Posted tagged ‘தாயீப்’

அத்வானி வெடிகுண்டு கொலை முயற்சி – ஒருபக்கம் கைது, மறுபக்கம் ஜாமின், டிஎஸ்பி தாக்கப்படுதல் முதலின….

ஜூலை 11, 2013

அத்வானி வெடிகுண்டு கொலை முயற்சி – ஒருபக்கம் கைது, மறுபக்கம் ஜாமின், டிஎஸ்பி தாக்கப்படுதல் முதலின….

Fakrudhhin-Abdul Rahman-Mohammed Haneefa- Advani plot.full

நீதிமன்றத்தில் சட்டமீறல்கள்: அத்வானியைக் கொலை செய்ய திட்டமிட்ட ஜிஹாதிகளுள் ஒருவன் ஜாஹிர் ஹுஸைன் என்ற குற்றவாளி நீதிமன்றத்தில் செய்த கலாட்டாவால் பரப்பரப்பு ஏற்பட்டது. மாஜிஸ்ட்ரேட் முன்பு கொண்டுவரப்பட்ட அவன் பிளேடினால் தனது கழுத்தை அறுத்துக் கொள்ள முயன்றான். உடனே, போலீஸார் தடுத்து அவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறிய காயத்துடன் அவன் தப்பினான். கடந்த ஏப்ரல் மாதம் கூட இதே மாதிரி தற்கொலை முயற்சியில் அவன் ஈடுபட்டான்[1]. அப்பொழுது தன்னை விடுவிக்குமாறு முறையீடு செய்திருந்தான். ஆனால் நீதிபதி அவனது மனுவை தள்ளுபடி செய்தார்[2].

Fakrudhhin-Abdul Rahman-Mohammed Haneefa

முகமது அனிபா டிஎஸ்பியைத் தாக்குதல் (08-07-2013): திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள கட்டகாமன்பட்டி எடமலையான் கோவில் அடிவாரத்தில் பதுங்கியிருந்த அத்வானி செல்லும் பாதையில் குண்டு வைத்த வழக்கில் முகமது அனீபாவை, டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் திங்கள்கிழமை 08-07-2013 அன்று மடக்கி பிடித்தனர்[3]. அப்பொழுது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்த முகமது அனீபா, டி.எஸ்.பி. கார்த்திகேயன் மீது வீசினார். இதில் டி.எஸ்.பி. கார்த்திகேயன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்[4]. இதனால் அந்த இடத்தில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அவனை மடக்கி பிடித்த போலீசார், அவனிடம் வெடிமருந்து, ஜெலட்டின் குச்சிகள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். வத்தலகுண்டு காவல்நிலையத்தில், தன்னை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும், வெடிமருந்து மற்றும் ஜெலட்டின் குச்சிகள் வைத்திருந்தாகவும், இந்து முன்னணி தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டு தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சி செய்தது உட்பட 5 வழக்குகள் முகமது அனீபா மீது டி.எஸ்.பி. கார்த்திகேயன் புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ளது[5].

Fakrudhhin-Abdul Rahman-Mohammed Haneefa- Advani plot

ஒரு பக்கம் கைது,  மறுபக்கம்  3 பேருக்கு ஜாமின்: மதுரை அலும்பட்டி பாலத்தில் 2011ஆம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி அத்வானி யாத்திரை மேற்கொண்ட போது அவரை கொல்லும் திட்டத்துடன் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குண்டு வைக்க உதவியதாக, 2011 நவம்வர் 1ல், மதுரை நெல்பேட்டை அப்துல்லா, சிம்மக்கல் தைக்கால் தெரு ஆட்டோ டிரைவர் இஸ்மத் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொடுத்த தகவல்படி, இமாம்அலி கூட்டாளிகள் “போலீஸ்’ பக்ருதீன், பிலால்மாலிக் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிந்தது[6]. இவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில், கடந்தாண்டு மார்ச்சில், கூட்டாளி ஹக்கீம் கைது செய்யப்பட்டார்.  இந்தாண்டு மார்ச் 27ல், “போலீஸ்’ பக்ருதீன் சகோதரர் நெல்பேட்டை தர்வீஸ் மைதீன், மதுரை வில்லாபுரம் சையது, குப்புப்பிள்ளை தோப்பு முஸ்தபா கைது செய்யப்பட்டனர். மார்ச் 29ல், குண்டு வைக்க, பைப் வாங்கிக் கொடுத்ததாக, திருநகர் ஜாகீர் உசேன்கைது செய்யப்பட்டார்[7]. தென்காசியில் வடக்கு மவுண்ட் ரோட்டில் வசித்து வந்த முகமது அனீபா மீது இந்து முன்னணி நகர தலைவர் குமார்பாண்டியன் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட மோதலில் அவரது சகோதரர்கள் 3 பேரும் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்குகளிலும் முகமது அனிபா முக்கிய குற்றவாளியாவார்[8].

