Posted tagged ‘தன்யா’

காதலிக்க மறுத்த இளம்பெண்களை கொலை செய்தால், நோக்கம் காதல் இல்லை – “ஜில்டெட் லவ்” என்று கேவலப்படுத்த வேண்டாம், ஜிஹாதி கொலையை செக்யூலரிஸமாக்க வேண்டாம்!

செப்ரெம்பர் 15, 2016

காதலிக்க மறுத்த இளம்பெண்களை கொலை செய்தால், நோக்கம் காதல் இல்லை – “ஜில்டெட் லவ்” என்று கேவலப்படுத்த வேண்டாம், ஜிஹாதி கொலையை செக்யூலரிஸமாக்க வேண்டாம்!

love-me-or-else-i-kill-you-jilted

ஜில்டெட் ஆளா, கொலைகரனா? ஆங்கில ஊடகங்களின் உணர்ச்சியற்றத் தன்மை: காதல் எப்படி என்று ஆங்கில ஊடகங்கள் கிண்டலாக விமர்சித்திருப்பது திகைப்பாக இருக்கிறது. இது தமிழகத்தில் நடந்துள்ள நான்காவது “ஜில்டெட்”[1], அதாவது காதலில் விடப்பட்ட கொலையாகும், “This is the fourth such brutal killing by jilted lovers in Tamil Nadu in the last four months” – என்று மலையாள மனோரமா குறிப்பிட்டுள்ளது[2].  இதையே மற்ற ஆங்கில ஊடகங்களும் பின்பற்றியுள்ளன[3]. “இந்தியா டுடே” போன்ற பத்திரிக்கைக் கூட அவ்வாறு வெளியிட்டுருப்பது[4], லவ்-ஜிஹாதை மறைக்கும் போக்காகவே தெர்கிறது. இது காதலே இல்லை, பிறகு எங்கு காதலி திடீரென்று, காதலை உதறப் போகிறாள்?  ஒருதலைகாதல் என்பது முதலில் காதல் என்று வர்ணிப்பதே கொடூரமாகும். அதனை காதலி விட்டுவிட்டாள், உதறிவிட்டாள் [to reject or cast aside (a lover or sweetheart), especially abruptly or unfeelingly] என்றெல்லாம் குறிப்பிடுவது கேவலமாகும்[5]. நாஜுக்காக அப்படி சொன்னாலும், இது வவ்-ஜிஹாதில் உருவாக்கப்பட்ட ஜிஹாதி கொலைதான். ஒருதலை காதல் எல்லாம் “ஜில்டெட்” ஆகிவிடாது[6], ஏனெனில், இது திட்டமிட்டு செய்த கொலை. உண்மையில் “ஜிஹாதி கொலை” ஆகும். கொலை செய்யப்பட்டிருப்பதைக் கூட கண்டிக்காமல், உணர்ச்சியற்றத் தன்மையில், இவ்வாறு செய்தியை வெளியிட்டிருப்பதை என்னவென்று சொல்வது என்றே தெரியவில்லை.

love-me-or-else-i-kill-you-jilted-love

லவ்-ஜிஹாத் கொலைகளை செக்யூலரிஸமாக்கக் கூடாது: குரூர காதல் கொலைகளில் கூட செக்யூலரிஸத்தை ஊடகங்கள் நுழைக்க முயற்சிக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. கிருத்துவப் பெண்கள் “லவ்-ஜிஹாதில்” சிக்கிக் கொண்டபோது, மலையாள மனோரமா வக்காலத்து வாங்கியது. ஆனால், இப்பொழுது, ஒரு இந்து இளம்பெண் கொலைசெய்யப் பட்டிருந்தாலும் “ஜில்டெட்” என்று நக்கல் அடிக்கிறது. காதலிக்க மறுத்ததற்காக பெண்களை கயவர்கள் கொலை செய்கிறார்கள் என்றால், அவர்களின் நோக்கம் காதல் இல்லை என்று மெத்தப் படித்த இந்த ஊடகக் காரர்களுக்குத் தெரியாதா என்ன? பிறகு ஏன் இத்தகைய போக்கை கடைப் பிடுஇக்கின்றன. ஜிஹாதி கொலைகளை செக்யூலரிஸமாக்க முயல்வது, கொலைக்காரர்களுக்கு ஒத்துழைப்பது மற்றும் கொலை செய்வதற்கு சமானம் என்றே சொல்லலாம்.

