Posted tagged ‘திருச்சி’

என்ஐஏ தொடர்ந்து சென்னை மற்றும் திருச்சி நகரங்களில் சோதனை – கோயம்புத்தூர் கார் வெடிப்பு-விபத்து, தற்கொலை விவகாரம்!

நவம்பர் 21, 2022

என்ஐஏ தொடர்ந்து சென்னை மற்றும் திருச்சி நகரங்களில் சோதனைகோயம்புத்தூர் கார் வெடிப்புவிபத்து, தற்கொலை விவகாரம்!

10 நாட்களில் 3-வது சோதனை 10 நாட்களில் 3-வது சோதனைவிட்டுவிட்டு நடக்கும் சோதனைகள்: சோதனை 20-11-2022 சனிக்கிழமை அன்று கார் வெடிப்பு வழக்குத் தொடா்பாக சென்னை, திருச்சியில் 6 இடங்களில் போலீஸார் சோதனை செய்து, பென்டிரைவ், மடிக்கணினி, கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்[1]. 10-11-2022 மற்றும் 15-11-2022 என்று சோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன[2]. கோவை உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக். 23-ஆம் தேதி சென்ற ஒரு காரில் இருந்த சிலிண்டா் வெடித்தது. இந்த சம்பவத்தில் அந்த காரை ஓட்டி வந்த அந்தப் பகுதியைச் சோ்ந்த ஜமேஷா முபீன் என்ற இளைஞா் உயிரிழந்தார். இது தொடா்பாக ஜமேஷா முபீன் கூட்டாளிகள் 6 பேரை கோவை போலீஸார் கைது செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக என்ஐஏ தமிழகம்,கேரளம் ஆகிய இரு மாநிலங்களில் 43 இடங்களில் கடந்த 10ஆம் தேதி [10-11-2022] ஒரே நேரத்தில் சோதனை செய்தது. இந்த வழக்கை விசாரித்த என்ஐஏ, ஐஎஸ் பயங்கரவாத உறுதி மொழி ஏற்ற ஜமேஷா முபீன், தற்கொலை தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தது. அதில் பல்வேறு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றியதாகவும் கூறப்பட்டது. அதேபோல், இந்த சம்பவத்தின்போது உயிரிழந்த முபினின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 75 கிலோ நாட்டு வெடிகுண்டுகள்தயாரிக்க பயன்படும் வேதிப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றை ஆன்லைன் மூலமாக வாங்கியதாக கைதானவர்கள் தரப்பில் முன்பு தெரிவிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்திருந்தனர்[3]. இருப்பினும் அதில் சில பொருட்களை சிவகாசியில் உள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வாங்கியிருக்கலாம் எனஎன்ஐஏ அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது[4]. இந்த வெடிப்பொருட்கள்-ரசாயனங்கள் பற்றி ஏற்கெனவே வாத-விவாதங்கள் காரசாரங்களில் முடிந்துள்ளன.

15-11-2022 அன்று சோதனையில் ஆவணங்கள் பறிமுதல்: என்ஐஏ வழக்கின் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையிலும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடா்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையிலும் சென்னை பெருநகர காவல்துறையினா் கடந்த 15ஆம் தேதி 5 இடங்களில் சோதனை செய்து, வெளிநாட்டு பணம்,ஆவணங்களை பறிமுதல் செய்தனா்.

20-11-2022 சனிக்கிழமை அன்று சென்னையில் சோதனை: இந்நிலையில் இரண்டாவது கட்டமாக சனிக்கிழமை 4 இடங்களில் போலீஸார் ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்[5].

இச் சோதனை –

  1. சென்னை ஓட்டேரி எஸ்.எஸ்.புரத்தில் வசிக்கும் சாகுல் ஹமீது (31) வீடு[6],
  2. வேப்பேரி ஈவெரா பெரியார் சாலையில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் எஸ்.எம்.புஹாரி (57) வீடு,
  3. ஏழு கிணறு பகுதியில் பிடாரியார் கோவில் தெருவில் உள்ள உமா் முக்தார் (33) வீடு,
  4. வி.வி.எம்.தெருவில் உள்ள முகமது ஈசாக் கெளத் (33) வீடு

ஆகிய இடங்களில் நடைபெற்றது. பல மணி நடைபெற்ற சோதனையில் 4 வீடுகளிலும் இருந்து 12 பென் டிரைவ்கள், 14 கைப்பேசிகள்,ஒரு மடிக்கணினி, 2 கையடக்க கேமராக்கள், ஒரு சிறிய ரக சூட்கேஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இவை அனைத்தும் தடயவியல்துறை ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் அடிப்படையில் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 102-கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது[7]. கடந்த 10 நாட்களில் 3-வது முறையாக சென்னையில் என்ஐஏ சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது[8].

20-11-2022 சனிக்கிழமை அன்று திருச்சியில் சோதனை: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடா்பாக திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த இருவா் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது[9]. இதில், –

  1. ஷாகுல் ஹமீத் (வயது 25)- இனாம்குளத்தூா் நடுத்தெருவில் வசிக்கும் ஆவின் நிறுவன ஒப்பந்த தொழிலாளி,
  2. ஷர்புதீன் (வயது 25) – கந்தசாமி தெருவைச் சோ்ந்த ஜெராக்ஸ் கடை நடத்துபவா் –

என இருவா் மீது சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்தனா். இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஐ.எஸ் அமைப்பின் முகநூல் பக்கத்தை லைக் செய்ததாகக் கூறப்படுகிறது[10]

இதையடுத்து, ஜீயபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாரதிதாசன் தலைமையில், இரண்டு காவல் ஆய்வாளா்கள், 13 உதவி ஆய்வாளா்கள், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் மோப்பநாய் உதவியுடன் இனாம்குளத்தூருக்கு சனிக்கிழமை வந்தனா். சந்தேகப்படும் நபா்கள் இருவா் தங்கியிருந்த வீடுகளிலும், அதன் சுற்றுப் பகுதிகளிலும் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இரு இடங்களிலும், சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் இருவரது வீடுகளில் இருந்து எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. இருப்பினும், இருவரது சமூக வலைதள பகிர்வுகள் குறித்தும், தொலைபேசி தொடா்புகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா். “இச்சோதனையில் ஹார்டு டிஸ்க்குகள், 2 செல்போன்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது,” என்று நக்கீரன் குறிப்பிடுகிறது. 

17-11-2022 முதல் 19-11-2022 வரை கம்பத்தில் சோதனைவிசாரணை: கம்பத்தில் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சோ்ந்த நிர்வாகிகள் 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 18-11-2022, வெள்ளிக்கிழமை அன்று விசாரணை நடத்தினா்[11]. தீவிரவாதிகள் அமைப்புடன் தொடா்பு இருப்பதாக பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் என மாநிலத்தில் 16-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை போலீஸார் கடந்த செப். 22-இல் சோதனை நடத்தினா். இதில் அந்த அமைப்பின் மண்டலச் செயலாளா் பொறுப்பில் இருந்த தேனி மாவட்டம், கம்பம் தாத்தப்பன்குளத்தைச் சோ்ந்த யாசா் அராபத் (32) என்பவரைக் கைது செய்தனா். அதன் பின்னா் கம்பத்தில் செயல்பட்ட மாவட்ட அலுவலகத்துக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2 நாள்களாக கம்பத்தில் அந்த அமைப்பைச் சோ்ந்த 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை காவல் ஆய்வாளா் அருண் மகேஷ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், 3-ஆவது நாளாக 19-11-20022 அன்று வெள்ளிக்கிழமையும் அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது: “கம்பத்தில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டவருடன், சிலருக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில், கம்பத்தில் 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. தொடா்ந்து விசாரணை நடைபெறும்,” என்றனா்[12].

