Posted tagged ‘தாவூத்’

மதுரை ஜிஹாதித்தனம் திட்டமிட்டே வளர்க்கப்படுகிறது என்பது கைதாகியவர்களின் தொடர்புகள் வெளிப்படுத்துகின்றன!

திசெம்பர் 2, 2016

மதுரை ஜிஹாதித்தனம் திட்டமிட்டே வளர்க்கப்படுகிறது என்பது கைதாகியவர்களின் தொடர்புகள் வெளிப்படுத்துகின்றன!

al-quida-terrorist-arrested-at-madurai-abbas-dawood-samsudeen-ayub-28-11-2016

முதலில் இருவர், நால்வர் என்று இறுதியாக அறுவர் கைதானது: இதில், குண்டுவெடிப்புகளில் தொடர்பு இருப்பதாக முகம்மது அய்யூப் தெரிவித்த தகவலின்பேரில், மதுரை நெல்பேட்டை கீழமாரட் வீதியைச் சேர்ந்த சம்சுதீன் (25) என்பவரை நேற்று கைது செய்தனர். இவ்வழக்கில் மதுரையில் கைதான 4 பேரும் மேலூர் கோர்ட்டில் 29-11-2016 அன்று மாலை ஆஜர்படுத்தப்பட்டனர். மேல் விசாரணைக்காக பெங்களூர் தேசிய புலனாய்வு பிரிவு கோர்ட்டில் ஆஜர்படுத்த, இவர்கள் பலத்த  பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டனர். மதுரை மாவட்டம், மேலூர் குற்றவியல் கோர்ட்டிற்கு, கைதான 4 தீவிரவாதிகளும் 29-11-2016 அன்று மாலை 3.30 மணிக்கு கொண்டு வரப்பட்டனர். முன்னதாக வெடிகுண்டு கண்டறியும் மோப்பநாய் விஜய் வரவழைக்கப்பட்டு கோர்ட் வளாகம் முழுவதும் சோதனையிடப்பட்டது.

  1. தாவூத் சுலைமான்(வயது 23), [கரீஸ்மா பள்ளிவாசல், மதுரை[1]]
  2. அப்பாஸ் அலி(27) [மதுரை இஸ்மாயில்புரம் நயினார் முகமது மகன்[2]],
  3. கரிம் ராஜா(23), [புதூர் விஸ்வநாதநகர் ராமுகொத்தனார் காம்பவுண்டைச் சேர்ந்த முகமது ஜைனுல்லாபுதின் மகன். பி.காம் படித்தவன், சிக்கம் கடை வைத்துள்ளவன்[3]]
  4. முகமது அயூப் அலி(25), [மதுரை திருப்பாலை ஐஸ்லாண்ட் நகர் முகமது தஸ்லிம் மகன்[4]]
  5. சம்சுதீன் என்ற கருவா சம்சுதீன்(25)[சிக்ந்த்ரின்மகன், நெல்பேட்டையைச் சேர்ந்தவன்[5] ]
  6. மொஹம்மதுஅயூப் [25, மொஹம்மதுதஸ்லிமின்மகன்[6]]

sulaiman-house-searched-in-chennai-where-incriminating-documents-seizedமுக்கிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது: மத்திய குற்றப்புலனாய்வு எஸ்பி பிரதீபா அம்பேத்கர் தலைமையில் டெல்லி தேசிய புலனாய்வுப்படையினர், கைதான நால்வரையும் மாஜிஸ்திரேட் செல்வகுமார் முன்பு ஆஜர்படுத்தினர்[7]. பின்னர் நால்வரையும் டிச. 1ம் தேதிக்குள் பெங்களூரு தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்[8]. கைதானவர்களின் பெற்றோர், உறவினர்கள் கண்ணீர் மல்க கோர்ட் வாசலில் காத்திருந்தனர். பொதுமக்களும் பெருமளவில் திரண்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. கைதானவர்கள் நால்வரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள், கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் ஆவணங்கள், வரைபடங்கள் போன்றவற்றை அட்டைப்பெட்டியில் வைத்து மாஜிஸ்திரேட் முன்னிலையில் தேசிய பாதுகாப்பு படையினர் சீல் வைத்தனர். கிளம்புவதற்கு முன்னதாக, கைதானவர்களின் தாய்மார்கள் மட்டும் தங்கள் பிள்ளைகளைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அப்போது மகனைப் பார்த்து பேசிவிட்டு வந்த ஒரு தாய், கோர்ட் வளாகத்திலேயே மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