love-me-or-else-i-kill-you-jilted-love-blood

பாமக ராம்தாஸின் அறிக்கை பொறுப்புள்ளதாக இருக்கிறது: மனித நேயத்திற்கு எதிரான இந்த மிருகச் செயல் கண்டிக்கத்தக்கது. தன்யாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருதலைக் காதல் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது[7]: “கோவை மாவட்டம் அன்னூர் தென்னம்பாளையத்தைச் சேர்ந்த தன்யா என்ற இளம் பெண் அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு பக்கத்து வீட்டில் வாழ்ந்து வந்த ஜாகீர் என்ற இளைஞர் காதல் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக  பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்து வந்த நிலையில், ஜாகீரை தன்யாவின் பெற்றோர் பலமுறை கண்டித்துள்ளனர். அத்துடன் தன்யாவுக்கு திருமண ஏற்பாடுகளையும் செய்தனர். கடந்த 10 நாட்களுக்கு தன்யாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் விரைவில் திருமணம் நடைபெறவிருந்தது. இந்த நிலையில் நேற்று தன்யா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ஜாகீர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தன்யாவை சரமாரியாக கத்தியால் படுகொலை செய்திருக்கிறான்.

love-me-or-else-i-kill-you

ஒருதலைக் காதல் தறுதலைகளின் வெறிச் செயல்களால் ஏற்படும் பாதிப்புகளை உணர வேண்டும்: தன்யாவுக்கு நடந்த கொடுமையை என்ன தான் வார்த்தைகளில் வர்ணித்தாலும் அதன் முழுமையான தீவிரத்தை உணர வைக்க முடியாது. பெற்றெடுத்து ஆசை ஆசையாய் வளர்த்து, படிக்க வைத்து, பணிக்கு அனுப்பி, திருமணம் நிச்சயித்து மகளின் எதிர்காலம் குறித்த கனவுகளுடன் திருமண ஏற்பாடுகளில் ஈடுபட்டு வந்த தன்யாவின் பெற்றோருக்கு இந்த கொலை எத்தகைய அதிர்ச்சியையும், வலியையும் தந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பார்ப்பதன் மூலம் தான், ஒருதலைக் காதல் தறுதலைகளின் வெறிச் செயல்களால் ஏற்படும் பாதிப்புகளின் முழுமையான பரிமாணத்தை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d

காதலிக்க மறுத்ததற்காக பெண்களை கயவர்கள் கொலை செய்கிறார்கள் என்றால், அவர்களின் நோக்கம் காதல் இல்லை: தமிழ்நாட்டில் கடந்த இரண்டரை மாதங்களில் மட்டும் சென்னை சூளைமேடு பொறியாளர் சுவாதி, விழுப்புரம் வ. பாளையம் மாணவி நவீனா, கரூர் பொறியியல் கல்லூரி மாணவி சோனாலி, தூத்துக்குடி ஆசிரியை பிரான்சினா, விருத்தாசலம் பூதாமூர் செவிலியர் புஷ்பலதா கடைசியாக தன்யா என இளம் பெண்கள் ஒருதலைக் காதல் தறுதலைகளின் வெறிக்கு இரையாகி தங்கள் உயிரை இழந்திருக்கின்றனர்.  எந்த தாய்க்கும் பிள்ளைகளை கொல்ல மனம் வராது என்பது எப்படி உண்மையோ, அதேபோல் மனப்பூர்வமாகவும், உண்மையாகவும் காதலிக்கும் யாருக்கும் அன்பு வைத்தவரை கொலை செய்ய மனம் வராது என்பதும் உண்மை. ஆனால், காதலிக்க மறுத்ததற்காக பெண்களை கயவர்கள் கொலை செய்கிறார்கள் என்றால், அவர்களின் நோக்கம் காதல் இல்லை என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர்.