© வேதபிரகாஷ்

21-11-2022.


[1] தினமணி, கார் வெடிப்பு வழக்கு: சென்னை, திருச்சியில் போலீஸார் சோதனை, By DIN  |   Published On : 19th November 2022 11:15 PM  |   Last Updated : 20th November 2022 04:51 AM.

[2] https://www.dinamani.com/tamilnadu/2022/nov/19/police-raids-in-trichy-and-chennai-3952494.html

[3] தமிழ்.இந்து,  கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: மேலும் 5 பேரிடம் என்ஐஏ விசாரணை, செய்திப்பிரிவு, Published : 19 Nov 2022 06:21 AM; Last Updated : 19 Nov 2022 06:21 AM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/900225-coimbatore-car-cylinder-blast-1.html

[5] தினத்தந்தி, என்... வழக்கு தொடர்பாக சென்னையில் மீண்டும் 4 பேர் வீடுகளில் போலீசார் சோதனைசெல்போன்கள் பறிமுதல், நவம்பர் 20, 12:20 am

[6] https://www.dailythanthi.com/News/State/nia-in-connection-with-the-case-the-police-raided-the-houses-of-4-people-in-chennai-again-cell-phones-were-seized-840708

[7] தமிழ்.இந்து, 3-வது முறையாக சென்னையில் 4 இடங்களில் என்ஐஏ சோதனை: ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்பா என விசாரணை, செய்திப்பிரிவு, Published : 20 Nov 2022 04:20 AM; Last Updated : 20 Nov 2022 04:20 AM

[8] https://www.hindutamil.in/news/tamilnadu/900669-nia-raids-4-locations-on-chennai-for-the-3rd-time-probe-for-links-with-isis.html

[9]   நக்கீரன், என்.. திடீர் சோதனை; மூன்று மணி நேர சோதனைக்குப் பிறகு ஹார்டு டிஸ்க்குகள் பறிமுதல், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 19/11/2022 (20:30) | Edited on 19/11/2022 (20:46).

[10] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/nia-raid-trichy-confiscation-hard-disks

[11] தினமணி, கம்பத்தில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிா்வாகிகள் 5 பேரிடம் என்ஐஏ விசாரணை, By DIN  |   Published On : 18th November 2022 11:36 PM  |   Last Updated : 18th November 2022 11:36 PM.

[12] https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2022/nov/18/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-3951860.html

இஸ்லாத்தில் கல்யாணத்திற்கு முன்பான காதல் ஹராம் – Love before Wedding என்பது LBW!

ஓகஸ்ட் 31, 2016

இஸ்லாத்தில் கல்யாணத்திற்கு முன்பான காதல் ஹராம் – Love before Wedding என்பது LBW!

i KNOW IT IS HARAM, BUT, i LOVE HIM

இஸ்லாத்தில் காதல் ஹராமா அல்லது வேறு காரணிகள் தடுக்குமா?: ஊடகங்கள் அமுக்கி வாசிப்பதனால், இது வெறும் காதல் பிரச்சினையா, மதப்பிரச்சினையா என்னெவென்றே புரியாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது:

  1. இஸ்லாத்தில் காதல் கூடாதா, ஹரமா?
  2. “லைலா-மஜ்னு” போல சமூக-பொருளாதார அந்தஸ்து பார்ப்பார்களா?
  3. சுன்னி-ஷியா போன்ற இறையியல் சித்தாந்தங்கள் – பிரிவுகள் தலையிடுமா?
  4. சையது போன்ற உயர் ஜாதி முஸ்லிம்களை, லெப்பை போன்ற கீழ் ஜாதி முஸ்லிம்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது போன்றவை உண்மையா?
  5. போரா முஸ்லிம்கள் உள்-திருமண முறையைத் தான் [Endogamy] ஆதரிக்கின்றது, வெளியேயிருந்து பெண் எடுக்கும் முறையினை [exogamy] ஆதரிப்பதில்லை. அத்தகைய முறை சுன்னிகளிடம், ஷியாக்களிடம் உள்ளதா?
  6. அல்லது இவைத் தவிர வேறு பிரச்சினைகள் உள்ளனவா?
  7. அதாவது, இருவரில் ஒருவர் “இந்து” போன்ற பிரச்சினை உண்டா என்று தெரியவில்லை.

இக்கேள்விகளுக்கு விடை காணமுடியுமா, முடியாதா என்று தெரியவில்லை. சமீப காலத்தில், திருச்சி-ஶ்ரீரங்கம் பகுதிகளில் நடந்து வரும் இத்தகைய காதல், காதல்-திருமணங்கள் பல கேள்விகளை எழுப்புகின்றன. உதாரணத்திற்கு சென்ற மாத விவகாரத்தை எடுத்துக் கொள்வோம்.

haram love, halal loveகாதல் திருமணம் செய்த பெண் கணவர் வீடு முன்பு தர்ணா கோர்ட் உத்தரவுப்படி சேர்த்து வைக்க கோரிக்கை[1]: திருச்சி காஜாமலை டிவிஎஸ் நகரைச் சேர்ந்தவர் / ஸ்டேடபாங்க் காலனியை பர்ஜானா பேகம் (31). இவர் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டணம்  சாந்திநகரைச் சேர்ந்த வள்ளிநாயகம் மகன்  சத்தியகுமார் (31) என்பவரது  வீட்டின் முன்பு அமர்ந்து திடீர்  தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து பர்ஜானாபேகம் கூறுகையில், ‘‘நானும் சத்தியகுமாரும் கடந்த 2009ம் ஆண்டு திருச்சியில் காதல் திருமணம்  செய்து கொண்டோம்முஸ்லிம் மதத்திற்கு மாறி அவர் என்னை திருமணம் செய்தார்எனது குடும்பத்தார் முன்னிலையில் எங்களது 2009 நவ., 21 ல்  திருமணம் நடந்ததுதிருமணத்திற்கு சத்தியகுமாரின் குடும்பத்தினர் வரவில்லை. தொடர்ந்து  நாங்கள் தூத்துக்குடி அருகில் உள்ள வாகைக்குளத்தில் தனியாக  வாடகை வீட்டில் வசித்து வந்தோம். இந்நிலையில் எனது கணவர், தான் வெளிநாடு  செல்ல விரும்புவதாகவும், இதனால் நீ இங்கு தனியாக இருக்க வேண்டாம் என்றும் கூறினார். வெளிநாட்டிலிருந்து அவர் வரும் வரை  சென்னையில் சட்டக்கல்லுரியில் படிக்குமாறு கூறி 27.8.2011ல் என்னை  திருச்சிக்கு அனுப்பினார். இந்த சமயத்தில் எனது கணவர் வீட்டார் அவரின்  மனதை மாற்றி வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்து வைத்துள்ளனர். மேலகூட்டுடன்காடு பகுதியை சேர்ந்த பிரேமா என்பவரை சத்தியக்குமார் 2011 செப்., 1 ல் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்[2]. இதுகுறித்து  தகவல் தெரிந்து நான் வந்தபோது என்னை சமாதானம் செய்து என்னுடன் இருப்பதாக  கூறி என்னை மீண்டும் ஏமாற்றி விட்டார். பிரேமா தூத்துக்குடியில் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார்[3] இதனால் நான் புதுக்கோட்டை போலீசாரிடம் புகார் கொடுத்து அதன்படி வழக்கு நடந்து வருகிறது. மேலும்  கணவருடன் சேர்ந்து வாழ உரிமை கோரி திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நான் 2015ல் வழக்கு  தொடர்ந்தேன். இதை விசாரித்த நீதிமன்றம், பாதுகாப்பை கருத்தில் கொண்டு வீரபாண்டியன்பட்டணத்தில் உள்ள எனது கணவரின் வீட்டில் நான் வசிக்க அனுமதி அளித்து 2016 ஜூன் 28 ல் உத்தரவிட்டது. அதன்படி தான் இங்கு வந்தபோது எனது கணவர் வீட்டார் என்னை அனுமதிக்க மறுத்து கதவை பூட்டி விட்டனர். எனவே என்னை வீட்டில்  சேர்க்கும் வரை இந்த இடத்தை விட்டு நகரபோவில்லை’’ என்றார்[4].

