Posted tagged ‘தடை செய்யப்பட்ட துப்பாக்கி’

மயிலாடுதுறையில் நடப்பது என்ன, என்.ஐ.ஏ சோதனை ஏன், முஸ்லிம்கள் கைது செய்யப் படுவது ஏன், இந்தியாவை துண்டாடும் இந்திய கிலாபா கட்சி, இந்திய கிலாபா முன்னணி தேவையா? (2)

மே 11, 2022

மயிலாடுதுறையில் நடப்பது என்ன, என்.. சோதனை ஏன், முஸ்லிம்கள் கைது செய்யப் படுவது ஏன், இந்தியாவை துண்டாடும் இந்திய கிலாபா கட்சி, இந்திய கிலாபா முன்னணி  தேவையா? (2)

அக்டோபர் 2021ல் அப்துல்லா மீது குற்றப் பத்திரிக்கைத் தாக்கல்: இஸ்லாமிய தேசம் ஒன்றை இந்தியாவில் தனியாக உருவாக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் மதுரையை சேர்ந்த அப்துல்லா (என்ற) சரவணகுமார் (31), என்பவர் ஆதரவு திரட்டியதாகக் கூறப்படுகிறது[1].  இவர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக மதுரை போலீசாரால் சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு சிறப்பு போலீசாருக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. இந்த வழக்கு பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சரவணகுமார் மீது என்ஐஏ அதிகாரிகள், 5 வது செஷன்ஸ் நீதிபதி முன்பு நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்[2]. அப்துல்லா, அப்துல்லாவாகத்தான் செயல்படுகிறான், சரவணன் என்பதால், இந்தியாவை ஆதரிக்கவில்லை. மற்ற இந்துபெயர்கள் கொண்டவர்களும், தமிழகத்தில், இந்தியவிரோதிகளாகத் தான், பேசியும், எழுதியும் வருகின்றனர். பிறகு, இவ்விரு கூட்டங்களுக்கு எந்த வித்தியாசமும் இல்லை.

இஸ்லாமிய அடிப்படைவாதம் தூண்டும் துண்டு பிரசுரங்கள்:  சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததற்கான சில ஆதாரங்கள் கிடைத்து இருப்பதாக, என்.ஐ.ஏ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மயிலாடுதுறை, திருச்சி, கோவை என, பல இடங்களில் ரகசிய கூட்டங்கள் நடத்தி, துண்டு பிரசுரங்களை வழங்கி உள்ளனர். இவர்களிடம் எப்போதும் துப்பாக்கி இருக்கும். அதேபோல, ஒரு கைவிலங்கு, அதற்குரிய இரண்டு சாவிகளும் வைத்திருப்பர். காரில் மடிக்கணினி, ‘பவர் பாங்க், வீடியோ பேனா’ உள்ளிட்ட பொருட்களையும் வைத்திருப்பர். இவர்கள், பயங்கரவாத அமைப்புக்கு, சமூக வலைதளம் வாயிலாக, ஆட்களை திரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு நிதியுதவி செய்து வந்த நபர்கள் யார், அவர்கள் பின்னணி என்ன, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு நேரடி தொடர்பு உள்ளதா என்பதற்கான ஆதாரங்களை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் திரட்டி வருகின்றனர். இத்தனையும் தமிழக போலீஸாருக்குத் தெரியாமல் நடக்கின்றனவா அல்லது முஸ்லிம்கள் என்றதால், கண்டுகொள்ளாமல் இருக்கப் படுகிறதா?  

கிலாபத் இயக்கம் நடத்தும் அடிப்படைவாத முஸ்லிம்கள்: ஐ.எஸ் இயக்கத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், தஞ்சாவூரில் மூன்று பேரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் 12-02-2022 அன்று சோதனை நடத்தினர்[3]. கிலாபத் இயக்கத்தைச் சேர்ந்த மதுரை அப்துல்காதர் என்பவருக்கு ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகவும், இந்துக்கள் குறித்து சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளைப் பரப்பியதாகவும் ஓராண்டுக்கு முன்புதேசிய புலனாய்வு அமைப்பினரால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்[4]. இதேபோல, மன்னார்குடியைச் சேர்ந்த பாபா பக்ருதீன் என்பவரும் நான்கு மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கிலாபத் இயக்கத்தில் உள்ள –

  1. தஞ்சாவூர் மகர்நோன்புசாவடி கீழவாசல் தைக்கால் தெருவைச் சேர்ந்த மெக்கானிக் அப்துல்காதர் (49),
  2. அதே பகுதியை சேர்ந்த  முகமதுயா சின் (30),
  3. காவேரி நகரைச் சேர்ந்த அகமது (37)

இதனை தொடர்ந்து, தஞ்சை மகர்நோன்புசாவடியில் உள்ள அப்துல்காதர், முகமதுயாசின் மற்றும் காவேரி நகர் முகமது ஆகியோர் வீட்டுக்குள் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவாக பிரிந்து சென்றனர். ஆகியோரின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை நடத்தினர். வீட்டில் இருந்து யாரும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. வீட்டை பூட்டி சோதனை நடத்தினர்.

