Posted tagged ‘தாக்குதல்’

8–சிமி குற்றவாளிகள் கொலை – தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், குரூரக் கொலைகாரர்கள், குண்டுவெடித்து அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் முதலியோரின் குற்றங்களை, பயங்கரத்தை மறைத்து உரிமைகள் பற்றி பேசுவது ஏன்?

நவம்பர் 1, 2016

8–சிமி குற்றவாளிகள் கொலைதீவிரவாதிகள், பயங்கரவாதிகள், குரூரக் கொலைகாரர்கள், குண்டுவெடித்து அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் முதலியோரின் குற்றங்களை, பயங்கரத்தை மறைத்து உரிமைகள் பற்றி பேசுவது ஏன்?

the-eights-simi-terrorists-but-got-killed-in-a-police-encounter8- சிமி பயங்கரவாதிகள் சிறையிலிருந்து தப்பி ஓட்டம்: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார் நகரில் 1977ம் ஆண்டு தோன்றிய இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு எனப்படும் ‘சிமி’ இயக்கம் [Students Islamic Movement of India (SIMI)] தீவிரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் அவ்வியக்கத்தின்மீது மத்திய-மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. முஸ்லிம்கள் இன்றும் இவர்களை ஆதரித்து வருகிறார்கள் என்பது, அவர்களது பெற்றோர், உற்றோர், மற்றோர் மற்றும் அரசியல்வாதிகளின் அறிக்கைகள் முதலிய காட்டி வருகின்றது. அவர்கள் செய்துள்ள கொலைகள், கொள்ளைகள், குண்டுவெடுப்புகள், சிறையிலிருந்து தப்பிச் சென்றது, மறுபடியும் குற்றங்கள் செய்தது, பிடிபட்டது, சிறையில் அடைக்கப்பட்டது முதலியவற்றை மறைத்தே அவ்வாறு செய்து வருகின்றனர். இதற்கு டிவிசெனல்கள் இடம் கொடுத்து விவாதம் செய்வது தான் திகைப்பாக இருக்கிறது. தீவிரவாதத்தினால் பாதிக்கப் பட்டவர்களிடம், அவர்களுக்கு சார்பாக, அவர்களது உரிமைகளை ஆதரிப்பவர்களிடம், அவர்களின் வழக்கறிஞர்கள் முதலியோரைக் கூப்பிட்டு அத்தகைய விவாதம் நடத்துவதில்லை.

bhopal-central-jail-from-where-the-simi-terrorists-escapedசிறையில் இருக்கும், அந்த சிமிதீவிரவாதிகளின் யோக்கியதை[1]: சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் தொடந்து குற்றங்கள் செய்து வரும் இவர்களின் யோக்கியதை இதுதான்[2]:

1.       பிப்ரவரி 1, 2014 சோப்படான்டி, கரீம்நகர் மாவட்டம், ஸ்டேட் பாங்கில் ரூ 46 லட்சம் கொள்ளையடித்த வழக்கிலும் ஜாகிட் உஸைன் மற்ரும் செயிக் மஹபூப் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

2.       மே.1, 2014 அன்று பெங்களூரு-கௌஹாத்தி எக்ஸ்பிரஸில் குண்டு வைத்து, ஒரு இளம்பெண் கொலைசெய்யப்பட்ட மற்றும் 12க்கும் மேற்பட்டவர் படுகாயம் அடைந்த வழக்கு.

இதே வழக்கில் –

1.       ஜாகிர் உஸைன் / சாதிக் / விக்கி [Zakir Hussain, alias Sadiq, alias Vicky (32)]

2.       செயிக் மஹபூப் / குட்டு [Sheikh Mehboob alias Guddu (30)]

3.       எஜாவுத்தீன் [Ejazuddin (32)]

3.       ஜூன் 2014ல் பூனாவிலுள்ள பரஸ்கானா மற்றும் விஸ்ரம்பாக் என்ற இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்தன.

4.       செப்டம்பர் 2014ல் பிஜ்னோர், உபியில் ஒரு தற்செயலாக நடந்த குண்டுவெடிப்பு. அப்பொழுது மெஹ்பூப் குட்டுவின் தாய் நஜ்மா அங்கிருந்தாள்.

5.       டிசம்பர் 2014ல் பெங்களூரில், சர்ச் தெருவில், ஒரு உணவகத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு [blast outside a restaurant in Bengaluru’s Chruch Street area in December 2014].

