Posted tagged ‘தாடி’

குல்லா போட்டு கஞ்சி குடித்த காபிர்களை கழட்டி விடுவதேன்?

மார்ச் 17, 2013

குல்லா போட்டு கஞ்சி குடித்த காபிர்களை கழட்டி விடுவதேன்?

mulayam-singh-yadavs-iftar-diplomacy-muslims

காபிர்களுடன் உறவு-கூட்டு ஏன், எதற்கு, எப்படி: காபிர்களுடன் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது, இருப்பினும் காபிரை வைத்து காபிரை அழிக்கலாம் என்றால் அவ்வாறான நிலையில் ஓரளவிற்கு நட்பு வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு, முஸ்லீம்கள் இருக்கும் போது, விஷயம் அறிந்தும் அறியாதது போல, இந்திய துரோகிகள், அரசியல் ஆதாயத்திற்காக, ஓட்டுவங்கி அரசியலுக்காக பேரம் பேசி தேர்தலை சந்தித்து வருகின்றனர். அரசாங்கத்தில் இப்தர் பார்ட்டி நடத்துவதிலிருந்து, அரசியல்வாதிகள் தனியாக மற்றும் இஸ்லாம் அமைப்புகளே நடத்தும் நோன்பு விழாக்கள் பல நடந்து வருகின்றன. அத்தகைய காபிர்-மோமின் கூடுதல்களில் நாத்திக, இந்துவிரோத, ஏன் கம்யூனிஸ்ட் போன்றோரும் கலந்து கொள்கின்றனர். அப்பொழுது, குல்லா போட்டுக் கொண்டு கஞ்சி குடிப்பது என்பது ஒரு கலாச்சாரமாகி விட்டது.

Mullah Mulayam and Imam - 2012

முஸ்லீம்களை நம்பும் உபி அரசியல்வாதிகள்: உபியைப் பொறுத்த வரைக்கும் “முல்லா”யம் சிங் யாதவ், முஸ்லீம்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக உள்ளார். காங்கிரஸ்காரர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம், சுன்னத் செய்து கொள்லக் கூட தயாராக உள்ளார்கள். ராஹுல் உபிக்கு போக வேண்டும் என்றால், ஒரு மாதம் முன்னரே ஷேவ் செய்யாமல் இருப்பார். தாடி இல்லாமல் அவரை உபியில் பார்க்க முடியாது. இப்பொழுது கூட, கொலை செய்யப்பட்ட ஜியா உல் ஹக்கின் மனைவி பர்வீன் ஆஜாதைச் சென்று பார்த்துள்ளார்[1]. ஆனால், காஷ்மீரில் கொல்லப்படும் எந்த வீரரின் குடும்பதையோ, மனைவியையோ பார்த்ததாக தெரியவில்லை. அதாவது முஸ்லீம் என்றால், அதிலும் தேர்தல் வருகிறது என்றால் இத்தகைய நாடகங்கள், ஆனால், இந்தியர்களை ஏமாற்றும், துரோகம் இழைக்கும் வேலைகள் என்பதனை மற்றவர்கள் உணர்ந்து கொள்வதில்லை.

Mullah Mulayam and Imam

புகாரி-முல்லா நிக்கா தலாக்கில் முடிந்துள்ளது: இப்பொழுது தில்லி இமாம் மௌலானா சையது அஹ்மது புகாரி, “முல்லா”யம் சிங் யாதவுடனான தம்முடைய உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். இவரது மறுமகன் உமர் அலி கான் (Umar Ali Khan) மற்றும் வாசிம் அஹமது (Waseem Ahmad) தம்முடைய ராஜினாமா கடிதங்களை சனிக்கிழமை அனுப்பியுள்ளனராம். முஸ்லீம்களை கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர், அவர்களைக் கவனித்துக் கொள்வதில்லை என்று குற்றஞ்சாட்டியுளார். இருப்பினும், உறுதியான வாக்கு அளித்தால், தமது நிலையை மறுபரிசீலினை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.[2] எட்டாவா என்ற இடத்தில் ஏப்ரல் 21ம் தேதி, ஒரு முஸ்லீம் கூட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்[3].

 

Rajiv Gandhi-with-Muslim-cap-1990

Rajiv Gandhi-with-Muslim-cap-1990

முஸ்லீம் ஊழல் செய்ய மாட்டாரா?: உபி மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட வாசிம் அஹமது, ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளால், பதவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்[4]. ஆனால், புகாரி அதனை எதிர்க்கிறார். முஸ்லீம் என்பதினால் தான், ஊழல் குற்றச்சாட்டு ஏற்படுகிறது என்று வாதிடுகிறார். அரசியலில் ஊழல் இல்லாவர் என்பது கிடையாது என்ற நிலையில் இத்தகைய வாதமே போலித்தனமாகும்.

