Posted tagged ‘தமுமுக’

நீதிமன்ற தடை மீறல், போலீஸ் உத்தரவு எதிர்த்தல், போக்குவரத்து பாதிப்பு – ஊர்வலம் செல்ல முயன்ற தமுமுகவினர் கைது!

ஜூலை 7, 2013

நீதிமன்ற தடை மீறல், போலீஸ் உத்தரவு எதிர்த்தல், போக்குவரத்து பாதிப்பு – ஊர்வலம் செல்ல முயன்ற தமுமுகவினர் கைது!

TMMK defying ban court July 2013தடையை மீறி தமுமுக சென்னையில் ஊர்வலம் (06-07-2013): தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கோட்டை நோக்கி பேரணி இன்று நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து இந்த பேரணி அதன் தலைவர் ரிபாயி தலைமையில் செல்ல முடிவு செய்யப்பட்டு இருந்தது. இட ஒதுக்கீடு, திருமண சட்டத்தில் திருத்தம், நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடப்பதாக இருந்தது.  சென்னையில் மக்கள் போக்குவரத்து அதிகமாக இருக்கும் இடங்களில் பெரிய பேனர்கள் வைக்கப்பட்டன. கோட்டை நோக்கி செல்லும் இந்த பேரணிக்கு போலீசார் அனுமதி தரவில்லை[1]. இதனை எதிர்த்து தமுமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதி மன்றம் 05-07-2013 அன்று தள்ளுபடி செய்தது[2]. எனினும் தடையை மீறி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது[3]. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகேயிருந்து பேரணி நடத்த தீர்மானித்தனர். ஆனால் த.மு.மு.க.வினர் ஒன்று திரண்டு பேரணியாக செல்ல திட்டமிட்டனர்[4]. அவர்களின் திட்டத்தை முறியடிக்க போலீசார் உஷாரானார்கள். இதையடுத்து பேரணிக்கு வாகனங்களில் வந்த தமுமுகவினரை சென்னைக்கு வெளியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தனர். ரயில் மூலம் சென்ட்ரல், எழும்பூர் வந்தவர்களும் தடுத்து நிறுதத்ப்பட்டனர். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலைமறியலில் ஈடுபட்ட சுமார் 1,500 பேரை போலீஸார் கைது செய்தனர்.

TMMK defying ban court July 2013.2பஸ் – ரெயிலில் வந்த கூட்டம், கைது: பேரணியில் பங்கேற்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து ரெயில் மூலம் எழும்பூர் நிலையம் வந்த தொண்டர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். நெல்லை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்த 500 தொண்டர்கள் ரெயில் நிலைய வாசலில் போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். த.மு.மு.க. தொண்டர்கள் திடீரென கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபடவும் முடிவு செய்தனர். இதற்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள் என்ரு தெரியவில்லை. ஆனால் போலீசார் எழும்பூர் பகுதி முழுவதும், ரெயில் நிலையம் முன்பும் குவிக்கப்பட்டு இருந்ததால் அவர்களது போராட்டம் முறியடிக்கப்பட்டது. இப்படி செய்தி வெளியிட்டிருப்பதே வேடிக்கையாக இருக்கிறது.

TMMK leaders - Ribayi, Harun Ismail, Abdul Ajis, Kuthbudhin, Zakir Hussaiதமுமுகவின்  மூன்று கோரிக்கைகள்: தமுமுக வைத்துள்ள கோரிக்கைகள் இவைதான்:

  • முஸ்லிம்களுக்கான, 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும்;
  • 10 ஆண்டுகளை நிறைவு செய்த முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து சிறைக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும்;
  • திருமண பதிவு சட்டத்தில் முஸ்லிம்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்.

