Posted tagged ‘தண்டவாளம் தகர்ப்பு’

ஜம்மு-காஷ்மீரத்தை முன்னேற்றும் இஸ்லாமியர்கள்!

ஏப்ரல் 2, 2010
ஜம்மு-காஷ்மீரத்தை முன்னேற்றும் இஸ்லாமியர்கள்!
காஷ்மீரில் குண்டு வைத்து தண்டவாளம் தகர்ப்பு : 500 பயங்கரவாதிகள் ஊடுருவ காத்திருப்பு
ஏப்ரல் 03,2010,00:00  IST

Important incidents and happenings in and around the world

முன்னேற்றம், வளர்ச்சி-முதலியவற்றை சீரழிக்கும் ஜிஹாதித் தீவிரவாதிகள்:  2003-2004 ஆண்டுகளில் வடக்கு ரெயில்வேயின் இஞ்சினியரின் சகோதரரை புல்வாமா என்ர இடத்திலிருந்து கடத்திச் சென்றனர், பிறகு கொன்று விட்டனர்.  2005ல் நுயான் (பட்போரா Nuyan, Batpora) என்ற இடத்திற்கு அருகில் கட்டுமானப்பணிகளை காத்து நின்றிருந்த வீரர்களைக் கொன்று குவித்தனர். குறைந்தப் பட்சம் நான்கு வீரர்கள் இறந்தனராம்! [செய்தி அவ்வாறு கூறுகிறது]. பிறகு இந்தியா எதற்கு கோடிக்கணக்கில் இந்தியர்கள் கட்டும் வரிப்பணத்தை அங்கு தாராளமாகக் கொட்டி, இப்படி அழிவை, சாவுகள, கொலைகளை, குண்டு வெடிப்புகளை பதிலுக்கு வாங்க வேண்டும்? மற்ற முஸ்லீம்கள் ஏன் மௌனம் காக்கின்றனர்? அதுமட்டுமல்லாது, தென்னிந்தியாவிலிருந்தே அத்தகைய தீவிரவாதிகளை உருவாக்கி, அவர்களுக்கு பயிற்சியும் கொடுத்து அனுப்புகின்றனரே? பிறகு முஸ்லீம்களின் எண்ணம் தான் என்ன?

ஸ்ரீநகர் : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தை நேற்று முன்தினம் இரவு பயங்கரவாதிகள் குண்டு வைத்து தகர்த்தனர். இருந்தாலும், பெரிய அளவில் உயிர்சேதம் எதுவும் இல்லை.  அதே நேரத்தில், இந்திய பகுதிக்குள் ஊடுருவ, எல்லைக்கு அப்பால் 500க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் காத்திருப்பதாகவும் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.


வியாழக்கிழமை இரவு வெடிக்கப் பட்ட தண்டவாளத்தை சரி செய்வதில் ஈடுபட்ட தொழிலாளர்கள்!

வெள்ளிக்கிழமையில் குண்டு வெடிப்பது; செயற்திறன் அதிகரிக்கப்பட்ட வெடிக்கும் கருவி [Improvised Explosive Device (IED)] உபயோகப்படுத்தப் பட்டுள்ளது, இந்த குண்டு வெடிப்பில் யாரும் பாதிக்கப் படாதது………………..முதலியன அத்தகைய ஈவு-இரக்கமற்ற ஜிஹாதி அரக்கர்களின் குணாதிசயங்களை வெளிப்படுத்துகின்றன. மக்னீஸியம்-ஸ்டீல் அதாவது மக்னீஸியம் கலந்த உலோகக்கலவையால் ஆன இரும்பினால் செய்யப்பட்ட அந்த பாகம் திறமையாக அறுப்பப்பட்ட விதம் [The way the magnesium steel has been cut, it has to be a regular high explosive detonation] கைதேர்ந்த குண்டு தயாரிப்பாளர்களைக் காட்டுகிறது.