6.       பிப்ரவரி 2015ல், ஆர்.சி.புரத்தில் [Muthoot Finance in RC Puram] முத்தூட் நிதிநிறுவனத்தில் கொள்ளையடித்தனர்.

dinathanthi-graphics-about-jail-breal-and-simi-killingபோபால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தசிமிகைதிகள் தப்பிச் சென்றது: 2015ல் எஜாவுத்தீன் நல்கொண்டா அருகில் தெலிங்கானா போலீசாரால் கொல்லப்பட்டான். அவ்வகையில், பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட ‘சிமி’ இயக்கத்தினர் விசாரணை மற்றும் தண்டனை கைதிகளாக நாட்டில் உள்ள பல சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டனர். இந்நிலையில், போபால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ‘சிமி’ கைதிகள் எட்டுபேர் 31-10-2016 அன்று அதிகாலை 2-3 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் சிறையில் இருந்த ஸ்டீல் தட்டு, மற்றும் டம்ப்ளரால் காவலரின் கழுத்தை அறுத்துக் கொன்றனர்[3].  இதைத்தொடரந்து அவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த போர்வையை பயன்படுத்தி மதில்சுவரை தாண்டி குதித்து, இந்த எட்டுபேரும் தப்பிச் சென்றதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன[4]. தப்பிச் சென்றவர்களை பிடிக்க மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்[5]. தடைசெய்யப்பட்ட ‘சிமி’ இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் 8 பேர் சிறையில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[6]. அவர்கள் இவ்வாறு தப்பிச் சென்றதே, திட்டமிட்டு செய்தது என்று தெரிகிறது. இனி, கைதிகளுக்கு ஸ்டீல் டம்பளர், தட்டு முதலியவை கொடுக்கலாமா-கூடாதா என்ற ஆராய்ச்சி நடத்த வேண்டும் போலிருக்கிறது.

the-eight-simiதப்பிச் சென்றவர்களை எச்சரித்தும், மறுத்ததால் போலீஸார் சுட்டதில் 8-பேர் கொலை: போபால் சிறையில் இருந்து தப்பி ஓடிய 8 சிமி தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்[7] இப்படி தமிழ் ஊடகங்கள் சுருக்கமாக செய்திகளை வெளியிட்டன. போபால் புறநகர் பகுதியில் பதுங்கியிருந்த 8 தீவிரவாதிகளை என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்தனர்[8] என்று நீட்டிச் சொல்கிறது இன்னொரு தமிழ் நாளிதழ். மத்திய பிரதேச தலைநகர் போபாலில் மத்திய சிறையில் காவலரை சுட்டுக்கொன்று ஞாயிற்றுக் கிழமை 30-10-2016 அன்றிரவு 8 தீவிரவாதிகளும் தப்பிச்சென்றனர். கொல்லப்பட்டவர்களில் இருவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது என்கிறது இன்னொரு தமிழ் நாளிதழ்.  போபால் புறநகர் பகுதியில் உள்ள இன்கொடி என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் 8 பேரும் பதுங்கியிருந்தது தெரியவந்தது.  கிராமவாசி ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.  இதையடுத்து, போலீசார் அந்த இடத்தில் குவிக்கப்பட்டனர். தீவிரவாத தடுப்பு படை போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை சுற்றி வளைத்தனர்[9]என்று தினத்தந்தி விளக்குகுறது. பயங்கரவாதிகளை சரண் அடைந்து விடுமாறு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், அதை ஏற்காமல் பயங்கரவாதிகள் போலீசாரை தாக்க முயன்றனர். இதனால், வேறு வழியின்றி போலீசார் துப்பாக்கியை பிரயோகித்தனர். அப்போது நடைபெற்ற  என்கவுண்டரில் பயங்கரவாதிகள்  8 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்[10]என்றும் தினத்தந்தி கூறியுள்ளது. இதனையடுத்து சிமி பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட என் கவுண்டரின் உண்மை தன்மை குறித்து கேள்விகள் எழுப்பட்டது.  ஊடகக்காரர்கள் அந்த 8-பேர் எப்படி அங்கு சென்றனர், ஊர்மக்கள் ஏன் போலீஸாருக்கு தகவல் அளிக்க வேண்டும் முதலியவற்றைப் பற்றி கூட விவாதம் நடத்தலாமே?