Falling in love - allowed in Islam or notதீர்ப்பில் தெளிவில்லையா, ஊடகங்கள் செய்தியை ஒழுங்காக வெளியிடவில்லையா?: இங்கு சத்தியகுமார் 2009ல் முஸ்லிம் மதம் மாறி பர்ஜானா பேகத்தைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.  பிரேமா என்பவரை சத்தியக்குமார் 2011 செப்., 1 ல் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்[5] என்றால், முஸ்லிமாக இருந்து இந்துவை திருமணம் செய்து கொண்டது பிரச்சினையாகிறது. சரளா முதுகல் உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி செல்லுபடியாகாது. ஒன்று பிரேமா மதம் மாறியிருக்க வேண்டும், இல்லை, சத்திரயகுமார் தான் இந்து என்றே திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டும். 2011லிருந்து இன்று வரை பிரேமாவுடன் வாழ்ந்து வருகிறார், அதாவது, பர்ஜானா பேகத்துடன் வாழவில்லை. 2016 ஜூன் 28 ல் தான், பர்ஜானா பேகத்துடன் சேர்ந்து வாழ உத்தரவிட்டுள்ளது. அதாவது, ஒரு முஸ்லிமாக சத்திரயகுமார், இரண்டு பெண்டாட்டிகளுடன் வாழ்வது சட்டப்படி செல்லும் என்று தீர்ப்பளித்தது போலும். அதனால் தான், சரளா முதுகல் உச்சநீதி மன்ற தீர்ப்பில் இந்தியர்களுக்கு பொது சிவில் சட்டம் அவசியம் என்று பரிந்துரைத்தது[6]. ஆனால், அவ்விசயம் தேவையில்லாமல் அரசியலாக்கப்பட்டுவிட்டது. இதனால், காலதாமதம் ஏற்பட்டு வருகிறது[7].

Barjana Begum, Sathyakumarஇஸ்லாத்தில் கல்யாணத்திற்கு முன்பான காதல் ஹராம்: இஸ்லாத்தைப் பொறுத்த வரையில், காதல் பற்றி மாறுபட்ட கருத்துகள் தான் உள்ளன. குரானை வைத்து விளக்கப்படும் போது, காதல் ஹராமா – ஹலாலா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. காதலைப் பற்றி அல்லாவுக்குத் தான் எல்லாம் தெரியும், அதனால், ஒரு ஆணோ, பெண்ணோ அதை தீர்மானிக்க முடியாது, அல்லாவுக்குத் தான் தெரியும் என்றெல்லாம் கூட பதில் சொல்கிறார்கள். ஹராம் காதல் மற்றும் ஹலால் காதல் என்றும் பிரிக்கிறார்கள். ஜாகிர் நாயக் போன்றோர், கல்யாணத்திற்கு முன்பான காதல் ஹராம் என்று வெளிப்படையாக சொல்கிறார்கள்[8]. கல்யாணத்திற்கு முன்பான காதல்  [Love before Wedding] என்பது LBW என்றே கிண்டல் அடிக்கிறார். பொதுவாக, யாரும் இதற்கு நேரிடையான பதிலைக் கொடுப்பதில்லை. ஆனால், முஸ்லிம் பையன்கள் மற்றும் பெண்கள் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சமீபகாலங்களில் காதலர் தினத்தை கடுமையாக, ஆசார இஸ்லாமியர் எதிர்த்து வருகின்றனர். அந்நிலையில் காதலை விபச்சாரம் என்றும் விமர்சிக்கின்றனர். அல்லாவைத் தவிர யாரையும் காதலிக்க முடியாது என்ற தீவிர வாதமும் வைக்கப் படுகிறது.

© வேதபிரகாஷ்

31-08-2016

love is haram- llll

[1] தினகரன், காதல் திருமணம் செய்த பெண் கணவர் வீடு முன்பு தர்ணா கோர்ட் உத்தரவுப்படி சேர்த்து வைக்க கோரிக்கை, Date: 2016-07-01 11:44:37

 http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=591795&cat=504

[2] தினமலர், தன்னுடன் சேர்ந்து வாழ வலியுறுத்தி கணவர் வீட்டு முன் 2 வது நாளாக திருச்சி பெண் வக்கீல் தர்ணா போராட்டம் * கட்சிகள் ஆதரவு, பதிவு செய்த நாள். ஜூலை.2, 2016. 03.58.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1555310&Print=1

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1555310&Print=1

[4]  http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=591795&cat=504

[5] தினமலர், தன்னுடன் சேர்ந்து வாழ வலியுறுத்தி கணவர் வீட்டு முன் 2 வது நாளாக திருச்சி பெண் வக்கீல் தர்ணா போராட்டம் * கட்சிகள் ஆதரவு, பதிவு செய்த நாள். ஜூலை.2, 2016. 03.58.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1555310&Print=1

[6] Supreme Court of India – Smt. Sarla Mudgal, President, … vs Union Of India & Ors on 10 May, 1995, Equivalent citations: 1995 AIR 1531, 1995 SCC (3) 635, Author: K Singh – Bench: Kuldip Singh (J).

[7] https://indiankanoon.org/doc/733037/

[8] https://www.youtube.com/watch?v=dnQ-Lh-0Auk

 

காதலிப்பது தவறா-சரியா – இஸ்லாத்தில் காதல் ஹராமா, ஹலாலா?

ஓகஸ்ட் 31, 2016

காதலிப்பது தவறா-சரியா – இஸ்லாத்தில் காதல் ஹராமா, ஹலாலா?

அசன் காதல் - தினகரன்

ரஜபுனிசாபேகம்அசன் காதல் விவகாரம்: திருச்சி ஏர்போர்ட் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ஜமால் மொய்தீன். இவரது மகள் ரஜபுனிசாபேகம் (20). டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள கல்லூரியில் பிபிஏ 3ம் ஆண்டு படித்து வருகிறார்[1]. ஏர்போர்ட் ஸ்டார் நகரை சேர்ந்த அலாவுதீன் மகன் அசன் (23) என்பவரை காதலித்து வருகிறார். காதல் விவகாரம் ரஜபுனிசாபேகம் பெற்றோருக்கு தெரியவந்ததால், காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி 25-08-2016 அன்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்[2]. ஆக ஒரு முஸ்லிம் பெண், ஒரு முஸ்லிம் பையனை காதலிக்கிறாள். இருவரும் மேஜர், என்று தெரிகிறது. அதாவது, காதலன் – காதலி விரும்பினால், தாராளமாக திருமணம் செய்து கொள்ளலாம்.