இஸ்லாம் பெயரில் பாகிஸ்தானின் அணுகுமுறை: காஷ்மீரில் தொடர்ந்து சதி வேலைகள் மற்றும் குண்டு வெடிப்புகளை நிகழ்த்த, பயங்கரவாதிகளை இந்திய பகுதிக்குள் ஊடுருவச் செய்யும் வேலையில், பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.கடந்த ஆறு நாட்களில் மட்டும், ரஜவ்ரி மாவட்டத்தில் இந்திய பகுதிக்குள் ஊடுருவிய 13 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.அத்துடன் மேலும் 500 பயங்கரவாதிகள் இந்திய பகுதிக்குள் ஊடுருவ காத்திருப்பதாக உளவு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. இதனால், 742 கி.மீ., நீளம் கொண்ட பாகிஸ்தான் எல்லைப் பகுதி முழுவதும் ராணுவத்தினர் பலத்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அழிப்பதுதான் இஸ்லாமா-அமைதியா? இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், அதாவது ஸ்ரீநகரில் இருந்து 43.6 கி.மீ., தூரத்தில் உள்ள கால்பக் அருகே, குண்டுகளை வைத்து ரயில் தண்டவாளத்தை பயங்கரவாதிகள் தகர்த்தனர். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இதில், இரண்டு அடி நீளத்திற்கு ரயில் தண்டவாளம் பெயர்ந்தது. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் ரயில் பாதை அமைக்கப்பட்டு, ரயில் போக்குவரத்து துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குண்டு வெடிப்பில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.காஷ்மீரின் சில பகுதிகளில் ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றை பார்வையிடுவதற்காக உயர் அதிகாரிகள் அங்கு செல்ல இருந்த நிலையில், இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இருந்தாலும், குண்டு வெடிப்பால் பெரிய அளவில் ரயில் பாதை பாதிக்கப்படாததால், உடனடியாக சரி செய்யப்பட்டது. நேற்று காலைக்குள் பாதை சீரமைக்கப்பட்டு ரயில் போக்குவரத்து துவங்கியது.

இது தொடர்பாக புல்வாமா மாவட்ட போலீஸ் அதிகாரி கிபாயத் ஹைதர் கூறுகையில், ”குண்டு வைத்து தண்டவாளம் தகர்க்கப்பட்டது தொடர் பான விசாரணை துவங்கிவிட்டது. வெடித்தது சாதாரண குண்டே. அதனால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. குண்டு வெடித்த இடத்திலிருந்து சில ஒயர்களைக் கைப்பற்றியுள்ளோம். இருந்தாலும், என்ன வகையான வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது தடயவியல் பரிசோதனைக்குப் பின்னரே தெரிய வரும்,” என்றார்.

வடக்கு ரயில்வேயின் பிராந்திய தலைமை மேலாளர் ஒபிந்தர் சிங் கூறுகையில், ”ரயில் தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதால், ஸ்ரீநகர் – குவாசிகுந்த் இடையே இரண்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. உடன் பாதை சீரமைக்கப்பட்டு, இன்று (நேற்று) காலை 10.05 மணிக்கு ரயில் போக்குவரத்து துவங்கிவிட்டது,” என்றார்.

ஜிஹாதிகல்/ இஸ்லாம் தீவிரவாதிகள் ஏன் தண்டவாளங்களைப் போடக்கூடாது? காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில், ஆனந்த்நாக் மற்றும் பத்காம் இடையே 2008 அக்டோபர் 11ல் ரயில் போக்குவரத்து துவங்கியது. பின்னர் இந்தப் போக்குவரத்து, 2009 பிப்ரவரி 14ல் பத்காம் மற்றும் பாரமுல்லா வரை நீட்டிக்கப்பட்டது. 2009 அக்டோபர் 28ல் ஆனந்த்நாக் முதல் குவாசிகுந்த் வரை நீட்டிக்கப்பட்டது.குவாசிகுந்த் – பாரமுல்லா, குவாசிகுந்த் – பத்காம், ஸ்ரீநகர் – பாரமுல்லா, பாரமுல்லா – பத்காம் மற்றும் ஸ்ரீநகர் – குவாசிகுந்த் இடையே தினமும் இரு முறை ஐந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன.