Posted tagged ‘திமுக’

வக்ஃப் போர்ட், அரசியல், நீதிமன்றத்திற்கு செல்லுதல், மேல்முறையீடு – இறுதியில் என்ன? [1]

ஓகஸ்ட் 29, 2020

வக்ஃப் போர்ட், அரசியல், நீதிமன்றத்திற்கு செல்லுதல், மேல்முறையீடு – இறுதியில் என்ன? [1]

 

வக்ஃப் போர்ட், உறுப்பினர் நியமனம் முதலியன: முஸ்லிம் மக்கள், அவர்களின் சொத்துகளை வக்ஃப் பத்திரம் மூலம் பொதுக் காரியங்களுக்கும், மசூதிகளுக்கும் எழுதிக் கொடுக்கும் வழக்கம் உண்டு. அவ்வாறு இந்தியாவில் மட்டும் தானமளிக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு, குறைந்தது ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும். இப்படி தானமளிக்கப்படும் வக்ஃப் சொத்துக்களைப் பராமரிக்க, பொது மற்றும் தனியார் வக்ஃப் அமைப்புகள் உள்ளன. இவற்றைக் கண்காணித்து, நடுநிலைமையோடு வழிநடத்தி, நிதியை நிர்வகித்து, வக்ஃப் பிரச்னைகளைத் தீர்த்துவைப்பது போன்ற பணிகளைச் செய்ய வக்ஃப் வாரியம் செயல்படுகிறது. இந்திய அரசியலமைப்பிற்கு உட்பட்டு, 1995 ஆம் ஆண்டு வக்ஃப் சட்டம் இந்தியா முழுமைக்கும் அமலில் இருக்கிறது. இந்த வக்ஃப் வாரியத்தில் – 11 / 12 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி 2017ல் தேர்தல் மூலம் 6 பேரும், நியமனம் மூலம் 4 பேரும் உறுப்பினராயினர். பார் கவுன்சில் உறுப்பினர்கள் இல்லாததால், இரு மூத்த வழக்கறிஞர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். 

  1.  தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாக (elected) இரண்டு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
  2. இரண்டு முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள்,
  3. இரண்டு முத்தவல்லிகள் (மசூதி மேற்பார்வைத் தலைவர்)
  4. இரண்டு முஸ்லிம் பார் கவுன்சில் உறுப்பினர்கள் மற்றும்
  5. அரசால் நியமிக்கப்பட்ட (nominated) உறுப்பினர்கள் பலர் உள்ளனர்.

எந்தவொரு சமயத்திலும், நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைவிட தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அதிகம் இருக்க வேண்டும் என்று வக்ஃப் வாரிய சட்டம் சொல்கிறது. ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், வக்ஃப் வாரிய தலைவராக இருந்த அன்வர் ராஜா போட்டியிடாததால், அவர் உறுப்பினரல்லாது போனார். உறுப்பினர் இடங்கள் பல காலியாக இருந்ததால், தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களாகப் புதியவர்களைத் தேர்வுசெய்து, வாரியத்தின் செயல்பாடுகள் தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்யாமலே சிறப்பு அதிகாரியை ஆளுநர் நியமித்திருக்கிறார்.

வக்ஃப் போர்ட் கலைக்கப் படவில்லை, அரசு கட்டுப்பாட்டில் போய் விடுமோ என்ற அச்சத்தில் பிரச்சினை: வக்ஃப் போர்ட் கலைக்கப் படவில்லை, இப்பொழுதைய ஆளும் அரசு, உறுப்பினரை நொயமித்துள்ளது. அதனை மற்றவர் எதிர்க்கின்றனர். மேலும், வக்ஃப் வாரிய வழக்கு பற்றி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வெ.ஜீவகிரிதரன் பேசுகையில்[1], “இதில் கவனிக்கப்படவேண்டியது என்னவென்றால், வக்ஃப் வாரியத்தைத் தொடர்ந்து செயல்படவைக்க வேண்டும். வக்ஃப் வாரியத்தை கலைக்கக்கூடாது அனைத்து வக்ஃப் வாரிய உறுப்பினர்கள் சார்பிலும் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் எம்.எல்.ஏ, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு,18.09.2019 அன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் தற்போதையை நிலையே (status quo) தொடர வேண்டும், வக்ஃப் வாரிய சிறப்பு நிர்வாக அதிகாரி நியமனம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று உத்தரவிட்டார். வழக்கு நிலுவையில் இருந்து, நீதிமன்றத்தின் நேரடி உத்தரவு இருந்தும் வாரியத்தைக் கலைத்திருப்பதால், ஆளுநர் ஆணையின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயக் கூடும்,” என்றார்[2].