dm-nia-arrested-al-queda-men-including-it-techie-at-madurai-29-11-2016

தீவிரவாத பயிற்சி அளித்தவர்கள் கைதாகியுள்ளனர்: 29-11-2016 அன்று மாலை 3.30 மணிக்கு கோர்ட்டிற்கு அழைத்து வரப்பட்ட 4 தீவிரவாதிகளும், மாலை 6.30 மணிக்கு மாஜிஸ்திரேட் உத்தரவிற்குப்பிறகு, காரில் ஏற்றி பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டனர். போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பாதுகாப்பு கருதியே மதுரையை தவிர்த்து மேலூர் கோர்ட்டில் 4 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்’ என்றார். முன்னதாக பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில், மதுரை மற்றும் சென்னையில் கைதான தீவிரவாத கும்பல்,   கடந்த ஏப்ரல் மாதம் துவங்கி நவ. 1ம் தேதி வரை ஆந்திர மாநிலம், சித்தூர் மற்றும் நெல்லூர், கேரள மாநிலம், கொல்லம் மற்றும் மலப்புரம், கர்நாடக மாநிலம் மைசூரு ஆகிய நகரங்களில் உள்ள நீதிமன்ற வளாகப் பகுதிகளில் 5 இடங்களில் குண்டுவெடிப்புகளை நடத்தியுள்ளனர்[9].  இச்சம்பவங்களில் பயன்படுத்தப்பட்ட குக்கர், பேட்டரி, வெடிபொருட்களை மதுரையில் தயாரித்து, 4 மாநிலங்களுக்கும் எடுத்துச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது[10]. இதற்காக மதுரை மேலூர்,  சிவகாசி பகுதிகளில் வெடி மருந்துகள், பொருட்கள் வாங்கி தயாரித்துள்ளனர்[11]. மேலும், மதுரையில் 30 இளைஞர்களுக்கு தீவிரவாத பயிற்சி முகாம்களையும் நடத்தியுள்ளனர்.  சுலைமான் கைது, விவகாரங்களை சுலபமக்கியுள்ள்து[12].

nia-searches-at-sulaiman-house-dm-30_11_2016_005_003

கணினி வல்லுனனான சுலைமான் தலைவன்: இந்த குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட இளைஞர்களிடம் செல்போன்களை கொடுத்தால், பின்னர் போலீஸ் விசாரணையில் எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள். அதனால், அவர்கள் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவிகளை பொருத்தினால், அவர்கள் குண்டு வைக்கும் இடம் வரை செல்கிறார்களா என்பதை எளிதாக சென்னையில் உள்ள சுலைமான் கண்காணிப்பான். பின்னர் குண்டு வைத்து விட்டு திரும்பி வரும்வரையும் ஜிபிஎஸ் மூலமே அவர் கண்காணிப்பார். ஒருவேளை போலீஸ் பிடித்து விட்டால், மற்ற தீவிரவாதிகள் தப்புவதற்கும் எளிதாக இருக்கும் என்பதற்காகவே இந்த திட்டத்தை அவர்கள் செயல்படுத்தி வந்தனர் என்றும் தெரியவந்தது. மேலும் டிசம்பருக்குள் தென் மாநிலங்களில் பல இடங்களில் குண்டு வெடிப்பை நிகழ்த்தவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர்[13]. இதற்கான வரைபடங்கள் தற்போது போலீசிடம் சிக்கியுள்ளன. இது குறித்தும் பிடிபட்ட தீவிரவாதிகளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[14]. இவர்களுடன் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிப்பதால், தமிழகத்தில் தேசிய புலனாய்வு படையினர் தங்கி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[15].

© வேதபிரகாஷ்

02-12-2016

nia-arrested-connected-with-five-blasts-base-movement

[1] Dawood Suleiman, 23 yrs, s/o Saeed Mohd. Abdulla of Karimsa Pallivasal, Madurai, now

residing at Chennai. He works in a software firm and was the main leader of the terrorist gang.

He has been arrested in Chennai today 28-11-2016, for the involvement in the crime.

[2] Abbas Ali, 27 yrs, s/o Nainar Mohammed, resident of 11/23, 2nd floor, 4th street, Ismailpuram, Munichalai Road, Madurai. He studied up to 8th standard, and a painter. He is also running a library in the name ‘DARUL ILM’ at Madurai. He has been arrested in Madurai today [28-11-2016], for his involvement in the crime.