%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d

அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை: இத்தகைய மோசமான கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும், இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக உள்ளது. ஆனால், ஒருதலைக் காதல் என்ற பெயரில் அரங்கேற்றப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது கவலையளிக்கிறது. ஒருதலைக் காதல் தறுதலைகளால் உயிரிழந்த 6 பேரில், விருத்தாசலம் புஷ்பலதா என்பவர் மட்டும் தனசேகர் என்ற மிருகத்தால் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பாலியல் சீண்டலுக்குள்ளாக்கப்பட்டதால் ஏற்பட்ட அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். மீதமுள்ள 5 பேரும் மிகவும் கொடூரமான முறையில் வெட்டியும், உயிருடன் எரித்தும் படுகொலை செய்யப்பட்டனர். இக்கொலைகள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தின. ஆனால், அரசோ தமிழகத்தில் இத்தகைய கொடுமைகள் நடந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லை. அதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் பாலியல் சீண்டல் கொலைகள் தொடர்கின்றன.

danya-killed-by-jakir-14-09-2016

புற்றுநோயைப் போல பரவி வரும் பாலியல் சீண்டல் கொலைகள் தடுக்கப்பட வேண்டும்: தமிழகத்தில் புற்றுநோயைப் போல பரவி வரும் பாலியல் சீண்டல் கொலைகள் தடுக்கப்பட வேண்டும்.  பெண்களை பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை மற்றும் சீண்டல்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை அளிப்பதன் மூலம் தான் இதை சாதிக்க முடியும். பெண்களின் பாதுகாப்புக்காக 2013 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவித்த 13 அம்சத் திட்டத்தின் நான்காவது அம்சமாக பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.  பெண்களை பின்தொடர்ந்து சென்று தொல்லை தருபவர்களையும் இச்சட்டப்படி தண்டிக்க வேண்டும்”, என குறிப்பிட்டுள்ளார்[8].

© வேதபிரகாஷ்

15-09-2016

[1] Malayala Manorama online, Spurned youth hacks Keralite woman to death in Coimbatore, attempts suicide, Thursday 15 September 2016 05:49 PM IST, By Onmanorama Staff

[2] http://english.manoramaonline.com/news/just-in/spurned-youth-hacks-kerala-woman-death-coimbatore-murder.html

[3] India Today, Tamil Nadu: Jilted lover kills girl, attempts suicide later Pramod Madhav ,  Posted by Shruti Singh, Coimbatore, September 15, 2016 | UPDATED 10:28 IST.

[4] http://indiatoday.intoday.in/story/tamil-nadu-coimbatore-jilted-lover-kills-girl-attempts-suicide/1/764735.html

[5] The Hindusthan times, 23-year-old woman hacked to death by jilted man in Coimbatore, HT Correspondent, Hindustan Times, Chennai, Updated: Sep 15, 2016 17:42 IST.

[6] http://www.hindustantimes.com/india-news/23-year-old-woman-hacked-to-death-by-jilted-man-in-coimbatore/story-gwtfpzIcPxRtO8CAXSMYyI.html

[7] தினமணி, ஒருதலைக் காதல் என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகளை அரசு கட்டுப்படுத்த வேண்டும்: ராமதாஸ், By DIN  |   Last Updated on : 15th September 2016 12:24 PM

[8] http://www.dinamani.com/latest-news/sub-latest-news/2016/sep/15/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE-2565102.html?pm=home

திருவோணத்தன்று லவ்-ஜிஹாதி கொலை செய்த ஜாகீர்! காதலிக்க மறுத்த இளம்பெண்களை கொலை செய்தால், நோக்கம் காதல் இல்லை!!