 

லல்லு-பாஷ்வான்-குல்லா

லல்லு-பாஷ்வான்-குல்லா

ஆஸம் கானும் ஜெயபிரதாவும்: முலாயம் கட்சியில் ஏற்கெனவே ஆஸம் கான் என்ற முஸ்லீம் அமைச்சர் அடாவடித் தனமாக செயல் பட்டு வருகின்றார் என்பது தெரிந்த விஷயமே. கடந்த தேர்தலின் போது, ஜெயபிரதாவின் மீது அவதூறு ஏற்பட, அசிங்கமான சிடியை வெளியிட்டார் என்று அந்த நடிகையே குற்றஞ்சாட்டியுள்ளார்[5]. அப்பொழுதைய சமஜ்வாதி கட்சியின் பொதுசெயளாலராக இருந்த அமர்சிங் தேர்தல் கமிஷனரிடம் “ஜெயபிரதாவின் நிர்வாண படங்கள் மற்றும் ஆபாசப் படங்கள் அடங்கிய சிடியை ஆஸம் கான் ஆட்கள் விநியோகித்து வருகிறார்கள்”, என்று புகார் கொடுத்தார்[6]. வெளிப்படையாக, அந்நடிகை இந்து என்பதனால் சீட் கொடுக்கக் கூடாது, அதிலும் முஸ்லீம் வேட்பாளருக்கு எதிராக நிறுத்தக் கூடாது என்றெல்லாம் வெளிப்படையாக முலாமிற்கு கண்டிஷன் போட்டார்.

Azam CD - poster of nude Jataprada

புகாரி- ஆஸம் கான் லடாய்: புகாரியின் மறுமகன் நியமிக்கப்பட்டதற்கு, ஆஜம் கான் எதிர்ப்பு தெரிவித்தார். அதுமட்டுமல்லது “புகாரியை முஸ்லீம்கள் தலைவர்” என்று ஏற்றுக் கொள்ளமுடியாது என்றெல்லாம் பேசியுள்ளார்[7]. ஏனெனில் முஸ்லீம் அமைச்சர் பதவியை தனது மறுமகனுக்குக் கொடுக்குமாறு, புகாரி கேட்டுக் கொண்டார்[8]. இதனால்தான், ஆஸம் கான் – புகாரி இவர்களிடம் பெரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது, அதில் முல்லாயம் சிக்கியுள்ளார்[9].

 

Omar Abdullah - Rahul-Mullah-Topi

Omar Abdullah – Rahul-Mullah-Topi

எந்த முஸ்லீம் கூட்டு அதிக ஓட்டு கிடைக்கும்?: போதாகுறைக்கு, இப்பொழுது பிரைலியைச் சேர்ந்த மௌலானா தௌக்கீர் ராஸா என்பவருடன் கூட்டு வைத்துக் கொள்ளலாம் (Maulana Tauqeer Raza of Bareilly, for support in the Lok Sabha elections) என்று பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்[10]. எந்த முஸ்லீம் கூட்டத்துடன் கூட்டு வைத்துக் கொண்டால், அதிக ஓட்டு கிடைக்கும் என்று பார்க்கிறார் போலும்[11]. கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றிப் பெற்றுள்ளதால், இம்முறை இந்த முஸ்லீம் கூட்டினால் வென்று விடலாம் என்றும் கணக்குப் போடுகிறார்[12].

 

வேதபிரகாஷ்

17-03-2013


[2] However, while Maulana Bukhari indicated that he was not averse to another round of talks with Mr. Singh, he said the discussions should be centred around solid assurances.

http://www.thehindu.com/news/national/other-states/maulana-bukhari-severs-ties-with-sp/article4516659.ece

[4] Sources said that the fissures came to the fore after Ahmad was removed from the post of chairman, UP Pollution Control Board (UPPCB), following stinging charges of corruption against him. Though Ahmad was later adjusted in the Civil Defence Council, the shifting allegedly fuelled animosity between Bukhari and Akhilesh Yadav.

http://timesofindia.indiatimes.com/city/lucknow/Bukhari-distances-self-from-SP-kin-quit-posts/articleshow/19011574.cms

[5] Jaya Prada, who is seeking re-election from Rampur constituency in Uttar Pradesh, alleged, “they (Khan and supporters) have released my CDs and posters just to scandalize my image”. “I am yet to see the content of the CDs but the posters released by them are very bad in taste, damaging my reputation. I am approaching the Election Commission to check this sort of campaigning,” she said.

http://articles.timesofindia.indiatimes.com/2009-05-11/india/28155645_1_azam-khan-rampur-jaya-prada-posters

[6] Samajwadi Party general secretary Amar Singh filed a complaint with the Election Commission charging SP rebel Azam Khan with distributing ‘nude’ photographs and obscene CDs of actor and Rampur candidate Jaya Prada.

http://www.dnaindia.com/india/report_seedy-cd-amar-wants-to-get-azams-scalp_1255500

[7] In April 2012, Bukhari entered into a murkier spat with minority affairs minister Azam Khanwho questioned the Imam’s claim of being a “Muslim leader”. It all started after Bukhari’s son-in-law Umar was nominated by SP as its candidate in the Legislative Council. Azam was peculiarly against Umar citing his failure during the assembly elections. Mulayam tried to pacify Bukhari, who, however, remained unmoved and retaliated by lambasting the SP of relying too much on Azam, while leaving nothing important for others.

http://timesofindia.indiatimes.com/city/lucknow/Bukhari-distances-self-from-SP-kin-quit-posts/articleshow/19011574.cms

காஷ்மீர் ஜிஹாதிகளின் அனைத்துலக தீவிரவாத மையமாகிறதா?

