Posted tagged ‘தாவூத் மியான் கான்’

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (2)

மார்ச் 15, 2011

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்! (2)

திமுக-அதிமுக கட்சிகளுடன் கூட்டணி ஏன்? முஸ்லீம் லீக்குகள் அரசியல் ரீதியில் எத்தனை கட்சிகளாக பிரிந்து இருந்தாலும், பிரிதுள்ளது போல இருந்தாலும், காட்டிக் கொண்டாலும் அவர்களின் அரசியல் நாடகங்கள் வெளிப்படும் என்பதில் சந்தேகம் இல்லை[1]. எனவே அவர்கள் அத்தகைய நாடகங்களை அரங்கேற்றுவதில் வல்லவர்கள் என்பதனை மறுபடியும் நிரூபித்து விட்டார்கள். வருடாவருடம் கட்சி-கூட்டணி மாறிக் கொண்டேயிருப்பது என்ன சித்தாந்தம், அர்த்தம், தருமம் என்று அவர்களிடம்தான் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். மத ரீதியில் திமுக என்றாலும் அதிமுக என்றாலும் காஃபிர்கள் கட்சிதான். ஆக காஃபிர்களுடன் ஏன் கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள் என்பது ஆண்டவனுக்குத் தான் தெரியும் போலும்!

ஒன்று அரசியல் மற்றொன்று மதம்: முஸ்லீம்களுக்கு மதம் தான் முக்கியம், அதாவது இஸ்லாத்தை என்றைக்கும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஆனால், இப்படி அரசியலுக்காக, அவர்கள் நிலைமாறி போகும் போக்கு எதனைக் காட்டுகிறது? மதக்கொள்கைகளை நீர்த்து விடுகின்றனரா அல்லது சமரசம் செய்து கொள்கின்றனரா? இஸ்லாத்தில் அதற்கு இடம் உண்டா? காஃபிர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு காஃபிர்களை ஒழித்துக் கட்டலாம் என்றால், அவ்வாறு கூட்டு வைத்துக் கொள்ளலாம் என்று உள்ளாதா என்ன? கருணாநிதி போன்றவர்களுக்கு செக்யூலரிஸம் என்று பேசினாலும், பி.ஜே.பியுடன் கூட்டு வைத்துக் கொண்டு நன்றாக சந்தோஷமாகத்தான் இருந்தனர். இதே போல மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகள் மதவாதக் கட்சிகளுடன் தாராளமாக கூட்டு வைத்துக் கொண்டு நாடகம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

மதக் கொள்கைகளை சமரசம் செய்து கொள்கிறார்களா, சித்தாந்த போலித்தனமா, என்ன? மக்களுக்கு ஒன்றுமே புரியாமல் இருக்கலாம். ஆக இத்தகைய கட்சிமாறி போக்கு, நிலையிலா அரசியல் தாக்கம், சித்தாந்த போலித்தனம் முதலியவை அவர்களின் பச்சோந்தித்தனத்தை மக்களை ஏமாற்றிவரும் போக்கை, ஏன் நாட்டிற்கு துரோகத்தை செய்யும் முறையினையும் வெளிப்படுத்துகிறது. ஏனெனில், நாட்டின் நலன் முக்கியம் என்றால், அதற்கு எதிராக கூட்டணி கட்சிகளின் கோரிக்கைக்களுக்கு ஒப்புக்கொடு அவ்வாறு தேர்தலில் கூட்டு சேரமாட்டார்கள். அரசியல் நிர்ணய சட்டத்தின் சரத்துகளை மீறும் கோரிக்கைகளை மறைமுகமாக செயல்படுத்த மாட்டார்கள். ஆனால், செய்வதை சொல்வோம், சொல்லியதை செய்வோம் என்று வசனம் பேசி, நாட்டை அப்படி சீரழித்து வரும் அரசியல் கட்சிகளை அடையாளங்கொள்ள வேண்டிய காலம் மக்களுக்கு வந்துள்ளது. ஏனெனில் இத்தகைய அரசிய நாடகங்கள், ஊழல் கோடிகளில் நடந்துள்ள நிலையில் நடக்கின்றன. முதலில் தியாகத்தை செய்து விட்டது போல அறிக்கை விட்டார்கள்.

