Posted tagged ‘திலீப் பட்கோங்கர்’

குலாம் நபி பய் – இந்திய தேச விரோதிகளுடன் நட்புறவு கொள்ளும் இந்தியர்கள்!

ஜூலை 23, 2011

குலாம் நபி பய் – இந்திய தேச விரோதிகளுடன் நட்புறவு கொள்ளும் இந்தியர்கள்


அமெரிக்க எம்.பி.,க்களுக்கு பணம் : குலாம் நபி பய்யிடம் இன்று கோர்ட்டில் விசாரணை[1]: வாஷிங்டன் : காஷ்மீர் விஷயத்தில் ஆதரவாக செயல்படுவதற்காக, அமெரிக்க எம்.பி.,க்களுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யிடமிருந்து பணம் பெற்று கொடுக்க முயன்ற, குலாம் நபி பய்யிடம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. காஷ்மீரை சேர்ந்தவர் குலாம் நபி பய், 62. காஷ்மீர் விடுதலைக்கான இயக்கத்தை வாஷிங்டனில் நடத்தி வருகிறார். காஷ்மீர் – அமெரிக்கன் கவுன்சில் என்ற அமைப்பை நடத்தி வரும் இவர், காஷ்மீருக்கு ஆதரவாக அமெரிக்காவை பேச வைக்க, பாகிஸ்தான் உளவு அமைப்பின் உதவியுடன் “கேபிடல் ஹில்” என்ற இடத்தில் செயல்பட்டு வந்தார்[2].

 

காஷ்மீர் விடுதலை குறித்த மாநாட்டை ஏற்பாடு செய்து, அதற்கு அமெரிக்க எம்.பி.,க்களை அழைத்து, காஷ்மீருக்கு ஆதரவாக பேச வைப்பதற்காக, பாகிஸ்தான் உளவு அமைப்பு இவருக்கு, 18 கோடி ரூபாயளவுக்கு நிதி உதவி செய்துள்ளது. இந்த பணத்தை குலாம் நபி பய் பயன்படுத்தினாரா என்பது தெரியவில்லை. அமெரிக்காவிலிருந்து கொண்டு, பாகிஸ்தான் உளவு அமைப்புடன் சேர்ந்து செயல்பட்டதற்காகவும், எம்.பி.,க்களுக்கு பணம் கொடுக்க முயன்றதற்காகவும், இவரை அமெரிக்க புலனாய்வு நிறுவனம் எப்.பி.ஐ., ஜூலை 19 அன்று கைது செய்துள்ளது. இவர் மீதான விசாரணை விர்ஜினியா மாகாணத்தில் உள்ள அலெச்சாண்டிரியா கோர்ட்டில் இன்று நடைபெற உள்ளது. கடந்த 95ம் ஆண்டிலிருந்து, ஐ.எஸ்.ஐ.,யிடமிருந்து குலாம் நபிக்கு பண உதவி கிடைத்து வருவதாகவும், குலாம்நபி கைது செய்யப்பட்டுள்ளதால், அமெரிக்க – பாகிஸ்தான் உறவில் மீண்டும் ஒரு சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

 

குலாம் நபி பை கைது தாமதமானது[3]: ஆர்.கே. சிங்திம்பு: காஷ்மீரி அமெரிக்கன் கவுன்சில் செயல் இயக்குநர் குலாம் நபி பை கைது, மிகவும் காலதாமதமான நடவடிக்கை என உள்துறை செயலாளர் ஆர்.கே. சிங் கூறியுள்ளார். அமெரிக்காவில் செயல்பட்டு வரும் காஷ்மீரி அமெரிக்கன் கவுன்சில் அமைப்பின் செயல் இயக்குநர் குலாம் நபி பை, காஷ்மீருக்கு ஆதரவாக அமெரிக்க பார்லிமென்ட்டில் பேச எம்.பி.,க்களுக்கு பணம் அளித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உள்துறை செயலாளர் ஆர்.கே. சிங், இது மிகவும் காலதாமதமான நடவடிக்கை என்றும், அவர் அளித்த பணம், ஐ.எஸ்.ஐ., போன்ற பாகிஸ்தான் அமைப்புகளிடமிருந்து பெறப்பட்டது என்றும் குற்றம் சாட்டினார்.

 

பிரிவினைவாத-அடிப்படைவாத ஹுரியத் மாநாடு அமைப்பு காஷ்மீரத்தில் பந்த-கலாட்டா: எதிர்பார்த்தப்படியே காஷ்மீரத்தில் பிரிவினைவாத-அடிப்படைவாத ஹுரியத் மாநாடு பந்த்-கடையடைப்பு என்று கலாட்டவை ஆரம்பித்து விட்டது. உண்மையிலேயே இவர்களது, நாட்டுப்பற்று மெய் சிலிர்க்க வைக்கிறது. தில்லியில் வந்து உரிமையுடன் பேசும் இவர்களுக்கு, இந்திய மக்களாக இருந்து தேர்தலில் நின்று ஜெயித்து பதவிக்கு வரும் இவர்களுக்கு இந்தியாவிலிருந்தே, இந்தியாவிற்கு எதிடராக செயல்படுவது, அதற்கு அருந்ததி ராய் பொன்றவர்கள் ஆதரித்துப் பேசுவது, காங்கிரஸ்காரர்களும் கூட்டாக வேலை செய்வது முதலியன தேசத்துரோகம் என்ரு அறிந்தும் செய்து வருகின்றனர்.

 

தேச விரோதிகளுடன் சம்பந்தப் பட்டுள்ள பிரபலங்கள்[4]: அத்தகைய துரோகிகளுக்கு ஆதரவாக பேசி-எழுதிவரும் செக்யூலரிஸ விற்பன்னர்களின் பட்டியலில் கீழ்கண்டவர்கள் இருப்பது, இந்தியர்கள் எந்த அளவிற்கு ஏமாற்றப்பட்டு வருகின்றனர் என்று தெர்கிறது:

 

  1. நீதிபதி ராஜிந்தர் சச்சார் – Justice Rajinder Sachar, author of the famous Sachar Committee Report on the state of Indian Muslims;
  2. திலீப் பட்கோங்கர் – Dileep Padgaonkar, one of the three interlocutors on J&K appointed by the central government;
  3. ஹரிஸ் காரே – Harish Khare, the media adviser to the prime minister;
  4. ரீடா மான்சந்தா – Rita Manchanda, the India/Pakistan Local Partner for Women Waging Peace;
  5. வேத பஸின் – Ved Bhasin, editor, Kashmir Times;
  6. ஹரிந்தர் பவேஜா – Harinder Baweja, editor (investigations), Headlines Today;
  7. கௌதம் நவல்கா – Gautam Navlakha and
  8. கமல் செனாய் – Kamal Chenoy, human rights activists, and; Praful Bidwai, well-known columnist.

 

ஹரிஸ் காரே என்பவர் தான் குலாம் நபி ஃபையை சந்தித்ததே இல்லை என்று அடம் பிடிக்கிறார்[5].


[1] தினமலர், அமெரிக்க எம்.பி.,க்களுக்கு பணம் : குலாம் நபி பய்யிடம் இன்று கோர்ட்டில் விசாரணை, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=279899

[3] தினமலர், குலாம் நபி பை கைது தாமதமானது, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=280828