்துக் காட்டப் படுகிறது. விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே தம்பிபட்டி சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் பூஜை பொருட்களுடன் முஸ்லிம்கள் பங்கேற்றதை போல மற்ற முஸ்லிம்கள் ஏன் செய்ய முடியவில்லை. ராமநாதபுரம், ஏர்வாடி அம்மன் முளைப்பாரி ஊர்வலங்களை வரவேற்கும் முஸ்லிம்களைப் போல சேலம் முஸ்லிம்கள் ஏன் செயல்படவில்லை. மாறாக தடுக்க, எதிர்க்க, அவதூறு செய்ய ஏன் அவ்வாறு செயல்பட்டிருக்க வேண்டும். அதன் பின்னணி என்ன? அதிலும் முஸ்லிம் பெண்கள் எதிர்த்தார்கள் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது.
© வேதபிரகாஷ்
06-08-2017
[1] ஜைஜில் நியூஸ், எங்கே செல்கிறது நம் சமூகம்? கோயில் கும்பாபிஷேகத்தில் முஸ்லிம்(?)கள், By admin3, June 18, 2016
[2] http://www.zajilnews.lk/37777
[3] The Hindu, Timely intervention by police prevents clash between two groups in Salem, SPECIAL CORRESPONDENT, SALEM,AUGUST 03, 2017 07:11 IST, UPDATED: AUGUST 03, 2017 07:12 IST.
[4] http://www.thehindu.com/news/cities/Coimbatore/timely-intervention-by-police-prevents-clash-between-two-groups-in-salem/article19412808.ece
[5] தினமலர், திருவிழா நடத்துவதில் மோதல்: சேலத்தில் 85 பேர் மீது வழக்கு, பதிவு செய்த நாள். ஆகஸ்ட்.4, 2017, 07:17.
அண்மைய பின்னூட்டங்கள்