“உண்மையும், பொய்யும்” [Truth vesus Hype] – “தி இந்துவை” தொடர்ந்த என்.டி.டிவியின் பிரச்சாரம் (31-01-2016)!
என்.டி.டி.வி ஆங்கில செய்திச் சேனல் ஹிந்து நாளிதழுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டு சில வருடங்களுக்கு முன் Metronation Chennai Television Ltd[1] என்ற தொலைக்காட்சி நிறுவனத்தைத் தொடங்கியது[2]. இந்த நிறுவனத்தின் சார்பில் என்டிடிவி-ஹிந்து என்ற பெயரில் வெளியான இந்த டிவியில் மெட்ரோ செய்திகள் மட்டும் முதலில் ஒளிபரப்பட்டன. பின்னர் தமிழிலும், ஆங்கிலத்திலும் செய்திகள் ஒளிபரப்பட்டன. ஆனால் சன் டிவி நிறுவனத்தின் வியாபித்த நேயர் பரப்பை ஊடுறுவிப் போக இவர்களால் முடியவில்லை. மேலும் புதிய தலைமுறை என்ற புதிய செய்திச் சேனல் சன் நியூஸ் சேனலையே பின்னுக்குத் தள்ளியதால் என்டிடிவி-ஹிந்து மேலும் பின்னுக்குப் போய் விட்டது. தமிழ் சேனல்களுடன் போட்டியிட முடியாத காரணத்தினாலும், சரியான விளம்பர வருவாய் இல்லாத காரணத்தினாலும் இந்த சேனலுக்கு மூடுவிழா நடத்த இந்த நிறுவனங்கள் முடிவு செய்திருந்தன. அந்நிலையில் தினத்தந்தி நிர்வாகம் அதனை வாங்கி, ஏப்ரல் 14ம் தேதி 2012 தமிழ்புத்தாண்டு முதல் நிகழ்ச்சிகளை ஆரம்பித்தது. அதாவது அளவுக்கு அதிகமாக பிரச்சார ரீதியில் செயல்பட்ட அச்செனல் மக்களிடம் எடுபடவில்லை. இருப்பினும், இவ்விரண்டும் பிரச்சார பீரங்குகளை முடுக்கிவிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. பொதுவாக இவ்வூடகங்கள் இந்திய நலன்களுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு வருவதும், கருத்துருவாக்கம் புனைவதும், பிரச்சாரத்தில் ஈடுபடுவதும் வழக்கமாகக் கொண்டுள்ளன.
“உண்மையும், பொய்யும்” [Truth vesus Hype] என்.டி.டிவியின் பிரச்சாரம் (31-01-2016): 31-01-2016 அன்று, என்.டி.டிவி செனலில் “உண்மையும், பொய்யும்” [Truth vesus Hype] என்ற நிகழ்ச்சியை ஒலி-ஒளிபரப்பியது[3]. சீனிவாசன் ஜெயின் மற்றும் மனஸ் ரோஷன் இதை விவரிக்கின்றனர். “இதுவரை ஐசிஸ்ஸின் இந்தியாவின் மீதான அச்சுருத்தல் பெரிய அளவில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஐசிஸுக்கும் இந்தியாவுக்கும் சம்பந்தம் உள்ளதா என்பது சந்தேகமாகவே உள்ளது. ஏனெனில், ஒருசிலரே அதனுடன் தொடர்பு கொண்டிருந்தனர். கடந்த வாரத்தில் 14 பேரை கைது செய்துள்ளதால், இந்தியா அதற்கான ஆதாரத்தைப் பெற்று விட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது”. இந்தியாவில் இத்தனை வெடிகுண்டுகள் வெடித்தும், ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் அவற்றில் குரூரமாக-கோரமாகக் கொலையுண்டும், இன்னும் ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் அவற்றில் குரூரமாக-கோரமாக கை-கால்கள் இழந்து படுகாயம் அடைந்தும், இன்று வரை அந்த பீதி, கலவரம், மனப்பிராந்தி, மனவுலைச்சல் முதலியவற்றிலிருந்து விடுபட இயலாமல் அவதியுற்று இருக்கும் நிலையில், இவர்களது முகாந்திரம், ஏதோ தீவிரவாதத்தை ஆதரிப்பது போலிருந்தது. நடுநடுவே, அஜய் சஹானி [Ajai Sahni, Executive Director, Institute for Conflict Management, Delhi] பர்வீன் ஸ்வாமி, இந்தியன் எக்ஸ்பிரஸ் [Prveen Swami, National Editor, Strategic & nternational Affairs, Indian Express] இவர்களின் கருத்துகளைக் கேட்பது போல காண்பிட்தாலும், அவர்கள் சொன்ன முழு கருத்துகளை போடாமல் மறைத்திருப்பது தெரிகிறது.