அதிமுக-திமுக அதிகார போட்டியாக மாறிவிட்ட பிரச்சினை: இதுகுறித்துப் பேசிய, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளரும், சட்டமன்ற கட்சித் தலைவருமான சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், “தமிழக அரசு, சிறுபான்மையினர் நலன்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது. ஜனநாயக முறையில் மக்களதிகாரத்தில் இருக்கும் ஒரு வாரியத்தை முறையின்றிக் கலைத்து, பல கோடி ரூபாய் சொத்துக்களை நிர்வகிக்கும் அனைத்து அதிகாரத்தையும் ஒரு அதிகாரியிடம் ஒப்படைப்பது, அரசுக்கு முஸ்லிம் மக்கள்மீது அக்கறை இல்லாததையே காட்டுகிறது. பல கோடி ரூபாய் முஸ்லிம் மக்களின் நன்கொடையை நிர்வகிக்கும் அமைப்பைக் கலைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. வாரியம் உறுப்பினர்களோடு செயல்படும்போது மட்டுமே, ஊழலற்ற நியாயமான தீர்வுகளை எட்ட முடியும். தமிழக அரசின் இந்த முடிவு, அவர்களின் விருப்பத்துக்கு உகந்தவர்களை வாரியத் தலைவர்களாக நியமிக்க முடியாத காரணத்தினால் நடக்கிறது. எதிர்க்கட்சியினராக இருந்தாலும், ராஜ்யசபாவுக்கு அ.தி.மு.க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முஹம்மது ஜான் எம்.பி, வாரியத் தலைவராக இருந்து, வாரியத்தின் செயல்பாடுகள் தொடரட்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. ஆனால், அரசு எதற்குமே செவிசாய்க்காமல், வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, ஒரு தனி நபரை வாரியத்தின் அதிகாரியாக நியமித்திருப்பது நிச்சயம் ஜனநாயகத்திற்கு, சிறுபான்மையினருக்கு எதிரானதே,” என்றார்.

கடந்த ஆறு மாத காலமாக வக்பு வாரியம் செயல்படவில்லை.: கடந்த 2019 செப். 18 அன்று வக்பு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களை விட நியமன உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாகக்கூறி வக்பு வாரியத்தை கலைத்து தமிழக அரசு உத்தரவிட்டது[3]. மேலும் தமிழக நிதித்துறை செலவின செயலரான சித்திக்கை வக்பு வாரியத்தின் சிறப்பு அதிகாரியாக நியமித்து உத்தரவிட்டது[4]. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பசலூர் ரஹ்மான் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் வக்பு வாரியத்தில் முத்தவல்லிகள் பிரிவில் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட்ட எஸ். செய்யது அலி அக்பர், ஹாஜா கே.மஜீத் ஆகியோரும் இடையீட்டு மனுதாரர்களாக வழக்கு தொடர்ந்து இருந்தனர். அரசுத் தரப்பில் ஆஜராகிய கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், நீதிமன்றத்தில் நான் சொன்னதுதான் எங்கள் தரப்பு கருத்து எனக்கூறி, அதை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். “கடந்த ஆறு மாத காலமாக வக்பு வாரியம் செயல்படவில்லை. இதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காகவே இடைக்காலத்துக்கு மட்டும் சிறப்பு அதிகாரி  நியமிக்கப்பட்டுள்ளார், வேறு எந்த நோக்கமும் இல்லை” என்றார். மேலும், 23.09.2019 நடந்த வழக்கு விசாரணையின்போது, சிறப்பு அதிகாரியாக சித்திக் தற்போதைக்கு பதவி ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப் பட்டதைத் தொடர்ந்து, வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப் பட்ட பிரச்சினை: அதில், ”பார் கவுன்சில் உறுப்பினர்களில் இஸ்லாமியர்கள் எனும் பட்சத்தில் வக்பு வாரியத்துக்கு நியமிக்கப்பட்ட இஸ்லாமியர்களாக உள்ள 2 மூத்த வழக்கறிஞர்களையும் வக்பு வாரிய சட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாகவே கருத வேண்டும். அவர்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில் வக்பு வாரியத்தை கலைத்தது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக அரசு பிறப்பித்துள்ள உத்தரவுகளை ரத்து செய்து வக்பு வாரியத்திடமே அதிகாரங்களை ஒப்படைக்க வேண்டுமென கோரப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் எம். எம். சுந்தரேஷ், ஆர். ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரரான பசுலூர் ரஹ்மான் சார்பில் வழக்கறிஞர் எச்.ஆறுமுகம், மற்றும் இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் மகமூத் பராச்சர், இ.அப்ரார் முகமது அப்துல்லா, எச்.முகமது கவுஸ் ஆகியோரும், வக்பு வாரியம் தரப்பில் வழக்கறிஞர் வி.லட்சுமிநாராயணன் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.

தேர்தெடுக்கப் பட்ட உறுப்பினர்கள், பதவியில் இருக்கும்போதே வக்பு வாரியத்தை கலைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது சட்டவிரோதம்: அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வக்பு வாரியத்தில் முறைப்படி தேர்தல் மூலமாக கடந்த 2017-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட எஸ். செய்யது அலி அக்பர், ஹாஜா கே.மஜீத் ஆகியோரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் என்பதால் அவர்களின் சட்டப்படியான உரிமை நிலைநாட்டப்படுகிறது. எனவே அவர்கள் பதவியில் இருக்கும்போதே வக்பு வாரியத்தை கலைத்து தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது சட்டவிரோதம் என்பதால் தமிழக அரசின் உத்தரவு பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அவர்கள் இருவரையும் தவிர்த்து மற்ற உறுப்பினர்களின் பதவியை நிரப்ப தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கலாம் என தீர்ப்பளித்துள்ளனர். வக்ஃபு வாரிய உறுப்பினா் தோ்தலில் திமுகவைச் சோ்ந்த மக்கள் பிரதிநிதிகள் 3 பேரும், அதிமுகவைச் சோ்ந்த ஒருவரும் தோ்வு செய்யப்பட உள்ளனா்[5]. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. மேலும், எம்.எல்.ஏ.,க்களில் திமுகவைச் சோ்ந்த முகமது அபுபக்கா், கே.எஸ்.மஸ்தான் ஆகியோரும் மனு அளித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் இடம்பெறக் கூடிய தலா இரண்டு இடங்களுக்கு இரண்டு போ் மட்டுமே போட்டியிடுவதால் அவா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது[6]. வக்ஃபு வாரியத்தில் எம்.பி.,க்கள் இரண்டு பேரும், எம்.எல்.ஏ.,க்கள் இரண்டு பேரும் உறுப்பினா்களாக தோ்வு செய்யப்படுவா் என்பது குறிப்பிடத்தக்கது.

வேதபிரகாஷ்

29-08-2020


[1] விகடன், `ஒரு லட்சம் கோடி சொத்துக்களை நிர்வகிக்க ஒற்றை அதிகாரி!’- வக்ஃப் வாரிய விவகாரத்தில் என்ன நடக்கிறது, ஜெனிஃபர்.ம.ஆ; செ.சல்மான் பாரிஸ், Published:26 Sep 2019 7 PMUpdated:26 Sep 2019 7 PM

[2] https://www.vikatan.com/news/judiciary/only-one-person-to-manage-one-lakh-crore-worth-assets-whats-happening-in-waqf-board

[3] தமிழ்.ஒன்.இந்தியா, தமிழ்நாடு வக்பு வாரியத்தை கலைத்த தமிழக அரசு உத்தரவு ரத்து.. ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு, By Sivam | Published: Monday, August 17, 2020, 21:25 [IST]

[4] https://tamil.oneindia.com/news/chennai/dissolving-the-tamil-nadu-tamil-nadu-wakf-board-as-it-is-illegal-high-court-394804.html

[5] தினமணி, வக்ஃபு வாரிய உறுப்பினா் தோ்தல்: திமுக 3, அதிமுகவில் ஒருவருக்கு வாய்ப்பு, By DIN | Published on : 01st August 2020 06:18 AM

[6] https://www.dinamani.com/tamilnadu/2020/aug/01/waqf-board-member-dotal-opportunity-for-one-in-dmk-3-aiadmk-3444028.html

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (5)

ஒக்ரோபர் 25, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (5)

 

முஸ்லிம்களின் எச்சரிக்கை தினத்தந்திக்கு

சென்னை முஸ்லிம்களின் ஜிஹாதி ஆதரவு இருக்கும் போது ஏன் ஜிஹாதிஎதிர்ப்பு இல்லை?: சாதாரணமாக தமிழக முஸ்லிம்கள் மற்ற விசயங்களுக்கு, ஆயிரக்கணக்கானவர்களை சென்னைக்கு கூட்டி வந்து ஆர்பாட்டம் நடத்துவார்கள். “கசாபை தூக்கில் போடாதே” என்று முன்னரும் தூக்கில் போட்ட பிறகும் அவனை புகழ்ந்து சுவரொட்டிகள் ஒட்டுவார்கள். சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய் என்பார்கள், ஆனால், முஸ்லிம்கள் இப்படி தீவிரவாத செயல்களை செய்து கொண்டிருப்பதைக் கண்டிக்க மாட்டார்கள், தடுக்க மாட்டார்கள். ஆனால், இவ்விசயத்தில் அடங்கி ஒடுங்கிக் கிடக்கிறார்களே ஏன் என்று தெரியவில்லை. “தீவிரவதிகளாக மாறும் பெண்கள்” என்று 05-10-2014 தேதியிட்ட தினத்தந்தியில் ஒரு கட்டுரை வெளியிட்டவுடன், “ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம்” என்ற முஸ்லிம் அமைப்பு, அதனை எதிர்த்து கண்டன கடிதத்தை அனுப்பியதாம். உடனே, 08-10-2014 அன்று, தினத்தந்தி, “கட்டுரையில் இடம் பெற்ற ஜிஹாத் பற்றிய தகவல் தவறானது. இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல”, என்று வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டதாம். ஆனால், அதையும் விடாமல், “இதுபோன்ற தவறான அவதூறான செய்திகளை வெளியிடுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இனிமேலும் முஸ்லிம் விரோதபோக்கை பத்திரிக்கையில் தொடர்வீர்களானால், விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதை வன்மையான கண்டனுத்துடன் ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (ஐமுமுக) எச்சரிக்கிறது”, என்று இன்னொரு கடிதத்தை 08-10-2014 அன்று அனுப்பியுள்ளது. அதாவது, அதற்கு மேல் என்ன எதிர்பார்க்கிறது என்று தெரியவில்லை.

தீவிரவாதிகளாக மாறும் பெண்கள் - தினத்தந்திக்கு ஐமுமுக கடிதம்

தீவிரவாதிகளாக மாறும் பெண்கள் – தினத்தந்திக்கு ஐமுமுக கடிதம்

ஐமுமுகவின் கடிதத்தின் நோக்கம் அலசப்படுகிறது: இந்தியாவில் அடிக்கடி கருத்து சுதந்திரம், எண்ணும் உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை என்றெல்லாம் பேசப்படும், எழுதப்படும், விவாதிக்கப்படும். ஆனால், அந்த உரிமைகள், சுதந்திரங்கள் எந்த அளவிற்கு இருக்க வேண்டும், செய்பவர்களின் உரிமைகள், சுதந்திரங்களரென்ன, மற்றவர்களின் உரிமைகள், சுதந்திரங்கள் என்ன என்பது பற்றி அவர்கள் பேசுவது, எழுதுவது, விவாதிப்பது இல்லை. “பாசிஸம்” என்று அடிக்கடி சொல்வார்கள். அதாவது ஒருவர் தனது கருத்தை வலுக்கட்டாயமாக அடுத்தவர் மீது திணிக்கும் முறை அதுவாம். பிறகு அப்படி சொல்பவர்களே, அதைத்தானே செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறதே? இதென்ன, அந்த போதிக்கும் மகாத்மாக்களுக்குப் புரியாமலா இருக்கும்? இங்கும் “ஐமுமுக”வின் கடிதம் பல விசயங்களை வெளிப்படுத்துகிறது. தினத்தந்தி அல்லது இன்னொரு ஊடகம் எந்த செய்தியை வெளியிட வேண்டும் அல்லது கூடாது என்பதனை இவ்வாறு முடிவெடுக்க முடியுமா? அல்லது தினத்தந்தி ஒரு செய்தியை வெளியிட்டு விட்டு, பிறகு அது தவறு, பொய் என்று சொல்லி இருந்துவிட முடியுமா?

ஐசிஸ் - ஐ.எஸ்.ஐ- ஜிஹாத் - சென்னை தொடர்பு

ஐசிஸ் – ஐ.எஸ்.ஐ- ஜிஹாத் – சென்னை தொடர்பு

மேலே குறிப்பிட்ட “ஐமுமுக”வின் கடிதத்தில் உள்ள சொற்றொடர்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியுள்ளது. அவை கிழே கொடுக்கப் படுகின்றன?

  • தவறான அவதூறான செய்திகள் – இந்தியாவில் ஏன் தமிழகத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், முஸ்லிம்கள் வெடிகுண்டு வெடிப்பு, கொலை முதலிய காரியங்களில் வன்முறைகளில், குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்களே. பர்த்வானில் கூட, ரெசூல் கரீம் வீட்டில் உள்ளூர் போலீஸ் தேடியபோது கிடைக்காத குண்டுகள்[1] என்.ஐ.ஏ தேடியபோது கிடைத்ததாமே? கிடைத்துள்ள ஒரு பென்-டிரைவில் குண்டுகள் எப்படி தயாரிப்பது என்ற விவரங்கள் இருக்கின்றன[2]. மால்டா மாவட்டத்தில் பத்து நாட்களில் மூன்று முறை குண்டுகள் வெடித்துள்ளன[3]. அந்த குண்டு தொழிற்சாலையில் 36 பேர் வேலை செய்துள்ளனர்[4]. முன்பே அந்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தியிருந்தால் குண்டுதயாரிப்பு முறைபற்றி விவரங்கள் கிடைத்திருக்கும்[5]. ஆனால், மாநில போலீஸார் அவற்றை அழித்து விட்டார்கள். அசாமில் பார்பேடா என்ற இடத்தில் ஆறு இளைஞர்கள் இவ்விசயத்தில் கைது செய்யப் பட்டுள்ளனர்[6]. இவையெல்லாம் செய்திகளாக வந்துள்ளனவே, வந்துக் கொண்டிருக்கின்றனவே? அவையெல்லாம் தவறான செய்திகளா அல்லது அவதூறான செய்திகளா? காஷ்மீரத்தில் ஐசிஸ் கொடிகள் காட்டி, “நாங்கள் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவோம்”, என்று முழக்கமிடும் போது, மற்ற முஸ்லிம்கள் கண்டிக்கவில்லையேலொமர் அப்துல்லா மட்டும் அவர்கள் “முட்டாள்கள்” என்று சொல்லியிருக்கிறார், அதையும் அவதூறு என்று எச்சரிக்கப் படவில்லையே? அந்த “ஐசிஸ்”ஸுடன் சம்பந்தப் பட்டதுதானே “செக்ஸ் ஜிஹாத்” என்பதெல்லாம்.

  • முஸ்லிம் விரோதபோக்கு – ஊடகங்களில் பெரும்பான்மையாக “இந்துவிரோத போக்கு” தான் காணப்படுகின்றது, ஆனால், இவர்கள் “முஸ்லிம் விரோதபோக்கு” உள்ளதாக எடுத்துக் காட்டுகிறார்கள். முஸ்லிம்களுக்கு இந்து நண்பர்கள் இருக்கின்றார்கள், அவ்வாறே இந்துக்களுக்கு முஸ்லிம் நண்பர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் பழகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு, ஒருவேளை மோமின் முஸ்லிம்களுக்கு, “என்னடா இழவு இது, இந்த காபிர் நண்பர்களுடன் இப்படி நட்பு வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறதே”, என்ற எண்ணம் வரலாம். இந்து நண்பர்கள், தாடி வைத்த – குல்லா போட்ட முஸ்லிம்களைப் பார்க்கும் போது, “ஐயோ, இவன் தீவிரவாதியாக இருப்பானோ, குண்டு வைத்து விடுவானோ?”, என்று அச்சத்துடன் நினைக்கலாம். இதற்கெல்லாம் யார் காரணம் என்று முஸ்லிம்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். இந்துக்கள் முஸ்லிம்களை எதிரிகளாக நினைத்ததில்லை. ஆனால், முச்லிம்கள் அவ்வாறு நினைக்கவில்லை என்றால், முச்லிம்களே ஆகமாட்டார்கள், இங்குதான் அவர்களுடைய பிரச்சினை உள்ளது. அவர்கள் தாம் மற்ற எல்லோரையும் தமக்கு எதிரிகளாக நினைக்கிறார்கள். அந்த எதிர்மறை எண்ணங்கள் தாம், இப்படி அவர்களை நினைக்கச் செய்கிறது. இது அவர்களுடைய இறையியல் மற்ரும் மனோரீதியிலாக நடக்கும் போராட்டம். அதற்கு ஜிஹாதி தான் தீர்ப்பு என்று அவர்கள் நினைத்து செயல்படும் போது, அவர்கள் தாம் விரோதத்தை சம்பாதித்துக் கொள்கிறார்கள்.

  • பத்திரிக்கையில் செய்திகளை வெளியிடுவது – அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களை பெரும்பாலும் ஆட்டி வைப்பவர்கள் கிருத்துவர்கள், முஸ்லிம்கள் மற்றும் கம்யூனிஸ சித்தாந்திகள். இவர்கள் தங்களது சித்தாந்தம் வலுப்பட, ஆதரவாக இருக்க, மற்ற சித்தாந்திகளை எதிர்க்க, தங்களது பத்திரிகா தர்மத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்த வரையில், “செக்யூலரிஸம்” போர்வையில், அவர்கள் உண்மையில், பாரபட்சமான செய்திகளைத் தான் வெளியிட்டு வருகின்றனர். செய்திகளை விலைக்கு வாங்குவது, ஊடகங்களில் செய்திகளை விதைப்பது, வளர்ப்பது, பரப்புவது…..போன்ற வேலைகளை தாராளமாக செய்து வருகிறார்கள். அதற்காக இப்பொழுது நவீன முறையில் “ஜேர்னலிஸ்ட்” பள்ளிகள், கல்லூரிகள் எல்லாமே நடத்தி வருகிறார்கள். மேலும், அவர்களுடைய வியாபாரங்களை நேரிடையாகவோ-மறைமுகமாகவோ எந்த செயல், இயக்கம் அல்லது தனிமனிதன் செயல்படுகிறானோ, அதற்கு எதிராக செயல்படும். இந்த காரியங்களில் ஈடுபட்டுள்ளவர்களை ஆராய்ந்தாலே போதும், “பத்திரிக்கையில் செய்திகளை வெளியிடுவது” எவ்வாறுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

  • பத்திரிக்கையில் தொடர்ந்து வெளியிடுவது – ஒன்று உண்மையான செய்திகளை, ஒட்டு மொத்தமாக மனிதர்கள், பொதுவாக பாதிக்கப்படும் விசயங்கள் செய்திகளாக வந்து கொண்டே இருக்கும். இக்காலத்தில் பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா போன்ற விசயங்களும் செய்திகளாக வரும். அதேபோல, தீவிரவாதம், பயங்கரவாதம், ஜிஹாதி போன்ற காரியங்கள் தொடர்ந்து நடந்து வரும்போது, அத்தகைய செய்திகளும் செய்திகளாக வந்து கொண்டே இருக்கும். அதுதவிர மேலே குறிப்பிடப் பட்டபடி, அவர்களுடைய வணிகங்கள்-வியாபாரங்களை நேரிடையாகவோ-மறைமுகமாகவோ பாதிக்கப் பட்டால், அதை எதிர்க்கும் முறையில் பிரச்சார ரீதியில் செய்திகள் தோன்றும்.

  • விளைவுகள் கடுமையாக இருக்கும் – ஏற்கெனவே விளைவுகள் மிகக்கடுமையாகி விட்டதால் தான், இந்தியர்கள் ஜிஹாதைக் கண்டு எச்சரிக்கையாக இருக்கிறார்கள். பாகிஸ்தான் மதரீதியில் பிரிக்கப் பட்டு, அது ஒன்றாக இருக்கமுடியாமல், இரண்டாக பிரிந்தும், முஸ்லிம்கள் உண்மையினை புரிந்து கொள்ளாமல், இந்தியாவிற்கு எதிராகவே செயல்பட்டு கொண்டியிருக்கிறார்கள். காஷ்மீர் மட்டுமல்லாது வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைகளில் பெரும் பிரச்சினைகள் உருவாக்கப் பட்டு வருகின்றன. இதற்கு ஜிஹாதிகள் முக்கிய பங்கு வகித்துக் கொண்டிருக்கினர். இத்தனை குண்டுகள் வெடித்தும், மக்கள் இறந்தும், ரத்தம் பாய்ந்தும், மனித உறுப்புகள் சிதறியும்……அவர்கள் திருப்தியடையாமல், குண்டு தொழிற்சாலைல்கள் வைத்துக் கொண்டு, கடுமையான விளைவுகளைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவற்றையெல்லாம் கண்ண்டிக்காமல், “விளைவுகள் கடுமையாக இருக்கும்” என்று மிரட்டுவதின் உள்நோக்கம் என்ன?

  • வன்மையான கண்டனுத்துடன் எச்சரிக்கை – எச்சரிக்கை ஜிஹாதிகளுக்கு இல்லாமல், அத்தகைய அபாயகரமான உண்மைகளை எடுத்துக் காட்டுபவர்களுக்கு ஏன் விடவேண்டும்? கண்டனமும் “இஸ்லாம் பெயரில்” நடக்கின்ற குற்றங்களை, தீவிரவாதங்களை நோக்கியில்லாமல், பாதிக்கப் பட்டவர்கள் மீது ஏன் தொடர்ந்து இருக்கவேண்டும்? அத்தகைய வார்த்தை தீவிரவாதம், சொல்-பயங்கரவாதம் போன்றவை ஏன் வன்மையுடன் இருக்கும் என்று அறிவித்துக் கொள்ள வேண்டும்? “வன்மையான கண்டனுத்துடன் எச்சரிக்கை” என்பது இப்படித்தான் மிரட்டலாக இருக்க வேண்டுமா?

கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு - அல் - உம்மா

கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு – அல் – உம்மா – நன்றி “சதர்ன் ஜிஹாதி.காம்”

இந்திய முஸ்லிம்கள் மாறவேண்டும்: “தாருல்-இஸ்லாம் : தாருல்-ஹராப்” “மோமின்-காபிர்”,ளிறைவனால் வெளிப்படுத்தப் பட்ட புத்தகத்தைக் கொண்டவர்கள் – புத்தகங்கள் இல்லாதவர்கள்” ….என பற்பல வேறுபாடுகளை வைத்துக் கொண்டு முஸ்லிம்கள் தான் இந்தியாவில் முஸ்லிம்-அல்லதவர்களை, குறிப்பாக இந்துக்களை அணுகி வருகின்றனர். இது நேர்-எதிர்மறை முறைகள், நல்லது-கெட்டது வழிகள், அறிவிக்கப்பட்ட-அறிவிக்கப்படாத தாக்குதல்கள் என்றபலமுறைகளில் நடந்து வருகின்றன. முன்பெல்லாம் முஸ்லிம்கள், இந்துக்களின் வீடுகளில் விசேஷங்கள் நடந்தால் முஸ்லிம்கள் கலந்து கொள்வார்கள், ஆனால், இப்பொழுது தவிர்த்து வருகிறார்கள். காரணம் அடிப்படவாத முஸ்லிம்கள், “இந்து வீடுகளுக்குச் செல்லக் கூடாது. சாத்தான்களின் வழிபாட்டில் கலந்து கொள்ளக் கூடாது”, என்றேல்லாம் போதிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், இந்துக்கள் இதுமாதிரி சொல்வதில்லை, ஏன், அவர்களுக்கு அத்தகைய எண்ணமே தோன்றுவதில்லை. இன்னும் சொல்லப் போனால், ஏழை முஸ்லிம்களைப் பார்த்தால் இரக்கப்படத்தான் செய்கிறார்கள், தானம் செய்கிறார்கள் (அதாவது அவர்கள் முஸ்லிம்கள் என்று பார்ப்பதில்லை).

அல்-உம்மா சிமி ஜிஹாதின் பல உருவங்கள்

அல்-உம்மா சிமி ஜிஹாதின் பல உருவங்கள்

முஸ்லிம்கள் பரஸ்பர நம்பிக்கையினை வளர்க்க வேண்டும்: முஸ்லிம்களுக்கு இந்து நண்பர்கள் இருக்கின்றார்கள், அவ்வாறே இந்துக்களுக்கு முஸ்லிம் நண்பர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் பழகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு, ஒருவேளை மோமின் முஸ்லிம்களுக்கு, “என்னடா இழவு இது, இந்த காபிர் நண்பர்களுடன் இப்படி நட்பு வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறதே”, என்ற எண்ணம் வரலாம். இந்து நண்பர்கள், தாடி வைத்த – குல்லா போட்ட முஸ்லிம்களைப் பார்க்கும் போது, “ஐயோ, இவன் தீவிரவாதியாக இருப்பானோ, குண்டு வைத்து விடுவானோ?”, என்று அச்சத்துடன் நினைக்கலாம். முதலில் இந்த மனப்பாங்கை நீக்க வேண்டும். பரஸ்பர நம்பிக்கையை வளர்க்க வேண்டும். பயங்கரவாதம், தீவிரவாதம், ஜிஹாதித்துவம் பேசும், ஊக்குவிக்கும், பரப்பு முஸ்லிம்கள், குறிப்பாக இளைஞர்கள் கண்கானிௐகபட வேண்டும், அவர்கள் திருத்தப் படவேண்டும். அப்பொழுது தான் உண்மையான அமைதி, சாந்தி முதலியவை வரும், கிடைக்கும், தொடரும். பர்த்வானில் குண்டுகள் வெடித்த ஒலி இப்பொழுதுதான் மம்தா பேனர்ஜிக்குக் கேட்டிருக்கிறதாம்[7], அதுபோல, இங்குள்ள முஸ்லிம்களுக்கும் கேட்டால்[8] சரிதான்! காந்தி யெயந்தி அன்று குண்டுவெடித்து ஆட்கள் செத்து, இவ்வளது சோதனைகள் நடந்து முடிந்த பிறகு, “தீவிரவாதிகள், தீவிரவாதிகள் தாம்”, என்று அம்மையார் 17-10-2014 அன்றுதான் ஒப்புக் கொண்டுள்ளார். சரி சென்னை முஸ்லிம்கள் எப்பொழுது ஒப்புக் கொள்வார்கள்?

© வேதபிரகாஷ்

25-10-2014

[1] Earlier, a senior Bengal police officer told The Telegraph that departmental proceedings would be initiated against the team that had searched Rezaul Karim’s house in Burdwan and returned empty-handed on October 8. In the same house, the NIA and the NSG had yesterday found 39 home-made bombs.

[2] …….the Bengal police had also recovered a pen drive from a house in the area, that had a recording of an instructor explaining in Urdu and Bangla how to make bombs, improvised explosive devices and hand grenades.

http://www.ndtv.com/article/india/burdwan-blast-a-pen-drive-with-video-on-bomb-making-key-for-bengal-terror-investigation-608226

[3] http://www.ibtimes.co.in/third-blast-west-bengals-malda-district-10-days-611486

[4] http://www.ndtv.com/article/india/burdwan-blast-a-pen-drive-with-video-on-bomb-making-key-for-bengal-terror-investigation-608226

[5]   On October 3, CID had detonated the 55 IEDs found in the Khagragarh blast site.  October 5 itself, just three days after the Khagragarh IED explosions when all the samples had been destroyed by CID.

http://timesofindia.indiatimes.com/city/kolkata/Burdwan-39-bombs-detonated-explosives-samples-sent-for-testing/articleshow/44863732.cms

[6] http://indiatoday.intoday.in/story/burdwan-blast-nia-gets-custody-of-three-accused/1/395558.html

[7] http://www.telegraphindia.com/1141018/jsp/frontpage/story_18939287.jsp

[8] Left defenceless by the discovery of a cache of bombs that Bengal police had overlooked, chief minister Mamata Banerjee today said “terrorists are terrorists” and declared that “we do not have any problems with the NIA” which is probing the Burdwan blast.

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (3) [அன்பழகன் என்ற பலிக்கடாவின் மாபெரும் தியாகம்]

மார்ச் 16, 2011

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (3) [அன்பழகன் என்ற பலிக்கடாவின் மாபெரும் தியாகம்]

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (1)[1] மற்றும் (2)[2] பதிவுகளையும் சேர்த்து வாசிக்கவும்