ஒக்ரோபர் 24, 2011

காஷ்மீர்  ஜிஹாதிகளின் அனைத்துலக தீவிரவாத மையமாகிறதா?

   


பள்ளி-கல்லூரி மாணவர்கள் ஜிஹாதில் ஈடுபடுவது: இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் சிமி முதலியன தடை செய்யப் பட்ட பிறகு, பல அவதாரங்களில் செயல்பட்டு வருகின்றன. அரேபிய நாடுகளில் மக்களாட்சி என்ற கொள்கையில் ஈர்க்கப்பட்டு, முஸ்லீம்களே வீதிகளில் வந்து போராடி வருகின்ற நேரத்தில், எங்கே தங்கள் செல்வாக்கு போய்விடுமோ என்ற பயத்தில், மென்மையான இலக்குகளில் ஒன்று என்று கருதப்படும் இந்தியாவில் தமது குண்டு வெடிப்புகளை அவ்வப்போது, ஜிஹாதிகள் செய்து வருகின்றனர். அத்தகைய அந்நியநாட்டு ஜிஹாதிகள் “இந்தியன் முஜாஹிதீன்” என்ற பெயரில் கடந்த ஆண்டுகளில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தி, ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை ஈவு-இரக்கம் இல்லாமல் கொன்று குவித்தனர். “உள்ளுக்குள் வெடித்து சிதறவைக்கும் வெடிகுண்டு வகையில் குண்டு”களைத் தயாரிப்பது, குண்டுகளை தேர்ந்தெடுத்த இடங்களில் வைப்பது, டைமர் மூலம் வெடிக்க வைப்பது, ஊடகங்களுக்கு இ-மெயில் அனுப்பித் தெரிவிப்பது முதலிய செயல்பாட்டினை அதில் காணலாம். இருப்பினும், இத்தகைய தீவிரவாத-பயங்கரவாத செயல்களில் சிறுவர்கள்-இளைஞர்கள் ஈடுபட்டு வருகிறார்களே என்று முஸ்லீம் சமூகத்தில் உள்ள பெரியவர்கள் கண்டிப்பதாகவோ, தடுப்பதாகவோ தெரியவில்லை. ஆனால், சில இயக்கங்கள் அவர்களை தேர்ந்தெடுத்து, ஊக்குவித்து, குடும்பதிலிருந்து பிரித்து, மற்ற ஆசைகளைக் காட்டி அத்தகைய செயல்களில் ஈடுபடுத்தி வருவதைக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் ஜிஹாதிகளால், தாலிபான்களால் உபயோகப்படுத்தப் படும் அதே முறையை, பயிற்சியை அவர்களுக்கு அளிக்கிறார்கள்.

முஸ்லீம் அடையாளங்களை மறைத்து செயல்படுவது: கசாப்பின் வேஷத்தைப் பற்றி முன்பொரு பதிவில் விளக்கியிருந்தேன். அவன் அழகாக மழித்துவிட்டு / சேவ் செய்துவிட்டு, நீல நிறம் ஜீன்ஸ்-சர்ட் போட்டுக் கொண்டு, நெற்றியில் குங்குமம், கையில் கயிறு சகிதம் வந்து, வழியில் உள்ளவர்களிடம் “நமஸ்தே” என்று குசலம் விசாரித்து, பிறகு தான், தன்னுடைய குரூர உருவத்தைக் காட்டி சுட்டுக் கொள்ள ஆரம்பித்தான். அதே முறை தான் காஷ்மீரத்தில் சில தீவிரவாதிகளைப் பற்றி விசாரித்தபோது அம்முறை அங்கும் செயல்படுத்தப் படுவதைக் காணலாம்.அதனால் தான்  இக்காரியங்களில் இளைஞர்கள் மற்றும் இளைஞ்சிகள் பயன்படுத்தப் படுகின்றனர். அதிலும் குறிப்பாக படித்தவர்கள், தாடி-மிசை-குல்லா என்று இஸ்லாத்தை அடையாளம் காட்டாத, அவையெல்லாம் இல்லாமல், அழகாக ஜீன்ஸ்-குள்ளசர்டுகளைப் போட்டுக் கொண்டு ராஜா, தேவ் ….. போன்ற இந்து பெயர்களையும் சேர்த்துக் கொண்டு செயபட்டு வருகிறார்கள். அதற்கு முன்பு, அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு, பயிற்சி கொடுக்கப் பட்டு, ஜிஹாதி என்ற “புனிதப் போரை” நடத்த மூளைசலவை செய்து தயார்படுத்துகின்றனர்.

