Posted tagged ‘தாராவீஹ்’

தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் மற்றும் உள்ளூர் ஜமாத்துகளுக்குள் இருந்த சண்டையில் இரண்டு பேர் சுட்டுக் கொலை, நான்கு பேர் காயம்!

செப்ரெம்பர் 7, 2010

தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் மற்றும் உள்ளூர் ஜமாத்துகளுக்குள் இருந்த சண்டையில் இரண்டு பேர் சுட்டுக் கொலை, நான்கு பேர் காயம்!

ரம்ஜான் தாராவீஹ் இரவு தொழுகை நடத்த சண்டை[1]: இது நடப்பது, இந்தியாவில், அதுவும் தமிழகத்தில்! திருவாரூர் மசூதியில் தொழுகை நடத்துவது தொடர்பாக இரு பிரிவினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனால் திருவாரூர் மாவட்டம் தி்ருவிடைச்சேரியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் நிலவுகிறது. குடவாசல் அருகே உள்ள திருவிடைச்சேரியில் ஜமீத் முகைதீன் பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளிவாசலில் இமாமாக இருந்தவர் முகமது இஸ்மாயில் (55). இந்த பள்ளிவாசலில் தொழுகை நடத்துவது தொடர்பாக இரு பிரிவினர் இடையே மோதல் இருந்து வந்தது[2].

Clash over Ramzan Taraweeh night prayers 2010

Clash over Ramzan Taraweeh night prayers 2010

தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் மற்றும் உள்ளூர் ஜமாத்துகளுக்குள் போட்டி-சண்டை[3]: அங்குள்ள 10 குடும்பங்களில், ஒன்று மட்டும்தான் தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் Tamil Nadu Touheed Jamat (TNTJ) என்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களை அங்கிருக்கும் மசூதியில் தொழுகைக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால், இவர்கள் தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்தை சேர்ந்த ஆட்களை வெளியில் இருந்து அழைத்து வந்தார்கள். இதனால், உள்ளூர் ஜாமாத் ஆட்கள், வெளியிலிருந்து வந்த ஆட்களை எதிர்த்தனர்.

தொழுகை செய்வது பற்றிய பிரச்சினை – ஒரு வாதம்: திருவிடைச்சேரியை சேர்ந்த குத்புதீன் என்பவர் வீட்டில் ஒரு பிரிவினர் தொழுகை நடத்துவது வழக்கம். குத்புதீன் வீட்டுக்கு எதிர் வீட்டில் வசிக்கும் இன்னொரு பிரிவை சேர்ந்த இதயதுல்லா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இங்கு தொழுகை நடத்துவதால் தனக்கு இடையூறாக இருப்பதாக அவர் கூறியதால் குத்புதீனுக்கும் இதயதுல்லாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு முன்விரோதம் உருவானது. இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நீடித்து வந்தது

தொழுகை செய்வது பற்றிய பிரச்சினை – மறு வாதம்[4]: திருவிடைச்சேரி கிராமத்தில் உள்ள சில முஸ்லீம்கள் அங்குள்ள ஜமீத் முகைதீன் பள்ளிவாசலுக்குச் செல்லாமல் ரோஸ் பாப்பா (Rose Papa) என்ற தனியார் ஒருவரது இல்லத்தில் தொழுகை நடத்தி வந்தனர்[5]. இது சமூகக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு முரணானது என்று கூறி தனியார் இல்லத் தொழுகையை நிறுத்துமாறு கிராமத்து ஜமாத்தினர் கேட்டுக்கொண்டனர் மேலும் அது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவருமாறு புறக்கணிப்புக் குழுவிற்கு அழைப்பு அனுப்பப்பட்டது. குத்புதீனின் உறவினர் ஹாஜி முகமது (40). இவர் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள குறிச்சிமலையில் வசித்து வருகிறார். தன்னிடம் இதயதுல்லா மற்றும் அவரது தரப்பினர் தகராறு செய்வது தொடர்பாக ஹாஜி முகமதுவிடம் குத்புதீன் கூறினார். இதனால் ஹாஜி முகமது மற்றும் அவரது தரப்பினர் 15 பேர் நேற்று இரவு 3 கார்களில் திருவிடைச்சேரி சென்றனர்[6].

வாதம் முற்றி துப்பாக்கியால் சுடல்: பள்ளிவாசலில் இருந்த இமாம் முகமது இஸ்மாயிலிடம் ஹாஜி முகமது மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இமாமின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக பேசினர். சற்று நேரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே பெரும் கை கலப்பு ஏற்பட்டு மோதலாக மாறியது. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில், ஹாஜி முகம்மது தன்னிடம் இருந்த கைத் துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுடவே, குண்டு பாய்ந்து இமாம் இஸ்மாயில் மற்றும் அஜீத் முகமமது என்ற 60 வயது முதியவர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

கொலை-செய்யப்பட்ட-இருவர்-2010

கொலை-செய்யப்பட்ட-இருவர்-2010

காஃபிர்கள் அங்கு வந்தது காயமடைந்தது எப்படி? சம்பவத்தின்போது அங்கிருந்த காஜா மைதீன் (41), பால்ராஜ் (55), ராமதாஸ் (45), சந்தியாகு (26) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கிச் சூட்டால் பெரும் பதட்டமாகி அங்கு நின்றிருந்தவர்கள் சிதறி ஓடினர். இதைப் பயன்படுத்திக் கொண்டு ஹாஜி முகம்மது மற்றும் அவரது தரப்பு ஆட்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். எஸ்.பி.மூர்த்தி தலைமையில் போலீஸார் திரண்டு வந்தனர். உயிரிழந்த இருவரின் உடல்களும் மீட்கப்பட்டன. காயமடைந்தவர்கள் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

முகம்மதுவின் தம்பி ரபீக் பிடிபட்டார்: துப்பாக்கியால் சுட்டு இரண்டு பேரைக் கொன்று விட்டுத் தலைமறைவான முகம்மதுவை தேடி போலீஸார் அவரது வீட்டுக்குச் சென்றனர். ஆனால் அவர் வீட்டில் இல்லை. வீட்டை சோதனையிட்ட போலீஸார் அங்கிருந்த லைசென்ஸ் இல்லாத 2 கைத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.மேலும் முகம்மதுவின் தம்பி ரபீக்கைப் பிடித்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த திருவிடைச்சேரியில் பெரும் பதட்டம் நிலவுவதால் மத்திய மண்டல ஐஜி கரன் சின்ஹா அங்கு முகாமிட்டுள்ளார்.இது போக தஞ்சை, நாகை, திருவாரூர் எஸ்.பிக்களும் முகாமிட்டுள்ளனர்.


[1] “The clash was over offering Ramzan Taraweeh night prayers” என்று தி ஹிந்து சொல்கிறது. http://www.thehindu.com/news/cities/Chennai/article617879.ece

[2] தட் ஈஸ் தமிள், தொழுகை நடத்துவது தொடர்பாக மோதல்-2 பேர் சுட்டுக் கொலை, திங்கள்கிழமை, செப்டம்பர் 6, 2010

http://thatstamil.oneindia.in/news/2010/09/06/2-shot-dead-thiruvidaichery-group-clash.html

[3] http://www.indianexpress.com/news/Two-killed–four-hurt-in-group-clash/678070

[4] http://www.bbc.co.uk/tamil/news/story/2010/09/100906_mosqueviolence.shtml

[5] http://www.thehindu.com/news/cities/Chennai/article617879.ece

[6] http://www.thehindu.com/news/cities/Chennai/article617879.ece