இவற்றை ஆழமாக அலசினால், அவர்கள் இந்தியாவில் ஏதோ தனியான மக்கள் போலவும், இந்நாட்டு சட்ட-திட்டங்கள் தமக்கு ஓத்துவராது போலவும் தெரிக்கிறது. எஸ்.சிக்களுக்குண்டான இடவொதுக்கீட்டில், உள்-ஓதுக்கீடு செய்கிறோம் என்று 3.5%த்தை ஜாதியேயில்லை என்று பறைச்சாற்றிக் கொள்ளும் முஸ்லிம்களுக்கும் கொடுக்கப்பட்டது. இதை எஸ்.சிக்கள் எதிர்த்துள்ளனர். ஜாதி இல்லை என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இவர்கள் ஏனிப்படி இடவொதுக்கீடு கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. பிரச்சினைகளை பாரபட்சமாக அணுகுவது தமுமுகவின் ஆர்பாட்டங்களில் தெரிகிறது[5]. லிங்கம் பெருமாள் என்ற தமிழக வீரர் காஷ்மீரத் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டபோது அமைதியாக இருந்தது[6], சிமி தொடர்புகள், அயல்நாட்டு பணம் பெற்றது முதலிய விஷயங்களில் சந்தேகமற்ற நிலையில்லாமல் இருப்பது[7] என்பன சில உதாரணங்கள்.

TMMK 2011 December 6 protestடிசம்பர் 6 2011ல் ஆர்ப்பாட்டம்

ஆதித்தனார் சிலை ரவுண்டானாவில் போராட்டம்[8]: இந்நிலையில் மாலை 3 மணியில் இருந்து எழும்பூர் ஆதித்தனார் சிலை அருகே தமுமுகவினர் குவிந்தனர். போலீஸார் அவர்களை சுற்றி வளைத்து நின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியது. பேரணியாகச் செல்ல முடியாததால் தமுமுகவினர் அங்கேயே தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் எழும்பூர் மட்டுமன்றி அண்ணா சாலை, ஈ.வெ.ரா. சாலை உள்ளிட்ட சுற்றியுள்ள அனைத்துச் சாலைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட தமுமுகவினரை போலீஸார் கைது செய்தனர்[9]. பின்னர் தமுமுக நிர்வாகிகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதை முன்னரே செய்யாமல், இவ்வாறு ஆர்பாட்டம் செய்து, பிறகு செய்தது எதைக் காட்டுகிறது?

TMMK  demonstration in Udhagamandalam Feb 2013பிப்ரவரி 2013 – உதகையில் போராட்டம்

போக்குவரத்து பாதிப்பும், மக்கள் தொந்தரவு அடைந்ததும்[10]: தமுமுகவினரின் இந்த பேரணியால் சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, எழும்பூர், அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகனங்கள் இன்று மாலை மெதுவாக ஊர்ந்து சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். சட்டத்தை மீறி நடத்தப்பட்ட இந்த பேரணி காரணமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பையும் மீறி இப்படி பிடிவாதமாக நடந்து கொள்வதால் சாதிப்பது என்ன ஆல்ல்லட்து இவர்கள் பொது மக்களுக்கு என்ன அறிவிக்க நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. பொது மக்கள் என்ன நினைப்பார்கள், இதனால், ஏற்படும் விளைவுகள் என்ன என்பதை அவர்கள் யோசித்துப் பார்த்தார்களா என்று தெரியவில்லை. விடுமுறை நாட்களில் பொதுவாக சென்னையில் கடைகளுக்குச் செல்வது என்று தான் இருப்பார்கள்.

