Posted tagged ‘தயாரிப்பு’

மதுரையில் தொடர்ந்து குண்டுவெடிப்புகள் நடப்பது ஏன் – வெடிக்கும் குண்டு தயாரிப்பில் தொழிற்நுட்பம் ஒற்றுமை காட்டுவது, பின்னணி என்ன?

மார்ச் 19, 2014

மதுரையில் தொடர்ந்து குண்டுவெடிப்புகள் நடப்பது ஏன் – வெடிக்கும் குண்டு தயாரிப்பில் தொழிற்நுட்பம் ஒற்றுமை காட்டுவது, பின்னணி என்ன?

மதுரை குண்டு  2014

மதுரையில்  மட்டும்  தொடர்ந்து  குண்டுவெடிப்பது  ஏன்,   யார்  என  தெரிந்தும்  வேடிக்கை  பார்க்கும்  போலீஸ்[1]: மதுரையில் மட்டும், கடந்த மூன்று ஆண்டுகளில் (2011-2014), அடுத்தடுத்து, ஐந்து குண்டு வெடிப்புகள் நடந்துள்ளன[2]. ஏழு இடங்களில், குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. ஆனால், இந்த வழக்குகளில், ஒருவர் கூட, இதுவரை கைது செய்யப்படவில்லை. குண்டை யார் வைக்கின்றனர் என, போலீசுக்கு தெரிந்திருந்தும், ‘ஆதாரம்’ இல்லை; ‘விவகாரத்தைக் கையிலெடுத்தால் சிக்கலாகி விடும்’ என்ற காரணத்திற்காக, வேடிக்கை பார்த்து கொண்டிருப்பதாலேயே, தொடர்ந்து குண்டுகள் வெடிக்கின்றன. இப்போது மதுரையில், எதற்கெடுத்தாலும், சிறிய அளவிலான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, குண்டு வைப்பது சகஜமாகி விட்டது, என்று தினமலரில் இரண்டாவது முறையாக, இவ்விவகாரத்தைப் பற்றி விளக்கமான செய்தியை வெளியிட்டுள்ளது.

மதுரை பள்ளிவாசல் அருகே குண்டுவெடிப்பு மார்ச்.2014

மதுரை பள்ளிவாசல் அருகே குண்டுவெடிப்பு மார்ச்.2014

மார்ச்.13, 2014 நெல்பேட்டை  மசூதி  முன்பு,பொட்டாசியம்  நைட்ரேட்குண்டுவெடிப்பு: மதுரை நெல்பேட்டையில் உள்ள சுங்கம் பள்ளிவாசல் முன் குண்டு வெடித்தது[3]. இதில் ஜமாத் செயலாளரின் மோட்டார் சைக்கிள் சேதம் அடைந்தது. மதுரை நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் காஜா மொய்தீன் (40). இவர் மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் செயலாளராகவும், சுங்கம் பள்ளிவாசல் ஜமாத் செயலாளராகவும் உள்ளார். இவரது வீட்டுக்குச் செல்லும் வழியில் பாதாளச் சாக்கடைப் பணிகள் நடைபெறுவதால், இரவு நேரத்தில் தனது மோட்டார் சைக்கிளை, பள்ளிவாசல் அருகேயுள்ள சகோதரர் சிக்கந்தர் வீட்டின் முன் நிறுத்தி வந்தார். வெள்ளிக்கிழமை அதிகாலை 5.10 மணி அளவில் மோட்டார் சைக்கிள் அருகே வெடிகுண்டு வெடித்து சிதறிக் கிடந்தது[4]. மாநகர துணை ஆணையர் சமந்த் ரோஹன் ராஜேந்திரா மற்றும் போலீஸார் வந்து சோதனை செய்தனர். அதன்பின் அவர்கள் கூறுகையில், ‘பொட்டாசியம் நைட்ரேட் பயன்படுத்தி இந்த வெடிகுண்டை தயாரித்துள்ளனர். குண்டு வெடித்ததும், மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரியும் வகையில் பெட்ரோல் டேங்க் கீழேயுள்ள டூல்ஸ் பாக்ஸிற்குள் வெடிகுண்டை வைத்துள்ளனர். வீரியம் குறைவாக இருந்ததால் பெரும் சேதம் ஏற்படவில்லை’ என்றனர். துணை ஆணையர் சமந்த் ரோஹன் ராஜேந்திரா கூறுகையில், ‘சுங்கம் பள்ளிவாசலில் கேமரா பொருத்தியது தொடர்பாக தற்போது பதவியில் இருப்பவர் களுக்கும், இப்பகுதியைச் சேர்ந்த வேறு சிலருக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்த முன்விரோதத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்’ என்றார். இப்பள்ளிவாசல் ஜமாத்தின் துணைத் தலைவராக உள்ள வழக்கறிஞர் அக்பர் அலியின் காரில் 20.11.2013 அன்று வெடிகுண்டு வைக்கப்பட்ட வழக்கு உட்பட 15-க்கும் மேற்பட்ட வழக்குகளில் ஒரு குற்றவாளிகள்கூட இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது[5].

