Posted tagged ‘திரணமூல் காங்கிரஸ்’

குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களும், சோனியா காங்கிரஸும்: கொஞ்சல், கெஞ்சல், ஊடல், கூடல் – தேர்தல் நாடகங்கள்!

மார்ச் 19, 2013

குல்லா போட்டு கஞ்சி குடித்தவர்களும், சோனியா காங்கிரஸும்: கொஞ்சல், கெஞ்சல், ஊடல், கூடல் – தேர்தல் நாடகங்கள்!

முஸ்லீகளுக்காக நான் என்னவேண்டுமானாலும் செய்வேன்: “முதலில் முஸ்லீம்களின் நலன் தான், பிறகு தான் அரசாட்சி, என்னவேண்டுமானாலும் நடக்கட்டும், நான் முஸ்லீம்களை ஏமாற்றமாட்டேன். முஸ்லீம்கள் ஆசைகளுக்காக எங்களுடைய அரசாங்கத்தையே தியாகம் செய்யவும் தயாராக உள்ளோம்[1]………..எனது சபையில் 11 முஸ்லீம் மந்திரிகள் இருக்கிறார்கள். அரசு முதன்மை செயலாளரே முஸ்லீம் தான் (Javed Usmani)”, என்று முல்லா முலாயம் சிங், ஜமைத் உலாமா ஹிந்த் [Ulema-e-Hind] ஏற்பாடு செய்திருந்த நிகழ்சியில் அடுக்கிக் கொண்டே போனார். பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு, வழக்குகள் நடைப்பெற்று வரும் நிலையில் சிறைலிருக்கும் கணிசமான முஸ்லீம் கைதிகளையும் சமீபத்தில் விடுவிக்க முஸ்லீம்கள் கேட்டுள்ளனர். அதற்கு எந்த அப்பாவி முஸ்லீமும் சிறையில் இருக்கமாட்டார்கள் என்று வாக்குறுதி அளித்துள்ளார்[2]. இப்படி முல்லாயம் பேசியவுடன், சோனியாவின் விசுவாசியான பேனி பேசியது இப்படித்தான்!

மாயா ஒரு கொள்ளைக்காரி என்றால், முல்லாயம் ஒரு குண்டா: காங்கிரஸ் அமைச்சர் இவ்வாறு கூறியிருப்பது, உபி அரசியல் நிலை என்னாகும் என்று பார்க்க வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்லாது, மாயா ஒரு கொள்ளைக்காரி என்றால், முல்லாயம் ஒரு குண்டா என்றும் பேசியுள்ளார்[3]. இருவரும் இப்படியிருக்கும் போது, உபியை எப்படி காப்பாற்ற முடியும்? என்று பேனி கேட்டுள்ளார். “என்னைவிட உன்னை அதிகமாகத் தெரிந்தவர் இருக்க மாட்டார்கள். நிறைய கமிஷன்வாங்கியிருக்கிறாய், உனது குடும்பத்திற்கு நன்றக சாப்பிடக் கொடுத்திருக்கிறாய். நான் அவ்வாறில்லை. பலமுறை விரோதிகளை துரோகிகளாக வைத்திருக்கிறாய்.” பேனி பிரசாத் வர்மாவின் பேச்சு, முலாயம் சிங் ஒரு குண்டா மட்டும் இல்லை, அவருக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளது, என்ற பேச்சு. கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது[4]. இதைக்கேள்விப்பட்ட முல்லாயம், “ஒன்று அவர் பதவி விலக வேண்டு, இல்லை நான் கைது செய்யப்படவேண்டும்”, என்று ஆர்பரித்தார்[5], என்னைப்பற்றிப் பேச அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?”, என்றும் கேட்டார்[6].