இ-மெயில்களில் விளையாடும் இளம் தீவிரவாதிகள்: இ-மெயில்கள் மூலம் திசைத்திருப்ப அல்லது சாட்டரீதியாக வழக்குகளை பலமிழக்க வேண்டுமென்றே பல இடங்களிலிருந்து இ-மெயில்கள் அனுப்பப்படுவது, அதற்கு ஊடகங்கள் துணைபோவதும் தெரிய வந்துள்ளது. சமீபத்தில் சுப்ரீக் கோர்ட் வளகத்தில் குண்டு வெடித்த பிறகு பல இ-மெயில்கள் அனுப்பப்பட்டன. இரண்டாவது மற்றும் நான்காவது இ-மெயில்கள் கொல்கத்தாவிலிருந்து ஒரு டிவி செனலுக்கு Chottuminaliayushman@gmail.com என்ற பெயரில் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது[1]. அதே நேரத்தில் இரண்டாவது இ-மெயில் கிஸ்த்வார், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலிருந்து வந்தது என்றும் செய்தி வந்துள்ளது[2]. இன்னொரு இ-மெயில் அஹமதாபாதிலிருந்து “சோட்டு” [Chhotoo Minani Ayushman[3]] என்ற பெயரில் அனுப்பட்டது[4]. மூன்றாவது இ-மெயில்சஹீத் அலி ஹூரி என்ற பெயரில், இந்தியன் முஜாஹிதீன் தரப்பில் URL|killindian@yahooID என்ற அடையாளத்தில் அனுப்பப்பட்டுள்ளது[5]. இரண்டு இடங்களிலிருந்து வந்ததாக உள்ள இ-மெயில்களை ஆராய்ந்தபோது, அவை ஆசம்கர், உத்திரபிரதேசம் மற்றும் காக்ஸ் பஜார், பங்களாதேசம் என்ற ஊர்களிலிருந்து வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. சிட்டகாங் மற்றும் காக்ஸ் பஜார் ஹுஜியின் பயிற்சி முகாம்கள் இருக்கும் இடங்கள் ஆகும். இதிலிருந்து தான், ஹுஜியின் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டது[6].

எட்டாவது படிக்கும் அமீர் அப்பாஸ் ஹுஜியின் சார்பாக இ-மெயில் அனுப்பினான்: டில்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் கடந்த மாதம் செப்டம்பர் 7ம் தேதி அன்று நடந்த குண்டு வெடிப்பில் 15 பேர் இறந்தனர்[7]. இந்த வழக்கில் சிறப்பு புலனாய்வுப்பிரிவு காவல்துறையினர் [The National Investigation Agency (NIA)] தீவிர விசாரணை நடத்தி காஷ்மீரைச் சேர்ந்த அமீர் அப்பாஸ் தேவ் என்ற 8- ஆம் வகுப்பு மாணவன் உள்பட 3 பேரை அக்டோபர் 7ம் தேதி கைது செய்தனர். கைதான மாணவன் அமீர் குண்டு வெடிப்பு பற்றிய தகவல்களை பத்திரிகை அலுவலங்களுக்கு ஹுஜியின் சார்பாக [Bangladesh-based Harkat-ul-Jihad-e-Islami (HuJI)] இ-மெயில் அனுப்பியது தொடர்பாக அவனை காவல்துறையினர் கைது செய்தனர்[8]. கைதான மாணவர் அமீர் அப்பாஸ் தேவ் நீதிமன்ற உத்தரவின்படி நீதிமன்ற காவலில் காவல்துறை விசாரணையில் இருந்து வருகிறார்.  இதற்கிடையே மாணவனின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் அவனிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியது இருப்பதால், அவனுக்கு காவலை நீட்டித்து தரவேண்டும் என்று சிறப்பு பாதுகாப்பு படையினர் நேற்று அவனை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து சிறப்பு காவல்துறையினரின் கோரிக்கையை ஏற்று மாணவன் அமீரின் நீதிமன்ற காவலை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.எஸ்.ஷர்மா 7 நாட்கள் நீட்டித்து அதாவது வரும் 14- ஆம் தேதி வரை காவல்துறை காவலில் விசாரிக்க அனுமதி அளித்தார்.

   

திட்டமிட்ட யுனானி மருத்துவர் காஷ்மீரிமாணவர் வாசிம் அக்ரம் மாலிக்[9]: இந்த நிலையில், காவல்துறை விசாரணையில் டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டு வந்த வங்காளதேசத்தில் யுனானி மருத்துவக்கல்லூரியில் படித்து வரும் காஷ்மீரி மாணவர் வாசிம்அக்ரம் மாலிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. செப்டம்பர் 7 அன்று வாசிம் டில்லியில் இருந்துள்ளான்[10]. அதைத்தொடர்ந்து அவனை கைது செய்யும் நடவடிக்கையில் அந்நாட்டு காவல்துறையினருடன் தொடர்பு கொண்டு சிறப்பு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து மருத்துவக்கல்லூரி மாணவரை இந்தியா-வங்காள தேச எல்லையான டாகா அருகே அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்து, இந்திய பாதுகாப்பு படையினரிடம் நேற்று ஒப்படைத்தனர்.

   