என்.ஐ.ஏ சோதனை எதிர்த்து ஆர்பாட்டம் செய்த முஸ்லிம்கள்: இந்த சோதனை அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கி காலை 10 மணி வரை நடைபெற்றது. அப்போது, மூன்று பேரின் செல்போன்கள், ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், பிப்.16-ல் சென்னையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் மூன்று பேரையும் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் கொடுத்துவிட்டு, புறப்பட்டுச் சென்றனர். இதற்கிடையே மகர்நோன்புசாவடியில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்[5]. ஆதாரம் இன்றி சோதனை நடந்து வருவதாகவும், அவர்கள் மூன்று பேருக்கும் தொடர்பு இல்லை என்றும் கோ‌ஷமிட்டனர். இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்[6]. அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் சோதனையும், பொதுமக்கள் ஆர்ப்பாட்டமும் நடப்பதால் பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் தஞ்சையில் பதட்டமான சூழல் நிலவுகிறது.

போலீஸாரை மிரட்டும் அளவுக்கு முஸ்லிம்களுக்கு தைரியம் கொடுப்பது எது, யார்?: இந்த அளவுக்கு முஸ்லிம்களுக்கு தைரியம் கொடுப்பது யார்? என்,ஐ,ஏ.வையே எதிர்த்து ஆர்பாட்டம் செய்வது, கேள்விகள் கேட்பது எல்லாம் எந்த அளவுக்கு மோசமானது, ஏன் ஆபத்தானது என்பதனை அறிந்து கொள்ளலாம். முஸ்லிம்கள் ஓட்டு கிடைக்கும், மறைமுகமாக வேறு பலன்கள் கிடைக்கும் என்றெல்லாம் அரசியல் கட்சிகள் செயல் படலாம். ஆனால், அவையெல்லாம் தேசவிரோதமாகத்தான் முடியும். இவ்வாறு, முஸ்லிம்களுக்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதே, ஊக்கம் கொடுப்பதற்கு சமம் ஆகும். மேலும் “தொப்புள் கொடி உறவுகள்” என்றெல்லாம் பேசும் போது, எங்களை ஒன்றும் செய முடியாது, அரசே ஆதரவாக உள்ளது என்ற தொரணையும் வரும். அதுதான், மயிலாடுதுறை போலீஸாரைப் பார்த்து அந்த முஸ்லிம்கள் திமிருடன் கேட்டது.

போலீஸார் உதவியுடன் என்.ஐ.ஏ சோதனை: முன்னதாக, அப்துல்காதர் மற்றும் முகமது யாசின் வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்துவதை கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட முஸ்லிம்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. தஞ்சாவூர் ஏடிஎஸ்பி பிருந்தா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். சோதனை முடிந்து வெளியில் வந்த என்ஐஏ அதிகாரிகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சூழ்ந்துகொண்டு, முழக்கம் எழுப்பினர். அவர்களை போலீஸார் கலைந்து போகச் செய்தனர். இதேபோல, காரைக்கால் நகராட்சி சந்தைத் திடலுக்கு எதிரே உள்ள ராவணன் நகர் பகுதியில் வசிக்கும் உணவக உரிமையாளரான அப்துல்அமீன் என்பவரின் வீட்டிலும் என்ஐஏஅதிகாரிகள் 12-02-2022 அன்று அதிகாலை 5மணி முதல் பகல் 1 மணி வரை சோதனை நடத்தினர். 

14-03-2022 அன்று, கீழ்கண்டவர்கள் மீது வழக்குத்தொடரப் பட்டது[7].

