Posted tagged ‘திருப்பதி’

அல்-உம்மா தீவிரவாதிகள், அல்-முஜாஹித்தீன் ஆனதும், பிடிபட்டதும் எப்படி – இரண்டு வருடம் வியாபாரிகள் போல மறைந்து வாழ்ந்தவர்கள் பிடிபட்டனர்!

ஒக்ரோபர் 6, 2013

அல்-உம்மா தீவிரவாதிகள், அல்-முஜாஹித்தீன் ஆனதும், பிடிபட்டதும் எப்படி – இரண்டு வருடம் வியாபாரிகள் போல மறைந்து வாழ்ந்தவர்கள் பிடிபட்டனர்!

chittoor-puttur-jihadi-hideout-Dinamani.1

இரண்டு வருடங்களாக வியாபாரிகள் போல மறைந்து வாழ்ந்தது: புத்தூரில், முஸ்லிம் காலனி மேதரா தெருவில் உள்ள இரண்டு வீடுகளிலும் சோதனையிட்டபோது, ஒரு பிஸ்டல், பைப் குண்டுகள், ஐந்து மேம்படுத்தப் பட்ட குண்டுகள், தூரத்திலிருந்து இயக்கும் கருவி (ரிமோட்) முதலியவை கண்டெடுக்கப்பட்டன[1]. இவற்றையெல்லாம் எடுத்து வந்துள்ளனர், மறைத்து வைத்துள்ளனர் எனும்போது, அவர்களுக்கு “லாஜிஸ்டிக்ஸ்” உதவிகள் யார் கொடுத்தது என்றும் ஆராய வேண்டியுள்ளது. “இந்த இடம் தீவிரவாதிகளால் திட்டமிட்டே தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. எந்நேரத்திலும், ரயில் மூலம் தப்பித்துச் செல்ல முடியும். மேலும் அவர்கள் சிறிதும் சந்தேகமே வராத அளவிற்கு நடந்து கொண்டுள்ளனர், என்று போலீசார் சொல்கின்றனர்[2]. ஆக அவர்கள் திட்டமிட்டே, இவ்வாறு பதுங்கி வாழ்ந்துள்ளனர். இரண்டு வருடங்களாக இவர்கள் இப்படி மறைந்து வாழ்ந்துள்ளனர்[3]. சென்னை போன்ற நகரங்கள் மீது தாக்குதல் நடத்தவும் தீர்மானித்ததாகத் தெரிகிறது[4]. இஸ்லாமிய மதவெறி இல்லாமல் இருந்திருந்தால், இத்தகைய எண்ணத்தில் இருந்திருக்க மாட்டார்கள் எனலாம்.

chittoor-puttur-jihadi-hideout-DC

முஸ்லிம் காலனியில், மசுதிக்கு அருகில் வீட்டைத் தேர்ந்தெடுத்தது: முஸ்லிம் காலனியில், கேட் புத்தூர், ஸ்கூல் தெரு, கேட் தெரு, மஸ்கித் தெரு, மேத ரா தெரு என்றுள்ளன. மஸ்ஜித் தெருவிலிருந்து ரெயில்வே ஸ்டேசன் அருகில் உள்ளது. மேதரா தெருவில் இரண்டு வீடுகளை வாடகை எடுத்துத் தங்கியுள்ளனர். யாசின் பாட்சா என்ற மத்திய கலால் துறை சூப்பிரென்டென்ட் வீடுகளுக்கு சொந்தக்காரர். அவர் சமீபத்தில் இறந்து விட்டதாகத் தெரிகிறது. ரூ.1000/- வாடகையில் அவர்கள் தங்கியுள்ளனர். பழைப் பொருட்களை வாங்கி-விற்கும் வியாபாரத்தை செய்வது போல இருந்துள்ளனர்[5]. அதாவது அல்-உம்மா திவிரவாதிகள் வியாபாரிகள் போல நடித்து, திரிந்துள்ளனர்[6]. அவர்களைப் பற்றி கேட்டதற்கு, எதுவும் பேசாமல் வாய்மூடிக் கொண்டு உள்ளூர்வாசிகள் இருக்கிறார்களாம். இங்கிருப்பவர்கள் தெலுங்கு பேசுபவர்கள், இவர்களோ தமிழர்கள், அதனால், “நாங்கள் அவர்களிடத்தில் என்ன பேசியிருக்க முடியும்?”, என்று ஹஷீனா என்ற பெண்மணி அங்கலாய்த்தாராம்[7]. முஸ்லிம்கள் எப்படி விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார்கள் என்பதை, அப்பெண்கள் நடந்து கொண்ட விதத்திலிருந்தே தெரிகின்றது. மசூதி மற்றும் மசூதி சுற்றிலும் முஸ்லிம்களின் வீடுகள் இருப்பது, அத்தெருக்களில் முஸ்லிம்கள் மட்டுமே வாழ்வது, அத்தெருக்களில் மற்றவர்கள் செல்வது மறைமுகமாகத் தடுப்பது முதலியவற்றை அறிந்து கொள்ளலாம்.

