Posted tagged ‘திரிணமூல்’

இந்துக்கள் முஸ்லிம்களால் தாக்கப்பட்டதை, ஏன் மம்தா மறைக்கப் பார்க்கிறார்? ஊடகங்களையும் ஏன் அடக்குகிறார்? – துலாகர் கலவரம் (2)

ஜனவரி 3, 2017

இந்துக்கள் முஸ்லிம்களால் தாக்கப்பட்டதை, ஏன் மம்தா மறைக்கப் பார்க்கிறார்? ஊடகங்களையும் ஏன் அடக்குகிறார்? துலாகர் கலவரம் (2)

 dulagarh-14-12-2016-temples-attacked

இந்துக்கள் வீடுகளை விட்டு ஓடி ஒளிந்தது (13-12-2016): இந்துக்கள் பயந்து தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடினர். உறவினர்கள் வீடுகளுக்கு சென்று மறைந்தனர். மற்றவர்கள் அருகில் உள்ள கோவில்கள் மற்றும் மடங்களில் தஞ்சம் கொண்டனர். உள்ளூர் போலீஸார் மெத்தனமாக நடந்து கொண்டது வெளிப்பட்டது. குண்டு போட்டு எரியூட்டிக் கொண்டிருந்தபோது, செயலிழந்தது போல இருந்தனர்.  கண்டுகொள்ளாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர் என்று “இந்தியா டுடே” பின்னர் செய்தி வெளியிட்டது. ஒரு இடத்தில், எரியூட்டி கலவரம் செய்து கொண்டிருந்த கூட்டம் சென்ற பிறகு, போலீஸார் வந்தனர். ஒரு இடத்தில், வீட்டில் இருந்தவர்களை சீக்கிரம் – இரண்டு நிமிடங்களில் வெளியேறுங்கள் என்று ஆணையிட்டனர்[1].  திலிப் கன்ரா என்பவர் இதனை எடுத்துக் காட்டுகிறார். அதாவது கலவரக்காரர்களிடமிருந்து காப்பதற்கு பதிலாக, போலீஸார் அவர்களுக்குத் துணை போயினர் என்றாகிறது. அதற்குள் வந்த கும்பல் வீடுகளை கொள்ளையடித்து, சூரையாடினர், போலீஸர் பார்த்துக் கொண்டிருந்தனர்[2]. இன்னொரு இடத்திலோ, கலவர கும்பலைப் பார்த்து, போலீஸாரே ஓடிவிட்டனர்[3].

sudhir-chaudhary-facebook-27-12-2016உண்மைகளை மறைக்க போலீஸார் மற்றும் அரசு அதிகாரிகள் துணை போனது(15-12-2016): இதெல்லாம் நடந்து, ஒரு வாரம் கழிந்த பின்னர், மாநில அரசு சபயசாச்சி ரமன் மிஸ்ரா, சூப்பிரென்டென்ட் ஆப் போலீஸ், ஹௌரா (வெளிகோட்டம்), என்பவரை கலவரங்களைக் கட்டுப்படுத்தவில்லை என்பதற்காக இடம் மாற்றம் செய்தது. மேலும், ஊடகங்கள் மற்றும் எதிர்கட்சியினர் யாரும் அப்பகுதிகளில் வருவதைத் தடுத்தது.  போலீஸார், சிபிஎம், பிஜேபி போன்ற எதிர்கட்சியினரின் “உன்மையறிய” வந்த குழுக்களையும், தடுத்துத் திரும்ப அனுப்பினர். ஊடக சுதந்திரம் பேசுபவர்கள், இந்த நிகழ்ச்சிகளை அமுக்கி, இருட்டடிப்பு செய்த விதத்தை யாரும் கண்டுஇக்காமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. அந்நிகழ்ச்சிகளை படம் பிடித்துக் கொண்டிருந்த ஜீ-டிவி நிருபர்களை தடுத்து நிறுத்தியதோடல்லாமல், அவர்கள் மீது பிணையில் வரமுடியாத எப்.ஐ.ஆர் போட்டு, வழக்கும் பதிவு செய்யப்பட்டது[4]. இதனை தனது டுவிட்டர் பதிவில், சுதிர் சௌத்ரி என்ற ஜி-டிவி நிருபர் கூறியுள்ளார்[5].

