Posted tagged ‘தமிழகம்’

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (5)

ஒக்ரோபர் 25, 2014

பர்த்வான் குண்டுவெடிப்பும், நாடு முழுவதும் பரவியுள்ள ஜிஹாதிகளும், அவர்களை ஆதரிக்கும் பொறுப்பற்ற முஸ்லிம்களும், அரசியல்வாதிகளும் (5)

 

முஸ்லிம்களின் எச்சரிக்கை தினத்தந்திக்கு

சென்னை முஸ்லிம்களின் ஜிஹாதி ஆதரவு இருக்கும் போது ஏன் ஜிஹாதிஎதிர்ப்பு இல்லை?: சாதாரணமாக தமிழக முஸ்லிம்கள் மற்ற விசயங்களுக்கு, ஆயிரக்கணக்கானவர்களை சென்னைக்கு கூட்டி வந்து ஆர்பாட்டம் நடத்துவார்கள். “கசாபை தூக்கில் போடாதே” என்று முன்னரும் தூக்கில் போட்ட பிறகும் அவனை புகழ்ந்து சுவரொட்டிகள் ஒட்டுவார்கள். சிறையில் வாடும் அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய் என்பார்கள், ஆனால், முஸ்லிம்கள் இப்படி தீவிரவாத செயல்களை செய்து கொண்டிருப்பதைக் கண்டிக்க மாட்டார்கள், தடுக்க மாட்டார்கள். ஆனால், இவ்விசயத்தில் அடங்கி ஒடுங்கிக் கிடக்கிறார்களே ஏன் என்று தெரியவில்லை. “தீவிரவதிகளாக மாறும் பெண்கள்” என்று 05-10-2014 தேதியிட்ட தினத்தந்தியில் ஒரு கட்டுரை வெளியிட்டவுடன், “ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம்” என்ற முஸ்லிம் அமைப்பு, அதனை எதிர்த்து கண்டன கடிதத்தை அனுப்பியதாம். உடனே, 08-10-2014 அன்று, தினத்தந்தி, “கட்டுரையில் இடம் பெற்ற ஜிஹாத் பற்றிய தகவல் தவறானது. இது யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல”, என்று வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டதாம். ஆனால், அதையும் விடாமல், “இதுபோன்ற தவறான அவதூறான செய்திகளை வெளியிடுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இனிமேலும் முஸ்லிம் விரோதபோக்கை பத்திரிக்கையில் தொடர்வீர்களானால், விளைவுகள் கடுமையாக இருக்கும் என்பதை வன்மையான கண்டனுத்துடன் ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (ஐமுமுக) எச்சரிக்கிறது”, என்று இன்னொரு கடிதத்தை 08-10-2014 அன்று அனுப்பியுள்ளது. அதாவது, அதற்கு மேல் என்ன எதிர்பார்க்கிறது என்று தெரியவில்லை.

தீவிரவாதிகளாக மாறும் பெண்கள் - தினத்தந்திக்கு ஐமுமுக கடிதம்

தீவிரவாதிகளாக மாறும் பெண்கள் – தினத்தந்திக்கு ஐமுமுக கடிதம்

ஐமுமுகவின் கடிதத்தின் நோக்கம் அலசப்படுகிறது: இந்தியாவில் அடிக்கடி கருத்து சுதந்திரம், எண்ணும் உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை என்றெல்லாம் பேசப்படும், எழுதப்படும், விவாதிக்கப்படும். ஆனால், அந்த உரிமைகள், சுதந்திரங்கள் எந்த அளவிற்கு இருக்க வேண்டும், செய்பவர்களின் உரிமைகள், சுதந்திரங்களரென்ன, மற்றவர்களின் உரிமைகள், சுதந்திரங்கள் என்ன என்பது பற்றி அவர்கள் பேசுவது, எழுதுவது, விவாதிப்பது இல்லை. “பாசிஸம்” என்று அடிக்கடி சொல்வார்கள். அதாவது ஒருவர் தனது கருத்தை வலுக்கட்டாயமாக அடுத்தவர் மீது திணிக்கும் முறை அதுவாம். பிறகு அப்படி சொல்பவர்களே, அதைத்தானே செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறதே? இதென்ன, அந்த போதிக்கும் மகாத்மாக்களுக்குப் புரியாமலா இருக்கும்? இங்கும் “ஐமுமுக”வின் கடிதம் பல விசயங்களை வெளிப்படுத்துகிறது. தினத்தந்தி அல்லது இன்னொரு ஊடகம் எந்த செய்தியை வெளியிட வேண்டும் அல்லது கூடாது என்பதனை இவ்வாறு முடிவெடுக்க முடியுமா? அல்லது தினத்தந்தி ஒரு செய்தியை வெளியிட்டு விட்டு, பிறகு அது தவறு, பொய் என்று சொல்லி இருந்துவிட முடியுமா?

