Posted tagged ‘தலாக்’

செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக், நிக்கா ஹலாலா: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலை – ஆதரவு-எதிர்ப்பு (3)

ஏப்ரல் 11, 2017

செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக், நிக்கா ஹலாலா: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலைஆதரவுஎதிர்ப்பு (3)

Modes of talaq

ஆதரவுஎதிர் பிரச்சாரங்கள், முஸ்லிம்கள் செய்து வருவது: முத்தலாக் முறை இஸ்லாமியர்களுக்கான மத உரிமை என்றும் இதில் அரசு தலையிடக் கூடாது என்று அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரிய‌ம் தெரிவித்துள்ளது. ஆனால், அனைத்திந்திய முஸ்லிம் பெண்கள் சட்ட வாரியம், மூன்று தலாக் நடைமுறையை நீக்க விருப்பம் தெரிவித்துள்ளது. பெண்களிடம் இருந்து 3.5 கோடி விண்ணப்பங்கள் எங்களுக்கு வந்துள்ளன[1].  இவற்றிற்கு எதிரான பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு என கூறியதாக ஒரு செய்தி. ஆனால், தெரிவித்த உதவி ஜனாதிபதி மனைவி சல்மா அன்சாரி, மூன்று முறைதலாக்என்று சொல்வதாக மட்டும்தலாக்நடைமுறை இருக்க கூடாது. மவுலானாவில் என்ன கூறியிருந்தாலும் அது உண்மையா ?.குரானை அதன் மூல மொழியான அராபியில் படித்து தெரிந்துகொள்ளுங்கள். அதனுடைய மொழி பெயர்பில் படிக்காதீர்கள். குரானில் இருந்து அறிவை வளர்த்து கொள்ளுங்கள். அதுகுறித்து சிந்தனை செய்யுங்கள். யாரையும் குருட்டுத்தனமாக நம்பாதீர்கள்‘ என்று கூறியுள்ளார்[2], என்று குறிப்பிட்டது கவனிக்க வேண்டும். இதிலிருந்து, முஸ்லிம்களில் சிலர், சில இயக்கங்கள், முத்தலாக்கை ஆதரித்து, அவ்வாறே பெண்கள் கஷ்டப்பட்டு, அவதிபட்டு, ஜீவனாம்சம் இல்லாமல் அல்லது குறைவாக வாங்கிக் கொண்டு, குழந்தை-குட்டிகளோடு இருக்க வேண்டும் என்று சொல்வது போல சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மற்ற அரசியல் கட்சிகளும் அமைதி காக்கின்றன.

Modes of talaq -ul - whatsup etc

இந்தியாவில் உள்ள சிவில்கிரிமினல் சட்டநிலைகள்: நாட்டில் பல விவகாரங்கள், விவரங்கள், பிரச்சினைகள், சட்டமீறல்கள், குற்றங்கள் முதலியவை ஒரே மாதிரியாகத்தான் கையாளப்பட்டு வருகின்றன.  பொது இடங்கள், சாலைகள் போன்ற இடங்களில் எல்லோரும் பொதுவாக-சமமாக பாவிக்கப் படுகிறார்கள். அதாவது, சிவில்-கிரிமினல் சட்டங்கள் ஒன்றாக இருந்தால் தான், மக்கள் அனைவரையும் சமமாக பாவிக்க முடியும், சட்டமுறை அமூலாக்க முடியும். பொதுவாக குடும்பம் என்றாலே, தாய், தந்தை, குழந்தை என்று தான் உள்ளது. குழந்தை தனது தாய், தந்தை யார் என்று அறிந்து தான் வளர்கிறது. இப்பந்தம், சொந்தம், உறவுமுறை பிறப்பு சான்றிதழ் முதல், அனைத்து ஆவணங்களிலும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆனால், திடீரென்று தாய், தந்தை மாறிவிட்டால், அதாவது விவாக ரத்தாகி விட்டால், குழந்தைக்கு குழப்பம் ஏற்படுகிறது. வளர்ந்த மகன் அல்லது மகளுக்கு பிரச்சினை உண்டாகிறது. தாய், தந்தை மறுவிவாகம் செய்து கொண்டு விட்டால், அக்குழப்பம் பெரிதாகிறது. தாய் ஒருவர், தந்தை வேறு அல்லது தந்தை ஒருவர், தாய் வேறு என்று குறிப்பிட்டு, முந்தைய-பிந்தைய ஆவணங்கள் இருக்கும் போது, பார்ப்பவர்களுக்கு மட்டுமல்ல, சம்பந்தப்பட்டவர்களுக்கே, வருத்தம் ஏற்படுகிறது. சிந்தனை போராட்டம் ஏற்படுகிறது. இது பொதுவாக உள்ள நிலை.

Modes of talaq -ul - biddat

முஸ்லிம்களின் பலதார முறை, விவாக ரத்து, குடும்பப் பிரச்சினைகள்: ஆனால், மதரீதியில், இஸ்லாமியர், ஒரே நேரத்தில் நான்கு மனைவிகள் இருக்கலாம் என்றால், அந்நேரத்தில், ஒரு நதை மூலம், நான்கு தாய்களுக்கு குழந்தைகள் பிறக்கலாம். ஆனால், தலாக்-தலாக்-தலாக் என்ற விவாக ரத்தால், ஒரு மனைவி விவாகரத்து செய்யப்பட்டு, அவள், இன்னொரு ஆணை திருமணம் செய்து கொண்டால், அவளுக்கு அந்த ஆணின் மூலமும் இன்னொரு குழந்தை பிறக்கலாம். ஆனால், அவ்விரு குழந்தைகளும் சந்தித்துக் கொண்டால், தமக்கு தாய் ஒருவர் தான், ஆனால், தந்தை வெவ்வேறானவர்கள் என்று தெரிய வரும். இது இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மனைவி என்று நீண்டால், குழந்தைகள் கதி அதோகதிதான். குழந்தைகள் வளர-வளர, சமூகத்தில் அவர்கள் பல விமர்சனங்களுக்கு உள்ளாக நேரிடும். இதனால்,  பாதிப்பும் ஏற்படலாம். மேலும், ஒரே நேரத்தில் நான்கு என்பதில்லை, இரண்டு என்றால் கூட, விவாகரத்தின் நிலைமை பாதிப்பதாக உள்ளது. இந்துக்களில் பலதார முறை, முஸ்லிம்களை விட அதிகமாக இருக்கிறது என்று வாதிக்கின்றனர். ஆனால், 85%ல் 15% என்பதும் 15%ல் 85% என்பதிலும் உள்ள நிதர்சனத்தை கவனிக்க வேண்டும், ஏனெனில், எங்கு அதிகமாக இருக்கிறது என்பதை வைத்து சமூக சீர்திருத்ததிற்கு செல்ல வேண்டுமே தவிர, அங்கும் உள்ளது, அதனால், இங்கும் இருக்கட்டும் போன்ற வாதம் சரியாகாது.

Muslim women oppose talaq etc

நிக்கா ஹலாலா போன்ற முறைகள்[3]: முகமதிய விவாகரத்து, மறுமணம் போன்றவற்றில், மதரீயில் உள்ளவை, நடைமுறையில் பிரச்சினையாக, ஏற்றுக்கொள்ளமுடியாத நிலைகளில் உள்ளன. உதாராணத்திற்கு, நிக்கா ஹலாலா என்பதை எடுத்துக் கொண்டால், ஒரு ஆண், தனது முந்தைய மனைவியை திருமணம் செய்ய விருப்பப் பட்டால், முதலில் அவளை இன்னொரு ஆணுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும். பிறகு, அவள் அவன் கூட சேர்ந்து வாழ வேண்டும். உடலுறவு கொண்ட பிறகே, அவள் விவாக ரத்து பெற முடியும். அவ்வாறான பிரிந்திருக்கும் கலத்தை இத்தத் எனப்படுகிறது. இதெல்லாம் நடந்த பிறகே, அவன் / முதல் கணவன் அவளை திருமண செய்து கொள்ள முடியும். இந்த உறவுகளின் முடிவுகளைப் பற்றி சிந்தித்து, விவாதிக்க முடியாது. பிறக்கும் குழந்தைகளின் நிலை பற்றியும் பேச முடியாது.

முஸ்லிம்கள் அல்லாத பெண்களுக்கு பிரிந்து வாழ்வதால் / விவாக ரத்தாகி தனியாக வாழ்ந்தால் ஏற்படும் தொல்லைகள், சங்கடங்கள், நஷ்டங்கள்: இதே பிரச்சினை மற்ற மதத்தினருக்கும் ஏற்படலாம். ஆனல், சட்டப்படி கட்டுப்படுத்தப் படுவதால், அத்தகைய பிரச்சினை மிகக்குறைவாகவே உள்ளது அல்லது காணப்படுவதில்லை எனலாம். பொதுவாக, இந்து பெண்கள், கணவன் விவாக ரத்தானாலோ, பிரிந்து வாழ நேர்ந்தாலோ, குழந்தையை தன்னோடு, எடுத்து வந்து வளர்க்கிறாள். குழந்தை வளர்ந்து பெரியவனா/ளாகும் வரை அவன்/அவள் பல இடங்களில், பல நேரங்களில் உன்னுடைய தந்தை யார் என்றால், பெயரைத்தான் சொல்ல முடிகிறதே தவிர ஆளைக் காட்டமுடிவதில்லை. பெண்ணிற்கும் / மனைவிக்கும் அதைவிட கொடுமையான நிலைமை, குடும்பத்தார், சமூகத்தார் என்று எல்லோருக்கும் பதில் சொல்ல வேண்டிய நிலை. அதற்கு, அவளது குடும்பத்தினர் உதவுகின்றனர். இவ்வாறு, அந்த சோகமானது மறைக்க/மறக்கப் படுகிறது.

Muslim women oppose , PROTEST talaq etc

முஸ்லிம் பெண்கள் அதிகம் பாதிக்கப் பட்டதால், இன்று போராட வந்து விட்ட நிலை: ஆனால், முகமதிய பெண்கள், அதிக அளவில் பாதிக்கப் பட்டதால், அவர்கள் இன்று துணிச்சலாக உரிமைகள் கேட்டு போராட ஆரம்பித்து விட்டனர். உச்ச நீதிமன்றத்தில், வழக்கும் பதிவு செய்து விட்டனர். அதன் தொடர்ச்சிதான், இப்பொழுதைய நிகழ்வுகள், மேலே குறிப்பிடப்பட்ட விவரங்கள். இதற்குள்,  அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட இயக்கம் [AIMPLB ] இவ்விசயத்தில், 90 நாட்களில் / மூன்று மாதங்களில் தாங்களே, முத்தலாக் இல்லாமல் செய்து விடுகிறோம் என்று அறிவித்துள்ளது[4]. முத்தலாக், நிக்காஹ் ஹலாலா மற்றும் பலதாரமுறை இஸ்லாமிய பெண்களின் சமத்துவம் மற்றும் சுயமரியாதைகளை மீறுவதாக உள்ளதாகவும், அவை, அரசியல் ந்ர்ணய சட்டப் பிரிவு 25(1)  [Article 25(1) of the Constitution] ற்கு புறம்பாக இருப்பதாகவும், 10-04-2017 அன்று உச்சநீதி மன்றத்தில் முறையிடப்பட்டது[5].  உச்சநீதி மன்றம் இதனை ஏற்றுக்கொண்டது[6]. அடுத்த விசாரணை மே மாதம்.11, 2017 அன்று எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்தது[7]. மேலும், உபியில், முத்தலாக் செய்யப்பட்ட, ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வந்துள்ளது[8]. பஸ்தி மாவட்டம், திகாவுரா கிராமம், பைக்வாலியா போலீஸ் ஷ்டேசன் கீழ்வரும் இடத்தில், இது நடந்துள்ளது[9].

© வேதபிரகாஷ்

11-04-2017

mO UNIFORMITY ON ucc

[1] தினத்தந்தி, ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு 3.5 கோடி முஸ்லிம் பெண்கள் ஆதரவு: முஸ்லிம் சட்ட வாரியம் தகவல், ஏப்ரல் 09, 10:11 PM

[2] http://www.vikatan.com/news/india/85845-vice-president-ansaris-wife-critized-triple-talaq.html

[3] Nikah halala is a practice intended to curb incidence of divorce under which a man cannot remarry his former wife without her having to go through the process of marrying someone else, consummating it, getting divorced, observing the separation period called Iddat and then coming back to him again.

http://www.firstpost.com/india/triple-talaq-impacts-dignity-of-muslim-women-denies-fundamental-rights-centre-to-supreme-court-3378828.html

[4] ZeeNews, Triple talaq: AIMPLB says will do away with practice in 18 months, no need for govt intervention, By Zee Media Bureau | Last Updated: Tuesday, April 11, 2017 – 10:48.

[5] http://zeenews.india.com/india/triple-talaq-aimplb-says-will-do-away-with-practice-in-18-months-no-need-for-govt-intervention-1994931.html

[6] The Hindu, Polygamy is not a religious practice, government tells Supreme Court, NEW DELHI APRIL 11, 2017 00:58 IST UPDATED: APRIL 11, 2017 12:49 IST.

[7] http://www.thehindu.com/news/national/polygamy-is-not-a-religious-practice-government-tells-sc/article17915070.ece

[8] Financial Express, Triple Talaq victim hangs herself in Uttar Pradesh, another sits on dharna outside in-laws’ house, By: FE Online | Noida | Updated: April 11, 2017 2:01 PM.

[9] http://www.financialexpress.com/india-news/shocking-triple-talaq-victim-hangs-herself-in-yogi-adityanaths-uttar-pradesh/623732/

 

செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக்: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலை – ஷரீயத் உதல் வரை பொது சிவில் சட்ட கோரிக்கை வரை(2)

ஏப்ரல் 11, 2017

செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக்: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலைஷரீயத் உதல் வரை பொது சிவில் சட்ட கோரிக்கை வரை(2)

Wovs of talaq sufferings

முத்தலாக் வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது: தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டுக்கும், இஸ்லாமிய தனி நபர் சட்ட வாரியத்திற்கும் கருத்து மோதல்கள் நிகழ்ந்து வந்த நிலையில் மார்ச் 30, 2017 அன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது[1]. அப்போது, இவ்வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு உத்தரவிட்டது. மேலும், வரும் மே மாதம் 11-ம் தேதி 2017 முதல் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர். முன்னதாக, இவ்வழக்கை கோடை விடுமுறைக்கு பின்னர் விசாரிக்க வேண்டும் என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வைத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து விட்டனர். மூன்று தலாக் சொல்லி திருமண உறவை முறித்துக்கொள்ளும், நடைமுறைக்கு தடை விதிக்க கோரி இஸ்ரத் ஜஹான் என்ற முஸ்லிம் பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கில், இஸ்லாமியர்கள் கடைபிடித்து வரும் முத்தலா‌க் முறையை அரசியல் சட்டத்திற்கு விரோதமானதாக அறிவிக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு பதிலளித்துள்ளது[2]. இதுவிசயமாக பல வழக்குகள் பதிவாகியுள்ளதால், அவை அனைத்தும், மொத்தமாக விசாரிக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது.