[3] Samsum Karim Raja, s/o V.S. Mohammed Jainullah- buddin, resident of No.17, Ramu kothanar compound, Viswanatha Nagar, K. Pudur, Madurai. He is a B.Com graduate and runs a chicken broiler shop at Kannimara Koil street in Madurai. He has been arrested in Madurai today 28-11-2016, for his role in the crime.

[4] Md. Ayub Ali, age 25 yrs, s/o Mohd Tasleem, resident of Island nagar, Madurai. He is a Public liaison officer for a hearing aid company. He is being further examined in Madurai for his role in the crime.

[5] Today 29-11-2016, NIA has arrested accused namely Shamsudeen, aged 25 yrs, S/o

Sikander, R/o No.13-C, Kilamarat Veedhi, Opposite Thayir Market, Nelpettai, Madurai

[6] Today 29-11-2016, NIA has arrested accused namely Mohd Ayub aged 25 yrs, S/o Mohd Dhaslim, Island Nagar, 2nd Cross Street, Kaipathur, Madurai in Madurai in RC-03/2016/NIA/HYD.

[7] http://timesofindia.indiatimes.com/city/chennai/TCS-techie-who-plotted-to-target-PM-Modi-held-in-TN/articleshow/55677420.cms

[8] http://www.nia.gov.in/writereaddata/Portal/News/114_1_PressRelease_29_11_2016_1.pdf

http://www.nia.gov.in/writereaddata/Portal/PressReleaseNew/360_1_PressRelease_29_11_2016_2.pdfUPDATED: NOVEMBER 29, 2016 01:07 IST

[9] தமிழ்.ஒன்.இந்தியா, மதுரையில் மேலும் இரு தீவிரவாதிகளை இன்று கைது செய்துள்ளனர் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள், By: Veera Kumar, Published: Tuesday, November 29, 2016, 15:33 [IST]

[10] The Hindu, NIA detains four youths for blasts in courts, Vijaita Singh, MADURAI/NEW DELHI: NOVEMBER 29, 2016 01:07 IST UPDATED: NOVEMBER 29, 2016 01:07 IST.

[11] http://www.thehindu.com/news/national/NIA-detains-four-youths-for-blasts-in-courts/article16717767.ece

[12]

[13] http://tamil.oneindia.com/news/tamilnadu/mysuru-blast-2-more-from-base-movement-secured-nia-268498.html

[14] The Hindu, NIA arrests one more terror suspect in Madurai, by S. Sundar, MADURAI NOVEMBER 29, 2016 20:47 IST UPDATED: NOVEMBER 30, 2016 02:08 IST.UPDATED: NOVEMBER 30, 2016 02:08 IS

[15] http://www.thehindu.com/news/national/NIA-arrests-one-more-terror-suspect-in-Madurai/article16721360.ece

தாவூதை துபாயிலேயோ, டொமினிகாவிலேயே, பாகிஸ்தானிலேயோ, ஆப்கானிஸ்தானிலேயோ, ஏன் அரபு நாடுகளிலேயோ ஏன் புதைக்கக் கூடாது?

நவம்பர் 12, 2011

தாவூதை துபாயிலேயோ, டொமினிகாவிலேயே, பாகிஸ்தானிலேயோ, ஆப்கானிஸ்தானிலேயோ, ஏன் அரபு நாடுகளிலேயோ ஏன் புதைக்கக் கூடாது?

தாவூத் சுன்னியா, ஷியாவா? ஷியா தனிமதச் சட்டவாரியத்தின் காரியதரிசி மற்றும் மதத்தலைவரான மௌலானா ஜஹீர் அப்பாஸ் ரிஸ்வி, “நாங்கள் அவனை இந்தியன் என்றே கருதவில்லை”, என்றாராம்[1]. ஆனால் “முஸ்லீம் / ஷியா” இல்லை என்று சொல்லாததைக் கவனிக்க வேண்டும். அப்படியென்றால், முஸ்லீமாக அவன் இங்கு புதைக்கப் பட ஒப்புக்கொள்கிறாரா? பொதுவாக ஷியாக்காரர்கள் கொஞ்சம் மனிதாபிமாக இருப்பார்கள் என்பார்கள். பிறகு எப்படி இவன் சுன்னித்தீவிர-பயங்கரவாதிகளையும் மிஞ்சிவிட்டான் என்று தெரியவில்லை.