sudhir-chaudhary-twitter-27-12-2016“உள்ளூர் பிரச்சினை” என்று மம்தா சாதித்து, உண்மைகளை மறைத்தது:  மாநில அரசைப் பொறுத்த வரையிலும், இது “உள்ளூர் பிரச்சினை” என்று மழுப்பப் பார்க்கிறது. அரசு உயர் அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்கப் பட்டு, வன்முறையில் ஈடுபட்ட 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினர். சுமித் குமார் என்ற சூப்பிரென்டென்ட் ஆப் போலீஸ், ஹௌராவில் (வெளிகோட்டம்) பொறுப்பேற்றுக் கொண்டவர், டிசம்பர் 14ம் தேதியில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர் என்றும், 13 மற்றும் 14 தேதிகளில் கலவரத்தில் ஈடுபட்ட  58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறினார். சுருர்ஜித் கர் புரகாயஸ்தா, டிஜிபியை கூப்பீடு ஒரு அறிக்கையை தயார் செய்து கொண்டுவருமாறு, கவர்னர் கேசரி நந்த திரிபாதி ஆணையிட்டுள்ளார்[6]. அது மம்தா பாணியில் இருக்குமா அல்லது வேறு மாதிரி இருக்குமா என்று பார்க்க வேண்டும். அதாவது, அறிக்கையில், வழக்கம் போல, செக்யூலரிஸ ரீதியில், முஸ்லிம்களின் திட்டம், மதகலவரம் உண்டாக்கியது, “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று கூவி அடித்தது என்று எல்லாவற்றையும் மறைத்து, பூசி மெழுகி விடுவர். அல்லது உண்மை வெளிவருமா என்று பொறுத்துப் பார்க்க வேண்டும். இப்பொழுதும், ஊர்வலம் நடத்தியவர்கள் தங்களை தடுத்தனர் என்று ஒரு சாக்கை சொல்ல ஆரம்பித்து விட்டனர்[7].

dulagarh-woman-victim-explains-how-they-were-attacked-on-13-12-2016துலாகர் வீடுகளுக்கு திரும்பச் செல்ல அச்சப்படும் இந்துக்கள்: அரசு கலவரங்களில் வீடுகளை இழந்த குடும்பத்தினருக்கு ரூ. 35,000/- இழப்பீடு கொடுக்க முன்வந்துள்ளது.  ஆனால், பாதிக்கப்பட்டவர்கள், அது மிகக்குறைவானது என்றும், தாங்கள் இழந்தவற்றிற்கு ஈடாகாது என்றும் கூறினர். இரண்டு வாரங்கள் ஆகியும், பல குடும்பஙள் வீடுகள் இன்றி தவித்து வருகின்றனர். “எல்லாவற்றையும் இழந்து விட்டோம், இனி துலாகரில் எங்களால் வாழமுடியாது”, என்று இந்துக்கள் துலாகருக்குச் செல்லவும் அச்சப்படுகின்றனர்[8].  படிக்கும் பிள்ளைகளின் புத்தகங்கள், லேப்டாப் என்று எதையும் விட்டு வைக்கவில்லை. வைத்திருந்த பணத்தையும் அள்ளிச் சென்றுள்ளானர். எல்.ஐ.சிக்கு கட்டவேண்டும் என்று வைத்திருந்த பணத்தை எடுத்துச் சென்று விட்டனர், இனி நாங்கள் எப்படி கட்டுவது என்று புலம்பினார் ஒருவர். ஆனால், இதுவரை எந்த மாநில அமைச்சரும் அங்கு எட்டிக் கூட பார்க்கவில்லை[9]. திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி இவ்வாறு நடந்து வருகிறது.