smi-terror-politicizedஅரசியலாக்கப் படும் என்கவுன்டர் வழக்குகள்: தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், குரூரக் கொலைகாரர்கள், குண்டுவெடித்து அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் முதலியோரின் குற்றங்களை, பயங்கரத்தை அரசியல்வாதிகள் நினைத்துப் பார்ப்பதில்லை என்று தான் தோன்றுகிறது. அவர்கள் முஸ்லிம்கள் அதனால், அவர்களை ஆதரிக்க வேண்டும், அப்படி செய்தால் ஆதாயம் கிடைக்கும் என்ற எண்ணாத்தில் தான் காங்கிரஸ், ஆப் போன்ற கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி சிமி பயங்கரவாதிகள் பாதுகாப்பு நிறைந்த சிறையில் இருந்து தப்பியது எப்படி என்பது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றது.  அரவிந்த் கேசரிவாலும் அத்தகைய கோரிக்கை விடுத்துள்ளார். டிவிசெனல்களைப் பற்றி கேட்கவே வேண்டாம், ஒவைசியைக் வைத்து, உரிமை போராட்டமே நடத்திக் கொண்டிருக்கின்றன. இனி, பாகிஸ்தான் இந்திய வீரர்களைக் கொன்றதை மறந்து, இதை வைத்துக் கொண்டு கதையை ஓட்ட ஆரம்பித்து விடுவர். எல்லையில் நடந்த அக்கிரமங்களுக்கு இந்திய ராணுவம் பதில் நடவடிக்கை எடுத்தற்குக் கூட, எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து கொண்டிருக்கும் நிலையில் தான், இதுவும் நடக்கிறது. அப்படியென்றால், எதிர்கட்சிகள் சிமி-தீவ்ரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன என்று விளக்கம் கொடுக்கலாமா?

© வேதபிரகாஷ்

01-11-2016

the-eight-simi-clear-faces

[1] The Hindu, Cadres of an outlawed group, with long list of terror cases, Updated: November 1, 2016 01:10 IST.

[2] http://www.thehindu.com/news/national/cadres-of-an-outlawed-group-with-long-list-of-terror-cases/article9288680.ece?textsize=large&test=1

[3] தினத்தந்தி, போபால் சிறைச்சாலையில் இருந்து 8 சிமி இயக்கத்தினர் தப்பி ஓட்டம், பதிவு செய்த நாள்: திங்கள், அக்டோபர் 31,2016, 8:53 AM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 8:53 AM IST.

[4] http://www.dailythanthi.com/News/India/2016/10/31085334/8-SIMI-activists-escape-from-Bhopal-jail-1-guard-killed.vpf

[5] மாலைமலர், சிறையில் இருந்து 8 ‘சிமிதீவிரவாதிகள் தப்பியோட்டம், பதிவு: அக்டோபர் 31, 2016 08:29.

[6] http://www.maalaimalar.com/News/TopNews/2016/10/31082923/1047882/8-SIMI-activists-escape-from-Bhopal-jail-1-guard-killed.vpf

[7] தினகரன், போபால் சிறையில் இருந்து தப்பி ஓடிய 8 சிமி தீவிரவாதிகள் சுட்டுக்கொலை, Date: 2016-10-31 11:47:00

[8] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=255546

[9] தினத்தந்தி, போபால் சிறையில் இருந்து தப்பி ஓடிய 8 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொலை, பதிவு செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 12:05 PM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 12:05 PM IST.

[10] http://www.dailythanthi.com/News/India/2016/10/31120513/8-SIMI-terrorists-who-earlier-today-fled-from-Bhopal.vpf

காஷ்மீர மாநில சட்டமன்றத்தில் ரகளை- கலாட்டா – மைக் வீசப்பட்டது!

மார்ச் 1, 2013

காஷ்மீர மாநில சட்டமன்றத்தில் ரகளை- கலாட்டா – மைக் வீசப்பட்டது!

JK assembly-2013 broken mike

 

உடைந்த மைக்கின் கீழ் பகுதியை தூக்கி வரும் எம்.எல்.ஏ!

காஷ்மீர சட்டசபையில் கலாட்டா-ரகளை: காஷ்மீர சட்டபையில் தீவிரவாதி மொஹம்மது அப்சல் குரு தூக்கிலிட்டதை எதிர்த்து கோஷம் எழுப்பினர், பின்னர் உடல் கேட்டு பயங்கர ரகளையில் ஈடுபட்டனர்[1]. பேப்பர்களை வீசியும், மைக்கைப் பிடுங்கியும் கலாட்டா செய்தனர்[2]. மொஹம்மது அப்சல் குரு போன்று உடையணிந்த ஒருவர் ஆவேசமாக கத்திக் கொண்டிருந்ததை டிவி-செனல்கள் காண்பித்தன. சட்டபைக்கு வெளியிலும் ஆர்பாட்டத்தை நடத்தினர்[3]. கலாட்டா செய்த லங்கேட் அப்துல் ரஷீத் இஞ்சினியர்  (MLA Langate Abdul Rashid Engineer ) என்ற எம்.எல்.ஏ வெளியேற்றப்பட்டார்[4]. சட்டசபையில் இப்படி கலாட்டா செய்வது அவர்களுக்கு வழக்கமான-வாடிக்கையான விஷயம் தான்[5]. பெண்ணான மெஹ்பூபா முப்தியே கலட்டா செய்துள்ளார்[6].