தீவிரவாதத்தில்-பயங்கரவாதத்தில் சுன்னி-ஷியா ஒன்றாக வேலை செய்கின்றனரா? பொதுவாக இந்தியர்களுக்கு, குறிப்பாக பெரும்பாலான இந்துக்களுக்கு சுன்னி[2], ஷியா[3], என்றாலோ கூட போரா, அஹ்மதியா[4] என்றெல்லாம் சொன்னால் ஏதாவது புரியுமா என்று தெரியவில்லை. இருப்பினும், தீவிரவாதத்தில்-பயங்கரவாதத்தில் சுன்னி-ஷியா ஒன்றாக வேலை செய்கின்றனரா என்ற சந்தேகம் எழுகின்றது. அல்லது “காஃபிர்களுக்கு” எதிரானது “ஜிஹாத்” என்பதினால் ஒன்றுபட்டு, பிறகு தமக்குள் சண்டை போட்டுக் கொள்வார்கள்[5] போலும்!

துபாயிலேயோ, டொமினிகாவிலேயே, பாகிஸ்தானிலேயோ, ஆப்கானிஸ்தானிலேயோ, ஏன் அரபு நாடுகளிலேயோ ஏன் புதைக்கக் கூடாது? பலநாடுகளின் பாஸ்போர்ட்டுகளை தாவூத் இப்ராஹிம் உபயோகப்படுத்திவருகிறான். டொமினிகா என்ற நாட்டின் பாஸ்போர்ட்டை உபயோகப் படுத்தப்பட்டதால், அந்நாட்டின் குடிமகன் அந்தஸ்து கொடுக்கப்பட்டது என்று தெரியவந்தது[6]. ஆனால், திடீரென்று அந்நாடு அதனை மறுத்தது[7]. இருப்பினும் ஏன் அவனது மகள்கள், மறுமகன்கள் முதலியோர்களுக்கு குடிமகன் / குடிமகள் அந்தஸ்து கொடுக்கப்பட்டது என்பதற்கு அந்நாட்டு அதிகாரிகள் பதில் சொல்லவில்லையாம்[8].

காஃபிர் நாட்டில், காஃபிரிஸ்தானில் புதைத்தால் உயித்தெழ முடியுமா? பாவம், தாவூத் இப்ராஹிம், தனது ஆட்களை விட்டு தனது சமாதிக்கு இடம் தேட சொல்லியுள்ளான். ஆனால், இந்தியா / பாரதம் ஒரு “காஃபிர்கள்”[9] வாழும் நாடு, அதாவது “நம்பிக்கையில்லாதவர்கள்” வாழும் நாடு[10]. அங்கு “மோமின்கள்” புதைக்கப் பட்டால், சொர்க்கம் கிடைக்குமா, உயித்தெழ முடியுமா அல்லது நரகத்திற்குச் செல்வார்களா? முஸ்லீம் அன்பர்கள் / நண்பர்கள் / பண்பாளர்கள் / பேராளர்கள் விளக்கம் கொடுக்க வேண்டும்!

“இஸ்லாம்” பெயரில் இந்தியாவிற்குக் கிடைக்கப் போவது என்ன? “இஸ்லாம்” என்றால் “அமைதி” என்று உறுதியாக விளக்கம் அளிக்கும் முஸ்லீம் அன்பர்கள் / நண்பர்கள் / பண்பாளர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இந்தியாவை “சுடுகாடாக” இல்லை[11] “இடுகாடாக” மாற்ற விரும்புகிறார்களா அல்லது “அமைதிப் பூங்கா”வாக இருக்க விரும்புகிறார்களா?

வேதபிரகாஷ்

11-11-2011


[1] Maulana Zaheer Abbas Rizvi, general secretary, Shia Personal Law Board, said the community didn’t consider Dawood an Indian.

http://www.mumbaimirror.com/index.aspx?page=article&sectid=15&contentid=20111110201111100251338024fb09ea2

[2] இப்பொழுது “சன்னி” என்று சொல்ல வேண்டும் என்கிறார்கள்.

[3] சுன்னி-ஷியா என்பது இஸ்லாமில் உள்ள இரண்டு முக்கியமான பிரிவுகள். அலியை இமாமாக ஏற்றுக் கொள்பவர்கள் (அலியைப் பின்பற்றுபவர்கள்), அவரது பிள்ளைகளின் தியாகத்தை மதிப்பவர்கள் ஷியாக்கள்.

[4] இவையெல்லாம், இஸ்லாமில் உள்ள “சாதி/ஜாதி அமைப்பு” அல்லது அதற்கும் மேலான பிடுப்புள்ள பிரிவுகள் ஆகும். இதில் சமுக-இறையியல் பிரச்சினைகள் சேர்ந்துள்ளன.