charred-remains-of-the-households-at-dulagarhவங்காள பிஜேபி கூறுவது பரஸ்பர குற்றச்சாற்றுகள்: இந்த சூழ்நிலையில், கலவரம் நடந்த பகுதியை ஆய்வு செய்ய பாஜ  எம்பிக்கள் ஜகதம்பிகா பால், சத்பால் சிங், மேற்கு வங்க பாஜ தலைவர் திலீப் கோஷ் மற்றும் தேசிய செயலாளர் ராகுல் சிங்கா அடங்கிய குழு கட்சி தொண்டர்கள் புடை சூழ வந்தது. துலாகர் நகருக்கு ஒரு கிலோ மீட்டர் முன்பாக அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்[10]. 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் உள்ளே செல்வதை அனுமதிக்க முடியாது என்று போலீசார் அவர்களிடம் தெரிவித்தனர்[11]. இதனால் கோபமடைந்த பாஜ பிரதிநிதிகள் மற்றும் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அமமாநில பாஜ தலைவர் திலீப் கோஷ் கூறுகையில், `‘மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியல்லை. மம்தா அரசு ஒரு பிரிவினரை சாந்தப்படுத்தும் கொள்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது’’ என்று குற்றம் சாட்டினார். மேற்கு வங்க மாநிலம், துலாகர் பகுதியில் மத வன்முறை தூண்டிவிடப்படுகிறது. ஆனால், போலீஸார் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை[12].

© வேதபிரகாஷ்

03-01-2017

dhulagarh_ndtv

[1]  Just adjacent to the Manna household on Banerjee para lives the Mondal’s. Maitri Mondal, a mother of two says she heard chants of “Pakistan Zindabad” as the violent mob entered her bedroom and set it ablaze.

http://indiatoday.intoday.in/story/dhulagarh-riots-howrah-kolkata-mamata-banerjee-milad-ul-nabi/1/844203.html

[2] The local police remained inactive while the mobs resorted to loot and arson. In one place the police arrived on the spot after the mobs had left. In another they ordered the residents to leave within two minutes and then watched on as the mobs looted and ransacked the house. In yet another the police came on time but they themselves fled when the mob came.

India Today, Rather than protecting, Bengal polica gave two minutes to flee our own homes: Dhulagarh riot victims tell India Today, Indrajit Kundu | Posted by Ashna Kumar, December 28, 2016 | UPDATED 13:25 IST.

[3] Dilip Khanra was among many who had locked themselves up inside a room when the mob was nearing the village, pelting crude bombs one after another. “When the police came, we were told to leave our houses in two minutes! They didn’t even stop the mob from vandalizing our homes. They kept looting and burning as the police stood as silent spectators,” he says.

[4] DNA News Analysis, Mamata govt filed FIR against Zee News reporters for covering Dhulagarh riots, says Sudhir Chaudhury, Tue, 27 Dec 2016-06:05pm

[5] In a case of crackdown on press freedom, a non-bailable warrant was filed against Zee News reporters by the government of West Bengal for covering the Dhulagarh riots, claims Zee News editor Sudhir Chaudhury.. He wrote on Twitter: “@MamataOfficial Govt files FIR against me& @ZeeNews reporter for covering #DhulagarhRiots with Non Bailable sections. FIR for showing truth?”http://www.dnaindia.com/india/report-mamata-govt-files-fir-against-zee-news-for-covering-dhulagarh-riots-says-editor-in-chief-sudhir-chaudhury-2286937

[6] DNA, Dhulagarh riot: Pressure mounts on Bengal govt as Governor summons DGP, Pooja Mehta, Thursday, December 22, 2016, 09.35 pm.