செப்ரெம்பர் 15, 2016

திருவோணத்தன்று லவ்-ஜிஹாதி கொலை செய்த ஜாகீர்! காதலிக்க மறுத்த இளம்பெண்களை கொலை செய்தால், நோக்கம் காதல் இல்லை!!

kerala-gods-own-countryகடவுளின் சொந்த தேசத்திலிருந்து வந்தவன் கொலை செய்தது: திருவோணத்தைப் பற்றி சர்ச்சைகளைக் கிளப்பி விட்டு, குழப்பத்தை உண்டாக இக்கால நாரதர்கள், எட்டப்பன்கள், முதலியோர் தயாராக இருக்கும் போது, அந்நாளில், ஒரு முகமதியன் திட்டமிட்டே, ஒரு கேரள இளம்பெண்ணை குரூரமாக கொலை செய்துள்ளான். “கேரளா கடவுளுடைய தேசம்” [Kerala- Gods own country] என்று பெருமையாக சொல்லிக் கொள்வர், ஆனால், எந்த கடவுள் என்பதை சொல்லாதலால், கேரளாவில் ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன போலும். ஏகப்பட்ட இளம் பெண்களை காதல் என்ற பெயரில் ஏமாற்றி, திருமணம் செய்து ஐசிஸுக்கு கூட்டிச் சென்றதாக செய்திகளை வெளியிட்டனர். அரசு மாறியதும், அவை குறைந்து விட்டதால், பிரச்சினை குறைந்து விட்டதா, அல்லது கடவுள் இல்லை என்று சொல்லும் நாத்திக-கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்து விட்டதால், அவ்வாறாகி விட்டதா?

dhanya-murder-by-zakir-14-09-2016-news-cuttingகேரளாவிலிருந்து வந்து, தமிழகத்தில் குடியேறி வாந்துவந்த குடும்பம்: கோவை மாவட்டம் அன்னூர் தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் சோமு / சோமசுந்தரம் (50) டெய்லர், இவரது மனைவி சாரதா (48) பட்டுநூல் ஊழியர். இவரது மகள் தன்யா (23) பி.எஸ்.சி. தகவல் தொழில்நுட்பம் படிப்பு படித்து முடித்து விட்டு பொங்கலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். தையல்காரராக இருந்து மகளைப் படிக்க வைத்து, பட்டம் பெற செய்து வேலைக்கும் அனுப்பியுள்ளதை பாராட்ட வேண்டும். இவர்கள், கேரள மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் அன்னூர் பகுதியில் குடியேறி வசித்து வந்தனர்[1].

%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8dஜாகிர் என்பவன் வந்து சேர்ந்தது: அந்நிலையில் தான் ஜாகிர் என்பவன் வந்து சேர்ந்தான். சோமுவின் பக்கத்து வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்து, அன்னூர் ரோட்டில் உள்ள தனது சித்தப்பா பேக்கரியில் வேலை செய்து வந்தார்[2]. அப்போது தன்யா பள்ளியில் படித்து வந்தார். அப்போது தன்யாவிடம், சகீர் அடிக்கடி பேசுவது வழக்கம். பக்கத்து வீட்டை சேர்ந்தவர் என்பதால், சோமுவின் குடும்பத்தினரும் இதனை கண்டு கொள்ளவில்லை. இந்த பேச்சும், பழக்கமும், சகீரின் மனதில் ஒருதலைக் காதலாக உருவெடுத்தது. இந்த காதல் எண்ணங்களை அறிந்து கொள்ளாமல், தன்யாவும் அவருடன் பேசுவது உண்டு. ஆனால் இந்த பேச்சும், பழக்கமும் விபரீதம் ஆகிவிடக்கூடாது என்று, தன்யாவின் பெற்றோர், மகளிடம் அறிவுரை கூறினர். இதனால் தன்யாவும், பெற்றோர் சொல்லை கேட்டு, சகீரிடம் பேசுவதை நிறுத்தி கொண்டார்[3]. அதாவது, ஜாகிரின் போக்கை அறிந்து தான், தன்யா பெற்றோர் அறிவுருத்தியுள்ளனர்.