JK assembly-2013 MLAs fight

புதைத்த உடலைக் கேட்டு சண்டை: இதில் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி இரண்டும் போட்டிப் போடுக் கொண்டு தீவிரவாதத்துரடன் துணைபோகுக் போக்கில் உடலைக் கேட்டு சண்டை போட ஆரம்பித்தனர். அப்சல் குரு ரகசியமாக தூக்கிலிடப்பட்டது குறித்தும், அவரது உடலை திரும்ப பெற வலியுறுத்தியும் காஷ்மீர் சட்டமன்றத்தில் இரண்டு ஒத்திவைப்பு தீர்மானங்களை முக்கிய எதிர்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி கொண்டு வந்தது. நாடாளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குரு கடந்த மாதம் திகார் சிறையில் ரகசியமாக தூக்கிலிடப்பட்ட பிறகு, அமைதியாக இருந்தவர்கள், திடீரென்று. அவனது உடல் கேட்டு ஆர்பாட்டத்தை ஆரம்பித்தனர். திகார் சிறை வளாகத்திலேயே அவ்வுடல் அடக்கம் செய்யப்பட்டது தெரிந்த விஷயமே. அதற்கு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது மேலும் வியப்பிற்குரிய விசயமாக உள்ளது.

Jammu & Kashmir Assembly March 2012

 

மார்ச் 2012ல் உமர் அப்துல்லாவை நோக்கி காலை உயர்த்தி வரும் எம்.எல்.ஏ!

முப்தி முஹம்மது சையது மற்றும் அவரது மகள் போடும் நாடகங்கள்: அப்சலின் உடலை அவரது குடும்பத்தாரிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மாநில முதல்வர் உமர் அப்துல்லாவும் கோரிக்கை வைத்துள்ளது, போட்டாட்ப்போட்டி அரசியலைத்தான் எடுத்துக் காட்டுகிறது. இந்நிலையில் அப்சல்குரு ரகசியமாக தூக்கிலிடப்பட்டதன் மூலம் காஷ்மீர் குடிமக்களின் சட்ட உரிமைகள் பறிக்கப்பட்டு விட்டதாக முக்கிய எதிர்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சி குற்றம் சாட்டியுள்ளது, முன்னர் முப்தி முஹம்மது சையது, தமது மகளை எப்படி தீவிரவாதிகள் கடத்திக் கொண்டது போல நாடகம் ஆடி, பிரியாணி கொடுத்து அனுப்பி, பிறகு 180 தீவிவாதிகளை விடுவித்தார் என்பதனை நினைவு கூரவேண்டும்[7]. ஆனால், அதே முப்தியின்பின்னொரு மகள் கலாட்டா செய்கிறார்[8].

March 2011 - JK Assembly

 

மார்ச் 2011 – சட்டசபையில் கட்டிப்பிடி கலாட்டா-ரகளை!

விளம்பர கலாட்டா-ஆர்பாட்டம்-ரகளை: தூக்கு தண்டனை கைதிகள் வரிசையில் 28ம் இடத்தில் இருந்த அப்சல் குருவை மட்டும் தேர்ந்தெடுத்து தூக்கில் போட்டது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளது, அண்டை நாடான இஸ்லாமிய பங்களாதேசத்தில் எப்படி, பல ஜிஹாதி பயங்கரவாதிகள் தூக்கிலிடப்பட்டனர் என்பதனையும் மறந்து விடுகின்றனர். ராஜீவ்காந்தி கொலையாளிகளின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டது போல அப்சல் குருவுக்கு வாய்ப்பு அளிக்காதது ஏன் என்ற கேள்வியை பிடிபி முன்வைத்துள்ளது இந்த உண்மைகளை மறைக்கவே என்று தெரிகிறது.  அப்சல்குரு ரகசியமாக தூக்கிலிடப்பட்டது தொடர்பாகவும், அவரது உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைப்பதில் ஏற்பட்டு வரும் தாமதம் குறித்து சட்டமன்றத்தில் விவாதிப்பற்காக இரண்டு ஒத்திவைப்பு தீர்மானங்களை மக்கள் ஜனநாயக கட்சி சபாநாயகரிடம் தாக்கல் செய்தது. இந்த தீர்மானங்கள் மீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு, இந்த தகவலை மக்கள் ஜனநாயக கட்சி செய்தி தொடர்பாளர் நயீம் அக்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்த பிறகும், சட்டசபையில் ரகளை செய்துள்ளது, வெறும் விளம்பரத்திற்காகவே என்று தெரிகிறது. இதில் காஷ்மீர இஸ்லாம் எப்படி செயல்படுகிறது என்பதனையும் அறிந்து கொள்ளலாம்[9].