ஐசிஸ் - ஐ.எஸ்.ஐ- ஜிஹாத் - சென்னை தொடர்பு

ஐசிஸ் – ஐ.எஸ்.ஐ- ஜிஹாத் – சென்னை தொடர்பு

மேலே குறிப்பிட்ட “ஐமுமுக”வின் கடிதத்தில் உள்ள சொற்றொடர்கள் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டியுள்ளது. அவை கிழே கொடுக்கப் படுகின்றன?

  • தவறான அவதூறான செய்திகள் – இந்தியாவில் ஏன் தமிழகத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், முஸ்லிம்கள் வெடிகுண்டு வெடிப்பு, கொலை முதலிய காரியங்களில் வன்முறைகளில், குற்றங்களில் ஈடுபட்டிருக்கிறார்களே. பர்த்வானில் கூட, ரெசூல் கரீம் வீட்டில் உள்ளூர் போலீஸ் தேடியபோது கிடைக்காத குண்டுகள்[1] என்.ஐ.ஏ தேடியபோது கிடைத்ததாமே? கிடைத்துள்ள ஒரு பென்-டிரைவில் குண்டுகள் எப்படி தயாரிப்பது என்ற விவரங்கள் இருக்கின்றன[2]. மால்டா மாவட்டத்தில் பத்து நாட்களில் மூன்று முறை குண்டுகள் வெடித்துள்ளன[3]. அந்த குண்டு தொழிற்சாலையில் 36 பேர் வேலை செய்துள்ளனர்[4]. முன்பே அந்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தியிருந்தால் குண்டுதயாரிப்பு முறைபற்றி விவரங்கள் கிடைத்திருக்கும்[5]. ஆனால், மாநில போலீஸார் அவற்றை அழித்து விட்டார்கள். அசாமில் பார்பேடா என்ற இடத்தில் ஆறு இளைஞர்கள் இவ்விசயத்தில் கைது செய்யப் பட்டுள்ளனர்[6]. இவையெல்லாம் செய்திகளாக வந்துள்ளனவே, வந்துக் கொண்டிருக்கின்றனவே? அவையெல்லாம் தவறான செய்திகளா அல்லது அவதூறான செய்திகளா? காஷ்மீரத்தில் ஐசிஸ் கொடிகள் காட்டி, “நாங்கள் இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்துவோம்”, என்று முழக்கமிடும் போது, மற்ற முஸ்லிம்கள் கண்டிக்கவில்லையேலொமர் அப்துல்லா மட்டும் அவர்கள் “முட்டாள்கள்” என்று சொல்லியிருக்கிறார், அதையும் அவதூறு என்று எச்சரிக்கப் படவில்லையே? அந்த “ஐசிஸ்”ஸுடன் சம்பந்தப் பட்டதுதானே “செக்ஸ் ஜிஹாத்” என்பதெல்லாம்.

  • முஸ்லிம் விரோதபோக்கு – ஊடகங்களில் பெரும்பான்மையாக “இந்துவிரோத போக்கு” தான் காணப்படுகின்றது, ஆனால், இவர்கள் “முஸ்லிம் விரோதபோக்கு” உள்ளதாக எடுத்துக் காட்டுகிறார்கள். முஸ்லிம்களுக்கு இந்து நண்பர்கள் இருக்கின்றார்கள், அவ்வாறே இந்துக்களுக்கு முஸ்லிம் நண்பர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் பழகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு, ஒருவேளை மோமின் முஸ்லிம்களுக்கு, “என்னடா இழவு இது, இந்த காபிர் நண்பர்களுடன் இப்படி நட்பு வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறதே”, என்ற எண்ணம் வரலாம். இந்து நண்பர்கள், தாடி வைத்த – குல்லா போட்ட முஸ்லிம்களைப் பார்க்கும் போது, “ஐயோ, இவன் தீவிரவாதியாக இருப்பானோ, குண்டு வைத்து விடுவானோ?”, என்று அச்சத்துடன் நினைக்கலாம். இதற்கெல்லாம் யார் காரணம் என்று முஸ்லிம்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். இந்துக்கள் முஸ்லிம்களை எதிரிகளாக நினைத்ததில்லை. ஆனால், முச்லிம்கள் அவ்வாறு நினைக்கவில்லை என்றால், முச்லிம்களே ஆகமாட்டார்கள், இங்குதான் அவர்களுடைய பிரச்சினை உள்ளது. அவர்கள் தாம் மற்ற எல்லோரையும் தமக்கு எதிரிகளாக நினைக்கிறார்கள். அந்த எதிர்மறை எண்ணங்கள் தாம், இப்படி அவர்களை நினைக்கச் செய்கிறது. இது அவர்களுடைய இறையியல் மற்ரும் மனோரீதியிலாக நடக்கும் போராட்டம். அதற்கு ஜிஹாதி தான் தீர்ப்பு என்று அவர்கள் நினைத்து செயல்படும் போது, அவர்கள் தாம் விரோதத்தை சம்பாதித்துக் கொள்கிறார்கள்.