மோடியின் வெற்றிக்கு உதவி புரிந்தார்இப்படி ஒரு புதிய குண்டைப் போட்டுள்ளார்அதாவது பிஜேபியை வம்புக்கு இழுத்தார்: இவரது பேச்சுக்கு சமாஜ்வாடி கட்சியினர் லோக்சபாவில் இன்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெனிபிரசாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் குரல் எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் பெனிபிரசாத் கூறுகையில், “என்னை பதவி விலக சொல்வதற்கு முலாயம் யார் ? நான் பதவி விலகத்தயார் ஆனால் மன்னிப்பு கேட்க மாட்டேன். முலாயம்சிங் அயோத்தி இடிப்பு சம்பவத்தின்போது சிலருக்கு துணையாக இருந்தார். குறிப்பாக மோடியின் வெற்றிக்கு உதவி புரிந்தார்”“, என்றார். மேலும் இவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது, இதனை தொடர்ந்து லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது.

மாயாவதி அமைதியாக இருக்கும்போது, இன்னொரு கஞ்சிகுடித்தவர் கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டார்: ஆமாம், கருணாநிதி வழக்கம் போல, தங்களது ஆதரவு பற்றி பரிசீலினை செய்ய வேண்டியிருக்கும் என்று பாடலை ஆரம்பித்தார். உடனே, இலங்கை விவகாரம் பற்றிப் பேசுவதற்காக, திமுக தலைவர் கருணாநிதியை மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், அந்தோணி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் இன்று மாலை சந்தித்தனர். இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் இந்தியா சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் கூட்டணியில் இருந்து விலக நேரிடும் என்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருந்தார். இதையடுத்து மத்திய மந்திரிகள் குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோணி ஆகியோர் இன்று கருணாநிதியை சந்தித்து, அமெரிக்காவின் தீர்மானம் குறித்து விவாதித்தனர். கருணாநிதியின் சிஐடி காலனி வீட்டில் இன்று மாலை 5.30 மணியளவில் சந்திப்பு தொடங்கியது.  முன்னதாக, இன்று காலையில், டெசோ உறுப்பினர் சுப. வீரபாண்டியன் மற்றும் திமுக தலைமை நிர்வாகிகளுடன் அறிவாலயத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். இரண்டு மணி நேரத்துக்கும் மேல் நீடித்த இச்சந்திப்பில், மத்திய அமைச்சர்களுடன் என்ன பேசுவது என்பது பற்றி தீர்மானிக்கப்பட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குலாம்நபிஆசாத் இந்த சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: “தி.மு.க. தலைவர் கருணாநிதியுடனான பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் சில திருத்தம் செய்ய வேண்டும் என்று கருணாநிதி கோரினார். மேலும் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு எழுதிய கடிதத்திலும் திருத்தம் பற்றி விளக்கியிருந்தார். அது தொடர்பாகவும் நேரில் விவாதித்தோம். கருணாநிதியுடன் பேசியது பற்றி பிரதமரிடம் கூறுவோம். கருணாநிதியின் கோரிக்கை பற்றி பிரதமரிடம் ஆலோசித்து, பின்னர் முடிவு எடுக்கப்படும்”, இவ்வாறு அவர் கூறினார்.

சிதம்பரம்  இந்த சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க. தலைவர் கருணாநிதியை , மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இன்று சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன் என்று வழக்கம் போல புன்னகையுடன் சொன்னார். பிறகு, “சி.ஏ.ஜி.க்கு கூடுதலாக உறுப்பினர்கள் நியமிக்கும் திட்டம் இல்லை”, என்றார்[7]. ஆனால், இதன் ரகசியம் என்ன, கருணாநிதி அவ்வாறு கேட்டுக் கொண்டாரா, அல்லது இவராகச் சொல்கிறாரா என்று தெரியவில்லை. பிறகு சிவகங்கைக்குச் சென்று ஏதாவது வங்கிக் கிளையை திறந்து வைப்பார் போலும்!

நாராயணசாமி இந்த சந்திப்புக்குப் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய மந்திரி நாராயணசாமி சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது[8]: “இலங்கையில் தமிழர்கள் நலமுடன் வாழ மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தில் இலங்கைக்கு எதிரான பிரச்சினை பெரிதாக உருவெடுத்துள்ளது. இந்த பிரச்சினையில் தமிழக மக்களும், தி.மு.க. தலைவர் கருணாநிதியும் திருப்தி அடையும் வகையில் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும். இதற்கான அறிவிப்பை பிரதமர் விரைவில் அறிவிப்பார். மூவரும் ஒரே பாட்டை மாற்றிப் பாடியுள்ளனர்.