chittoor-puttur-jihadi-hideout-Dinamani.3

போலீசார் – அக்டோபஸ் கமாண்டோஸ் தீவிரவாதிகளைப் பிடித்த விதம்: பி. பிரசாத் ராவ், டி.ஜி.பி, ஆந்திரபிரதேசம், “பிடிபட்ட மூன்று பேரும் சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகள் ஆவர். அதில் பில்சால் மாலிக் மற்றும் பம்மா இஸ்மாயில், பெங்களூரு பிஜேபி.அலுவலகத்தில் குண்டு வைப்பு, எல்.கே.அத்வானி மீது தாக்குதல் சதி, பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கொலை முதலிய குற்றங்களில் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது” என்றார். “விடியற்காலை 4.30க்கு, லட்சுமணன், சென்னை போலீஸ் நுழைய முற்பட்டபோது, பிலால் இஸ்மாயில் அவரை அரிவாளல் வெட்டியதில் படுங்காயம் ஏற்பட்டுள்ளது. அவர் சென்னை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப் பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்பொழுது அபாயத்திலிருந்து தப்பிவிட்டார் என்று தெரிகிறது. பெண் மற்றும் குழந்தைகள் இருந்ததால், போலீசார் மற்றும் சிறப்புப் படையினர், பொறுமையாக செயல் பட்டுள்ளனர். வீட்டின் கூரையில் இரண்டு இடங்களில் துளையிட்டு உள்ளே புகைக்குண்டுகள் போடப்பட்டன. இதனால், உள்ளேயிருந்தவர்கள் முன்புள்ள அறையில் பதுங்கிக் கொண்டனர். எச்சரிக்கை விடுத்த பிறகு, பெண் குழந்தைகளுடன் வெளியே வந்தாள். பிறகு இரண்டு பேரும் வெளியே வந்து சரணடைந்தனர்.”, என்று அவர் விளக்கினார்[8].