வீட்டில் மொபைல் போன்கள் ஆவணங்கள் சிக்கின: இதில், முக்கிய மூளையாக செயல்பட்ட கிஷ்த்வாரைச் சேர்ந்த இளைஞர் வாசிம் அகமதுவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கிடைத்த தகவல்கள் அடிப்படையில், தேசிய புலனாய்வு அமைப்பினர், சிறப்பு விமானம் மூலம் நேற்று முன்தினம் மாலை ஜம்முவுக்கு வந்தனர். அன்கிருந்து கிஷ்த்வாருக்கு ஹெலிகாப்டரில் சென்று, வாசிம் அகமது வீட்டில் சோதனை நடத்தியபோது. மூன்று மொபைல்போன்கள், மற்றும் சில ஆவணங்களைக் கைப்பற்றினர்[11]. குறிப்பாக பணம் பட்டுவாடா செய்ய விவரங்கள் அடங்கிய ஆவணங்கள் சிக்கின[12]. இவற்றுக்கும், டில்லி ஐகோர்ட் குண்டு வெடிப்பிற்கும் முக்கிய தொடர்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, விரைவில் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் பற்றிய முக்கிய விவரங்கள் ஓரிரு நாளில் வெளிவரும் என தெரிகிறது. மேலும், இதுவரை நடந்த விசாரணையில், இந்த குண்டுவெடிப்பில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பிற்கு தொடர்பு உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது[13]. இருப்பினும் வாசிம் அக்ரத்தின் பெற்றோர் அவன் குற்றமற்றவன் என்று வாதிடுகின்றனர்[14]. இரண்டு பேர்களில் யார் இ-மெயில் அனுப்பியது என்று என்.ஐ.ஏவால் சொல்லமுடியவில்லை என்றும் வாதம் உள்ளது[15].

   
   

ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதி அஷர் அலி சொன்ன விவரங்கள்: டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு தீவிரவாதிகளுடன் நேரடியாக தொடர்பு வைத்திருந்த பாகிஸ்தானை சேர்ந்த அவரிடம் பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்த அஷர் அலி என்பவர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடையவர் என்று காவல்துறையினரிடம் அக்ரம் தெரிவித்தார். அவர் தற்போது காஷ்மீர் மாநிலத்தில் கோத்பால்வால் சிறையில் உள்ளார். அவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அஷர் அலியிடம் விசாரித்தபோது, வாசிம் அக்ரமின் சகோதரன் ஜுனைத் என்பவனும் தீவிரவாத குழுவில் உள்ளான் என்று தெரிவித்தான். படித்துக் கொண்டிருந்த அவன் திடீரென்று காணாமல் போய்விட்டதால், அவனது பெற்றோர் போலீஸாரிடம் புகாரும் கொடுத்துள்ளனர்[16]. இப்படி இரண்டு மகன்களும் தீவிரவாதத்தில் ஈடுபட்டிருக்கும் போது அவர்கள் குற்றமற்றவர்கள் என்று வாதிடுவது எப்படி என்று தெரியவில்லை[17].

பல காதலிகளுடன் பேசிக் கொண்டே, ஜிஹாதியைப் பற்றியும் படித்த வாசிம் அக்ரம் மாலிக்: வாசிம் அக்ரம் மாலிக்கிடம் போலீஸார் விசாரித்தபோது அவன் சொன்ன விவரங்கள், எவ்வாறு இளைஞர்கள் ஜிஹாதிகளால் மூலைசலவை செய்யப்படுகிறது என்று தெரிகிறது. துப்பாக்கியை எடுத்துக் மொண்டு காஷ்மீர் காடுகளில் திரிந்து தான் ஜிஹாத்தில் ஈடுபட வேண்டும் என்பதில்லை. பல கார்ல்-ஃபெரெண்டுகளுடன் / பண் நண்பர்கள் / காதலிகள் ஃபேஸ்புக்கில் ஒரு கம்ப்யூட்டரில் பேசிக்கொண்டே, இன்னொரு கம்ப்யூட்டரில் அல்லது வின்டோவில் ஒசாமா பின் லேடன், அயம் அல் ஜவஹிரி, அன்வர் அல் அவ்லகி போன்ற ஜிஹாதி தலைவர்களைப் பற்றியும் விவாதிக்கும் திறன் கொண்டவன் என்று விளாக்கினான்[18]. அதாவது மனத்தை எவ்வாறு மாற்றி, பதப்படுத்தி, சித்தாந்த ரீதியில் தாங்கள் செய்வது ஒன்றும் தவறில்லை என்ற நிலைக்குக் கொண்டு வந்து, பிறகு குண்டுகளை வைத்து, வெடிக்கப் பயிற்சிக் கொடுக்கப்படுகிறது[19]. ஆகவே, முஸ்லீம் பெற்றோர்கள், பொறுப்புள்ள பெரியோகள் இவ்வாறு முஸ்லீம் இளைஞர்கள் மாறுவதை கண்டு பிடித்து தடுக்க வேண்டும், ஏனெனில் நாளைக்கு அவர்கள், தங்கள் சமூகத்தையே அழிக்க முற்பட்டாலும், முற்படலாம். அதாவது “ஜிஹாதி” முஸ்லீம்களுக்குள் கூட நடக்கலாம். யார் பெரிய ஜிஹாதி என்ற போட்டி வரலாம். அப்பொழுது எல்லோருடைய கதியும் அதோ கதிதான்.