Wovs of talaq sufferings- women demand justice

ஷரீயத் பிரிவு பெண்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது: இஷ்ரத் ஜகான் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மூன்று முறை தலாக் என கூறி மனைவியை கணவன் விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு, இஸ்லாமிய சட்டம் அனுமதிக்கிறது[3]. முஸ்லிம் தனிநபர் சட்டம்-1937 (ஷரியத்), பிரிவு-2ல் இதற்கு அனுமதியுள்ளது[4]. இந்த அனுமதி பெண்களின் அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 14ன்கீழ் கொடுக்கப்பட்டுள்ள, உரிமை மீறப்படுகிறது. எனவே தலாக் நடைமுறையை நீக்க வேண்டும் என்று அந்த பெண்மணி கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பான வழக்கில் முத்தலாக் முறை சம உரிமைக்கு எதிராக அமைந்திருப்பதால் அதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முத்தலாக் முறையால் இஸ்லாமிய பெண்கள் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது. ‌ஆனால், முத்தலாக் முறை இஸ்லாமியர்களுக்கான மத உரிமை என்றும் இதில் அரசு தலையிடக் கூடாது என்றும் அகில இந்திய முஸ்லிம் தனி நபர் சட்ட வாரிய‌ம் தெரிவித்துள்ளது. அனைத்திந்திய முஸ்லிம் பெண்கள் சட்ட வாரியம், மூன்று தலாக் நடைமுறையை நீக்க விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Talaq-talaq-talaq

பலமுறைகளில் தலாக், தலாக், தலாக் சொல்லி விவாகரத்து செய்வது: முஸ்லிம் கணவர்கள் எப்படி இந்த முத்தலாக்கை செய்து வருகின்றனர் என்று ஏராளமான செய்திகள் வந்துள்ளன. முன்பு, தபால் அட்டைல் தபால், கூரியர் என்றெல்லாம் இருந்து, பிறகு போன், டெலக்ஸ் என்று மாறி, இப்பொழுது, இணைதள அளவில், மெஸேஜ், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் என்ற நிலைக்கு வந்துள்ளது. இதனால், அதிகம் பெண்கள் பதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில், முத்தலாக் முறையானது சம உரிமைக்கு எதிராக இருப்பதாகவும், அதற்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லை எனவும் மத்திய அரசு சார்பாக எழுத்துப் பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது[5]. இம்முறையால் இஸ்லாமியப் பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது[6]. ஆனால், அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியம், முத்தலாக் முறையானது இஸ்லாமியர்களுக்கான மத உரிமை என்றும், இதில் அரசு தலையிடக் கூடாது எனவும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கடந்த 5-ம் தேதி கான்பூரைச் சேர்ந்த அலியா சித்திக் என்பவர், தனது கணவர் விரைவு தபாலில் முத்தலாக் அனுப்பியுள்ளதாக மோடியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.  உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத்திடமும் அவர் இதுபற்றி புகார் அளித்து இருந்தார். அவர், சந்திக்க நேரம் ஒதுக்கி தருமாரும் தனக்கு நியாயம் கிடைக்க வழி செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ansari wife- VP

முத்தாலிக், குரானில் இல்லை, மௌலானாக்களால் உருவாக்கப் பட்டதுசல்மா அன்சாரி: நாடு முழுவதும் ‘தலாக்’ விவகாரத்து விவகாரம் பெரும் விவாதங்களை உருவாக்கி வருகிறது. இஸ்லாமிய திருமண முறையில் இருந்து விவகாரத்து பெறுவதற்கு மூன்று முறை ‘தலாக்’ என்று கூறினால் மட்டும் போதுமானது. இந்த முறையை பின்பற்றுவதால் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று தொடர்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.  இதுதொடர்பாக நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக போனில் எஸ்.எம்.எஸ்ஸில் ‘தலாக்’ என்று விவகரத்து பெறுவதும் தபாலில் ‘தலாக்’ என்று அனுப்பி விவாகரத்து பெறுவதும் நடைபெற்ற சம்பவங்கள் செய்திகளாக வெளிவந்தன. இந்த நிகழ்வுகள் தலாக் முறை மீது கடுமையான எதிர்ப்புகளை உருவாக்கியது[7]. இந்த நிலையில் ‘தலாக்’ குறித்து கருத்து தெரிவித்த சல்மா அன்சாரி, மூன்று முறைதலாக்என்று சொல்வதாக மட்டும்தலாக்நடைமுறை இருக்க கூடாது. மவுலானாவில் என்ன கூறியிருந்தாலும் அது உண்மையா ?.குரானை அதன் மூல மொழியான அராபியில் படித்து தெரிந்துகொள்ளுங்கள். அதனுடைய மொழி பெயர்பில் படிக்காதீர்கள். குரானில் இருந்து அறிவை வளர்த்து கொள்ளுங்கள். அதுகுறித்து சிந்தனை செய்யுங்கள். யாரையும் குருட்டுத்தனமாக நம்பாதீர்கள்‘ என்று கூறியுள்ளார்[8].

muslim-act-misused-for-marrying-many-women

ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு 3.5 கோடி முஸ்லிம் பெண்கள் ஆதரவு: ராஜஸ்தானின் ஈத்காஹ் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அந்த வாரியத்தின் பெண்கள் பிரிவின் தலைவரான அஸ்மா ஜோஹ்ரா, முஸ்லிம் சமூகத்தில் விவாகரத்து எண்ணிக்கை அதிகம் இருப்பது போன்ற ஒரு தோற்றத்தினை உருவாக்க சிலர் முயற்சி செய்கின்றனர். நாட்டில் ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு ஆதரவாக முஸ்லிம் பெண்களிடம் இருந்து 3.5 கோடி விண்ணப்பங்கள் எங்களுக்கு வந்துள்ளன[9].  இவற்றிற்கு எதிரான பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு என கூறினார். பெண்களின் உரிமைகள் என்ற பெயரில் முஸ்லிம் சமூகம் மீது அவதூறு ஏற்படுத்துவதற்கான சதி மற்றும் முஸ்லிம் சமூக கட்டமைப்பினை தகர்க்கும் முயற்சியிது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்[10]. ஷரியத் மற்றும் இஸ்லாமில் உள்ள தங்களது உரிமைகளை முஸ்லிம் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டிய நேரமிது.  பெண்களுக்கு அதிகளவில் உரிமைகளை இவை வழங்கியுள்ளன என்பதனை மற்றவர்கள் கூட தெரிந்து கொள்ளட்டும் என அவர் கூறியுள்ளார். அந்த வாரியத்தின் உறுப்பினர் யாஸ்மின் பரூக்கி கூறும்பொழுது, முஸ்லிம் பெண்கள் என்றால் படிக்காதவர்கள் மற்றும் எளிதில் முட்டாளாக்கி விடலாம் என சித்தரிக்கப்பட்டுள்ளது.  ஆனால் உண்மை அதுவல்ல.  முஸ்லிம் பெண்கள் வெளிப்படையாக ஷரியத்திற்கு ஆதரவாக முன்வந்துள்ளனர். குறைந்த அளவிலான பெண்களே அவற்றிற்கு எதிராக உள்ளனர்.  தற்பொழுது வாரியம், வரதட்சணை கொடுமை, குறைந்த செலவில் திருமணங்களை முடித்தல் மற்றும் சொத்தில் மகள்களுக்கும் சம உரிமை போன்ற விவகாரங்களை சரி செய்யும் பணியை மேற்கொண்டுள்ளது என கூறியுள்ளார்.

© வேதபிரகாஷ்

11-04-2017

muslim-women-protection-divorce-act-1986

[1] மாலைமலர், முத்தலாக் வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவு, பதிவு: மார்ச் 30, 2017 15:12.

[2] http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/30151231/1077027/SC-bench-refers-TripleTalaq-matter-to-constitution.vpf

[3] தமிழ்.ஒன்.இந்தியா, முத்தலாக்அரசியல் சட்டத்திற்கு விரோதமானது.. சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில், By: Karthikeyan; Published: Tuesday, April 11, 2017, 3:31 [IST]

[4] http://tamil.oneindia.com/news/india/triple-talaq-makes-muslim-women-socially-financially-vulner-279416.html

[5] விகடன், முத்தலாக் முறைக்கு அரசியல் சாசன அங்கீகாரம் இல்லைஉச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு!, Posted Date : 02:59 (11/04/2017); Last updated : 02:59 (11/04/2017)

[6] http://www.vikatan.com/news/india/86044-triple-talaq-violate-right-to-equality—centre-tells-sc.html

[7] விகடன், முத்தலாக்முறைக்கு எதிராக குரல் கொடுக்கும் சல்மா அன்சாரி, Posted Date : 21:37 (08/04/2017); Last updated : 21:37 (08/04/2017).

[8] http://www.vikatan.com/news/india/85845-vice-president-ansaris-wife-critized-triple-talaq.html

[9] தினத்தந்தி, ஷரியத் மற்றும் முத்தலாக்கிற்கு 3.5 கோடி முஸ்லிம் பெண்கள் ஆதரவு: முஸ்லிம் சட்ட வாரியம் தகவல், ஏப்ரல் 09, 10:11 PM

[10] http://www.dailythanthi.com/News/India/2017/04/09221142/350-cr-women-support-Shariyat-Triple-Talaq–AIMPLB.vpf

செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக்: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலை – ஷாபானு வழக்கிலிருந்து சர்ளா முதுகல் வரை (1)

ஏப்ரல் 11, 2017

செக்யூலரிஸம், பொது சிவில் சட்டம், பலதார திருமணம் முத்தலாக்: உச்சநீதி மன்றத்திற்கு வந்து விட்ட நிலைஷாபானு வழக்கிலிருந்து சர்ளா முதுகல் வரை (1)

ஷா பானு வழக்கு

ஷாபானு வழக்கின் விளைவு, தனி சட்டம் உருவானது (1986): இஸ்லாம் மதத்தில் மூன்று முறை ‘தலாக்’ எனக் கூறி விவாகரத்து செய்யும் வழக்கமுள்ளதால், முறையால் பெண்களுக்கு பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சட்டரீதியில் சென்றால் கூட, பாரபட்சமான நீதி வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 1986ல் ராஜிவ் காந்தி காலத்தில் “ஷாபானு வழக்கு” மூலம் பிரச்சியானது, பலரால் விவாதிக்கப் பட்டது. இருப்பினும், இஸ்லாமிய அடிப்படைவாத அழுத்தத்திற்கு, மிரட்டல்-உருட்டல்களுக்கு ராஜிவ் காந்தி பயந்து, உச்சநீதி மன்ற தீர்ப்பிலிருந்து முஸ்லிம்களுக்கு விலக்கு அளிக்கும் விதமாக, தனி சட்டத்தை உருவாக்கினார். உண்மையில், சிவில் சட்டம் [Code of Criminal Procedure] 125வது பிரிவின் படி, விவாக ரத்து செய்யப்படும் பெண்ணிற்கு, கணவன் உரிய ஜீவனாம்சம் கொடுக்கப்பட வேண்டும் என்றுள்ளது. இதனால், ஷாபானு, தனக்கு அளிக்கப் படும் ஜீவனாம்சம் போதவில்லை என்று, மேற்குறிப்பிட்ட சரத்தின் படி வழக்கு தொடர்ந்தாள். ஆனால், கணவன் மொஹம்மது கான், இஸ்லாமிய சட்டமுறையில், தான் விவாகரத்து செய்திருப்பதால், அச்சட்டத்தின் படியே மஹர் / ஜீவனாம்சம் கொடுக்க தீர்மானித்ததால், அச்சட்டம் [S.125 CrPC] தனக்கு பொறுந்தாது என்று வாதாடி, உயர்நீதி மன்றத்தில் வெற்றிபெற்றான். ஆனால், உச்சநீத் மன்றத்தில், அதை தள்ளுபடி செய்து, ஷாபானுக்கு உரிய ஜீவனாம்சம் அளிக்கும்படி ஆணையிட்டது[1].