danya-killed-by-jakir-14-09-2016ஜாகிரைக் கண்டிக்காத பெற்றோரும், திரும்பிவந்த நிலையும்: ஜாகிரின் மாமா, அம்மா அல்லது வேறொருவரும் அவனைக் கண்டித்தாகத் தெரியவில்லை. ஒரு வேளை ஊக்குவித்தார்கள் போலும். இதனால், சந்தர்ப்பம் பார்த்து ஒருநாள், தன்யாவை வழிமறித்து தனது காதலை சொல்லி உள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத தன்யா, “தயவு செய்து என்னை மறந்து விடு. உன்னை பற்றிய எண்ணம் என்னிடம் துளிகூட இல்லை. நீ நினைத்தாலும், எனது பெற்றோர் இதற்கு சம்மதிக்க மாட்டார்கள். ஏனெனில் நீ வேறு மதம், நாங்கள் வேறு மதம்”, என்று கூறி விட்டு சென்று விட்டார். மாலைமலர், இப்படி சொல்ல, தமிழ்.இந்து, இப்படி கூறுகிறது, அதேபகுதியில் 3 ஆண்டுகளுக்கு முன்பு வசித்து வந்த திருப்பூரை சேர்ந்த ஜாகீர் (27) என்பவர் தன்யாவை ஒரு தலையாக காதலித்து வந்தார். ஜாகிரும் தன்யா வீட்டருகே உள்ள காம்பவுண்டில்தான் வசித்து வருகிறார். தன்யா, ஜாகிர் நட்புடன் பழகி வந்துள்ளனர். ஆனால் தன்யா ஜாகீரின் காதலை ஏற்க மறுத்து விட்டார். இது தொடர்பாக தன்யாவின் பெற்றோர் ஜாகிரின் தாயாரிடமும் பேசியுள்ளனர். இரு வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக ஜாகிரின் தாயார் கேரளா சென்றுவிட்டார்[4].

danya-killed-by-jakir-14-09-2016-ani-photo-1மார்ச்சில் திரும்ப வந்த ஜாகீர்: “இதனால் மனமுடைந்த ஜாகீர் 6 மாதங்களுக்கு முன்பு திருப்பூருக்கு பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்றார்” என்று ஊடகம் குறிப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது. இவன் ஒருதலையாக காதலித்தால், அதற்காக அடுத்தவர் எப்படி பாதிக்க முடியும்? எனினும் ஜாகீரால் தன்யாவை மறக்க முடியவில்லை. அவர் அடிக்கடி தன்யாவை பின் தொடர்ந்து சென்று தொந்தரவு கொடுத்தார். இதையறிந்த தன்யாவின் பெற்றோர் ஜாகீரை கண்டித்தனர். ஆனால், போலீஸாரிடம் ஏன் புகார் கொடுக்கவில்லை, மற்றும் ஜாகீரின் மாமா, அம்மா, உறவினர்கள், மற்றவர்கள் ஏன் கண்டிக்கவில்லை என்று தெரியவில்லை.

danya-killed-by-jakir-14-09-2016-ani-photo-2நிச்சயதார்த்தமும், ஜாகீரின் கொலைத் திட்டமும்: தன்யாவுக்கு அன்னூரை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் தினேஷ் என்பவரை திருமணம் பேசி கடந்த 10 நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்தனர். அடுத்த மாதம் இவர்களது திருமணம் நடக்க இருந்தது. இது ஜாகீருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தனக்கு கிடைக்காத தன்யாவை தீர்த்துக் கட்ட அவர் முடிவு செய்தார்[5]. 14-09-2016 அற்று ஓணம் விடுமுறை நாள் என்பதால் தன்யா வேலைக்கு செல்லவில்லை. அவர் தனது வருங்கால கணவர் தினேசுடன் வெளியே சென்று விட்டு மாலை 5 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது தன்யாவின் தந்தை சோமுவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்ததால் மனைவி சாரதாவுடன் ஆஸ்பத்திரிக்கு புறப்பட்டார். தன்யா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த ஜாகீர் வீட்டின் பின்பக்க சுவர் ஏறிக் குதித்து[6] வீட்டிற்குள் நுழைந்ததோடு பின்புற கதவை உடைத்து உள்ளே சென்றார். அவரைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த தன்யா சத்தம் போட்டார்[7]. உடனே ஜாகீர் கத்தியால் அவரை குத்தினார்[8]. இதில் தன்யாவின் தலை, கழுத்து, வயிறு, கைகளில் கத்திக்குத்து பட்டு ரத்த வெள்ளத்தில் பலியானார்[9]. உடனே ஜாகீர் தப்பி ஓடினார்[10].  நியூஸ்7 இப்படி மரியாதையோடு செய்தி வெளியிட்டுள்ளது.

