Posted tagged ‘தாவுத் இப்ராஹிம்’

தாவூதிற்கும், மோடிக்கும் என்ன தொடர்பு?

ஏப்ரல் 14, 2010

தாவூதிற்கும், மோடிக்கும் என்ன தொடர்பு?

  • தாவுத் இப்ராஹிமிற்கும், லலித் மோடிக்கும் என்ன சம்பந்தம்?
  • சசிதரூர் ஏன் மோடியை மிரட்ட வேண்டும்?
  • மோடியை மிரட்டியவுடன், ஏன் தாவூத் (ஷகீல் மூலம்) மோடிக்கு ஆதரவாக சசி தரூரை கொலை செய்வேன் என்று மிரட்டவேண்டும்?
  • சுனந்தா புஷ்கர், துபாயில் “அழகு வேலை” செய்கிறாராம், ஆனால் கோடிகளில் அசையும்-அசையா சொத்துகளை வாங்கி-விற்பதில் வல்லவராம்! அத்தகைய ஆளுக்கு இதில் என்ன விருப்பம்?
  • ஐ.பி.எல் என்பது என்ன, அயல்நாட்டு களவானிகள், கடத்தல்காரர்கள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள்……………..பணத்தை முதலீடு செய்து, இந்ந்தியர்களிடமிருந்து பணத்தை அள்ளிச் செல்லும் குழாயாக ஒபயோகப் படுத்துகிறார்களா?
  • சசி தரூர் என்ற தனி மனிதர் என்னவேண்டுமானாலும் செய்யலாம், அதாவது துபாய்-காஷ்மீர் சுனந்தாவிடம் தொடர்பு வைத்துக் கொள்ளலாம். ஆனால் அவளுக்காக ரூ. 70 கோடி பணத்தை இலவசமாக எப்படி ஐ.பி.எல். கொச்சி நிதிக்கு மாற்ற முடியும்? மாற்றலாம்?
  • இந்திய மக்களை வரி ஏய்த்து, சுரண்டலாமா?

போதை மருந்து விவகாரம் வெளிப்படுகிறது: சசியின் துணையாள் ஜேகம் ஜோஸப் சொலிகிறான், அந்த “IPL commissioner Lalit Modi a convicted drug peddler”, அதாவது, “ஐ.பி.எல். கமிஷனர் ஒரு போதை மருந்து விற்கும் வியாபாரி”!  இதை வெளிப்படையாக CNN-IBN பேட்டியில், “மோடி கோக்கைன் கடத்தலில் சம்பந்தப் பட்டிருக்கிறான்”, என்று சொல்லியிருக்கிறான்.

அரசியல் தொடர்பு: சோனியாவிற்கும், ராகுல் காந்திக்கும் போதைப் பொருள்காரகளின் சம்பந்தம் உள்ளது அறிந்ததே. ஓலஃப் பாமே என்ற ஸ்வீடன் நாட்டு பிரதம மந்திரி அந்த வியாபாரத்தில் பங்கு பிரிப்பதில், அதாவது போதை மருந்து-ஆயுதங்கள் விற்றுத் தருவதில் சொல்லியபடி கமிஷன் சரியாகத் தரப்படாதலால், தனது மனைவியுடன் காலை ‘வாக்க்கிங்” சென்றபோது சுட்டுக் கொல்லப் பட்டான். சோனியாவின் தந்தையைப் பற்றி சொல்லவேண்டாம். அவன் “மாஅஃபியா தலைவன்” என்றே அழைக்கப் பட்டான். சசி தரூர் வலிய காங்கிரஸின் வேட்பாளராக நிறுத்தப் பட்டு, வெற்றிப்பெற வைத்து அமைச்சராக்கப் பட்ட ஆள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் (அதாவது எப்படி கருணாநிதி ஜகன் ரெக்ஸகனை மந்திரியாக்கினாரோ அதுபோல).

நடப்பது கிரிக்கெட்டா, கொலை செய்யும் படலமா?