  1. பாவா பஹ்ருத்தீன் என்கின்ற மன்னார் பாவா, சம்சுதீன் மகன், வயது 41, மன்னார்குடி, தஞ்சாவூர் ( Bava Bahrudeen @ Mannai Bava s/o Samsudeen,aged 41 yrs, r/o Mannargudi, Tiruvarur District, Tamil Nad) மற்றும்
  2. ஜியாவுத்தீன் ஜாகுபார் மகன், வயது 40, கும்பகோணம், தஞ்சாவூர் ( Ziyavudeen Baqavi, s/o Jagubar, aged 40 yrs, r/o Kumbakonam, Thanjavur Dt),

இசமா சாதிக் எனப்படுகின்ற சாதிக் பாட்சா இத்தகைய தேசவிரோத நடவடிக்கைகளுடன், மனித நீதி பாசறை என்ற அமைப்பின் உறுப்பினருமாகவும் உள்ளார். அது இப்பொழுது போப்புலர் பிரென்ட் ஆப் இன்டியரேன்றழைக்கப் படுகிறது. எப்.ஐ.ஆர்,ன் படி இந்த ஐந்து நபர்களும், இஐசிஸ் சித்தாந்தத்தைப் பரப்பி, தேசவிரோதத்தை வளர்த்து வருகின்றனர். இந்தியாப் பகுதிகளைத் துண்டாடி அவற்றை இந்தியாவிலிருந்து பிரிக்க வேண்டும் அல்லது “பிரச்சினை உள்ள பகுதி” என்று அறிவிக்கப் படும் வகையில் தீவிரவாதத்தை உண்டாக்கவேண்டும் என்று,  “இந்திய கிலாபா கட்சி (Khilafah Party of India),” “இந்திய கிலாபா முன்னணி (Khilafa Front of India),” “இந்திய அறிவிஜீவி மாணவர் (Intellectual Students of India),” “இந்திய மாணவர் கட்சி (Student Party of India),” என்றெல்லாம் உருவாக்கி, செயல்பட திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

© வேதபிரகாஷ்

11-05-2022


[1] தினகரன், ஐஎஸ்ஐஎஸ் ஆதவாளர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை, 2021-10-07@ 01:03:24.

[2] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=710564

[3] தமிழ்.இந்து, 3 பேருக்கு .எஸ் உடன் தொடர்பு? – தஞ்சையில் என்ஐஏ சோதனை: முஸ்லிம்கள் போராட்டத்தால் பரபரப்பு, செய்திப்பிரிவு, Published : 13 Feb 2022 11:22 AM; Last Updated : 13 Feb 2022 11:22 AM

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/767041-nia-raid-in-tanjore-1.html

[5] மாலைமலர், தஞ்சையில் 3 பேரின் வீடுகளில் என்... அதிகாரிகள் திடீர் சோதனை, பதிவு: பிப்ரவரி 12, 2022 13:02 IST..

[6] https://www.maalaimalar.com/news/district/2022/02/12130227/3480787/Tamil-News-NIA-raid-three-houses-in-Tanjore.vpf

[7] NIA Files Charge Sheet against Two Operatives of Hizb-ut-Tahrir in Madurai Iqbal HuT case (RC-08/2021/NIA/DLI) dated 14-03-2022.

மயிலாடுதுறையில் நடப்பது என்ன? போலீஸாரை துப்பாக்கிக் காட்டி மிரட்டும் முஸிம்களுக்கு யார் தைரியம் கொடுத்தது? (1)

மே 11, 2022

மயிலாடுதுறையில் நடப்பது என்ன? போலீஸாரை துப்பாக்கிக் காட்டி மிரட்டும் முஸிம்களுக்கு யார் தைரியம் கொடுத்தது?  (1)