என்டிடிவியின் “எடிட்” செய்யப்பட்ட, தீவிரவாத–ஆதரவு நிகழ்ச்சி: அஜய் சஹானி என்பவர், “இவர்கள் எல்லோருமே தீவிரவாத சித்தாந்தத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள், அவர்களது தலைவர்கள் இங்கும், பாகிஸ்தானிலும் இருக்கிறார்கள்”, என்று சொல்லி முடிக்கும் முன்னரே கட்டாகி விடுகிறது. இதிலிருந்து, அவர் மேலே சொன்னது இவர்களுக்கு சாதகமாக இல்லை என்றாகிறாது. உடனே சீனிவாசன் தோன்றி, இதற்கெல்லாம் என்ன ஆதாரங்கள் இருக்கின்றனர், கைது செய்யப்பட்டவர்கள் எல்லோருமே, கொடுத்துள்ள வாக்குமூலம் வழியாகத்தான் இவ்விவரங்கள் வெளிவந்துள்ளன. பதிலுக்கு, பர்வீன் சுவாமி “குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தாம் தான் எந்த அளவிற்கு சம்பந்தம் இருக்கிறது அல்லது இல்லை என்பதை நிரூபிக்க வேண்டியுள்ளது”, என்றார். பல இடங்களில் குற்றஞ்சாட்டப்படுவதற்கேற்றபடியான, ஆவணங்கள், ஆதாரங்களை வைத்துதான், அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இல்லையென்றால், அவர்கள் பெயர்கள், விவரங்கள் எப்படி தெரிய வரும்?
செல்போன்கள், சிம் கார்டுகள், லேப்டாப்புகள் போன்றவை அதிகமாக வைத்திருந்தால் தீவிரவாதிகளாகி விடுவார்களா?: சபி அஹமது என்கின்ற யூசுப் அல்-ஹிந்தி, பட்கல், இவர்களின் இணைப்பாளனாக உள்ளான். இவன் இந்தியன் முஜாஹித்தீனின் பிரிவின் தலைவனாக உள்ளான். இது அல்-குவைதாவின் பிரிவும் ஆகும். என்.ஐ.ஏ கீழ்கண்டவற்றை கைப்பற்றியுள்ளனர்:
- 45 செல்போன்கள்.
- 29 சிம் கார்டுகள்
- 9 லேப்டாப்புகள்
- 3 ஹார்ட்-டிரைவ்
- 3 பென் ட்ரைவ்
இதிலுள்ள விவரங்களை வைத்து மற்றும் அவர்கள் தீவிரவாதிகள் என்று தீர்மானித்து விடமுடியுமா என்று சீனிவாசன் கேட்பது வியப்பாக உள்ளது. அதற்கு ஒத்து ஊதுவது போன்று, மனஸ் ரோஷன், ஆகையால் தான் வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்கள் எல்லாம் கண்டெடுக்கப்பட்டுள்ளன, என்பது அதை விட வேடிக்கையாக இருக்கிறது. பொட்டாசியம் நைட்ரேட், பொட்டாசியம் குளோரேட், குச்சிகள் மற்ற ரசாயனப் பொருட்கள் [Potassiium Chlorate, Potassium Nitrate, sticks and other chemicals] வேடிக்கைக்காக வைத்திருந்தார்களா? முஸ்தாக் செயிக் வெடிகுண்டுகளைத் [Improvised expolosive devises (IED)] தயாரிக்கக் கட்டளையிட்டான். என்.ஐ.ஏ இவற்றையும், டைமர்களையும் மும்பை மற்றும் ஹைதராபாத் அவர்கள் தங்கியிருந்த இடங்களிலிருந்து கைப்பற்றியது[4]. 31-01-2016 அன்று சாகர், மத்திய பிரதேசத்தில் 132 டிடோனேடர்கள் உடபட்ட 1,000 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன[5]. ஹைரஜன் பெராக்ஸைட் மற்றும் ஜிஹாதி புத்தகங்களும் கைப்பற்றப்பட்டன[6]. ஒருவன் எதற்காக பத்திற்கும் மேலாக செல்போன்கள், சிம்கார்டுகள் முதலியவற்றை வைத்துக் கொள்ள வேண்டும்? வைத்துக் கொண்டு சிரியா, பாகிஸ்தான் முதலிய நாடுகளில் உள்ளவர்களிடம் ஐசிஸ் பற்றி பேசவேண்டும்? இத்தனை உபகரணங்களை வைத்துக் கொண்டு, ஐசிஸ் தொடர்பாளர்களுடன் பேசியது முதலிய விவரங்கள் விளையாட்டிற்காக செய்யப்பட்டது போல அவர்கள் பேசுவது கேவலமாக இருக்கிறது.