JK MLA uproar

 

கலாட்டா செய்யும் எம்.எல்.ஏவை தடுக்கும் போலீஸ் / மார்ஷெல்!

கடையடைப்பு-பந்த்-போராட்டம்: பார்லிமென்ட் தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட அப்சல் குருவின் உடலை, அவரது உறவினரிடம் ஒப்படைக்க வலியுறுத்தி காஷ்மீரில் முழுக்கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. அரசு அலுவலகங்களும் பெருமளவில் இயங்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து காஷ்மீர் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகன சோதனை நடத்தப்பட்டன. மாநிலத்தின் பல பகுதிகளில் துணை ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இத்தகைய போராட்டங்கள் நடக்கும் என்று அந்நிய நாளிதழ்கள் சந்தோஷமாக செய்திகளை முன்னரே வெளியிட்டுள்ளது கவனிக்கத் தக்கது[10].

Six JMB militants hanged in Bangaladesh

 

ஆறு ஜிஹாதிகள் தூக்கிலிடப்பட்ட செய்தி!

புதைத்த உடலை, மறுபடியும் தோண்டியடுத்துப் புதைக்கலாமா?: புதைத்தப் பிணத்தைத் தோண்டி எடுக்கலாமா, மறுபடியும் புதைக்கலாமா, புதைத்த பிணம் இவ்வளவு நாள் முழுமையாக இருக்குமா, முதலிய கேள்விகளுக்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்று தெரியவில்லை. இஸ்லாம் பொறுத்த வரைக்கும், தீர்ப்பு நாளில் புதைத்த உடல் உயிர் பெற்று எழும். அல்லா அவர்களின் செயல்களைப் பொறுத்து சுவர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ அனுப்பி வைப்பார் என்று நம்பிக்கையாளர்கள் சொல்கின்றனர். அந்நிலையில் புதைத்த உடலை, மறுபடியும் தோண்டியடுத்துப் புதைக்கலாமா, அதனை அல்லா ஏற்றுக் கொள்வாரா என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

01-03-2013


 


“அல்லாவின் பெயர்” பிரச்சினை: மலேசியாவில் சர்ச்சுகள் தாக்கப் பட்டன!

ஜனவரி 9, 2010

கடவுள் பெயர் பிரச்சினை: மலேசியாவில் கிறித்துவ தேவாலயங்கள் மீது தாக்குதல்

சரவாக், பேராக், மலாக்காவிலும் தேவாலயங்கள் தாக்கப்பட்டன

January 10, 2010, 8:44 pm மலேசியாஇன்று பிரிவு: செய்தி

http://www.malaysiaindru.com/?p=30683

சரவாக், பேராக் மற்றும் மலாக்கா ஆகிய மாநிலங்களிலும் தேவாலயங்கள் தாக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சரவாக், மிரியிலுள்ள ஒரு தேவாலயம் தீயிடப்படும் முயற்சியின் இலக்காக இருந்ததாக உள்துறை அமைச்சர் ஹிசாமுடின் ஹுசேன் கூறியதாக பெர்னாமா கூறுகிறது. ஆனால், நிலமை கட்டுப்பாட்டில் இருப்பதாக அவர் கூறினார். “பொது மக்கள் கவலைப்பட வேண்டியதில்லை. எஸ்எம்எஸ் வழியாக பரப்பப்படும் ஊகங்களைப் பொருட்படுத்த வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டார். தைப்பிங்கில் மோலொடோவ் தீப்பந்துகள் இரண்டு தேவாலயங்கள் மீதும் எஸ்எம் கான்வெண்ட் பள்ளியின் பாதுகாவலர் குடில் மீதும் வீசப்பட்டன. நாட்டின் மிகப் பழமையான ஆல் செயிண்ட்ஸ் தேவாலயத்திற்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் பள்ளியின் பாதுகாவலர் குடிலுக்குச் சிறிது சேதம் ஏற்பட்டுள்ளது என்று பேராக் போலீஸ் தலைவர் ஜுல்கிப்லி அப்துல்லா கூறினார்.