  • பத்திரிக்கையில் செய்திகளை வெளியிடுவது – அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களை பெரும்பாலும் ஆட்டி வைப்பவர்கள் கிருத்துவர்கள், முஸ்லிம்கள் மற்றும் கம்யூனிஸ சித்தாந்திகள். இவர்கள் தங்களது சித்தாந்தம் வலுப்பட, ஆதரவாக இருக்க, மற்ற சித்தாந்திகளை எதிர்க்க, தங்களது பத்திரிகா தர்மத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்த வரையில், “செக்யூலரிஸம்” போர்வையில், அவர்கள் உண்மையில், பாரபட்சமான செய்திகளைத் தான் வெளியிட்டு வருகின்றனர். செய்திகளை விலைக்கு வாங்குவது, ஊடகங்களில் செய்திகளை விதைப்பது, வளர்ப்பது, பரப்புவது…..போன்ற வேலைகளை தாராளமாக செய்து வருகிறார்கள். அதற்காக இப்பொழுது நவீன முறையில் “ஜேர்னலிஸ்ட்” பள்ளிகள், கல்லூரிகள் எல்லாமே நடத்தி வருகிறார்கள். மேலும், அவர்களுடைய வியாபாரங்களை நேரிடையாகவோ-மறைமுகமாகவோ எந்த செயல், இயக்கம் அல்லது தனிமனிதன் செயல்படுகிறானோ, அதற்கு எதிராக செயல்படும். இந்த காரியங்களில் ஈடுபட்டுள்ளவர்களை ஆராய்ந்தாலே போதும், “பத்திரிக்கையில் செய்திகளை வெளியிடுவது” எவ்வாறுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

  • பத்திரிக்கையில் தொடர்ந்து வெளியிடுவது – ஒன்று உண்மையான செய்திகளை, ஒட்டு மொத்தமாக மனிதர்கள், பொதுவாக பாதிக்கப்படும் விசயங்கள் செய்திகளாக வந்து கொண்டே இருக்கும். இக்காலத்தில் பொழுதுபோக்கு, விளையாட்டு, சினிமா போன்ற விசயங்களும் செய்திகளாக வரும். அதேபோல, தீவிரவாதம், பயங்கரவாதம், ஜிஹாதி போன்ற காரியங்கள் தொடர்ந்து நடந்து வரும்போது, அத்தகைய செய்திகளும் செய்திகளாக வந்து கொண்டே இருக்கும். அதுதவிர மேலே குறிப்பிடப் பட்டபடி, அவர்களுடைய வணிகங்கள்-வியாபாரங்களை நேரிடையாகவோ-மறைமுகமாகவோ பாதிக்கப் பட்டால், அதை எதிர்க்கும் முறையில் பிரச்சார ரீதியில் செய்திகள் தோன்றும்.

  • விளைவுகள் கடுமையாக இருக்கும் – ஏற்கெனவே விளைவுகள் மிகக்கடுமையாகி விட்டதால் தான், இந்தியர்கள் ஜிஹாதைக் கண்டு எச்சரிக்கையாக இருக்கிறார்கள். பாகிஸ்தான் மதரீதியில் பிரிக்கப் பட்டு, அது ஒன்றாக இருக்கமுடியாமல், இரண்டாக பிரிந்தும், முஸ்லிம்கள் உண்மையினை புரிந்து கொள்ளாமல், இந்தியாவிற்கு எதிராகவே செயல்பட்டு கொண்டியிருக்கிறார்கள். காஷ்மீர் மட்டுமல்லாது வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைகளில் பெரும் பிரச்சினைகள் உருவாக்கப் பட்டு வருகின்றன. இதற்கு ஜிஹாதிகள் முக்கிய பங்கு வகித்துக் கொண்டிருக்கினர். இத்தனை குண்டுகள் வெடித்தும், மக்கள் இறந்தும், ரத்தம் பாய்ந்தும், மனித உறுப்புகள் சிதறியும்……அவர்கள் திருப்தியடையாமல், குண்டு தொழிற்சாலைல்கள் வைத்துக் கொண்டு, கடுமையான விளைவுகளைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவற்றையெல்லாம் கண்ண்டிக்காமல், “விளைவுகள் கடுமையாக இருக்கும்” என்று மிரட்டுவதின் உள்நோக்கம் என்ன?