Children affected by talaq

ஷாபானு வழக்கிற்கு எதிர்ப்பு, மதஅரசியலின் ஆரம்பம்: இதனால், முஸ்லிம்கள் தங்களது மதச்சட்டத்தில் அரசு அல்லது நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி ஆர்பாட்டம் செய்தனர்[2]. 125ற்கு விலக்கு அளித்தது. தனியாக, முஸ்லிம் பெண்கள் உரிமைகள்  பாதுகாப்பு மற்றும் விவாக ரத்து சட்டம், 1986 [The Muslim Women (Protection of Rights on Divorce) Act, 1986] என்று உருவாக்கப்பட்டது. இங்கு ஷாபானு என்பது 70 வயதிற்கும் மேலான மூதாட்டி என்று குறிப்பிடத் தக்கது. அத்தகைய நிலையில், பெண்கள், என்ன பாடு படுகிறாள் என்பது உலகிற்கு தெரிய வந்தது. இருப்பினும், செக்யூலரிஸ மற்ற சித்தாந்திகள் அதனை பெண்கள் பிரச்சினை என்று எடுத்துக் கொள்ளாமல், மதப்பிரச்சினை, முஸ்லிம்களின் உள்விவகாரம் அதில் மற்றவர்கள் நுழையக் கூடாது என்ற ரீதியில் பிரச்சாரம் செய்யப் பட்டது. அந்நிலையிலும், பொது சிவில் சட்டம் தேவை என்ற கருத்தும் உருவாகி, விவாதத்திற்கு வந்தது. அப்பொழுது, பிஜேபி ஆட்சியில் இல்லை, மேலும், அது அக்கட்சியினையும் தொடர்பு படுத்தவில்லை. ஆனால், தேர்தல் வாக்குருதிகளில் பொது சிவில் சட்டம் கொண்டு வர முயற்சி செய்வோம் என்று குறிப்பிட்டது.

talaq-case-nikkah-namah-divorce

1995ல் சர்ளா முதுகல்பொது சிவில் சட்ட ஞாபகவூட்டல் தீர்ப்பு: 1995ல் சர்ளா முதுகல் உச்சநீதி மன்ற தீர்ப்பில், “1949லிருந்து, 41 வருடங்களாக இந்த 44 பிரிவு குளிர்பெட்டியிலேயே வைத்திருக்கிறார்கள். அரசுகள் வந்தன, சென்றன, ஆனால், இருப்பினும், இந்திய மக்கள் அனைவரையும் இணைக்கும் முறையில் ஒரு பொது சிவில் சட்டம் கொண்டு எந்த முயற்சியும் எடுக்காமல் தோல்வி அடைந்துள்ளனர்”, என்று நீதிபதி பதிவு செய்தார்[3]. இது எப்படி ஆண்கள் இரண்டாவது திருமணத்தை முகமதிய மதம் மாறி சட்டப்படி செய்து கொள்கிறார்கள், அதனால், முதல் மனைவி, இந்துவாக இருப்பதனால் பாதிக்கப்படுகிறாள் என்றும் எடுத்துக் காட்டப்பட்டது[4]. செக்யூலரிஸம், பெண்ணுரிமைகள் சமநீதி, சமூகநீதி என்றெல்லாம் பேசும், பேசிய வி.பி.சிங், சந்திரசேகர், ஐ.கே.குஜரால், தேவ கௌடா முதலியோர் கண்டுகொள்ளவில்லை. ”என்.டி.ஏ கூட்டணியில் இருக்கும் பிஜேபி எப்பொழும் “பொது சிவில் சட்டத்திற்கு” ஆதரவாக குரல் கொடுத்து வருவது தெரிந்த விசயமே. ஆனால், அது “கம்யூனலிஸம்” என்று முத்திரைக் குத்தப்பட்டு, ஒதுக்கப்படுவது, மனித உரிமைகள் பேசும் கூட்டங்களின் போக்காகவே இருந்து வருகின்றது.  இந்துக்கள் அதிகமாக இருப்பதால், அவர்களுக்கு சாதகமாக இருக்கும் போன்ற வாதங்களும் வைக்கப்பட்டன. ஆனால், மதரீதியில், எந்த இந்து பெண்ணும் / ஆணும், இந்திய அரசியல் நிர்ணய சட்டம் அல்லது வேறெந்த சட்டமும் தனக்கு பொறுந்தாது, தனது மத நம்பிக்கைகளில் தலையிடக்கூடாது என்று யாரும் வழக்குத் தொடரவில்லை. இருக்கும், சிவில்-கிரிமினல் சட்டங்களை ஏற்றுக்கொண்டு மதித்து நடந்து வருகிறார்கள். ஆனால், சிறுபான்மையினர் என்று முஸ்லிம்கள் தான் எதிர்த்து வருகின்றனர். கிருத்துவர்கள் பொதுவாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

UCC

பொது சிவில் சட்டம் எதிர்ப்பு, முத்தலாக் ஆதரிப்பு: பொது சிவில் சட்டம் இவ்வாறு, செக்யூலரிஸ்டுகள், முஸ்லிம்கள் மற்ற சித்தாந்திகள் எதிர்த்து தங்களது வாதங்களை வைத்டுள்ளனர்:

  1. இந்தியா ஒரு செக்யூலரிஸ நாடு, பல மதங்கள் இருப்பதனால், அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப அவர்கள் நடந்து கொள்ளலாம். அதற்கான உரிமைகள் அரசியல் நிர்ணய சட்டம் கொடுத்துள்ளது.
  2. மதரீதியில் மக்களை செக்யூலரிஸப்படுத்தலாம், ஆனால், சட்டரீதியில் அவர்களை செக்யூலரிஸப்படுத்த முடியாது.
  3. மக்களை ஒரே விதமாக மாற்ற முயலும் இந்தப் பொது சிவில் சட்டம், நாட்டின் பன்முகத்துவம் மற்றும் கலாச்சார தனித்துவங்களுக்கு அச்சுறுத்த உள்ளது.
  4. பல்வேறு பண்பாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், பொது சிவில் சட்டம் கொண்டு வந்தால் அது அனைவரைக்கும் எதிரான ஒரு செயலாக மாறும்.
  5. எல்லோரையும் ஒரே மாதிரியானவர்களாக காட்ட எடுக்கப்படும் முயற்சி தோல்வியையே தழுவும்.
  6. இது நாட்டு நலனுக்கு நல்லதல்ல. மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் தோல்வி அடைந்து வருகிறது. அதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப இதுபோன்ற முயற்சிகளை செய்து வருகிறது.
  7. அதனால், அரசு இந்த முயற்சியைக் கைவிட வேண்டும். மூன்று முறை தலாக் கூறும் நடைமுறையை நீக்க நாங்கள் விரும்பவில்லை.
  8. பிற சமூகத்தினரிடையே அதிகமாக விவாகரத்துகள் நடைபெறுகின்றன. முஸ்லிம்களை விட இந்துக்களிடையே இருமடங்கு விவாகரத்துகள் அதிகமாக உள்ளன.
  9. முஸ்லிம்கள், தாமாகவே முன் வந்து, அத்தகைய சட்டத்தை ஏற்றுகொள்ள முன்வரும் வரை வற்புருத்தக் கூடாது.
  10. அதுவரை, அவர்களுக்கு ஷரீயத் சட்டம் தொடர்ந்து அமூல் படுத்த வேண்டும்.

செக்யூலரிஸ ஊடகங்கள், 1995லிருந்து, இத்தகைய பிரச்சாரத்தை செய்து வருகின்றன. ஆனால், இணைதள விவரங்கள், செய்திகள் முதலியவை பரவி வருவதால், பொது மக்களுக்கு பற்பல உண்மைகள் தெரிய வர ஆரம்பித்தன.

Muslim women oppose talaq etc

முஸ்லிம்கள் தாமாகவே முத்தலாக் முறையற்றது, பெண்களின் உரிமைகளைப் பறிப்பது என்று வாதிட வந்தது, வழக்குத் தொடுத்தது: முத்தலாக் முறை பெண்களின் விருப்பத்துக்கு எதிராக இருப்பதாகவும், இஸ்லாமிய பெண்களின் உரிமையைப் பறிப்பதாகவும் பா.ஜ.க அரசின் சார்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும், பிரதமர் மோடி உத்தரப்பிரதேச தேர்தல் சமயத்தில், பா.ஜ.க முத்தலாக் முறையை எதிர்ப்பதாகவும், முத்தலாக் முறையை ஒழிக்க முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் வாக்குறுதியளித்தார். இம்முறையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இது குறித்து பதிலளிக்கும்படி, அனைத்திந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்டோருக்கு, தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு, ‘நோட்டீஸ்’ அனுப்பியது. முஸ்லிம் சமூகத்தில் மூன்று முறை “தலாக்” என கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை அரசியல் சாசன விதிகளின்படி ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது. மூன்று முறை தலாக் செய்யும் முறையை நியாயப்படுத்தும் விதமாக இந்தியாவின் உயர்மட்ட இஸ்லாமிய  சட்ட வாரியம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2016 சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வாக்குமூலத்தை பதிவு செய்தது. சுப்ரீம் கோர்ட்டு மத சுதந்திரத்தில் தலையிடக்கூடாது என்றும் சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் தனிப்பட்ட சட்டங்களை மீண்டும் மாற்றி எழுதக்கூடாது என்றும் அந்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

© வேதபிரகாஷ்

11-04-2017

We are one - UCC - divide

[1] Supreme Court of India, Mohd. Ahmed Khan vs Shah Bano Begum And Ors on 23 April, 1985; Equivalent citations: 1985 AIR 945, 1985 SCR (3) 844; Author: Y Chandrachud; Bench: Chandrachud, Y.V. ((Cj), Desai, D.A., Reddy, O. Chinnappa (J), Venkataramiah, E.S. (J), Misra Rangnath; PETITIONER: MOHD. AHMED KHAN Vs. RESPONDENT:SHAH BANO BEGUM AND ORS.; DATE OF JUDGMENT23/04/1985.

[2] https://indiankanoon.org/doc/823221/

[3] “I do not think that at the present moment the time is ripe in India for me to try to push it through”. It appears that even 41 years thereafter, the Rulers of the day are not in a mood to retrieve Article 44 from the cold storage where it is lying since 1949. The Governments – which have come and gone – have so far failed to make any effort towards “unified personal law for all Indians”.

[4] Supreme Court of India, Smt. Sarla Mudgal, President, … vs Union Of India & Ors on 10 May, 1995, Equivalent citations: 1995 AIR 1531, 1995 SCC (3) 635; Author: K Singh; Bench: Kuldip Singh (J);            PETITIONER: SMT. SARLA MUDGAL, PRESIDENT, KALYANI & ORS. vs. RESPONDENT: UNION OF INDIA & ORS. DATE OF JUDGMENT10/05/1995

https://indiankanoon.org/doc/733037/

 

தலைமை காஜி வழங்கும் தலாக் (விவாக ரத்து) சான்றிதழ் செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு – முஸ்லிம் லீக்கின் வெளிப்பாடு!

ஜனவரி 18, 2017

தலைமை காஜி வழங்கும் தலாக் (விவாக ரத்து) சான்றிதழ் செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு – முஸ்லிம் லீக்கின் வெளிப்பாடு!

talaq-case-nikkah-namah-divorce

காஜி வழக்கம் போல் பத்வாக்களை (சான்றிதழ்களை) வழங்குவதை யாரும் தடுக்கவும் முடியாது[1]: மார்க்க சட்டத்தின்படி உள்ள கருத்தை தலைமை காஜி தெரிவிக்கும் போது அதனை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. தனது கருத்தை ஏன் ஏற்கவில்லை என்று தலைமை காஜியோ, துணை காஜியோ இதுவரை யாரிடமும் கேள்வி எழுப்பியதில்லை. இதுதான் தமிழகத்தில் உள்ள நடைமுறை. சென்னை உயர்நீதிமன்றம் கருத்துப்படி தலைமை காஜி கருத்தை அரசாங்க அதிகாரிகளோ, நீதிமன்றமோ ஏற்பதும், ஏற்காததும் அவரவர்களது விருப்பத்தை பொறுத்தது. இதனால் தலைமை காஜி அவர்களுக்கு அவருடைய பத்வா வழங்கும் உரிமைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது. அவர் வழக்கம் போல் பத்வாக்களை (சான்றிதழ்களை) வழங்குவதை யாரும் தடுக்கவும் முடியாது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பானது, தலைமை காஜியின் இந்த உரிமையை பறிக்கவும் இல்லை. இந்த தெளிவை தலைமை காஜியும் மற்றுமுள்ள துணை காஜிகளும் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.

kajis-and-the-talaq-certificates-issued-high-court-12-01-2017

முஸ்லீம் லீக் வலியுறுத்துவது[2]: இத்தகைய குழப்பங்கள் அவ்வப்போது எழும் என்பதால்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் கீழ்க்கண்டவற்றை தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கிறோம்.

  1. முதலாவதாக, 1880-ம் ஆண்டின் காஜி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தலைமை காஜி மற்றும் நாயிப் (துணை காஜி)கள் திருமண நிகழ்வுகளை பதிவு செய்யும் பதிவாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு, அந்த பதிவுகளையே அரசாங்கப் பதிவுகளாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
  2. 2008-ம் ஆண்டு நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் அவர்கள் தலைமையில் இந்திய சட்ட ஆணையம் செய்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் காஜிகள், இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்வதுடன், திருமண முறிவுகளையும் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
  3. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்று காஜிகள் திருமணப் பதிவாளர்களாகவும், திருமண முறிவுகளை பதிவு செய்பவர்களாகவும் அரசாங்கம் அங்கீகரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

இப்படிப்பட்ட தீர்மானங்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநாடுகள் மற்றும் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்கள் அனைத்திலும் நிறைவேற்றப்பட்டு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன. காஜிகளுடைய அந்தஸ்தையும், கண்ணியத்தையும் நிலைபெறச் செய்வதற்கு இத்தகைய அதிகாரங்களை அவர்களுக்கு வழங்கப்படுவதற்கு மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்துவது சமுதாயத்தின் இன்றைய கட்டாயக் கடமையாகும். இதனை விடுத்து வேறு விதமான சிந்தனைகளில் ஈடுபட்டு, சமுதாயத்தில் ஷரீஅத் சட்டப் பிரச்சனையிலும், குளறுபடிகளை செய்து கொண்டிருக்கிற குழப்பவாதிகள் தங்களை திருத்திக் கொண்டு காஜிகளுடைய அதிகார வரம்பை கூட்டுவதற்கும், அதன் மூலம் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தை நிலை நாட்டுவதற்கு எல்லோரும் ஒன்றுபட்டு முன்வர வேண்டும்.

kajis-and-the-talaq-certificates-issued-high-court-12-01-2017-2

ஷபானு பிரச்சினை போன்று இதைத் திருப்ப முயற்சிக்கும் முஸ்லிம் இயக்கங்கள்: முஸ்லீம் லீக்கின் கருத்துகளை அலசவேண்டியுள்ளது:

  1. ‘1880-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள காஜிகள் சட்டத்தில், முஸ்லிம்கள் தங்களின் மார்க்க சம்பந்தமான நிகழ்ச்சிகளில் காஜிகள் கலந்து கொண்டு தங்களது அபிப்பிராயங்களை தெரிவிப்பதற்கான அதிகாரம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது.
  2. அதே காஜிகள் அரசாங்கத்தால் நியமிக்கப்படுகிறார்கள். அதாவது, அரசால் நியமிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கலாம்.
  3. மார்க்க சட்டத்தின்படி உள்ள கருத்தை தலைமை காஜி தெரிவிக்கும் போது அதனை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.
  4. தனது கருத்தை ஏன் ஏற்கவில்லை என்று தலைமை காஜியோ, துணை காஜியோ இதுவரை யாரிடமும் கேள்வி எழுப்பியதில்லை. இதுதான் தமிழகத்தில் உள்ள நடைமுறை.
  5. அதாவது தீர்ப்புகளை முஸ்லிம்கள் ஏற்கலாம், ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். இங்குதான், அடிப்படைவாத-தீவிரவாதிகளின் கட்டுப்பாடு வருகிறது. அவர்களது கருத்து, காஜிக்களின் கருத்துகளை மிஞ்சும் போது, அவர்களது பத்வா எடுபடுகின்றது.talaq-certificates-issued-by-cheif-kazi-no-legal-sanction-toi-high-court-12-01-2017
  6. சென்னை உயர்நீதிமன்றம் கருத்துப்படி தலைமை காஜி கருத்தை அரசாங்க அதிகாரிகளோ, நீதிமன்றமோ ஏற்பதும், ஏற்காததும் அவரவர்களது விருப்பத்தை பொறுத்தது. இதனால் தலைமை காஜி அவர்களுக்கு அவருடைய பத்வா வழங்கும் உரிமைக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது.
  7. அவர் வழக்கம் போல் பத்வாக்களை (சான்றிதழ்களை) வழங்குவதை யாரும் தடுக்கவும் முடியாது.
  8. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பானது, தலைமை காஜியின் இந்த உரிமையை பறிக்கவும் இல்லை. இந்த தெளிவை தலைமை காஜியும் மற்றுமுள்ள துணை காஜிகளும் உணர்ந்து கொள்வது அவசியமாகும்.
  9. 1880-ம் ஆண்டின் காஜி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து தலைமை காஜி மற்றும் நாயிப் (துணை காஜி)கள் திருமண நிகழ்வுகளை பதிவு செய்யும் பதிவாளர்களாக அங்கீகரிக்கப்பட்டு, அந்த பதிவுகளையே அரசாங்கப் பதிவுகளாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
  10. 2008-ம் ஆண்டு நீதியரசர் ஏ.ஆர். லட்சுமணன் அவர்கள் தலைமையில் இந்திய சட்ட ஆணையம் செய்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் காஜிகள், இஸ்லாமிய திருமணங்களை பதிவு செய்வதுடன், திருமண முறிவுகளையும் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்று காஜிகள் திருமணப் பதிவாளர்களாகவும், திருமண முறிவுகளை பதிவு செய்பவர்களாகவும் அரசாங்கம் அங்கீகரிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.

