கோயம்புத்தூரில் ஶ்ரீலங்கை குண்டுவெடிப்பு, ஐசிஎஸ் முதலிய தொடர்புகள் – கோவையில் தமிழக போலீஸார் மற்றும் என்.ஐ.ஏ விசாரணை [4]
ஒரு பக்கம் முகமதியர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்றும், இன்னொரு பக்கம் “இது குறித்து பேச விருப்பம் இல்லை” என்றும் செய்திகள்[1] : அசாருதீன் வசிக்கின்ற பகுதிகளில் உள்ள நபர்களோ, அவரது வீட்டில் உள்ளவர்களோ இது குறித்து [இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தினை போலவே தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் நிகழ்த்த வேண்டும் எனும் நோக்கில் செயல்படுவதாகவும், அப்பாவி இளைஞர்களை மூளைச் சலவை செய்து குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்த்த ஆள் திரட்டும் வேளைகளில் ஈடுபடுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது] பேச விருப்பமில்லை என்று தெரிவிக்கின்றனர்[2]. பயங்கரவாத தடுப்பு சட்டம், பிரிவு 18, 18பி,38,39 அதாவது தீவிரவாத இயங்கங்களோடு தொடர்பில் இருப்பது , உதவி செய்வது, பயங்கரவாத கருத்துக்களை பரப்புவது போன்ற குற்றங்கள் அடிப்படையில் மொகமது அசாருதீன் கைது செய்யப்பட்டதாக தேசிய புலனாய்வுத் துறை குறிப்பிடுகின்றது. அசாருதீன் வசிக்கின்ற பகுதிகளில் உள்ள நபர்களோ, அவரது வீட்டில் உள்ளவர்களோ இது குறித்து பேச விருப்பமில்லை என்று தெரிவிக்கின்றனர். பயங்கரவாத தடுப்பு சட்டம், பிரிவு 18, 18பி,38,39 அதாவது தீவிரவாத இயங்கங்களோடு தொடர்பில் இருப்பது, உதவி செய்வது, பயங்கரவாத கருத்துக்களை பரப்புவது போன்ற குற்றங்கள் அடிப்படையில் மொகமது அசாருதீன் கைது செய்யப்பட்டதாக தேசிய புலனாய்வுத் துறை குறிப்பிடுகின்றது.
பாரூஹ் கொலைவழக்கில் சம்பந்தம் கொண்டவர்கள் முதலியன[3]: விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மற்ற நபர்களில் ஒருவரான 26 வயதுடைய அக்ரம் சிந்தா குனியமுத்தூரில் வசித்து வருகின்றார். கோவையில் நகைக்கடை வைத்துள்ளதாக கூறப்படும் இந்த நபரின் மீது முன்னதாக கொலைக் குற்றச்சாட்டு உள்ளது. கோவையில் இறை மறுப்பு கொள்கை கொண்ட பாரூஹ் என்பவர், கடவுள் மறுப்பு கொள்கைகளை சமூக வலைதளத்தில் பரப்பி வருகின்றார் என அவர் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் அக்ரம் சிந்தா, சம்பந்தப்பட்டு இருப்பதாக வழக்கு உள்ளது. விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இப்ராகிம், ஐஎஸ்ஐஎஸ் காசர்கோடு வழக்கில் கைது செய்யப்பட்ட ரியாஸ் அபுபக்கரோடு நெருக்கமாக இருந்துள்ளதாக தேசிய புலானய்வு துறை குறிப்பிடுகின்றது. ரியாஸ் அபுபக்கர் தேசிய புலனாய்வுத் துறையினரால் விசாரணை செய்தபோதுதான் சஹ்ரான் ஹாஷிமின் உரைகளை ஒரு வருடத்திற்கும் மேலாக கேட்டு வருவதாக கூறியதோடு, கேரளாவில் தற்கொலை குண்டுவெடிப்புக்கு தான் தயாராக இருந்ததாக ஒப்புக்கொண்டதால் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய புலனாய்வுத் துறை முன்னரே செய்தி வெளியிட்டு இருந்தது. அந்த நபரோடு இப்ராகிம் நெருக்கமாக இருந்துள்ளதாலும், அசாருதீன் குழுவில் இருந்ததாலும் இவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்[4].