Mohammed Haneefa arrested - Advani murder plot

குற்றவாளிகள் விஷயத்தில் அரசியல் விளையாட்டு கூடாது: அத்வானியைக் கொண்டு வைத்து கொலைச்செய்ய முயன்றான் என்று காங்கிரஸார் அல்லது நாத்திகக் கட்சியினர் திமுக முதலியன சந்தோஷமாக இருந்து விடமுடியாது. குண்டுவெடிப்பில் தன் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டிருக்கிறார். அது திராவிட, தமிழ்சித்தாந்தங்களிடம் ஊறியிருந்ததால் இன்றளவும் காங்கிரஸாரால் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. திராவிட சித்தாந்திகளுக்கும், காங்கிரஸ்காரர்கள்ளுக்கும் மோதல்கள் இருந்து கொண்டுதான் உள்ளது. அதேபோல இந்திராகாந்தி கொலை செய்யப்பட்ட போது, சீக்கிய தீவிரவாதம் தலைத்தூக்கியது. சீக்கிய படுகொலைகளுக்குப் பின்னர் சீக்கியர் காங்கிரஸின் நிரந்தர எதிரிக்கள் ஆனார்கள். இப்பொழுது, ராகுல் காந்தி சரப்ஜித் சிங்கின் அந்திமக் கிரியைகளில் பங்கு கொண்டதால் மட்டும் ஒட்டு மொத்த சீக்கிய சமூகம் அவர்களுக்கு இழைத்த அநீதிகளை மறந்துவிடப் போவதில்லை. இதற்காக பிஜேபிகாரர்களுகும் சந்தோஷப்பட்ட முடியாது.

November 2011 - BJP demonstrated against terrorism

தொடர்ந்து குற்றவாளிகள் குற்றங்களை செய்வது ஏன்?: குற்றத்தைப் பழக்கமாகக் கொண்டுள்ளவர்களின் (habitual offenders / regular charge-sheeters / involved in multiple offences) இத்தகைய செயல்களை சட்டங்களை நிறைவேற்றுபவர்கள் மட்டுமல்லாது மற்றவர்களும் கூர்ந்து கவனிக்க வேண்டும். தொடர்ந்து கொலைகள் செய்து வருபவன்  சாவதற்கு தயாராக இருக்கிறான் என்பது தெரிகிறது. அதிலும் முஸ்லிம் என்பதால் ஜிஹாதித்துவத்தில் ஊறியப்பிறகு, தியாகி விட்டதால் இனி அதே மனநிலையில் அழிவுகளில் தான் அவன் ஈடுபடுவான். அத்தகைய போக்கு இவர்களில் காணப்படுகிறது. இதனால், மேன்மேலும் போலீஸார் வழக்குகள் போட்டுக் கொண்டிருந்தால் என்ன பயனும் இல்லை. மேலும் கொலைக் குற்றங்களில் ஈடுபட்டுள்னர் என்றறிந்தும் மற்ற முஸ்லிம்கள் கண்டிக்காமல் இருப்பது நோக்கத்தக்கது. அதாவது மற்றவர்களுக்குக் குற்றவாளிகளாக, கிரிமினல்களாக இருந்தாலும் அவர்களைப் பொறுத்த வரைக்கும் “ஜியாதி” மற்றும் “ஷஹீத்” என்ற நிலையில் வைத்து விட்டதால் அமைதியாக இருக்கிறார்கள். இது இந்திராகாந்தி-ராஜிவ்காந்தி கொலையாளிகளை வீரர்களாகக் கருதி வழிபடுவதைப் போன்றதே ஆகும். மாறாக, நீதிமன்ற மறுப்பு, போலீஸ் தடைகளை மீறி அத்தகைய கிரிமினல் குற்றவாளிகளை பத்தாண்டு சிறைவாசம் முடிந்தால் விடுவிக்கவேண்டும் என்று வெளிப்படையான கோரிக்கை வைத்து ஆர்பாட்டம் நடத்துவதையும் காணலாம். இவையெல்லாம் பத்து-பதினைந்து  நாட்களில் நடக்கின்றன.

நடக்கும் நிகழ்சிகள் காட்டுவது என்ன?: பொதுமக்கள், தொடர்ந்து கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்ற செய்திகளைப் படித்து மரத்து போயிருக்கிறார்கள். குண்டுவெடிப்புகள், குரூரக் கொலைகளைக் கூட அடிக்கடிக்காட்டி, பிரபலப்படுத்தி, உணர்ச்சியற்றத் தன்மையினை உருவாக்கி விட்டனர்.

01-07-2013 (திங்கட்கிழமை): வெள்ளையன், இந்து முன்னணி கொலை[9]

04-07-2013 (வியாழக்கிழமை): அத்வானி கொலை முயற்சி வழக்கில் சையது சகாபுதீன், தர்வீஸ் முகைதீன், முஸ்தபா ஆகியோருக்கு ஜாமின் வழங்கப்பட்டது[10].