ஆஞ்சனேயர் கோவில் அருகே குண்டு மதுரை

ஆஞ்சனேயர் கோவில் அருகே குண்டு மதுரை

மக்களை  கவர  குண்டு  வைத்தேன்‘ : நக்சலைட்  திருச்செல்வன்  “திடுக்: “மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும், மக்கள் எழுச்சிக்காகவும், மத்திய அமைச்சர்களின் வீடு, தனியார் வணிக வளாகத்தில், பைப் குண்டு வைத்தேன்,” என, மதுரையில் கைதான நக்சைலட், திருச்செல்வன், வாக்குமூலம் கொடுத்துள்ளார்[6]. புதுச்சேரி மத்திய அமைச்சர், நாராயணசாமி வீட்டு வாசலில், கடந்த ஜன., 30ம் தேதியிலும், மதுரை, உத்தங்குடி தனியார் வணிக வளாகத்தில், பிப்., 11ம் தேதியிலும், இரும்பு பைப் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதுதொடர்பாக, தமிழர் விடுதலை படையைச் சேர்ந்த திருச்செல்வன், தங்கராஜ், கவியரசனை, போலீசார் கைது செய்துள்ளனர். திருச்செல்வன், போலீசாரிடம் கூறியதாவது: தமிழர் நலனுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசு, கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆரம்பிப்பதில் ஆர்வம் காட்டியது. இதற்கு நாராயணசாமியும் ஒரு காரணம் என்பதால், நானும், கார்த்திக்கும் மதுரையில் குண்டு தயாரித்து, டூவீலரில் புதுச்சேரி சென்று வைத்தோம்; நோட்டீஸ்களையும் போட்டு விட்டு வந்தோம். சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு விவகாரத்தில், மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் பங்கு முக்கியம். இதனால், சிவகங்கையில் உள்ள அவர் வீட்டின் பின்புறம் புதரில், என் சகோதரர் காளைலிங்கம், பைப் குண்டு வைத்தார். அது வெடித்து சிதறியது. ஆனால், அதை யாரும் அறியவில்லை. அங்கு நாங்கள் போட்டுவிட்டு சென்ற நோட்டீஸ், காற்றில் பறந்து, போலீஸ் கையில் சிக்கிய பின்தான், சிதம்பரத்திற்கு மிரட்டல் வந்ததாக செய்திகள் வந்தன. மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கவும், மக்களுக்கு எழுச்சியூட்டவும் தான் வைத்தோம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார். காரைக்குடி அருகே, மானகிரியில் அமைச்சர் சிதம்பரம் வீட்டின் பின்புறம், வெடி பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அவர் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு, பலப்படுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