ஏற்கெனவே, இவ்வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், முஸ்லிம் பெண்ணிய இயக்கங்கள் வழக்குத் தொடுத்துள்ளதாலும், இப்பிரச்சினையை பெரிதாக்க, முஸ்லிம்கள் விரும்பவில்லை, விளம்பரம் கிடைப்பதையும் விரும்பவில்லை.

© வேதபிரகாஷ்

18-01-2017

triple-talaq-certificate-issued-by-chief-kazi-illegal-the-hindu-12-01-2017

[1] http://www.muslimleaguetn.com/news.asp?id=3429

[2] கே.எம்.கே, , காஜிகளும்தலாக் சான்றிதழும் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தைநிலை நாட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும்!, மணிச்சுடர் Friday, January 12, 2007.

தலைமை காஜி வழங்கும் தலாக் (விவாக ரத்து) சான்றிதழ் செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு!

ஜனவரி 18, 2017

தலைமை காஜி வழங்கும் தலாக் (விவாக ரத்து) சான்றிதழ் செல்லாது: சென்னை உயர்நீதி மன்றம் தடை உத்தரவு!

madras-high-court-bans-sharia-court-woman-position

2007 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஹாஜிக்கள் வழங்கிய தலாக் சான்றிதழ்கள் முறையற்றவை: அ.தி.மு.கவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பதர் சயீத் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இஸ்லாமிய தனி நபர் சட்டத்தின்படி திருமணமான ஆண் மூன்று முறை தலாக் என்று கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை உள்ளது என்றும், ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரை சான்றிதழ் வழங்கிவிட்டால் அதுவே இறுதி முடிவாக எடுத்து கொள்ளப்படுவதாகவும் அதில் கூறியிருந்தார். இந்த முஸ்லிம் நடைமுறையானது பெண்களுக்கு எதிரானது என்றும், ஹாஜிக்கள் வழங்கும் சான்றிதழ் வெறும் பரிந்துரையே தவிர அது இறுதி முடிவல்ல என்றும் பதர் சயீத் தெரிவித்திருந்தார்[1]. மேலும், 2007 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை ஹாஜிக்கள் வழங்கிய பரிந்துரை சான்றிதழ்களில் சிலவற்றை நீதிமன்றத்தில் சமர்பித்த பதர் சயீத் தரப்பு, ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரைத்து சான்றிதழ் வழங்கியது, சம்பந்தப்பட்ட பல பெண்களுக்கு தெரியாது என்றும், இந்த நடைமுறையின் போது பெண்கள் ஆஜராகவில்லை என்றாலும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது[2].

muslim-women-divorce-act-1986பெண்ணிய வீராங்கனைகள், உரிமைப் போராளிகள், முதலியோர் கண்டுகொள்ளாமல் இருப்பது: வழக்கம்போல, பெண்ணிய வீராங்கனைகள், உரிமைப் போராளிகள், முதலியோர் கண்டுகொள்ளாமல் இருப்பது கவனிக்கத்தக்கது. சாதாரணமான விசயங்களுக்கு எல்லாம் போராட்டம் என்றெல்லாம் புறப்படும் வீராங்கனைகள் எங்கோ பதுங்கி விட்டது போலத் தெரிகிறது. ரத்தம் சொரிவோம், ஐயப்பன் கோவிலில் நுழைவோம் என்றெல்லாம் புறப்பட்ட பெண்ணுருமை போராளிகளையும் காணோம். முஸ்லிம்கள் விவகாரம் என்றாலே, அவ்வாறு ஒளிந்து கொள்வார்கள் போலும். ஷாபானு விசயத்தில் உச்சநீதி மன்ற நீதிபதிகளின் கால்களை உடைப்போம் என்ற தில்லி இமாம், சட்டத்தை மாற்றி, புதிய சட்டத்தை எடுத்து வந்த விதம், வயதான ஷாபானு இறந்த பிறகும், கண்டுகொள்ளாமல் இருந்தது முதலியன மறந்து விட்டார்கள் போலும், இல்லை நமக்கேன் வம்பு பயந்து செக்யூலரிஸத் தனமாக ஒதுங்கி விட்டார்களோ என்று தெரியவில்லை. அது அவர்களது உள்-விவகாரம் என்றும் நாஜுக்காக சொல்லி அமைதியாக இருந்து விடலாம்.

muslim-women-protection-divorce-act-1986சான்றிதழ் சட்ட அந்தஸ்து இல்லாதது என்ற சுற்றறிக்கையை அனுப்ப உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டனர்: தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய காஜிக்கள் தலாக் சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அ.தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., பதர் சயீது சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், முஸ்லிம் ஆண்கள், தங்கள் மனைவிகளை மூன்று முறை, ‛தலாக்’ கூறி, விவகாரத்து செய்யும் நடைமுறையை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரி இருந்தார்[3]. இந்த மனு இன்று, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் உள்ள ஹாஜிக்கள் பிப்., 21 2017 வரை, தலாக் சான்றிதழ் வழங்க தடை விதித்தனர்[4]. மேலும், இந்த சான்றிதழ் சட்ட அந்தஸ்து இல்லாதது என்ற சுற்றறிக்கையை அனுப்ப உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டனர்[5]. இந்த வழக்கு விசாரணை பிப்.,21ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது[6].

திருமணம் என்னும் நிக்காஹ்.3

திருமணம் என்னும் நிக்காஹ்.3

முஸ்லிம் தனி நபர் சட்டம் 1880 சட்டப் பிரிவு நான்கின் கீழ்ஹாஜிக்கள் தலாக் வழங்குவதற்கு / தலாக் குறித்து கருத்து மட்டுமே அவர்கள் கூறமுடியும்: 1980ம் ஆண்டு ஹாஜிகளுக்கான சட்டத்தில் அவர்களுக்கு இருக்கும் உரிமைகள் பற்றி தெளிவாக சொல்லப்பட்டிருப்பதாக நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுந்தரேஷ் தெரிவித்தனர்[7]. அந்த விதிகளின்படி தலாக் கூறி விவாகரத்து வழங்க ஹாஜிகளுக்கு உரிமை இல்லை என அவர்கள் கூறினர்[8]. முஸ்லிம் தனி நபர் சட்டம் 1880 சட்டப் பிரிவு நான்கின் கீழ், ஹாஜிக்கள் தலாக் வழங்குவதற்கு / தலாக் குறித்து கருத்து மட்டுமே அவர்கள் கூறமுடியும் என்றும், உத்தரவிடமுடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்[9]. இதையடுத்து இந்த வழக்கில் அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹாஜிகளுக்காக உரிமைகள் குறித்து புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்[10].

badar-syedநீதிபதியின் உத்தரவில் சொல்லப்பட்டிருப்பது[11]: “ஹாஜிகளுக்கு எந்த அளவு சட்டஉரிமை இருக்கிறது என்பது முஸ்லீம் ஹாஜி சட்டம் 1880 பிரிவு 4 இல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவருக்கு மதச் சடங்கு செய்யும் உரிமை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே ஹாஜிகளுக்கு எந்த விதசட்டரீதியான உத்தரவும் பிறப் பிக்க உரிமையில்லை. முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் தலாக்சான்றிதழில் மாற்றம் கொண்டுவரப்போவதாகத் தெரிவித்துள் ளது. எனவே இது தொடர்பான அடுத்த உத்தரவு வரும் வரை ஹாஜிக்கள் தலாக் சான்றிதழ் வழங்க இடைக்கால தடை விதிக்கிறோம். மேலும், ஹாஜிக்கள் வழங்கும் தலாக் சான்றிதழ்களுக்கு எந்த விதமான நிர்வாக மற்றும் சட்ட ரீதியான உரிமையில்லை என்றும், அது ஹாஜிக்களின் தனிப்பட்ட கருத்தாகவே கருதப்படும் என்றும் அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் உயர்நீதிமன்றப் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடுகிறோம். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 21 ஆம் தேதி நடைபெறும்”, இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது[12]. இதைப்பற்றி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், “மணிச்சுடர்” கூறுவது, கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

badar-syed-with-jayaகாஜிகளும்தலாக் சான்றிதழும் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தைநிலை நாட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும்![13]: சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட பொது நல வழக்கு ஒன்றில், தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகிய இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு கீழ்க்கண்டவாறு அறிவித்திருக்கிறது.

  1. முதலாவதாக, தமிழ்நாடு தலைமை காஜி மற்றும் நாயிப் (துணை காஜிகள்) யாருக்கும் தலாக் பற்றி சான்றிதழ் வழங்குவதற்கு அதிகாரமில்லை.
  2. இரண்டாவதாக, 1997 முதல் 2015 வரை தமிழ்நாடு தலைமை காஜி வழங்கியுள்ள தலாக் சான்றிதழ்களில் தலாக் என்னும் விவாகரத்து ஏற்பட்டதற்குரிய விவரங்கள் குறிப்பிடப்படாமல் வழங்கப்பட்டிருக்கிறது.
  3. மூன்றாவதாக, வரும் பிப்ரவரி 21-ந்தேதி வரை தலைமை காஜி வழங்கியுள்ள தலாக் சான்றிதழ்களை தமிழ்நாட்டிலுள்ள கீழமை நீதிமன்றங்களோ, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளோ சான்றிதழ்களாக அங்கீகரிக்கத் தேவையில்லை என்று உயர்நீதி மன்ற பதிவாளர் அறிக்கை அனுப்ப வேண்டும்.

மேற்கண்ட தீர்ப்பின் வாசகங்களை பார்க்கும் போது தலைமை காஜி மற்றும் துணை காஜிகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளதைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளன. உண்மை நிலை அதுவல்ல. ‘1880-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள காஜிகள் சட்டத்தில், முஸ்லிம்கள் தங்களின் மார்க்க சம்பந்தமான நிகழ்ச்சிகளில் காஜிகள் கலந்து கொண்டு தங்களது அபிப்பிராயங்களை தெரிவிப்பதற்கான அதிகாரம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது. அதே சட்டத்தின் அடிப்படையில்தான் இன்றும் காஜிகள் அரசாங்கத்தால் நியமிக்கப்படுகிறார்கள். தலைமை காஜி, தங்களிடம் கொண்டு வரப்படும் ‘தலாக்’ போன்ற மார்க்க விவகாரங்களுக்கு பத்வா என்றும், தனது கருத்தை எழுத்து மூலம் தெரிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

 

© வேதபிரகாஷ்

18-01-2017

badar-syed-talaq-case

 

[1] பிபிசி, தமிழகம் : ஹாஜிக்கள் முத்தலாக் பரிந்துரை சான்றிதழ் வழங்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை, ஜனவரி.11, 2017.

[2] http://www.bbc.com/tamil/india-38593266

[3] தினமலர், தலாக்சான்றிதழ் வழங்க தடை, பதிவு செய்த நாள். ஜனவரி.11, 2017.

[4] http://www.dinamalar.com/news_detail.asp?id=1688593

[5] தினகரன், தமிழகம் முழுவதும் தலாக் சான்று வழங்க ஹாஜிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை, 2017-01-11@ 17:30:14

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=271858

[7] புதியதலைமுறை, தலாக் கூறி விவாகரத்து வழங்கும் உரிமை ஹாஜிகளுக்கு இல்லை..நீதிமன்றம், பதிவு செய்த நாள் : January 11, 2017 – 07:57 PM; மாற்றம் செய்த நாள் : January 11, 2017 – 09:46 PM.

[8] http://tv.puthiyathalaimurai.com/detailpage/news/tamilnadu/112/75692/madras-high-court-says-haji-has-no-right-to-provide-grounds-for-divorce

[9] நியூஸ்.7.செனல், இஸ்லாமிய ஹாஜிக்கள் தலாக் சான்றிதழ் வழங்க இடைக்காலத் தடை!, January 11, 2017

[10] http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/11/1/2017/high-court-ordered-not-issue-talaq-certificate-muslim-haji

[11] தீக்கதிர், தலாக் முறைக்கு தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு, January 11, 2017.

[12]https://theekkathir.in/2017/01/11/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/

[13] மணிச்சுடர், காஜிகளும்தலாக் சான்றிதழும் ஷரீஅத் சட்டத்தின் உன்னதத்தைநிலை நாட்ட அனைவரும் ஒன்றுபட வேண்டும்!, Friday, January 12, 2007.

சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் ஷரீயத் கோர்ட்டுகளை சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்து, தீர்ப்பு வழங்கியது – முகமதியர் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை!