ISI-Residence-putur-DC.3 Bana Ismail wife

இந்திய முஜாஹித்தீன் போன்று அல்முஜாஹித்தீனும் அதேவிதமான குண்டுகள்,  வெடிப்பொருட்கள் வைத்திருந்தது: போலீசார் பக்ருதீனின் மறைவிடத்திலும் சோதனையிட்டு வெடிப்பொருட்களையும், ஆயுதங்களையும் [ஒரு பிஸ்டல், பைப் குண்டுகள், ஐந்து மேம்படுத்தப் பட்ட குண்டுகள், தூரத்திலிருந்து இயக்கும் கருவி (ரிமோட்) உட்பட] எடுத்துள்ளனர். “அக்டோபஸ்” – தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கை இயக்கம் [OCTOPUS (Organisation for Counter Terrorists Operations)] என்கின்றதன் வீரர்கள் தயாராக இருந்த ஆறு உள்ளிருந்து வெடுக்கும் தன்மையுள்ள குண்டுகளை [six IEDs ready for use] செயலிழக்கச் செய்தனர்[9]. “இவ்வியக்கம் மேற்கொள்ளும் முதல் நடவடிக்கையாகும், இதில் அவர்கள் தங்களது வேலையை நன்றாகச் செய்துள்ளனர்”, என்று பி. பிரசாத் ராவ், டி.ஜி.பி சொன்னார். இந்த IEDக்களை இந்திய முஜாஹித்தீன் உபயோகித்து வருகிறது என்பது தெரிந்த விசயமே. அதனால், இரண்டு இயக்கங்களும் ஒத்துழைத்தே செய்து வருகின்றன என்று தெரிகிறது. சமீபத்தில்தான் யாசின் பட்கல், அப்துல் கரீம் துண்டா முதலியோர் பிடிபட்டுள்ளனர் என்பதும் கவனிக்கத் தக்கது. இதனால் தான், போலீசார், இவர்களுக்கும் பாகிஸ்தான்-ஐ.எஸ்.ஐக்கும் தொடர்புள்ளதாகக் கருதுகின்றனர்.

ISI-Residence-putur-DC.4

திருப்பதிதிருமலை மீது தாக்குதல் திட்டமிடப்பட்டதா?: திருப்பதி-திருமலை புத்தூரிலிருந்து 35 கி,மீ தொலைவில் தான் உள்ளது. மேலும், இப்பொழுது பிரம்மோட்சவம் நடந்து வருகிறது. மேலும், ஆந்திரா பிரிவினை பிரச்சினையால் பந்த்-கடையடைப்பு முதலியனவும் நடந்து வருகின்றன. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ஒருவேளை, அத்தீவிரவாதிகள், திருமலையைத் தாக்க திட்டமிட்டனரா என்று கேட்டபோது, “அத்தகைய விவரம் எதுவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. இருப்பினும் புலன் விசாரணை செய்பவர்கள் அத்தகைய விவரங்களை ஆராய்வார்கள்”, என்றும் கூறினார்[10]. அக்டோபஸ் கமாண்டோக்கள் திருமலை கோவிலுக்கு பாதுகாப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்[11]. முகலாயர்கள், போர்ச்சுகீசியர் போன்ற முஸ்லிம்-கிருத்துவர்களின் கண்களை எப்பொழுதுமே இக்கோவில் உறுத்தி வந்துள்ளது. அக்கோவிலைக் கொள்ளையடிக்க பலமுறை முயற்சித்துள்ளனர். ஆனால், மக்கள் மற்றும் அரசர்கள் அதனைத் தடுத்து வெற்றிக் கொண்டுள்ளனர். ஆகவே, இக்காலத்திலும், முஸ்லிம் தீவிரவாதிகள் இவ்வாறு நடந்து கொள்வதில் ஆச்சரியமில்லை. கடவுளை நம்புகிறவர்கள் அடுத்தவர்களின் கோவில்களை இடிப்பது, அழிப்பது என்ற வெறித்தனம் ஏன் உள்ளது என்பதும் மனோதத்துவ ரீதியில் அறிய முடிகிறது. முஸ்லிம்கள், இவர்களை மாற்றாமல், அவர்களது வெறியை ஊக்குவிக்கும் செயல்களில் ஈடுபட்டிருப்பது, அவர்களது அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம், வன்முறை முதலியவற்றைத் தான் எடுத்துக் காட்டுகிறது.

