Posted tagged ‘தற்கொலை குண்டு வெடிப்பு’

23-09-2022 அன்று கோவையில் கார் குண்டு வெடித்தது, சென்னையில்  விசாரணை தொடர்ந்து நடந்து வருவது, 07-02-2023 அன்று வெடிப்பொருட்கள் செயலிழக்கச் செய்தது!

பிப்ரவரி 8, 2023

23-09-2022 அன்று கோவையில் கார் குண்டு வெடித்தது, சென்னையில்  விசாரணை தொடர்ந்து நடந்து வருவது, 07-02-2023 அன்று வெடிப்பொருட்கள் செயலிழக்கச் செய்தது!

23-09-2022 அன்று கோவையில் கார் குண்டு வெடித்தது, சென்னையில்  விசாரணை தொடர்ந்து நடந்து வருவது: கோவை கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே கடந்த ஆண்டு அக்டோபா் 23ஆம் தேதி 23-09-2022 அன்று கார் குண்டு வெடித்தது. இதில் அந்த காரை ஓட்டி வந்த ஜமேஷா முபீன் அங்கேயே உயிரிழந்தார். இதுதொடா்பாக என்ஐஏ குழுவினா் நடத்தி வரும் விசாரணையில் இதுவரை 11 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில் இந்த வழக்கில் கைதாகி உள்ள முகமது அசாருதீன், அஃப்சா்கான், ஃபெரோஸ்கான், முகமது தெளபீக், ஷேக் இதயத்துல்லா, சனோஃபா் அலி, முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 7 பேரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் பூந்தமல்லி என்ஐஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். அதாவது, சென்னையில் தான் இந்த நீதிமன்ற வழக்கு விசாரணைகள் எல்லாம் நடந்து வருகின்றன. ஆனால், ஊடகங்கள் இவற்றைப் பற்ரியெல்லாம் கண்டு கொள்ளாமல், வேறு விவகாரங்களை ஐத்துக் கொண்டு வாத-விவாதங்கள், பட்டி மன்றங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றன.

சட்டப் படி நடந்து வரும் நீதிமன்ற விசாரணைகளில் காலதாமதம் ஏற்படுவது: இவ்வாறு சட்டப் படி வழக்குகளை விசாரிப்பது, கைது செய்யப் பட்டவர்களை விசாரிப்பது, வாக்குமூலம் வாங்குவது, அதை வைத்து, மறுபடியும் குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று சோதனை செய்வது, விசாரிப்பது போன்றவை தொடர்ந்து நடந்து வருகின்றன. இவற்றில் இடையே காலதாமதம் ஏற்படுகிறது. செப்டம்பர் 2022ல் நடந்த குண்டுவெடிப்பிற்குப் பிறகு, நிச்சயமாக சம்பந்தப் பட்டவர்கள் உஷாராகியிருப்பர். இருக்கும் ஆதாரங்களை அழித்திருப்பர். ஆகவே, இவற்றையெல்லாம் மீறி, விசாரணை நடத்தி உண்மையை நிலை நாட்ட என்ஐஏ போன்றோர் மிக கடினமாக வேலை செய்ய வேண்டியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரையில் முஸ்லிம்கள் என்ஐஏவையே எதிர்த்து ஆர்பாட்டம் செய்கின்றனர். சோதனைக்கு வந்தால், கலாட்டா செய்கின்றனர். இதனால், தமிழக போலீஸாரும் கூட வர வேண்டியுள்ளது. இதெல்லாம் இப்பொழுது வழக்கமாகி விட்டது. இதையெல்லாம் யாரும் கண்ட்ப்பதும் இல்லை. மிக சாதாரணமாக எடுத்துக் கொ/ல்கின்றனர் அல்லது கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இப்பொழுது கூட, இந்த விவகாரங்களை சில ஊடகங்கள் தான் வெளியிட்டுள்ளன.

பட்டாசு வாங்கிய கடையில் என்ஐஏ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்று சோதனை: கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் தொடா்புடைய அசாருதீன் பட்டாசு வாங்கிய கடையில் என்ஐஏ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்று சோதனை நடத்தினா். மனுவை விசாரித்த நீதிபதி அந்த 7 பேரையும் 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தார். அதன்படி அவா்கள் 7 பேரையும் கோவைக்கு வியாழக்கிழமை 02-02-2023 அன்று அழைத்து வந்தனா். கோவையில் அவா்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா். அப்போது கார் வெடிப்பு சம்பவம் தொடா்பான திட்டம் குறித்தும், ஜமேஷா முபீன் குறித்தும், இதில் வேறு எவருக்கேனும் தொடா்பு உள்ளதா என்பது குறித்தும் அவா்களிடம் விசாரணை நடத்தியதோடு, அவா்கள் தெரிவித்த தகவல்களை விடியோவாகவும் பதிவு செய்து கொண்டனா்.

23-09-2022 அன்று குண்டு வெடித்தது என்றால், 07-02-2023 அன்று செல்லும் பொழுது நிலை: அவா்கள் 7 பேரில் அசாருதீன் என்பவா் கோவையிலுள்ள ஒரு பட்டாசுக் கடையில் பட்டாசுகளை வாங்கி அவற்றிலிருந்து திரிகளை மட்டும் எடுத்துவிட்டு அந்த பட்டாசு மருந்துடன் வேறு ரசாயனங்களைச் சோ்த்து புதிதாக வெடிபொருள் தயாரித்திருந்தது விசாரணையில் தெரியவந்தது[1]. இதையடுத்து அசாருதீன் பட்டாசு வாங்கிய கடைக்கு அவரை செவ்வாய்க்கிழமை 07-02-2023 அன்று நேரில் அழைத்துச் சென்று என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினா்[2]. 23-09-2022 அன்று குண்டு வெடித்தது என்றால், 07-02-2023 அன்று செல்லும் பொழுது நிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்க்கலாம். இதையெல்லாம், என்ஐஏவுக்கு கடினமாக இருந்தாலும், மற்றவர்களுக்கு சாதமாக இருக்கும். இத்தகைய அடைமுறை விவகாரங்களை சட்ட ஓட்டைகளாக்கி தப்பித்துக் கொள்ள முயல்வர்.

வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப் பட்டுள்ள ரசாயனங்கள் முதலியன பறிமுதல், சோதனைக்கு உட்படுத்தப்பட்டன: கார் வெடிப்பு நடந்த பின்னர் ஜமேஷா முபின் வீட்டில் நடந்த சோதனையில் 120 கிலோ எடையிலான வெடி பொருட்கள் இருந்தன. 109 வகையான அந்த பொருட்களை தேசிய புலனாய்வு முகமையினர் பறிமுதல் செய்தனர்.  இதில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்க பயன்படும் ரசாயன பொருட்களும் அடங்கும்[3]. இந்த ரசாயன மூலப் பொருட்களில் பொட்டாசியம் நைட்ரேட், நைட்ரோ கிளிசரின், ரெட் பாஸ்பரஸ், பிஇடிஎன் பவுடர் (பென்டேரித்ரிட்டால் டெட்ராநைட்ரேட் பவுடர்), அலுமினியம் பவுடர் ஆகியவை இருந்தன. தவிர, வயர்கள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஆதரவு பொருட்கள் உள்ளிட்டவையும் இருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டது.வெடி பொருட்கள் ஆய்வக சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது[4]. அவையெல்லாம் வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்தப் படும் பொருட்கள், ரசாயனங்கள் என்று நிரூபிக்கப் பட்டன. இருப்பினும், அவையெல்லாம் எப்படி தீவிரவாதிகள் வசம் செல்கின்றன என்பது புதிராக இருக்கிறது. உதாரனத்திற்கு நைரோ செல்லுலோஸ் வெடிகுண்டுகள் மலை, மலைபாறை, குவாரிக்களில் உபயோகிக்க, சாலைப் பணி முதலியவற்றிற்கும் விற்கப் படுகின்றன. ஆனால், அத்தகைய பொருள் முன்னர் சந்திர பாபு நாயுடு செல்லும் போது உபயோகப் படுத்தப் பட்டன.

ரசாயனங்கள் செயலிழக்கப் பட்டன: பறிமுதல் செய்த வெடி பொருட்கள் அவினாசி ரோட்டில் உள்ள என்ஐஏ தற்காலிக முகாம் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது[5]. நேற்று என்ஐஏ எஸ்பி ஸ்ரீஜித், வெடிகுண்டு அழிக்கும் நிபுணர் பாண்டே தலைமையிலான அதிகாரிகள் வெடி பொருட்கள் எடுத்து செல்லும் சிறப்பு வாகனத்தில் பறிமுதலான வெடிபொருட்களை கோவை மாவட்டம் சூலூர் தாலுகாவில் உள்ள சுல்தான்பேட்டையை அடுத்த கந்தம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் வெடி மருந்து குடோனிற்கு கொண்டு சென்றனர்[6]. அங்கு வெடி பொருட்கள் அழிக்கப்பட்டன[7]. வெடி பொருட்கள் அழித்தது தொடர்பான ஆதாரங்களை போலீசார் பதிவு செய்தனர். குறிப்பிட்ட சில வகையான வெடி பொருட்கள் தீ வைத்தும், சில பொருட்கள் மண்ணில் மூடியும் அழிக்கப்பட்டதாக தெரிகிறது[8]. வெடி பொருட்கள் அழிக்கப்பட்டபோது அந்த வளாகத்தில் தொழிலாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை[9]. வெளியே தெரியாமல் மிகவும் ரகசியமாக வெடி மருந்துகளை கொண்டு செல்லப்பட்டு அழிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த வெடிமருந்து தொழிற்சாலையின் மேலாளர் கூறுகையில், “கோவையில் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்கள் எங்கள் தொழிற்சாலையில் வைத்து செயல் இழக்கச் செய்யப்பட்டன. காவல்துறையின் முக்கிய அதிகாரிகள் உட்பட 18 பேர் வந்திருந்தனர்,” என்றார்[10]. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி வெடிபொருட்களை செயலிழக்க செய்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

08-02-2023.


[1] தினமணி, கோவை பட்டாசுக் கடையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை, By DIN  |   Published On : 08th February 2023 12:00 AM  |   Last Updated : 08th February 2023 12:00 AM

[2] https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2023/feb/08/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-3997001.html

[3] தந்தி டிவி, கோவை கார் வெடிப்பு சம்பவம் – 120 கிலோ வெடிபொருட்கள் என்.. முன் அழிப்பு, By 6 பிப்ரவரி 2023 8:30 PM

[4] https://www.thanthitv.com/latest-news/coimbatore-car-blast-incident-120-kg-explosives-destroyed-before-nia-166187

[5]  தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கோவை வெடி விபத்தில் கைப்பற்றப்பட்ட வெடி மருந்துகள் அழிப்பு; என்ஐஏ நடவடிக்கை, Velmurugan s, First Published Feb 7, 2023, 11:41 AM IST, Last Updated Feb 7, 2023, 11:41 AM IST.

[6] https://tamil.asianetnews.com/tamilnadu-coimbatore/coimbatore-car-blast-issue-nia-officers-demolish-the-raw-materials-of-bom-rpp575

[7] தமிழ்.இந்து, கோவை | கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 120 கிலோ வெடிகுண்டு மூலப் பொருட்கள் அழிப்பு , Published : 07 Feb 2023 07:03 AM

Last Updated : 07 Feb 2023 07:03 AM.

[8]  https://www.hindutamil.in/news/tamilnadu/940102-coimbatore-car-blast.html

[9] தினகரன், கோவை கார் வெடிப்பு வழக்கு: பறிமுதலான வெடிபொருட்கள் வெடிக்க வைத்து செயலிழப்பு, 2023-02-07@ 21:21:37

[10]  https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=837081

என்ஐஏ தொடர்ந்து சென்னை மற்றும் திருச்சி நகரங்களில் சோதனை – கோயம்புத்தூர் கார் வெடிப்பு-விபத்து, தற்கொலை விவகாரம்!

நவம்பர் 21, 2022

என்ஐஏ தொடர்ந்து சென்னை மற்றும் திருச்சி நகரங்களில் சோதனைகோயம்புத்தூர் கார் வெடிப்புவிபத்து, தற்கொலை விவகாரம்!

10 நாட்களில் 3-வது சோதனை 10 நாட்களில் 3-வது சோதனைவிட்டுவிட்டு நடக்கும் சோதனைகள்: சோதனை 20-11-2022 சனிக்கிழமை அன்று கார் வெடிப்பு வழக்குத் தொடா்பாக சென்னை, திருச்சியில் 6 இடங்களில் போலீஸார் சோதனை செய்து, பென்டிரைவ், மடிக்கணினி, கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்[1]. 10-11-2022 மற்றும் 15-11-2022 என்று சோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன[2]. கோவை உக்கடம் கோட்டைமேடு ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக். 23-ஆம் தேதி சென்ற ஒரு காரில் இருந்த சிலிண்டா் வெடித்தது. இந்த சம்பவத்தில் அந்த காரை ஓட்டி வந்த அந்தப் பகுதியைச் சோ்ந்த ஜமேஷா முபீன் என்ற இளைஞா் உயிரிழந்தார். இது தொடா்பாக ஜமேஷா முபீன் கூட்டாளிகள் 6 பேரை கோவை போலீஸார் கைது செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக என்ஐஏ தமிழகம்,கேரளம் ஆகிய இரு மாநிலங்களில் 43 இடங்களில் கடந்த 10ஆம் தேதி [10-11-2022] ஒரே நேரத்தில் சோதனை செய்தது. இந்த வழக்கை விசாரித்த என்ஐஏ, ஐஎஸ் பயங்கரவாத உறுதி மொழி ஏற்ற ஜமேஷா முபீன், தற்கொலை தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தது. அதில் பல்வேறு முக்கிய ஆவணங்களும் கைப்பற்றியதாகவும் கூறப்பட்டது. அதேபோல், இந்த சம்பவத்தின்போது உயிரிழந்த முபினின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 75 கிலோ நாட்டு வெடிகுண்டுகள்தயாரிக்க பயன்படும் வேதிப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றை ஆன்லைன் மூலமாக வாங்கியதாக கைதானவர்கள் தரப்பில் முன்பு தெரிவிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்திருந்தனர்[3]. இருப்பினும் அதில் சில பொருட்களை சிவகாசியில் உள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்து வாங்கியிருக்கலாம் எனஎன்ஐஏ அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது[4]. இந்த வெடிப்பொருட்கள்-ரசாயனங்கள் பற்றி ஏற்கெனவே வாத-விவாதங்கள் காரசாரங்களில் முடிந்துள்ளன.

15-11-2022 அன்று சோதனையில் ஆவணங்கள் பறிமுதல்: என்ஐஏ வழக்கின் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையிலும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடா்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையிலும் சென்னை பெருநகர காவல்துறையினா் கடந்த 15ஆம் தேதி 5 இடங்களில் சோதனை செய்து, வெளிநாட்டு பணம்,ஆவணங்களை பறிமுதல் செய்தனா்.

20-11-2022 சனிக்கிழமை அன்று சென்னையில் சோதனை: இந்நிலையில் இரண்டாவது கட்டமாக சனிக்கிழமை 4 இடங்களில் போலீஸார் ஒரே நேரத்தில் சோதனை செய்தனா்[5].