[5] ரஃபிக் ஜக்கரியா “இஸ்லாமில் உள்ள சண்டைகள் / போராட்டங்கள்” என்ற புத்தகத்தைப் பார்க்கவும்.

[6] Weekly Blitz wanted to know from the government of Dominica about the accusations of granting citizenship to notorious mafia don Dawood Ibrahim and his daughters and son-in-laws. In response to a question in a radio show, Anthony Astaphan bluntly denied that no such citizenship or passport has ever been granted in favor of Dawood Ibrahim. Subsequently he said if any such citizenship or passport has ever been found, it would have been fake. He also told the radio show that issuance of passport to Dawood Ibrahim will put him into “shock”.

http://www.weeklyblitz.net/1918/dawood-ibrahim-using-dominica-passports

[8] Meanwhile, the government of Dominica in a press announcement has refused the allegation of granting any citizenship of passport to Dawood Ibrahim, while it did not comment on the allegation of issuing passport and granting citizenship to daughters and son-in-laws of the notorious mafia don. Similarly Anthony Astaphan has failed to reply to the questions from Weekly Blitz related to granting of citizenship to Dawood Ibrahim’s daughters and son-in-laws.

[9] “காஃபிர்கள்” என்றால் “நம்பிக்கையில்லாதவர்கள்” அதாவது முஸ்லீம்கள் அல்லாதவர்கள் என்று பொருள். அதுமட்டுமல்லாது அவர்கள் “குஃப்ரு” கொண்டவர்கள் அழுக்கு, அசுத்தம், கொண்டவர்கல், தூய்மையில்லாதவர்கள் என்றும் பொருள்படும். அதாவது முஸ்லீம்கள் மிகவும் தூய்மையானவர்கள், சுத்தமானவர்கள் என்று பொருள். அதனால் தான் அலி சகோதர்கள் காந்தியைப் பற்றி குறிப்பிடும் போது அவ்வாறு சொன்னார்.

[10]  காஃபிர்மோமின், “தூய்மையானவன்” – “தூய்மையில்லாதவன்என்றஎண்ணம்இருக்கும்வரையில்முஸ்லீம்முஸ்லீமாகத்தான்இருப்பான்: அலி சகோதரர்களை காந்தி தனது சகோதரர்களைப் போல பாவித்தார். ஆனால், முஸ்லீம் அடிப்படைவாத சிந்தனைகளால், அலி சகோதரர்கள் அதனை ஏற்றுக் கொள்ளா முடியவில்லை. “காந்தியின் குணாதியம் (நடத்தை, பண்பு) எந்த அளவிற்கு தூய்மையாக இருந்தாலும், எனது மதத்தின் (இஸ்லாம்) பார்வையில் ஒரு குணாதியமே இல்லாத ஒரு முசல்மானை விட தாழ்ந்தவராகத்தான் தோன்றுகிறார்”. அதாவது இந்து “தூய்மையில்லாதவன்” ஆனால் முஸ்லீம் “தூய்மையானவன்” என்று சொல்வது “காஃபிர்” மற்றும் “மோமின்” என்று பிரித்து பாகுபாடு காட்டிப் பேசுவதுதான். அமினாபாத், லக்னௌவில் ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, முஹம்மது அலியை, என்ன காந்தியைப் பற்றி இப்படி சொல்லியிருக்கிறீர்களே என்று கேட்டதற்கு, அவர் அளித்த பதில் இதோ – “ஆமாம், என்னுடைய மதம் மற்றும் நம்பிக்கையின்படி, ஒரு விபச்சாரத்தனமுடைய மற்றும் வீழ்ந்த (மிக மோசமான / கேடுகெட்ட) முசல்மான்தான் காந்தியைவிட உயர்ந்தவன்”! அதுமட்டமல்ல தாங்கள் உயர்ந்த முஸ்லீம்கள் என்பதனால், காந்தியுடன் செரமாட்டோம், மேடையில் சமமாக உட்காரமாட்டோம் என்றெல்லாம் கூட வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்கள், நடந்து காட்டியிருக்கிறார்கள். காந்தி தன்னுடைய எழுத்துகளில் அதனை தக்கேயுரிய பாணியில் பதிவு செய்துள்ளார்.

https://islamindia.wordpress.com/2011/10/26/afganisthan-support-pakistan-in-a-war-against-india/

Mahathama Gandhi, Collected works, Volume.XXIII, Appendix, 13, p.569.