ரஜபுனிசா பேகம் - அசன் காதல் - தினகரன்

ஆகஸ்ட்.24, 2016 அன்று வீட்டை விட்டு வெளியேறிய ரஜபுனிசா பேகம்: ரஜபுனிசா பேகம் அளித்த மனுவில், காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து என்னை கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டில் அடைத்து வைத்தனர்[3]. உறவினருக்கு என்னை திருமணம் செய்து வைக்க முயற்சித்தனர்[4]. தந்தைக்கு உதவியாக வடிவேல் என்பவர் செயல்படுகிறார். அவர் என்னிடம் ஒழுங்காக அவனை மறந்துவிடு. இல்லை என்றால் உன் காதலனை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார். இவர்களிடம் இருந்து தப்பிக்க, நீங்கள் கூறுபவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி மீண்டும் கல்லூரி வந்தேன். அங்கிருந்து கடந்த ஆகஸ்ட். 24ம் தேதி காதலனுடன் வெளியேறினேன்[5].

ரஜபுனிசா பேகம் - அசன் காதல் - எதிர்ப்பு - தினகரன்

ஆகஸ்ட்.26, 2016 அன்று போலீஸில் புகார் கொடுத்த ரஜபுனிசா பேகம்:இதையடுத்து காதலரை செல்போனில் தொடர்பு கொண்ட பெற்றோர் மற்றும் வடிவேல் தலைமையிலான ரவுடி கும்பல் எங்கள் 2 பேரின் தலையை வெட்டி ரோட்டில் வீசுவதாக மிரட்டுகின்றனர்[6]. இதுகுறித்து விசாரித்து எனது பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நுண்ணறிவு பிரிவு உதவிகமிஷனர் கபிலன் விசாரணை நடத்தி வருகின்றார். கமிஷனர் அலுவலகம் முன் ரஜபுனிஷாபேகத்தின் பெற்றோர், உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆகஸ்ட்.30, 2016 வரை இருட்டடிப்பு செய்யப்பட்டு வரும் விவகாரம்: “தினகரன்” நாளிதழில் வெளியான இச்செய்தி, மற்ற இரண்டு இணைதளங்களில் அப்படியே வெளியிட்டுள்ளன. மூன்று நாட்களாகத் தேடியும் மற்ற நாளிதழ்களில் இச்செய்தியை காணவில்லை. ஆங்கில ஊடகங்களிலும் தேடிப்பார்த்து அலுத்து விட்டது. அப்படியென்றால், இச்செய்தியை அமுக்கி வாசித்தது, மறைப்பது ஏன் என்ற கேள்வி எழுகின்றது.

Islam, love, haram or halal

ரஜபுனிசாபேகம் கூறும் விவரங்களில் பல விசயங்கள் வெளிப்படுகின்றன: இதனை பொதுப்பிரச்சினையாக எடுத்துக் கொண்டால், பெற்றோரை மீறி காதலித்து, ஒரு பையனுடன் வெளியேறும் போது, பெற்றோர் மிக்க வருத்தம் அடைவர், சமூகத்தில் அவமானம் ஏற்படுகிறது, உறவினரிடையே மரியாதை போகிறது என்றெல்லாம் உள்ளது. ஆனால், முஸ்லிம் பையன்-பெண் காதலித்து திருமணம் செய்து கொள்ள விரும்பினால், அதில் வேறென்ன பிரச்சினைகள் இருக்க முடியும்?

1.   காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து என்னை கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டில் அடைத்து வைத்தனர்[7]. நிச்சயமாக, எல்லா பேற்றோர்களும் செய்வது தான்.
2.   உறவினருக்கு என்னை திருமணம் செய்து வைக்க முயற்சித்தனர்[8]. இதெல்லாம் கூட சகஜமான விவகாரங்கள் தாம்.
3.   தந்தைக்கு உதவியாக வடிவேல் என்பவர் செயல்படுகிறார். இங்குதான் “வடிவேல்” விசித்திரமாக உள்ளது. அவர் ஒரு “இந்து” என்ற ரீதியில், ஏன் முஸ்லிம்களுக்கு உதவியாக செயல்பட வேண்டும் அல்லது முடியும்?
4.   அவர் என்னிடம் ஒழுங்காக அவனை மறந்துவிடு. இல்லை என்றால் உன் காதலனை கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார். வடிவேல் எப்படி, இப்படி மிரட்ட முடியும்? முஸ்லிம்களுக்கு கட்டப்பஞ்சாயத்து செய்யும் அளவுக்கு “வடிவேல்” உள்ளாரா அல்லது அவர் காசுக்காக மிரட்டும் அடியாளா?
5.   இவர்களிடம் இருந்து தப்பிக்க, நீங்கள் கூறுபவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி மீண்டும் கல்லூரி வந்தேன். பொய் சொல்லி கல்லூரிக்கு சென்றது, அங்கிருந்து காதலனுடன் போலீஸுக்கு ஓடி வந்ததும், தெரிந்த விசயம் தான்.
6.   அங்கிருந்து கடந்த 24ம் தேதி காதலனுடன் வெளியேறினேன்[9]. அதாவது, காதலி தீர்மானமாக காதலனுடன் ஓடி வந்து, போலீஸாரிடம் தஞ்சம் புகுந்துள்ளாள்.

ஆனால், காதலன் அசன் மௌனமாக இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அவனுடைய பெற்றோரும் இவ்விசயத்தில் தலையிடாதது அல்லது இல்லாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

Islam, love, haram or halal-llll

© வேதபிரகாஷ்

31-08-2016

Islam, love, haram or halal-ooooo

[1] தினகரன், தலையை வெட்டி வீசுவோம்காதல் ஜோடிக்கு மிரட்டல், Date: 2016-08-26@ 18:21:35

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=241472

[3] தமிழ்.முரசு, தலையை வெட்டி வீசுவோம்காதல் ஜோடிக்கு மிரட்டல், 8/26/2016 2:34:38 PM

[4] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=97086

[5] தமிழ்மித்ரன், தலையை வெட்டி வீசுவோம்காதல் ஜோடிக்கு மிரட்டல், ஆகஸ்ட்.26, 2016.

[6] http://www.tamilmithran.com/article-source/ODI0MDA5/%E2%80%98%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E2%80%99-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE – .V8TCQ1t95dg

[7] தமிழ்.முரசு, தலையை வெட்டி வீசுவோம்காதல் ஜோடிக்கு மிரட்டல், 8/26/2016 2:34:38 PM

[8] http://tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=97086

[9] தமிழ்மித்ரன், தலையை வெட்டி வீசுவோம்காதல் ஜோடிக்கு மிரட்டல், ஆகஸ்ட்.26, 2016.

ஆசிக் மீரானால் அலைக்கழிக்கப்படும் துர்கேஸ்வரி: பெண்ணிய வீராங்கனைகள் ஏன் மௌனம் சாதிக்கின்றனர் என்று தெரியவில்லை!