இச் சோதனை –

  1. சென்னை ஓட்டேரி எஸ்.எஸ்.புரத்தில் வசிக்கும் சாகுல் ஹமீது (31) வீடு[6],
  2. வேப்பேரி ஈவெரா பெரியார் சாலையில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் எஸ்.எம்.புஹாரி (57) வீடு,
  3. ஏழு கிணறு பகுதியில் பிடாரியார் கோவில் தெருவில் உள்ள உமா் முக்தார் (33) வீடு,
  4. வி.வி.எம்.தெருவில் உள்ள முகமது ஈசாக் கெளத் (33) வீடு

ஆகிய இடங்களில் நடைபெற்றது. பல மணி நடைபெற்ற சோதனையில் 4 வீடுகளிலும் இருந்து 12 பென் டிரைவ்கள், 14 கைப்பேசிகள்,ஒரு மடிக்கணினி, 2 கையடக்க கேமராக்கள், ஒரு சிறிய ரக சூட்கேஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சென்னை காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இவை அனைத்தும் தடயவியல்துறை ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் அடிப்படையில் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 102-கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது[7]. கடந்த 10 நாட்களில் 3-வது முறையாக சென்னையில் என்ஐஏ சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது[8].

20-11-2022 சனிக்கிழமை அன்று திருச்சியில் சோதனை: கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடா்பாக திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த இருவா் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது[9]. இதில், –

  1. ஷாகுல் ஹமீத் (வயது 25)- இனாம்குளத்தூா் நடுத்தெருவில் வசிக்கும் ஆவின் நிறுவன ஒப்பந்த தொழிலாளி,
  2. ஷர்புதீன் (வயது 25) – கந்தசாமி தெருவைச் சோ்ந்த ஜெராக்ஸ் கடை நடத்துபவா் –

என இருவா் மீது சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்தனா். இருவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஐ.எஸ் அமைப்பின் முகநூல் பக்கத்தை லைக் செய்ததாகக் கூறப்படுகிறது[10]

இதையடுத்து, ஜீயபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாரதிதாசன் தலைமையில், இரண்டு காவல் ஆய்வாளா்கள், 13 உதவி ஆய்வாளா்கள், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் மோப்பநாய் உதவியுடன் இனாம்குளத்தூருக்கு சனிக்கிழமை வந்தனா். சந்தேகப்படும் நபா்கள் இருவா் தங்கியிருந்த வீடுகளிலும், அதன் சுற்றுப் பகுதிகளிலும் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனா். இரு இடங்களிலும், சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் இருவரது வீடுகளில் இருந்து எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. இருப்பினும், இருவரது சமூக வலைதள பகிர்வுகள் குறித்தும், தொலைபேசி தொடா்புகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனா். “இச்சோதனையில் ஹார்டு டிஸ்க்குகள், 2 செல்போன்கள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது,” என்று நக்கீரன் குறிப்பிடுகிறது. 

17-11-2022 முதல் 19-11-2022 வரை கம்பத்தில் சோதனைவிசாரணை: கம்பத்தில் பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சோ்ந்த நிர்வாகிகள் 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 18-11-2022, வெள்ளிக்கிழமை அன்று விசாரணை நடத்தினா்[11]. தீவிரவாதிகள் அமைப்புடன் தொடா்பு இருப்பதாக பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் என மாநிலத்தில் 16-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை போலீஸார் கடந்த செப். 22-இல் சோதனை நடத்தினா். இதில் அந்த அமைப்பின் மண்டலச் செயலாளா் பொறுப்பில் இருந்த தேனி மாவட்டம், கம்பம் தாத்தப்பன்குளத்தைச் சோ்ந்த யாசா் அராபத் (32) என்பவரைக் கைது செய்தனா். அதன் பின்னா் கம்பத்தில் செயல்பட்ட மாவட்ட அலுவலகத்துக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2 நாள்களாக கம்பத்தில் அந்த அமைப்பைச் சோ்ந்த 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை காவல் ஆய்வாளா் அருண் மகேஷ் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், 3-ஆவது நாளாக 19-11-20022 அன்று வெள்ளிக்கிழமையும் அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதுகுறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது: “கம்பத்தில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டவருடன், சிலருக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில், கம்பத்தில் 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. தொடா்ந்து விசாரணை நடைபெறும்,” என்றனா்[12].

© வேதபிரகாஷ்

21-11-2022.


[1] தினமணி, கார் வெடிப்பு வழக்கு: சென்னை, திருச்சியில் போலீஸார் சோதனை, By DIN  |   Published On : 19th November 2022 11:15 PM  |   Last Updated : 20th November 2022 04:51 AM.

[2] https://www.dinamani.com/tamilnadu/2022/nov/19/police-raids-in-trichy-and-chennai-3952494.html

[3] தமிழ்.இந்து,  கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: மேலும் 5 பேரிடம் என்ஐஏ விசாரணை, செய்திப்பிரிவு, Published : 19 Nov 2022 06:21 AM; Last Updated : 19 Nov 2022 06:21 AM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/900225-coimbatore-car-cylinder-blast-1.html

[5] தினத்தந்தி, என்... வழக்கு தொடர்பாக சென்னையில் மீண்டும் 4 பேர் வீடுகளில் போலீசார் சோதனைசெல்போன்கள் பறிமுதல், நவம்பர் 20, 12:20 am

[6] https://www.dailythanthi.com/News/State/nia-in-connection-with-the-case-the-police-raided-the-houses-of-4-people-in-chennai-again-cell-phones-were-seized-840708

[7] தமிழ்.இந்து, 3-வது முறையாக சென்னையில் 4 இடங்களில் என்ஐஏ சோதனை: ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்பா என விசாரணை, செய்திப்பிரிவு, Published : 20 Nov 2022 04:20 AM; Last Updated : 20 Nov 2022 04:20 AM

[8] https://www.hindutamil.in/news/tamilnadu/900669-nia-raids-4-locations-on-chennai-for-the-3rd-time-probe-for-links-with-isis.html

[9]   நக்கீரன், என்.. திடீர் சோதனை; மூன்று மணி நேர சோதனைக்குப் பிறகு ஹார்டு டிஸ்க்குகள் பறிமுதல், நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 19/11/2022 (20:30) | Edited on 19/11/2022 (20:46).

[10] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/nia-raid-trichy-confiscation-hard-disks

[11] தினமணி, கம்பத்தில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிா்வாகிகள் 5 பேரிடம் என்ஐஏ விசாரணை, By DIN  |   Published On : 18th November 2022 11:36 PM  |   Last Updated : 18th November 2022 11:36 PM.

[12] https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2022/nov/18/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-5-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%90%E0%AE%8F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-3951860.html

கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்ந்து என்.ஐ.ஏ தமிழகத்தில் பல இடங்களில் விசாரணை, சோதனைகள் ஆரம்பம், ஆவணங்கள் பறிமுதல், பகுப்பாய்வுக்கு உட்படல்! (3)

நவம்பர் 17, 2022

கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்ந்து என்.. தமிழகத்தில்  பல இடங்களில் விசாரணை, சோதனைகள் ஆரம்பம், ஆவணங்கள் பறிமுதல், பகுப்பாய்வுக்கு உட்படல்! (3)

16-11-2022 அன்று ஊடகங்களின் செய்திலேப்டாப், ஹார்ட் டிஸ்க், பென்டிரைவ், செல்போன் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது: சோதனைகளில் கிடைத்த பொருட்கள்:

  1. இதில், லேப்டாப், ஹார்ட் டிஸ்க், பென்டிரைவ், செல்போன் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது[1].
  2. ஹாரூண் ரஷீத் வீட்டில் இருந்து ரொக்கம் ரூ.4 லட்சத்து 90 ஆயிரம், ரூ.1,600 மதிப்புள்ள சீன கரன்சி, ரூ.4,820 தாய்லாந்து கரன்சி, ரூ.50 ஆயிரம் மியான்மா் கரன்சி, ரூ.7 மதிப்புள்ள சிங்கப்பூா் கரன்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
  3. மண்ணடி முத்தையா தெருவில் உள்ள அவரது வா்த்தக நிறுவனத்திலிருந்து மடிக்கணினி, கிரெடிட் அட்டை, டெபிட் அட்டை, மின்னணு கருவிகள், ரூ.10 லட்சத்து 30 ஆயிரத்து 500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
  4. அந்த ஆவணங்கள் உயரதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, தேவைப்பட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது[2]

 மேலும் இவர்கள், ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் ஏற்கனவே என்ஐஏ அதிகாரிகள் சோதனைக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடா்பாக, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில், இரு வழக்குகள் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 102-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட பணம் வருமான வரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

ஆதாரங்கள் பகுப்பாய்வுக்கு உட்பட்டவை ஆகின்றன: கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், மடிக்கணினி உள்ளிட்டவை தடயவியல் துறையிடம் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.  நிச்சயமாக போலீசாரோ, என்.ஐ.ஏவோ எல்லா விவரங்களையும் சொல்லி விடமுடியாது. அதிலும் இத்தகைய ஜிஹாதி-தீவிரவாதம், ஐஎஸ்-தொடர்பு பயங்கரவாதம் போன்றவை பின்னியிருக்கும் பொழுது, அதிலும் தமிழகம் போன்ற “திராவிட மாடல்” ஆட்சி என்று சொல்லிக் கொண்டு, பிரிவினைவாதம், மாநில சுயயாட்சி, தினமும் மத்திய அரசுடன் எதிர்ப்பு கொள்கை கொண்ட போக்கு-செயல்பாடுகள் எல்லாம் மேற்கொண்டு வரும்பொழுது, திராவிடத்துவத்தில் ஊறிய தமிழர்கள் அல்லது திராவிடர்கள் என்றே சொல்லிக் கொள்ளும் தமிழர்கள், நிச்சயமாக ஒத்துழைப்பு கொடுக்க மாட்டார்கள் என்று நினைத்துக் கொல்வார்கள். மறுஅடியும் பெரியாரிஸம், நீதிகட்சி, அண்ணாயிஸம் என்றெல்லாம் பேச ஆரம்பிக்கும் போது, அத்தகைய எண்ணம் தான் தோன்றும். மேலும், இப்பொழுதைய நிலையிலும் அவ்வாறே பேசி வருவது தான் பிரச்சினை, சந்தேகம் மற்றும் தீவிரத் தனமாகிறது.

ஒருபுறம் NIA சோதனை; மறுபுறம் சென்னை போலீசார் சோதனைபின்னணி என்ன?: நியூஸ்18தமிழ், இவ்வாறு ஒரு கேள்வியை எழுப்பினாலும், தலைப்பிட்டு செய்தி வெளியிட்டாலும், அதில் பதிலை சொல்லவில்லை. [3] இருப்பினும், ஒரு நிருபர் அவ்வாறு யோசித்திருப்பது தெரிகிறது[4]. முன்னரே எதற்கு நான்கு நாட்கள் தாமதம் என்ற கேள்வி கவர்னரால் எழுப்பப் பட்டு, ஆளும் கட்சியினரால் விவாதப் பொருள் ஆக்கப் பட்டுள்ளது. தேவையில்லாமல், ஊடகங்களில் வேறு விவாதிக்கப் பட்டுள்ளது. திமுகவினர், “தேசத் துரோகி” என்றெல்லாம் ராணுவ அதிகாரியை டிவி செனலில், கோடிக்கணக்கில் பொது மக்கள் கவனிக்கும் நிலையில் பலமுறை விளிப்பதும் திகைப்பாக இருக்கிறது. அந்த செனல் நிகழ்ச்சி அமைப்பாளர், அத்தகைய பேச்சுகளை “மூட்” (அநாகரிக பேச்சைத் தடுக்க நெறியாளர் மைக்கை மூடலாம், அது மூட் எனப்படும்) கூட செய்யாமல் இருந்ததை கவனிக்க முடிந்தது. மறுபடியும், இந்த ரெயிடுகளில் தாமதம் உள்ளதா, தொய்வு ஏற்படுகிறதா, என்.ஐ.ஏ செல்லும் பொழுது, போலீசார் துணை / பாதுகாப்புத் தேவைப் படுகிறதா போன்ற கேள்விகளும் சாதாரண செய்தி படிப்போர்களுக்கு எழத்தான் செய்யும், இருப்பினும், என்.ஐ.ஏ போன்றோருக்கு எதற்கு துணை / பாதுகாப்புத் தேவை, அவர்களுக்கு அதெல்லாம் தெரியாதா அல்லது கருவிகள் இல்லையா என்றெல்லாம் கூட யோசிக்கக் கூடும்.

என்.. சோதனைகளுக்கு முஸ்லிம் அமைப்பினர் வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவிப்பது ஏன், எப்படி?: முன்பு, என்.ஐ.ஏ சோதனைகள் நடத்தியபோது, முஸ்லிம் அமைப்பினர் வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்தனர், ஆர்பாட்டம் செய்தனர். அந்த அளவுக்கு அவர்களுக்கு எப்படி தைரியம் வந்தது, போலீசார் எப்படி அனுமதித்தார்கள், பார்த்துக் கொண்டிருந்தார்கள் போன்ற கேள்விகளும் எழத்தான் செய்தன. இருப்பினும், போலீசார் பார்த்துக் கொண்டிருந்தது போலத் தான் ஊடகங்களில் வெளியிடப் பட்ட புகைப் படங்கள் காட்டின. அதனால், “முஸ்லிம்” என்றாலே, மிருதுவாக செயல்படுகிறார்கள், ஓட்டுவங்கி போய்விடும் போன்ற காரணங்களுக்காக அவ்வாறு செய்கிறார்களா என்று தெரியவில்லை. அதே நேரத்தில், “தீவிரவாதத்திற்கு மதம் இல்லை,” என்று செக்யூலரிஸத் தனமாகவும் மிக நம்பிக்கையுடன் பேசப் பட்டு வருகிறது. என்.ஐ.ஏ சோதனை தேவையில்லை, தமிழகத்திற்கே என்.ஐ.ஏ தேவையில்லை போன்ற வாதங்களும் வைக்கப் பட்டன. இவையெல்லாம் மத்திய-மாநில அரசு மோதல்களா, ஒன்றிய-திராவிட மாடல் சித்தாந்த ஊடல்களா, ஆரிய-திராவிட போராட்டங்களா என்ரு தெரியவில்லை. இருபினும், இதிலுள்ள முக்கியத் தன்மை, பாதுகாப்பு-தேவை, தீவிரத் தன்மை முதலியவற்றை தேசிய-பாதுகாப்பு, ஜாக்கிரதை, கவனிப்பு கோணங்களில் மிக-அத்தியாவசமாகிறது.