ISI-Residance-putur-DC.2

நாட்டுப்பற்று கொண்ட முஸ்லிம் லீக்கின் செயலாளர் பக்ருதீனை விடுவிக்க மனு: சொல்லிவைத்தால் போல, ஜே. அப்துல் ரஹிம், இந்திய தேசிய லீக் கட்சியின் பொது செயலாளர் [The petitioner J. Abdul Rahim, general secretary, Indian National League Party], ஆள்கொணர்வு மனு ஒன்றை அக்டோபர் 4 அன்று தாக்குதல் செய்துள்ளார். “பக்ருதீன் எனது நண்பர். செய்திகள் வாயிலாக அவரை போலீஸார் கைது செய்து, ஏதோ மறைவிடத்திற்கு விசாரிக்க எடுத்துச் சென்றுள்ளதாக தெரிகிறது. போலீசார் அவரது குடும்பதிற்கு இவ்விவரங்களை சொல்லவில்லை. இது சட்டத்திற்கு புறம்பானது. உடனே அவரை விடுவிக்கவேண்டும்”, என்று வாதித்துள்ளார்[12]. ஆனால், மதுரையிலுள்ள சையது மீரா என்ற பக்ருதீனின் தாயாருக்கு கைது பற்றி தெரிவித்துள்ளதாகவும், கைது முதலியன சட்டப்படித்தான் செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் எடுத்துக் காட்டியுள்ளனர்.

ISI-Residence-putur-DC.6

முஸ்லிம்கள் முஸ்லிம்களாக நடந்து கொள்வது: முஸ்லிம்கள் இவ்வாறு தீவிரவாதிகளாக, குண்டுகள் வெடித்து அப்பாவி மக்களைக் கொல்வது, இந்துத் தலைவர்களை மதவெறியோடுத் தாக்கிக் கொல்லுதல், முதலிய செயல்களை செய்து வரும் போது, மற்ற முஸ்லிம்கள் அமைதியாக இருக்கிறார்கள். நாட்டைத் துண்டாடியதில் “இந்திய முஸ்லீம் லீக்கின்” பங்கு அனைவரும் அறிந்ததே. பெயரை மாற்றிக் கொண்டு விட்டதால், “முஸ்லிம்” என்ற வார்த்தையை எடுத்து விட்டால், இந்தியர்கள் மறந்து விட மாட்டார்கள். அடிக்கொரு தடவை, நாட்டுப் பற்றில் நங்கள் எந்தளவிலும் சளைத்தவர்கள் அல்லர் என்று மார் தட்டிக் கொள்ளும் இவர்கள், எப்படி இத்தகைய தீவிரவாதிகளை ஆதரிக்கின்றனர் என்று அவர்கள் தாம் விளக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

06-10-2013


[7] Women in the street told this correspondent that the duo was always tight-lipped. “They are Tamils and we are Telugus. What’s there for them to talk to us?”, snaps Hasina, an elderly woman who has seen one of them regularly collect water from the public tap.

http://www.thehindu.com/news/national/alumma-men-masqueraded-as-traders-in-puttur/article5205425.ece

[9] Police then searched the hideout of the other terror suspect Fakruddin and recovered the weapons and explosives. “An OCTOPUS team along with a team from the Army defused six IEDs ready for use.

[11] Tirumala is a potential terrorist target. A team of OCTOPUS commandos is stationed round the clock at Tirumala guarding the Lord Venkateswara Temple.

[12] The petitioner J. Abdul Rahim, general secretary, Indian National League Party, submitted that on October 4, he came to know that his friend, Fakruddin, had been arrested by CB CID (Special Investigation Team.) He was illegally detained. There were also press reports that he had been taken to an unknown place by the police. The police did not inform the relatives or family about the arrest and detention. He sent a representation to the authorities demanding the immediate release of Fakruddin.

http://www.thehindu.com/news/cities/chennai/fakruddin-not-illegally-detained-state-tells-court/article5205069.ece?ref=relatedNews

தமிழக ஜிஹாதிகள்-போலீசார் சித்தூரில் பயங்கர மோதல் – துப்பாக்கி சூடு – ஒரு போலீசார் உயிரிழப்பு!