Mahathama Gandhi, Collected works, Volume XXVI, p.214.

[11] இந்துக்கள் இறப்பவர்களை எரிக்கவும், புதைக்கவும் செய்வார்கள், ஆனால் முஸ்லீம்கள் எரிக்கமாட்டார்கள், புதைப்பார்கள். இந்துக்களில் புதைப்பவர்களுக்கு, முஸ்லீம்களைப் பொலவோ, கிருத்துவர்களைப் போலவோ, அப்படியே உயித்தெழுவர் என்ற நம்பிக்கை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை வெடிக்குண்டு ஜிஹாதி கொலைக்காரன் தாவூத் இப்ராஹிம் தன்னுடைய சமாதிக்கு மும்பையில் இடம் தேடச் சொல்லியுள்ளானாம்!

நவம்பர் 12, 2011

மும்பை வெடிக்குண்டு ஜிஹாதி கொலைக்காரன் தாவூத் இப்ராஹிம் தன்னுடைய சமாதிக்கு மும்பையில் இடம் தேடச் சொல்லியுள்ளானாம்!

 

நேருவின் இறுதி ஆசையும், தாவூதின் இறுதி ஆசையும்!: பள்ளியில் படிக்கும் போது, நேருவின் இறுதி ஆசை என்று ஏதோ படித்ததாக ஞாபகம். அதில் நேரு தான் இறந்தால், தனது உடல் இந்தியாவிற்கு எடுத்து வரவேண்டும், உடல் எரிக்கப் படவேண்டும், அஸ்தி கங்கையில் கரைக்கப்பட வேண்டும், இந்தியா முழுவதும் தூவப்படவேண்டும் என்றேல்லாம் குறிப்பிட்டதாக ஞாபகம். விபரீதமான ஆசைதான். அப்பொழுது இப்படி இறந்த மனிதனின் சாம்பல் தூவப்பட்டால் சுற்றுநிலை மாசு ஏற்படுமா என்றேல்லாம் யாரும் யோசிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. நேருவைப் பின்பற்றும் அல்லது செக்யூலரிஸ போர்வைப் போர்த்திக் கொண்டு உலாவரும் அறிவுஜீவிகளும் பிறகு அறிந்து வெட்கப்படவில்லை. அதுபோல இந்த தாவூத் இப்ராஹிம் என்ன பெரிய சுதந்திரத் தியாகியா, இந்திய அரசியல்வாதியா, பிரதம மந்திரியா, முக்கியமான ஆளா? பிறகு, இவனுக்கு ஏன் இந்த ஆசை? உண்மையில் தேடப்படும் குற்றவாளியான அவன், இந்திய அரசாங்கம், பாகிஸ்தான் கேட்டுள்ள 22 தீவிரவாதிகளில் அவனும் ஒருவன். கசாப்பைப் போல அவனுக்கும் தூக்குத்தண்டனைதான் கொடுக்கப்படும். ஆனால், இறப்பின் மூலம் தப்பித்துக் கொள்ள முயல்கிறான் போலும். இறந்த பிறகு பட்டங்களைக் கொடுத்து கௌரவிப்பது போல, இவன் இறந்தாலும், அவனுக்குக் கொடிய தண்டனைக் கொடுக்கப் பட வேண்டும். அப்பொழுதுதான், தீவிரவாத-பயங்கரவாத அரக்கர்களுக்கு பயம் வரும். செத்தப் பிறகு நரகத்திற்குச் செல்லக் கூடிய இந்த கொடியவர்களுக்கு, இந்தியா இடந்தரலாகாது.

 