இந்த சோதனையில் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஈடுபடவில்லை மாறாக மாநகர காவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவினர் இந்த சோதனைகளை நடத்தினர்[5]: இந்த சோதனையில் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஈடுபடவில்லை மாறாக மாநகர காவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவினர் இந்த சோதனைகளை நடத்தினர். ஆக, நாளைக்கு மோடி சொல்லித்தான், நடத்தப் பட்டது என்று சொல்லமாட்டார்கள் என்று நம்பலாம்! மேலும், இவர்கள் இலங்கையில் குண்டு வெடிப்புகளை நிகழ்த்திய சஹ்ரான் ஹாஷிமின் செயல்களை புகழ்ந்து வருவதாக தகவல் கிடைத்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, இந்தப்பகுதிகளில் சோதனைகள் நடைபெற்று கொண்டிருப்பதால் இங்குள்ள மக்கள் இதுகுறித்து பேசத் தயங்குகின்றனர். பெயர் வெளியிட விரும்பாத நபர் ஒருவர், இந்த நபர்கள் யாரும் பெரிய பொருளாதார பின்புலம் கொண்டவர்கள் இல்லை. இதற்கு முன்பு, இவர்கள் யாரும் பெரிய அளவில் வெளியில் செயல்பட்டதாகவும் தெரியவில்லை. இதுபோன்ற நபர்கள் சமூக ஊடகங்களில் செய்யப்படுவது அவர்களின் குடும்பங்களுக்குக்கூட தெரியாது, விசாரணைகளால் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அச்சமுற்று இருக்கின்றனர் என்றார்[6].
மின்னணு உபகரணங்கள் கைப்பற்றப் பட்டன: கைது செய்யப்படும்போது 14 மொபைல் போன்கள் 29 சிம் கார்டுகள் 10 பேன் டிரைவ்கள் 3 லேப்டாப், ஆறு மெமரி கார்டுகள், 4 கார்ட் டிஸ்குகள் ஒரு இண்டர்நெட் டாங்கில், 13 சிடிகள் / டிவிடி, 300 ஏர் கன் பில்லெட்ஸ் பல டாக்குமெண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன[7]. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் சமூக ஜனநாயக கட்சியின் சில துண்டு பிரசுரங்கள் ஸ்கேனரின் கீழ் இருந்தன[8]. மீட்கப்பட்டதன் அடிப்படையில் விசாரணைகள் தொடங்கியுள்ளது. இந்த வழக்கு மே 30 தேதி கோயம்புத்தூரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 32 வயது முகம்மது அஷாருதீன் மேலும் 5 பேர் தலைமையிலான குழு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் சித்தாந்தத்தை சமூக ஊடகங்களில் பிரசாரம் செய்து இளைஞர்களை கவர்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இஸ்லாமிய பிரபாகரன் தேவையில்லை: இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள மோதல் தொடர்ந்தால் மீண்டும் ஒரு முஸ்லிம் பிரபாகரன் உருவாகிவிடுவார் எனவே மக்கள் எச்ரிக்கையுடன் இருக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் சிறிசேனா எச்சரித்துள்ளார். ஈஸ்டர் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இலங்கையில் பல்வேறு மாவட்டங்களில் கடைகள் அடித்து நொறுக்கப்படும், தாக்கப்படும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்தன. வடமேற்கு மாநிலங்களில் உள்ள 4 மாவட்டங்களில் கடைகளையும், மசூதியையும் ஒரு கும்பல் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியைத் தொடர்ந்து பெரும் வன்முறை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் பிறகு சில நாட்கள் சகஜ நிலை திரும்பியபோதும் ஆங்காங்கே சில இடங்களில் மோதல்கள் நடந்த வண்ணம் இருந்தன. இந்தநிலையில், முல்லைத்தீவு பகுதிக்கு சென்ற அதிபர் சிறிசேனா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது[9]: “நாடு தற்போது பிரிந்து இருப்பது உண்மை தான். இதனை ஏற்றுக் கொள்ளதான் வேண்டும். ஆனால் இது நாட்டுக்கு நல்லதல்ல. அனைத்து சமூக மக்களிடமும் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிய தேவை தற்போதுள்ளது. மீண்டும் ஒரு முஸ்லிம் பிரபாகரன் பிறப்பதற்கு மக்கள் அனுமதித்து விடக்கூடாது. இது நாட்டுக்கு நல்லதல்ல. நாம் பிரிந்து நின்றால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் இழப்பு தான். இதில் எந்த மாற்றமும் இல்லை. நாட்டை பற்றி கவலைப்படாமல் சில அரசியல்வாதிகள் வரவுள்ள தேர்தலை மனதில் கொண்டு செயல்படுகின்றனர். மக்கள் அவர்களின் ஆசைகளுக்கு இரையாக வேண்டாம்,” இவ்வாறு அவர் பேசினார்[10].
இஸ்லாமிய பிரபாகரன் தமிழகத்திற்கும் ஆபத்துதான்: இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளில் பெரும்பான்மையானவர்கள் திருகோணமலையைச் சேர்ந்தவர்கள்.இவர்களை மீளக்குடியேற்றுவது மிகமிக அவசியம். இந்தியா தமிழர்கள் மீதான அக்கறையில் மீள்குடியேற்றத்தை நடத்தாவிட்டாலும் தனது சொந்த நலன்களைப் பாதுகாக்க அதனைச் செய்யவேண்டும். இல்லாவிடின் இலங்கையின் கிழக்கில் இருந்து வெடிமருந்துகள் ஏற்றிய மத அடிப்படைவாதத் தற்கொலைக் கொலையாளிகளின் படகுகள் இந்திய கிழக்குக் கரையோரத் தளங்களை, இந்திய கடற்படையை, கப்பல்களைத் தாக்கின என்ற செய்திகள் வர அதிக காலம் எடுக்காது. இந்தியாவின் பாதுகாப்பு மட்டுமல்ல பொருளாதாரமும் கேள்விக்குறியாகிவிடும்.