  • வன்மையான கண்டனுத்துடன் எச்சரிக்கை – எச்சரிக்கை ஜிஹாதிகளுக்கு இல்லாமல், அத்தகைய அபாயகரமான உண்மைகளை எடுத்துக் காட்டுபவர்களுக்கு ஏன் விடவேண்டும்? கண்டனமும் “இஸ்லாம் பெயரில்” நடக்கின்ற குற்றங்களை, தீவிரவாதங்களை நோக்கியில்லாமல், பாதிக்கப் பட்டவர்கள் மீது ஏன் தொடர்ந்து இருக்கவேண்டும்? அத்தகைய வார்த்தை தீவிரவாதம், சொல்-பயங்கரவாதம் போன்றவை ஏன் வன்மையுடன் இருக்கும் என்று அறிவித்துக் கொள்ள வேண்டும்? “வன்மையான கண்டனுத்துடன் எச்சரிக்கை” என்பது இப்படித்தான் மிரட்டலாக இருக்க வேண்டுமா?

கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு - அல் - உம்மா

கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு – அல் – உம்மா – நன்றி “சதர்ன் ஜிஹாதி.காம்”

இந்திய முஸ்லிம்கள் மாறவேண்டும்: “தாருல்-இஸ்லாம் : தாருல்-ஹராப்” “மோமின்-காபிர்”,ளிறைவனால் வெளிப்படுத்தப் பட்ட புத்தகத்தைக் கொண்டவர்கள் – புத்தகங்கள் இல்லாதவர்கள்” ….என பற்பல வேறுபாடுகளை வைத்துக் கொண்டு முஸ்லிம்கள் தான் இந்தியாவில் முஸ்லிம்-அல்லதவர்களை, குறிப்பாக இந்துக்களை அணுகி வருகின்றனர். இது நேர்-எதிர்மறை முறைகள், நல்லது-கெட்டது வழிகள், அறிவிக்கப்பட்ட-அறிவிக்கப்படாத தாக்குதல்கள் என்றபலமுறைகளில் நடந்து வருகின்றன. முன்பெல்லாம் முஸ்லிம்கள், இந்துக்களின் வீடுகளில் விசேஷங்கள் நடந்தால் முஸ்லிம்கள் கலந்து கொள்வார்கள், ஆனால், இப்பொழுது தவிர்த்து வருகிறார்கள். காரணம் அடிப்படவாத முஸ்லிம்கள், “இந்து வீடுகளுக்குச் செல்லக் கூடாது. சாத்தான்களின் வழிபாட்டில் கலந்து கொள்ளக் கூடாது”, என்றேல்லாம் போதிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், இந்துக்கள் இதுமாதிரி சொல்வதில்லை, ஏன், அவர்களுக்கு அத்தகைய எண்ணமே தோன்றுவதில்லை. இன்னும் சொல்லப் போனால், ஏழை முஸ்லிம்களைப் பார்த்தால் இரக்கப்படத்தான் செய்கிறார்கள், தானம் செய்கிறார்கள் (அதாவது அவர்கள் முஸ்லிம்கள் என்று பார்ப்பதில்லை).

அல்-உம்மா சிமி ஜிஹாதின் பல உருவங்கள்

அல்-உம்மா சிமி ஜிஹாதின் பல உருவங்கள்

முஸ்லிம்கள் பரஸ்பர நம்பிக்கையினை வளர்க்க வேண்டும்: முஸ்லிம்களுக்கு இந்து நண்பர்கள் இருக்கின்றார்கள், அவ்வாறே இந்துக்களுக்கு முஸ்லிம் நண்பர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் பழகிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு, ஒருவேளை மோமின் முஸ்லிம்களுக்கு, “என்னடா இழவு இது, இந்த காபிர் நண்பர்களுடன் இப்படி நட்பு வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறதே”, என்ற எண்ணம் வரலாம். இந்து நண்பர்கள், தாடி வைத்த – குல்லா போட்ட முஸ்லிம்களைப் பார்க்கும் போது, “ஐயோ, இவன் தீவிரவாதியாக இருப்பானோ, குண்டு வைத்து விடுவானோ?”, என்று அச்சத்துடன் நினைக்கலாம். முதலில் இந்த மனப்பாங்கை நீக்க வேண்டும். பரஸ்பர நம்பிக்கையை வளர்க்க வேண்டும். பயங்கரவாதம், தீவிரவாதம், ஜிஹாதித்துவம் பேசும், ஊக்குவிக்கும், பரப்பு முஸ்லிம்கள், குறிப்பாக இளைஞர்கள் கண்கானிௐகபட வேண்டும், அவர்கள் திருத்தப் படவேண்டும். அப்பொழுது தான் உண்மையான அமைதி, சாந்தி முதலியவை வரும், கிடைக்கும், தொடரும். பர்த்வானில் குண்டுகள் வெடித்த ஒலி இப்பொழுதுதான் மம்தா பேனர்ஜிக்குக் கேட்டிருக்கிறதாம்[7], அதுபோல, இங்குள்ள முஸ்லிம்களுக்கும் கேட்டால்[8] சரிதான்! காந்தி யெயந்தி அன்று குண்டுவெடித்து ஆட்கள் செத்து, இவ்வளது சோதனைகள் நடந்து முடிந்த பிறகு, “தீவிரவாதிகள், தீவிரவாதிகள் தாம்”, என்று அம்மையார் 17-10-2014 அன்றுதான் ஒப்புக் கொண்டுள்ளார். சரி சென்னை முஸ்லிம்கள் எப்பொழுது ஒப்புக் கொள்வார்கள்?