மலாக்கா தேவாலயத்தில் கருப்பு பெயிண்ட் வாரியடிக்கப்பட்டது: மலாக்காவில், நான்யாங் சியாங் பாவ் செய்திப்படி டுரியான் டாவுனிலுள்ள மலாக்கா பேப்டிஸ்ட் தேவாலயத்தின் மீது கருப்புச் சாயம் வாரியடிக்கப்பட்டதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடவுள் பெயர் பிரச்சினை: மலேசியாவில் கிறித்துவ தேவாலயங்கள் மீது தாக்குதல்

கோலாலும்பூர், ஜன.9-_ முஸ்லிம் அல்லாதவர்-களும் கடவுளை குறிப்பதற்கு அல்லா என்கிற சொல்லை பயன்படுத்தலாம் என்கிற சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக முஸ்லிம் குழுக்கள் சில மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் ஆர்ப்-பாட்டங்கள் நடத்துவதற்கு முன்னர் மூன்று கிறித்துவ தேவாலயங்களுக்கு தீ வைக்கப்பட்டன.

சாராயம் நிரப்பிய குண்டுகளை வீசினர்.

இந்த தேவாலயங்களில் ஒன்றின் அலுவலகம் மிகவும் மோசமாக தீக்கிரையானது. மற்ற கட்டடங்கள் குறைந்த அளவில் பாதிக்கப்பட்டன.

Malaysian Prime Minister Najib Razak (C) leaves after visiting the torched Metro Tabernacle church in Desa Melawati in Kuala Lumpur, January 9, 2010. Arsonists in Malaysia struck another church on Saturday, bringing the attacks on churches to four in two days as a row escalates over the use of the word Allah to refer to the Christian God. REUTERS/Stringer

Fourth church attacked in Malaysia as Allah row deepens

அல்லாப் பிரச்சினை தீவிரமடைவதால் நான்காவது சர்ச் தாக்கப்பட்டது! முதலில் மூன்று சர்ச்சுகள் தாக்கப்பட்டன!

Three churches attacked in Kuala Lumpur – PTI

Kuala Lumpur fire investigators inspect the damage to a church which was destroyed by a fire bomb a little after midnight in a suburb on Friday.

AP Kuala Lumpur fire investigators inspect the damage to a church which was destroyed by a fire bomb a little after midnight in a suburb on Friday.
தேச மேவதியிலுள்ள “மெட்ரோ டெபர்னகிள் சர்ச்” (Metro Tabernacle Church in Desa Melawati ) அலுவலகம் தீக்கிரையானது. மலடோவ்-கலக்கலான குண்டுகளால் (Molotov cocktail bombs) இரண்டு சர்ச்சுகளின் உள்ளே எரியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் பெதாலிங் ஜெயாவிலுள்ள கத்தோலிக்க ( the Assumption Catholic Church) மற்றும் புரொடஸ் டன்டு ( the Life Chapel Protestant)  ஆலயங்கள் சேதமடந்தன. மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் அந்த குண்டுகளையெரிந்து விட்டு வேகமாக பறந்ததை பார்த்தவர்கள் கூறினார்கள்.
The damaged Metro Tabernacle church in Desa Melawati, Kuala Lumpur, yesterday. Photograph: Bazuki Muhammad/ ReutersThe damaged Metro Tabernacle church in Desa Melawati, Kuala Lumpur, yesterday. Photograph: Bazuki Muhammad/ Reutersஇந்த சம்பவங்கள் நடந்ததற்குப் பின்னர், கோலாலம்பூரில் கூடிய பல முஸ்லீம் குழுக்களைச் சேர்ந்தவர்கள், மலேசியாவில் இருக்கும் ரோமன் கத்தோலிக்க செய்தித்தாள் கிறிஸ்தவ மத நோக்கில் கடவுளை குறிப்பதற்கு அல்லா என்கிற வார்த்தையை பயன்படுத்தலாம் என்று நீதிமன்றம் அளித்த சமீபத்திய தீர்ப்புக்கு எதிரான தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினார்கள். இவர்களின் ஆர்ப்பாட்டங்கள் அமைதியாக நடந்து முடிந்தன.