கொலைக்காரன், தீவிரவாதி, பயங்கரவாதி: செத்தபிறகும் பிரச்சினை கிளப்ப தீர்மானமாகவே உள்ளான் போலும் வெடிகுண்டு கொலைக்காரன், ஜிஹாதி தாவூத் இப்ராஹிம். உண்மையிலேயே நம்பிக்கையுள்ள மனிதனாக இருந்திருந்தால் பாவத்தைக் கழுவ வருந்தியிருக்க வேண்டும். ஆனால், சாவிற்குப் பிறகு தீவிரவாத-பயங்கரவாத சின்னமாக இருக்க முடிவு செய்திருப்பது, இந்திய மக்களுக்கு, குறிப்பாக மும்பை மக்களுக்கு பெரிய அபாயமான விஷயமாகும். தனது மரணத்திற்கு பின்னர் தனது உடல் மும்பையில் புதைக்கப்பட வேண்டும் என்று பிரபல நிழலுக தாதா தாவூத் இப்ராகிம் விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன[1]. .அந்த அளவிற்கு பிறந்த மண்ணுடன் ஐக்கியம் ஆகவேண்டும் என்று நினைப்பவன், எப்படி அந்த மண்ணிற்கு தொரோகம் விளைவித்திருப்பான்? அப்பாவி மக்களைக் கொன்றிருப்பான்? கடந்த 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்த மும்பை குண்டுவெடிப்புகளை நடத்தி 250க்கும் மேற்பட்ட அப்பாவிகள் பலியாவதற்கு காரணமாக இருந்து[2], அச்சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான தாவூத், அத்தாக்குதலுக்கு பின்னர் மும்பையிலிருந்து தப்பி சென்று பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்துவருகிறான்[3]. அவனை பாகிஸ்தான் அரசும், அதன் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யும் பாதுகாத்து வருகிறது[4].

 

இந்திய பொருளாதாரத்தைச் சீர்குலைத்தவன், சீர்குலைத்து வருபவன்: ஏதோ இந்த தாவூத் இப்ராஹிம் பெரிய மனிதனைப் போல ஊடகங்கள் சித்தரித்து வருகின்றன. எதிர்மறை விளம்பரத்தின் மூலம், மக்கள் மனத்தில் பதிய வைக்கிறது. சமயத்தில் முஸ்லீம்கள் அவனை தியாகி என்றும் நினைப்பர், நினைத்து மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவன் நினைவாக திரைப்படம் எடுக்கவும் ஆரம்பித்துவிட்டனர்[5]. கொலை[6], கள்ளக்கடத்தல், கிரிக்கெட் சூதாட்டம், போதை மருந்து வியாபாரம்[7], மும்பை திரைப்படத் தொழிலை, ஏன் இந்தியத் திரைப்படத்தொழிலையே[8] ஆட்டிப் படைப்பவன், பல நடிகைகளின் வாழ்க்கையை நாசமாக்கிவன், விபச்சாரம் பெருகக் காரணமானவன், மொத்த ஹவாலா போக்குவரத்திற்கும் கணிசமான அளவிற்குக் காரணமானவன், இதையெல்லாம் தவிர பத்திற்கும் மேற்பட்ட தீவிரவாத-பயங்கரவாதக் கூட்டங்களுக்கு பலவகைகளில் உதவி வருபவன்[9]. பிறகு அவனுக்கு என்ன இந்தியாவின் மீது, தான் பிறந்த மண்ணின் மீது ஆசை?

 

நம்பிக்கையாளனான ஜிஹாதி ஏன் சாவைக்கண்டு பயப்பட வேண்டும்? இந்நிலையில், கடந்த மே மாதம் 2010 பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அல் காய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் ஒஸாமா பின்லேடனை, அமெரிக்க படையினர் அதிரடியாக சுட்டுக் கொன்றதையடுத்து, தாமும் அவ்வாறு வேட்டையாடப்படலாமோ என்ற அச்சத்தில், தாவூத் கராச்சியிலிருந்து வேறு ஒரு நாட்டிற்கு சென்றுவிட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது. நம்பிக்கையாளனான ஜிஹாதி சாகத்தான் விரும்புவானேத் தவிர, சாவைக்க் அண்டு பயப்பட மாட்டானே? ஆக சாவிலும் இந்தியாவை பாதிக்க விரும்புகிறான். ஆனால் அவன் தொடர்ந்து கராச்சியிலேயே ஐஎஸ்ஐ-யின் உயர் பாதுகாப்பு வளையத்தில் இருந்துவருவதாக கூறப்படுகிறது.  அப்படியென்றால், கராச்சியிலேயே அவனை புதைத்து விடலாமே? இந்நிலையில் தற்போது 56 வயதாகும் தாவூத்திற்கு இரண்டாவது முறையாக மாரடைப்பு வந்ததை தொடர்ந்து அவன், தனக்கு விரைவில் மரணம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் தனது இரண்டாவது மகள் திருமணத்தை, திட்டமிட்டதற்கு ஓராண்டுக்கு முன்னரே கடந்த ஆண்டு 2010 நடத்தி வைத்தான். தாவூத், தனது மூத்த மகளை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாந்தத் மகனுக்கு திருமணம் செய்துகொடுத்துள்ளான். மகனுக்கு, பிரிட்டனை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரது மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளான். இந்நிலையில் சமீப நாட்களாக தாவூத்தின் உடல் நிலை மிக மோசமடைந்துள்ளதாகவும், அவன் 24 மணி நேரமும் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