19-04-2022 கவர்னருக்கு கருப்புக் கொடி, கொம்புகள் எறிந்தது: 19-04-2022 அன்று தமிழக கவர்னர் மயிலாடுதுறை வந்தபோது, போலீஸார் முன்பே, திக-வகையறாக்கள் கூடி, ஆர்பாட்டம் செய்து, கொம்புகளை வீசி எறிந்தனர். அத்தகைய வன்மம் ஏன், எப்படி, எதற்காக வெளிப்படுகிறது என்பதனை ஆராய வேண்டும். தினம்-தினம் சட்டசபையிலேயே கவர்னர் தேவையில்லை என்று முதலமைச்சரே பேசுவது, மசோதாக்கள் போடுவது என்றெல்லாம் செய்து வரும் போது, மற்றவர்களுக்கும் மரியாதை இல்லாமல் போகும். ஆனால், இவையெல்லாம் பெரிய சட்டமீறல், தேசவிரோதம் ஆகும் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். கவர்னர் பாதுகாப்பு அதிகாரி, தமிழக போலீஸுக்கு நடவடிக்கை எடுக்கும் படி கடிதம் அனுப்பியுள்ளார். அந்நிகழ்ச்சி அமைதியாக மறக்கப் படுகிறது. அதே மயிலாடுதுறையில் போலீஸாரை எதிர்த்து மிரட்டும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் கைது செய்யப் பட்டுள்ளனர். இத்தகைய நிகழ்ச்சிகள் இரண்டு ஆண்டுகளாகத் தொடர்கின்றன. என்.ஐ.ஏ.வும் நடவடிக்கை எடுத்து வருகிறது. விவரங்கள் வெளியே வந்தாலும், தமிழக ஊடகங்கள் இவற்றை அமுக்கப் பார்க்கிறது. முஸ்லிம்கள் என்பதால், திமுக ஆட்சி செய்திகளில் கூட குறைவாகவே வருவது போல கவனித்துக் கொள்கிறது போலும். இத்தகைய, இஸ்லாமிய அடிப்படைவாதத்தை தமிழகத்தில் வளர்ப்பது என்ன நன்மை பயக்கும்?

மார்ச் 2022 – தமிழக முஸ்லிம் கர்நாடக நீதிபதிகளை மிரட்டுவது: ஹிஜாப் வழக்கில் கடந்த மார்ச் 15ம் தேதி தீர்ப்பு வழங்கிய கர்நாடகா உயர்நீதிமன்றம், அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே என்பதால், ஹிஜாப் அணிவதற்கான தடை உத்தரவு தொடரும் என உத்தரவிட்டது. மேலும்இது தொடர்பான பல்வேறு மனுக்களை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  இந்நிலையில் ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்சித் மற்றும் நீதிபதி ஜே எம் காசி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்தது.  மூன்று நீதிபதிகளுக்கு கொலைமிரட்டல் விடுத்து,  சமூக வலைதளங்களில் பரவிய காணொளி தொடர்பாக, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மீது விதான் சவுதா காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.  இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த ரஹமத்துல்லா என்பரை மதுரையில் இருந்து விசாரணைக்கு கர்நாடகா போலீசார் அழைத்து வந்துள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா தெரிவித்துள்ளார்[1]. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை ஒத்துழைப்பு அளித்துள்ளதாகவும், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர்  அவரை எட்டு நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது என்று அவர் கூறினார்[2]. இதனிடையே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளுக்கும் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

21-02-2022 அன்று போலீஸார் ஐந்து முஸ்லிம் இளைஞர்களை கைது செய்தது: முஸ்லிம் இளைஞர்கள் சட்டவிரோதமாக செயல்படுவது திகைப்பாக இருக்கிறது.

  1. மயிலாடுதுறை மாவட்டம், நீடூரைச் சேர்ந்தவர் சாதிக் பாஷா, 38.
  2. அதே மாவட்டத்தில் உள்ள, இலந்தனகுடியைச் சேர்ந்தவர் ஜஹபர் அலி, 58.
  3. இவர்களது கூட்டாளிகள், கோவை முகமது ஆஷிக், 29;
  4. காரைக்கால் முகமது இர்பான், 22;
  5. சென்னை அயனாவரம் ரஹ்மத், 29.

இவர்கள், தமிழகத்தில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, பிப்., 21 காலை 11:00 மணியளவில், மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே, சாதிக் பாஷா மற்றும் அவரது கூட்டாளிகள் சென்ற, ‘ஸ்கார்பியோ’ கறுப்பு நிற காரை, போலீசார் மடக்கினர்[3].  அப்போது, போலீசாரிடம் துப்பாக்கியை காட்டி, அவர்கள் மிரட்டினர்[4]. துப்பாக்கி நீட்டி மிரட்டும் அளவுக்கு அவர்களுக்கு எப்படி தைரியம் கிடைக்கிறது, தயாரானார்கள் என்ற கேள்வி எழுகின்றது. முதலமைச்சருக்கு இவையெல்லாம் தெரியாதா, எப்படி அமைதியாக இருக்கிறார் என்று தெரியவில்லை. பின், ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு பின்னணியில் பயங்கரவாத அமைப்பு இருப்பது பற்றி, மத்திய புலனாய்வு அமைப்பான, ஐ.பி., சார்பில், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ரகசிய தகவல் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில், தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அப்படியென்றால், அதன் தீவிரத்தை நன்றாக அறிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு வன்மத்தை வளர்த்து விட்டது மாநில அரசும், சித்தாந்தமும், தினம்-தினம் மத்திய அரசுக்கு எதிராக பேசி வரும் பேச்சுகளும் காரணம் என்று புரிந்து கொள்ளலாம்.

