Posted tagged ‘தடை விதிப்பு’

வண்ணாரம்பூண்டி களத்தூர் – முஸ்லிம்கள் அங்கு இந்து மக்களின் நம்பிக்கைகளில் தலையிடுவது, தடுப்பது, கலவரத்தில் இறங்குவது ஏன்?

மே 20, 2021

வண்ணாரம்பூண்டி களத்தூர்முஸ்லிம்கள் அங்கு இந்து மக்களின் நம்பிக்கைகளில் தலையிடுவது, தடுப்பது, கலவரத்தில் இறங்குவது ஏன்?

வண்ணாரம்பூண்டி களத்தூர் கிராமத்தில் முஸ்லிம் மக்கட்தொகை அதிகமாகி, அவர்கள் இந்துக்களின் நம்பிக்கைகளுக்கு இடைஞலாக தொந்தரவுகள் செய்து நீதிமன்றத்திற்கு சென்றது: முஸ்லிம்கள் ஒரு பகுதியில், தெருவில், கிராமத்தில் அதிகமாகி விட்டால், எப்படி அவர்கள் தங்களது ஆக்கிரமிப்பு மற்றும் மற்றவர்களின் உரிமைகளை, தங்களது மத நம்பிக்கை, சிறுபான்மை, மிரட்டுதல், சண்டை போடுதல், வன்முறை, கலவரம் என்று முறைகளை, திட்டங்களை படிப்படியாக செயல்படுத்தி, அமைதியைக் குலைக்கிறார்கள் என்பதனை கவனிக்கலாம். அதே போல, வழக்குகளையும் எப்படி பல்லாண்டுகளாக இழுத்தடிக்கலாம், அரசிய ஆதரவு, கட்சி அதிகாரம், மைனாரிடி அந்தஸ்து போன்றவற்றை உபயோகப் படுத்தி இழுத்தடிக்கலாம் என்பதையும் கையாலுவதை கவனிக்கலாம். நீதிமன்றங்களும், நீதிபதிகளும், இத்தகைய வழக்குகளை விசாரிக்காமல், தள்ளி வைப்பது, கிடப்பில் போடுவது போன்றவற்றையும் காணலாம். இவற்றையெல்லாம் கவனிப்போர் யாரும் இல்லை எனலாம். இப்படித்தான் 1951, 2018 என்று நடந்து வரும் வழக்குகள் 2021 வரை இழுத்தடிக்கப் பட்டுள்ளன என்பதை அறியலாம். மத சகிப்புத் தன்மையை இழந்துவிட்டால் அது நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு நல்லதல்ல என உயா்நீதிமன்றம், இப்பொழுது, கருத்து தெரிவித்துள்ளது.

1951 முதல் 2021 வரை 70 ஆண்டுகளாக நடந்து வரு முஸ்லிம்களின் ஜனத்தொகை பெருக்கம் எதிர்ப்பு முதலியன: வண்ணாரம்பூண்டி, களத்தூர் என்பதன் சுருக்கமே வ.களத்தூர் என்பதாகும். இதனுள்ளேயே வண்ணாரம்பூண்டி, மில்லத் நகர் ஆகிவற்றையும் அடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. முதலில், சில முஸ்லிம் குடும்பங்கள் இருந்தன, ஆனால், இப்பொழுது, மக்கள் தொகையில் சம அளவில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் உள்ளனர்.பெரம்பலூா் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவில் உள்ள வி.களத்தூா் கிராமத்தில் கிழக்கு பகுதியில் முஸ்லிம்களும், மேற்கு பகுதியில் இந்துக்களும் வசித்து வருகிறார்கள், அதாவது, முஸ்லிம்கள் ஜனத்தொகை திடீரென்று அதிகமாகி-அதிகமாக்கி தான், அத்தகைய நிலையினை உருவாக்கியுள்ளனர்.  அந்நிலையில் தான், தாங்கள் வசிக்கும் தெருக்களில் ஊர்வலம் போகக் கூடாது, சாமியை எடுத்துச் செல்லக் கூடாது என்றெல்லாம் படிப்படியாக சொல்லி, ஆரம்பித்து, பிறகு கலவரத்தில் கொண்டு முடிப்பதையும் பார்க்கலாம். இந்த கிராமத்தில் லட்சுமி நாராயண பெருமாள் கோயில், செல்லியம்மன் கோயில், ராயப்பா கோயில், மாரியம்மன் கோயில் என நான்கு கோயில்கள் உள்ளன[1]. முன்னர், எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், 1950-1960 என்று ஆரம்பித்து, 1970-1980களில் மசூதி-வீடுகள் என்று பெருக்கி,, 1990-2000களில் ஊர்வலம் கூடாது என்று ஆரம்பித்தனர். இப்பொழுது, 2010-2010களில் நீதிமன்றங்களில் வழக்குகளாக மாறியுள்ளன.

 விழா சம்பிரதாயங்கள் நடத்த, 2018ல் நீதிமன்றத்திற்கு வழக்காகச் சென்ற நிலை: இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ள 96 சென்ட் புறம்போக்கு நிலத்துக்கு இரு தரப்பும் சொந்தம் கொண்டாடி வந்தனா். இந்தப் பிரச்னை 1951-ஆம் ஆண்டு முதல் தொடா்ந்து நடந்து வருகிறது. இதனால், பல நேரங்களில் இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டு இருதரப்பு மீதும் போலீஸில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவ்வழக்குகள் அப்படியே நிலுவையில் உள்ளன. இந்நிலையில், வி.களத்தூா் கிராமத்தில் கோவில் திருவிழா நடத்த அனுமதி கோரி ராமசாமி உடையார் தரப்பும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுன்னத் வல் ஜமாஅத் என்ற அமைப்பின் சார்பிலும் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, பிரதான சாலைகளில் மட்டும் ஊர்வலங்கள் நடத்த வேண்டும், மஞ்சள் நீர் தெளிக்கும் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்பன, உள்ளிட்ட நிபந்தனைகளுடன் திருவிழாவுக்கு அனுமதியளித்து 2018 டிசம்பர் மாதம் உத்தரவிட்டார்[2]. கோவில் விழாக்கள் நடத்த, இவ்வாறு நீதிமன்றங்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏன் என்று ஆராயத்தக்கது.

2018லிருந்து நிலுவையில் இருக்கும் வழக்கு 2021ல் விசாரணைக்கு வந்தது: உத்தரவை எதிர்த்து, இரு தரப்பினரும் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகளை இன்று (மே 08, 2021) விசாரித்த நீதிபதி கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, முன்பு வந்தது[3]. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு[4]: “கோவில் விழாக்களை ஒட்டி, கிராமங்களிலும், நகரங்களிலும் அனைத்து சாலைகளிலும், தெருக்களிலும் ஊர்வலங்களை ஒழுங்குபடுத்தலாமே தவிர, தடை விதிக்க முடியாது எனவும், சட்டம்ஒழுங்கு பிரச்சினை ஏதும் ஏற்படாமல் காவல் துறையினர் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் கூறி, பல ஆண்டுகளாக நடத்தப்பட்டதைப் போல ஊர்வலங்களை அனைத்து சாலைகளிலும் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டது[5]. மக்கள் மதம் சார்ந்தவா்களாகவும், ஆண்கள் சமுதாயம் சார்ந்தவா்களாகவும் இருக்கலாம். ஆனால் சாலை எப்படி சமுதாயம் சார்ந்ததாக இருக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினர்[6].

2018ல் விதிக்கப் பட்ட கட்டுப்பாடுகள், வரையறைகள்: வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 3 நாள்கள் கோவில் திருவிழா நடத்தலாம்.

  1. முதல் நாள் சாமி ஊா்வலம் பிரதான சாலையில் நடத்தப்பட வேண்டும்.
  2. ஊா்வலம் பெரியகடை வீதி, பள்ளிவாசல் தெரு, அகரம் தெரு வழியாக செல்லலாம்.
  3. அதே வழியில் திரும்ப வந்து மாரியம்மன் கோவிலில் முடிக்க வேண்டும்.
  4. 2-ஆவது நாள் ஊா்வலம் அதேபோல் நடத்தப்பட வேண்டும்[7].
  5. 3-ஆவது நாள் தெருக்களில் மஞ்சள் தண்ணீா் தெளிக்க கூடாது.
  6. உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து இருதரப்பும் மேல் முறையீடு செய்துள்ளனா். இருதரப்பும் தங்களது சடங்குகள் மற்றும் கலாசார விஷயங்களை எடுத்துரைத்துள்ளனா்[8]. மசூதி என்பது, இப்பொழுது வந்தது, ஆனால், கோவில்கள் நூறாண்டுகளாக இருந்து வருகின்றன. அவற்றீற்கு வேண்டிய ஆகம விதிமுறைகளின் படி சடங்குகள், கிரியைகள், தின-பூஜைகள், விழாக்கள், கொண்டாட்டங்கள் என்றும் நடந்து வருகின்றன.

மத சகிப்புத் தன்மையை இழந்துவிட்டால் அது நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு நல்லதல்ல: இப்பொழுது தீர்ப்பில், இவ்வாறு முக்கியமான அம்சங்கள் சொல்லப் பட்டிருக்கின்றன:

  • மத சகிப்புத் தன்மையை இழந்துவிட்டால் அது நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு நல்லதல்ல[9].
  • எந்த மதம் சார்ந்த ஊா்வலங்களும் அனைத்து சாலைகள், தெருக்கள் வழியாக எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் நடத்தப்பட வேண்டும்[10].
  • மத ஊா்வலங்களை நடத்த அனைத்து பிரிவினருக்கும் அடிப்படை உரிமை உள்ளது.
  • இந்த வழக்கில் இருதரப்பினா் மீது தொடரப்பட்டுள்ள குற்ற வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெற வேண்டும்.
  • சுன்னத் வல் ஜமாஅத் வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

© வேதபிரகாஷ்

19-05-2021


[1] தமிழ்.இந்து,  மத சகிப்புத் தன்மையின்மையை அனுமதிப்பது நாட்டின் மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல: உயர் நீதிமன்றம் கருத்து,ஆர்.பாலசரவணக்குமார், Published : 08 May 2021 03:15 PM; Last Updated : 08 May 2021 03:15 PM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/668435-highcourt-opinion-on-intolerance.html

[3] தினமணி, மத சகிப்புத் தன்மையை இழந்துவிட்டால் அது நாட்டின் மத நல்லிணக்கத்துக்கு நல்லதல்ல, By DIN  |   Published on : 09th May 2021 03:35 AM.

[4]   https://www.dinamani.com/tamilnadu/2021/may/09/losing-religious-tolerance-is-not-good-for-the-religious-harmony-of-the-country-3620082.html

[5] தினத்தந்தி, கோவில், மத ஊர்வலங்களை அனைத்து இடங்களிலும் அனுமதிக்க வேண்டும்சென்னை நீதிமன்றம் உத்தரவு, பதிவு: மே 08,  2021 15:50 PM.

[6] https://www.dailythanthi.com/News/State/2021/05/08155020/Temples-and-religious-processions-should-be-allowed.vpf

[7] தினத்தந்தி, மத சகிப்புத்தன்மையின்மையை அனுமதித்தால் அது நாட்டின் மதச்சார்பின்மைக்கு நல்லதல்லசென்னை உயர்நீதிமன்றம், பதிவு : மே 08, 2021, 05:50 PM

[8] https://www.thanthitv.com/News/TamilNadu/2021/05/08175015/2374891/If-religious-intolerance-is-allowed-it-is-the-countryNot.vpf

[9] இ.டிவி.பாரத், மத சகிப்புத் தன்மையின்மையை அனுமதிப்பது நல்லதல்லஉயர் நீதிமன்றம் கருத்து, Published on: May 8, 2021, 8:24 PM IST.

[10] https://react.etvbharat.com/tamil/tamil-nadu/state/chennai/high-court-opinion-allowing-religious-intolerance-is-not-good-for-the-country-secularism/tamil-nadu20210508202416901

சுன்னத் வல் ஜமாத் – அமைப்பின் அறிக்கை, சுற்றில்………..