குண்டு வெடிப்பில் மூன்று பேருக்கு தேடுதல் நோட்டீஸ்: ஜுனைத் அக்ரம் மாலிக் (19) வாசிம் அக்ரமின் தம்பி, ஷகிர் ஹுசைன் ஷேக் என்கின்ற சோடா ஹாஃபிஸ் (26), மற்றும் அமீர் அலி கமல் (25) என்ற மூவருக்கு தேடுதல் பிடிப்பு அறிக்கை அனுப்பப்படுள்ளது. மூன்றாமவன் 2005லிருந்து, காஷ்மீரத்தில் தீவிரவாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறான்[20]. ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் ஏற்கெனெவே காஷ்மீர் வழியாக, பங்களாதேசத்துடன் இணைப்பு ஏற்படுத்தி, பிறகு தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் இணைப்பு ஏற்படுத்த வேண்டும் என்பது தான் அவர்களது திட்டம், இதற்கு முஸ்லீம் நாடுகள் அமோகமாக ஆதரவுடன் உதவி வருகின்றன. மேற்காசியாவில், ஜனநாயகம், குடியரசு போன்ற ரீதியில் முஸ்லீம்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், தென்கிழக்காசிய அடிப்படைவாதிகள் அவர்களுக்கு உற்சாகத்தைக் கொடுப்பதாக உள்ளது. குறிப்பாக இந்தோனேசிய பயங்கரவாதம், தீவிரவாதம் வெளிப்படையாக, ஆனால், திறமையாக வேலை செய்து வருகின்றது. இதற்கு ஆதரவும் இருப்பதால், அதன் மூலம் தமது ஆதிக்கத்தைப் பெருக்கிக் கொள்ள முயல்கின்றனர்.

வேதபிரகாஷ்

24-10-2011


[1] The second and the fourth Indian Mujahideen (IM) e-mails in the Delhi High Court blast case have been traced to Kolkata. The e-mails were sent from Chottuminaliayushman@gmail.com to a TV channel.

http://ibnlive.in.com/news/delhi-blast-two-im-emails-traced-to-kolkata/183773-3.html

[2] A second unverified email received today by different media organisations allegedly from Indian Mujahideen said that the group takes responsibility for Wednesday’s Delhi High Court blast in which 12 people were killed and over 76 were injured. Yesterday, HuJI, an outlawed  terrorist group with a base in Pakistan took responsibility for the blast. The mail was traced to a cyber cafe in Kishtwar, Jammu and kashmir

http://www.hindustantimes.com/Read-Indian-Mujahideen-mail-claiming-Delhi-blast/Article1-743144.aspx

[4] Investigators were groping for leads on Wednesday’s blast at Delhi High Court even as an email was sent to a TV channel claiming that the attack was carried out by Indian Mujahidin and not HuJI and threatening attacks on shopping complexes on Tuesday (13-09-2011). The email sent by one Chhotu, an alleged IM operative, was traced to Ahmedabad.

http://articles.timesofindia.indiatimes.com/2011-09-09/india/30134439_1_huji-mail-im-emails-new-email

[5] Third email after Delhi blast ‘decoded’ Earlier, the Delhi Police claimed to have decoded the third email sent after the Delhi High Court blast. This email sent by someone claiming to be Saeed Ali Al Hoori of Indian Mujahideen from aURL|killindian@yahooIDclaimed the next attack would be at 1.8.5.13.4.1.2.1.4. But this is more like a kindergarten riddle: read A for 1, H for 8, E for 5 and you have Ahmedabad. Read more at: http://indiatoday.intoday.in/story/delhi-hc-blast-third-email-warns-of-attack-in-ahmedabad/1/150641.html

[6] In what is viewed as a positive lead, agencies are probing two calls made on the evening of the blast from two different places in Uttar Pradesh to Bangladesh. Highly placed sources said they have managed to track calls made from Pilkhuwa and Azamgarh in UP to Cox’s Bazar and Chittagong in Bangladesh.Both these calls were made from a PCO between 5 pm and 6 pm on the day of the blast. Both Chittagong and Cox’s Bazar have Harkatul-Jihad al-Islami (HuJI) training camps and it is in these camps that some key IM members are said to have taken refuge.

[7] வேதபிரகாஷ், கத்தியிலிருந்துகுண்டுவெடுப்புவரைமாறிவரும்ஜிஹாதின்தன்மை!, https://islamindia.wordpress.com/2011/09/11/transformation-of-jihadi-terror/

[8]

[12] Looking for some ‘concrete’ evidence connecting the ‘missing’ links in the Delhi High Court blast case probe, the National Investigation Agency (NIA) has seized three mobile phones and some documents, including papers relating to money transaction, from residence of one of the accused Wasim Ahmed Malik in Jammu and Kishtwar.

[15] Unfortunately, the absurdity of the NIA’s allegations against Mr Malik is only symptomatic of its pathetic handling of the probe into the blast. Even when the agency arrested Abid Hussain and Amir Abbas – the two boys from Kishtwar who allegedly sent the email claiming responsibility for the attack – it provided only sketchy details, failing to pinpoint which of the two had sent the email.

Read more at:http://indiatoday.intoday.in/story/delhi-hc-blast-probe-nia-claim-questionable/1/154392.html

[16] According to sources, NIA officials had recently quizzed Azhar and found that Wasim’s teenaged brother Junaid had been initiated into terrorism. Junaid allegedly disappeared a year ago and his family has lodged a missing person report. Intelligence agencies suspect that Junaid has been operating from somewhere in the Kashmir Valley.