தீக்குண்டுகள் வீசப்பட்டது இறுதி ஆட்டம் என்று சபா அரசியல்வாதி கருதுகிறார்

January 09, 2010, 4:32 pm மலேசியாஇன்று பிரிவு: செய்தி

கோலாலம்பூரிலும் பெட்டாலிங் ஜெயாவிலும் தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட தீ வைப்புத் தாக்குதல்களைத் தொடர்ந்து சபாவிலும் சரவாக்கிலும் உள்ள நிரந்தர கிறிஸ்துவ வாக்கு வங்கிகளை கூட்டரசு அரசாங்கம் இனிமேலும் முழுமையாக நம்ப முடியாது. “அந்தத் தேவாலயத் தாக்குதல்களுக்கும் 2008 தீவகற்ப மலேசியாவில் ஏற்பட்ட அரசியல் சுனாமிக்கு முந்திய கோவில் உடைப்புக்களுக்கும் ஒற்றுமை இருக்கிறது”, என்று அவ்விரு மாநிலங்களுக்குமான பிகேஆர் தலைவர் ஜெப்ரி கிட்டிங்கான் கூறினார்.

அவர் கோத்தா கினாபாலுவில் மலேசியாகினிக்குச் சிறப்புப் பேட்டி அளித்தார். கிறிஸ்துவர்கள் மட்டுமின்றி சீன வாக்காளர்களும் இறைவனுக்கு அஞ்சும் முஸ்லிம்களில் பலரும் கூட கிழக்கு மலேசிய மக்களுடன் அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோவைக் கைவிடுவர் என்று அவர் நம்புகிறார். “அல்லாஹ் என்ற சொல்லைப் பயன்படுத்தியதற்காக எங்களுடைய பாஹாசா இந்தோனிசியா பைபிள்களை சுங்கத்துறை தேக்கி வைத்திருப்பதே கடுமையான விஷயம்”, என்று கூறிய ஜெப்ரி, இப்போது அந்த தீ வைப்புச் சம்பவங்கள் சமூகத்தில் இன்னும் காணப்படும் எல்லா சந்தேகங்களையும் முற்றாக நீக்கி விடும் என்றார்.  அல்லாஹ் என்ற சொல் மீதான நீதிமன்ற விவாதங்கள் கூட கிராமப்புற மக்களை அம்னோவின் பிடியிலிருந்து விடுவிக்க முடியவில்லை என்று பிகேஆர் தேசிய உதவித் தலைவருமான அவர் சொன்னார். “நான் உணர்வுகளுக்கு அடிமையாகாமல் அறிவுப்பூர்வமாக விஷயங்களை அணுகுகின்றவன்.” – “ஆனால் தீவகற்ப மலேசியாவில் தேவாலய தீக்குண்டு வீச்சு படங்களைப் பார்த்ததும் நானே உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்குப் பின்னர் முதன் முறையாக என் கண்கள் குளமாகின.”

கிழக்கு மலேசியாவுக்கு ஹிண்ட்ராப் முன்னுதாரணம்: அந்த படங்கள் கிழக்கு மலேசியாவில் கிராமப்புறப் பகுதிகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அந்த சபா அரசியவாதி கருதுகிறார். உள்ளூர் அரசியல்வாதிகள் அந்தச் சம்பவங்கள் மீது தங்களது சொந்த கருத்துக்களையும் வெளியிடுவர் என்பதை ஜெப்ரி மறுக்கவில்லை. கோவில் உடைப்புக்களைத் தொடர்ந்து ஹிண்ட்ராப் போராளிகளிடையே அதுதான் நிகழ்ந்தது. ” இந்திய வாக்காளர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ள 67 நாடாளுமன்றத் தொகுதிகளில் அவர்களுடைய உணர்வுகள் தூண்டப்பட்டன”, என்றார் அவர். அந்தத் தீ வைப்பு சம்பவங்கள் “சில கோழைகள் அல்லது தீவிரவாதிகளினால்” மேற்கொள்ளப்பட்ட தனிப்பட்ட சம்பவங்கள் என்று ஜெப்ரி கருதவில்லை. அல்லாஹ் விவகாரத்தை அம்னோ கையாளும் முறை “நாட்டில் உருவாகி வரும் புதிய அரசியல் பாணிக்கு அந்தக் கட்சி நல்லதைச் செய்யாது” என்பதை தெளிவாக உணர்த்துவதாகவும் அவர் சொன்னார்.