07-07-2013 (ஞாயிற்றுக்கிழமை): தமுமுக நீதிமன்ற மறுப்பு, தடைகளை மீறி ஊர்வலம், ஆர்பாட்டம்.

08-07-2013 (திங்கட்கிழமை): சிறப்பு புலனாய்வுபிரிவு போலீசார் தென்காசி முகமது அனீபாவை திருமங்கலம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர். அவரை வருகிற 22–ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி பன்னீர் செல்வம் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து முகமது அனீபா சிறையில் அடைக்கப்பட்டார்[11].

கேரளாவில் கம்யூனிஸ்டுகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்திகளுக்கும் அடிதடி, மோதல்கள், கொலைகள் கூட இருந்து வந்தன. அதே போன்ற நிலை இன்று இந்து முன்னணி, பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் முஸ்லிம்கள் இடையே கொலைகள் ஏற்பட்டு வருகின்றன. அதாவது, நேரிடையான மோதல்கள் இல்லாமல், திட்டமிட்ட கொலைகளாக நடந்து வருகின்றன.

குற்றவாளிகளின் மனோதத்துவ அலசல்: சுருக்கமாக, கீழ்கண்ட நிலைகளை இக்குற்றவாளிகளின் போக்கில் காணலாம்:

  • குற்றம் செய்ய மனநிலையை ஏற்படுத்திக் கொள்வது – தூண்டுதல்
  • தொடர்ந்து அதே குற்றத்தை செய்வது – குற்றஞ்செய்ய மனநிலை ஸ்திரமான நிலை
  • சட்டங்களை செயல்படுத்துவர்களைத் தாக்குதல்
  • நீதிமன்றத்திலேயே, நீதிபதிக்கு முன்பாக சட்டமீறல் காரியங்களை செய்வது.
  • தற்கொலை செய்துகொள்ள முயல்வது அல்லது அம்மாதிரி நடிப்பது.
  • “காவலில் இறப்பு” என்ற நிலை உருவாக அழுத்தத்தை ஏற்படுத்துவது.
  • இந்த குற்றவாளிகளுக்கு தொடர்ந்து சட்டரீதியில் ஆதரவு, பாதுகாப்புக் கொடுப்பது.
  • பொய்யான வழக்குகள் போட்டு திசைத் திருப்புவது[12].
  • இக்குற்றவாளிகளின் குடும்பங்களை கவனித்துக் கொள்வது, ஆதரிப்பது, உதவுவது.

ஆகவே, இவையெல்லாம் ஒரே நாளில், ஒரே மாதத்தில், ஒரே ஆண்டில் தீர்மானித்து செயல்படுத்தும் காரியமல்ல. அவ்வாறு இவ்வுலகத்தில் எந்த மனிதனையும் தயார் படுத்து விடமுடியாது. ஏனெனில், எந்த மனிதனும் இறப்பதற்கு தயாராக இல்லை என்பதுதான் உண்மை. அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம் தாம் எவனுக்கும் இருக்கும் ஆனால், மாறாக இறக்கத் தயாராகிரான், தயாராகி விட்டான் என்றால் அது இப்பொழுது காணப்படுகின்ற ஜிஹாதித்துவத்தைத் தான் எடுத்துக் காட்டுகிறது.

வேதபிரகாஷ்

© 11-07-2013


[9] வேலூரில் இந்து முன்னணி செயலாளர் படுகொலை: 5 வெடிகுண்டுகள் பறிமுதல், பதிவு செய்த நாள் –

ஜூலை 02, 2013  at   10:28:57 AM; http://puthiyathalaimurai.tv/five-bombs-seized-in-vellore

வேலூரில் ஹிந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் வெள்ளையன் கொலை செய்யப்பட்ட இடத்தில் 5 வெடிகுண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அவை அனைத்தும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வேலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு பின்புறம், நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஹிந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் வெள்ளையன் படுகொலை செய்யப்பட்டார். தகவலறிந்த காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.வெள்ளையன் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, வேலூரில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனிடையே, வேலூரில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலை அறநிலையத்துறை கையகப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாவட்டம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்த ஹிந்து முன்னணி அழைப்பு அழைப்பு விடுத்திருந்தது. திட்டமிட்டபடி அந்தப் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

[10] இவ்வழக்கில் சையது சகாபுதீன், தர்வீஸ் முகைதீன், முஸ்தபா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.இவ்வழக்கில் தலைமறைவாக இருப்பவர்களுக்கும் எங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இதை விசாரித்த நீதிபதி ஆர். மாலா, மனுதாரர்கள் மூவரும் மறு உத்தரவு வரும் வரை திருச்சி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் (எண் 1) தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

http://dinamani.com/tamilnadu/2013/07/05/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/article1668100.ece