28-09-2022லிருந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களுக்குச்சீல் வைப்பது முதலியன: பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்குச்சீல் வைக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தமிழ்நாட்டில் போலீஸ் பாதுகாப்புடன் அலுவலர்கள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மேற்கு தாம்பரம் வ.உ.சி தெருவில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகம் செயல்பட்டு வந்தது. அந்த அலுவலகத்துக்குச்சீல் வைக்க தாம்பரம் தாசில்தார் கவிதா தலைமையில் போலீஸ் உதவி கமிஷனர் சீனிவாசன், இன்ஸ்பெக்டர் சார்லஸ் உட்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் அலுவலகம் நடத்தப்பட்டு வந்த வீட்டிற்கு வந்தனர். அலுவலகம் நடத்தப்பட்டு வந்த வீட்டின் முதல் தளத்தில் போலீசார் விசாரணை 26-10-2022 அன்று நடத்தியபோது, ஏற்கெனவே அலுவலகம் நடத்தியவர்கள் ஒன்றரை மாதங்களுக்கு முன்பு காலி செய்துவிட்டுச்சென்றது தெரியவந்தது[5]. அந்த வீட்டில் வேறுகுடும்பத்தினர் வாடகைக்கு இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர், அந்த வீட்டில் வாடகைக்கு வரும்பொழுது போடப்பட்ட ஒப்பந்த பத்திரம் மற்றும் வீட்டைக்காலி செய்யும் பொழுது எழுதிக்கொடுத்த ஒப்பந்த பத்திரங்களை ஆய்வு செய்து அதன் பிறகு அங்கிருந்து போலீசார் சென்றனர்[6]. இவையெல்லாம் தற்செயலாக நடந்தவையா அல்லது திட்டமிட்டு நடந்த நிகழ்வுகளா என்று அவர்கள் தான் புலனாய்வு செய்யவேண்டும். ஆனால், இங்கு 27-09-2022 முதல் 26-10-2022 வரை ஏன் தாமதம் என்ற கேள்வி தான் எழுகிறது.

© வேதபிரகாஷ்

16-11-2022.


[1] தினகரன், கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கு எதிரொலி சென்னையில் என்ஐஏ சோதனை: 4 இடங்களில் நடைபெற்றது; முக்கிய ஆவணங்கள் பறிமுதல், 2022-11-16@ 00:31:32.

[2] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=814529

[3] நியூஸ்18தமிழ், ஒருபுறம் NIA சோதனை; மறுபுறம் சென்னை போலீசார் சோதனைபின்னணி என்ன?,  NEWS18 TAMIL, LAST UPDATED : NOVEMBER 10, 2022, 12:29 IST.

[4] https://tamil.news18.com/news/tamil-nadu/kovai-car-blast-nia-and-chennai-police-raid-in-several-places-834109.html

[5] இ.டிவி.பாரத், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்குச்சீல் – உள்துறை அமைச்சகம் உத்தரவு, Published on: October 27, 2022, 5;36 PM IST.

[6] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/ministry-of-home-affairs-orders-sealing-of-popular-front-of-india-office/tamil-nadu20221027173604186186836

கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்ந்து என்.ஐ.ஏ தமிழகத்தில் பல இடங்களில் விசாரணை, சோதனைகள் ஆரம்பம், ஆவணங்கள் பறிமுதல்! (2)

நவம்பர் 17, 2022

கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்ந்து என்.. தமிழகத்தில்  பல இடங்களில் விசாரணை, சோதனைகள் ஆரம்பம், ஆவணங்கள் பறிமுதல்! (2)

10-11-2022 வியாக்கிழமைஆவணங்கள் பறிமுதல்: ஓட்டேரியில் தாசமக்கான் பகுதி அருகே சலாவுதீன் என்பவா் வீட்டில் வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையா் பவன் குமார் ரெட்டி தலைமையில் போலீஸார் சோதனை செய்தனா். எம்கேபி நகரைச் சோ்ந்த ஜகுபா் சாதிக் என்ற ஜாபா் சாதிக் வீட்டிலும் போலீஸார் சோதனை செய்தனா். மேலும், திருவொற்றியூா், மண்ணடி ஆகிய இடங்களிலும் போலீஸார் சோதனை செய்தனா். சோதனை நடைபெற்ற இடங்களில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனா். வியாழக்கிழமை மாலைக்குள் அனைத்து இடங்களிலும் சோதனை நிறைவு பெற்றது. சோதனையில் முடிவில் பென் டிரைவ், ஹார்ட் டிஸ்க், மெமரி கார்டு உள்ளிட்ட மின்னணு கருவிகள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக என்ஐஏ வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட .எஸ்..எஸ் இயக்க ஆதரவாளர்கள் லிஸ்ட்: மண்ணடி சைவ முத்தையா தெரு, சேவியர் தெரு, ஏழு கிணறு, கொடுங்கையூர், வடக்கு கடற்கரை, முத்தியால்பேட்டை உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்[1]. கொடுங்கையூர் பகுதியில் புளியந்தோப்பு துணை ஆணையர் ஈஸ்வரன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர்[2]. மண்ணடி பகுதியில் துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் சோதனை நடைபெற்றது. தடைசெய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்க ஆதரவாளர்கள் என சந்தேகம், ஏற்கனவே என்.ஐ.ஏ-வால் விசாரணை செய்யப்பட்டவர்கள் என 109 பெயர்கள் அடங்கிய பட்டியலை மத்திய உளவுத்துறை கொடுத்ததன் அடிப்படையில் தற்போது இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது[3]. இதேபோல் கடந்த வாரமும் பல்வேறு பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர்[4]. அதில், ரூ. 56 லட்சம் பணம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சென்னையில் 15-11-2022 அன்று பல இடங்களில் 20க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் தலைமையில் சோதனை நடைபெற்றது.

15-11-2022 – நான்கு நபர்களிடம் விசாரணைசோதனை: பட்டியலில் உள்ளவர்களில் பலர், ஏர்கெனவே ஈடுபட்டுள்ள குற்றங்களை வைத்து, தொடர்ந்து விசாரிக்கும்பொழுது, அவர்கள் இன்றும் அத்தகைய லிங்குகளுடன் தொடர்ந்து வேலை செய்து வருவது புலனாகிறது.

  1. முகமது தப்ரஸ் – குறிப்பாக சென்னை கொடுங்கையூர் வள்ளுவர்தெருவில் உள்ள முகமது தப்ரஸ் என்பவர் வீட்டில் சோதனை நடந்தது. இவர் மீது தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு பணபரிவர்த்தனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது.
  2. தவ்பிக் அகமது – அதேபோல் ஏழுகிணறு சேவியர் தெருவை சேர்ந்த தவ்பிக் அகமது என்பவர் சிரியா, ஈராக் போன்ற நாடுகளில் உள்ள பயங்கரவாதிகளுக்கு பணபரிவர்த்தனை செய்ததாக ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
  3. ஹாரூன் ரஷித் – மேலும் மண்ணடி சைவ முத்தையா முதலி தெருவை சேர்ந்த ஹாரூன் ரஷித் மீது தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு சிம்கார்டுகள் விற்பனை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஹாரூண் ரஷீத் வீட்டில் இருந்து ரொக்கம் ரூ.4 லட்சத்து 90 ஆயிரம், ரூ.1,600 மதிப்புள்ள சீன கரன்சி, ரூ.4,820 தாய்லாந்து கரன்சி, ரூ.50 ஆயிரம் மியான்மா் கரன்சி, ரூ.7 மதிப்புள்ள சிங்கப்பூா் கரன்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மண்ணடி முத்தையா தெருவில் உள்ள அவரது வா்த்தக நிறுவனத்திலிருந்து மடிக்கணினி, கிரெடிட் அட்டை, டெபிட் அட்டை, மின்னணு கருவிகள், ரூ.10 லட்சத்து 30 ஆயிரத்து 500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
  4. முகமது முஸ்தபா – வடக்கு கடற்கரை அங்கப்பன் நாயக்கர் தெருவை சேர்ந்த முகமது முஸ்தபா மீது தடை செய்யப்பட்ட இயக்கத்தினருக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த வழக்கு உள்ளது.

இந்த அதிரடி சோதனையில் தடைசெய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்புடைய இந்த 4 நபர்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும், அவர்கள் யார் யாருடன் தொடர்பில் உள்ளனர் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 10-11-2022 அன்று சோதனைக்குப் பிறகு, 15-11-2022 சோதன வருகிறது.

15-11-2022 அன்று ஊடகங்களின் செய்திவிசாரணைக்குப் பிறகு விவரங்கள் வெளியிடப் படவில்லை: தமிழக ஊடகங்கள் ஏதோ ஜாக்கிரதையாக செய்தி வெளியிடுவதைப் போல உள்ளது[5]. “அதேபோல் மண்ணடியில் உள்ள ஒரு வீட்டில் துணை ஆணையர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் சோதனை நடைபெற்று வருகிறது,” கூறப்படுகிறது என்றெல்லாம் தான் செய்திகள் சொல்கின்றன[6]. இதே சிவசங்கர் பாபா என்றெல்லாம், நேரே பார்த்தது போல எழுதுவார்கள். இருப்பினும் சென்னையில் மொத்தம் எத்தனை பேரின் வீடுகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது பற்றிய விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை[7]. சோதனை முடிந்த பிறகு அதுபற்றிய விபரங்களையும், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் யாருக்கும் தொடர்பு இருந்தால் அதுபற்றிய விபரங்களையும் போலீசார் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது[8]. கோவை சம்பவம் போன்று வேறு எங்காவது நடந்துவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டே இதுபோன்ற சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது[9]. தீவிரவாத செயல்களுக்கு துணை புரிவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை பாயும் எனவும் போலீஸ் தரப்பில் எச்சரிக்கப்படுகிறது[10]. தமிழ்.இந்து[11], “ ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தினருடன் தொடர்பில் இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில், சென்னையில் 5 இடங்களில் மாநகர போலீஸாருடன் இணைந்து என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்,…………………. சென்னையில் சிலர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்து மாநில உளவுப் பிரிவு போலீஸாருக்கு மத்திய உளவுத்துறை சமீபத்தில் ஒரு பட்டியல் அனுப்பியது. அதன் அடிப்படையிலேயே தற்போது சோதனை நடத்தப்பட்டுள்ளது..” என்கிறது[12].

15-11-2022 மாலை பீரிட்டு எழுந்து 16-11-2022 காலையும் அடங்கி விட்ட சோதனை செய்திகள்: 15-11-2022 மாலை மற்றும் 16-11-2022 காலை நாளிதழ்களில் செய்திகள் வெளியிட்டதுடன் அடங்கி விட்டன. மற்ற விசயங்களில், விவகாரங்களில் ஆராய்ச்சி செய்வது, “கிரைம்-நடந்தது என்ன?,” என்று வீடியோ போடுவது, புலன் விசாரணை மேற்கொள்வது, செர்லாக்-சாம்பு, நக்கீரன் போன்ற வேலைகளில் எந்த நிபுணத்துவ நிருபரும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. மாலை டிவிக்களில் வாத-விவாதங்களும் இல்லை. ஆக அப்படியே அடங்கி விட்டது ஆச்சரியமாக இருக்கிறது. தமிழகத்து ஊடகங்களைப் பற்றி கூட ஆராய்ச்சி செய்து, பிச்.டி வாங்கலாம் போலிருக்கிறது.

© வேதபிரகாஷ்

16-11-2022.


[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், .எஸ்..எஸ் இயக்கத்துடன் தொடர்பு? – சென்னையில் பல இடங்களில் சோதனை, Written by WebDesk, November 15, 2022 9:18:27 am.

[2] https://tamil.indianexpress.com/tamilnadu/suspect-links-to-isis-police-search-on-several-places-in-chennai-541926/

[3] குமுதம், கோவை கார் வெடிப்பு சம்பவம்: சென்னையில் மீண்டும் 4 இடங்களில் சோதனை, kumudam| TAMILNADU| Updated: Nov 15, 2022.

[4] https://www.kumudam.com/news/tamilnadu/48942

[5]  நக்கீரன், .எஸ். அமைப்புக்கு ஆதரவா? – சென்னையில் பல இடங்களில் போலீசார் சோதனை, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 15/11/2022 (07:50) | Edited on 15/11/2022 (08:10).

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/support-police-raided-many-places-chennai

[7] தமிழ்.ஒன்.இந்தியா, ஐஎஸ் பயங்கரவாதம்: காலையிலேயே பரபரக்கும் தலைநகர்.. சென்னையில் பல இடங்களில் போலீஸ் அதிரடி சோதனை.., By Nantha Kumar R Updated: Tuesday, November 15, 2022, 9:11 [IST].

[8] https://tamil.oneindia.com/news/chennai/chennai-police-raided-of-the-houses-of-suspect-of-isis-supportets/articlecontent-pf805599-485296.html

[9] மாலைமலர், .எஸ்.தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புசென்னையில் 5 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை , By Maalaimalar, 15  நவம்பர் 2022 11:31 AM.

[10] https://www.maalaimalar.com/news/district/tamil-news-coimbatore-car-blast-police-search-5-places-in-chennai-536697

[11] தமிழ்.இந்து, ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பா? – சென்னையில் 5 இடங்களில் என்ஐஏ, போலீஸார் தீவிர சோதனை, செய்திப்பிரிவு Published : 16 Nov 2022 04:31 AM; Last Updated : 16 Nov 2022 04:31 AM.

[12] https://www.hindutamil.in/news/tamilnadu/897842-nia-police-intensive-search-at-5-places-in-chennai.html

கோவை கார் குண்டு வெடிப்பு தொடர்ந்து என்.ஐ.ஏ தமிழகத்தில் பல இடங்களில் விசாரணை, சோதனைகள் ஆரம்பம்! (1)

நவம்பர் 17, 2022

கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்ந்து என்.. தமிழகத்தில்  பல இடங்களில் விசாரணை, சோதனைகள் ஆரம்பம்! (1)

28-09-2022 அன்று [Popular Front of India (PFI)] தடை செய்யப்பட்டது[1]. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) என்பது இந்தியாவில் உள்ள ஒரு இஸ்லாமிய அரசியல் அமைப்பாகும், இது முஸ்லீம் சிறுபான்மை அரசியலின் தீவிர மற்றும் தனித்துவ பாணியில் ஈடுபடுகிறது. இந்துத்துவா குழுக்களை எதிர்க்க உருவாக்கப்பட்டது, என்று விகிபீடியா வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளது. இது இந்திய உள்துறை அமைச்சகத்தால் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் 28 செப்டம்பர் 2022 [28-09-2022] புதன்கிழமை அன்று ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டது[2]. UAPA வின் பிரிவு 2(1)(p) ஆனது இந்திய தண்டனைச் சட்டத்தின் 153A அல்லது 153B பிரிவின் கீழ் வரையறுக்கப்பட்ட எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கை அல்லது குற்றத்தையும் அதன் பொருளுக்குக் கொண்ட ஒரு அங்கமாக “சட்டவிரோத சங்கம்” என்று வரையறுக்கிறது – அதாவது வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவிக்கிறது. மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு பாதகமான குற்றச்சாட்டுகள், வலியுறுத்தல்களை உருவாக்குதல். ஒரு சட்டவிரோத சங்கம் என்பது “எந்தவொரு சட்டவிரோத செயலை மேற்கொள்ள நபர்களை ஊக்குவிக்கும் அல்லது உதவுவது, அல்லது உறுப்பினர்கள் அத்தகைய செயலை மேற்கொள்வது முதலியவை அடங்கும்”.