“அதிகாரத்தில் தொடர்ந்து இருப்பதற்கு அவசியமானால் வலிமையையும் பயன்படுத்த வேண்டும் என்று விரும்பும் சில சக்திகள் அம்னோவில் இருப்பதாக நான் கருதுகிறேன்”, என்றும் அவர் குறிப்பிட்டார். “மற்றவர்களைப் பணிய வைப்பதற்கு அவர்களை வேண்டுமென்றே மிரட்டி, அச்சத்தை ஏற்படுத்துவது தான் அதுவாகும்.”  …“வெகு தொலைவில் சபா, சரவாக்கில் உள்ள நாங்கள் எங்களுடைய பைபிளிலும் பிரார்த்தனைகளிலும் கடவுளுக்கு அல்லாஹ் என்னும் சொல்லை பயன்படுத்துவது மீது தீவகற்ப மலேசியா உள்ள மக்கள் ஆர்ப்பாட்டம் செய்வது வினோதமாக இருகிறது”, என்றும் ஜெப்ரி குறிப்பிட்டார்.

கடவுள் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேல் அமைதியாகத் தான்  இருந்தார்: “அல்லாஹ் என்ற சொல் தீவகற்ப மலேசியாவில் உள்ள கிறிஸ்துவ சமூகத்திற்கு பிரச்னையே இல்லை. ஆனால் தென் சீனக் கடலுக்கு இந்தப் பக்கம் உள்ளவர்களுக்குத்தான் அது பிரச்னை. 300 ஆண்டுகளுக்குப் பின்னர் நாங்கள் எங்கள் கடவுளை எப்படி அழைக்க வேண்டும் என்று முடிவு செய்வதற்கு தீவகற்ப மலேசியாவில் இருப்பவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?” தேவாலயங்கள் மீது தீக்குண்டுகள் வீசப்பட்டது அரசியல் நோக்கம் கொண்டது. நன்கு திட்டமிடப்பட்டது என்று ஜெப்ரி மீண்டும் வலியுறுத்தினார். “சபா சரவாக் மக்களை முழுமையாக அடிபணிய வைப்பது அதன் நோக்கம் ஆகும்”, என்றார் அவர். பிரதமர் நஜிப்பும் அவரது நெருங்கிய உறவினருமான உள்துறை அமைச்சர் ஹிஷாமுடினும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஊக்கமூட்டி வந்துள்ளனர் என்றும் ஜெப்ரி கூறினார்.

ஏமாற்றப்பட்ட உணர்வு வலுவடைந்து வருகிறது: “மலேசியா தோற்றுவிக்கப்பட்டதில் சபாவுக்கும் சரவாக்கிற்கும் நன்மை இல்லை என்பது ஆண்டுக்கு ஆண்டு தெளிவாகி வருகிறது”, என்று அவர் கூறினார். “அல்லாஹ் விவகாரத்தில் மட்டும் தீவகற்ப மலேசியா எங்களை அச்சுறுத்தவில்லை. புதிய காலனித்துவ சுரண்டலுக்கும் நாங்கள் பலியாகி வருகிறோம்.” பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து அதிகாரத்தை எடுத்துக் கொண்ட அம்னோ இன்னும் மாறவில்லை என்று மாநில உரிமைகளுக்கும் சுயாட்சிக்கும் போராடி வரும் அந்த சபா அரசியல்வாதி கூறினார். “பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களைப் போன்று உள்ள ஒரு கட்சி நமக்கு இன்னும் தேவை தானா என்பதை நாம் சிந்திக்க வேண்டும். நமது சுதந்திரம் எங்கே?” என்று ஜெப்ரி வினவினார். “அவர்கள் பிரிட்டிஷ்காரர்களைப் போன்று பிரித்து ஆளும் தந்திரங்களைப் பின்பற்றுகின்றனர். எங்களை அடிமைகளைப் போன்று நடத்துகின்றனர். மலாயாவைப் போன்று இன ரீதியாக வேறுபடுத்த முயற்சிக்கின்றனர். எங்கள் மாநிலங்களை மேம்படுத்தாமல் எங்கள் வளங்களை சுரண்டுகின்றனர்.”  “என்னுடைய வார்த்தைகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தான் பல ஆண்டுகளாகத் தோண்டிய குழியிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இந்த நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு அம்னோ முயன்று வருகிறது”, என்று ஜெப்ரி எச்சரித்தார்.  “நஜிப்பின் ஒரே மலேசியா என்று அழைக்கப்படும் கோட்பாட்டில் உள்ள வெறுமையை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர். ஆனால் அது தான் உண்மை.”