இஸ்லாத்தில் கல்யாணத்திற்கு முன்பான காதல் ஹராம் – Love before Wedding என்பது LBW!
இஸ்லாத்தில் காதல் ஹராமா அல்லது வேறு காரணிகள் தடுக்குமா?: ஊடகங்கள் அமுக்கி வாசிப்பதனால், இது வெறும் காதல் பிரச்சினையா, மதப்பிரச்சினையா என்னெவென்றே புரியாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது:
- இஸ்லாத்தில் காதல் கூடாதா, ஹரமா?
- “லைலா-மஜ்னு” போல சமூக-பொருளாதார அந்தஸ்து பார்ப்பார்களா?
- சுன்னி-ஷியா போன்ற இறையியல் சித்தாந்தங்கள் – பிரிவுகள் தலையிடுமா?
- சையது போன்ற உயர் ஜாதி முஸ்லிம்களை, லெப்பை போன்ற கீழ் ஜாதி முஸ்லிம்கள் திருமணம் செய்து கொள்ள முடியாது போன்றவை உண்மையா?
- போரா முஸ்லிம்கள் உள்-திருமண முறையைத் தான் [Endogamy] ஆதரிக்கின்றது, வெளியேயிருந்து பெண் எடுக்கும் முறையினை [exogamy] ஆதரிப்பதில்லை. அத்தகைய முறை சுன்னிகளிடம், ஷியாக்களிடம் உள்ளதா?
- அல்லது இவைத் தவிர வேறு பிரச்சினைகள் உள்ளனவா?
- அதாவது, இருவரில் ஒருவர் “இந்து” போன்ற பிரச்சினை உண்டா என்று தெரியவில்லை.
இக்கேள்விகளுக்கு விடை காணமுடியுமா, முடியாதா என்று தெரியவில்லை. சமீப காலத்தில், திருச்சி-ஶ்ரீரங்கம் பகுதிகளில் நடந்து வரும் இத்தகைய காதல், காதல்-திருமணங்கள் பல கேள்விகளை எழுப்புகின்றன. உதாரணத்திற்கு சென்ற மாத விவகாரத்தை எடுத்துக் கொள்வோம்.
காதல் திருமணம் செய்த பெண் கணவர் வீடு முன்பு தர்ணா கோர்ட் உத்தரவுப்படி சேர்த்து வைக்க கோரிக்கை[1]: திருச்சி காஜாமலை டிவிஎஸ் நகரைச் சேர்ந்தவர் / ஸ்டேடபாங்க் காலனியை பர்ஜானா பேகம் (31). இவர் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியன்பட்டணம் சாந்திநகரைச் சேர்ந்த வள்ளிநாயகம் மகன் சத்தியகுமார் (31) என்பவரது வீட்டின் முன்பு அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பர்ஜானாபேகம் கூறுகையில், ‘‘நானும் சத்தியகுமாரும் கடந்த 2009ம் ஆண்டு திருச்சியில் காதல் திருமணம் செய்து கொண்டோம். முஸ்லிம் மதத்திற்கு மாறி அவர் என்னை திருமணம் செய்தார். எனது குடும்பத்தார் முன்னிலையில் எங்களது 2009 நவ., 21 ல் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு சத்தியகுமாரின் குடும்பத்தினர் வரவில்லை. தொடர்ந்து நாங்கள் தூத்துக்குடி அருகில் உள்ள வாகைக்குளத்தில் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தோம். இந்நிலையில் எனது கணவர், தான் வெளிநாடு செல்ல விரும்புவதாகவும், இதனால் நீ இங்கு தனியாக இருக்க வேண்டாம் என்றும் கூறினார். வெளிநாட்டிலிருந்து அவர் வரும் வரை சென்னையில் சட்டக்கல்லுரியில் படிக்குமாறு கூறி 27.8.2011ல் என்னை திருச்சிக்கு அனுப்பினார். இந்த சமயத்தில் எனது கணவர் வீட்டார் அவரின் மனதை மாற்றி வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்து வைத்துள்ளனர். மேலகூட்டுடன்காடு பகுதியை சேர்ந்த பிரேமா என்பவரை சத்தியக்குமார் 2011 செப்., 1 ல் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்[2]. இதுகுறித்து தகவல் தெரிந்து நான் வந்தபோது என்னை சமாதானம் செய்து என்னுடன் இருப்பதாக கூறி என்னை மீண்டும் ஏமாற்றி விட்டார். பிரேமா தூத்துக்குடியில் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார்[3]. இதனால் நான் புதுக்கோட்டை போலீசாரிடம் புகார் கொடுத்து அதன்படி வழக்கு நடந்து வருகிறது. மேலும் கணவருடன் சேர்ந்து வாழ உரிமை கோரி திருச்சி கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் நான் 2015ல் வழக்கு தொடர்ந்தேன். இதை விசாரித்த நீதிமன்றம், பாதுகாப்பை கருத்தில் கொண்டு வீரபாண்டியன்பட்டணத்தில் உள்ள எனது கணவரின் வீட்டில் நான் வசிக்க அனுமதி அளித்து 2016 ஜூன் 28 ல் உத்தரவிட்டது. அதன்படி தான் இங்கு வந்தபோது எனது கணவர் வீட்டார் என்னை அனுமதிக்க மறுத்து கதவை பூட்டி விட்டனர். எனவே என்னை வீட்டில் சேர்க்கும் வரை இந்த இடத்தை விட்டு நகரபோவில்லை’’ என்றார்[4].