[18] For Wasim, the idea of jehad is not picking up a gun and fighting in the jungles of Jammu and Kashmir; he is highly radicalised but without overt symbols attached to it. He can discuss his multiple girlfriends with as much ease as he can discuss Osama bin Laden, Ayman al Zawahiri and Anwar al Awlaki.He has no qualms about opening Facebook in one window and chatting with girlfriends and simultaneously reading about international jehad in the second window on his computer,” said a source who is privy to his interrogation details.

http://www.hindustantimes.com/India-news/NewDelhi/Malik-believed-in-action-did-recee-of-HC-himself/Article1-760830.aspx

[20] The fugitives include 19-year-old Junaid Akram Malik, younger brother of Wasim Akram Malik. Wasim, a medical student in Bangladesh, is presently in NIA custody in Delhi. The other two are Shakir Hussain Sheikh alias Chota Hafiz (26) and Amir Ali Kamal (25). While Sheikh has been active in the Kashmir Valley since 2005, Kamal has been operating since 2008.

http://timesofindia.indiatimes.com/india/NIA-issues-wanted-notice-for-3-Hizbul-terrorists-in-Delhi-HC-blast-case/articleshow/10446851.cms

முகத்திரையால் பெண்ணுக்குப் பிரச்சினை என்றால், தாடியால் ஆணுக்குப் பிரச்சினை போலும்!

மே 16, 2010

முகத்திரையால் பெண்ணுக்குப் பிரச்சினை என்றால், தாடியால் ஆணுக்குப் பிரச்சினை போலும்!

Maulanareleasedstory216.jpg

தாடி வைத்த ஆணும், அரபு நாட்டிலிருந்து வந்த பெண்ணும்: நூருல் ஹூடா என்ற தியோபந்த் இஸ்லாமிய பண்டிதர் இங்கிலாந்தில் ஒரு கருத்தரங்கத்தில் பங்கு கொள்ள விமானத்தில் உட்கார்ந்து கொண்டராம். செல்-தொலைப்பேசியில் யாருடனோ பேசினாராம். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தவருக்கு, இத்தனைக்கும் அவர் எமிரைட்டிலிருந்து வந்துள்ள ஒரு பயணி,  அதுவும் பெண், அவர் பேசியதிலிருந்து சில வார்த்தைகளும் [ஜிஹாத், முஜாஹித்தீன், மதரஸா…………], அவரது உருவத்தையும் கண்டு பயந்து போய், விமானத்தில் உள்ளவர்களிடம் ரகசியமாக விஷயத்தைச் சொல்ல, அவர்கள் போலீஸாரிடம் புகார் செய்து விட்டாராம்.

மௌலானா பெண்ணின் பக்கத்தில் உட்காரலாமா? பெண்கள் வேலைக்குப் போகக் கூடாது என்றுதானே இந்த மௌலானாக்கள் ஃபத்வா விடுகிறார்கள்? பிறகு, எப்படி பெண்கள் பக்கத்தில் ஜாலியாக உட்கார்ந்து கொண்டார்? அத்தகைய ஆசாரம் கடைபிடிக்கும் போது, வேறு இருக்கையில் உட்கார்ந்து கொண்டிருக்கலாமே? உட்கார்ந்துவிட்டு, ஏன் ஜிஹாதைப் பற்றியெல்லாம் செல் போனில் (suspicious cell phone call) பேச வேண்டும்? அதுவும் அந்த அமீரகப் பெண்ணிற்கே சந்தேகம் வரும் வகையில், அதுவும், இந்த ஆள் நிச்சயமாக ஒரு தீவிரவாதியாக இருக்கக் கூடிய நிலையில் உள்ளார் (potential terrorist) என்ற அளவில், ஏன் நினைக்க வைக்க வேண்டும்?

A fellow passenger on the flight felt Huda, who is bearded and was wearing a skull cap was a potential terrorist after he made, what she felt was a suspicious cell phone call.

போலீஸாரிடம் சரியாக சொல்லியிருக்க வேண்டியதுதானே? போலீஸார் விசாரித்த போதும் அவர் அவ்வாறே ஏதோ கூறியதால், சந்தேகப் பட்டு, விசாரித்து, வழக்குப் போட்டு திஹார் ஜெயிலில் அடைத்து விட்டார்களாம். ஜாமீனில் வெளியில் விட முடியாதபடி வழக்கு பதிவும் செய்து விட்டார்களாம்.

Maulana-creates-potential-terrorist
Maulana-creates-potential-terrorist

இது ஏதோ செக்யுலார் பிரச்சினை என்று நினைத்தால், இப்பொழுது இதை மதரீதியிலான விளக்கத்தைக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்த பிடிபட்ட மௌலானாவே சொல்வது,

தாடி வைத்துக் கொண்டு, முஸ்லிம் தொப்பிப் போட்டுக் கொண்டாலே சந்தேகம் படுகிறார்கள். நான் மதரஸாவில் பணி புரிகிறேன், மதரஸா வைத்துள்ளேன்……………..என்றால் போச்சு……………….உடனே தீவிரவாதி என்று முத்திரைக் குத்தி விடுகிறார்கள்“!