எங்களால்தான் திமுக- காங்கிரஸ் கூட்டணி பிழைத்தது: முஸ்லீம் லீக்[2]: சென்னை, மார்ச்.9, 2011: நாங்கள் ஒரு இடத்தை விட்டுக்கொடுத்ததால்தான் திமுக-காங்கிரஸ் இடையிலான கூட்டணி முறியாமல் காப்பாற்றப்பட்டது என அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தெரிவித்துள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளிடையே கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டபோது, அக்கட்சிகளின் நலன்விரும்பிகளுடன் தங்கள் கட்சி தொடர்புகொண்டதாக முஸ்லீம் லீகின் தேசியத் தலைவர் இ. அகமது தெரிவித்தார்.தமிழகத்தில் உள்ள முஸ்லீம் லீக் சகாக்களுடன் ஆலோசித்து கருத்து வேறுபாடுகளைக் களைய என்னாலான முயற்சிகளைச் செய்தேன். தமிழக சகாக்களின் தாராளம் காரணமாக என்னால் அதைச் செய்ய முடிந்தது. இக்கட்டான நிலைமையும் முடிவுக்கு வந்தது என அகமது தில்லியில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். தேச நலன் கருதி மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கவும், வலுப்படுத்தவும் தனது கட்சி எப்போதும் முயற்சித்து வருவதாக…………..”, அகமது குறிப்பிட்டார். இப்பொழுது வேறு மாதிரி பேசுகிறார்கள்.

திமுக கூட்டணியில் இருந்தாலும் அதிமுகவை ஆதரிப்போம்! இப்படி அறிவித்தால் கருணாநிதி என்ன செய்வார் என்று பார்க்கிறார்களா? அல்லது பயந்து கொண்டு இன்னொரு தொகுதியைக் கொடுத்து விடுவார் என்று எதிர்பார்க்கிறார்களா? 3 தொகுதிகளைக் கொடுத்து பின்னர் அதிலும் ஒன்றை பிடுங்கிக் கொண்டதால் அதிருப்தி அடைந்துள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் ஒருபிரிவினர் காயிதே மில்லத் பேரனான தாவூத் மியா கான் தலைமையில் தனி அணியாகப் பிரிந்துள்ளனர். இவர்கள் அதிமுகவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளனர்[3]. இந்த நிலையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும், தமிழ் மாநில தேசிய லீக் கட்சியும் கருணாநிதி முன்னிலையில் இணைந்தன[4].
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம் ஆனால் இரட்டை இலையை ஆதரிப்போம் என்றால் என்ன? திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக். இதன் தலைவராக இருப்பவர் காதர் மொஹைதீன். இக்கட்சிக்கு திமுக 3 தொகுதிகளை முதலில் கொடுத்தது. மூன்றிலும் உதயசூரியன் சின்னத்தில் முஸ்லீம் லீக் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முரண்டு காரணமாக பாமக மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளிடமிருந்து தலா ஒருதொகுதியை வாங்கி காங்கிரஸுக்குக் கொடுத்தது திமுக. இது முஸ்லீம் லீக் கட்சியினரிடையே பெரும் மன வருத்தத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. ஏற்கனவே கட்சியின் மகளிர் பிரிவைச் சேர்ந்த பாத்திமா சயத் இதற்கு கடும் எதிர்ப்பும், அதிருப்தியும் தெரிவித்திருந்தார். மேலும் நெல்லை மாவட்ட முஸ்லீம் லீக், தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது[5].

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நிலை என்ன? இந்த நிலையில் தற்போது கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், மறைந்த காயிதேமில்லத்தின் பேரனுமான தாவூத் மியாகான் கட்சிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளார். இன்று காலை மியாகான் தலைமையில் கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் அதிமுக அணிக்கு ஆதரவு தெரிவிப்பது என்றும், அக்கூட்டணியில் இணைந்து போட்டியிடுவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. பின்னர் தாவூத் மியாகான் வெளியிட்ட அறிக்கையில், இஸ்லாமியர்கள் சம உரிமை பெறுவதற்காக காயிதே மில்லத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை தொடங்கினார். இந்த இயக்கம் தோன்றி 63 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனால் பல்வேறு கட்சியினரிடமும் பலர் இந்த கட்சியை அடகு வைத்து விட்டனர். இதனால் முஸ்லிம்களின் உரிமைகள் புறக்கணிக்கப்பட்டு விட்டன. தி.மு.க. அரசு கடந்த 2 ஆண்டுகளில் முஸ்லிம்களுக்காக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குழப்பம் ஏற்பட்டு முஸ்லிம்களுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. 3.5 சதவீத இட ஒதுக்கீட்டால் ஏற்கனவே இருந்ததை விட குறைவான பலன்களே கிடைக்கிறது. எனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அ.தி.மு.க.வை ஆதரிக்க முடிவு செய்துள்ளது”, என்று அவர் கூறியுள்ளார்.

வேதபிரகாஷ்

15-03-2011


[2] தினமணி, எங்களால்தான் திமுக- காங்கிரஸ் கூட்டணி பிழைத்தது: முஸ்லீம் லீக், First Published : 09 Mar 2011 03:53:36 PM IST http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=388118&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=