தீர்ப்பில் தெளிவில்லையா, ஊடகங்கள் செய்தியை ஒழுங்காக வெளியிடவில்லையா?: இங்கு சத்தியகுமார் 2009ல் முஸ்லிம் மதம் மாறி பர்ஜானா பேகத்தைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். பிரேமா என்பவரை சத்தியக்குமார் 2011 செப்., 1 ல் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்[5] என்றால், முஸ்லிமாக இருந்து இந்துவை திருமணம் செய்து கொண்டது பிரச்சினையாகிறது. சரளா முதுகல் உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி செல்லுபடியாகாது. ஒன்று பிரேமா மதம் மாறியிருக்க வேண்டும், இல்லை, சத்திரயகுமார் தான் இந்து என்றே திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டும். 2011லிருந்து இன்று வரை பிரேமாவுடன் வாழ்ந்து வருகிறார், அதாவது, பர்ஜானா பேகத்துடன் வாழவில்லை. 2016 ஜூன் 28 ல் தான், பர்ஜானா பேகத்துடன் சேர்ந்து வாழ உத்தரவிட்டுள்ளது. அதாவது, ஒரு முஸ்லிமாக சத்திரயகுமார், இரண்டு பெண்டாட்டிகளுடன் வாழ்வது சட்டப்படி செல்லும் என்று தீர்ப்பளித்தது போலும். அதனால் தான், சரளா முதுகல் உச்சநீதி மன்ற தீர்ப்பில் இந்தியர்களுக்கு பொது சிவில் சட்டம் அவசியம் என்று பரிந்துரைத்தது[6]. ஆனால், அவ்விசயம் தேவையில்லாமல் அரசியலாக்கப்பட்டுவிட்டது. இதனால், காலதாமதம் ஏற்பட்டு வருகிறது[7].
இஸ்லாத்தில் கல்யாணத்திற்கு முன்பான காதல் ஹராம்: இஸ்லாத்தைப் பொறுத்த வரையில், காதல் பற்றி மாறுபட்ட கருத்துகள் தான் உள்ளன. குரானை வைத்து விளக்கப்படும் போது, காதல் ஹராமா – ஹலாலா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. காதலைப் பற்றி அல்லாவுக்குத் தான் எல்லாம் தெரியும், அதனால், ஒரு ஆணோ, பெண்ணோ அதை தீர்மானிக்க முடியாது, அல்லாவுக்குத் தான் தெரியும் என்றெல்லாம் கூட பதில் சொல்கிறார்கள். ஹராம் காதல் மற்றும் ஹலால் காதல் என்றும் பிரிக்கிறார்கள். ஜாகிர் நாயக் போன்றோர், கல்யாணத்திற்கு முன்பான காதல் ஹராம் என்று வெளிப்படையாக சொல்கிறார்கள்[8]. கல்யாணத்திற்கு முன்பான காதல் [Love before Wedding] என்பது LBW என்றே கிண்டல் அடிக்கிறார். பொதுவாக, யாரும் இதற்கு நேரிடையான பதிலைக் கொடுப்பதில்லை. ஆனால், முஸ்லிம் பையன்கள் மற்றும் பெண்கள் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். சமீபகாலங்களில் காதலர் தினத்தை கடுமையாக, ஆசார இஸ்லாமியர் எதிர்த்து வருகின்றனர். அந்நிலையில் காதலை விபச்சாரம் என்றும் விமர்சிக்கின்றனர். அல்லாவைத் தவிர யாரையும் காதலிக்க முடியாது என்ற தீவிர வாதமும் வைக்கப் படுகிறது.
© வேதபிரகாஷ்
31-08-2016
[1] தினகரன், காதல் திருமணம் செய்த பெண் கணவர் வீடு முன்பு தர்ணா கோர்ட் உத்தரவுப்படி சேர்த்து வைக்க கோரிக்கை, Date: 2016-07-01 11:44:37
http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=591795&cat=504
[2] தினமலர், தன்னுடன் சேர்ந்து வாழ வலியுறுத்தி கணவர் வீட்டு முன் 2 வது நாளாக திருச்சி பெண் வக்கீல் தர்ணா போராட்டம் * கட்சிகள் ஆதரவு, பதிவு செய்த நாள். ஜூலை.2, 2016. 03.58.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1555310&Print=1
[3] http://www.dinamalar.com/news_detail.asp?id=1555310&Print=1
[4] http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=591795&cat=504
[5] தினமலர், தன்னுடன் சேர்ந்து வாழ வலியுறுத்தி கணவர் வீட்டு முன் 2 வது நாளாக திருச்சி பெண் வக்கீல் தர்ணா போராட்டம் * கட்சிகள் ஆதரவு, பதிவு செய்த நாள். ஜூலை.2, 2016. 03.58.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1555310&Print=1
[6] Supreme Court of India – Smt. Sarla Mudgal, President, … vs Union Of India & Ors on 10 May, 1995, Equivalent citations: 1995 AIR 1531, 1995 SCC (3) 635, Author: K Singh – Bench: Kuldip Singh (J).
[7] https://indiankanoon.org/doc/733037/
[8] https://www.youtube.com/watch?v=dnQ-Lh-0Auk
அண்மைய பின்னூட்டங்கள்