[7] However, members in the procession allege that they were prevented from taking out the procession, following which violent clashes broke out.

http://www.dnaindia.com/india/report-bengal-governor-summons-bengal-dgp-over-dhulagarh-communal-clashes-2285541

[8] Daily Mail-UK, ‘We can’t live here anymore’: Terrified Dhulagarh riot victims who suffered mob violence claim Mamata Banerjee government is trying to cover it up, by Indrajit Kundu, Published:  00:38 GMT, 30 December 2016; Updated:  18:37 GMT, 1 January 2017

[9] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-4074336/We-t-live-anymore-Terrified-Dhulagarh-riot-victims-suffered-mob-violence-claim-Mamta-Banerjee-government-trying-cover-up.html

[10] தினகரன், கலவரம் நடந்த பகுதியை பார்வையிட சென்ற பாஜ மத்திய குழுவுக்கு மே.. போலீசார் தடை, Date: 2016-12-25@ 00:19:08.

[11] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=267968

[12] தினமணி, சட்டப்பூர்வ நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்: காங்கிரஸுக்கு பாஜக எச்சரிக்கை, Published on : 30th December 2016 02:01 AM.

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (3)

ஒக்ரோபர் 17, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (3)

 

பர்த்வான் குண்டு வெடிப்பு படம்

பர்த்வான் குண்டு வெடிப்பு படம்

மாநில சிபிசிஐடி போலீஸா, என்ஐஏவா என்ற வாதம்: பர்த்வான் குண்டுவெடிப்பு அந்த மாவட்டம் மட்டுமே தொடர்புடைய சம்பவமல்ல, அது தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதாகும். அதில் அன்னிய சக்திகளுக்கும் தொடர்புள்ளது. முன்னதாக, பர்த்வான் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து மாநில சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வந்த நிலையில், என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது மாநில அரசின் அதிகாரத்தில் தேவையில்லாத குறுக்கீடு என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாடியிருந்தார். மும்பை தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, கடந்த 2008-ஆம் ஆண்டில் என்ஐஏ அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. எனினும் இவ்வாறு, ஒரு மாநிலத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு தன்னிச்சையாக உத்தரவிட்டது இதுதான் முதன் முறையாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஆனால், மற்ற விவகாரங்களையும் தெரிந்து கொண்ட நிலையில் (சாரதா-போன்ஸி பணம் முதலியவற்றை) அவர் அவ்வாறு எதிர்த்திருப்பாரா என்று தெரியவில்லை.

பர்த்வான் வீடு, மௌல்வி, பைக் முதலியன

பர்த்வான் வீடு, மௌல்வி, பைக் முதலியன

பர்த்வான் குண்டுவெடிப்பில் சம்பந்தப் பட்ட சென்னைவாசிகள்: இவர்களுக்கு உதவியர்கள் கேரளா, தமிழ்நாடு முதலிய மாநிலங்களில் உள்ளார்கள் என்பதால், விசாரணை அங்கும் ஆரம்பித்துள்ளன[1]. முர்ஷிதாபாத்தில் உள்ள உயிரிழந்த ஷகீல் அஹமதுவின் வீட்டையும் சோதனையிட்டு, முக்கிய ஆவணங்கள் மற்றும் குண்டு தயாரிப்புக்கான முக்கிய கருவிகளை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையிலும், மேற்கொண்டு தேசிய புலனாய்வு நடத்திய விசாரணையிலும் சென்னையை சேர்ந்த மூன்று பேருக்கு குண்டுவெடிப்பில் தொடர்பு உள்ளதாக அதிர்ச்சி தகவலை தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. அந்த மூன்று பேருக்கும் தேசிய புலனாய்வு அமைப்பு சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது. இது சென்னைவாசிகளுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லை போலும். பொறுப்பான முஸ்லிம்களும் கண்டு கொள்ளவில்லை போலும். இதுதவிர, நேரில் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் பி.வி.ராமசாஸ்திரி ஐதராபாத்திலிருந்து சென்னை வந்தார்[2]. சென்னையில் தங்கியிருந்து மூன்று பேரிடமும் அவர் நேரில் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