குண்டுவெடிப்பு ஜிஹாதிகள் கண்டறியப் பட்டு ஒழிக்கப் படவேண்டும்: கோயம்புத்தூரில் உள்ள முகமதியர்கள் இவ்வாறு தொடர்ந்து பயங்கரவாத தீவிரவாத செயல்களில் திட்டமிட்டு ஈடுபட்டு வருவது மிகவும் திகைப்பாக உள்ளது. கொல்வது என்ற சித்டாந்தத்துடன் தமிழகத்தில் இத்தகைய கூட்டம் தொடர்ந்து வேலை செய்வது நிச்சயமாக மனிதத்தன்மையற்ற தன்மையினை எடுத்துக் காட்டுகிறது. மதத்தின் பெயரால் அவர்களே குண்டு வெடிப்பு மூலம் அல்லது மற்ற தீவிரவாத பயங்கரவாத செயல்களால் கொல்ல வேண்டும் என்ற கொள்கையை இன்றும் செயல்படும் இந்த நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக ஒரு குரூர மனப்பாங்கு கொண்டவர்களாகத்தான் இருக்க வேண்டும். மனிதர்களை மனிதர்கள் கொல்வதனால் சொர்க்கத்திற்கு போக முடியும் என்ற நம்பிக்கையை வளர்ப்பது ஒரு பெரிய குரூரமான் பைத்தியக்காரத்தனம் போன்றது தான். ஒருவேளை வெறி பிடித்த குரூரக் கொலைக்காரனுக்குக் கூட கொஞ்சம் இரக்கம் இருக்கலாம். ஆனால் தற்கொலை மூலம் மற்றவர்களையும் கொல்லும் எண்ணம் எப்படி மனங்களில் உருவாகும் என்பது ஆச்சரியமாக உள்ளது.
தற்கொலை ஜிஹாதிகளை வளர்ப்பது, வைத்துக் கொள்வது அபாயகரமானது: ஆகவே தமிழகத்தில் இத்தகைய கூட்டத்தினரை வளர்த்தது, வளர்ப்பது அபாயகரமானது, மனிதர்களுக்கு ஒவ்வாதது. ஆகவே எல்லா நிலைகளிலும் இவர்கள் கண்டறியப்பட்டு அவர்களை தனிமைப்படுத்த வேண்டும் அல்லது சட்டட்தின் முன்னர் கொண்டவரப்பட்டு, முறையாகத் தண்டிக்கப்படவேண்டும். இல்லை அவர்கள் இங்கே வாழ தகுதியற்றவர்கள் என்று கூட தீர்மானிக்கலாம். இன்றைய காலகட்டத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கும் நேரத்தில், ஜிஹாத் என்ற சித்தாந்தத்தில் இத்தகைய கொடுமைகளை உண்டாக்குபவர்களை எதிர்கொள்வது. என்பது சாதாரண மக்களால் முடியாத ஒன்று. ஆகவே, முளையிலேயே அவை கிள்ளியெறியப் படவேண்டும்.
© வேதபிரகாஷ்
14-05-2019
[1] பிபிசி.தமிழ், கோவையில் கைது செய்யப்பட்டது ஐ.எஸ் பயங்கரவாதிகளா? நடந்தது என்ன?, 14 ஜூன் 2019
[2] https://www.bbc.com/tamil/india-48636958
[3] பிபிசி.தமிழ், கோவையில் கைது செய்யப்பட்டது ஐ.எஸ் பயங்கரவாதிகளா? நடந்தது என்ன?, 14 ஜூன் 2019
[4] https://www.bbc.com/tamil/india-48636958
[5] பிபிசி.தமிழ், கோவையில் கைது செய்யப்பட்டது ஐ.எஸ் பயங்கரவாதிகளா? நடந்தது என்ன?, 14 ஜூன் 2019
[6] https://www.bbc.com/tamil/india-48636958
[7] என்.டி.டிவி.தமிழ், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் மாஸ்டர்மைண்ட் முகம்மது அசாரூதின் கைது, தமிழ்நாடு | Edited by Saroja | Updated: June 13, 2019 12:16 IST
[8] https://www.ndtv.com/tamil/isis-mastermind-with-link-to-sri-lanka-attacker-mohammed-azarudeen-arrested-in-tamil-nadu-2052511
[9] தி.தமிழ்.இந்து, ‘‘முஸ்லிம் பிரபாகரன் உருவாகி விடுவார்’’ – இலங்கை அதிபர் சிறிசேனா எச்சரிக்கை, Published : 09 Jun 2019 17:10 IST; Updated : 09 Jun 2019 17:10 IST
[10] https://tamil.thehindu.com/world/article27703942.ece
அண்மைய பின்னூட்டங்கள்