ஜூன் 14, 2014

ஆசிக் மீரானால் அலைக்கழிக்கப்படும் துர்கேஸ்வரி: பெண்ணிய வீராங்கனைகள் ஏன் மௌனம் சாதிக்கின்றனர் என்று தெரியவில்லை!

துர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார்.நக்கீரன்2

துர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார்.நக்கீரன்2

துர்க்கேஸ்வரி, முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் கொடுத்ததால் நடவடிக்கை[1]:  பெண்பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக, திருச்சி மாநகராட்சி துணைமேயர் மரியம்ஆசிக்கிடம்,  பொன்மலை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசுதா, நேற்று விசாரணை மேற்கொண்டார். திருச்சியை சேர்ந்த துர்க்கேஸ்வரி, 28.  சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த மரியம்பிச்சையின் மகன் ஆசிக்மீரான், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக,  போலீசில் புகார் தெரிவித்தார்[2]. இந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், துர்க்கேஸ்வரி, முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பினார். அவர் கொடுத்த புகாரை விசாரித்து, நடவடிக்கை எடுக்கும்படி,  முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து, பொன்மலை மகளிர் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதனால், நேற்றுமதியம், 2:00 மணிக்கு, துர்க்கேஸ்வரி, துணைமேயர் மரியம்ஆசிக் ஆகியோர்,  பொன்மலை மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைக்கப் பட்டனர். இந்த தகவல்அறிந்த, பத்திரிகையாளர்கள், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர்.

துர்கேஸ்வரி, ஆஷிக் மீரான்

துர்கேஸ்வரி, ஆஷிக் மீரான்

பத்திரிகையாளர்களை கண்டதும், மரியம் ஆசிக், இன்ஸ்பெக்டர் ஜெயசுதாவுடன், ஸ்டேஷனில் இருந்த பாத் ரூமுக்குள் சென்று ஒளிந்து கொண்டார்[3]: பத்திரிகையாளர்களை கண்டதும், மரியம் ஆசிக்,  இன்ஸ்பெக்டர் ஜெயசுதாவுடன், ஸ்டேஷனில் இருந்த பாத்ரூமுக்குள் சென்று ஒளிந்து கொண்டார். அப்படியென்றால், இன்ஸ்பெக்டர் ஒத்துழைக்கிறார் என்றால்லாவா ஆகிறது.  பத்திரிகையாளர்களைக் கண்டதும் மறைந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லையே? தொடர்ந்து, இன்ஸ்பெக்டரின் அறையை மூடிக்கொண்டு, போலீசார் விசாரணை நடத்தினர். இதென்னா “காமராக்குள் நடக்கும்” ரகசிய விசாரணையா என்ன?  அப்படியென்றால், பாத்ரூமுக்குள் ஒளிந்து கொண்டவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? போலீசார் விசாரணை நடத்தினர் என்றால்,  இன்ஸ்பெக்டர் இல்லாமலா விசாரணை நடத்தினர்? எதற்கோ பெண்ணியக் கூட்டங்கள் கொடிபிடித்துக் கொண்டு வரும் போது, இத்தகைய சட்டமீறல்களுக்கு, ஏன் குரல் கொடுப்பதில்லை என்று தெரியவில்லை.

துர்கேஸ்வரி, ஆஷிக் மீரான்

துர்கேஸ்வரி, ஆஷிக் மீரான்

விசாரணை குறித்து, துர்க்கேஸ்வரி கூறியதாவது: “விசாரணை நியாயமாக நடக்கும் என, தெரியவில்லை. ஆசிக் மீரானும், போலீசாரும் சேர்ந்து என்னை மிரட்டுகின்றனர். முதல்வர் தலையிட்டால் மட்டுமே, எனக்கும், என் குழந்தைக்கும் நீதி கிடைக்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்[4].  தான்தான் அவரது மனைவி,  குழந்தை அவருடையது என்று மெய்ப்பிக்கப் படவேண்டும், தனக்கு நீதி வேண்டும் என்று கேட்கிறார்[5].  மரபு அணுபரிசோதனை செய்தாலே உண்மை விளங்கிவிடும். பிறகு இதற்கு ஏன் இவ்வளவு தாமதம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.  மேலும் புகாரில், “என் கணவர், துணைமேயர் ஆசிக்மீரா, அவரது மாமியார் மைமூன் நிஷா, அவரது சகாக்கள் பாபு,  சரவணன், உமர் ஆகியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார், அதில் உமர் என்பவன் ஏற்கெனவே கொலைக்குற்றத்தில் தேடப்பட்டு வருகிறான் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன[6].

ஊடகக்காரர்களிடம் முறையிடும் துர்கேஸ்வரி

ஊடகக்காரர்களிடம் முறையிடும் துர்கேஸ்வரி

மார்ச்.1, 2014 அன்று கொடுத்த புகார்[7]: அ.தி.மு.க.,  துணைமேயர் ஆசிக் மீரா மீது புகார் தெரிவிக்க நேற்றும் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த எட்டு மாத கர்ப்பிணியை, “கமிஷனர் இல்லை’ எனக் கூறி புகாரை வாங்காமல் போலீஸார் திருப்பி அனுப்பியதால், அப்பெண் ஏமாற்றத்துடன் சென்றார்.மறைந்த அ.தி.மு.க., அமைச்சர் மரியம் பிச்சை மகன் ஆசிக்மீரா, திருச்சி மாநகராட்சி துணைமேயராக உள்ளார். திருச்சி, சங்கிலியாண்டபுரம், மணல் வாரித்துறைரோடு பகுதியைச் சேர்ந்த ரஞ்ஜித்சிங் ராணா மகள் துர்கா (என்ற) துர்கேஸ்வரி, 28. இவர் 01-03-2014 அன்று முன்தினம் திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு துணைமேயர் ஆசிக் மீரா மீது புகார் அளிக்க வந்தார்.  அவரது புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது: “நானும், துணைமேயர் ஆசிக் மீராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். அவரால் மூன்று முறை கருத்தரித்தேன். அவர் நிர்ப்பந்தத்தால் கருவை கலைத்தேன்.  திடீரென அவரது அத்தை மைமூன் நிஷா மகள் சாஜிதா பேகத்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இது பற்றி கேட்ட போது, என்னை சமாதானம் செய்தார். மீண்டும் கருவுற்று தற்போது, எட்டு மாதமாக உள்ளேன்.  தனது மாமியார் பேச்சைக் கேட்டு, கருவை கலைக்கும் படி மிரட்டுகிறார். எனவே, என்கணவர், துணைமேயர் ஆசிக்மீரா,  அவரது மாமியார் மைமூன் நிஷா, அவரது சகாக்கள் பாபு, சரவணன், உமர் ஆகியார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.