© வேதபிரகாஷ்

25-10-2014

[1] Earlier, a senior Bengal police officer told The Telegraph that departmental proceedings would be initiated against the team that had searched Rezaul Karim’s house in Burdwan and returned empty-handed on October 8. In the same house, the NIA and the NSG had yesterday found 39 home-made bombs.

[2] …….the Bengal police had also recovered a pen drive from a house in the area, that had a recording of an instructor explaining in Urdu and Bangla how to make bombs, improvised explosive devices and hand grenades.

http://www.ndtv.com/article/india/burdwan-blast-a-pen-drive-with-video-on-bomb-making-key-for-bengal-terror-investigation-608226

[3] http://www.ibtimes.co.in/third-blast-west-bengals-malda-district-10-days-611486

[4] http://www.ndtv.com/article/india/burdwan-blast-a-pen-drive-with-video-on-bomb-making-key-for-bengal-terror-investigation-608226

[5]   On October 3, CID had detonated the 55 IEDs found in the Khagragarh blast site.  October 5 itself, just three days after the Khagragarh IED explosions when all the samples had been destroyed by CID.

http://timesofindia.indiatimes.com/city/kolkata/Burdwan-39-bombs-detonated-explosives-samples-sent-for-testing/articleshow/44863732.cms

[6] http://indiatoday.intoday.in/story/burdwan-blast-nia-gets-custody-of-three-accused/1/395558.html

[7] http://www.telegraphindia.com/1141018/jsp/frontpage/story_18939287.jsp

[8] Left defenceless by the discovery of a cache of bombs that Bengal police had overlooked, chief minister Mamata Banerjee today said “terrorists are terrorists” and declared that “we do not have any problems with the NIA” which is probing the Burdwan blast.

தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகள் உருவானது, மாறியது, கூட்டணியில் செயல்பட்டது (1960-2013) – பிஜேபியுடன் முஸ்லிம் கட்சி கூட்டு பற்றி ஒரு அலசல் கட்டுரை (2)

திசெம்பர் 17, 2013

தமிழகத்தில் முஸ்லிம் கட்சிகள் உருவானது, மாறியது, கூட்டணியில் செயல்பட்டது (1960-2013) – பிஜேபியுடன் முஸ்லிம் கட்சி கூட்டு பற்றி ஒரு அலசல் கட்டுரை (2)

kather01 (2)அனைத்து  இந்திய  முஸ்லிம்  முன்னேற்ற  கழகம்  பிஜேபிக்கு  ஆதரவு  கொடுப்பது[1]: அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் கட்சியின் தலைவர் சதக்கத்துல்லா, சென்னை பா.ஜனதா அலுவலகமான கமலாலயத்தில் வெள்ளிக்கிழமை (13-12-2013) நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் பொன். ராதாகிருஷ்ணனிடம் தனது கட்சியின் ஆதரவு கடிதத்தை வழங்கினார்[2]. இந்த நிகழ்ச்சியின் போது, காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன், பா.ஜனதா மாநில செயலாளர் வானதி சீனிவாசன், செயற்குழு உறுப்பினர் கே.டி. ராகவன் ஆகியோர் உடன் இருந்தனர். இது குறித்து பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:

பா.ஜனதா தலைமையிலான தேசிய  ஜனநாயக  கூட்டணியில் சதக்கத்துல்லா  தலைமயிலான  அனைத்து  இந்திய  முஸ்லிம் முன்னேற்ற கழகம்  இணைந்துள்ளதுவரும் பாராளுமன்ற தேர்தலில்  நரேந்திர  மோடிக்கு  ஆதரவாக  முஸ்லிம்  மக்களிடம் அவர்கள்  ஆதரவு  திரட்டுவார்கள் டிசம்பர்  1-ஆம் தேதி தொடங்கிய  வீடுதோறும்  மோடிஉள்ளம் தோறும்  தாமரைஎன்ற  பாத யாத்திரைக்கு  தமிழகத்தில்  பெரும்  வரவேற்பு கிடைத்துள்ளதுஇதுவரை  700-க்கும் அதிகமான  கிராம பஞ்சாயத்துக்களில்  இந்த  யாத்திரை  நிறைவு  பெற்றுள்ளது. வீடுகள் தோறும்  சென்று  மக்களை  நேரடியாகச்  சந்திக்கும் போது மக்களின்  பிரச்னைகள்கிராமங்களின்  பிரச்னைகளை அறிந்து கொள்ள  முடிகிறதுஇந்த  பாத யாத்திரை வரும்  22-ஆம் தேதி வரை நடைபெறும்”, இவ்வாறு அவர் கூறினார்[3]. “அனைத்து இந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகம் இந்த நிலையில் பாரதிய ஜனதா கூட்டணியில் சேர்ந்துள்ளது[4] தமிழகத்தில் மட்டுமல்ல தேசிய அளவிலும், முஸ்லிம்களின் அணுகுமுறையில் மாற்றம் இருப்பதைக் காணமுடிகிறது. ஆனால், முஸ்லிம்கள் மற்ற விசயத்தில் ஜாக்கிரதையுடன் தான் பிஜேபியை அணுகுவார்கள் என்பதை அறியலாம். அப்பாஸ் நக்வி போன்ற முஸ்லிம் தலைவர்கள் பிஜேபியில் நெடுங்காலமாக இருந்து வருகின்றனர். ஆனால், திராவிடப் பின்னணியில், ஒரு முஸ்லிம் கட்சி, பிஜேபியுடன் எப்படி செயல்படும் என்று பார்க்கவேண்டும்”, என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்[5]. பொதுவாகவே, முஸ்லிம்கள் தங்களது வட்டட்த்தில் இருந்து வெளியே வரமாட்டார்கள், வந்தால் இருபக்கத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் முதல் முறையாக முஸ்லிம் கட்சி ஒன்று பா.ஜனதாவுக்கு ஆதரவு அளித்திருப்பது, அந்த கட்சியினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது[6]. தமிழ்நாட்டில் முதல் முறையாக முஸ்லிம் கட்சி ஒன்று பாஜகவுக்கு ஆதரவு அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது[7].
kather01இந்திய  யூனியன்  முஸ்லிம்  லீகிலிருந்து  யாரும்  பிரிந்து   செல்லவில்லைசதக்கத்துல்லா என்ற  நபர்  லீகை  சார்ந்தவரும்  அல்ல: பாரதீய ஜனதா கட்சியை முஸ்லிம் சமூகத்தில் எவரும் ஆதரிப்பார்கள் என்பது பகல் கனவே என குறிப்பிட்டுள்ள முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை இது போன்ற விஷமத்தனமான செயல்களுக்கு பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இருந்து ஒரு நபர் பிரிந்து சென்று புதிய கட்சியை தொடங் கியுள்ளதாகவும், அது நாடாளு மன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி கூட்டணியை ஆதரிக்க போவதாகவும் சில நாளிதழ்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. அச்செய்திகளில் குறிப்பிடப் பட்டுள்ளவாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீகிலிருந்து எவரும் பிரிந்து செல்லவும் இல்லை சதக்கத்துல்லா என்ற நபர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை சார்ந்தவரும் அல்ல. 1972ல் முகமது இஸ்மாயில் இறந்தபோது, திமுக இரண்டாக உடைந்தது, அதிமுக உருவானது. அதேபோல, “இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்” இரண்டாகி, “இந்திய தேசிய லீக்” [Indian National League (INL)] உருவானது. இவற்றிற்கு முறையே அப்துல் சமத் மற்றும் அப்துல் லத்தீப் தலைவர்களாக இருந்தனர். அப்துல் லத்தீப் கருணநிதிக்கு வேண்டியவராக இருந்தார். எப்படியாகிலும், இரண்டும் திராவிடக் கட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு காலம் தள்ளின. எனவே, லீக் ஒரு தனித்துவம் வாய்ந்த கட்சி அல்லது குழுமம் என்று ஒப்புக்கொள்ள முடியாது.