திசெம்பர் 21, 2016

சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் ஷரீயத் கோர்ட்டுகளை சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்து, தீர்ப்பு வழங்கியது – முகமதியர் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை!

muslim-women-divorce-act-1986

மனுதாரரின் மனுவை ஏற்க முடியாது[1]: போலீஸ் தரப்பு மனுவில் கூறியிருப்பது தொடர்கிறது[2]மேலும் சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர், மக்கா மஸ்ஜித் ஷரியத்அத் தலைமை ஹாஜிடம் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது, இரு தரப்பினரும் சம்மதத்துடன்தலாக்சொல்லி விட்டால், அது முஸ்லிம் சட்டத்தின்படி செல்லத்தக்கது தான். இதுதொடர்பான விசாரணையில், கணவன்மனைவி மற்றும் அவர்களது பெற்றோர் ஆகியோர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தலைமை ஹாஜி கூறியுள்ளார். எனவே மனுதாரரின் இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும், ” இவ்வாறு துணை கமிஷனர் கூறியிருந்தார்[3]. அதாவது ஷரீயத் கோர்ட்டுக்கு ஆதரவாக இவர் கூறியிருப்பது தெரிகிறது. சட்டம் அமூல்படுத்தும் அரசு அதிகாரிகள், இவ்வாறு பாரபட்சமாக செயல்படுவதுதான், இந்திய செக்யூலரிஸத்திற்கு அபாயம், ஆனால், அவ்வாறு இருப்பதும் பெருமையாக கருதுகிறார்கள். முற்போக்கு இத்தாந்தம் என்றெல்லாம் பேசுபவர்கள் இத்தகைய அடிப்படைவாதத்தை ஆதரித்து வருவது திகைப்பூட்டுவதாக இருக்கிறது.

madras-high-court-bans-dhariat-cout-20-12-2016-sun-news

வழிபாட்டை தவிர வேறு ஏதாவது செயல்களில் ஈடுபட்டால், குறிப்பாக நீதிமன்றம் போல் செயல்பட்டால், அதுகுறித்து நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமை[4]: இந்த பதில் மனுவை படித்து பார்த்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: “துணை கமிஷனர் தாக்கல் செய்துள்ள பதில் மனுவை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதுவும் நீதிமன்றத்தை போல வழிபாட்டு தலங்கள் செயல்படுவதையும் ஏற்க முடியாது. மேலும், மசூதிக்குள் இதுபோன்ற நடவடிக்கைகள் நடப்பதால், அந்த நடவடிக்கைகளை தடுக்க முடியவில்லை என்று அரசு தரப்பு வக்கீல் கூறுவதையும் எங்களால் ஏற்க முடியவில்லை. வழிபாடு நடக்கும் இடம், அதாவது கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என்று எந்த ஒரு வழிப்பாட்டு தலமாக இருந்தாலும், வழிபாட்டை தவிர வேறு ஏதாவது செயல்களில் ஈடுபட்டால், குறிப்பாக நீதிமன்றம் போல் செயல்பட்டால், அதுகுறித்து நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமையாகும். எனவே, இதுபோன்ற செயல்களை தடுக்க அதிகாரிகள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதுகுறித்த அறிக்கையை 4 வாரத்துக்குள் தாக்கல் செய்யவேண்டும். விசாரணையை வருகிற ஜனவரி 19–ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்,”  இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்[5]. நீதிபதியின் ஆணையின் பேரில், அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரியவில்லை. எதற்கு வம்பு என்று இருந்து விடுவார்களா? சன் – டீவி கொடுக்கும் விவரங்களை, இங்கே பார்க்கலாம்[6].

muslim-women-protection-divorce-act-1986

ஷாபானு வழக்கு போன்று மறக்கப்படுமா?: பொதுவாக முகமதியர் தங்களது மதசட்டத்தில் நுழைய யாருக்கும் அதிகாரம் கிடையாது என்று தான் ஆர்பரித்துக் கொண்டிருப்பர். ராஜிவ் காந்தி ஆட்சியின் போது, ஷாபானு வழக்கில், ஷரீயத்தின் படியில்லாமல், விவாகரத்து செய்யப்பட்ட ஷாபானுவிக்கு ஜீவனாம்சம் கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு சொன்ன நீதிபதிகளின் கால்களை உடைப்பேன் என்று கருவிய தில்லி இமாம், அவரை கைது செய்ய நீதிமன்றங்கள் கைது செய்ய ஆணை பிறப்பித்தது, ஆனால், ஒன்றும் நடக்காதது, நீதிமன்ற தீர்ப்பை நீர்க்கும் விதத்தில் புதிய சட்டத்தை எடுத்து வந்தது, வயதான ஷாபானு இறந்தது என்பதையெல்லாம் இப்பொழுது மறந்திருக்கலாம். வயதான மூதாட்டிக்கு ஜீவனாம்சம் கொடுப்பதை, இரக்கமில்லாமல், மதசட்டம் என்ற போர்வையில், ஒரு ஆண் அத்தகைய காரியத்தை செய்ததையும், பெண்ணியம், பெண்கள் இயக்கங்கள் கூட மறந்திருக்கலாம். அப்பொழுது பிறக்காதவர்களுக்கு, இப்பொழுது சொல்லும் போது, தமாஷாகக் கூட இருக்கலாம்.

muslim-act-misused-for-marrying-many-women

முகமதியர் இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வார்களா?: ஆனால், இனி, முகமதியர், இத்தீர்ப்பை ஏற்பார்களா மாட்டார்களா என்று பார்க்க வேண்டும். இதுவரை, இதை எதிர்த்து எந்த கருத்தும் தெரிவிக்கப்படாமல் இருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஷாபானு விசயத்தில் அல்லோல-கல்லோலப் பட்டது என்பது தெரிந்த விசயம் தான். ஆனால், இப்பொழுது, எதையும் காணவில்லை. பொது சிவில் சட்டம் என்று சொன்னால் கூட குதிக்கும், முகமதியர், அரசியல்வாதிகள், இதைப் பற்றி கருத்து, எதிப்பு எதையும் தெர்விக்காமல் இருப்பதும் நோக்கத்தக்கது. இப்பொழுதுள்ள அரசியல் குழப்ப நிலையில், இப்பிரச்சினையை பெரிதாக்க வேண்டாம் என்று நினைக்கிறார்களா, அல்லது மேல் முறையீடு செய்யலாம் என்று இருக்கிறார்களா, அல்லது மனுதாரரை மிரட்டி வாபஸ் செய்ய கட்டாயப் படுத்துவார்களா என்று கவனிக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

21-12-2016

madras-high-court-bans-sharia-court-woman-position

[1] Financial Express, Madras high court bans Sharia courts in mosques, By: FE Online | New Delhi | Updated: December 19, 2016 4:02 PM

[2] http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/article9435069.ece

[3] http://www.financialexpress.com/india-news/madras-high-court-bans-sharia-courts-in-mosquhttp://www.financialexpress.com/india-news/madras-high-court-bans-sharia-courts-in-mosques/479331/es/479331/

[4] Hindusthan Times, Madras high court bans unauthorised Sharia courts in Tamil Nadu , Updated: Dec 19, 2016 18:19 IST.

[5] http://www.hindustantimes.com/india-news/madras-hc-bans-unauthorised-sharia-courts-in-tamil-nadu/story-LAYh4RyesKrK5fZLvSuokK.html

[6] https://www.youtube.com/watch?v=a6Lf5L6TE6w

 

சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் ஷரீயத் கோர்ட்டுகளை சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்து, தீர்ப்பு வழங்கியது!

திசெம்பர் 21, 2016

சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் ஷரீயத் கோர்ட்டுகளை சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்து, தீர்ப்பு வழங்கியது!

dinakaran-madras-high-court-to-ban-shariat-court

தலாக், தலாக், தலாக்விசயத்தில் வழக்கு: கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என்று எந்த ஒரு வழிபாட்டு தலமாக இருந்தாலும், அவை வழிபாட்டை தவிர வேறு ஏதாவது செயல்களில் ஈடுபட்டால், குறிப்பாக நீதிமன்றம் போல் செயல்பட்டால், அதுகுறித்து நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமையாகும் என்று சென்னை ஐகோர்ட்டு 20-12-2016 திஙட்கிழமை அன்று உத்தரவிட்டுள்ளது, என்று தமிழ் ஊடகங்கள் செய்தியை வெளியிட்டாலும், சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வரும் ஷரீயத் கோர்ட்டுகளை [ illegal ‘sharia courts’ functioning from various mosques across Tamil Nadu], சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்து, தீர்ப்பு வழங்கியது என்று ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன[1]. தினகரன் மட்டும் தான் “ஷரியத் கவுன்சில் கட்டப்பஞ்சாயத்து செய்தால் போலீஸ் தடுக்க வேண்டும் : நீதிமன்றம் உத்தரவு” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளது[2]. மேலும் நான்கு வாரங்களில் செயபடுத்திய விவரங்களை தாக்கல் செய்யுமாறு ஆணையிட்டது[3]. ஷரீயத் போல, மத சட்டங்களின் அடிப்படையில், நீதிமன்றம் போன்று கோவில்களில் யாரும் கட்டப்பஞ்சாயத்து செய்வதில்லை. இருப்பினும் செக்யூலரிஸ முறையில் நீதிபதிகள் அவ்வாறு சொல்லியிருப்பது தெரிகிறது.

dinamalar-madras-hingh-court-about-sharia-court-20_12_2016_005_005

முகமதிய பெண்களும் மாறி வருவது தெரிகிறது: சமீப காலத்தில் முஸ்லிம் பெண்கள் “தலாக், தலாக், தலாக்”     என்று மூன்று முறை வாயால் கூறி, விவாகரத்து செய்யும் முறையை எதிர்த்து வருகின்றனர். ஏனெனில், பெரும்பாலும், முகமதிய ஆண்கள் இந்த நவீன காலத்தில், போன், செல்போன், ஈ-மெயில் போன்ற முறைகளிலும் அத்தகைய  “தலாக்” செய்து வருகின்றனர். காரணம் இல்லாமல், பல பெண்களுடன் வாழ வேண்டும் போன்ற நோக்கில் செயல்படும் ஆண்களும் இருக்கிறார்கள். அதற்காக இந்துக்களில் சிலர் மதம் மாறியுள்ளார்கள். ராஜிவ் காந்தி ஆட்சியில், “ஷாபானு” வழக்கில் மெத்தனமாக இருந்ததால், இப்பிரச்சினை பெரிதாகியுள்ளது. இஸ்லாமிய நாடுகளிலேயே இல்லாத வழக்கத்தை, செக்யூலரிஸப் போர்வையில் இந்தியாவில் இத்தகைய இடைக்கால, ஒவ்வாத பழக்க-வழக்கங்களை இந்தியாவில் ஏற்றுக் கொண்டுள்ளதை, முகமதிய பெண்களே சமீபகாலத்தில் எடுத்துக் காட்டி, எதிர்க்க ஆரம்பித்துள்ளனர். பலதார முறை இருந்தாலும், பெரும்பாலான முகமதிய பெண்கள், ஒரு ஆண் – ஒரு பெண் என்ற நியதியை விரும்புகிறார்கள். படித்தவர்கள் அவ்வாறே கடைப்பிடிக்கிறார்கள். இருப்பினும் அடிப்படைவாதிகள் மதவாத அச்சுருத்தல்களுடன், சமூகத்தை மிரட்டி வருகிறார்கள்.

mont-rosd-mosque-shariat-council

சென்னை அண்ணாசாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் ஷரியத்அத் கவுன்சிலை எதிர்த்து வழக்கு: சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் அப்துர் ரஹ்மான். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது[4]: “நான் வெளிநாட்டில் என்ஜினீயராக பணியாற்றினேன். என்னுடைய மனைவி என்னை விட்டுப் பிரிந்து வாழ்ந்தார். அவரை சேர்த்து வைக்கும்படி சென்னை அண்ணாசாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் ஷரியத்அத் கவுன்சிலில் [Makka Masjid Shariat Council] முறையிட்டேன். ஆனால், அவர்கள் என்னை மிரட்டி எனது மனைவியை விவகாரத்து செய்து விட்டதாக என்னிடம் கையெழுத்து வாங்கி கொண்டு, என்னை அனுப்பி விட்டனர். என்னைப் போல பலர் இதுபோல பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் பல இடங்களில் சட்டத்திற்கு விரோதமாக ஷரியத் நீதிமன்றம் என்ற பெயரில் முஸ்லிம் ஜமாஅத்களில் குடும்ப பிரச்சினைகளை விசாரிக்கின்றனர். இவ்வாறு ஜமாஅத்களில் நீதிமன்றம் நடத்துவதற்கு சட்டப்படியான அங்கீகாரம் உள்ளது என்றும், முஸ்லிம் மக்கள் தங்களது பிரச்சினைகளை தங்களது ஷரியத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் எனவும் ஜமாத்தார்கள் கூறி வருகின்றனர்.” சென்னை அண்ணா சாலையில் அத்தகைய ஷரீயத் கோர்ட் இருப்பதே யாருக்கும் தெரியாது எனலாம். ஹெரிந்திருந்தாலும், முகமதியர் விவகாரங்கள் என்று கண்டு கொள்ளாமலும் இருந்திருக்கலாம்.

madras-high-court-bans-dhariat-cout-20-12-2016-toi

ஜமாஅத்களில் தம்பதிகளுக்கு விவாகரத்துகள் மனம்போன போக்கில் ஒரு தலைபட்சமாக வழங்கப்படுவதால் பெண்களுக்கு பாதிப்பு: அப்துர் ரஹ்மான் மேலும் கூறியிருப்பது[5], “இந்த ஜமாஅத்களில் தம்பதிகளுக்கு விவாகரத்துகள் மனம்போன போக்கில் ஒரு தலைபட்சமாக வழங்கப்படுகின்றன. சொத்துப் பிரச்சினைகளிலும் இவர்கள் தான் தீர்ப்பு வழங்குகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான பெண்கள் தங்களின் வறுமை காரணமாக இந்த தீர்ப்புகளை எதிர்த்து நீதிமன்றங்களை நாடுவதில்லை. ஆகவே ஜமாஅத்களில் இதுபோன்ற கட்ட பஞ்சாயத்து நீதிமன்றங்கள் செயல்படுவதை தடை செய்ய வேண்டும்,”  இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது[6]. இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக உள்துறை செயலாளர், டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது. முதன்முதலாக இப்பிரச்சினை கோர்ட்டுக்குச் சென்று, இவ்வாறு வெளி வந்திருப்பது தெரிகிறது. பொதுவாக முகமதியர், இத்தகைய விவகாரங்களை, வெளியே வராமல் அமுக்கி விடுவார்கள். ஜமாத்தை மீறி செயல்படுவதை ஒதுக்கி வைப்பது, மிரட்டுவது, தீர்த்துக் கட்டுவது போன்ற நிலைகளும் உள்ளன.

madras-high-court-bans-dhariat-cout-20-12-2016-hindusthan-times

விவாக ரத்து செய்த தம்பதியரிடம் கருத்து வேறுபாடு: இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் கமிஷனர் சார்பில் திருவல்லிக்கேணி துணை கமிஷனர் பி.பெருமாள் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது[7]: “மனுதாரருக்கும், அவரது மனைவிக்கும் கடந்த 2012–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2013–ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனுதாரர் அண்ணாசாலையில் உள்ள மக்கா மஸ்ஜித் ஷரியத்அத் கவுன்சிலில் புகார் செய்துள்ளார். அந்த கவுன்சிலின் பொதுச் செயலாளர், இருவரையும் சேர்ந்து வாழும்படி அறிவுரை கூறியுள்ளார். இதற்காக இருவருக்கும் கவுன்சிலிங்கும் நடந்துள்ளது.

madras-high-court-bans-dhariat-cout-20-12-2016-financial-express

மறு திருமணம் செய்து கொண்ட தம்பதியர்: போலீஸ் தரப்பு மனுவில் கூறியிருப்பது தொடர்கிறது[8], “இதன்பின்னர் மனுதாரர் முஸ்லிம் சட்டம் மற்றும் பழக்க வழக்கத்தின் அடிப்படையில், அவரது மனைவியிடம்தலாக்சொல்லியுள்ளார். அவரது மனைவியும் அதை ஏற்றுக் கொண்டார். இந்த விவாகரத்து பெரியவர்கள் முன்னிலையில் தான் நடந்துள்ளது. இதன்பின்னர் மனுதாரரின் புகார் முடித்து வைக்கப்பட்டு விட்டது. இதன்பின்னர் மகனை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மனுதாரர் குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 19–ந் தேதி குழந்தை அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், மனைவியிடம் விவாகரத்து கேட்டு மற்றொரு வழக்கும் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையில் இந்த இரு வழக்குகளும் நிலுவையில் இருக்கும்போது, மனுதாரரை விவாகரத்து செய்த பெண், வேறு ஒருவரை மறுதிருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு கடந்த அக்டோபர் 27–ந் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது.”