நாராயணசாமி விடுவாரா – அவரும் பிஜேபியை இழுத்துள்ளார்: கூடங்குளத்தை வைத்துக் கொண்டு, ஜெயலலிதாவை சீண்டி வரும் இவர், “கடந்த 9 ஆண்டுகளாக தி.மு.க. – காங்கிரஸ் இடையே நல்ல உறவு நீடித்து வருகிறது. இதில் பிரிவு எதுவும் வராதா என்று பா.ஜனதா எதிர்ப்பார்க்கிறது. இலங்கை பிரச்சினையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கையை வரவேற்று பா.ஜனதா குட்டையை குழப்ப பார்க்கிறது. எதிர்கட்சியான அவர்களே இப்படி செய்யும் போது ஆளுங்கட்சியான நாங்கள் எதை செய்ய வேண்டுமோ அதை செய்வோம். அமெரிக்க தீர்மானத்தில் திருத்தம் செய்வது பற்றி மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும்”, இவ்வாறு அவர் கூறினார்[9]. ஆக தேர்தலுக்காக இவ்வாறு எல்லோரும்மாடுகின்றனர் என்று தெரிகிறது.

ஜெயலலிதாவை ஏன் விட்டு வைத்தனர் மாயாவதி, முல்லாயம் சிங் யாதவ், மோடி, பீஜேபி என்று அனைவரையும் இழுத்து வசவு பாடியாகி விட்டது. பிறகு ஜெயலலிதாவை ஏன் விட்டு வைத்தனர்? ஒருவேளை புத்த பிக்குகளைத் தாக்கி அதனால் ஏற்படுத்தினால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும், அவர் மீது அவதூறு ஏற்படும், அவரது ஆட்சியை கலையுங்கள் என்று கூட பேசலாம் என்று செய்ய ஆரம்பித்துள்ளனரா? வழக்கம் போல மம்தா-சமதா-அம்மா-மாயா சீண்டல்கள் ஆரம்பித்துள்ளன. பங்களாதேச முஸ்லீம்கள் விவகாரத்தில் மம்தா காங்கிரஸை மிஜ்சி விட்டார். சமதா கட்சி முதல்வர் தில்லிக்கே வந்து விட்டார். மாயாவைத் திட்டியாகி விட்டது. அதனால் அம்மாவை இப்படி சீண்டுகிறர்கள் போலும்!

முஸ்லீம் கூட்டுத் தேவை[10]: நிதிஷ் குமாரை கவனித்தாகி விட்டது; கருணாநிதியை சந்தித்தாகி விட்டது; ஆனால், இப்படி பேனி பேசியவுடன், முலாயம் முஸ்லீம் பிரச்சினையைத் திசைத்திருப்பி விட்டது போலாகி உள்ளது. முஸ்லீம் பிரச்சினையை விட்டு, முலாயம் பிரச்னையை அலச ஆரம்பித்து வருவார்கள்[11]. முலாயம் முஸ்லீம்களுடன் கொஞ்சுக் குலாவுவது[12], இவரை கோபமடைய செய்துள்ளதா அல்லது முல்லா முந்திவிட்டாரே என்று ஆதங்கம் படுகிறாரா? என்ன இருந்தாலும், சோனியா இருக்கிறாரே, அவர் பெரிய அளவில் பேரம் பேசி, முஸ்லீம்களை தாஜா செய்து வழிக்கிக் கொண்டு செய்வது விடுவார். தமிழகத்திலும் ஒரு முஸ்லீம் மாநாடு நடத்தி அதில் கருணாநிதி பங்கு கொள்ளலாம். “அடுத்த உபி முதலமைச்சர் ஒரு முஸ்லீம்தான்” என்று யாராவது அறிவித்தால் போதும், உபி கதை மட்டுமல்ல, இந்தியாவின் கதையும் 2014ல் மாறிவிடும்.