Asique Meeran Trichy Dy Mayor accused

Asique Meeran Trichy Dy Mayor accused

புகார் வாங்க மறுத்த பொன்மலை போலீஸ் ஸ்டேஷன்:  மாநகர போலீஸ் கமிஷனர் சைலஷ் குமார் யாதவ் இல்லாததால் அவர், பொன்மலை போலீஸ் ஸ்டேஷனுக்கு புகார் அளிக்கச் சென்றார்.  போலீஸார் புகாரை வாங்கவில்லை.நேற்று காலை, 10.30 மணிக்கு கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார்.  நீண்ட நேரம் கழித்து அவரை அழைத்த போலீஸார், “”கமிஷனர் இன்றும் இல்லை.  பொன்மலை போலீஸில் புகாரை கொடுத்து ரசீது பெற்றுக் கொள்ளுங்கள்,” எனக்கூறி அனுப்பினர்.இதனால் நொந்து போன துர்கேஸ்வரி கூறுகையில்,  “”கருவுற்று எட்டுமாதம் ஆகியதால், என்னால் தனியாக எங்கும் செல்ல முடியவில்லை. கமிஷனர் அலுவலகத்துக்கு ஆட்டோவில் வந்து,  மாடி ஏறிச் செல்லவும் முடியவில்லை. நீண்ட நேரம் காக்க வைத்து என்னை திருப்பி அனுப்பினர்.  வாந்தி வருவது போல இருந்ததால் பொன்மலை போலீஸ் ஸ்டேஷனக்குச் செல்லாமல் வீட்டுக்கு சென்றேன்,” என்றார். மார்ச், ஏப்ரல், மே என்று மாதங்கள் கழிந்து ஜூனில் உள்ள நிலை இது. இனி என்னாகும் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டியதுதான்!

Ashik married - woman complained

Ashik married – woman complained

[1] http://www.dinamalar.com/news_detail.asp?id=997116

[2] https://islamindia.wordpress.com/2014/03/09/muslims-affecting-hindu-women-their-rights-etc-in-secular-india/

[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=997116&Print=1

[4]தினமலர், பாலியல்வழக்குவிசாரணை: பாத்ரூமில்ஒளிந்ததுணைமேயர், சென்னை, 12-06-2014

[5] http://www.youtube.com/watch?v=BlXKPLONa3s

[6] http://www.youtube.com/watch?v=BlXKPLONa3s

[7] http://www.dinamalar.com/news_detail.asp?id=930944&Print=1

மரியம் பிச்சைக்கு மூன்று மனைவிகள், மகன் ஆசிக் மீரா மணமானவர், ஆனால் இப்பொழுது துர்கேஸ்வரி புகார் – செக்யூலரிஸ நாட்டில் முஸ்லிம் பிரச்சினைகள்!

மார்ச் 9, 2014

மரியம் பிச்சைக்கு மூன்று மனைவிகள், மகன் ஆசிக் மீரா மணமானவர், ஆனால் இப்பொழுது துர்கேஸ்வரி புகார் – செக்யூலரிஸ நாட்டில் முஸ்லிம் பிரச்சினைகள்!

 

Jaya with wives of Mariyam Pitchai

Jaya with wives of Mariyam Pitchai

மரியம் பிச்சை விபத்தில் இறப்பு, மகனுக்கு கொலை மிரட்டல் (ஜூலை 2012): 2011 சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் நேருவைத் தோற்கடித்ததற்காக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆக்கப்பட்டவர் மரியம்பிச்சை. ஆனால் அக்டோபரில் ஒரு சாலை விபத்தில் அவர் இறந்து விட்டார். அப்பொழுது, ஜெயலலிதா பிச்சையின் மனைவிகளைப் பார்த்து ஆறுதல் கூறினார். நேருதான் பிச்சை இறந்ததற்கு காரணம் என்று உள்ளூர் அதிமுகவினர் கோஷமிட்டனர். இதனால், விசாரணைக்கும் ஆணையிடப்பட்டது[1]. இன்னொரு முஸ்லிம் இணைத்தளத்தின் படி மறைந்த மரியம் பிச்சை ஒரு ரவுடி, அவர் இறந்தபோது, அதிமுக மற்றும் தமுமுக ஆட்கள் கலாட்டா செய்ததாக புகைப்படங்களுடன் அப்பிரிவு முஸ்லிம்கள் வெளியிட்டுள்ளனர்[2].

tntjsalem.blogspot.in-2011-05-blog

tntjsalem.blogspot.in-2011-05-blog

நேரு குடும்பத்தினர் கிருத்துவர்கள், மரியம் பிச்சை குடும்பத்தினர் முஸ்லிம்கள், எனவே அம்மா விசாரணைக்கு உத்தரவிட்டு ஒதுங்கி விட்டார். இதற்குள் ஆசிக் மீராவுக்கு கொலை மிரட்டல் என்ற புகார் வேறு. உடனே போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது[3]. போன் நெம்பரை வைத்து ஆள் யார் என்று பார்த்தால் மேரி என்ற 65 வயதான பெண்ணைக் கண்டு பிடித்தனராம்[4]. ஆனால், அப்போனை காணவில்லை என்றதும் போலீசார் விட்டுவிட்டனராம்! மாரி என்றல் பிடித்திருப்பர் போலும்!

 

கஸ்தூரி மூன்றாம் மனைவி மரியம் பிச்சையை பூஜை

கஸ்தூரி மூன்றாம் மனைவி மரியம் பிச்சையை பூஜை

கஸ்தூரி ஆசிக் மீராவின் மீது புகார் (மார்ச் 2012): மரியம் பிச்சை முஸ்லிம், அவருக்கு மூன்று மனைவிகள். மூன்றாம் மனைவியான கஸ்தூரி முன்னர் 19.03.2012 அன்று திருச்சி போலீஸ் கமிஷனர் கைலேஷ் யாதவ்விடம் ஒரு புகார் கொடுத்தார். அதில், என்னுடைய கணவரின் முதல் மனைவி ஆயிஷா, அவருடைய மகன் ஆசிக் மீரா தற்போது திருச்சி மாநகராட்சி துணை மேயராக உள்ளார். என்னை அரசியலுக்கு வரக் கூடாது என்று கொலை மிரட்டல் விடுகிறார். என் உயிருக்கு ஆபத்து. என் உயிருக்கு ஆபத்து நேரிட்டால் அதற்கு காரணம் ஆசிக் மீராதான் என்று புகாரில் கூறியுள்ளார். இந்த புகாரை இணை ஆணையர் ஜெயபாண்டியனிடம் விசாரிக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கஸ்தூரியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்[5].

 

கஸ்தூரி மரியம் பிச்சையை பூஜை அறையில் வைத்து வணக்கம்

கஸ்தூரி மரியம் பிச்சையை பூஜை அறையில் வைத்து வணக்கம்

மூன்று மனைவிகள் கொண்ட மரியம் பிச்சையும் கல்யாணமான மகன் ஆசிக்கும்: மரியம் பிச்சைக்கு 3 மனைவிகள்[6] என்று நக்கீரன் சாதாரணமாக செய்தியை வெளிய் இட்டது. ஏனெனில், மரியம் முஸ்லிம் ஆதலால், மூன்று மனைகள் இருப்பது வியப்பாக இல்லை போலும். முதல் மனைவி ஆயிஷா பீவி, மூன்றாவது மனைவி கஸ்தூரி, என்று விசித்திரமான தகவல்களைக் கொடுத்தாலும், இரண்டாவது மனைவி யார் என்ற விவரங்களைக் கொடுக்கவில்லை. முதல் மனைவியின் மகன் ஆசிக் மீரா [M. Asick Meera].  முஸ்லிம் என்பதால் ஜெ இவருக்கு சந்தப்பம் கொடுத்து பதவிக்கு வரவைத்தார்[7]. முஸ்லிம்கள் அதிகமாக உள்ள தொகுதி என்பதால், முஸ்லிமுக்கு சந்தர்ப்பம் கொடுத்தால் அவர்கள் திருப்தியடைந்து விடுவார்கள் என்று கொடுக்கப்பட்டது என்று தி ஹிந்து விளக்கம் அளித்தது.