%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%87%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8dதப்பி ஓடிய ஜாகிர் பாலக்காட்டில் பிடிபட்டது: ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பிய தன்யாவின் பெற்றோர் வீட்டில் மகள் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு கதறினர். போலீசார் விசாரணை நடத்திய போது வீட்டில் சாணிப்பவுடர் சிதறிக் கிடந்ததை கண்டனர். இதனால் தன்யாவை கொலை செய்த ஜாகீர் தற்கொலைக்கு முயற்சி செய்யலாம் என கருதிய போலீசார் அவரை கண்டுபிடிக்க தீவிரம் காட்டினர். சாணிப்பவுடருக்கும், தற்கொலைக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை. ஜாகீரின் சொந்த ஊர் கேரள மாநிலம் பாலக்காடு என்பதால் கேரள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்தநிலையில் 14-09-2016 அன்று இரவு 11 மணி அளவில் ஜாகீர் பாலக்காட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வி‌ஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையறிந்த அன்னூர் போலீசார் பாலக்காட்டுக்கு விரைந்து சென்று ஜாகீரை கைது செய்தனர். அங்கு ஜாகீர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் போலீசார் ஆஸ்பத்திரியில் பாதுகாப்புபணி மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே, ஜாகீரை கைது செய்யும் வரை தன்யாவின் உடலை எடுத்து செல்ல விட மாட்டோம் என கூறி அவர்களது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தன்யாவின் உடல் பிரேதபரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து செல்லப்பட்டது.

© வேதபிரகாஷ்

15-09-2016

 

[1] திஇந்து, கோவையில் ஒருதலைக் காதலால் விபரீதம்: இளம் பெண் குத்திக் கொலை; இளைஞர் தற்கொலை முயற்சி, Published: September 15, 2016 14:46 ISTUpdated: September 15, 2016 14:46 IST.

[2] மாலைமலர், வீடு புகுந்து பெண் குத்திக்கொலை: ஒரு தலை காதலால் வாலிபர் வெறிச்செயல், பதிவு: செப்டம்பர் 15, 2016 05:13.

[3] http://www.maalaimalar.com/News/TopNews/2016/09/15051338/1038943/woman-murder-near-Coimbatore.vpf

[4]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/article9110654.ece

[5] மாலைமலர், ஒருதலைக்காதலில் புதுப்பெண்ணை கொன்ற வாலிபர் கேரளாவில் கைது, பதிவு: செப்டம்பர் 15, 2016 14:06.

[6] தினகரன், கோவை அருகே ஒருதலைகாதலில் வாலிபர் வெறிச்செயல் காதலிக்க மறுத்த பட்டதாரி பெண் படுகொலை, Date: 2016-09-15@ 00:18:01.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=245675

[7] நியூஸ்7, ஒரு தலைக் காதலால் இளம்பெண்ணைக் கொலை செய்தவர் தற்கொலை முயற்சி!, September 15, 2016.

http://ns7.tv/ta/killer-attempted-committ-suicide-kerala.html

[8] http://www.maalaimalar.com/News/TopNews/2016/09/15140602/1039042/woman-killed-young-man-arrested-in-Kerala.vpf

[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=245675

[10] http://ns7.tv/ta/killer-attempted-committ-suicide-kerala.html