 

இந்தியாவிற்கு தாவூத் வேண்டுமா? பொதுவாக தேடப்படும் தீவிரவாதி, பயங்கரவாதி, மறைந்து வாழும் குற்றவாளியை உயிருடனோ, பிணமாகவோ பிடித்துக் கொடுத்தால் பரிசு என்றேல்லாம் அறிவிப்பர்கள். இந்நிலையில், தனது இறுதி நாட்கள் நெருங்குவதை உணர்ந்துள்ள தாவூத், தனது மரணத்திற்கு பின்னர் தனது உடலை தாம் தாதாவாக கோலோச்சிய மும்பையிலோ அல்லது தமது பிறந்த ஊரான மும்பையை அடுத்துள்ள ராய்காட் மாவட்டத்தின் கேத் நகரிலோ புதைக்க வேண்டும் என தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது[10].  இது குறித்து மும்பை காவல் துறையின் குற்றப்பிரிவு தலைவர் ஹிமான்ஷு ராஜிடம் இது குறித்து கேட்டபோது, தங்களுக்கும் இது குறித்த நம்பகமான தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்[11]. தாவூத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா, நீண்ட காலமாக பாகிஸ்தான் அரசிடம் கோரி வருகிறபோதிலும், அவன் தங்கள் நாட்டில் இல்லை என்று அந்நாடு மறுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது. பிறகு பிணத்தை இந்தியாவிற்குக் கொடுப்போம் என்றால் என்ன அர்த்தம்?

 

வேதபிரகாஷ்

11-11-2011


[1] என்னுடைய உடல் மும்பையில் புதைக்கப்பட வேண்டும்: தாவூத் இப்ராகிம்

புதுடெல்லி , வியாழன், 10 நவம்பர் 2011

http://tamil.webdunia.com/newsworld/news/national/1111/10/1111110033_1.htm

[5] Zubair Khan, son-in-law of Dawood Ibrahim’s sister Haseena Parkar, is making a film on the life and crimes of the dreaded don which is titled Lakeer Ka Fakir. The film also deals with roles of Karim Lala and Chhota Shakeel and their association with Dawood.

http://searchandhra.com/cinema/a-film-on-dawood-ibrahim-by-his-relative

[6] ஆகஸ்ட் 17, 1997ல் டி-சீரிஸ் குல்ஸன் குமார் சுட்டுக் கொள்ளப்பட்டது, திரைப்படத்துறையினரை கப்பங்கட்டச் சொல்லி பயமுறுத்திய செயல்தான்!

In a breakthrough in the Gulshan Kumar murder case, the city police claimed that Abdul Rauf Dawood Merchant, an aide of the underworld don, Dawood Ibrahim, today “confessed” to having killed the music mughal three years ago.

http://hindu.com/2001/01/10/stories/0210000a.htm

[8] அவனுடையக் கூட்டாளிகள் இன்றும் தமிழ் திரைப்படத்துறையில் தமிழ் நடிகர்களாக, தமிழச்சி நடிகைகளாக மறைந்து வாழ்கின்றனர். பங்கை சேகரித்து அவனுக்குத் தப்பாமல் அனுப்பி வைக்கின்றனர். இதைப் பற்றி எந்த பச்சைத் தமிழனுக்கும் அக்கரையில்லை, கேட்கத் துப்பில்லை.

[9] Dawood is among the 50 terrorists India wants Pakistan to hand over. Apart from his hawala network in India, his involvement is also suspected in providing logistics to the 10 terrorists who attacked Mumbai in 2008.

[10] Zee News reported According to Zee News, the 56-year-old “Karachi-based don”, who has had two massive heart attacks in the past two years, is being monitored round-the-clock by a team of doctors and his family members. However, according to the report, Dawood is already busy planning his end. He has instructed his men to find a suitable place for his burial in Mumbai or in his native town Khed in Ratnagiri district.

http://www.pakistantoday.com.pk/2011/11/dawood-ibrahim%E2%80%99s-%E2%80%98days-numbered%E2%80%99/

[11] Zee News said the Mumbai Crime Branch was also aware of the don’s desire to be buried in India. Himanshu Rai, chief of the Crime Branch, has been quoted as saying, “We have received credible inputs regarding this.”

http://www.pakistantoday.com.pk/2011/11/dawood-ibrahim%E2%80%99s-%E2%80%98days-numbered%E2%80%99/