ஒக்ரோபர் 5, 2013

தமிழக ஜிஹாதிகள்-போலீசார் சித்தூரில் பயங்கர மோதல் – துப்பாக்கி சூடு – ஒரு போலீசார் உயிரிழப்பு!

Dinamalar-TN-Jihadis-arrest-Graphicsதிருப்பதி அருகே முஜாஹித்தீன் தீவிரவாதிகள்: ஆந்திர மாநிலம் எல்லையில் சென்னை அருகே பதுங்கி இருந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பிடிக்க போலீசார் கடும் துப்பாக்கிச்சண்டை நடத்தி வருகின்றனர். இதில் தமிழக போலீ­சார் 2 பேர் ­கா­ய­முற்­ற­னர். முன்­ன­தா­க ­போ­லீ­சார் உயிரிழந்ததா­க ­கூ­றப்­பட்­ட­து. தொடர்ந்து 10 மணி நேரமாக துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. தமிழகத்தில் பிஜேபி பிரமுகர்கள் பலர் குறிவைத்து கொல்லப்பட்டனர். இவர்களில், வேலூரில் வெள்ளையன், சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த கொலைகளில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என டில்லியில் உள்ள அனைத்து பிஜேபி நிர்வாகிகளும் வலியுறுத்தினர். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

TN POLICE announcementபிரம்மோஸ்தவம் நடக்கும் வேலையில் புத்தூரில் இஸ்லாமிய தீவிரவாதிகளின் மறைவிடம்: இதையடுத்து, குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இதில் நேற்று வெள்ளிக்கிழமை பதுங்கியிருந்த போலீஸ் பக்ரூதின் என்பவனை கைது செய்தனர். இவன் கொடுத்த தகவலின்படி இன்று காலையில் சென்னை அருகே ஆந்திர எல்லையான புத்தூரில் (சித்தூர் மாவட்டம்) பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் உள்ளிட்ட சிலர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது[1]. இதனையடுத்து போலீசார் துப்பாக்கிகளுடன் மேதரா வீதியில் உள்ள ஒரு வீட்டை முற்றுகையிட்டனர். இங்கு போலீசார் வருவதை அறிந்த பயங்கரவாதிகள் போலீசார் நோக்கி சுட்டனர். க­த­வை ­ தட்டிய­போ­து இரண்டு  ­ ­போ­லீ­சா­ரை ­அ­ரி­வா­ளால் ­வெட்­டி­னர், இ­தில் ­இ­ரு­வ­ரும் படுகாயமுற்­ற­­னர். இதனையடுத்து போலீசாருக்கும், பயங்கரவாதிகள் இடையேயும் கடும் துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.

Abubakkar Siddique - TN police noticeதில்லியிலிருந்து எஸ்-ஐ.டி படை வந்தது: இன்று காலையில் தில்லியிலிருந்து எஸ்.ஐ.டி படை வந்தது. மத்திய அரசின் ஆக்டோபஸ் என்ற படையும், தமிழக, ஆந்திர போலீஸ் படையும் இணைந்து இந்த ஆப்ரேஷனை நடத்தின[2]. இந்த துப்பாக்கிச்சண்டையில் தமிழக ­போ­லீஸ்கா­ரர் ­ 2 பேர் காயமுற்றனர். முன்­ன­தா­க போலீசார் ­இ­றந்­த­தா­க கூறப்பட்ட­து[3]. போலீஸ் அதிகாரிகள் தொடர்ந்து போனில் பேசிவந்தது தெரிந்தது. ஜிஹாதிகள் இரண்டு வீடுகளை வாடகைக்கு எடுத்துள்ளனர். ஒடரு வீட்டில் பதுங்கியுள்ளனர். உள்ளே ஒருவேளை குண்டுக்லள் வைத்திருக்கக் கூடும் என்பதால், போலீசாரார் அதிரடியாக உள்ளே நுழைய பயப்படுகின்றன்சர் என்று தெலுங்கு ஊடகங்கள் எடுத்துக் காட்டின.