© வேதபிரகாஷ்

19-03-2013


[1] “We will not hesitate in even sacrificing our government to fulfil the aspirations of the Muslims,” he said. “We will not let any kind of injustice be done against Muslims,” he added.

http://www.dnaindia.com/india/report_keeping-muslim-votebank-intact-a-challenge-for-mulayam_1812375

[2] He referred to the demand for the release of Muslim youths, who had been lodged in various jails in the state after being charged with terror activities. He said the SP government will make sure that no ‘innocent’ Muslim youth remains in prison.

http://www.deccanherald.com/content/319585/muslims-first-govt-later.html

வங்கதேச முஸ்லீம்கள் ஊடுருவல்: காங்கிரஸ்-மார்க்ஸீயக் கூட்டு சதி!

ஜனவரி 11, 2011

வங்கதேச முஸ்லீம்கள் ஊடுருவல்: காங்கிரஸ்-மார்க்ஸீயக் கூட்டு சதி!

முஸ்லீம்கள் இந்தியாவில் நுழைவது – அரசியக் கட்சிகள் உதவி செய்வது: சமீபகாலத்தில் மேற்கு வங்காளத்தில் மார்க்ஸீய கம்யூனிஸ்டு கட்சி, காங்கிரஸ் (சோனியா), திரணமூல் காங்கிரஸ் முதலியவை முஸ்லீம்கள் மற்றும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளுக்கு அதிகமாகவே செல்லம் கொடுத்து ஆதரித்து வருகிறார்கள். அந்த கட்சிகள் ஒருவரையொருவர் மீது சொல்லிக்கொள்ளும் பரஸ்பரக் குற்றச்சாட்டுகள் மூலமே அத்தகைய சதி வெளிப்படுகிறது. அதுமட்டுமல்லாது, அவை அவ்வாறு இல்லை என்று மறுக்கவில்லை. மாறாக மற்றவர் மீது குற்றாஞ்ச்சாட்டுகிறது, ஏனெனில், தேர்தல் வருவதால், யார் அளவிற்கு அதிகமாக அவர்களுக்கு ஆதரவாக உள்ளார்கள் என்று காண்பிக்த்துக் கொள்ள போட்டிப்போட்டுக் கொண்டு உழைக்கின்றனர், தங்களது விசிவாசத்தைக் காண்பித்துக் கொள்கின்றனர். மேலும் பாகிஸ்தானில் அச்சிடப்படும் போலி இந்திய பணத்தை / கள்ள நோட்டுகளை இந்தியாவில் பரப்பும் வேலையினையும் இவர்கள் செய்து வருகின்றனர். சென்ற வருடத்தில் பெங்களூரில் அத்தகையோர் பலர் பிடிபட்டுள்ளனர்[1].

உள்ளே நுழையும் முஸ்லீம்களுக்கு அடையாள அட்டைக் கொடுத்து ஓட்டுவங்கியை உண்டாக்கிப் பலப்படுத்துவது: தினமும் பங்களாதேசத்திலிருந்து, இந்தியாவிற்கு வந்து வேலைசெய்துவிட்டுச் செல்ல பாஸ் அளிக்கப் படுகிறது. ஆனால், பெரும்பாலான உள்ளே நுழையும் முஸ்லீம்கள் அப்படியே தங்கிவிடுகின்றனர். பிறகு அவர்களுக்கு ரேஷன்கார்ட், தேர்தல் அடையாள அட்டை முதலியவைக் கொடுக்கப்பட்டு, சட்டரீதியில் உள்ளே நுழைந்தவர்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத வகையில் பாதுகாக்கப் படுகின்றனர். பதிலுக்கு எல்லா மாநில அரசு, போலீஸ், செக்போஸ்ட் அதிகாரிகள் என எல்லோருமே நன்றாக கவனிக்கப் படுகின்றனர். அரசியல்வாதிகளுக்கு மொத்தமாக ஓட்டுக் கிடைக்கிறது[2]. இதே மாதிரித்தான் இப்பொழுது தென்னிந்தியாவிலும் நுழைய ஆரம்பித்துள்ளது தெரிகின்றது.  கடந்த 30 ஆண்டுகளில் எல்லைப்புற மாகாணங்களில் முஸ்லீம்களின் ஜனத்தொகை கனிசமாக உயர்ந்துள்ளதையும் கவனிக்கலாம்[3]. இது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது[4]. முன்பு தீவிரவாதி உருவன் பங்களாதேச எல்லையில் அகப்பட்டதும் நினைவுகூரத்தக்கது[5].