உடனே ஊடகக்காரர்கள் சொல்லிவைத்தால் போல, ஒரு ஓய்வு பெற்ற ஒரு துணைவேந்தரைப் பிடித்துக் கொண்டு வந்து, அவரது கருத்தைக் கேட்கிறர்கள். ரூப்ரேகா வர்மா என்றவர் சொல்கிறார். ஏன் ஸபானா ஆஸ்மியிடமோ, அந்த செதல்வாதிடமோ கேட்வில்லை என்று தெரியவில்லை:

மத-உணர்வுகள் மற்றும் “இப்படித்தான் இருப்பார்கள்” (stereotypes) என்ற எண்ணமும் மனங்களில் பதிந்திருக்கும்போது, அத்தகைய சின்னங்களுடன் வரும் நபரைப் பார்த்தால், அவ்வாறே எண்ணத் தோன்றுவது (தோன்றாதது) அந்த நபருடைய எதிர்கால அதிருஷ்டத்தைப் பொறுத்துதான் உள்ளது. ஒருவேளை நீங்கள் கைது செய்யப் படலாம், அவ்வாறே நடத்தப் படலாம்” என்றெல்லாம் விளக்கமும் அளித்தார்!

கம்யூனிஸ்ட்காரர்களும் சேர்ந்து வக்காலத்து வாங்க வந்து விட்டார்கள். “இந்த கைதானது சட்டங்களை அமூல் படுத்தும் அதிகார வர்க்கத்தினரிடம், சிறுபான்மையினற்கு மீதான தப்பெண்ணம் உள்ளதை எடுத்துக் காட்டுகிறது“, இன்று விளக்கம் அளித்துள்ளனர்!

குல்லா போட்டவர்களை எல்லாம் சந்தேகப் பட்டதில்லையே? சரிதான், ஆனால், ஏன் அந்த ‘அல்லா-குல்லா” போட்டவர்களையெல்லாம், தீவிரவாதி என்று கருத வேண்டும்? இந்தியாவில் பெரும்பாலான அரசியல்வாதிகள், அத்தகைய குல்லா போட்டுக் கொண்டு தான் கஞ்சி குடித்து வருகின்றனர். அப்பொழுது எந்த பெண்ணும் சந்தேகப் பட்டதாகத் தெரியவில்லையே?ஏன் அவர்களது மனைவிமார்களே வேறுவிதமாக நினைத்ததில்லையே? இந்த தடவை அன்பழனுக்காக, அந்த கிருத்துவ பாதிரி, விஷேஷமாக ஒரு குல்லா வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தாரே, அதைத்தானே “இனமான பேராசிசியர்” போட்டுக் கொண்டு கஞ்சி குடித்து, ஆனால் போட்டொ எடுக்கும் போது எடுத்துவிட்டார் [அப்பொழுது பயந்து விட்டார் போலும்]

குல்லா போட்ட கருணாநிதியின் படங்கள் மறையும் ரகசியம் இதுதானோ: சாதாரணமாக, குல்லா போட்ட அரசியல்வாதிகளின் படங்கள், இணைதளங்களினின்று எடுத்துவிடலாம், ஆனால், கருணாநிதி குல்லா போட்ட படங்கள் எல்லாம் மறைந்து விட்டன? இதன் ரகசியம் என்ன என்று புரியவில்லை! உண்மையில் கருணநிதியின் “குல்லா போட்ட” படங்கள்தான் நிறைய இருந்தன. ஆனால் இன்று ஒன்றுகூட கிடைப்பதில்லை.

குல்லா போட்டு கஞ்சி குடித்தால் பிரச்சினை இல்லை, ஜிஹாத் பேசினால் தான் பிரச்சினை:  ஏனெனில், குல்லா போட்டு, கஞ்சி குடித்து, இந்து மதத்தைப் பற்றி அவதூறு பேசி சென்று விடுவதால், முஸ்லீம்களுக்கு பிரச்சினையே இல்லை போலும், ஊடகக் காரர்களுக்கும் செமத்தியான விருந்துதான், ஆகையால், அவர்களும் இதுவரைக் கண்டு கொள்ளவில்லை போலும். அப்பொழுது அந்த “ஸ்ட்ரியோ-டைப்” வசனங்கள் எல்லாம் வரவில்லை, எந்த துணைவேந்தரும் வந்து இத்தகைய விளக்கம் கொடுக்கவில்லை!  ஆகவே, இங்கே அந்த மௌலானா, ஜிஹாத் பேசியதால் தான் அந்த பிரச்சினையே வந்தது. அந்த உண்மையைப் புரிந்து கொள்ளவேண்டும்.

எல்லோரும் சிதம்பரங்கள் அல்ல, ஜிஹாதிற்கு விளங்கங்கள் பெற்று கருத்தை மாற்றிக் கொள்ள: முன்பு முஸ்லீம்கள் மிரட்டியவுடன், உள்துறை அமைச்சு-சிதம்பரம் பயந்து போய், ஓஹோ அப்படியா, ஜிஹாதிற்கு, அப்படியொரு விளாக்கம் உள்ளதா, எனக்க்குத் தெரியவில்லையே, அதையும் தெரிந்து கொள்கிறேன் என்றது, இங்கு நினைவு படுத்துப் பார்க்க வேண்டும். அரபு நாட்டிலிருந்து வரும் பெண்ணிற்கு ஜிஹாத் என்றால் என்ன என்று தெரிந்திருக்கிறது, ஆனால் சிதம்பரத்திற்குத் தெரியவில்லை. இதுதான் இந்திய செக்யூலரிஸம், இங்குதான் அந்த ஜிஹாதி-தீவிரவாதம் வளர்க்கப் படுகிறது.