 

© வேதபிரகாஷ்

21-12-2016

ஷா பானு வழக்கு

[1] Times of India, Madras high court bans unauthorised ‘Sharia courts’, A Subramani| TNN | Updated: Dec 20, 2016, 07.02 AM IST.

[2] தினகரன், ஷரியத் கவுன்சில் கட்டப்பஞ்சாயத்து செய்தால் போலீஸ் தடுக்க வேண்டும் : நீதிமன்றம் உத்தரவு, Date: 2016-12-19 15:44:48

http://www.dinakaran.com/latest_detail.asp?Nid=266694

[3] http://timesofindia.indiatimes.com/city/chennai/madras-hc-bans-sharia-courts/articleshow/56061972.cms

[4] தினத்தந்தி, கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் வழிபாட்டை தவிர வேறு செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுப்பது அதிகாரிகளின் கடமை; ஐகோர்ட்டு உத்தரவு, பதிவு செய்த நாள்: செவ்வாய், டிசம்பர் 20,2016, 7:28 PM IST; மாற்றம் செய்த நாள்: புதன், டிசம்பர் 21,2016, 1:15 AM IST.

[5] தினமணி, வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனை தவிர்த்து வேறு நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது, Published on : 20th December 2016 03:58 AM

[6] http://www.dailythanthi.com/News/State/2016/12/20192814/Temples-churches-mosques-participate-in-acts-of-worship.vpf

[7]http://www.dinamani.com/tamilnadu/2016/dec/20/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-2618328.html

[8] தமிழ்.இந்து, மத வழிபாட்டுத் தலங்களில் சட்டவிரோத நீதிமன்றம் செயல்படுவதை ஏற்க முடியாது: போலீஸார் நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் உத்தரவு, Published: December 20, 2016 08:17 ISTUpdated: December 20, 2016 08:18 IST

ஆஜ்மீர் தர்காவின் இரண்டு முஸ்லிம் சாமியார்கள் நேர்த்திக்கடன் செய்ய வந்த ஒரு பெண்ணை எட்டு நாட்களாக கூட்டு கற்பழித்துள்ளனர்!

செப்ரெம்பர் 4, 2016

ஆஜ்மீர் தர்காவின் இரண்டு முஸ்லிம் சாமியார்கள் நேர்த்திக்கடன் செய்ய வந்த ஒரு பெண்ணை எட்டு நாட்களாக கூட்டு கற்பழித்துள்ளனர்!

two priests of Ajmer dargah arrested for rape 27-08-2016

ஆஜ்மீர், தர்கா, கற்பழிப்புகள்: க்வாஜா மொயுனித்தீன் கிஸ்டி [Khwaja Moinuddin Chiட்shty] என்ற தர்கா முஸ்லிம்களின் பிரசித்தி பெற்ற வழிபாட்டு ஸ்தலமாக இருக்கிறது. பல நாடுகளிலிருந்து முஸ்லிம் பிரமுகர்கள், பிரபலங்கள் முதலியோர் இங்கு வந்து நேர்த்திக் கடன் செய்து விட்டு போகின்றனர். ஆபாச நடிகைகள் கூட வந்து செல்கின்றனர். அயல்நாட்டவரும் சுற்றுலா ரீதியில் வந்து செல்கின்றனர். அதனால் கூட்டம் இருந்து கொண்டேயிருக்கிறது. ஆனால், கற்பழிப்புகள் முதலியவையும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஏப்ரல் 2016ல் கூட தர்காவுக்கு வந்த ஒரு ஸ்பெயின் நாட்டு பெண்ணை ஒரு கும்பல் சேர்ந்து கற்பழிக்க முயன்றுள்ளனர். பிறகு, அவரது நண்பர்களால் மீட்கப்பட்டனர்[1]. பிப்ரவரி 2015லும் தர்காவில் வழிபட வந்த ஒரு இளம்பெண் கற்பழிக்கப்பட்டுள்ளாள்[2]. தில்லியிலிருந்து ஆஜ்மீருக்கு வந்து, ஒரு கெஸ்ட் ஹவுசில் தங்கி நேர்த்திக் கடன் செய்து வஎந்த வேலையில், மத்திய பிரதேசத்து நபரால் கற்பழிக்கப்பட்டாள். குற்றவாளியையை கைது செய்து, பெண்னை தில்லிக்கு அனுப்பி வைத்தனர்[3]. ஜூன் 2014லிலும் அத்தகைய கற்பழிப்பு நடந்தது[4]. அதில் சம்பந்தப்பட்டது, மூன்றாம் பாலினத்த பெண் என்பதால் போலீஸ் மெத்தனம் காட்டியதால், சி.ஐ.டி விசாரணைக்கு ஒப்படைக்கப் பட்டது[5]. தர்கா விழாக்களின் போது, இங்கு ஆயிரக்கணக்கான மூன்றாம் பாலினத்தவர் இங்கு வந்து, மகிழ்விப்பது வழக்கமாக இருக்கிறது.

Ajmer dargah - actresses come

க்வாஜா மொயுனித்தீன் கிஸ்டியின் காதிம்கள் கற்பழிப்பில் இறங்கியது (ஆகஸ்ட் 2016): 26-08-2016 அன்று கொல்கொத்தாவிலிருந்து வந்த ஒரு பக்தையைக் கற்பழித்ததற்காக, இரண்டு முஸ்லிம் சந்நியாசிகள்-காதிம்கள், ஆஸிம் மற்றும் சலீம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்[6]. இவ்விருவரும் சகோதரர்கள் என்றும் தெரிய வந்தது. சகோதரர்கள் இப்படி ஒரு பெண்ணை கூட்டாகக் கற்பழித்தது திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி, இருவரையும் தேடுகின்றனர்[7]. அந்த பெண் எட்டு நாட்களுக்கு முன்னர் என்ற கிரிஸ்டி-சாமிக்கு நேர்த்தி கடன் செய்ய வந்து, விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தாள்[8]. அப்பொழுது தான், இவ்விருவரும் உள்ளே நுழைந்து, கதவை தாழிட்டு தன்னை கற்பழித்ததாக கூறினாள். 225-08-2016 அன்று தப்பித்து வெளியே வந்த அவள் போலீஸாரிடம் புகார் கொடுத்தாள்[9]. அதற்குள் குற்றஞ்சாட்டப் பட்டவர்களின் குடும்பத்தினர், ஆஸிம் அவளை ஏழு வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்திருந்தான், பிறகு விவாகரத்து / தலாக் செய்துவிட்டான் என்றனர். மேலும், போலீஸார் கேட்டபோது, சட்டரீதியில் அக்குடும்பத்தினர் எந்த ஆவணத்தையும் கட்டமுடியவில்லை[10]. பிறகு, எதற்கு வக்காலத்து வாங்க வந்தார்கள் என்று தெரியவில்லை.

Ajmer sex scandal 2012

காதிம்கள் கூட்டுக் கற்பழிப்பில் ஈடுபடலாமா?: இங்கு காதிம் [खादिम] என்றால், க்வாஜா மொயுனித்தீன் கிஸ்டியின் சேவகர்கள், வேலையாட்கள், பாதுகாவலர்கள் என்று பொருள். காலபோக்கில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருந்தாலும், காதிம்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை செய்து வருகிறார்கள்[11]. இங்கு கூட்டம் அதிகமானால், இவர்களுக்கு வருமானமும் அதிகமாகிறது. இதனால், முன்னர் திவான் ஜைனுல் ஆபிதின் அலி கான் [ Dewan Zainul Abedin Ali Khan] பாலிவுட் ஆபாசங்கள் எல்லாம் இங்கு வரக்கூடாது, தடை விதிக்க வேண்டும் என்றபோது[12], காதிம்களின் அமைப்பு, அஞ்சுமான் கமிட்டி [Anjuman committee,representative body of khadims ]  எதிர்ப்பு தெரிவித்தது[13]. ஏனெனில், தர்காவில் ஜியாரத் [ziyarat in the dargarh] என்ற சடங்கை இவர்கள் தான் செய்வித்து வருகிறாற்கள். ஆனால், இந்த காதிம்கள் கற்பழிப்பில் ஈடுப்பட்டிருக்கிறார்கள். அப்படியென்றால், மனைவி இல்லாத ஒரு பெண்ணை மறுபடியும் கற்பழிக்க முடியுமா? அதிலும் இரண்டு காஜிக்கள், முல்லாக்கள், காதிம்கள் போன்றோர் சேர்ந்து கூட்டாகக் கற்பழிக்கலாமா? சகோதரர்களாக இருக்கும் அவர்கள் அவ்வாறு கற்பழிக்கலாமா? இப்பொழுது தலாக் பற்றி பெரிய சர்ச்சை நடந்து கொண்டிருக்கும் போது, முஸ்லிம் சாமியார்கள் இவ்வாறெல்லாம் செய்யலாமா?

ஆஜ்மீர் செக்ஸ்

1992ம் ஆண்டு ஆல்மீர் கற்பழிப்பு: ஆஜ்மீர் என்றாலே கற்பழிப்பு என்ற நிலைவு, நிலை மற்றும் நெடிய ஒரு தீய பாரம்பரியம் 1992லிருந்து இருந்து வந்துள்ளது. 1992ல் நூற்றுக்கணக்கான பள்ளிமாணவிகளை அங்கு அழைத்து வந்து, கூட்டாக 18-பேர் கொண்ட ஒரு கும்பல் பண்ணை இல்லங்களுக்கு  வகுக்கட்டாயமாகக் கூட்டிச் சென்று கற்பழித்து வந்தது. அதுமட்டுமல்லாது, கற்பழிக்கும் காட்சிகளை புகைப்படம் எடுத்து வைத்து, அவர்களை மிரட்டி அத்தகைய கற்பழிப்புகள் தொடர்ந்தன. பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில் சொல்லக்கூட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்[14]. அரசியல்வாதிகள் சம்பந்தங்களினால் ஆறு ஆண்டுகளாக வழக்கு இழுத்தடிக்கப்பட்டது. ஒருவழியாக விசாரணை முடிந்து 1998ல் ஆஜ்மீர் மாவட்ட நீதிமன்றாம் எட்டு பேருக்கு ஆயுள்தண்டனை விதித்தது[15].  ஆனால், அவர்கள் பிடிபடாமல் தப்பித்து வந்தனர்.

1992 Ajmer sex scandal accused arrested Rajasthan Voice

1998 முதல் 2012 வரை தப்பித்து வந்த குற்றாவாளிகள்: 1998ல் குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டாலும், அவர்கள் பிடிபடவில்லை.

  1. அதில் பரூக் கிரிஸ்டி என்பவன் காங்கிரஸ் இளைஞர் அணியின் தலைவன் ஆவான். அவனுக்கு பைத்தியம் பிடித்தது என்றார்கள்.
  2. இன்னொருவன் புருசோத்தமன் 1994ல் பிணையில் விடுவித்தபோது, தற்கொலை செய்து கொண்டான் என சொல்லப்பட்டது. ஆனால், அவன், உயிரோடு இருந்தானாம்.
  3. சோஹைல் ஹனி முதலிய ஆறு பேர் காணாமல் போய் விட்டனர்.
  4. 2012ல் சையது சலீம் கிருஸ்டி [Saiyed Saleem Chishty, 42] பிடிக்கப்பட்டான்[16]. இவன் பங்களாதேசம் மற்றும் மும்பை போன்ற இடங்களில் மறைந்து வாழ்ந்தான். ஆஜ்மீருக்கு 2012ல் வந்தபோது பிடிபட்டான்[17].
  5. சலீம் கிரிஸ்டி, காதிம் மொஹல்லாவில் பிடிபட்டான் என்பது குறிப்பிடத் தக்கது[18].

பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை.

Ajmer dargah - attempted rape on Spanish woman

2004ல் உச்சநீதிமன்றம் தண்டனை குறைப்பு தீர்ப்பை தள்ளுபடி செய்தது: ராஜஸ்தான் நீதிமன்றம், ஆயுள் தண்டனையை 10 ஆண்டுகளாகக் குறைத்தது. ஆனால், 2004ல் உச்சநீதி மன்றம் அதனை தள்ளுபடி செய்தது. ஆஜ்மீர் மஹிலா சமோஹ் என்ற இயக்கம், கற்பழிக்கப் பட்ட பெண்களின் உரிமைகளுக்காகப் போராடியது. அப்பெண்களில் சிலர் தற்கொலை செய்து கொண்டார்கள். இந்த இயக்கத்திற்கும் மிரட்டல்கள் இருந்ததால், தனது போராட்டங்களை நிறுத்திக் கொண்டு அமைதியானது. இப்பொழுது அவர்களின் நிலை என்ன என்பதெல்லாம் தெரியாமல் கிடக்கின்றன.