இந்த தகவல் அவரை பா.. அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ள காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் அவர்களிடம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலை[8]மையகத்திலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது[9].kather02

பாஜகவுக்கு  ஆதரவு  கடிதம்  கொடுத்த   “சதாம்  என்.கே.எம்.  சதக்கத்துல்லாஎங்கள்  ஆள்  இல்லை: சதாம் என்.கே.எம்.சதக்கத்துல்லா, நிறுவனத் தலைவர், அகில இந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம், 66 மரைக்காயர் லெப்பை தெரு, மண்ணடி சென்னை -1 என முகவரியிட்டு 9677843231 என தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டு லெட்டர் பேட் தயாரித்து பா...,வுக்கு ஆதரவுக் கடிதம் அளிக்கப் பட்டிருப்பதாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பொறுத்த வரை மாநில மாவட்ட நிர்வாகிகளில் என்.கே. எம்.சதக்கத்துல்லா என்ற பெயரில் ஒருவரும் இல்லை. எங்களின் துணை அமைப்புகளான முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை, சுதந்திர தொழிலாளர் யூனியன் போன்றவற்றிலும் இந்த பெயரில் எந்த நிர்வாகியும் இல்லை. ஒரு முஸ்லிம் இவ்வாறு செய்யலாமா, கூடாதா என்ற நிலையை உருவாக்க பார்க்கிறார்கள். ஆனால், ஏற்கெனவே தமிழக முஸ்லிம்கள் திராவிடக் கட்சிகளுக்குப் பிரிந்து தான் ஓட்டளிக்கின்றனர், ஆனால் பலன்களை மட்டும் அனுபவித்து வருகின்றனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை பயன்படுத்தியது உண்மையாக இருக்குமே யானால் அது பாரதீய ஜனதா கட்சி தலைமையை ஏமாற்றுவதற்காக செய்யப்பட்ட திட்ட மிட்ட மோசடி செயலேயாகும்.kather01 (1)

 இது  போன்ற  காரியங்களுக்கு  இந்திய  யூனியன்  முஸ்லிம்  லீக்  பெயரை  மோசடியாக  பயன்  படுத்துவோர் மீது  சட்டநடவடிக்கை  எடுக்கப்படும்: மதசார்பற்ற, சமூக நீதியை நிலைநாட்டும் ஜனநாய சக்திகளே நாட்டை ஆளும் வகையில் நாடாளுமன்ற தேர்தலில் அவர்களை ஒருங்கிணைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளது. ஒட்டு மொத்த தமிழக முஸ்லிம் சமுதாயமும் இத்தேர்தலில்

ஒருமுக முடிவெடுக்க வலியுறுத்தும் வகையில் எதிர் வரும் 28 – ம் தேதி திருச்சியில் மாபெரும் மாநாட்டையும், இளம்பிறை எழுச்சி பேரணியையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்துகிறது. அதில் பள்ளிவாசலை மையமாகக் கொண்ட 12 ஆயிரம் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள், உலமா பெருமக்கள் பல்லாயிரக் கணக்கில் கலந்து கொள்கின்றனர். ஒட்டு மொத்தமாக முஸ்லிம்கள் இவ்வாறு ஜமாத் போன்ற முறையில் தீர்மானம் செய்யலாம், ஆனால், எப்படி இந்தியக் கட்சிகளில் முஸ்லிம்கள் பிரிந்து கிடக்கின்றனரோ, அதே போல, தமிழக முஸ்லிம்களும் தங்களது விருப்பங்களுக்கு ஏற்ப அரசியல் கட்சியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். திராவிடக்கட்சிகளை ஆதரிக்கும் போது, அவ்வாறுதான் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் பா...,விற்கு முஸ்லிம் சமுதாயம் ஆதரவளிக்கும் என்று வெளிவரும் செய்தி பகல் கனவேயாகும். இதுபோன்ற காரியங்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரை மோசடியாக பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் படும்.” இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.

IUML General secretary Iqbalசையது  இக்பால், இந்திய  தவ்ஹித்  ஜமாத்  பொது  செயலாளரின்  கடுமையான  தாக்கு[10]: ஆள் கிடைக்கமால் அனாதை ஒருவனை பிடித்து மாமா மணியன் செய்த மாமா வேலை தான் இந்த பிஜே பி உடன் சேருந்த முஸ்லிம் கட்சி நாடகம் இந்திய தவ்ஹித் ஜமாத் பொது செயலாளர் இக்பால் சத்தியம் தொலைக்காட்சியில் பரபரப்பு பேச்சு:

சத்தியம்டிவி: இப்படி முஸ்லிம் கட்சி பிஜேபி க்கு ஆதரவை கொடுத்ததை நீங்கள் எப்படி பார்க்கிரிர்கள் ஆனால் உங்கள் முஸ்லிம் அமைப்புகளின் வெப் சைட்டுகள் எல்லாம் தேடி விட்டோம் இப்படி ஒரு இயக்க பெயரை இல்லையே !!! சையதுஇக்பால்அவர்கள்: நான் நீண்ட அரசியல் வரலாற்றை நான் படித்தவன் .பயணித்தவன் என்ற முறையில் தமிழ் நாட்டில் இதுவரை இப்படி ஒரு முஸ்லிம் அமைப்பு பெயரைவோ? இப்படி அயோக்கிய நபரையோ? பார்த்தது இல்லை. மாறாக கந்தியாவதி போல் தன்னை காட்டி கொண்டு பிஜேபிக்கு ஆள் பிடிக்கும் புரோக்கராக மாறியுள்ள மணியன்! தமிழ் நாடு முழுவதும் சுற்றி பார்த்தார் யாருமே பிஜேபிக்கு ஆதரவு அளிப்பது போல் இல்லை. அதனால் ஒரு முஸ்லிம் பெயர் தாங்கி வேண்டும் என்று அநாதை ஒருவரை பிடித்து வந்து முஸ்லிம் இயக்கம் ஆதரவு என்று இப்படி ஈன வேலையே பார்த்து உள்ளார்.

நரபலி  மோடியால்  அல்லாஹ்வை  உண்மையாக  வணங்ககூடிய  உண்மையான  முஸ்லிம்களை  ஆதரவு  என்ற  வலையில்  வீழ்த்த   முடியாது: அவரால் இல்லை நரபலி மோடியால் அல்லாஹ்வை உண்மையாக வணங்க கூடிய உண்மையான முஸ்லிம்களை ஆதரவு என்ற வலையில் வீழ்த்த முடியாது. அப்படி ஒரு முஸ்லிமும் ஆதரவு தர மாட்டான். உதாரணதுக்கு ததஜ என்ற அமைப்பில் உள்ள ஒரு நிருவாகி 10 %

இட ஒதிக்கீடு அளித்தால் பிஜேபிக்கு ஆதரவு அளிப்போம் என்று அறிவிப்பு செய்தற்கு முஸ்லிம் சமுதயாத்தில் இருந்து பெரிய கண்டனங்கள் எழுந்தன. அதனால், நாங்கள் பாராளமன்றத்தில் இன்ஷா அல்லாஹ் யாரை அமரவைப்பது என்பதை விட யாரை அமர விடகூடாது என்ற விசயத்தில் தெளிவாக இருக்கிறோம். முஸ்லிம் லீக் தலைவர் எங்கள் அமைப்புக்க களங்கம் விளைவித்து விட்டதாக அந்த அயோக்கியன் சதக்கத்துல்லாவை சொல்லி உள்ளார் நாங்கள் சொல்லுகிறோம். ஆக, பேரம் பேசி பாஜகவுடன் கூட்டு சேர முஸ்லிம்கள் தயாராக உள்ளார்கள் என்பது நிதர்சனமாகத்தான் உள்ளது. ஆகவே, யாரை பிரதம மந்திரியாக்க வேண்டும் என்ற சக்தியே எங்களிடம் தான் உள்ளது என்று ஆணவத்துடன் இப்படி பேசுவது, மற்ற இந்தியர்களும் கவனிக்கத்தான் செய்வார்கள். கடவுளின் பெயரால், ஆளுக்கு ஆள் ௐஇளம்பி விட்டால், செக்யூலரிஸ நாட்டில், மற்றவர்கள் ஒன்றும் செய்ய முடியாதே!

அவன் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் களங்க படுத்தும் வேலையே மணியன் செய்ய தொடங்கி உள்ளார் அதுவும் இல்லாமல், இந்த நாடகம் எப்படி மோடி குல்லாவும் புர்க்காவும் விலைக்கு வாங்கி கூட்டத்தை கூட்டி முஸ்லிம்கள் ஆதரவு நாடகத்தை நடத்தினாரோ அதன் தொடர்ச்சி இது அந்த அயோக்கியனை ஒரு போதும் பிரதமராக முஸ்லிம்கள் வர விட மாட்டோம்”, என்று கடுமையாக பதில் அளித்துள்ளார்[11].

வேதபிரகாஷ்

© 17-12-2013


[3] தினமணி,பாஜககூட்டணியில்முஸ்லிம்முன்னேற்றக்கழகம், By dn, சென்னை, First Published : 14 December 2013 03:29 AM IST

[6] மாலைமலர், தமிழ்நாட்டில்முதல்முறையாகபா.ஜனதாகூட்டணியில்முஸ்லிம்கட்சி: பொன். ராதாகிருஷ்ணன்முன்னிலையில்சேர்ந்தது, பதிவு செய்த நாள்: சனிக்கிழமை, டிசம்பர் 14, 10:21 AM IST.

[9] முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ், முஸ்லிம்லீக்பெயரைக்களங்கப்படுத்துவோர்மீதுசட்டநடவடிக்கை: எச்சரிக்கை!, 16-12-2013, 2:16 PM