Posted tagged ‘தனிநபர் பிரச்சினை’

சனியான சானியா பிரச்சினை – அந்நியருக்கு என்ன இதில் விருப்பம்?

ஏப்ரல் 11, 2010

சனியான சானியா பிரச்சினை – அந்நியருக்கு என்ன இதில் விருப்பம்?

இந்திய ஊடகங்களுக்குத்தான் விவஸ்தையில்லை, தனிநபர் பிரச்சினை, படுக்கையறை ஊடல், எல்லைகள் கடந்த காதல்………………எல்லாவற்றையும் உணர்ச்சிகள் ததும்ப, உச்சிக்கு ஏறும் வகையில் விஷயங்களை அலசிவிடுகின்றன என்றால், அந்நிய ஊடகங்ளுக்கும் அரிப்புதான் போலும்.

ஆனால், இதை இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினையாக்க முயல்கின்றனர் எனத்தெரிகிறது.

பாகிஸ்தானைப் பொருத்த வரைக்கும் கேட்கவே வேண்டாம், ஏனெனில் இந்தியா ஒரு எதிரி நாடு, சண்டையில் உள்ள நாடு (தார்-உல்-ஹரப்) – அதை அழிக்க வேண்டும், ஒழிக்க வேண்டும்……எனவே ஒரு பாகிஸ்தானியன் அங்கிருந்து ஒரு பெண்ணை தூக்கிக் கொண்டு வருகிறான் என்றால் சந்தோஷம் தான். அவர்களது நாளிதழ்கள் பூரிப்புடன் எழுதி தள்ளி விடுகின்றன.

முன்பு ரீனா ராய் என்ற இந்தி நடிகை 1983ல் மோஷின்கான் என்ற கிரெக்கெட் வீரரை மணந்தபோது, இதே மாதிரியான பிரச்சினை வந்தது. ஆனால் அமைதியாக அடங்கி விட்டது. சொல்லப்போனால், நிறைய பேருக்கு அந்த விஷயமே தெரியாது.

முஸ்லீம்களுக்கு தாங்கள் முன்னர் இந்தியர்களாக இருந்தோம், இந்துக்களாக இருந்தோம், அதே கலாச்சாரம், பன்பாடு, பாரம்பரியம், நாகரிகத்தைச் சேர்ந்திருந்தோம் என்ற உண்மையை மனத்தளவில் வைத்திருந்தாலும், இத்தகைய பகை உணர்வுகளைத் தாண்டி நட்பை வளர்க்க முடியும்.

விஞ்ஞானம், தொழிற்நுட்பங்கள் பெருகும் போது, தூரங்கள் குறைகின்றன. ஒருவர் மற்றவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் ஏதுவாகிறது.

ஆகவே பிரச்சாரம், பொய்களை வளர்ப்பது, வதந்திகளை பரப்புவது,……………முதலியவை எடுபடாமல் போகும்.

ஆயிரங்காலத்து பந்தத்தை, 60-70 கால விரோதம் பாதிக்கிறது என்றால், பாகிஸ்தானியர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

அதே ஆயிரங்காலத்து பந்தத்தை, 300 வருட கால மத மாற்றம் விரோதத்தை இன்னும் ஊக்குவிக்கிறது என்றால், அதைப் பற்றி முஸ்லீம்கள் அறிய வேண்டாமா?

எதற்காக அந்நிய சதிகளின் சதிகளுக்கு நாம் துணை போக வேண்டும்?