பொய்மையுடன் மாற்றப்பட்டப் புகைப்படங்கள், தூண்டுகின்ற அபத்தமான விளக்கங்கள், கலவரத்தை ஏற்படுத்தும் எஸ்.எம்.எஸ்கள், திட்டமிட்டு நடத்தப் பட்ட கலவரம்!
பராஸ் அஹமது என்பவர் எப்படி வெவ்வேறு இடங்களில், காலக்கட்டங்களில் எடுக்கப்பட்டப் புகைப்படங்களை, மாற்றியமைத்து, திருத்தி பொய்யான விளக்கங்களுடன் “பேஸ்புக்” போன்ற இணைதளங்கள், எஸ்.எம்.எஸ்கள் மூலம் புரளிகளைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள் என்று எடுத்துக் காட்டியுள்ளார்.
திபெத்திய துறவிகள், சீன பூகம்பத்தால் இறந்தவர்களுக்கு சேவை செய்யச் சென்றபோது எடுத்த புகைப்படத்திற்கு, “பௌத்தர்களால் கொல்லப்பட்ட முஸ்லீம்களின் உடல்கள் (பர்மா)” என்று போட்டு, விஷமத்தனமாகப் பொய்யைப் பரப்பியுள்ளார்கள்.
திபெத்திற்கு சீன ஜனாதிபதி வந்தபோது, ஒரு திபத்திய பௌத்த இளைஞன் எதிர்ப்புத் தெரிவித்து தீக்குளித்தபோது எடுக்கப்பட்டப் படம். அதுவும் அந்நிகசழ்சி நட்ந்தது தில்லியில், இந்தியாவில்.
ஆனால் பர்மாவில் பௌத்தர்கள் முஸ்லீமை இவ்வாறு எடுத்தபோது, அவனைக் காப்பாற்றாமல், ஊடகக்காரர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று விஷத்தனமாக “பேஸ்புக்கில்” படம் போட்டு, குரூரமான விளக்கத்தையும் கொடுத்துத் தூண்டியுள்ளார்கள்.
“பர்மா முஸ்லீம்கள் தொடர்ந்து பௌத்தர்களால் பெருமளவில் கொல்லப்படும் காட்சி – விழிப்புணர்ச்சிற்காக இப்படத்தை மற்றவர்களுடன் தயவு செய்து பகிர்ந்து கொள்ளவும்“, என்று தலைப்பிட்டு இன்னொரு பொய்யானப் பிரச்சாரம்!
உண்மையில் அது 2004ல் பாங்காக்கில் போலீஸாருடன் மோதிய சுமார் 400 பேர் பிடிக்கப்பட்டு, தமது கட்டுப்பாட்டில் இருக்க, படுக்க வைக்கப்பட்டுள்ள காட்சி!
இதனை இப்பொழுது, அதுவும் பர்மாவில் நடதுள்ளதாக, அபத்தமாக புரளி கிளப்பியுள்ளாறர்கள்.
“முஸ்லீம்களைக் கொல்வதை நிறுத்துங்கள்” என்று தலைப்பிட்டு “பேஸ்புக்கில்” பரப்பிவிட்டுள்ள ஒன்னொரு கட்டுக்கதைப் படம்.
தாய்லாந்த்தில் 2003ல் எடுக்கப்பட்டப் படம். அப்பொழுது, கலவரத்தில் ஈடுபட்டவர்களைப் பிடித்து கட்டி வைத்து, படுக்க வைத்துள்ளனர்.
இப்படி பொய்யாக, துஷ்பிரச்சாரம், புனையப்பட்ட கதைகள், பொய்மாலங்கள், மாய்மாலக் கட்டுக்கதைகள், முதலியவற்ரை வைத்துக் கொண்டு, ஏன் படித்த முஸ்லீம் இளைஞர்கள் இவ்வாறு இணைதள தீவிரவாதத்தை வளர்க்க வேண்டும்.
இஸ்லாம் ஆபத்தில் உள்ளது என்று தூண்டி விட்டு, கலவரங்களை உண்டாக்க வேண்டும்?
அண்மைய பின்னூட்டங்கள்