கைதுகளும், அலுவலகங்களுக்கு சீல் வைத்தலும்: 27-09-2022 தடை அறிவித்தாலும், 13-10-2022 வரை அலுவலகங்களுக்கு சீல் வைப்பது தாமகம் ஆகியது. அப்பொழுதே கேரளா, தமிழகம் போன்ற மாநிலங்களில் எதிர்ப்பு-ஆர்பாட்டங்கள் நடந்தன. தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சென்னை புரசைவாக்கம் மூக்காத்தாள் தெருவில் தலைமை அலுவலகம் உள்ளது[3]. 01-10-2022 அன்று இதற்கு சீல் வைக்கப் பட்டது[4].தமிழகத்தில் PFIன் அலுவலகங்கள் சீல் வைப்பது கூட தாமதமாகச் செய்யப் பட்டன. ஏற்கனவே சேலம், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களில் பி.எப்.ஐ அலுவலகங்ளுக்கு சீல் வைக்கப்பட்டது[5]. 13-10-2022 அன்று இந்நிலையில், கோவை உக்கடம் கோட்டைமேட்டில் உள்ள பி.எப்.ஐ தலைமை அலுவலகம் மற்றும் வின்சென்ட் ரோட்டில் உள்ள அலுவலகத்துக்கு இன்று வட்டாட்சியர் சரண்யா தலைமையிலான அதிகாரிகள் சீல் வைத்தனர்[6]. இதனையடுத்து அந்த பகுதியில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.  27-09-2022 முதல் 13-10-2022 வரையில், தாராளமாக பல ஆவணங்கள், ஆதாரங்களை மறைக்கப் பட்டிருக்கலாம். அத்தகைய காலதாமதம் ஏன் என்று தெரியவில்லை. அப்படி காலதாமதம் செய்தும், சீல் வைத்தபோது, போலீஸ் பாதுகாப்பு ஏன், பதட்டம் ஏன் என்றெல்லாம் தெரியவில்லை. இந்தியா முழுவதும் நடைபெறுவது, தமிழகத்திலும் நடைபெறுகிறது, இதில் ஒன்றும் வித்தியாசமோ, மாறுபாடோ இருக்க முடியாது.

27-10-2022 முதல் என்.. விசாரணை, சோதனைகள் ஆரம்பம்: 23-10-2022 அன்று கோவை ஜமேஷா முபின்[7] நடத்திய குண்டு வெடிப்பு எதிரொலியாக பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறி சென்னையில் மீண்டும் 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்[8]. 27-10-2022 அன்று என்.ஐ.ஏவுக்கு இவ்வழக்கு ஒப்படைத்தப் பிறகு, கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பு விசாரணை நடத்தி வருகின்றனர்[9]. 28-10-2022 அன்று NIA முதல் தகவல் அறிக்கை FIR போட்டது[10]. இருப்பினும், சிறப்பு காவல்துரையும் சோதனை எய்தனர் என்ற செய்திகளும் வந்து கொன்டிருந்தன. குறிப்பாக இந்த வழக்கு தொடர்பாக கடந்த 10-ம் தேதி [10-11-2022, வியாழக்கிழமை] சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 43 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்[11]. இந்நிலையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு போலி பாஸ்போர்ட், சிம்கார்டு, பண பரிவர்த்தனை ஆகியவை வழங்கி ஆதரவாக செயல்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் பட்டியல் ஒன்றை தயார் செய்து தமிழக காவல் துறைக்கு அனுப்பியது[12]. அதில் சென்னையில் 18 நபர்கள் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கடந்த 10-ம் தேதி தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பட்டியலில் உள்ள 4 பேர் வீடுகளில் சென்னை போலீஸார் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

10-11-2022 அன்று மேற்கொன்ட சோதனை: இதனை தொடர்ந்து 15-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று மீண்டும் சென்னை போலீஸார் 4 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். ஆக, இவ்வாறு தேதிகளில்-நாட்களில் இடைவெளி இருக்கும்பொழுது, 

  • 23-10-2022 முதல் 27-10-2022 வரை,
  • 27-10-2022 முதல் 10-11-2022 வரை
  • 10-11-2022 முதல் 15-11-2022 வரை

சம்பந்தப் பட்டவர்கள், தங்களைப் பற்றிய, மாட்டிக் கொள்ளும் வகையில் உள்ள ஆவணங்களை, சான்றுகளை அப்படியே வைத்திருப்பார்களா என்பது சந்தேகமே. இருப்பினும், சோதனைகள் நடந்து கொண்டே இருக்கின்றன.. தமிழக ஆளுனர் முன்பு இத்தகைய கேள்வியை எழுப்பினார் என்றும் கவனிக்கத் தக்கது. துப்பறியும் நிபுணத்துவ ஊடக வல்லுனர்கள் இதைப் பற்றியெல்லாம் மூச்சுக் கூட விடாமல் இருப்பதை கவனிக்கலாம். வெள்ளம் வரும் பொழுது, தடுக்காமல், தடுக்க நடவடிக்கை எடுக்காமல், பிறகு வந்து பார்த்துக் கொள்கிறேன் என்றால், என்னாகும்? அந்நிலைதான் ஏற்பட்டு வருகிறது. 1998ல் நடந்து விட்டது, 2022லும் அரங்கேறிவிட்டது, ஆனால், தப்பித்தாகி விட்டது.

15-11-2022 அன்று 43 இடங்களில் சோதனை: இந்த வழக்கு தொடா்பாக என்ஐஏ தமிழகத்தில் 42 இடங்களில் வியாழக்கிழமை ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது. தமிழகத்தில் கோவை, சென்னை, திருவள்ளூா், திருப்பூா், நீலகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம் ஆகிய 8 மாவட்டங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது[13]. கேரள மாநிலம், பாலக்காட்டில் ஓரிடத்தில் சோதனை நடைபெற்றது. அதேநேரத்தில், கோவையில் மட்டும் 33 இடங்களிலும், சென்னையில் 8 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது[14]. சென்னையில் புதுப்பேட்டை திருவேங்கடம் தெருவில் வசிக்கும் பழைய காா்களை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் மு.நிஜாமுதீன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் வியாழக்கிழமை அதிகாலை சோதனை செய்தனா். சுமார் 2 மணி நேர சோதனைக்குப் பின்னா், நிஜாமுதீனை விசாரணைக்கு என்ஐஏ அதிகாரிகள் அழைத்துச் சென்றனா். கோவையில் வெடித்த பழைய கார் சுமார் 10 வியாபாரிகளிடம் கைமாறியிருப்பதும், அதில் நிஜாமுதீனும் அந்த காரை வாங்கி விற்றிருப்பதும் தெரியவந்ததால், அவரது வீட்டில் சோதனை நடத்தியதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனா். இதேபோல என்ஐஏ அதிகாரிகள் வழங்கிய பெயா்ப் பட்டியலின் அடிப்படையில் 4 இடங்களில் சென்னை போலீஸார் சோதனை நடத்தினா்.

© வேதபிரகாஷ்

16-11-2022.


[1] Popular Front of India (PFI) is an Islamic political organisation in India,[5][6] that engages in a radical and exclusivist style of Muslim minority politics. Formed to counter Hindutva groups, it was banned by the Indian Ministry of Home Affairs under Unlawful Activities (Prevention) Act (UAPA) on 28 September 2022 for a period of five years.

[2] Section 2(1)(p) of the UAPA defines an “unlawful association” as an association which has for its object any unlawful activity or offence defined under Sections 153A or 153B of the Indian Penal Code — that is, promoting enmity between different groups and making imputations, assertions that are prejudicial to national integration. An unlawful association is also one that “encourages or aids persons to undertake any unlawful activity, or of which the members undertake such activity”.

[3] மாலைமலர், பாப்புலர் பிரண்ட் சென்னை அலுவலகத்துக்கு சீல்தமிழக அரசு அதிரடி நடவடிக்கை, By Maalaimalar, 1 அக்டோபர் 2022 11:45 AM.

[4] https://www.maalaimalar.com/news/district/tamil-news-pfi-head-office-sealed-in-chennai-519150

[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், பி.எப். அமைப்புக்கு தடை: கோவையில் அலுவலகங்களுக்கு சீல் வைத்த அதிகாரிகள்,   Updated: October 14, 2022 3:44:56 pm

[6] https://tamil.indianexpress.com/tamilnadu/pfi-ban-officials-seal-offices-in-coimbatore-tamil-news-525222/

[7] Jameesha Mubin, who was questioned by the NIA in 2019 for alleged terror links, was charred to death in suspicious circumstances after an LPG cylinder inside a vehicle he was driving exploded near Kottai Eswaran temple in Ukkadam around 4am on October 23, a day before Diwali. The incident took place around 200 metres from a police patrol.

[8] தினத்தந்தி, #Breaking|| சென்னையில் ISIS அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் சோதனை, By தந்தி டிவி 15 நவம்பர் 2022 8:06 AM.

[9] https://www.thanthitv.com/latest-news/houses-of-suspected-isis-affiliates-raided-in-chennai-148618

[10] In the FIR filed on October 28, the NIA said 109 articles, including Potassium Nitrate, Black Powder, match box, cracker fuse length of about 2 meters, nitroglycerine, PET powder, aluminium powder, and 9-volt battery, were recovered from Mubin’s residence.

[11] காமதேனு, பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு: சென்னையில் 4 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை, Updated on: 15 Nov, 2022, 10:16 am.

[12] https://kamadenu.hindutamil.in/national/keeping-up-with-terrorist-movements-nia-raids-at-4-places-in-chennai

[13] தினமணி, தமிழகத்தில் 42 இடங்களில் என்ஏஐ சோதனை: கோவை காா் வெடிப்பு வழக்கில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல், By DIN  |   Published On : 11th November 2022 01:04 AM  |   Last Updated : 11th November 2022 05:34 AM

[14] https://www.dinamani.com/tamilnadu/2022/nov/11/nai-raids-42-locations-in-tamil-nadu-important-documents-seized-in-coimbatore-car-blast-case-3947394.html

ஜமேஷாமுபின் – ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது– தெரிய வரும் பின்னணி (3)

நவம்பர் 5, 2022

ஜமேஷா முபின்ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது – தெரிய வரும் பின்னணி (3)

சமய இலக்கியங்கள் அனைத்தும் தமிழில் உள்ளன: விசாரணையின் போது மீட்கப்பட்ட ஆதாரங்களைப் பற்றி அறிந்த ஒரு உயர்மட்ட அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், கோவை, உக்கடத்தில் உள்ள ஜமேஷா முபீனின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் வாசகங்கள் உள்ளிட்ட குறிப்பேடுகளில் ஒரு பகுதி டைரிகள் எனக் கூறினர்[1]. “ஜமேஷா முபீனின் நாட்குறிப்பு பதிவுகள் பெரும்பாலும் மற்ற மதங்கள், குறிப்பாக இந்து மதம் மற்றும் கிறித்துவம் பற்றிய அவரது பார்வையை வெளிப்படுத்துகின்றன. அவர் அந்த மதங்களின் கடவுள்களின் பெயர்களை மேற்கோள் காட்டியுள்ளார். மேலும், ஒருவரையொருவர் இணைக்கும் அம்புகளுடன் கையால் எழுதப்பட்ட சார்ட் விளக்கப்படத்தில் அவற்றை சித்தரித்துள்ளார். சி.. ஹிஜாப் சர்ச்சை, உணவு மீதான கட்டுப்பாடுகள், மாட்டிறைச்சி காரணமாக நடந்த கொலைகள் போன்ற சம்பவங்கள் இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாறி வருகின்றனர். இந்தச் பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது என்றும் அவர் திகைத்தார்,” என்று வட்டாரங்கள் தெரிவித்தன[2]. மேலும் சமய இலக்கியங்கள் அனைத்தும் தமிழில் உள்ளன என்று தெரிவித்தனர்.

அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்: மனிதர்களை காபிர், மோமின் எனப் பிரித்து, ஜிஹாதி [புனித போரில்] புரிந்து காபிர்கள் கொல்லப் பட வேண்டும் என்று எழுதியிருப்பது,இப்படி குண்டுவெடிப்புகள்  நடத்திக் கொண்டிருந்தால், மனித இனம் என்னாவது என்று யோசிக்காமல், மதவெறியுடன் இருந்தது, முதலியவற்றை கவனிக்கும் பொழுது, எங்கிருந்து  மனித நேயம்,  மனிதத்துவம், அமைதி எல்லாம் வரும் என்பது ஆராய வேண்டியுள்ளது. இந்நிலையில், கோவையில் கார் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமாத் நிர்வாகிகள் சந்தித்து உரையாடினர்[3]. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளனர்[4]. பிறகு, எப்படி, முஸ்லிம் இளைஞர்கள் அவ்வாறு சேர்ந்து திட்டமிடுவார்கள், என்றெல்லாம் தெரியவில்லை. பெற்றோர், உறவினர், மற்றோர் முதலியோர்களுக்குத் தெரியாமல் தான், ஒவ்வொரு தடவையும் இவ்வாறு நடைபெறுகிறது. அதேபோல சொல்லப் படுகிறது. ஆனால், மறுபடியும் ஏதோ ஒன்று வெடிக்கத்தான் செய்கிறது.  தவிர இந்த செய்தி வந்த பிறகு தான், பென்டிரைவ், அதில் எஐஎஸ் வீடியோக்கள் போன்ற செய்திகள் வர ஆரம்பித்துள்ளன. தமிழ்.இந்துவில் இன்று தான் (04-11-2022) அச்செய்தியே வருகின்றது

ஜமாத்துகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்: கோவை உக்கடம் பகுதியில் சம்பவ நிகழ்விடத்தின் அருகே உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு ஜமாத் நிர்வாகிகள் இன்று சென்று பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது: “3 ஜமாத்களின் சார்பாக கோட்டை சங்கமேஸ்வரன் கோயில் நிர்வாகிகளை சந்தித்து உரையாடினோம். கடந்த வாரம் இந்த பகுதியில் நடந்த சம்பவம் பல்வேறு சமூகங்களுக்கு இடையே ஒரு பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இஸ்லாமியர்களான நாங்கள் 7 தலைமுறைகளாக இந்த கோட்டைமேட்டில் வாழ்ந்து வருகிறோம். இந்தப் பகுதியில் நாங்கள் ஒற்றுமையுடன், அண்ணன் தம்பிகளாக கடந்த 200 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறோம். இந்த சூழலில் இங்கு நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தை கோட்டைமேட்டில் உள்ள ஜமாத்துகளின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். இஸ்லாம் ஒருபோதும் வன்முறையைத் தூண்டும் மார்க்கம் அல்ல. நாங்கள் அமைதியை போதிக்கிறோம். அனைத்து தரப்பு மக்களுடனும் ஒரு நல்லிணக்கத்தோடு வாழ்வதையே நாங்கள் விரும்புகிறோம். எந்தவிதமான மத பூசல்களுக்கும், அரசியலுக்கும் நாங்கள் ஆட்பட்டு விடக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

100-க்கும் மேற்பட்ட வீடியோக்கள்: முன்னதாக, கோவை மாநகர தனிப்படை போலீசார் கைதான 6 பேர் வீட்டில் சோதனை நடத்தினர்.  கிடைத்த பொருட்களில், ஒரு பென் டிரைவ் இருந்தது. சோதனை செய்த போது அதிர்ச்சி அடைந்தனர், ஏனெனில், அந்த பென் டிரைவ்வில் 100-க்கும் மேற்பட்ட ஐ.எஸ். அமைப்பின் சித்தாந்தங்கள் அடங்கிய வீடியோக்கள் இருந்துள்ளது. இதில், 6 பேரில் ஒருவரது வீட்டில் பென் டிரைவ் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது[5]. அதனை போலீசார் ஆய்வு செய்த போது அதிர்ச்சி ஏற்பட்டது. அதில், ஐஎஸ் தீவிரவாதத்துக்கு ஆதரவான ஏராளமான வீடியோக்கள் இருந்தன[6]. தீவிரவாதிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது போன்ற வீடியோக்கள் மற்றும் கழுத்தை அறுத்து கொலை செய்வது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது போன்ற வீடியோக்கள் இருந்தன[7]. இதுதவிர இலங்கை குண்டு வெடிப்பை நிகழ்த்திய நபரின் பேச்சு அடங்கிய வீடியோவும் இருந்துள்ளது[8]. இதனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வளவு தெளிவாக இருந்தாலும், இப்பிரச்சினை ஏதோ மழைகாலத்தில் இதுவும் ஒரு செய்தி என்பது போல கருதுவது போலத் தோன்றுகிறது.

கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாயிலாக, கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க முக்கிய தகவல்கள் கிடைத்தன: ‘கோட்டை ஈஸ்வரன் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வாயிலாக, கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க முக்கிய தகவல்கள் கிடைத்தன’ என, போலீசார் தெரிவித்தனர்.கோவையில், அக்., 23ல் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் நடந்த கார் குண்டு வெடிப்பில், பயங்கரவாதி ஜமேஷா முபின் பலியானார். இந்த குண்டு வெடிப்பை விசாரித்த போலீசார் சந்தித்த சிரமங்கள் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தன்று அதிகாலை, 4:00 மணிக்கு வந்த கார், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் ஒன்றரை நிமிடம் நிற்பதை கண்காணிப்பு கேமரா காட்சிகளில் காண முடிந்தது. அதன் பிறகே கார் வெடித்துள்ளது. கார் காத்திருந்த ஒன்றரை நிமிடத்தில், ஜமேஷா முபின் தான் கொண்டு வந்திருந்த வெடிபொருட்களை வெடிக்கச் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். கார் வெடித்தவுடன், அந்த அதிர்ச்சியில், பூட்டப்பட்டிருந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் கதவு தானாக திறந்தது.

கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்டுச் சென்றபோது, பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்தது: கோவிலுக்குள் வசிக்கும் குடும்பத்தினர், அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள், போலீசார் ஓடி வந்துள்ளனர்.குண்டு வெடிப்பால் ஏற்பட்ட அதிர்ச்சியில், கோவில் கண்காணிப்பு கேமராவில் அடுத்த இரண்டரை நிமிடங்களுக்கு காட்சிகள் எதுவும் இல்லை. அதன் பிறகே காட்சி பதிவாகியுள்ளது.’கோவிலில் இருந்த கேமராவில் பதிவான காட்சிகள் தான் வழக்கில் துப்பு துலக்க பேருதவியாக இருந்தன’ என்கின்றனர் போலீசார்.’சம்பவத்தை சற்று தொலைவில் இருந்து பார்த்த போலீஸ் அதிகாரி, கோவில் அருகே இருக்கும் டிரான்ஸ்பார்மர் வெடித்து விட்டதாக கருதி, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தபடி ஓடி வந்துள்ளார். ‘அருகே வந்த பின் தான், கார் வெடித்தது அவருக்கும் தெரியவந்தது’ என, அதிகாரிகள் தெரிவித்தனர்.கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த கோவிலுக்கும், ஜமேஷா முபின் வசித்த வீட்டுக்கும் வெகு துாரம் இல்லை. அதிகபட்சம், 300 மீட்டர் தான் இருக்கும். ஆனால், இறந்தவர் யார் என்றும், கார் யாருடையது என்றும், அப்பகுதி பொதுமக்கள் யாரும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை.எந்த ஒரு தகவலும் தெரியாமல், கோட்டைமேடில் போலீசார் வீதி வீதியாக அலைந்தும் விபரம் கிடைக்காமல் தடுமாறினர். கார் வந்த வழித்தடம் கண்டறிவதற்காக, கண்காணிப்பு கேமரா காட்சிகளை கேட்டுச் சென்றபோது, பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாகி கடும் எதிர்ப்பு தெரிவித்து, போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததும் நடந்துள்ளது[9]. தற்போது வழக்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் இது பற்றி விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்[10].

வேதபிரகாஷ்

05-11-2022


[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் பலியான ஜமேஷா முபீன்; இலக்கை நோக்கி பயணித்த சுயமான தீவிரவாதி! , Written by WebDesk, Updated: October 30, 2022 3:34:14 pm

[2] https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-blast-jamesha-mubeen-killed-he-was-self-radicalised-on-way-to-target-533273/

[3] தமிழ்.இந்து, அனைவருடனும் நல்லிணக்கத்தோடு வாழ விரும்புகிறோம்: கோவையில் ஜமாத் நிர்வாகிகள் பேட்டி, செய்திப்பிரிவு, Last Updated : 03 Nov, 2022 02:51 PM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/891704-we-want-to-live-in-harmony-coimbatore-jamaath-officials.html

[5] தினகரன், கார் வெடிப்பில் பலியான ஜமேஷா முபின் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டம்? பென்டிரைவில் சிக்கிய வீடியோ ஆதாரம்; பரபரப்பு தகவல்கள், 2022-11-05@ 00:31:23

[6] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=811657

[7] தினத்தந்தி, .எஸ். வீடியோக்கள் அடங்கியபென் டிரைவ்பறிமுதல், நவம்பர் 5, 12:15 am (Updated: நவம்பர் 5, 12:15 am)

[8] https://www.dailythanthi.com/News/State/is-pen-drive-containing-videos-seized-829642

[9] தினமலர், கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் துப்பு துலக்க உதவியது கோவில் கேமரா,  Updated : நவ 05, 2022  01:32 |  Added : நவ 05, 2022  01:30

[10] https://www.dinamalar.com/news_detail.asp?id=3162429

ஜமேஷா முபின் – ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது (2)

நவம்பர் 5, 2022

ஜமேஷா முபின்ஜிஹாதியானது, ஐஎஸ் பாணியில் தற்கொலை வெடிகுண்டாக மாறியது, கொலையுண்டது (2)

23-10-2022 அன்று ஐஎஸ் பாணியில் தற்கொலை குண்டுவெடிப்பில் ஈடுபட்டது: முபின் சம்பவத்தை அரங்கேற்றுவதற்கு முன்பு வீட்டிற்கு சென்று உடல் முழுவதும் முடிகளை மழித்து அகற்றி சேவ் செய்து விட்டு, தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி விட்டு வேறு சட்டை அணிந்து கொண்டு காரில் வெடிபொருட்களுடன் சதி திட்டத்தை நிறைவேற்ற புறப்பட்டதும் தெரியவந்தது[1] என்று தமிழக ஊடகங்கள் விவரிக்க ஆரமித்து விட்டன. பொதுவாக தற்கொலைப்படை தாக்குதல் நடத்துபவர்கள் தான் தங்கள் திட்டத்தை அரங்கேற்றுவதற்கு முன்பு உடல் முழுவதும் உள்ள முடிகளை முழுமையாக மழித்து சேவ் செய்வர்[2]. இந்த காட்சி கமலஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்திலும் வைக்கப் பட்டிருக்கும்[3], என்ற விளக்கத்தையும் சேர்க்கிறது இன்னொரு ஊடகம். தற்போது அதே நடைமுறையை ஜமேஷா முபின் பின்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது[4].  இவையெல்லாம், பாலஸ்தீனம், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் உள்ள ஐசிஸ், அல்-குவைதா, தாலிபான் போன்ற தற்கொலை மனித குண்டாக மாறும் ஜிஹாதிகள், கையாலும் முறைகள் ஆகும். ஷஹீத் / தியாகியாக மாறுவதற்கான செயல்முறைகள் என்று தீவிரவாதிகள் / ஜிஹாதிகள் நம்புகின்றனர்[5].  இந்த விவரங்களும் ஒரு வாரம் கழித்து தான் செய்திகளாக வெளிவருகின்றன.

ஐசிஸ், ஜிஹாத் முதலிய வாசகங்கள் கண்டுபிடிப்பு: ஜமேஷா முபின் வீட்டில் சோதனை நடத்தியபோது அவரது வீட்டில் இருந்து ‘சிலேட்’ ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர்[6]. அந்த சிலேட் தொடர்பான தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளன[7], தமிழ் ஊடகங்கள் செய்திகளை வெலியிட ஆரம்பித்தன. அந்த சிலேட்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன[8]. அதில் அரபு மொழியில் சில வாசகங்கள் இருந்தன[9]. மேலும் தமிழ்மொழியில் எழுதப்பட்டிருந்த வாசகத்தில், ‘அல்லாவின் இல்லத்தின் மீது கைவைத்தால் வேரறுப்போம்’ என்று கூறி இருந்தார். மேலும் மனித இனம் முஸ்லீம்கள் மற்றும் காபிர்கள் என பிரிக்கப்பட்டுள்ளது எனவும் எழுதப்பட்டுள்ளது. இது தீவிரமயமாக்களின் சாத்தியத்தை சுட்டிக்காட்டுகிறது என காவல்துறை தெரிவித்துள்ளது.மேலும் முபின் வெள்ளைத்தாளில் எழுதிய வாசகங்களையும் போலீசார் கைப்பற்றினார்கள். அதில் ஒரு தாளில், ‘ஜிகாத்தின் கடமைக்கான அழைப்பு’ என்று எழுதி இருந்தார். மேலும் ‘புனிதப் போரை நடத்துவது இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்களின் கடமை’ என்றும் எழுதி இருந்தார். இந்த வாசகங்கள் ஜமேஷா முபின் தனது கைப்பட எழுதியுள்ளதாக தெரிகிறது. எனவே முபின் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்பது உறுதியாகி உள்ளது, என பிறகு தமிழக ஊடகங்கள் செய்திகளை வெளியிட ஆரம்பித்து விட்டன.

தன்னிச்சையாக நடத்தப் பட்ட தீவிரவாத செயலா, கூட்டு முயற்சியா போன்ற வாதவிவாதங்கள்செய்திகள்: பிற மதங்களைச் சேர்ந்த கடவுள்களின் பெயர்கள், குடியுரிமை திருத்தம் சட்டம், கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சை, முஸ்லீம்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவது பற்றிய குறிப்புகள் கொண்ட விளக்கப்படம் – ஆகியவை கடந்த வாரம் கோவை கார் சிலிண்ட வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபினின் வீட்டில் இருந்து தமிழக காவல்துறையினரால் மீட்கப்பட்ட குறைந்தது 4 டைரிகளில் தமிழில் கையால் எழுதப்பட்ட பதிவுகளில் ஒன்றாக உள்ளது. இவையெல்லாம், அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம், முதலியவற்றை மனோதத்துவ ரீதியில் ஊக்குவிப்பதற்கு, அதிகமாக்குவதற்கு என்பதை அறிந்து கொள்ளலாம். இவை தானாக, தன்னிச்சையாக வந்து விடாது. இத்தனை வெடிமருந்து பொருட்கள் சேகரிக்க வேண்டும் என்பதிலிருந்தே நிச்சயமாக, ஒன்றிற்கும் மேற்பட்ட, பலர் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். இதுவரை ஆறுபேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

ஜிஹாதி புத்தகங்கள், இலக்கியம் முதலியவை கண்டெடுப்பு: இவை ஹதீஸ் (சொற்கள், செயல்கள் மற்றும் முஹம்மது நபியின் மௌன அங்கீகாரம் பற்றிய பதிவு) மற்றும் ஜிஹாத் (இஸ்லாத்தின் எதிரிகளுக்கு எதிரான போராட்டம்) பற்றிய குறிப்புகளைக் கொண்டிருந்தன[10]. மனிதர்கள் முஸ்லீம்கள் மற்றும் முஸ்லீம்கள் அல்லாதவர்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு குறிப்பு கூறுகிறது[11]. அதுமட்டுமின்றி, ஜிஹாத் கடமை யாருக்கு இருக்கிறது, யாருக்கு அந்த கடமை இல்லை என்ற குறிப்பையும் போலீசார் கண்டுபிடித்தனர்[12]. இந்த பொருட்கள் தவிர, ஐஎஸ்ஐஎஸ் கொடியின் சின்னம் வரையப்பட்ட ஸ்லேட்டை போலீசார் மீட்டனர்[13]. ‘அல்லாஹ்வின் வீட்டின் மீது யார் கை வைத்தாலும் அவர்களை அழித்து விடுவோம்’ என்ற மற்றொரு ஸ்லேட்டும் கிடைத்தது[14]. இவை உருது மற்றும் தமிழில் எழுதப் பட்டிருந்தன[15]. ஆக இவையெல்லாம் அடிப்படைவாதம், பயங்கரவாதம், தீவிரவாதம், முதலியவற்றின் உச்சமாகும். எனவே இவையெல்லாம் திட்டமிட்ட செயல்கள் என்பதைத் தான் காட்டுகின்றன. தமிழகத்தை பொறுத்த வரையில், கோவையில் இது இரண்டாவது முறையாக இத்தகைய செயல் நிறைவேறியிருப்பதால், உன்னிப்பாக கவனிக்கப் பட்டு அலச வேண்டியுள்ளது.

முபீன் ஒரு சுயமான தீவிரவாதி, அவனுக்கு அதிநவீன வெடிகுண்டு தயாரிக்கும் திறனும் இல்லை: “அவருடைய உக்கடம் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பெரும்பாலான புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் வெடிகுண்டு தயாரித்தல், ஜிஹாத் மற்றும் பிற மதங்களைப் பற்றிய அவரது வெளிப்படையாகத் தெரிகிறது. நாங்கள் விசாரித்த குற்றஞ்சாட்டப்பட்ட இருவரின் கருத்துப்படி, ஜமேஷா முபீன் இந்திய முஸ்லிம்கள் மற்றும் அவர்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள் என்பது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்துவார்,” என்று பாலகிருஷ்ணன் கூறினார். அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டது புரிகிறது. முபீன் ஒரு சுயமான தீவிரவாதி என்று இதுவரை தங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது, என்று தமிழக ஊடகங்கள் முடிவுக்கு வருகின்றன. அவை பெரும்பாலும் புத்தகங்கள் மற்றும் இணையத்தில் இருந்து பெறப்பட்டது. மேலும், அவருக்கு எந்த அதிநவீன வெடிகுண்டு தயாரிக்கும் திறனும் இல்லை.” என்று கூறினார். ஆனால், காஸ் சிலிண்டர் வெடிக்கும் அளவுக்கு, தொழிற்நுட்பம் தெரிந்து கொண்டது, அது வெடித்து, அவனே பலியானது நிதர்சனமாக உள்ளது.

வேதபிரகாஷ்

05-11-2022


[1] தினத்தந்தி, கோவையில் கார் வெடிப்பு: முபின் .எஸ். பயங்கரவாதி…! அதிர்ச்சி தரும் பின்னணி, நவம்பர் 4, 3:31 pm

[2] https://www.dailythanthi.com/News/State/car-blast-in-coimbatore-mubin-is-terrorist-stunning-background-829318?infinitescroll=1

[3] தமிழ்.ஒன்.இந்தியா, உடல் முழுக்கஷேவ்’! ’விஸ்வரூபம்பாணியில் தயாரான ஜமேஷா முபின்! கோவை கார் வெடிப்பில் வெளியானபகீர்,’ By Rajkumar R Published: Friday, November 4, 2022, 9:29 [IST].

[4] https://tamil.oneindia.com/news/coimbatore/new-information-has-come-out-from-nia-on-covai-car-blast-483633.html

[5] ஈரான், ஈராக் போன்ற நாடுகளில், மூளைசலைவை செய்ய, வீடியோக்கள் காண்பிக்கப் படுகின்றன. அவற்றைப் பார்க்கும் இளைஞர்கள் அதுபோலவே தயாராகின்றனர். உயிதியாகம் செய்து, ஷஹீதாக, சொர்க்கம் செல்வதற்கு தயாராகிறார்கள். அவ்வாறே, அவர்களுக்கு போதனையும் செய்யப் படுகிறது.