தியாக கீதங்களா, ஓலங்களா – காலம் தான் பதில் சொல்லியாக வேண்டும்: எங்களால் தான் திமுக பிழைத்தது என்றனர் முதலில்! அதாவது, அவர்களின் மாபெரும் தியாகத்தினால் கூட்டணி பிழைத்தது! ஆனால், அடுத்த நாளிலேயே, நாங்கள் அதிமுகவை / ஜெயலலிதாவை ஆதரிப்போம் என்றும் பாட்டு பாடினர். கேரளாவில் இந்திய யுனீயன் முஸ்லீம் லீக்குக்கு வாரிக் கொடுக்கும் காங்கிரஸ், இங்கு ஏன் பிடுங்கிக் கொள்கிறது என்று தெரியவில்லை. அழுத குழந்தைக்கு பால் கிடைத்ததா, ஓலமிட்டு வாங்கிக் கொண்டார்களா, மிரட்டி பிடுங்கிக் கொண்டார்களா? தியாகம் தான் பதில் சொல்லும்!  முஸ்லீம் சமுதாயமே இதனை எதிர்த்து நிற்கிறது[3] என்றதும் பயந்து விட்டாரா கருணாநிதி?

 

திராவிட கூட்டணியின் தியாகத் திருநாள்! தியாகம் என்றால் சொல்லவேண்டுமா? தியாகத்திற்கு பரிசு என்று புது பாட்டு, மெட்டு, தாளன்ம், கூத்து, கும்மாளம்! முன்பு கருணாநித் பிடுங்கிக் கொடுத்தார் என்றன ஊடகங்கள்! ஆனால் இன்றோ தியாகப்பாட்டைப் பாடுகின்றன. காங்கிரஸ் கட்சிக்காக தனது ஒரு இடத்தை விட்டுத் தந்து பெருந்தன்மையாக நடந்து கொண்ட இந்தியயூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தியாகத்தைப் பாராட்டும் வகையில், அந்தக் கட்சிக்கு மீண்டும் மூன்று இடங்களைக் கொடுத்துள்ளார் கருணாநிதி. காதர் மொஹைதீன் தலைமையிலான முஸ்லீம் லீக் கட்சிக்கு ஆரம்பத்தில் திமுகவில் 3 சீட்கள் தரப்பட்டன. ஆனால் காங்கிரஸ் கட்சி செய்து வந்த பெரும் குழப்பத்தைத் தொடர்ந்து, பாமக மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்குக் கொடுக்கப்பட்ட இடங்களிலிருந்து தலா ஒரு இடத்தை வாங்கி காங்கிரஸுக்குக் கொடுத்தது திமுக. அதற்காக காங்கிரஸ் தரப்பிலிருந்து யாரும் ஒரு நன்றி கூட கூறவில்லை இந்த இரு கட்சிகளுக்கும். இந்த நிலையில் நேற்று தொகுதிள் விவரம் அறிவிக்கப்பட்டது. அப்போது முஸ்லீம் லீக் கட்சிக்கு மீண்டும் 3 இடங்களை ஒதுக்கி திமுக அறிவித்தது[4].

 

உதயசூரியன் சின்னத்தில் முஸ்லீன் லீக் போட்டி: ஐந்து கேட்டு மூன்று கிடைத்தது. மூன்று இரண்டாகி, மறுபடியும் மூன்றாகி விட்டது. சரி, உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டால்[5], தன்மானம், பகுத்தறிவு எல்லாம் இருக்குமா, போய் விடுமா? கடவுளை நம்பும் முஸ்லீம்களில் இப்படி நாத்திக திமுகவின் போர்வையில் மறைந்து கொண்டு, பகுத்தறிவு நாடகம் போட்டுக் கொண்டு, தியாக டிஊயட் பாடிவருவது வேடிக்கைத்தான்!

 

அன்பழகனின் மாபெரும் தியாகம்! முன்பு நெடுஞ்செழியனை கருணாநிதி அடியோடு தியாகம் செய்தார். பாவம், அன்பழகன், வேறெங்காவது சென்றால், அவரைவிட மோசமான கதி ஏற்படும் என்று என்றும் னெம்பர்.2 என்ற நிலையில் இருந்து காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். திமுகவுடன் ஒட்டிக் கொண்டிருந்தார். ஆக, மறுபடியும் பலிக்கடாவாக மாறியிருப்பது அன்பழகன் தா! மீண்டும் மூன்று இடங்கள் ஏன்றால், யாருக்கு நஷ்டம்? இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கருணாநிதியும், காதர் மொஹைதீனும் கையெழுத்திட்டனர். முஸ்லீம் லீக் கட்சிக்கு பெருமை வாய்ந்த சென்னை துறைமுகம் தொகுதியை திமுக கொடுத்துள்ளது. இந்தத் தொகுதி முதல்வர் கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் போட்டியிட்டு வென்றவை என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் லீக் கட்சிக்கு, துறைமுகம், வாணியம்பாடி, நாகப்பட்டினம் ஆகிய மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன[6].

 

வேதபிரகாஷ்,

16-06-2011


[1] வேதபிரகாஷ், முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (1),

https://islamindia.wordpress.com/2011/03/11/double-games-of-muslim-league-parties/

[2] வேதபிரகாஷ், முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (2),

https://islamindia.wordpress.com/2011/03/15/flip-floppin-iuml-muslims-dravidian-parties/