ர்த்வான் வீடு, சோதனை, பர்கா பேக்டரி

ர்த்வான் வீடு, சோதனை, பர்கா பேக்டரி

கைதாகி சென்னையில் இருப்பவர்களுக்கும், இதற்கும் உள்ள தொடர்புகள்: இதேபோல், பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசன் வழக்கில் கியூ பிராஞ்ச் அளித்த ஆவணங்கள் அடிப்படையில் ஏராளமான தகவல்கள் கிடைத்துள்ளன. அருண் செல்வராசனுக்கும், ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கும் ஜாகீர் உசேனுக்கும் உள்ள தொடர்பு பற்றி கியூ பிரிவு போலீசார் ஏராளமான ஆவணங்களை அளித்துள்ளனர். அதில் ஜாகீர் உசேன் மூலம் அருண் செல்வராசன் கள்ளநோட்டு பரிமாற்றத்தில் ஈடுபட்டதற்கான தகவல் அளிக்கப்பட்டிருந்தது.கடந்த 2012ம் ஆண்டு அருண் செல்வராசன் மாநகராட்சியில் போலி பிறப்பு சான்றிதழ் பெற்று அதன் மூலம் இந்திய பாஸ்போர்ட் எடுத்த தகவலும் தெரியவந்துள்ளது. கியூ பிரிவு போலீசார் அளித்த தகவல்கள் அடிப்படையில் 200 கேள்விகளை தயார் செய்து அருண் செல்வராசனை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து தேசிய புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தினர். அதிலும் பல திடுக் கிடும் தகவல்களை அவர் அளித்ததாக கூறப்படுகிறது. இதற்கான ஆவணங்களுடன் தேசிய புலானாய்வு அமைப்பின் எஸ்பி பிராபகர் ராவ் டெல்லி சென்றுள்ளார். சென்னை வரும் ராமசாஸ்திரி அருண் செல்வராசனின் வழக்கு விசாரணை குறித்தும் ஆலோசிக்க உள்ளதால் டெல்லியிலிருந்து பிரபாகர் ராவ் இன்று சென்னை திரும்புகிறார். சென்னையில் தங்கியுள்ள ராமசாஸ்திரி சென்னை தேசிய புலனாய்வு செயல்பாடுகள் மற்றும் அருண் செல்வராசனின் வழக்கு விசாரணை குறித்து ஆலோசனை வழங்குவார்[3].

பர்த்வான் தீவிரவாத தொடர்புகள்

பர்த்வான் தீவிரவாத தொடர்புகள்

கொல்கத்தாவில் ரகசியமாக சிகிச்சைப் பெற்ற மூன்று நபர்கள்: சென்னையில் ரகசியமான மூன்று பேர்கள் இருந்தது போல, பர்த்வான் குண்டுவெடிப்பில் காயமடைந்த மூவரை ரகசியமாக, ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்க வைத்து,. சிகிச்சைக் கொடுத்ததை என்.ஐ.ஏ கண்டு பிடித்துள்ளனர். மேலும் அந்த வசதியை திரிணமூல் காங்கிரஸ்காரர் செய்து கொடுத்துள்ளார்[4]. பார்க் சர்கஸ் நர்சிங் ஹோம் என்ற மருத்துவ மனையில், சந்தேகத்திற்குரிய மூன்று நபர்களிடம் விசாரணை நடத்தியுள்ளது. அவர்கள் முன்னுக்கு முரணாக பேசியுள்ளனர். அவர்கள் தாங்கள் பர்த்வான் குண்டுவெடிப்பில் காயமடவில்லை, ஆனால், அக்டோபர்.5 அன்று மால்டாவில் நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்ததாகக் கூறிக் கொண்டனர். போலீஸார் நரேந்திர பூரில், இங்கிலீஸ் பஜாரில் குண்டு வெடுப்பு நடந்தத்யாக அறிவித்துள்ளனர். ஆனால், போலீஸார் இந்த மூவரை கொல்கொத்தாவிற்கு அனுப்பினாலும், மருத்துவமனை பெயரைக் குறிப்பிடவில்லை. இவ்வாறு, தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ்காரர்கள் சம்பந்தப் படுவது, சந்தேகத்தை மேலும் அதிகரிக்கிறது.