[6] மாலைமுரசு, ஜமேஷா முபீன் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட முக்கிய ஆவணங்கள்ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பா?!!, webteam, Nov 4, 2022 – 17:5

[7] https://malaimurasu.com/Key-documents-found-in-Jamesha-Mubeens-house-link-to-ISIS

[8] கோவை கார் வெடிப்பு சம்பவம்! கமல் பட பாணியில் தயாரான ஜமேஷா முபின்!

Sakthi by SAKTHI November 4, 2022

[9] https://www.news4tamil.com/new-information-has-come-out-from-nia-on-covai-car-blast/

[10] The News Minute, Coimbatore blast: Handwritten notes recovered from Jamesha Mubin’s house, THURSDAY, NOVEMBER 03, 2022 – 16:53

[11] https://www.thenewsminute.com/article/coimbatore-blast-handwritten-notes-recovered-jamesha-mubin-s-house-169553

[12] Times Now, Coimbatore car blast: Documents talking about jihad, kafirs and Muslims recovered from Jamesha Mubin’s house, Times Now Bureau, Updated Nov 3, 2022 | 02:01 PM IST

[13] https://www.timesnownews.com/india/coimbatore-car-blast-documents-talking-about-jihad-kafirs-and-muslims-recovered-from-jamesha-mubins-house-article-95273880

[14] Republic TV, In Coimbatore Blast Case, Docs On ‘Jihad’ & Radicalisation Found At Deceased Mubin’s House, Last Updated: 3rd November, 2022 16:31 IST

[15] https://www.republicworld.com/india-news/politics/in-coimbatore-blast-case-docs-on-jihad-and-radicalisation-found-at-deceased-mubins-house-articleshow.html

ஶ்ரீலங்கை குண்டுவெடிப்பு – ஐஎஸ் தொடர்புகளில் கேரளா, கர்நாடகா, தமிழகம் – ஜிஹாதித்துவத்தின் வலை பெரிதாவது [2]

மே 31, 2019

ஶ்ரீலங்கை குண்டுவெடிப்புஐஎஸ் தொடர்புகளில் கேரளா, கர்நாடகா, தமிழகம்ஜிஹாதித்துவத்தின் வலை பெரிதாவது [2]

Terror threat remains in Lamka 01-05-2019

எச்சரித்தும் இலங்கை தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை: இலங்கையில் குண்டு வெடிப்பு நடைபெற வாய்ப்பு இருப்பதாக இந்திய உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்தும் அதனை இலங்கை அரசு கண்டு கொள்ளாமல் விட்டதே குண்டு வெடிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இலங்கையை போன்று இந்தியாவிலும் பயங்கரவாதிகள் நாசவேலைக்கு சதி திட்டம் தீட்ட திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு கோவையில் பிடிபட்ட ஐ.எஸ். ஆதரவாளர்கள் சிலரிடம் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அமைப்பினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இலங்கையில் குண்டு வைப்பதற்கு சில பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர். இந்த எச்சரிக்கையையும் உளவுப்பிரிவு அதிகாரிகள் இலங்கையிடம் தெரிவித்து இருந்தனர். அதன்பின்னர் தமிழகத்திலும் உஷாராக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இலங்கை குண்டு வெடிப்புக்கு பின்னர் தமிழகம் முழுவதும் போலீசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்டு தற்கொலைபடை தாக்குதலில் உயிரிழந்த பயங்கரவாத தலைவன் ஜக்ரன் ஹசீம் என்பவனின் உறவினர்கள், நண்பர்கள் யார்-யார் என்பது பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நாடு முழுவதும் விசாரணையை முடுக்கி விட்டனர்.

29-04-2019 Lankan blast link with Kerala.3

30-04-2019 Kerala Lanka terror link

ஐ.எஸ், கேரள தொடர்புகள்: அப்போது பயங்கரவாதி ஜக்ரன் ஹசீமின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தென் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பதுங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை பிடிக்க கடந்த 10 நாட்களாக அதிரடி வேட்டை நடத்தப்பட்டது. கேரளா மாநிலம் பாலக்காட்டில் ஜக்ரன் ஹசீமின் நெருங்கிய ஆதரவாளரான ரியாஸ் என்பவர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டார். இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியான ஜக்ரன் ஹசீமின் பேச்சால் கவரப்பட்ட ரியாஸ் பயங்கரவாத செயல்பாடுகள் தொடர்பான நடவடிக்கையிலும் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் சென்னையிலும் ஜக்ரன் ஹசீமின் ஆதரவாளர்கள் பதுங்கி இருப்பது அம்பலமானது. இது தொடர்பாக நேற்று இரவு 30-04-2019 சென்னையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். மண்ணடியில் சந்தேகத்துக்கு இடமாக ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் அளித்த தகவலின்படி பூந்தமல்லியில் பெங்களூர் நெடுஞ்சாலையில் உள்ள கோல்டன் அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கையை சேர்ந்த சிலர் வசித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

Terror suspects sarched in TN following Lankan blast 02-05-2019

Lankan bombers in Bangalore, alert, 05-05-2019

பூந்தமல்லியில் பதுங்கியிருந்தவர்கள்- என்.ஐ.ஏ சோதனை: இதைத் தொடர்ந்து அங்கு போலீஸ் அதிகாரிகள் மற்றும் என்.ஐ.ஏ. படையினர் முகாமிட்டனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் மொத்தம் 800 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இதனால் போலீசாரால் அங்கு தங்கியிருக்கும் இலங்கையை சேர்ந்தவர்கள் யார்? என்பது உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நிர்வாகிகளிடம் ரகசியமாக விசாரணை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகள் இலங்கையை சேர்ந்தவர்கள் தங்கியிருந்த வீட்டை கண்டுபிடித்தனர். இதன்பின்னர் அந்த வீட்டை சுற்றி வளைத்த போலீஸ் படையினர் அங்கு தங்கியிருந்த தாலுகா ரோசன் என்ற வாலிபரை மடக்கி பிடித்தனர். அவரது கூட்டாளிகளான முகமது ரப்பூதீன், லபேர் முகமது ஆகியோரும் பிடிபட்டனர். நேற்று மாலையில் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற போலீஸ் அதிகாரிகள் நள்ளிரவிலேயே மூன்று பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்[1]. பின்னர் பலத்த பாதுகாப்புடன் அவர்களை ரகசிய இடத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்[2]. இவர்களில் தாலுகா ரோசன் இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதியான ஜக்ரன் ஹசீமின் நெருங்கிய நண்பர் என்பது தெரிய வந்தது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே இவர் சென்னைக்கு வந்தது தெரியவந்தது. இலங்கையில் இருந்த போது ஜக்ரன் ஹசீமின் செயல்பாடுகளால் ரோசன் ஈர்க்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
IS inked searched in and seizedTN by NIA 21-05-2019

Lankan bombers tained in Kashmir, 05-05-2019

ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த ரோஷன் கைது: தாலுகா ரோசன் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு அவர் பூந்தமல்லி முகவரியில் போலியான சில அடையாள அட்டைகளை வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் பாஸ்போர்ட், விசா எதுவும் இல்லை. இதையடுத்து போலீசார் தாலுகா ரோசனை கைது செய்தனர். உரிய ஆவணங்கள் இன்றி வெளிநாட்டில் இருந்து தப்பி வந்து அனுமதியின்றி தங்கியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று போலீசார் தாலுகா ரோசனை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். இலங்கை வாலிபர் தாலுகா ரோசன் சென்னையில் தங்கியிருந்து இலங்கை குண்டு வெடிப்புக்கு சதி திட்டம் தீட்டினாரா? குண்டு வெடிப்பு பயங்கரவாதிகளுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

29-04-2019 LLankan blast link wit Kerala

Sri Lankan terrorists instigated by the TN counterparts- Buddhist priest accused

இலங்கையிலிருந்து வந்து பூந்தமல்லியில் ஏன் தங்க வேண்டும்?: என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் தாலுகா ரோசன் பிடிபட்டதும் ‘கியூ’ பிரிவு போலீசாரும் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதே நேரத்தில் முகமது ரப்பூதீன், லபேர் முகமது ஆகியோரிடம் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தன. இதனைத் தொடர்ந்து இருவரையும் முறைப்படி அந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப இலங்கை தூதரக அதிகாரிகள் மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இலங்கை சென்றதும் அந்நாட்டு போலீசார் இரண்டு பேரிடமும் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு பீதி அடங்கும் முன்னர் அதில் தொடர்புடைய பயங்கரவாதிகளிடம் நெருக்கமாக இருந்ததாக கருதப்படும் இலங்கை வாலிபர்கள் சென்னையில் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து சந்தேகத்துக்கு இடமாக இலங்கையை சேர்ந்த வேறு யாரும் தங்கியிருக்கிறார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் கடலோர பாதுகாப்பு படையினரும் போலீசாரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

IS inked arrested fromTN by NIA 22-05-2019

NIA arrests Faizal from Kerala 09-05-2019

31-05-2019 அன்றைய செய்தி: இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக, இந்தியாவின் தேசிய விசாரணை முகமையான, என்.ஐ.ஏ அமைப்பின் அதிகாரிகள் குழு இலங்கை சென்றடைந்தனர்[3]. ஆலோக் மிதாலின் தலைமையிலான இந்த குழுவினர், இலங்கையில் தாக்குதல் நடத்திய, பயங்கரவாதிகள் இந்தியாவுடன் கொண்டிருந்த தொடர்பு குறித்து விசாரணை செய்வதற்காக, இந்த குழுவினர் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளதாக தெரியவந்துள்ளது[4]. தமிழக, கேரள, இலங்கை தீவிரவாத குழுக்கள், வேண்டுமென்றே, இந்திவாவின் மீது கெட்ட பெயர் களங்கத்தை ஏற்படுத்த, இவ்வாறு செயல்பட்டு வருகின்றனர். காஷ்மீர கூட்டங்களும் இதற்கு பாகிஸ்தான் மூலம் உதவி வருகின்றன. கேரள-பெங்களூர் தொடர்புகள் ஐ.எஸ்.க்கு ஆட்களை அனுப்பி வைப்பதில் தீவிரமாக உள்ளன. இப்பொழுது எல்.டி.டி.ஈ இல்லாததால், முஸ்லிம் தீவிரவத கும்பல் அவர்களின் இடத்தைப் பிடித்து செயல்பட ஆரம்பித்துள்ளது. இதனால், மாலத்தீவு, மொரிஸியஸ் தொடர்புகளும் சேர்கின்றன. இவ்வளவையும் எதிர்த்து, இந்தியா லாவகமாக ச்யல்பட வேண்டியுள்ளது.

© வேதபிரகாஷ்

31-05-2019

IS claim that they opened a branch in India 15-05-2019

[1] மாலைமலர், இலங்கை குண்டுவெடிப்புசென்னையில் பதுங்கிய இலங்கை வாலிபர் கைது, பதிவு: மே 01, 2019 13:26

[2] https://www.maalaimalar.com/News/District/2019/05/01132614/1239547/Srilankan-youth-arrest-at-chennai.vpf

[3]  தினத்தந்தி, தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் : இலங்கை சென்ற இந்தியாவின் தேசிய விசாரணை முகமை அதிகாரிகள், பதிவு : மே 31, 2019, 07:26 AM

[4] https://www.thanthitv.com/News/World/2019/05/31072621/1037269/Srilanka-Easter-Bombing-Indian-NIA-Visit-Srilanka.vpf

ஶ்ரீலங்கை குண்டுவெடிப்பும், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க [கிருத்துவரைத் தாக்குவது மற்றும் இந்தியாவிற்கு களங்கம் ஏற்படுத்துவது] முயலும் ஜிஹாதி தீவிரவாதிகள்! [1]

மே 31, 2019

ஶ்ரீலங்கை குண்டுவெடிப்பும், ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க [கிருத்துவரைத் தாக்குவது மற்றும் இந்தியாவிற்கு களங்கம் ஏற்படுத்துவது] முயலும் ஜிஹாதி தீவிரவாதிகள்! [1]

Sri Lankan blast, the church

நியூசிலாந்து குண்டுவெடிப்பிற்கு பதில் இது இல்லை: இலங்கையில் கடந்த மாதம் ஏப்ரல் 21-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை அன்று தற்கொலைப்படையை சேர்ந்த ஒரு பெண் உள்பட 9 பயங்கரவாதிகள் தேவாலயங்கள் மற்றும் சொகுசு ஓட்டல்களை குறிவைத்து நடத்திய தாக்குதலில் / நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 258 பேர் பலியானார்கள். சுமார் 500 பேர் காயமடைந்தனர். ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தூண்டுதலால் நடத்தப்பட்ட இந்த கொடூர தாக்குதல்களுக்கு இலங்கையில் இயங்கி வரும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு பொறுப்பேற்றது. இலங்கையில் பௌத்தம் 70.3%; இந்து 12.6%; இஸ்லாம் 9.7%; கிருத்துவம் 6.1% என்றுள்ளது. இந்நிலையில், நியூசிலாந்தில், முகமதியர் தாக்கப் பட்டதால், பழி வாங்க, இக்குண்டுவெடிப்பு நடத்தப் பட்டதாக தெரிகிறது என்று ருவான் விஜயரத்னே குறிப்பிட்டதை, நியூசிலாந்து வெளியுறவு அமைச்சர், வின்ஸ்டன் பீட்டர்ஸ் மறுத்து, சாடியிருக்கிறார்[1]. 2010லிருந்தே, இலங்கையில் சிறுபான்மையினர் தாக்கப் பட்டு வருகின்றனர். எல்.டி.டி.ஈ காலத்தில் இந்துக்கள் அதிகமாகவே பதிக்கப் பட்டனர். ஆனால், அப்பொழுதெல்லாம் “தமிழர்” என்று குறிப்பிடப் பட்டு, உண்மை அமுக்கப் பட்டது. “தமிழர்களுக்கும்,” “முஸ்லிம்களுக்கும்” சண்டை…………என்றெல்லாம் கூட செய்திகள் வெளியிடப் பட்டன. இப்பொழுது, கிருத்துவர் என்றதும், அவ்வாறே குறிப்பிடப் பட்டன.

Sri Lankan blast, how world reacted

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்புகள்: ஈஸ்டர் பண்டிகை 21-04-2019 அன்று நடத்தப் பட்ட ஜிஹாதி குண்டுவெடிப்புகள்:

நேரம் குண்டுவெடிப்பு நடந்த இடங்கள்
8:25 AM

 

Negombo: St.Sebastian’s Church

 

நெகும்போ – செயின்ட் செபாஸ்டியன் சர்ச்
8:45 AM Colombo: Shrine of St. Anthony Church

 

கொழும்பு – செயின்ட் ஆந்தனி சர்ச்
9:05 AM Batticaloa: Zion Church

 

பட்டிகொலா – ஜியோன் சர்ச்
9.15 – 9.20 AM

 

Colombo: Cinnamon Grand Hotel, Kingsbury Hotel, Shangri-La Hotel

 

கொழும்பு – சின்னமான் கிரான்ட் ஹோடல், ஷங்கரிலா ஹோடல்
2:00 PM Dehiwala: Tropical Inn

 

டில்லிவாலா, டிராபிகல் இன்
2:15 PM Dematagoda: Housing complex

 

டெமாடாகோடா குடியிருப்பு.