CBCID_NOTICEதமிழகத்தின் அல்முஜாகிதீன் படை[4]: மதுரை, நெல்பேட்டையைச் சேர்ந்த பிலால் மாலிக்கும், “போலீஸ்’ பக்ருதீனும், “அல்முஜாகிதீன் படை” இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என, போலீசார் தெரிவிக்கின்றனர். அதாவது அல்-உம்மா, அல்-முஜீஹித்தீனாக மாறியது போலும். இதன் உறுப்பினர்கள், “தியாகப்படை” என்றும் அழைக்கப்படுகின்றனர். அதாவது ஜிஹாத் தமிழகத்தில் “தியாகத்தோடு” செயல்படுவது மெய்ப்பிக்கப்படுகிறது. பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட இந்த இயக்கம், மதுரையில் செயல்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்திற்கு இவ்விதமாகத்தான் இஸ்லாமிய தீவிரவாதம் இறக்குமதி செய்யப்பட வேண்டும் போலிருக்கிறது. கடந்த, 2005ல், மதுரையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி, காளிதாஸ் கொலையில், 17 வயதாக இருந்த, பிலால் மாலிக் சேர்க்கப்பட்டான். அதன் பின், பூசாரி கங்காதரன் கொலை, அத்வானி யாத்திரையில் பைப் வெடிகுண்டு வைத்த வழக்குகளில் தேடப்பட்டு வருகிறான். பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வருபவன் மாலிக். இவனை கண்டு பிடித்து தருபவருக்கு ரூ. 5 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று போலீசார் நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டியிருந்தனர்.

Dinamalar-TN-Jihadis-arrest.6பீடிசுற்றும் தொழிலாளிகள் போர்வையில் ஜிஹாதி குடும்பங்கள்: போலீஸ் விசாரணை அல்-உம்மா பயங்கரவாதி பிலால்மாலிக், இரண்டு மாதத்திற்கு முன்னர் தான் தற்போது குடியிருக்கும் வீட்டை, அங்குள்ள நண்பர் உதவியுடன் பீடிசுற்றும் தொழிலாளிகள் என்ற போர்வையில் அவ்வீட்டை வாடகைக்கு பிடித்துள்ளான்[5]. பீடி உற்பத்தி செய்யும் முஸ்லிம் தொழிற்சாலை அதிபர்கள் இந்துவிரோத பிரசுரங்களுக்கு உதவுகிறார்கள் என்பதை முந்த்யைய ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளேன். இந்த இடம்  “முஸ்லிம் காலனி” என்றே அழைக்கப்படுகிறது. குடியேறியபோது அவனுடன் நான்கு குடும்பங்கள் வசித்து வந்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் மற்றவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். அதாவது “தியாகம்” செய்யவேண்டிய நிலை வரும் போது, “குடும்பங்கள்” சென்று விடும் போலிருக்கிறது. பிலால்மாலிக்கின் குடும்பத்துனருடன் மேலும் சிலர் மட்டும் தற்போது அங்கு தங்கி உள்ளனர். இந்த தகவலை தொடர்ந்து, பிலால்மாலிக்குடன் தங்கியிருந்தவர்கள் குறித்த விசாரணையை போலீசார் துவக்கி உள்ளனர். ஜிஹாதிகளுக்கு இப்படித்தான் “லாஜிஸ்டிக்ஸ்” கிடைக்கிறது போலும்!