வெடிகுண்டுகளைத் தயாரிப்பவர்களைக் கண்டிக்க வேண்டுமே தவிர ஆதரிக்கக் கூடாது: இந்திய முஜாஹித்தீன் எப்படி வெடிகுண்டுகளைத் தயாரித்தது என்பது நன்றகவே தெரியும். பிறகு முன்றாண்டுகளாக இவர்கள் ஐசிஸ் தொடர்புகளுடன், இவற்றையெல்லாம் ஏன் செய்ய வேண்டும் என்று கேட்க சீனிவாசன் ஜெயின் மற்றும் மனஸ் ரோஷன்களுக்கு தெரியாயமலா இருக்கும்? சீனிவாசன் ஜெயின் மற்றும் மனஸ் ரோஷன் கைது செய்யப்பட்டவர்களைப் பற்றிய விவரங்களை சேகரிக்க அங்கங்கு செல்கிறார்கள். ஆனால், 14 பேர்களையும் நாங்கள் சந்திக்க முடியவில்லை, என்று ஒப்புக் கொள்கிறார்கள். என்.ஐ.ஏவில் இருப்பவர்களை, இவர்கள் என்ன பேட்டிக் காண்பது? இவர்களுக்குத்தான் எல்லாமே தெரியும் என்றால், முன்னமே வந்து அறிவுரை சொல்லியிருக்கலாமே, அல்லது கவுன்சிலிங்கிற்கு அனுப்பியிருக்கலாமே? இப்பொழுது, இவர்கள் போலீஸாருக்கு, என்.ஐ.ஏவுக்கு அறிவுருத்துவது, ஆலோசனைக் கூறுவது தமாஷாக இருக்கிறது. மேலும், அவர்களது பெற்றோர், மற்றோர்களுக்கு எங்கு புத்தி போயிற்று? தங்கள் மகன்கள், மகள்கள் இவ்வாறு செய்து வருவதைக் கண்டிருத்து இருக்கலாமே, ஏன் தடுத்திருக்கலாமே? மனைவி-மக்களுடம் ஒழுங்காக வாழப்பா என்று மாமனார்-மாமியார் கூட கெஞ்சியிருக்கலாமே?
மௌலானா மோயின் கான், ஐசிஸ் ஒரு தீவிரவாத இயக்கம், அது மனித இனத்திற்கு எதிரானது, ஆபத்தானது என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்கிறார்: முப்ரா என்ற இடத்திற்கு சென்ற போது, இப்படி கமென்ட் அடிக்கிறார்கள். பொதுவாக மும்ப்ராவில், முஸ்லிம்கள் போலீஸுக்கு எதிராகத்தான் ஆர்பாட்டங்கள் நடத்துவார்கள், ஆனால், இப்பொழுது ஐசிஸ்ஸுக்கு எதிராக நடத்தியுள்ளார்கள் என்று காண்பிக்கப்படுகிறது. மௌலானா மோயின் கான், ஜாமியா காத்ரியா அஸ்ரபியா மத்ரஸா, மும்ப்ரா, மும்பை, ஐசிஸ் ஒரு தீவிரவாத இயக்கம், அது மனித இனத்திற்கு எதிரானது, ஆபத்தானது என்பதை மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்கிறார். அப்படியென்றால், அப்பகுதியில் இருக்கும் முஸ்லிம்கள் ஐசிஸ்ஸுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. பிறகு, மேலே எழுப்பியுள்ள கேள்விகள் இங்கும் பொறுந்துகிறது. பெற்றோர், உறவினர், நண்பர்கள், மற்றவர்கள் தங்களது கடமைகளினின்று தப்பிக்க முடியாது. அவர்களது நடவடிக்கைகளை அறிந்தும் அமைதி காத்திருக்கிறார்கள், ஆதரித்திருக்கிறார்கள் என்றாகிறது.
வேதபிரகாஷ்
06-02-12016
[1] Media group New Delhi Television Ltd (NDTV) and Kasturi and Sons Ltd (publisher of The Hindu newspaper) are selling their two-year-old joint venture Metronation Chennai Television Ltd that runs the city-based English news channel, to Educational Trustee Company Pvt Ltd, for Rs 15 crore.
http://in.reuters.com/article/idINIndia-59798520111010
[2] http://www.ndtv.com/convergence/ndtv/corporatepage/ndtv_hindu.aspx
[3] http://www.ndtv.com/video/player/truth-vs-hype/truth-vs-hype-of-isis-indian-franchise/401485
NT-TV, Truth Vs Hype Of ISIS’ Indian Franchise, PUBLISHED ON: JANUARY 31, 2016 | DURATION: 22 MIN, 22 SEC
[4] http://economictimes.indiatimes.com/news/defence/arrested-islamic-state-men-were-using-matchsticks-to-make-bomb/articleshow/50799696.cms
[5] Three men arrested with 1000 kg explosives, 132 detonators in Madhya Pradesh, Besides the massive haul of explosives, around 132 detonators and other materials were also seized by the police. Meanwhile, the questioning of the three men is underway. Further details awaited.
[6] Other than Mushtaq among those arrested include Mohammad Nafees Khan of Mohammad Shareef Mounuddin Khan from Hyderabad, Najmul Huda of Mangalore and Mohammad Afzal of Bengaluru. NIA and central agency sleuths seized 42 mobile phones, including eight from ‘amir’, sources said. Explosive material, detonators, wires, batteries and hydrogen peroxide besides ‘jihadi literature’ was also seized from those arrested.
அண்மைய பின்னூட்டங்கள்