குண்டு வெடிப்பு தொடர்பாக தீவிர தேடுதல் வேட்டை, தொடர் விசாரணை என நூற்றுக்கணக்கானோரை பிடித்து இலங்கை புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இண்டர்போல் உள்ளிட்ட அமைப்புகளும் விசாரணையில் குதித்துள்ளன. இலங்கை குண்டுவெடிப்பின் எதிரொலியாக இந்தியாவிலும் உளவுத்துறை, ரா, என்.ஐ.ஏ அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இலங்கைக்கு அருகே உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் என்.ஐ.ஏ முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறது. குண்டு வெடிப்பில் உயிரிழந்த தற்கொலைப்படை தீவிரவாதிகளுக்கு தலைவனாக செயல்பட்டது ஜக்ரான் பின் ஹாசிம் என்ற தீவிரவாதி என்பது தெரியவந்தது. ஜக்ரான் பின் ஹாசிமும் இந்த தாக்குதலில் பலியானான். சில தீவிரவாதிகள் தப்பிவிட்டதாக இலங்கை அரசின் விசாரணையில் தெரியவந்தது.

Lankan bombers photo released 03-05-2019

அவர்கள் புகைப்படங்களை வெளியிட்டு தேடிவருகின்றனர். இந்நிலையில் எங்கெல்லாம் குண்டு வெடித்தது, யார், யார் அங்கு குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்தனர் என்கிற பட்டியலை புகைப்படத்துடன் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது[2]. இதுகுறித்த விபரம் வருமாறு[3]:

  1. சங்ரில்லா ஹோட்டல் – மொஹம்மத் காஸீம் மொஹம்மத் ஸஹ்ரான்
  2. சங்ரில்லா ஹோட்டல் – மொஹம்மத் இப்ராஹிம் இல்ஹாம் அஹமத்
  3. சினமன் கிரேன்ட் ஹோட்டல் – மொஹம்மத் இப்ராஹிம் இன்ஸாப் அஹமத்
  4. கிங்ஸ் பெரி ஹோட்டல் ;- மொஹம்மத் அஸாம் மொஹம்மத் முபாரக்
  5. புனித செபஸ்டியன் தேவாலயம் கட்டுவாப்பிடிய நீர்கொமும்பு – ஹச்சி மொஹம்மத் மொஹம்மத ஹஸ்துன்
  6. புனித அந்தோனியார் ஆலயம் கொச்சிகடை – அலாவுதீன் அஹமத் முவாத்
  7. சீயோன் தேவலயம் மட்டக்களப்பு ;- மொஹம்மத் நஸார் மொஹம்மத் அஸாத்
  8. தெஹிவளை – அப்துல் லதீப் ஜமீல் மொஹம்மத்
  9. தெமட்டகொடை – பாத்திமா இன்ஹாம்

மேற்கண்ட ஒன்பது இடங்களின் பட்டியலை புகைப்படத்துடன் இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. தற்போது குண்டுவெடிப்பு தீவிரவாதிகளுக்கு இந்தியாவில் உள்ள சிலருடன் தொடர்பு இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் என்.ஐ.ஏ தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது. இதற்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், கேரளா, கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் காஷ்மீர் ஆகிய இடங்களுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளனர்[4]. அங்குள்ளவர்களுக்கு, இவர்கள் பயிற்சி அளிக்க சென்றிருக்கலாம் அல்லது மற்ற பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள சென்றிருக்கலாம். இவர்கள், சர்வதேச பயங்கரவாதிகளுடன், தொடர்பில் உள்ளனர்[5].

Emergency extended in Lanka for one more month-

அவசரநிலை பிரகடனம் மற்ற நடவடிக்கைகள்: 22-04-2019 அன்றிரவே, அவசரநிலை பிரகடனம் செய்யப் பட்டது. 26-04-2019 அன்று இலங்கை ராணுவம் மற்றும்  STF தேடுதல் வீட்டையில், சைந்தமருது என்ற இடத்தில், அதிரடி சோதனை நடத்திய போது, மூன்று பேர் தற்கொலை குண்டுவெடிப்பில் குடும்பத்தாரோடு இறந்தனர். அதில் ஆறு குழந்தைகளும் பலியாகின. இன்னொரு சோதனையில் 150 ஜிலேட்டின் குச்சிகள், ஐ.எஸ் சீருடை, 100,000 உலோக குண்டுகள், டுரோன், லேப்டாப், வேன் முதலியவை சிக்கின.  அடிமை தீவில், பள்ளீயவிதிய என்ற இடத்தில் உள்ள மசுதியிலிருந்து 40 கத்திகள் சீருடை மற்ற ஆயுதல் பறிமுதல் செய்யப் பட்டன. 24-04-2019 அன்று பர்கா, நிகாப் போன்ற முகத்தை மறைக்கும் உடைகளுக்கும் தடை விதிக்கப் பட்டது. ஏனெனில், ஆண்கள் அவ்வேடத்தில் தப்ப முயல்வது தெரிந்தது. 27-04-2019 கல்முனையில் நடத்தப்பட்ட சோதனையில், மூவர் கைது செய்யப்பட்டனர்.  12-05-2019 மற்றும் 13-05-2019  நாட்களில் கலவரம் உண்டாக்க முயற்சிகள் நடந்தாலும் அடக்கப்ப்பட்டன.

Lankan blasts all arrested or finished 08-05-2019

இலங்கையில் பாதுகாப்பு மீட்கப்பட்டுள்ளது குண்டுவெடிப்பில் தொடர்புடைய அனைவரின் கதையும் முடிந்து விட்டது: இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்புடன் தொடர்புடைய உள்நாட்டைச் சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு வெடிகுண்டு தாக்குதலை நடத்தியிருப்பதாக இலங்கை அரசு நடத்திய விசாரணையில் உறுதியானது. இதைத் தொடர்ந்து, வெடிகுண்டு தாக்குதலுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் பணியில் சிஐடி மற்றும் தீவிரவாத விசாரணை பிரிவு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். நாடு முழுவதும் முப்படைகளும், போலீசாரும் மேற்கொண்ட கடும் சோதனையின் மூலம் வெடிகுண்டு கிடங்குகள், தீவிரவாத பயிற்சி முகாம்கள் கண்டறியப்பட்டு அவை அழிக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 15 நாட்களாக எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கை குறித்து முப்படை தளபதிகளும், பொறுப்பு காவல்துறை தலைவரான சந்தனா விக்ரமரத்னேவும் கூட்டாக பேட்டி அளித்தனர்[6].  அதில் விக்ரமரத்னே கூறியதாவது: ‘‘ஈஸ்டர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய அனைத்து தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது கைதாகி உள்ளனர். இதனால் நாட்டில் பாதுகாப்பு மீட்கப்பட்டுள்ளது’’ என பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்[7].

Woman made suicide bomber in Colombo blast

தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாத்தே மில்லத்தே இப்ராஹிம், வில்லாயத் அஸ் செய்லானி ஆகிய அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை: ஈஸ்டர் தாக்குதல் என்று அழைக்கப்படும் இந்த தாக்குதல் தொடர்பாக சுமார் ஆயிரம் பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர் இயல்புநிலைக்கு திரும்பிவரும் இலங்கையின் வடமேற்கு பகுதியில் இருபிரிவினருக்கு இடையில் வெடித்த மோதலை தொடர்ந்து பல்வேறு நகரங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு விரும்பத்தகாத பதிவை மையமாக வைத்து கடலோர நகரமான சிலாபம் நகரில் 12-05-2019 அன்று இருதரப்பினருக்கு இடையில் வெடித்த கலவரம் பிற பகுதிகளுக்கும் பரவியதில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்நிலையில், ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணமான தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாத்தே மில்லத்தே இப்ராஹிம், வில்லாயத் அஸ் செய்லானி ஆகிய அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது[8]. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிக்கையில் இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா கையொப்பமிட்டுள்ளார்[9]. இதனை தொடர்ந்து அந்த நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

Sri Lankan blast, how world reacted-2

அப்பாவி மக்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் பாதிக்கப் பட்டுள்ளன: ஜிஹாதி தீவிரவாதிகள், மூளை செய்யப் பட்ட நிலையில், மடவெறியில் இவ்வாறு குண்டுவெடிப்புகள் நடத்தி வருகிறார்கள். இதனால், சம்பந்தப்படாத, அப்பாவி மக்கள் இதனால், எந்த அளவுக்கு பாதிக்கப் படுகிறார்கள் என்பதனை, அவர்கள் உணர்வதில்லை. தொடர் குண்டுவெடிப்பால் 200 குழந்தைகள், தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளனர். சில குடும்பங்கள், தங்கள் வருவாய் ஆதாரத்தை இழந்துவிட்டன[10]. அவர்களுக்கு போதிய சேமிப்பும் இல்லாததால், அன்றாட வாழ்க்கை நடத்தவே சிரமப்படுகின்றனர். குண்டுவெடிப்பில் காயம் அடைந்த பலர் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். சிலர் வேலை செய்யும் திறனை இழந்துவிட்டனர்[11]. குடும்ப உறுப்பினர்கள் காயம் அடைந்ததால், 75 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

31-05-2019

Sri Lankan blast, how world reacted-3

[1] New Zealand Foreign Minister Winston Peters hit back at Sri Lanka’s junior defense minister’s claim that the Easter Sunday attacks on hotels and churches in Sri Lanka were carried out in retaliation for the shooting at a New Zealand mosque last month. Ruwan Wijewardene said last Tuesday that “preliminary investigations” indicated that the bombings in Sri Lanka were a response to the attack by a white supremacist on two New Zealand mosques in mid-March that left 50 people dead. There may have been thematic similarities between the attacks, both of which targeted national religious minorities in their houses of worship, but that may have been all: Wijewardene declined to provide evidence that the one was in response to the other. And the Islamic State’s claim of responsibility, also issued last Tuesday, made no mention of New Zealand.

https://www.washingtonpost.com/world/2019/04/30/linking-christchurch-attack-sri-lanka-bombing-cheap-shot-says-new-zealand-foreign-minister/?utm_term=.08c52d46efb4

[2] தி.இந்து, இலங்கை குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் புகைப்படம் வெளியீடு, Published : 02 May 2019 15:06 IST; Updated : 02 May 2019 15:06 IST.

[3] https://tamil.thehindu.com/world/article27010853.ece

[4] தினமலர், இலங்கை குண்டு வெடிப்பு பயங்கரவாதிகள் கேரளா, பெங்களூர், சென்று வந்தது அம்பலம், Updated : மே 04, 2019 21:20 | Added : மே 04, 2019 19:50.

[5] https://www.dinamalar.com/news_detail.asp?id=2269347

[6] தினகரன், இலங்கையில் பாதுகாப்பு மீட்கப்பட்டுள்ளது குண்டுவெடிப்பில் தொடர்புடைய அனைவரின் கதையும் முடிந்து விட்டது, 2019-05-08@ 00:06:36.

[7] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=493538

[8] மாலைமலர், தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 பயங்கரவாத இயக்கங்களுக்கு தடை விதித்தது இலங்கை அரசு, பதிவு: மே 14, 2019 15:05

[9] https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/14150530/1241666/Sri-Lanka-President-bans-National-Thowheed-Jamaath.vpf

[10] மாலைமலர், இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் 200 குழந்தைகள், பதிவு: மே 09, 2019 06:01.

[11] https://www.maalaimalar.com/News/TopNews/2019/05/09060141/1240749/About-200-Children-Lose-Family-Members-In-Sri-Lankas.vpf

அப்துல் கரீம் துண்டா என்கின்ற அப்துல் குட்டூஸ் மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தளபதி கைது – வெளிவரும் விவகாரங்கள்!

ஓகஸ்ட் 18, 2013

அப்துல் கரீம் துண்டா என்கின்ற அப்துல் குட்டூஸ் மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தளபதி கைது – வெளிவரும் விவகாரங்கள்!

Abdul Karim Tunda - hand amputated

கடினமானஉழைப்பிற்குப்பிறகுதுண்டாவைப்பிடித்தது: இந்திய புலன்விசாரணைக் குழுக்கள் மிகவும் கஷ்டப்பட்டுத்தான், இவனைப் பிடித்திருக்கிறார்கள்[1]. இன்டர்போலில் விவரங்களைக் கொடுத்து, தொடர்ந்து எல்லை போக்குவரத்து, நேபாளத்தில் செயல்படும் தீவிரவாதக் குழுக்களைக் கண்காணிப்பது, ஆப்கானிய தீவிரவாதிகளின் ஊடுருவல் முதலியவற்றை பின்பற்றித்தான் இவனைப் பிடிக்க முடிந்தது. பாபரி மஸ்ஜித் பிரச்சினையை வைத்துக் கொண்டு ஜிஹாதி தீவிரவாதத்தை, இந்தியாவிற்கு எதிராக, ஒரு மாற்றுப் போராக உருவாக்கியது, இந்த துண்டா, தாவூத் இப்ராஹிம் மற்ற பயங்கரவாதிகள் தாம். லஸ்கர்-இ-தொய்பாவின் சித்தாந்தியாக செயல்பட்டவன் பிடிபட்டதில் பல உண்மைகள் தெரியவருகின்றன[2]. இந்தியாவின் மீது இப்படி எல்லா வழிகளிலும் ஜிஹாதி செயல்பட்டு வரும் போது, செக்யூலரிஸ அரசியல்வாதிகள் தமக்கேற்ற வழிகளில் செயல்படுவதால், எந்த சாதகமான முடிவுகளையும், இந்தியாவின் நலன், பாதுகாப்பு, அமைதி முதலியவற்றிற்காக வேண்டிய நன்மைகளும் கிடைக்காமல் போய்விடும். அத்தகைய நிலையைத்தான் சோனியா காங்கிரஸ், முல்லாயம் சிங் யாதவ், கம்யூனிஸ கட்சிகள் செய்து வருகின்றன.

Tunda brother - he should be punished

அப்துல்கரீம்துண்டாவின்குடும்பத்தாரின்நிலை: அப்துல் மாலிக் என்ற அவனுடைய சகோதரர், அவன் பிடிபட்டது பற்றி கூறும் போது, “அவன் மரவேலை செய்து கொண்டிருந்தான் என்றுதான் எனக்குத் தெரியும். 1991க்குப் பிறகு அவனைப் பார்க்கவில்லை. அவனை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. ஒருவேளை பார்த்தால், செய்துள்ள இக்காரியங்களால்நீ செய்த சாதித்தாய்?”, என்று கேட்பேன்[3]. அவனுடைய மைத்துனி தஹிரா கூறும் போது, “அவனுக்குரிய தண்டனை கிடைக்கவேண்டும். அவனால்தான் எங்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டன. எப்பொழுதெல்லாம் குண்டு வெடித்ததோ அப்பொழுதெல்லாம் போலீஸார் எங்களிடம் வந்து விசாரிப்பார்கள்”,  என்றார்[4]. தொடர்ந்து, “துண்டாவின் இரு மனைவிகள்ஜரினா மற்றும் மும்தாஜ் மற்றும் ஆறு குழந்தைகள் 1993ல் ஒரு இரவில் எங்கோ சென்றுவிட்டனர். துண்டா மறைந்த பிறகு அதற்குப் பிறகு அவர்கள் எங்குசென்றனர் என்று தெரியவில்லை”, என்றும் சொன்னார்[5]. போலீஸார், துண்டாவிடம் அவனுடைய குடும்பத்தைப் பற்றி கேட்டபோது, தானும் தன்னுடைய குடும்பத்தை சந்திக்க விரும்பவில்லை என்றான்[6]. ஒருவன் தீவிரவாதியாக மாறும் போது, குடும்பம் எப்படி கஷ்டப்படுகிறது என்றும் தெரிகிறது.