© வேதபிரகாஷ்

04-09-2016

Accused 1992 Ajmer sex scandal case arrested - Midday 2012

[1] Published on Apr 5, 2016 – A group of drunk miscreants allegedly tried to rape a Spanish tourist and beat up her friends in Ajmer in Rajasthan. The tourists were also looted. However, luckily they called up their friend, who rescued them  –  https://www.youtube.com/watch?v=jEvcPzav8FM

[2] english.pradesh18.com, Ajmer dargah tour turns tragic, minor pilgrim raped by MP man, Posted on: Feb 06, 2015 12:06 AM IST | Updated on: Feb 06, 2015 12:06 AM IST

[3] A minor girl who went to Ajmer Dargah for worship was allegedly raped by a man from Madhya Pradesh. The crime was allegedly committed in a guest house in Dargah Bazar. The pilgrim had come from Delhi to Ajmer on January 19, 2015. A case has been registered under sections of POCSO. The rape survivor moved to Delhi after the incident. Police have arrested the accused.

http://english.pradesh18.com/news/bihar/ajmer-dargah-tour-turns-tragic-minor-pilgrim-raped-by-mp-man-681681.html

[4] Indian Express, CID to probe transgender’s rape in Ajmer, Written by Sweta Dutta | Jaipur | Published:June 27, 2014 12:27 am.

[5] http://indianexpress.com/article/india/india-others/cid-to-probe-transgenders-rape-in-ajmer/

[6] Times of India, Two khadims of Ajmer Sharif Dargah face gangrape charge, TNN | Aug 27, 2016, 08.31 AM IST.

[7] http://www.india.com, Ajmer Sharif Dargah: Priest brothers accused of gangraping devotee, By Sandhya Dangwal on August 27, 2016 at 4:40 PM.

[8] http://www.india.com/news/india/ajmer-sharif-dargah-priest-brothers-accused-of-gangraping-devotee-1438898/

[9] http://timesofindia.indiatimes.com/city/ajmer/Two-khadims-of-Ajmer-Sharif-Dargah-face-gangrape-charge/articleshow/53882064.cms

[10] Meanwhile, family members of the accused have stated to police that Azim married the victim seven years ago and later they had a divorce and last week the victim again came to Ajmer but police said that no legal papers of marriage or ivorce have been produce by the family members and therefore police is looking for both the accused.

http://timesofindia.indiatimes.com/city/ajmer/Two-khadims-of-Ajmer-Sharif-Dargah-face-gangrape-charge/articleshow/53882064.cms

[11] Although the Khadims have faced a number of revolutions and changes of Government, but under all circumstances and worst political upheavals they kept themselves attached to the Shrine and performed all their traditional duties and services.http://dargahajmer.com/descendent-khadims/

[12] Indian Express, B’wood obscenity: Ajmer Dargah caretakers slam dewan’s star ban demand, Written by Agencies | Jaipur | Published:July 23, 2012 7:36 pm

[13] http://indianexpress.com/article/entertainment/entertainment-others/bwood-obscenity-ajmer-dargah-caretakers-slam-dewans-star-ban-demand/

[14] http://news.outlookindia.com/items.aspx?artid=746397

[15] http://www.thaindian.com/newsportal/uncategorized/accused-in-1992-ajmer-sex-scandal-case-arrested_100588267.html

[16] Mid-day, Accused in 1992 Ajmer sex scandal case arrested, January 04, 2012, Jaipur

[17] http://archive.mid-day.com/news/2012/jan/041211-Accused-in-1992-Ajmer-sex-scandal-case-arrested.htm

[18] http://icarelive.com/news/news.php?cat_id=1&article_id=34444

மதரஸாக்கள், மசூதிகளில் திருமணத் தரகு, போலி திருமணங்கள் முதலியவை செய்யப்படுகின்றனவா, போலி நிக்காஹ் நமாவை இமாம் எப்படி கொடுத்தார்?

ஓகஸ்ட் 26, 2016

மதரஸாக்கள், மசூதிகளில் திருமணத் தரகு, போலி திருமணங்கள் முதலியவை செய்யப்படுகின்றனவா, போலி நிக்காஹ் நமாவை இமாம் எப்படி கொடுத்தார்?

Khader Basha arrested for sham marriages and fraud
போலித்திருமணங்கள் ஏன், எப்படி, எவ்வாறு செய்யப்பட்டன?
: ஒரு முஸ்லிம் எட்டுத் திருமணங்களை எப்படி செய்ய முடியும்? ஒரு நேரத்தில் நான்கு மனைவிகளை வைத்துக் கொள்ளலாம் என்று இஸ்லாமிய சட்டம் உள்ளது. பிறகு, காதர் பாட்சா எப்படி எட்டு திருமணங்களை செய்து கொண்டான். அப்படியென்றால், திருமணம் நடந்தெல்லாம் போலி ஆவணங்கள் மூலம் நடந்ததா? அதே இமாம் அல்லது வேறு இமாமால் கொடுக்கப்பட்டதா? இங்குதான், போலி நிக்காஹ் நாமாக்கள் எப்படி ம்கொடுக்கப்பட்டன, இத்திருமணங்களை போலியாக செய்ய வேண்டிய அவசியம் என்ன, இவையெல்லாம், நகை-பணம் சுருட்ட செய்யப்பட்டத் திருமணங்களா அல்லது வேறு உள்நோக்கம் உள்ளதா? அப்பெண்கள் வாழ்க்கை சீரழிந்தது மற்றும் அக்குழந்தைகளின் எதிர்காலமும் பிரச்சினையாகிறது என்பதை கவனிக்க வேண்டும். நாளைக்கு பள்ளிகளில் சேர்க்கும் போது, தந்தையைப் பற்றிய விவரங்கள் கேட்கப்படும். அப்பொழுது, தாய்-குழந்தை இருவருக்குமே சொல்லொணா துயர் ஏற்படும். அத்தகைய கஷ்டங்களை மீள சுமார் 15 வருடங்கள் ஆகும். ஆகையால், இதை சாதாரண குற்றமாக எடுத்துக் கொள்ள முடியாது. பெண்களை, குழந்தைகளை, ஏன் சமூகத்தை சீரழிக்கும், பயங்கரவாத-தீவிரவாத குற்றமாகவே கருதப்பட வேண்டும்.

Madrassa where Salamiya met Taslim-fake nikhanama

மதரஸாக்களில் திருமண தரகும், போலி நிக்காநாமா வழங்கிய இமாமும்: சலாமியா பானுவின் புகாரில் பல விசயங்கள் வெளிவருகின்றன:

  1. ஒத்தக்கடையில் உள்ள மதரஸாவிற்கு சென்று வரும்போது, மதுரை எல்லீஸ்நகரை சேர்ந்த அப்துல்கயூம் மனைவிதஸ்லிமா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. [தஸ்லிமா இத்தகைய பெண்களை குறிவைத்து வேலை செய்கிறாளா?]
  2. கடந்த 2011–ல் கீழக்கரையில் எனக்கு நடந்த திருமணம் தலாக் ஆகி விட்டது. எனவே மனநிம்மதிக்காக நான் மதரஸாவிற்கு வருவதாக அவரிடம் தெரிவித்தேன் [மதரஸாவில் பேசுவதை விட, வீட்டில் கூப்பிட்டு பேசியிருக்கலாமே? மதரஸாக்களில் திருமண தரகு வேலை கூட நடக்கிறாதா என்பது தெரியவில்லை].
  3. அப்போது அவர் ஆறுதல் வார்த்தை கூறி, எனக்கு நல்ல வரன் பார்ப்பதாக கூறினார். அதனை நம்பி அவரிடம் ரூ.1.10 லட்சம் வரை கொடுத்தேன்[1] [வரன் பார்ப்பதற்கு ஒரு லட்சம் கொடுப்பார்கள் என்பது விசித்திரமாக இருக்கிறது. இல்லை திருமணம் செய்து கொண்டால், மதன் மூலம் பணம் கிடைக்கும் என்பது போல உள்ளதா?].
  4. கீழமாத்தூர் ஜமாத்தை சேர்ந்த இமாம் ஜாகிர் உசேன் என்பவர் எனது திருமணத்தை பதிவு செய்த நிக்காஹ் என்ற புத்தகத்தை ஆய்வு செய்தபோது அது போலியாக தயாரிக்கப்பட்டது என்பதும் தெரிந்தது [இஸ்லாத்தில் இப்படி போலி நிக்காஹ் நாமா கொடுக்கிறார்கள் என்பதும் திகைப்பாக இருக்கிறது. முதலில் இமாம் ஒருவர் இப்படியெல்லாம் போலி திருமணப்பத்திரம் தயாரித்துக் கொடுக்கலாமா?].
  5. நிக்காஹ் என்ற புத்தகத்தை ஆய்வு செய்தபோது, அது போலியாக தயாரிக்கப்பட்டது என்பதும் தெரிந்தது என்றால், ஒன்றிற்கும் மேலான அத்தகைய பதிவு புத்தகங்கள் வைத்திருக்கிறார்கள் என்றாகிறது [இதெல்லாம் திகைப்பாக இருக்கிறது. இப்படி மதரஸா, மசூதிக்களில் கொடுக்கப்படும் சான்றிதழ்களின் ஆதாரத்துவத்தை எப்படி ஏற்றுக் கொள்ளமுடிய்ம் என்ற கேளிவியும் எழுகின்றது].
  6. ஆக, நிக்காஹ் பதிவு புத்தகம் மற்றும் நிக்கஹ் நாமா எப்படி போலியாக இருக்க முடியும்? [இல்லை மறுபடியும் அரசு திருமணப்பதிவு செய்து கொண்டு, சான்றிதழ் பெறவேண்டும் என்று சட்டத்தை உண்டாக்க வேண்டும்]Khader Basha marrying Salamiya Banu - fake nikkah nama
  7. இத்திருமணங்கள் உண்மையான திருமணங்கள் இல்லை, போலியானவை என்றால், அத்தகைய திருமணங்கள் செய்யப்பட வேண்டிய அவசியம் என்ன? [அங்குதான் லவ்-ஜிஹாத் போன்ற மோசடிகள் உள்ளனவா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது]
  8. இச்செய்தி வந்த பிறகும், கீழமாத்தூர் ஜமாத், கட்டுப்பாட்டில் உள்ள மசூதி மற்ற முஸ்லிம்கள் எப்படி மௌனமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை [அப்படியென்றால், அவர்களுக்குத் தெரிந்தே நடந்து வருகின்றனவா?].
  9. எனது கணவர் காதர்பாட்சா, தஸ்லிமா, அவரது கணவர் அப்துல்கயூம் மற்றும் இமாம் ஜாகிர்உசேன் ஆகியோர் திட்டமிட்டு என்னை கூட்டாக சேர்ந்து ஏமாற்றி உள்ளனர் [போலி நிக்காக் நாமா என்றால், போலி திருமணம் என்றாகிறது].
  10. தஸ்லிமாவுக்கும் காதர்பாட்சாவுக்கும் தொடர்பு இருக்கிறது[2] [இருவரும் சேர்ந்து இத்தகைய கல்யாண மோசடிகளை செய்து வருகின்றனரா?].
  11. இந்து பெண்களும் சம்பந்தப் பட்டிருப்பதால், அவர்களும் மதம் மாற்றப்பட்டார்களா இல்லையா?
  12. மதம் மாற்றப்பட்டால் தான் நிக்காஹ் நடக்கும் என்றால், மதம் மாற்றப்பட்ட சான்றிதழ் யார் கொடுத்தது? அது உண்மையா அல்லது போலியா?
  13. இந்துபெண்களை அப்படி ஏமாற்றித் திருமணம் செய்து கொண்டது, “லவ்-ஜிஹாத்” போன்ற வகையில் வருமா?
  14. காதர் பாட்சாவுக்கு சிலை கடத்திலிலும் தொடர்பு இருக்கிறது என்று பானு ஊடகக்காரர்களுக்கு கொடுத்த பேட்டியில் கூறியுள்ளார்[3].

என்று பற்பல கேள்விகள் எழுகின்றன. இக்கேள்விகளுக்கு பதிலளித்தால் பல உண்மைகள் வெளி வரும் என்று தெரிகிறது.

காதர்பாட்சா - மோசடியா லவ்-ஜிஹாதா- உண்மை என்ன

பெண்கள்-குழந்தைகள் இத்தகைய மிருகங்களிடமிருந்த காப்பாற்றப் பட வேண்டும்: திருமணங்கள் முறையாக பதிவு செய்யப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது, ஏனெனில், பெண்கள் நலன், குழந்தை நலன், குடும்ப நலன், அவர்களின் எதிர்காலம் முதலியவை அதில் அடங்கியுள்ளன. பெண்கள் கற்பு துச்சமாகும் போது, தாம்பத்திய மதிப்பு, மரியாதை மற்றும் போற்றும் தன்மை குறைகிறது. தாம்பத்திய குறைந்தால், அசிங்கமானால், கணவன்-மனைவி உறவுகள் பாதிக்கும், விவாக ரத்தில் முடியும். விவாகரத்து “கணவன்-மனைவி”யை மட்டும் பிரிக்கவில்லை, குடும்பத்தை, குடும்பங்களைப் பிரிக்கின்றன. அதிகமாக பாதிக்கப்படுவது மகன்-மகள் தான், அவர்களின் குழந்தைகள். குழந்தைப் பருவத்தில் கணவன்-மனைவி கத்தல்கள், சச்சரவுகள் சண்டைகள், அடித்து கொள்ளுதல் முதலியன மனத்தில் படிந்து, பிற்காலத்தில் பாதிப்பு ஏற்படும். இவ்விதத்திலும் கட்டுப்பாடு முக்கியமாகிறது.