முஸ்லிம்கள் கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

முஸ்லிம்கள்  மட்டுமல்ல  நக்சலைட்டுகளும்  தமிழகத்தில்  குண்டுவெடிப்புகளை  நடத்துகிறார்கள்: தினமலர், மேற்குறிப்பிடப்பட்ட குண்டுவெடிப்பிற்கும் மற்றவைக்கும் தொடர்பில்லை என்பதை எடுத்துக் காட்ட, “கடந்த, பிப்.,11 2014ல், மதுரை உத்தங்குடி தனியார் வணிக வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட, இரும்பு பைப் வெடிகுண்டு தவிர, மற்ற குண்டுவெடிப்பு, குண்டு கண்டெடுப்பு சம்பவங்களில் குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்களே ஈடுபட்டு வருகின்றனர்”, என்று குறிப்பிட்டது.டைது ஒருவேளை, தொடர்ந்து நடத்தப் பட்டு வரும் முஸ்லிம் குண்டுவெடிப்புகளை விட வேறானது, என்று எடுத்துக் காட்ட குண்டு வெடி வெடிக்கப்பட்டதா, அல்லது முஸ்லிம்கள் மட்டுமல்ல நக்சலைட்டுகளும் தமிழகத்தில் குண்டுவெடிப்புகளை நடத்துகிறார்கள், எனவே இது பொதுப் பிரச்சினையாகும், முஸ்லிம் அல்லது ஜிஹாதிப் பிரச்சினை என்று கருத்தக் கூடாது என்பதற்காகவும் இருக்கலாம் போலிருக்கிறது.

madanee-sufi-bomb

madanee-sufi-bomb

2011ம்  ஆண்டு, ஏப்.,30ல், மதுரை, மாட்டுத்தாவணி,  டாஸ்மாக்கடையில்,  ‘டைம்பாம்: மறைமுக அமைப்பு கடந்த, 2002ல், மதுரையைச் சேர்ந்த, இமாம்அலி மற்றும் அவரது கூட்டாளிகள், பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அப்போது அவரது ஆதரவாளர்களில் சிலர், ஒரு அமைப்பை உருவாக்கி செயல்பட துவங்கினர். இதற்கு, அரசு தடை விதித்தது. இதுநாள் வரை, அந்த அமைப்பினர் மறைமுகமாக செயல்படுகின்றனர். இமாம்அலியை கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சட்டம் – ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தவும் திட்டமிட்டு, 2011ம் ஆண்டு, ஏப்.,30ல், மதுரை, மாட்டுத்தாவணி, டாஸ்மாக் கடையில், ‘டைம் பாம்’ வெடிக்க செய்தனர். கடந்த மாத தினமலரில், இச்செய்தி இவ்வாறு வெளியிடப்பட்டிருந்தது[7].

ied-cutout01

போலீஸ்  அதிகாரி  ஒருவர்  கூறியதாவது  (பிப்ரவரி 2014)[8]: “இமாம்அலி ஆதரவாளர்களை கொண்டு, ரகசியமாக செயல்படும் தடை செய்யப்பட்ட ஒரு அமைப்பின் மீது சந்தேகம் உள்ளது.காரணம், கடந்த 2001-06 அ.தி.மு.க., ஆட்சியின்போதுதான், இமாம்அலியும், கூட்டாளிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால், அ.தி.மு.க., அரசின்மீது அவரது ஆதரவாளர்கள் சிலர் வெறுப்படைந்தனர். சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தி, அரசுக்கு அவப்பெயர் உருவாக்கும் வகையில் குண்டு வைப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க, அதற்கென உள்ள சிறப்பு புலனாய்வு பிரிவுகளிடம் அனைத்து வழக்குகளையும் ஒப்படைத்தால், விரைவில் குற்றவாளிகள் கைதாக வாய்ப்புள்ளது. இதற்கு, போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூர், எஸ்.பி., விஜயேந்திர பிதரி அரசுக்கும், டி.ஜி.பி., ராமானுஜத்திற்கும் பரிந்துரைக்க வேண்டும்”, இவ்வாறு கூறினார்.