M H Jawahirullahஜவாஹிருல்லா எம்.எல்.., கூறியதாவது[11]: “மாநிலம் தழுவிய பிரச்னைகளுக்கு, பேரணி நடத்த உரிமை உண்டு. நாங்கள், மூன்று அம்ச முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய பிரச்னை என்பதால், சென்னையில், கோட்டை நோக்கி பேரணி நடத்த திட்டமிட்டோம்; பேரணிக்கு அரசு தடை விதித்துள்ளது. “மாநிலம் தழுவிய போராட்டங்களுக்கு தடை விதிப்பதுஎன, முடிவு செய்து, முதலாவதாக எங்களில் இருந்து ஆரம்பித்துள்ளதாக கூறுகின்றனர். இது ஜனநாயக உரிமையைப் பறிக்கும் செயல் என்பதால், தடையை மீறி பேரணிக்கு குவிந்துள்ளோம். சட்டம்ஒழுங்கை மதிக்கவும் தெரியும்; எங்கள் உரிமையை வென்றெடுக்கவும் தெரியும். இரவு முதலே போலீசார், எல்லா இடங்களிலும் வாகனங்களை மறித்து, ஆயிரக்கணக்கானோரை கைது செய்துள்ளனர்; நாங்கள் எல்லாரும் அமைதியாக கைதாவோம்”. இவ்வாறு அவர் கூறினார்.

chennai_usconsulate_attack-by muslim party ibnliveசென்னையில் அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டது

tmmk Hyder Aliவழக்கமான கைதும், விடுவிப்பும்: இந்த போராட்டத்தில் தமுமுக மூத்த தலைவர்கள் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., செ. ஹைதர் அலி, பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ், துணைப் பொதுச் செயலாளர் கோவை உமர், துணைத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் வழக்கம் போல விடுவிக்கப்பட்டனர்[12]. சிரித்துக் கொண்டே பஸ்சில் ஏறியவர்கள், சிரித்துக் கொண்டே கைகளை உயர்த்தி ஆட்டிக் கொண்டு வெளியே வந்துவிட்டனர் போலும்!

TMMK taking everybody a raidசட்டப் பிரிவுகள் வலுவிழக்கின்றனவா அல்லது வழக்கமான சட்டத்தை மீறுபவர்  தப்பித்துக் கொள்கின்றனரா:  தமுமுகவின் தடையை மீறி செய்யப்படும் இத்தகைய சட்டமீறல்கள் வழக்கமாக, பழக்கமாக, வாடிக்கையாக தொடர்ந்து இருந்து வருவது தெரிக்கிறது. குறிப்பிட்ட நபர்கள் செய்யும் அதே குற்றமீறல்களை (repeated violations of the provisions of the same Act and Rules) மறுபடி-மறுபடி செய்யும் போது, அச்சட்டப் பிரிவுகள் வலுவிழக்கின்றனரா அல்லது வழக்கமான சட்டத்தை மீறுபவர் (habitual offenders) என்ற நிலையினை அடைகின்றனரா என்று சட்ட வல்லுனர்கள் ஆராய வேண்டும். வருடாவருடம், இம்மீறல்கள் நடைபெறுவதால், இது ஒரு சட்ட-வேடிக்கை நிகழ்வாக ஆகிவிட்டது. “காலையில் கைது–மாலையில் விடுதலை” என்ற அரசியல் வேடிக்கையாகவும் மாறி வருகிறது. ஆனால், ஏற்படும் பாதிப்பு அவ்வாறில்லை. நடந்தது நடந்ததாகத்தான் இருக்கிறது. விரயம் ஆனது விரயமானது தான், திரும்ப வராது. இழந்த நேரம், இழந்ததுதான்.

கீழ்கண்டவை உதாரணத்திற்காகக் கொடுக்கப்பட்டுள்ளது:

Business Standarad, Hundreds of TMMK members held in Chennai for defying ban, Chennai  July 6, 2013,  Last Updated at 23:18 IST[13]Special Correspondent, TMMK volunteers arrested for defying ban, The Hindu, Saturday, May 10, 2008[14].
Special Correspondent, TMMK man arrested in Ramnad, January 3, 2009, The Hindu,  RAMANATHAPURAM: The Tamil Nadu Muslim Munnetra Kazhagam district president Salimulla Khan was on Friday arrested under the Tamil Nadu Public Property Damage and Loss Act. Sources said when the cadres of TMMK led by him were taken to the police station by vans after being arrested for blocking the rail traffic in Ramanathappuram on December 6 they reportedly damaged seats of the police vans[15].