Madrassa where Salamiya met Taslim

மதம் என்ற ரீதியில் கூட இத்தகைய சமூக சீரழிவுகளை நியாயப்படுத்தக் கூடாது: முன்னரே குறிப்பிட்டது போல, இதனை, இதை சாதாரண குற்றமாக எடுத்துக் கொள்ள முடியாது. பெண்களை, குழந்தைகளை, ஏன் சமூகத்தை சீரழிக்கும், பயங்கரவாத-தீவிரவாத குற்றமாகவே கருதப்பட வேண்டும். இல்லையெனில், காதர் பாட்சா போன்றோர் வந்து கொண்டே இருப்பார்கள். சில ஆண்டுகள் சிறையில் இருந்து, வெளியே வந்து மறுபடியும் அதே குற்றங்களை செய்ய ஆரம்பித்து விடுவார்கள். ஏற்கெனவே “லவ்-ஜிஹாத்” பிரச்சினை இப்பொழுது கேரளாவில் நிதர்சனமாகி பல பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இனி, “திருமண-ஜிஹாத்” என்பதும் உருவாகி விட்டது போலும்! அதாவது, திருமணம் மதம் மாற்றுவது, செய்து கொள்வது, குழந்தைகளைப் பெற்றெடுப்பது, நகை-பணம் எடுத்துக் கொண்டு / மிரட்டி வாங்கிக் கொண்டு ஓடிவிடுவது என்ற முறையில் செயல்படுவதைத் தடுக்க வேண்டும். பெண்கள் விழிப்புணர்வாக இருக்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

26-08-2016

[1] http://www.dailythanthi.com/News/Districts/Madurai/2016/07/22002942/Jewelry-money-made-available-mayamaki-8-women-will.vpf

[2] http://tamil.eenaduindia.com/State/Madurai/2016/07/21194358/husband-robbery-45-lakh–from-his–wife-in-madurai.vpf

[3]  http://tamil.eenaduindia.com/State/Madurai/2016/07/21194358/husband-robbery-45-lakh–from-his–wife-in-madurai.vpf

அன்சாரின் பலதார திருமணங்களும், பெண்கள் படும் பாடும் – காரணம் இஸ்லாமா, பெண்களா, திருமணமுறையா?

மார்ச் 13, 2014

அன்சாரின் பலதார திருமணங்களும், பெண்கள் படும் பாடும் – காரணம் இஸ்லாமா, பெண்களா, திருமணமுறையா?

 

Nellai Muslim married 4 and tries for 5 - 2014

Nellai Muslim married 4 and tries for 5 – 2014

நதிரா பானு என்ற பெண் அன்சார் என்பவர் மீது புகார் (மார்ச்.2014): நெல்லை தச்சநல்லூர் பகுதியில் கங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நதிராபானு (வயது 25). இவர் தனது 3 குழந்தைகள் மற்றும் மாதர் சங்க நிர்வாகிகளுடன் நெல்லை கலெக்டர் மாவட்ட அலுவலகத்திற்கு வந்து 5வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றிய ஓட்டல் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: “எனக்கும், மேலப்பாளையத்தைச் சேர்ந்த அன்சார் (48) என்பவருக்கும் கடந்த 30.5.2009 அன்று இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்தது. அன்சார் நெல்லையில் பல இடங்களில் ஓட்டல் நடத்தி வருகிறார். தனது முதல் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்பதாலேயே, என்னை திருமணம் செய்து கொள்வதாக அன்சாரி கூறியிருந்தார். ஆனால், ஏற்கனவே அவருக்கு ஏற்கெனவே இரண்டாவது மனைவி நூர்ஜஹான், மற்றும் மூன்றாவது மனைவி என்று மொத்தம் மூன்று மனைவிகள் இருப்பது பின்னர் தெரியவந்தது[1]. இதுதவிர அவர் ஏராளமான பெண்களுடன் தகாத தொடர்பு வைத்துள்ளார் என்பதும் எனக்கு தெரிய வந்தது”. நான்கு மனைவியர் கூட ஐந்து, அதுவில்லாமல் மற்ற பெண்களிடம் தகாத தொடர்பு வைத்துள்ளது என்றால், இஸ்லாம் எப்படி இவற்றை அனுமதிக்கிறது, மற்றும் அதற்கும் குரான், ஷதீஸ் மற்றும் ஷரீயத்தில் ஆதாரம் உள்ளது என்று காட்டுவார்களா, அப்படியென்றால், முஸ்லிம் பெண்களின் கதியென்ன?

 

அன்சார் பிரச்சினை இஸ்லாமா இல்லையா 2014

அன்சார் பிரச்சினை இஸ்லாமா இல்லையா 2014

5வது திருமணம் செய்ய முயன்ற போது, 4வது மனை புகார்: நதிராபானு தொடர்கிறார், “சில நாட்கள் கழித்தே எனது கணவர் என்னை 4வதாக திருமணம் செய்தது தெரியவந்தது.  எனக்கு 10 பவுன் நகை சீதனமாக எனது பெற்றோர் கொடுத்தனர்[2]. எங்களுக்கு 2 பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் என்னிடம், ‘‘எனக்கு 4 மனைவிகள், 14 குழந்தைகள் உள்ளனர். இதை உன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றால் என்னுடன் நீ வாழ முடியாது”, என்றார். ஏழ்மை காரணமாக என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்நிலையில் திடீரென அவர் வேறு பெண்ணை திருமணம் செய்ய போகிறேன் என்று கூறி என்னை கையெழுத்து போட சொல்கிறார். நான் மறுக்கவே சாப்பாடு போடாமல் என்னை பட்டினி போடுகிறார். அவரது கொடுமை தாங்காமல் பெற்றோர் வீட்டுக்கு சென்றேன்”[3]. அதாவது நான்காவதாகத்தான் இப்பெண்னை திருமணம் செய்து கொண்டுள்ளார், பிறகு வற்புறுத்தி ஒப்புதல் கடிதம் வாங்கிக் கொண்டு, இன்னொருத்தியை நிக்காஹ் செய்து கொள்ள முயல்கிறார் என்றாகிறது.

 

நதிரா பானு - அன்சார் - 5-நிக்காஹ் 2014

நதிரா பானு – அன்சார் – 5-நிக்காஹ் 2014

4வது மனைவியைக் கொடுமைப் படுத்தியது: நதிராபானு தொடர்கிறார், “இதைத் தட்டிக் கேட்ட என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினார். இதுகுறித்து எனது அவரிடம் கேட்ட போது என்னை அடித்து சித்ரவதை செய்து தொடர்ந்து துன்புறுத்தி வந்தார். ஒரு முறை என்னிடம் கையெழுத்து மட்டும் வாங்கிக் கொண்டு, விரட்டியடித்தார். பின்னர் மறுபடியும் என்னிடம் வந்து தனியாக வீடு வாங்கி காஞ்சிபுரத்தில் குடிவைத்தார். என்னுடன் சேர்ந்து வாழ்வதாக கூறி அழைத்து சென்றார். மீண்டும் நான் கார்ப்பமானோன். ஆனால் அவர் கட்டாயப்படுத்தி அதை கலைத்தார் அங்கு வீட்டு வேலைக்காரியுடன் தொடர்பை வளர்த்து கொண்டார். இதை நான் கண்டித்தபோது, என்னை வீட்டில் அடைத்து வைத்து மேலும், மேலும் சித்ரவதை செய்தார். இந்நிலையில் குழந்தைகளை கொன்று விடுவதாகவும் மிரட்டி வருகிறார். தற்போது மீண்டும் வீட்டை விட்டு என்னை அடி த்து துரத்தி விட்டார்”[4].

 

5வது திருமணம் முஸ்லிம்

5வது திருமணம் முஸ்லிம்

முதல் மனைவி, அவரது மகன், கணவன் என்று எல்லோரும் கூட்டு சேர்ந்துள்ளது எதைக் காட்டுகிறது?: நதிராபானு தொடர்கிறார், “அதன் பின் அந்த வீட்டை காலி செய்து விட்டு மேல்பாளையம் வந்தோம். அங்கும் வேறொரு பெண்ணை அழைத்து வந்தார். தட்டி கேட்ட என்னை அடித்து மிதித்து வீட்டின் உள்ளே வைத்து பூட்டி சென்று விட்டார். எனவே அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்று அதில் கூறியுள்ளார். எனவே  அடித்தும் மிரட்டியும் சித்ரவதை செய்த என் கணவர் அன்சாரி மீதும் அவருக்கு உடந்தையாக உள்ள மூத்த மனைவி நூர்ஜஹான், அவரது மகன் ரஷீத் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மனுவில் கூறியுள்ளார்[5]. இந்த சம்பவத்தால் மேலப்பாளையமே அதிர்ந்து போய் கிடக்கிறது.  மனு அளிக்கும் இயக்கத்தின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாளையங்கோட்டை தாலுகா செயலாளர் ஸ்ரீராம் உடன் இருந்தார். முதல் மனைவி, அவரது மகன், கணவன் என்று எல்லோரும் கூட்டு சேர்ந்துள்ளது, முறையான தாம்பத்தியத்தை, இல்லறத்தைக் காட்டுகிறாதா அல்லது அதற்கும் மீறிய காரியங்களைக் காட்டுகிறதா என்று மனசாட்சியுடன் சம்பந்தப்பட்டவர்கள் தாம் விளக்க வேண்டும்.

 

இஸ்லாம் பலதார மணத்திற்கு உபயோகப் படுத்தப் படுகிறது

இஸ்லாம் பலதார மணத்திற்கு உபயோகப் படுத்தப் படுகிறது

இது இஸ்லாம் பிரச்சினையா, பெண்கள் பிரச்சினையா அல்லது சமூகப் பிரச்சினையா?: மறைந்த அதிமுக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம்பிச்சைக்கு மூன்று மனைவிகள். அவரது மகன் ஆசிக் மீராவின் மீது தன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஏமாற்றிவிட்டதாக புகார் அளித்து சில நாட்கள் தாம் ஆகியுள்ளன[6]. அதற்குள் இப்படி இன்னொரு புகார் வந்துள்ளது. முன்னர் யுவன் சங்கர் ராஜாவே பலதார திருமணத்திற்காக இஸ்லாம் மாறினார் என்ற செய்திகள் வந்தன[7]. இணைதளங்களில் முஸ்லிம்கள், இதை ஏதோ பெரிய வெற்றி போல விவரங்களை வாரி அளித்தனர்[8]. ஆர். எஸ். அந்தணன் என்ற புனைப்பெயரில் இஸ்லாம் ஏதோ சாதிக்கிறது என்பது போல வரைந்து தள்ளினர்[9]. பைசூல்-பர்வீன் விவகாரமும் எப்படி இஸ்லாம் பலதார மணத்திற்கு உதவுகிறது, பெண்களை ஒரு அற்ப செக்ஸ்-பண்டமாக உபயோகப் படுத்த பயன்படுத்தப் படுகிறது என்று அவர்களே எடுத்துக் காட்டிக் கொண்டார்கள்[10]. அதில் ஒரு முஸ்லிம் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் செக்ஸுக்கு உட்படுத்தி கொள்ளலாம், பணம் கொடுத்து சரிகட்டலாம், நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டலாம் என்றெல்லாம் கூட வெளியாகின[11]. இவ்விவகாரத்தைப் பற்றிய என்னுடைய முந்தைய பதிவுகளை இங்கே பார்க்கவும்:

  1. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (1)[12]
  2. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (2)[13]
  3. பர்வீன் ராதாவானது, பைசூல் ஷ்யாம் ஆனது – சினிமாவுக்கா, காதலுக்கா, பாலியலுக்கா, மதம் ரீதியில் நியாயப்படுத்துவதற்கா – ஒரு அலசல் (3)[14]

இவ்விவகாரத்தில் குறிப்பாக, பைசூல் திருமணம் செய்து கொள்ளாமலேயே பர்வீனுடல் குடும்பம் நடத்தி வந்தார், உடலுறவு கொண்டார், அதனை வீடியோ எடுத்து பர்வீனை மிரட்டினார் என்ற குற்றங்கள் இருப்பதுக் கவனிக்கத் தக்கது.

 

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது

குடும்பம் குழந்தைகள் பாதிக்கப்படுவது

முஸ்லிமாக  மாறி  ஒன்றிற்கு  மேலாக  மனைவியை  வைத்துக்  கொள்ள  சினிமாக்காரர்கள்  பயன்படுத்தி  வருகிறார்கள்[15]: இந்தியா ஒரு செக்யூலரிஸ நாடு, ஒருவர் எந்த மதத்தையும் பின்பற்றலாம். அதனால், மதம் பற்றிப் பிரச்சினை இல்லை. அதிலும் சினிமாக்காரர்கள் மதம் மாறுவதிலும் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. அது அவர்களுக்கு ஒரு சட்டையைக் கழட்டி, இன்னொரு சட்டையை மாட்டிக் கொள்வது போலத்தான். ஆனால், சினிமாக்காரர்கள் மதம் மாறுவது எப்பொழுதுமே பலதார திருமண விசயமாகத்தான் இருந்து வந்துள்ளது. அதிலும் முஸ்லிமாக மாறி ஒன்றிற்கு மேலாக மனைவியை வைத்துக் கொள்ள அது பயன் படுத்தப் பட்டு வருகின்றது. இதை கிஷோர் குமார், தர்மேந்திரா போன்ற பிரபல நடிகர்கள் கூட பின்பற்றினார்கள். கிஷோர் குமாருக்கு நான்கு மனைவிகள் – ரூமா குஹா தாகுர்தா, மதுபாலா (முஸ்லிம்), யோகிதா பாலி, லீனா சந்தவர்கர். தர்மேந்திராவுக்கு பிரகாஷ் கௌர், ஹேமாமாலினி முதலியோர்.   இந்து திருமணச் சட்டத்தின்படி இரண்டு மனைவிகளை வைத்துக் கொள்ள முடியாது அல்லது முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியாது என்பதால் தான், இந்தியாவில் நடிகர்கள் மட்டுமல்ல மற்றவர்களும் இஸ்லாத்திற்கு மாறுவது குறுக்குவழி போல பின்பற்றி வருகிறார்கள்[16]. இப்பிரச்சினை  பல உச்சநீதி மன்ற தீர்ப்புகளிலும் அலசப்பட்டு தான் 1995ல் பொது சிவில் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதி மன்ற ஒரு தீர்ப்பில் ஆணையிட்டது[17]. 2003 தீர்ப்பிலும் இது மறுபடியும் கூறப்பட்டது[18].

 

© வேதபிரகாஷ்

12-03-2014

 


[17] Smt Sarla Mudgal vs UOI & Ors – 1995 AIR 1531

[18] July 23, 2003: The Supreme Court today called for a common civil code for all citizens of the country, holding that it would not go against the two key constitutional provisions governing religion. The court said the effort to secure a uniform civil code across India — Article 44 — would not come in the way of the right to freedom of religion or the freedom to manage religious affairs as laid down in Articles 25 and 26 of the Constitution. Rather, it would “help the cause of national integration”.

http://www.telegraphindia.com/1030724/asp/frontpage/story_2194921.asp