ied-cutout01

30-09-2011 அன்று  புதுார்  பஸ்டிப்போவில், பஸ்சிலிருந்து, ‘டைம்பாம்கண்டெடுக்கப்  பட்டது: அதே ஆண்டு செப்.,30ல், புதுார் பஸ் டிப்போவில், பஸ்சிலிருந்து, ‘டைம்பாம்’ கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடந்த நிலையில், மதுரையில், ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி மேற்கொண்டார். அவர் செல்ல திட்டமிட்டிருந்த, திருமங்கலம் அருகே, ஆலம்பட்டி ஓடைப்பாலத்தின் அடியில், சக்தி வாய்ந்த இரண்டு பைப் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. எகிறும் போலீஸ் பி.பி., தேசிய தலைவர் விவகாரம் என்பதால், சம்பவம் நடந்த மூன்று நாட்களில், ‘போலீஸ்’ பக்ருதீன், பிலால்மாலிக் உட்பட சிலரை, போலீசார், குற்றவாளிகள் என, அறிவித்தனர். அதேசமயம், ‘டைம்பாம்’ வழக்குகளில் குற்றவாளிகள் யார் என, அறிவிக்காத நிலையில், டிச.,7ல் திருவாதவூர் பஸ்சில், ‘டைம் பாம்’ இருந்தது, போலீசாரின் ரத்தக் கொதிப்பை எகிற வைத்தது.

நவம்பர் 2012 திருப்பரங்குன்றம் குண்டு

நவம்பர் 2012 திருப்பரங்குன்றம் குண்டு

01-05-2012  அண்ணாநகர்  ராமர்கோவில்  சுற்றுச்சுவரையொட்டி  நிறுத்தியிருந்த  சைக்கிளில்,   ‘டைம்பாம்‘  வெடித்தது: பின், நான்கு மாதங்கள் போலீஸ் விசாரணை இழுத்து கொண்டிருந்த நிலையில், 2012, மே 1ம் தேதி, அண்ணாநகர் ராமர் கோவில் சுற்றுச் சுவரையொட்டி நிறுத்தியிருந்த சைக்கிளில், ‘டைம்பாம்’ வெடித்தது. இதைப் பற்றிய மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்[9]. அதைத் தொடர்ந்து, போலீசார், ‘விசாரணையிலேயே’ இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதம், சவுராஷ்டிரா சமூகத்தினரின் மாநாட்டிற்கு, குஜராத் முதல்வர் நரேந்திரமோடி வருவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘டைம்பாம்’ வைக்கப்படக் கூடும் என, போலீஸ் கருதிய நிலையில், மதுரை தெற்குகிருஷ்ணன் கோவிலில், ரியல் எஸ்டேட் தொழில் செய்யும், உமர்பாரூக் என்பவரின் கடைக்கு, ‘டைம் பாம்’ வந்து சேர்ந்தது.  ஒரு மாநில முதல்வர், அடுத்த மாநிலத்திற்கு செல்லலாம், ஆனால், இது மாதிரி குண்டுவெடிப்பு நடத்துவோம் என்று முஸ்லிம்கள் இருப்பார்களா என்ன? நாளைக்கு ஜெயலலிதா மற்ற மாநிலத்திற்கு சென்றால், அங்குள்ளவர்கள் பதிலுக்கு இப்படி மிரட்டினால் என்னாகும்?

ஆஞ்சனேயர் கோவில் அருகே குண்டு மதுரை

ஆஞ்சனேயர் கோவில் அருகே குண்டு மதுரை

ஈகோபிரச்னையா, போலீசார்  பயப்படுகின்றனரா?: இதில், புகார்தாரரான உமர் பாரூக்கையே, தெற்குவாசல் இன்ஸ்பெக்டராக இருந்த மோகன், சில மாதங்களுக்கு பின், கைது செய்தார். இதற்காக, மோகனுக்கு பாதுகாப்பு கருதி, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போலீசாரே பயப்படுகின்றனர் என்றால் எஸ்.ஐ.டி போன்ற தீவிரவாத தடுப்புப் பிரிவுகளுக்கு வழக்கை ஒப்படைத்து விடவேண்டியதுதானே? இந்நிலையில், நவ.,2ல் திருப்பரங்குன்றம் மலையில், சிலர், ‘டைம் பாம்’ தயாரிப்பதாக, சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு, தகவல் கிடைத்தது. அங்கு ஆய்வு நடத்தி, உதிரி பாகங்கள் மற்றும் வெடிமருந்துகளை பறிமுதல் செய்தனர். இவ்வழக்கை, உள்ளூர் போலீசார், அப்போதைய கூடுதல் எஸ்.பி., மயில்வாகனன், இன்ஸ்பெக்டர் மாடசாமி தலைமையில், விசாரித்தனர். இவர்களுக்கும், மத அமைப்பினரை கண்காணிக்கும், சிறப்பு பிரிவு போலீசாருக்கும், ‘ஈகோ’ பிரச்னை ஏற்பட, விசாரணை ஓராண்டுக்கும் மேலாக இழுத்தது[10].

ராமர் கோவில் அருகே குண்டு மதுரை.

ராமர் கோவில் அருகே குண்டு மதுரை.

குண்டு  தயாரிப்பில்  காணப்படும்  தொழிற்நுட்பம்ஒரே  ஸ்டைல்: இதுவரை கைப்பற்றிய குண்டுகள் அனைத்தும், டைமர், பேட்டரி, ஒயர், கரிமருந்து என, ஒரே, ‘ஸ்டைலில்’ இருந்ததால், ‘குறிப்பிட்ட நபர்களே இதில் ஈடுபட்டிருக்க வேண்டும்’ என, போலீசார் முடிவுக்கு வந்தனர். அவர்களும் போலீஸ் கண்முன்னேயே நடமாடியபடி இருந்தனர். ஆனால், ஆதாரம் இல்லாததால், அவர்களை விசாரிக்கக் கூட, போலீசார் பயந்தனர்.  இந்நிலையில், நிச்சயமாக, இவ்வழக்குகளை மற்ற பிரிவுகளுக்குக் கொடுத்துவிட வேண்டும். இவையெல்லாம் தீவிரவாத செயல்கள் மற்றும் நாடு முழுவதுமான, ஒரு குறிப்பிட்ட பாணியில் நடந்து வருவதால், ஏதோ மாநிலத்திலேயே அடக்கி விடலாம் என்ற போக்கில் இருப்பது தவறாகும்.

நவம்பர் 2013 நெல்பேட்டையில்  குண்டு  வெடித்தது: இச்சூழலில் தான், கடந்த ஆண்டு நவ.,20.2013ல், நெல்பேட்டையில், வழக்கறிஞர் அக்பர்அலி காருக்கு அடியிலும், காதர்மொய்தீன் டூவீலரிலும் குண்டு வெடித்தது. இவர்கள் பொறுப்பு வகிக்கும், சுங்கம் பள்ளிவாசலில், கேமரா வைத்தது தொடர்பாக, எச்சரிப்பதற்காகவே, குண்டு வைக்கப்பட்டது என, விசாரணையில் தெரிய வந்தது. இதிலும், சிலர் மீது, போலீசாரின் சந்தேக கண் இருந்தாலும், ‘தொட்டால் சிக்கல்’ என்ற அச்சம் காரணமாக, கண்டும் காணாமல் உள்ளனர். இந்த தைரியத்தில் தான் தொடர்ந்து குண்டு வைத்து, ‘விளையாட்டு’ காட்டுகின்றனர். போலீசார் ‘அமைதி’யாக இருக்கும்பட்சத்தில், மதுரையில் தொடர்ந்து நடக்கும் குண்டுவெடிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்பது மட்டும் உண்மை. ஆக முஸ்லிம்களுக்குள் இருக்கும் பிரச்சினைக்கூட வெடிகுண்டு வைப்பார்கள், ஆனால், அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற போக்கும் சரியில்லை. இவையெல்லாம் தீவிரவாதத்தை ஊக்குவித்து, வளர்ப்பதாகவே ஆகும். ஏற்கெனவே கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு விசயத்தில் பாடம் கற்காமல், இப்படியே முஸ்லிம் குழுக்களை, ஏதோ காரணங்களுக்காக தாஜா செய்து கொண்டிருப்பது, அதே குண்டுகளை மடியில் கட்டிக் கொள்வதற்கு சமமாகும்.