chittoor-puttur-jihadi-hideout-Dinamani.7தமிழக ஜிஹாதிகள்-போலீசார் துப்பாக்கி சண்டை: தமிழக-ஆந்திர எல்லை கிராமத்தில் வெள்ளிக்கிழமையன்று துப்பாக்கி முனையில் பக்ருதீன் பிடிபட்டான். இதற்குள் மற்ற தீவிரவாதிகள் சித்தூரில், ஒரு வீட்டில் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்ததும், தமிழக போலீசார், அவ்வீட்டை வளைத்தனர். விசயம் தெரிந்த தமிழக ஜிஹாதிகள், போலீசார் மீது தாக்க ஆரம்பித்தனர். துப்பாக்கிகளால்  சுட்டதாகவும் தெரிகிறது[6]. ஒரு போலீஸ்காரரை – சர்க்கிள் இன்ஸ்பெக்டர் லட்சுமண மூர்த்தி – தமிழக ஜிஹாதி குத்தித் தப்பிச் சென்றுவிட்டதாக ஆங்கில செனல்களில் செய்தி வந்துக் கொண்டிருக்கின்றது. போலீஸ் உடனே இறந்துவிட்டதாகத் தெரிகிறது, இன்னொரு போலீசார் காயமடைந்துள்ளார். சுமார் 30 போலீசார், இந்த வேட்டையில் கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் தமிழக-ஆந்திர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். என்.டி.டிவி இதனை என்கவுன்டர் என்று வர்ணித்துள்ளது[7]. அதாவது, சட்டரீதில் ஜிஹாதிகளுக்கு உதவ ஆலோசனையை சூசகமாகத் தெரிவிக்கிறது. உடனே, ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டுவிடுவார் என்பது தெரிய வரும்.

chittoor-puttur-jihadi-hideout-Dinamani.2பிலால்மாலிக்குடன் போலீசார் பேச்சு-வார்த்தை[8]: ஆந்திர எல்லை கிராமமான புத்தூரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருக்கும் பைப் வெடிகுண்டு வழக்கில் சம்பந்தப்பட்ட அல் உம்மா பயங்கரவாதியுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையா, பேரமா, உடன் படிக்கையா என்பது பிறகு தான் தெரிய வரும். அவனை உயிருடன் பிடிக்க வேண்டும் என முடிவெடுத்திருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் போது, பிலால்மாலிக்கை சரண் அடையும்படி போலீசார் வலியுறுத்தியதாகவும், அதற்கு அவன் மறுப்பு தெரிவித்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன. பிறகு,வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பிலால்மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகிய இருவரும் போலீசாரிடம் சரண் அடைந்தனர்[9]. இதன்மூலம், 12 மணி நேர அதிரடி நடவடிக்கை நிறைவடைந்தது. முன்னதாக, வீட்டில் பதுங்கியிருந்த ஒரு பெண், மூன்று குழந்தைகளை வெளியில் அனுப்பிய பிலால்மாலிக், பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, பன்னா இஸ்மாயிலுடன் சரண் அடைந்தான். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் எங்கு உள்ளனர் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. எப்படியிருந்தாலும், மருத்துவமனையில் சேர்க்கப் படுவர். உபசரிக்கப் படுவர். அதற்குள் நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்படும்!

® வேதபிரகாஷ்

05-10-2013


[5] According to the local people, four people, who claimed to be working in the beedi manufacturing industry, had taken the house on rent a few months ago. Locals said that they had no information about these people as they only came back home late in the night.

http://www.rediff.com/news/report/andhra-pradesh-police-raid-terrorist-hideout-constable-killed/20131005.htm

[7] Firing between suspected militants and police in Andhra Pradesh; one cop killed: report

HyderabadA policeman has been killed and another injured in an on-going encounter with suspected militants in the Chittoor district of Andhra Pradesh, according to reports. A team of 30 policemen have reportedly surrounded the men, who are believed to be heavily armed.  Police sources say the men are suspected to be behind the killing of Bharatiya Janata Party’s Tamil Nadu unit general secretary V Ramesh, who was attacked fatally with sharp-edged weapons near his house in July.

http://www.ndtv.com/article/south/firing-between-suspected-militants-and-police-in-andhra-pradesh-one-cop-killed-report-428105