முஸ்லீம் ஓட்டுவங்கி வளரும் விதம் (ஆகஸ்ட் 2008)[6]:  பிறகு, உள்ளூர் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் ரேஷன்கார்ட் முதல் வாக்காளர் அட்டைவரை வங்கிவிடுகின்றனர். அதாவது, இந்திய பிரஜைகளாகிவிடுகின்றனர். புகாரின் அடிப்படையில், கேந்திரபாரவில், துணை கலெக்டர் முரளிதர மாலிக் என்பவர் ஆணையில் கடந்த சென்ஸஸ் போது, சோதனையிட்டபோது, 30,000 பங்களாதேச மக்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருப்பதைக் கண்டு, அவை நீக்கப்பட்டதாக அறிவித்தார்.

ஜகசிங்கபூர் கடற்கரைப்பகுதிகளில் பங்களாதேஷ வாக்காளர்எண்ணிக்கை உயருகிறது (மார்ச் 2009)[7]: 2004ல் இந்தியக் கொடியை எரித்த முஸ்லீம்களை எப்படி அரசியல்வாதிகள் ரேஷன்கார்ட், வாக்காளர் அடையாள அட்டைக் ஒடுத்து வளர்க்கிறார்கள் என்று பார்த்தால், மேற்கு வங்காளத்தில் எப்படி கம்யூனிஸ்ட்டுகள் வளர்த்தனரோ, அதே மாதிரியான வழியை ஒரிஸாவிலும் பின்பற்றியூள்ளனர் என்று தெரிகிறது. ஒரிஸாவில் அளவிற்கு அதிகமாக போய்விட்டதால், அது வெளிப்பட்டுவிட்டது. தலைக்கு ஆயிரம் ரூபாய் வரை வாங்கிக் கொண்டு, இரண்டு இடங்களில் அவர்களின் பெயர்கள் பதிவு செய்தபோது, உள்ளூர் மக்களே புகார் கொடுத்ததால், வசமாக மாட்டிக் கொண்டனர். உண்மை வெளிவந்து விட்டது.

பெங்களூரில் எட்டு பங்களாதேச முஸ்லீம்கள் கைது (ஜனவரி 2011): பாஸ்போர்ட் இல்லாமல் வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்த ரபிமுல்லா, மொய்னா என்ற இருவரை, பெங்களூரு தேவர்ஜீவனஹள்ளியில் போலீசார் கைது செய்தனர்[8]. இவர்களுடன் மேலும் எட்டு பேர் அத்துமீறி இந்தியாவிற்குள் வந்துள்ளனர் என்ற தகவலும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இவர்கள் எதற்காக இந்தியாவிற்கு வந்துள்ளனர்; அவர்களின் திட்டம் என்ன என்பது குறித்து போலீசார், தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

வேதபிரகாஷ்

11-01-2011


[1] Two Bangla nationals arrested with fake currencies in Bangalore, Published: Saturday, Jan 30, 2010, 

http://www.dnaindia.com/india/report_two-bangla-nationals-arrested-with-fake-currencies-in-bangalore_1341100 Those arrested have been identified as Maifuddin (49) and Billus (32), they said.

http://findarticles.com/p/news-articles/dna-daily-news-analysis-mumbai/mi_8111/is_20100701/6-bangla-nationals-arrested/ai_n54317764/

[6] Anurjay Dhal,  ABVP ask Naveen to deport Bangladeshi infiltrators as early as possible,  Thursday, August 07, 2008;http://www.orissadiary.com/Shownews.asp?id=7740

[7] Rise of Bangladeshi voters in costal villages of Orissa’s Jagsinghpur district , Tuesday, March 17, 2009;http://www.orissadiary.com/CurrentNews.asp?id=11429

[8] தினமலர், பாஸ்போர்ட் இல்லாத வங்கதேசத்தினர் கைது, ஜனவரி 10, 2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=163297