சூதாட்டம் அம்பலம்: ஊட்டியில் ஐ.பி.எல்., கிரிக்கெட் விளையாட்டை வைத்து நாள்தோறும் சூதாட்டம் நடந்து வருவது, இந்த இளைஞரின் மரணம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிறரிடம் நகை வாங்கி அடகு வைத்து சூதாட்டம் ஆடும் அளவுக்கு, இளைஞர் பட்டாளம் இதில் ஈடுபட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சட்டத்துக்கு புறம்பாக நடந்து வரும் சூதாட்டங்களை போலீசார் தடுத்து, அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே உள்ளூர் மக்களின் வேண்டுகோளாக உள்ளது. ஐபிஎல் கொச்சி அணி விவகாரத்தில் லலித் மோடியுடன் மோதலில் ஈடுபட்டுள்ள வெளியுறவுத்துறை இணையமைச்சர் சசி தரூருக்கு தாவுத் இப்ராகிம் கும்பலிடமிருந்து கொலை மிரட்டல் வந்துள்ளது.

தாவூத்துக்கும் மோடிக்கும் என்ன சம்பந்தம்? தாவூத் கும்பலைச் சேர்ந்த ஷகீல் என்பவரிடமிருந்து தரூருக்கு வந்த எஸ்எம்எஸ்சில் லலித் மோடியுடன் மோத வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து உள்துறை அமைச்சகத்திடம் புகார் செய்துள்ளதாக சசி தரூரின் சிறப்பு அதிகாரியான ஜேக்கப் ஜோசப் தெரிவித்துள்ளார். இதையடுத்து இது குறித்து விசாரிக்க இன்டலிஜென்ஸ் பீரோ அமைப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஐபிஎல் கொச்சி அணியை வாங்கிய ரெண்டஸ்வஸ் நிறுவனத்துடன் தரூருக்குத் தொடர்பு இருப்பதாக ஆரம்பத்தில் அரசல் புரசலாக பேசப்பட்டது. மோடியுடனும் தரூர் நேரடியாகப் பேசி அணியை ரெண்டஸ்வஸுக்கே தருமாறு நிர்ப்பந்தித்தாகவும் கூறப்பட்டது.

காஷ்மீர் கனெக்ஸன்: ரெண்டஸ்வஸ் நிறுவனத்தில் தரூருக்கு நேரடியாக தொடர்பு இல்லை என்ற போதிலும் அவர் தற்போது காதலித்து வரும் காஷ்மீரைச் சேர்ந்த சுனந்தா புஷ்கர் என்பவருக்கு நேரடிப் பங்கு உள்ளது. இந்தத் தகவலை ஐபிஎல் தலைவர் லலித் மோடியே ட்விட்டர் மூலம் வெளியிட்டதையடுத்து அவருக்கும் சசி தரூருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோடி தனது ட்விட்டர் செய்தியில் கூறியுள்ள தகவலின்படி ரெண்டஸ்வஸ் நிறுவனத்தில் கிசன், சைலேந்தர் கெய்க்வாட், புஷ்பா கெய்க்வாட், சுனந்தா புஷ்கர், பூஜா குலாத்தி, ஜெயந்த் கோதல்வார், விஷ்ணு பிரசாத், சுந்தீப் அகர்வால் ஆகியோரை பங்குதாரராக் கொண்ட ரெண்டஸ்வஸ் நிறுவனத்திற்கு 25 சதவீத பங்குகள் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது. மேலும் ரெண்டஸ்வஸின் உரிமையாளர்கள் யார், அதன் பங்குதாரர்கள் யார் யார் என்பது குறித்த விவரங்களுக்குள் செல்ல வேண்டாம், அதை யாரிடமும் சொல்லவும் வேண்டும் என்று தான் மிரட்டப்பட்டதாகவும் மோடி கூறியுள்ளார். இவரை மிரட்டியது தரூர் தான் என்று தெரிகிறது. இந்த விவகாரம் தரூரின் பதவிக்கே உலை வைக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ள நிலையில் இப்போது அவருக்கு தாவூத் ரூபத்திலும் மிரட்டல் வந்துள்ளது.