சிறிய  அளவிலான  தொழில்நுட்பத்தைப்  பயன்படுத்தி, குண்டுவைப்பது  சகஜமாகிவிட்டது: உண்மையில் பட்கல் என்பவன் தான் இத்தகைய தொழிற்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவன். எளிதில் கிடைக்கும் ‘பொட்டாசியம் நைட்ரேட்’, பாறைகளை உடைக்க, கிணறு தோண்ட உபயோகப்படும் ஜிலேட்டின் குச்சிகள், வெடிகள் முதலியவற்றை வைத்துக் கொண்டு குண்டுகளைத் தயாரித்து உள்ளுக்குள் வெடித்து, அதிக சக்தியை உண்டாக்கி அதனால், அச்சக்தி வெளியே வரும் போது, கூர்மையான பொருட்கள் – ஆணிகள், சிறிய இரும்பு குண்டுகள் / பால்ஸ் முதலியவற்றைச் சிதறச் செய்து, அதன் மூலம் அதிகமான பாதிப்பு, பீதி உயிர்ச்சேதம் முதலியவற்றை உருவாக்கல் என்ற ரீதியில் உபயோகப்படுத்தப் பட்டு வருகிறது. இந்தியாவில் பல இடங்களில் இந்தியன் முஜாஹித்தீன் மற்ற ஜிஹாதி குழுக்கள் இதனை உபயோகப்படுத்தி வருவதால், எல்லா மாநில காவல்துறை மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. ஆனால், செக்யூலரிஸம், முஸ்லிம்களை தாஜா செய்தல், ஓட்டு வங்கி முதலிவவை இருப்பதால், இத்தகைய பயங்கரமான விசயங்களும் அமுக்கப் படுகின்றன, மறைமுகமாக ஊக்குவிக்கப் படுகின்றன.

இவ்வழக்குகளை  என்..டி.  போன்ற  துறைகளுக்கு   மாற்றுவது / ஒப்படைப்பது  நல்லது: போலீசார் மட்டுமல்ல, இக்குண்டுவெடிப்புகள் பற்றிய செய்திகளைத் தொடர்ந்துப் படித்து வருபவர்களுக்கே, இவற்றில் உள்ள ஒரு போக்கு, முறை, சம்மந்தம் முதலியவற்றை கண்டு கொள்ளலாம்க. திண்டுக்கல் முஸ்லிம்களும் இத்தகைய ஐ.இ.டி.குண்டு தொழிற்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர் என்பது எடுத்துக் கட்டப் பட்டது[11]. பெங்களூரு குண்டுவெடிப்பிலும் தமிழக முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டுள்ளனர்[12]. அவர்கள் எல்லோருமே ஏற்கெனவே மற்ற வழக்குகளிலும் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது[13]. தமிழக ஜிஹாதிகள் சித்தூரில் துப்பாக்கி சூடு, சண்டைகளுக்குப் பிறகு பிடிபட்டபோதும், பல விசயங்கள் வெளிவந்தன[14]. சேலம் ஆடிட்டர் கொலை வழக்கிலும் சிக்கியுள்ளவர்களும், இதர வழக்குகளில் சிக்கியுள்ளனர்[15]. நிலத்தகராறு என்று வைத்துக் கொண்டு சண்டைப் போட்டுக் கொண்டாலும், அதில் ஒரு பிஜேபிகாரரைக் கொலை செய்வதும் ஒரு யுக்தியாக கடைப்பிடிப்பது போலத் தோன்றுகிறது[16]. எனவே, இவ்வழக்குகளை என்.ஐ.டி.போன்ற துறைகளுக்கு மாற்றுவது நல்லது.

© வேதபிரகாஷ்


[1] தினமலர், மதுரையில்மட்டும்தொடர்ந்துகுண்டுவெடிப்பதுஏன்?யார்எனதெரிந்தும்வேடிக்கைபார்க்கும்போலீஸ், சென்னை, 18-03-2014.

[3] தி இந்து, மதுரையில்குண்டுவெடிப்பு: போலீஸார்தீவிரசோதனை, சென்னை, 18-03-2014.

[6] தினமலர், மக்களைகவரகுண்டுவைத்தேன்‘ : நக்சலைட்திருச்செல்வன்திடுக், மார்ச்.14, 2014.

[7] தினமலர், மதுரையில்வெடிகுண்டுவழக்குகள்அதிகரிப்பதுஏன்:ரகசியஅமைப்பின்மீதுசந்தேகம், பிப்ரவரி.18, 2014.