Tims of India, Hundreds arrested for defying ban, SWATI DAS, TNN | Dec 6, 2004, 05.48 PM IST[16]

வேதபிரகாஷ்

© 07-07-2013


[1] மாலைமலர், சென்னைபேரணிக்குஅனுமதிமறுப்பு: ரெயிலில்வந்த.மு.மு.. தொண்டர்கள் 500 பேர்கைது, பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, ஜூலை 06, 3:26 PM IST

[8] தினமணி, தடையை மீறி முஸ்லிம் அமைப்ப்பினர் போராட்டம்: 1500 பேர் கைது, ஜூலை 7, 2013.

[12] தினமலர், தடையைமீறிகோட்டைநோக்கிபேரணிக்குமுயற்சி : .மு.மு..,வினர் 3,400 பேர்கைது, பதிவு செய்த நாள் : ஜூலை 07,2013,00:20 IST

முஹம்மது கார்ட்டூன் கோயம்புத்தூரில் ரகளை, கைது!

மார்ச் 28, 2010

“தினகரன்” பிரதிகளை எரித்தற்காக கைது!

முத்தாரம் வார இதழில் (29.03.2010) நபிகள் நாயகம் போல ஒருவரை கார்டூன் வரைந்து கட்டுரை வெளியிட்டது. இதனால், அரசம்பட்டி, கோயம்புத்தூர்-பொள்ளாச்சி ரோடில் கோயம்புத்தூரிலிருந்து 25 கி.மீ தொலைவில் “தினகரன்” நாளிதழ் பண்டல் ஒரு இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தாரால் 24-03-2010 அன்று எரிக்கப்பட்டது.  ஒரு இடத்தில் 1500 மற்றும் இன்னொரு இடத்தில் 1000 பிரதிகள் எரிக்கப்பட்டன.

http://www.hindu.com/2010/03/25/stories/2010032556290400.htm

புகாரின் பேரில் கிணத்துக்கதவு போலீஸார் section 147 (Unlawful Assembly), 341 (Wrongful Restraint),435 (mischief causing fire) of Indian Penal Code and section 3 (1) of the Tamil Nadu Public Properties Damages and Loss Prevention Act முதலிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் பிரஸ் கிளப்பின் தலைவர் வி. எஸ். பழனியப்பன் முதலமைச்சருக்கு விடுத்துள்ள வேண்டுகோளில் ஜனநாயக நாட்டில் எந்த கருத்திற்கும் எதிராக கருத்துதான் இருக்கவேண்டும். ஆகவே ஏற்புடைய வழியில் தமது எதிர்ப்பைத் தெரிவித்து இருக்கலாம் அல்லது சட்டரீதியில் நடவடிக்கை மெஏற்கொண்டிருக்கலாம். ஆனால் இம்மாதிரி தாமே சட்டத்தை கையில் எடுத்துக் கொந்து இத்தகைய செயல்களில் ஈடுப்பட்டுள்ளவர்களை தகுந்த முறையில் தண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேற்கண்ட சம்பவத்தையொட்டி தமுமுக சார்பில் தென் சென்னை மாவட்ட தலைவர் சீனிமுகம்மது, ம.ம.க செயலாளர் அப்துல் சலாம் ஆகியோர் போலீஸ் கமிஷனரை சந்தித்து நபி (ஸல்) அவர்களின் கார்டூன் வெளியிட்ட பத்திரிக்கை ஆசிரியரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என புகார் மனு கொடுக்கப்பட்டது.  மேலும் மார்ச் 22 அன்று மதியம் த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹைதர்அலி ஆசிரியரை தொடர்பு கொண்டு சமுதாயத்தின் கண்டனத்தை தெரிவித்தார். ஒரு மணி நேரத்தில் தங்களது தவறை ஏற்று வருத்தம் தெரிவித்து முத்தாரம் த.மு.மு.கவுக்கு ஃபேக்ஸ் அனுப்பியது.