துப்பாக்கிக் காட்டி போலீஸாரை மிரட்ட தைரியம் எப்படி வந்தது?: தமிழகம் காஷ்மீர் ஆகும் என்றெல்லாம் பேசுவது, அயல்நாட்டில் முஸ்லிம்கள் பாதிப்பு என்றால் இங்கு ஆர்பாட்டம் செய்வது, அந்நிய தேசவிரோத இயக்கங்களுக்கு ஆதரவாக பேசுவது-எழுதுவது-பிரச்சாரம் செய்வது என்றெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன. இவற்றை தீவிரவாதம், அடிப்படைவாதம், தேசவிரோதம்  என்றெல்லாம் பார்க்காமல், அதெல்லாம் முஸ்லிம்கள் பிரச்சினை, யாரும் தலையிடக் கூடாது, தலையிட்டால், விமர்சித்தால் மிரட்டப் படுவார்கள், தாக்கப் படுவார்கள் போன்ற மனோபாவத்தை உண்டாக்குவது தான், போலீஸாரை துப்பாக்கிக் காட்டி மிரட்டியது.

முகமது ஆசிக் கைது 27-02-2021: மயிலாடுதுறை அருகே ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்பில் இருந்த கோவை இளைஞரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்[5].. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 7 இளைஞர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைமை ஏற்றுக்கொண்டு குழுவாக செயல்பட்டு வந்தனர்[6]. இவர்கள் கோவையை சேர்ந்த இந்து மத தலைவர்களை கொலை செய்வதற்காக சதி திட்டம் தீட்டி வந்தனர்[7]. இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கடந்த 2010ஆம் ஆண்டு 7 பேரையும், என்ஐஏ அதிகாரிகள் கைதுசெய்த நிலையில், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்[8]. இந்த வழக்கு, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கில் முதல் குற்றவாளியான முகமது ஆசிக் என்பவர் பிணையில் வெளியானது[9] முதல் தலைமறைவாக இருந்து வந்தார். வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கலான நிலையில் விசாரணைக்கு ஆஜராகும்படி நீதிமன்றம் ஆசிக்கிற்கு சம்மன் அனுப்பி இருந்தது[10]. எனினும் அவர் விசாரணை ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம் நீடுரில் கோழிக்கடையில் பதுங்கியிருந்த ஆசிக்கை 27-02-2021 அன்று நள்ளிரவு என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து, அவர் விசாரணைக்காக சென்னை அழைத்துச் சென்றனர்.

© வேதபிரகாஷ்

11-05-2022


[1] மாலைமலர், ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல்தமிழகத்தை சேர்ந்தவர் கைது, பதிவு: மார்ச் 23, 2022 06:07 IST; மாற்றம்: மார்ச் 24, 2022 01:27 IST.

[2] https://www.maalaimalar.com/news/national/2022/03/23060702/3604832/A-man-from-Tamil-Nadu-who-had-allegedly-issued-death.vpf

[3] தினமலர், .எஸ்., ஆதரவாளர்களுக்கு நிதியுதவி: பின்னணியை விசாரிக்கிறது என்..., Updated : மே 11, 2022  09:01 |  Added : மே 11, 2022  09:00

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=3027224

[5] டாப்.தமிழ்.நியூஸ், மயிலாடுதுறை அருகே .எஸ்..எஸ் வழக்கில் தொடர்புடைய இளைஞர் கைதுஎன்.. அதிகாரிகள் நடவடிக்கை!,  By NEWSDESK Fri, 28 May 2021 2:22:36 PM.

[6]https://www.toptamilnews.com/districts/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/youth-arrested-in-connection-with-isis-case-near/cid4926959.htm

தினமணி, .எஸ். அமைப்புடன் தொடா்புஜாமீனில் வெளிவந்து தலைமறைவானஇளைஞா் மயிலாடுதுறை அருகே கைது, By DIN  |   Published On : 28th May 2021 11:13 PM  |   Last Updated : 28th May 2021 11:13 PM

[7] தினமணி, .எஸ். அமைப்புடன் தொடா்புஜாமீனில் வெளிவந்து தலைமறைவானஇளைஞா் மயிலாடுதுறை அருகே கைது, By DIN  |   Published On : 28th May 2021 11:13 PM  |   Last Updated : 28th May 2021 11:13 PM