Dawood-with-Chota-shakeel

தாவூத்இப்ராஹிமைப்பற்றிபத்துநாட்களில்செய்திகள்வந்துக்கொண்டிருக்கின்றன: பத்து நாட்களுக்கு முன்னால் தான், ஷார்யார் கான் என்ற பாகிஸ்தானின் சிறப்பு தூதர் “தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இருந்தான். ஆனால், அவன் பாகிஸ்தானிலிருந்து விரட்டப்பட்டான். அப்படி அவன் இருந்தால், பிடிக்கப்பட்டு கைது செய்யப்படவேண்ட்டும். அவன் அமீரகத்தில் [United Arab Emirates] இருக்கக்கூடும்”, என்றார்[7]. வளைகுடா நாடுகள் ஜிஹாதிகளுக்கு சொர்க்க பூமி போல உள்ளதும் தெரிய வருகிறது. துபாயில் எப்படி யார் வேண்டுமானாலும் தங்கிக் கொள்ளலாம் என்றால், சவுதியில், வேண்டிய உதவி, பயிற்சி முதலியவற்றைப் பெறலாம் என்றுள்ளது. ஹாவிஸ் சையது இங்கு வந்து படித்துச் சென்றதை கவனிக்க வேண்டும். துண்டாவின் நெருங்கிய நண்பர்தான் ஹாவிஸ் சையது. அதற்கு முன்னால் 14-08-2013 அன்று லண்டனில் தாவூதின் வலதுகை போன்றிருந்து வேலை செய்து வந்த இக்பால் மிர்சி (63) என்பவன் ஹார்ட்ட் அட்டாக்கினால் இறந்து போனான் என்ற செய்தி வந்தது[8]. 1994ல் இந்தியா இன்டர்போல் மூலம் சிவப்பு அறிக்கை கொடுத்திருந்தது. ஸ்காட்லான்ட் யார்ட் போலீஸாரால் 1995ல் பிடிக்கப்பட்டாலும், இந்தியாவிற்கு அனுப்ப உள்ளூர் மாஜிஸ்ட்ரேட் மறுத்து விட்டார்[9]. அதுமட்டுமல்லது இங்கிலாந்தில் தங்கிக் கொள்ள அனுமதியும் கொடுக்கப்பட்டது. இப்பொழுது ஹாவிஸ் சையதிடம் தாவூத் இப்ராஹிமை தான்தான் அறிமுகப்படுத்தினேன் என்று துண்டா ஒப்புக் கொண்டுள்ளான்[10]. அதுமட்டுமல்லாது ஐ.எஸ்.ஐ, சீக்கிய தீவிரவாத இயக்கமான பப்பர் கல்ஸாவிற்கும் உதவி செய்து கொண்டிருந்தது என்பதையும் உறுதி செய்தான்[11] என்ற விவரங்கள் வருகின்றன. மொத்தமாக, பாகிஸ்தான் எப்படி இந்திய விரோதத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது என்று தெரிகிறது.

Kaskar-group-Dawood

டெல்லிகாமன்வெல்த்போட்டியில்குண்டுவைக்கதிட்டமிட்டான்: துண்டாவிடம்நடந்தவிசாரணையில்தகவல்:[12] டெல்லியில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் வைத்து அப்துல் கரீம் துண்டாவிடம் சிறப்புப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று நடந்த முதல் நாள் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. லஷ்கர்–இ– தொய்பாவின் முக்கிய தலைவர்கள் எங்கெங்கு இருக்கிறார்கள்? இந்தியாவில் எங்கெங்கு ரகசிய ஆதரவாளர்கள் உள்ளனர்? எங்கெல்லாம் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது? அவை எப்படி நடத்தப்பட்டன என்பன போன்று பல கேள்விகள் அவனிடம் கேட்கப்பட்டன. அதற்கு பதில் அளித்த அப்துல் கரீம் துண்டா 2010-ம் ஆண்டு டெல்லியில் நடந்த காமன்வெல்த் போட்டியின்போது தொடர் குண்டு வெடிப்புகளை நடத்தி மிகப்பெரும் நாசவேலைக்கு திட்டமிட்டதாக கூறினான். ஆனால் குண்டு வெடிப்பை நடத்த இருந்த 2 பேர் போலீசாரிடம் பிடிபட்டுவிட்டதால் தனது தாக்குதல் திட்டம் தோல்வி அடைந்துவிட்டதாக கூறினான். 1993–ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் தான் முக்கிய பங்கு வகித்ததாக தெரிவித்தான். 1980ம் ஆண்டுகளில் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ மூலம் வெடிகுண்டுகள் தயாரிப்பது குறித்து இவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது. இதன்பின்னர் வங்க தேசம் சென்ற இவர் லஷ்கர் இயக்கத்தின்  தலைவர் ஷகிவுர் லக்வியின்  நேரடி மேற்பார்வையில் செயல்பட்டு வந்ததாக தெரியவந்துள்ளது[13]. இதைத்தொடர்ந்து இந்தியாவில் தீவிரவாதிகள் அடுத்து எத்தகைய தாக்குதல் திட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று போலீசார் துண்டாவிடம் விசாரித்து வருகிறார்கள்.

Indian flag burned

பாகிஸ்தானின்ஜிஹாதிப்போரைஇந்தியாஎதிர்கொள்ளவேண்டும்: இந்தியாவில் பிறந்தும், முஸ்லிம் அடிப்படைவாதம், மதவாதம் என்ற சித்தாந்திங்களால், முஸ்லிம்கள் எளிதில் ஜிஹாதி வெறியினால், தீவிரவாதத்தில் இறங்குகிறார்கள் என்று தெரிகிறது. பாகிஸ்தானின் ஊக்குவிக்கும் போக்கையும் கவனிக்க வேண்டியுள்ளது. பாகிஸ்தானிய ஆட்சியாளர்கள், ஒரு பக்கம் நட்பு, பேச்சு வார்த்தை என்றெல்லாம் பேசிக் கொண்டு, மறுபக்கத்தில் தொடர்ந்து, தீவிரவாததை இந்தியாவின் மீது ஜிஹாதாக – புனிதப் போராக நடத்தி வருகிறது. அதாவது, மதரீதியில் போரை நிகழ்த்தி வருகிறது. 1965, 1972, 2003 ஆண்டுகளுக்குப் பிறகு, நேரிடையான போர்களைத் தவிர்த்து, இத்தகைய தீவிரவாதிகளின் தாக்குதல்களை போராக நடத்தி வருகின்றது. அதே நேரத்தில், எல்லைகளிலும், “தனது நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை – நாடற்ற மக்களின் வேலை” என்று சாக்கு சொல்லிக் கொண்டு, எல்லைமீறல் தீவிரவாதத்திலும் ஈடுபட்டுள்ளது. எப்பொழுதெல்லாம், பேச்சு வார்த்தைகள் நடக்கின்றனவோ அல்லது நடக்கப் போகின்றதோ, அந்நேரத்தில் இப்படி, அழுத்தத்தை ஏற்பட எல்லைகளில் சுடுதல், ஊடுருவல், எல்லைகளில் வாழும் மக்களைத் தாகுதல், பீதி கிளப்புதல் முதலிய வேலைகளில் ஈடுபடுவதையும் காணலாம். ஆனால், இந்திய ஆட்சியாளர்கள் தொடைநடுங்கிப் பேர்வழிகளாக இருப்பதனால், பாகிஸ்தான் அத்தகைய செக்யூலரிஸ நிலையை சாதகாமாக ஆக்கிக் கொள்கிறது.

Susanna-geelaani-2010

Susanna-geelaani-2010

மனிதஉரிமைஆட்கள்இந்தஉண்மையினைஅறிந்துசெயல்படவேண்டும்: அருந்ததி ராய், தாரிக் அலி, ஷப்னம் ஹஸ்மி, போன்றோர் மனித உரிமைகள் என்ற சாக்கை வைத்துக் கொண்டு, பிரிவினைவாதிகளுடன் ஜோடி சேர்ந்து கொண்டு உபன்யாசம் செய்து வந்துள்ளனர். ஆனால், இத்தகைய நேரத்தில் அவர்கள் எல்லோரும் காணாமல் போய்விடுவர். நட்சத்திர ஹோட்டல்கள், பாதுகாப்பாக உள்ள ஏசி அரங்குகள் முதலியவற்றில் தான் இவர்களது சொற்பொழிவுகள் இருக்கும். பொது நிகழ்சிகளில் அவ்வாறு பேச மாட்டார்கள். இருப்பினும் “தி ஹிந்து” போன்ற பிரபல நாளிதழ் முதல் “பாம்பேட் கம்யூனலிஸம்” போன்ற வடித்தெடுத்த மதவெறி பிரச்சார ஏடுகள் வரை இவற்றைப் பற்றி விவரங்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கும். ஆனால், இவ்வாறான தீவிரவாதிகள் பிடிபடும் போது, குண்டுகள் வெடிக்கும் போது காணாமல் போய்விடுவர். செய்திகள் வாசிக்கப்படும் அல்லது அச்சடிக்கப் படும், தலையங்கத்தில், நடுபக்கத்தில் அவர்களை எதிர்த்து எதுவும் எழுதப்பட மாட்டாது. மனித உரிமை ஆட்கள் தங்களது போலித்தனத்தை மாற்றிக் கொண்டு, உருப்படியான பேச்சுகளை பேச வேண்டும்.

Arundhati-Roy-SAR.Jilani-2010

Arundhati-Roy-SAR.Jilani-2010

செக்யூலரிஸசித்தாந்தத்தைவைத்துக்கொண்டுபாகிஸ்தானைஎதிர்கொள்ளமுடியாது: இந்தியாவின் மீது இப்படி எல்லா வழிகளிலும் ஜிஹாதிகள் செயல்பட்டு வரும் போது, செக்யூலரிஸ அரசியல்வாதிகள் தமக்கேற்ற தாஜா செய்யும் வழிகளில் செயல்படுவதால், எந்த சாதகமான முடிவுகளையும், இந்தியாவின் நலன், பாதுகாப்பு, அமைதி முதலியவற்றிற்காக வேண்டிய நன்மைகளும் கிடைக்காமல் போகின்றன. அத்தகைய நிலையைத்தான் சோனியா காங்கிரஸ், முல்லாயம் சிங் யாதவ், கம்யூனிஸ கட்சிகள் செய்து வருகின்றன. இங்கு இந்திய அரசியல்வாதிகள், செக்யூலரிஸ போர்வையில் இந்த தீவிவாதிகளுக்கு, தங்களது கொள்கைகளினால், மெத்தனமான போக்குகளால்,  மறைமுக ஆதரவினால் உதவி வருகிறார்கள். இதனால் தான். “உள்ளூர் தீவிரவாதம்” என்பதனை கண்டு கொள்ளாமல், முஸ்லிம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர், ஓட்டு கிடைக்காமல் போகுமே என்று கணக்கு போடுகின்றனர்.

இந்தியத்தனமா-இஸ்லாமியத்தனமா-ஜிஹாதித்தனமா

இந்தியத்தனமா-இஸ்லாமியத்தனமா-ஜிஹாதித்தனமா

இந்தியமுஸ்லிம்கள்தீவிரவாதத்தைக்கண்டறிந்துஅதனைஇஸ்லாத்திலிருந்துபிரித்துப்பார்க்கவேண்டும்: இந்திய முஸ்லிம்கள் இப்பொழுதுவது, இத்தகைய இந்திய விரோத செயல்களை அவ்வாறு அறிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம், முஸ்லிம்கள் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது. பாகிஸ்தானிலேயே, இஸ்லாம் பெயரில் முஸ்லிம்கள் அடித்துக் கொள்கின்றனர், குண்டுவெடிப்பு நடத்துகின்றனர், மசூதிகளில் கூட முஸ்லிம்களை கொலை செய்கின்றனர் என்பதனையெல்லாம் அறிந்து புரிந்து கொள்ளும். இஸ்லாம் தான் தீர்வு என்ற மூடநம்பிக்கையைக் கொண்டு இருக்கக் கூடாது.

© வேதபிரகாஷ்

18-08-2013


[3] On the possibility of him now meeting Tunda after his arrest, Mr. Malik said: “The fact that he is in police custody rules out a meeting anytime soon and I myself am not very keen on meeting him. But if we ever meet, I will ask him what he achieved by doing all this. His family is not with him and we don’t want to have any relations with him.”

http://www.thehindu.com/news/national/i-never-knew-what-he-was-up-to/article5033051.ece?ref=relatedNews

[7] For the first time, Pakistan has admitted to the presence of one of India’s most wanted terrorists Dawood Ibrahim but said he has been “chased out” and could be in the United Arab Emirates. “Dawood [Ibrahim] was in Pakistan but I believe he was chased out of Pakistan. If he is in Pakistan, he should be hounded and arrested. We cannot allow such gangsters to operate from the country,” said Shahryar Khan, Pakistan Prime Minister Nawaz Sharif’s special envoy for improving relations with India.

http://www.thehindu.com/news/national/dawood-chased-out-of-pakistan-shahryar-khan/article5008042.ece?ref=relatedNews

[9] Underworld don Dawood Ibrahim’s close aide Iqbal Mirchi, an accused in the 1993 Mumbai serial blasts case, died of a heart attack in London on Wednesday night. Mirchi, 63, the right-hand man of India’s topmost terrorist, was also facing drug smuggling charges in India. He had been living in a large six-bedroom home in an exclusive part of Hornchurch, a town in Essex, north-east of London. Ranked among the world’s top 50 drug barons, Muhammed Iqbal Memon or Iqbal Mirchi had been issued an Interpol Red Corner Notice in 1994 on Central Bureau of Investigation’s request. In April 1995, officers from Scotland Yard had raided Mirchi’s home and arrested him on drugs and terrorism charges in connection with the blasts in Mumbai. However, an extradition request by India was turned down by magistrates here. Scotland Yard’s investigation of Mirchi, which ended in 1999, found no evidence of criminal activity and in 2001 the UK Home Office granted him indefinite leave to remain in the U.K. India’s most-wanted criminal Dawood Ibrahim is on FBI’s list of top terrorists in the world.

[10] Abdul Karim Tunda alias Abdul Quddooss has confirmed that he was in touch with the Pakistani terror links and also said that he was the one who introduced Dawood Ibrahim to the Lashkar founder Hafiz Saeed.

http://news.oneindia.in/2013/08/18/syed-karim-tunda-confessed-that-he-introduced-dawood-to-hafiz-1285870.html

[11] He also revealed that LeT (Lashkar-e-Taiba) and the Pakistan’s premeire intelligence service ISI aided Khalistani militant organization “Babbar Khalsa” also known as Babbar Khalsa International (BKI). Read more at: http://news.oneindia.in/2013/08/18/syed-karim-tunda-confessed-that-he-introduced-dawood-to-hafiz-1285870.html