 

மரியம் பிச்சை ஜெ இரங்கல்

மரியம் பிச்சை ஜெ இரங்கல்

ஆசிக்மீராவின்புராணம்: அமைச்சராகப் பதவியேற்ற ஒரே வாரத்தில் கார் விபத்தில் அவர் இறந்துபோனார்.   மரியம்பிச்சையின் மகன் ஆசிக் மீராவுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்புக் கொடுத்து திருச்சி மாநகர துணை மேயர் ஆக்கினார் ஜெயலலிதா[8].  27-வது வார்டில் வெற்றி பெற்றுள்ள அ.தி.மு.க. கவுன்சிலர் ஆசிக்மீரா துணை மேயர் வேட்பாளராகி இருக்கிறார். இவர் மறைந்த அமைச்சர் மரியம் பிச்சையின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிக்மீரா பிளஸ்-2 படித்து இருக்கிறார். வயது 30. திருமணம் ஆகிவிட்டது. மனைவி பெயர் ஜாகிதா பேகம். ஆயிஷா (3) என்ற பெண் குழந்தை உள்ளது. துணை மேயர் பதவி கிடைத்தது குறித்து ஆசிக் மீரா கூறியதாவது, முதல்- அமைச்சர் அம்மா வழி காட்டுதல்படி திருச்சி மாநகராட்சியை மேம்படுத்த உழைப்பேன். என் தந்தை விட்டுச் சென்ற பணியை தொடருவேன். இவ்வாறு அவர் கூறினார்[9].

 

முஸ்லிம்கள் விளையாடும் விளையாட்டு

முஸ்லிம்கள் விளையாடும் விளையாட்டு

பிச்சை மனைவிகளுக்குள் சண்டை ஆரம்பித்தது: ஆசிக் மீரா துணை மேயரான பின்பு, கஸ்தூரி எனது தந்தையின் மனைவி கிடையாது. எங்கள் வீட்டுக்கு வேலைக்கு வந்தவர் என்று சொல்லி கஸ்தூரிக்கு வாரிசு சான்று கொடுக்கக் கூடாது என்று அதிகாரிகளிடம் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. ஆனால், அவர் தனது அப்பாவின் மனைவி என்பதை மறுக்கவில்லை. அதாவது முதல் மனைவியின் மகன், இரண்டாவது மனைவியின் மீது புகார் கொடுத்தாராம். இருப்பினும், மரியம்பிச்சையின் மூன்றாவது மனைவிக்கான ஆதாரங்களை காட்டி, வாரிசு சான்றிதழ்களை வாங்கிவிட்டதாக கஸ்தூரி கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், எனது பூஜை அறையில் எனது கணவரின் புகைப்படத்தை வைத்து தெய்வமாக வணங்கி வருகிறேன். வாரிசு சான்றிதழ் வாங்கியப் பிறகு, என்னை வீட்டை விட்டு ஆசிக் மீரா வெளியேற்றிவிட்டார். முஸ்லிம்களில் அப்பா ஒருவர், தாயார் மூவர் என்றால், இப்படித்தான் நடந்து கொள்வார்களா என்று தெரியவில்லை.

 

Ashik married - woman complained

Ashik married – woman complained

அரசியல் ஆதாயத்திற்காக, முஸ்லிம் குடும்பம் போட்ட சண்டை: ஆசிக் மீரா தன்னுடைய மூன்றாம் மனைவியான கஸ்தூரியை விடவில்லை போலும். கட்சி அலுவலகம், கட்சி பணிகளில் ஈடுபடக் கூடாது, கட்சி சார்பில் தேர்தல்களில் நிற்கக் கூடாது என்று கஸ்தூரியை மிரட்டினார். “சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் முதல் அமைச்சர் பிரச்சாரத்திற்கு சென்ற நாளில் நானும் சென்றேன். அப்போது சங்கரன்கோவிலுக்கு சென்றது ஏன் என்று போனில் மிரட்டினார் என்று கூறினார் கஸ்தூரி.  மரியம்​பிச்சை​யின் மனைவி கஸ்தூரி அல்லது மகன் ஆசிக் மீராவுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என்று பரவலான பேச்சும் இருந்தது. ஆனால், ஸ்ரீரங்கம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான பரஞ்சோதிக்கு ஸீட் கொடுத்தார் ஜெயலலிதா[10].  அதாவது அம்மா ஏற்கெனவே ஆசிக்குக்கு வாய்ப்பு கொடுத்ததால், மேலும் கொடுக்கத் தயாராக இல்லை போலும். இருப்பினும், முஸ்லிம் குடும்பம் சண்டை போட்டுக் கொண்டு, அதிக இடங்களைப் பிடித்துக் கொள்ளலாம் என்று திட்டம் போட்டனர் போலும்.

 

துர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார்.நக்கீரன்2

துர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார்.நக்கீரன்2

திருச்சி  துணைமேயர்  மீது  இளம்  பெண்  பரபரப்பு  குற்றச்சாட்டு  [11] (மார்ச் 2014):  தற்போது, அப்பதவிக்கு, ஒரு பெண் வடிவில், ஆபத்து காத்திருக்கிறது, என்று தினமலர் ஆசிக்குக்கு பரித்து கொண்டு பேசுவது போல செய்தியை வெளியிட்டுள்ளது. திருச்சி, சங்கிலியாண்டபுரம், மணல்வாரித்துறை ரோடு பகுதியைச் சேர்ந்த, ரஞ்ஜித் சிங் ராணா மகள், துர்கேஸ்வரி, 28. இவர் திருச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு, புகார் அளிக்க வந்தார்.

துர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார் கடிதம் 1-2

துர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார் கடிதம் 1-2

அவரது மனுவில் கூறியிருப்பதாவது[12]: “”நான் ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்கில் இன்ஷூரன்ஸ் ஆபீஸரா வேலைசெய்து வந்தேன். அப்போது அறிமுகம் ஆனவர்தான் ஆசிக் மீரா. தன்னை மரியம்பிச்சையின் கார் டிரைவர்னு சொல்லிகிட்டார். “என்னையும் என் குழந்தையையும் கொல்ல பார்க்கிறார் ஆசிக்[13]. நானும், துணை மேயர் ஆசிக் மீராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். அவரது அப்பா, ஆசிக்கை துரத்தி விட்டார். அதனால், என்னுடன் சேர்ந்து வாழ்ந்தார். அவரது செலவுக்கு, வட்டிக்கு கடன் வாங்கி பணம் கொடுத்தேன். அவரால், மூன்று முறை கருவுற்றேன். இப்போது குழந்தை வேண்டாம்’ என, மூன்று முறை கருக்கலைப்பு செய்ய வைத்தார். அவரது அத்தை, மைமூன் நிஷாவின் மகள், சாஜிதா பேகத்தை திருமணம் செய்து கொண்டார்”.  அதாவது, துர்கேஸ்வரியுடன் கள்ள உறவு கொண்டிருக்கும் போதே, சாஜிதா பேகத்தை திருமணம் செய்து கொண்டார் என்றாகிறது.

 

துர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார்.நக்கீரன்4

துர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார்.நக்கீரன்4

இஸ்லாம்  மார்க்கத்தில்,  இரண்டாவது  திருமணம்  பெரிய  விஷயம்  இல்லை: துர்கேஸ்வரி தொடர்கிறார், “இதுபற்றி கேட்டபோது, “எங்கள் இஸ்லாம் மார்க்கத்தில், இரண்டாவது திருமணம் பெரிய விஷயம் இல்லை. கவலைப்படாதே… நீ தான் என் முதல் மனைவி”, என்றார். அவர் மீதான நம்பிக்கையால் அமைதியாக இருந்தேன். மீண்டும் கருவுற்றேன். நண்பர்கள் மூன்று பேரை தூண்டிவிட்டு, 1 லட்ச ரூபாய் கொடுத்து, அவரது மாமியார், மைமூன் நிஷா, என்னை கொலை செய்ய முயற்சித்தார். மாமியார் பேச்சைக் கேட்டு, கருவை கலைக்கும்படி மிரட்டியதால், மனமுடைந்து, விஷம் அருந்தினேன். என் தாய் மதுமதி அளித்த புகார்படி, தாங்கள் (கமிஷனர்) நடத்திய பேச்சில், தனிக்குடித்தனம் வைத்து, பார்த்துக் கொள்வதாக ஆசிக் எழுதிக் கொடுத்தார். விஷமருந்தியதால், நான்காவது முறை கரு கலைந்தது. தனிக்குடித்தனம் சென்ற பிறகு, மீண்டும் கருவுற்றேன். எட்டு மாத கர்ப்பிணியாக உள்ளேன். வாரிசு பிரச்னை வரும் எனக் கருதி, அவரது மாமியார், என் கருவை கலைக்கும்படி மிரட்டுகிறார்.

துர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார் கடிதம் 3

துர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார் கடிதம் 3

“நீ தான் என் முதல் மனைவி’ என, நம்பவைத்து, நான்கைந்து முறை கர்ப்பமாக்கி, மாமியார் மூலம் என் கருவை கலைக்கச் சொல்லி கொலை மிரட்டல் விடுக்கும், என் கணவர், ஆசிக் மீரா, அவரது மாமியார் மைமூன் நிஷா மற்றும் நண்பர்கள் மூன்று பேர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பாக, அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு, கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் சென்றதால், பொன்மலை போலீசில், புகார் கொடுக்கச் சென்றார். ஆனால், போலீசார் புகாரை வாங்கவில்லை. சம்பந்தப்பட்ட பொன்மலை ஸ்டேஷனில் புகார் கொடுக்க அறிவுருத்தப்பட்டது.

 

துர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார்.நக்கீரன்5

துர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார்.நக்கீரன்5

ஆசிக் மீரா யார்காரணம் என்று விளக்கம் கொடுத்தது: இதுகுறித்து திருச்சி மாநகர துணை மேயர் ஆசிக் மீரா கூறியதாவது[14]: அப்பெண்ணை எனக்கு தெரியும். அவர் கர்ப்பத்துக்கும், எனக்கும் சம்பந்தம் இல்லை. ஏற்கனவே இரண்டு கர்ப்பத்துக்கும் யார் காரணம்? அவரது, “ஸ்டேட்மென்ட்’ தவறாக உள்ளது. அரசியலில் என் வளர்ச்சி பிடிக்காததால், அவரை தூண்டி விடுகின்றனர். இப்பிரச்னையை சட்டப்படி சந்திப்பேன். இவ்வாறு, அவர் கூறினார்.  இவரது பேச்சும் சரியில்லை, தெரியும் ஆனால் தெரியாது என்ற தோரணை வேடிக்கையாக உள்ளது. முன்னர் கஸ்தூரி விசயத்தில் இவர் நடந்து கொண்டுள்ள முறையும் நோக்கத்தக்கது. ஒருவேளை, திருமணத்திற்காக முஸ்லிமாக மாறிய பின்னரும், அப்பெண்கள் முன்னர் போலவே, இந்துமத சம்பிரதாயங்களைப் பின்பற்றி வந்தால், இவர்களுக்கு / முஸ்லிம்களுக்குப் பிடிக்கவில்லை போலும்.

 

துர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார்.நக்கீரன்6

துர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார்.நக்கீரன்6

பெண்  சர்ச்சையில்  சிக்கும்புள்ளிகள்: தினமலர், இவ்வாறு தலைப்பிட்டு, விவரங்களைக் கொடுக்கிறது:

  1. ஏற்கனவே, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த அமைச்சர், பரஞ்ஜோதி, டாக்டர் ராணி என்பவர், இரண்டாவது திருமணம் செய்ததாக தொடர்ந்த வழக்கால், அமைச்சர் பதவி, கட்சிப் பதவி என, அனைத்தையும் பறி கொடுத்தார்.
  2. அதேபோல, துறையூர் யூனியன் சேர்மன் பொன்.காமாரஜ், ஆந்திரா சிறுமியை கற்பழித்த வழக்கால், கட்சியிலிருந்தே தூக்கப்பட்டார்.
  3. தற்போது, ஆசிக் மீரா, பெண் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

 

எது எப்படியாகிலும், ஆசிக் மீரா விசயம், முஸ்லிம் சமாசாரமாக இருக்கிறது. பெண்கள் தினத்தில் புகார் செய்யப்பட்டிருக்கும் நிலையில், வழக்கம் போல பெண்ணிய வீராங்கனைகள் கண்டு கொள்ளாமல் இருகிகிறார்கள். அந்த ராதா-ஷ்யாம் அல்லது பைசூல்-பர்வீன் சமாசாரம்[15] போல அமுக்கி விடுவர் அல்லது அமுங்கி விடும் என்று நம்பலாம்.

 

© வேதபிரகாஷ்

09-03-2014


[1] Chief Minister Jayalalithaa said the CB-CID would thoroughly investigate the “mysterious” death. “Family members [of the Minister] and the public say the death is suspicious.” The CB CID will carry out an investigation and the culprits, whoever they are, will be punished, the Chief Minister said after flying in from Chennai to offer her condolences. Even as Ms. Jayalalithaa stepped on to the premises of Mariyam Theatre at Sangiliandapuram, where the body was kept for the public to pay homage, party workers raised slogans that the newly sworn-in AIADMK Minister was murdered by his political adversary and demanded strong action.

http://www.thehindu.com/news/national/tamil-nadu/minister-dies-in-road-accident-probe-ordered/article2041722.ece

[7] In the run-up to the by-election, there was much speculation here on whom Muslims, who form a sizeable chunk of voters in the constituency, would support given the ‘discontent’ in the community. The by-election results disproved the contention. Mr. Meera’s nomination for ward No.27 has appeased the community. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/mariam-pichais-son-all-set-to-become-tiruchis-deputy-mayor/article2578542.ece

[13] நக்கீரன், திருச்சிதுணைமேயர்மீதுஇளம்பெண்பரபரப்புகுற்றச்சாட்டு, சனிக்கிழமை, 8, மார்ச் 2014 (18:48 IST)

[14] தினமலர், கருவைகலைக்கசொல்லிகணவர்மிரட்டுகிறார்‘ : .தி.மு.., துணைமேயர்மீது 8 மாதகர்ப்பிணிபுகார், மார்ச்.9, 2014.