பர்த்வான் சோதனை -nia

பர்த்வான் சோதனை -nia

சென்னை சென்ட்ரல் – பர்த்வான் குண்டுவெடிப்புகளுக்குள்ள தொடர்பு: மே.1, 2014வ் அன்று சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில், கௌஹாதி எக்ஸ்பிரஸில், குண்டுகள் இரண்டு வெடித்ததில், ஆந்திராவைச் சேர்ந்த ஒரு இளம் பெண் கொல்லப்பட்டாள் மற்றும் 14 பேர் காயமடைந்தனர்[5]. இப்பொழுது பர்தவான் குண்டுவெடிப்பை விசாரிக்கும் போது, இரண்டு குண்டுவெடிப்புகளுக்கும் உள்ள சம்பந்தம் வெளிப்படுகிறது, குறிப்பாக சென்னையில் உள்ள மூன்று நபர்களுடன் ரஜீயா பீபி மற்றும் ஷகீல் அஹமது தொடர்பு கொண்டு பலமுறை பேசியுள்ளனர். இதையறிந்து தான், என்.ஐ.ஏ சென்னையில் உள்ள அந்த மூன்று நபர்களை விசாரித்தது. இதுதவிர வெடிகுண்டுகளின் தயாரிப்பு முறை, உபயோகப் படுத்தப் பட்டுள்ள ரசாயனப் பொருட்கள் (அம்மோனியம் நைட்ரேட், காரீய ஆக்ஸைடு முதலியன), அவற்றின் கலவை விகிதம் ஒரே மாதியாக உள்ளன. குண்டுவெடிப்பின் தன்மையில் வேறுபாடுள்ளதே தவிர, மற்ற விசயங்களில், இரண்டும் ஒன்றே என்று எடுத்துக் காட்டுகின்றன. குண்டுகளைத் தயாரித்தவர்கள் ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது ஒரே இடத்தில் கற்றுக்கொண்ட முறையின் மூலம் கற்றுக் கொண்ட முறை என்று தெரிகிறது. மேலும் பர்த்வானில் குண்டு வெடித்தவுடன் ரஜிரா பீபி இந்த மூவருடனும் தொடர்பு கொண்டு பேசியுள்ளாள். இதன் மூலம் “ஸ்லீப்பர் செல்” முறையும் வெளிப்படுகிறது.

பர்த்வான் கைது என்.ஐ.ஏ

பர்த்வான் கைது என்.ஐ.ஏ

அருண் செல்வன் தொடர்பு, விசாரணை: மேலும் செப்டம்பரில் ஐ.எஸ்.ஐ ஏஜென்ட் அருண் செல்வன் கைது செய்யப் பட்டதும் முக்கியமாகிறது. என்.ஐ.ஏ இந்த விசயத்தில் அவனிடம் விசாரணை மேற்கொண்டது.  ஏனெனில், பர்த்வான் குண்டுவெடிப்பு சம்பந்தப் பட்ட இடங்களில், தென்னிந்தியாவில் உள்ள முக்கியமான இடங்களின் புகைப்படங்கள் சிக்கின. அவை அருண் செல்வராஜ் எடுத்து அனுப்பியிருக்கலாம் என்று கருதப் படுகிறது. மேலும் கௌஹாத்தி எக்ஸ்பிரசில் குண்டு வைக்க வேண்டும் என்ற திட்டம் இல்லாமல் இருக்கக் கூடும், உண்மையில், தமிழகத்திலிருந்து வெடிப்பொருட்கள், ரசாயன கலவைகள் முதலியன அசாமிற்கு எடுத்தச் செல்ல முயன்றிருக்கலாம். அம்முயற்சியில், சரியாக கையாளப் படாதலால், தவறி வெடித்திருக்கலாம் என்றும் சொல்லப் படுகிறது. எது எப்படியாகிலும், தமிழகத்திற்கும் ஜிஹாதிகளுக்கும் உள்ள தொடர்பு மெய்ப்பிக்கப் பட்டுள்ளது.

பர்த்வான் குண்டுவெடிப்பில் தமிழக ஜிஹாதிகளின் தொடர்பு

பர்த்வான் குண்டுவெடிப்பில் தமிழக ஜிஹாதிகளின் தொடர்பு

சாரதா-போன்ஸி ஊழலுக்கும், வங்காளதேச தீவிரவாத குழுக்கும் உள்ள சம்பந்தம்[6]: சாரதா-போன்ஸி ஊழலில், பணம் வங்காள தேசத்தில் உள்ள ஒரு இஸ்லாமிய வங்கிற்குச் சென்றதை அமுலாக்கப் பிரிவு கண்டுபிடித்தது. இது ஊழல் பணத்தை நல்ல பணமாக்கும் அல்லது கணக்கில் உள்ள பணம் போல காட்டும் முயற்சி என்றும் எடுத்துக் காட்டப் பட்டது. சுமார் ரூ.60 கோடிகள் இவ்வாறு வங்காளதேச இஸ்லாமிய வங்கிக்கு, மேற்கு வங்காள அரசியல்வாதிகள் மூலம் சென்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பு விசாரணை மூலம், இவ்விவரங்களை ஆராய நேர்தால், திரிணமூல் முகமூடி கிழிந்து விடுமோ என்று பயப்படுகிறார்கள் போலும். ஒரு பக்கம் சாதாரண மக்களிடமிருந்து பணம் பெற்று, அவர்களை ஏமாற்றி, ஆனால், அதே பணத்தை தீவிரவாத செயல்களுக்கு திருப்பிவிடும், திரிணமூல் காங்கிரஸ்காரர்களைரேன் மற்றவர்கள் ஆதரிக்க வேண்டும். இந்த இஸ்லாமிய வங்கிற்கும், ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பிற்கும் தொடர்புள்ளது. இதன் மூலம் ஜே.எம்.பிக்கு பணம் சென்று, அதன் மூலம் தீவிரவாதிகளுக்கு பணம் வந்திருக்கும்[7]. இப்பணத்தினால், இவர்கள் பர்த்வானில் இடத்தை வாங்கி, அங்கு குண்டு தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவியுள்ளனர்.

© வேதபிரகாஷ்

17-10-2014

[1] http://timesofindia.indiatimes.com/india/Bardhaman-blast-NIA-probe-leads-to-JK-Tamil-Nadu-Kerala/articleshow/44787458.cms

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=113757

[3] தினகரன், பர்த்வான் குண்டுவெடிப்பு: சென்னையை சேர்ந்த 3 பேருக்கு தொடர்பு, 17-10-2014

[4] http://timesofindia.indiatimes.com/india/NIA-suspects-link-between-Bardhaman-Chennai-blasts/articleshow/44819492.cms

[5] http://timesofindia.indiatimes.com/india/NIA-suspects-link-between-Bardhaman-Chennai-blasts/articleshow/44819492.cms

[6] Abhishek Bhalla, Bangladesh terror group thought to be behind Burdwan blast were ‘funded by Saradha ponzi scam‘,  Published: 23:36 GMT, 13 October 2014 | Updated: 23:36 GMT, 13 October 2014, Daily Mail, UK.

[7] http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-2791507/bangladesh-terror-group-thought-burdwan-blast-funded-saradha-ponzi-scam.html