[8] https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/2021/may/28/the-youth-who-came-out-on-bail-in-connection-with-the-organization-was-arrested-near-mayiladuthurai-3631508.html

[9] இ.டிவி.பாரத், தலைமறைவு குற்றவாளி கைதுதேசிய புலனாய்வு முகமை அதிரடி, Published on: May 28, 2021, 3:31 PM IST

[10] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/nagapattinam/the-culprit-involved-in-the-isis-case-has-been-arrested/tamil-nadu20210528153155208

இந்திய முஜாஹித்தீன் தயாராம் – காமன்வெல்த் போட்டிகளுக்கு!

செப்ரெம்பர் 20, 2010

இந்திய முஜாஹித்தீன் தயாராம் – காமன்வெல்த் போட்டிகளுக்கு!

காஷ்மீர் தீவிரவாதிகள் மற்றும் இந்திய முஜாஹித்தீன் தொடர்பு: கடந்த காலத்தைய காஷ்மீர் மற்றும் இஸ்லாமிய-ஜிஹாதி தீவிரவாதத்தைக் கூர்ந்து கவனித்து வந்தால், முதலில், காஷ்மீரத்தில் கலாட்டா செய்து, உலகக் கவனத்தை ஈர்த்து, பிறகு, குண்டுகளை, இந்திய நகரங்களில் வெடிக்க வைக்கிறார்கள். அத்தகைய குண்டுவெடிப்புகளுக்கு முன்பு, ஈ-மெயில் மூலம் இந்த “இந்திய முஜாஹித்தீன்” பெயரில் செய்தி அனுப்புகிறார்கள். அத்தகைய ஈ-மெயில்கள் குறிப்பிட்ட டிவி-செனல்களுக்குத் தான் அனுப்புகிறார்கள். இப்பொழுதும், அதே மாதிரியான[1] ஈ-மெயில் வந்துள்ளது[2]:

“In the name of Allah……………….”“ The jihad is waged against the kafirs of India……………..”

“We know that preparations for the Games are at their peak. Beware! We too are preparing in full swing for a great surprise! The participants will be solely responsible for the outcome as our bands of Mujahideen love death more than you love life,” (i.e, they like jihad only)

“We dedicate this attack of retribution to martyrs Shaheed Atif Amin and Shaheed Muhammad Sajid, who proudly laid down their lives valiantly fighting..,” (referring to the Batla House encounter in South Delhi on this day in September 2008),

“Since July, the Paradise on earth, “Kashmir”, is being soaked with the blood of its sons.” (referring to the unrest in Jammu and Kashmir).

இந்த அமைப்பு செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள இ மெயிலில், ‘

“அல்லாவின் திருப்பெயரால் உரைக்கின்றோம்…………………………

“இந்தியாவிற்கு எதிரான ஜிஹாத் தொடங்கிவிட்டது………….

“உங்களுக்கு (மத்திய அரசு) துணிவிருந்தால் காமன்வெல்த் போட்டிகளை நடத்திப் பாருங்கள். ஜாக்கிரதை. எங்களுக்கு உங்களுடைய உயிரைவிட முஜாஹித்தீன் போன்ற பயங்கரவாதத்தைத் தான் நாங்கள் விரும்புகிறோம்.

“போட்டிக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்பதை அறிவோம். தாக்குதல் நடத்த நாங்களும் எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். அதையும் எதிர்கொள்ளத் தயாராக இருங்கள். எங்கள் எச்சரிக்கையும் மீறி போட்டிகளில் கலந்து கொண்டால் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று கூறியுள்ளனர்.

“மேலும் 2008ம் ஆண்டு டெல்லி பாட்லா ஹவுஸில் போலீஸாரால் கொல்லப்பட்ட ஷஹீதுகளான அமீன், ஷாகித் ஆகியோருக்கு இப்போதையத் தாக்குதல் சமர்ப்பணம் செய்யப்படுகிறது ……………………..

“ஜூலையிலிருந்து, பூலோக சொர்க்கமான காஷ்மீரம், எங்களது சகோதர்களின் ரத்தத்தால் நனைந்துள்ளத்து………………………..

“அங்கு ராணுவம் நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது……………………………………………………..

“…………………..கோழைகளே,……………………

“முடிந்தால் எதிர் கொள்ளுங்கள்…………………………..”

ஆகவே, அவர்களே, தங்களது தொடர்பை வெளிப்படுத்தி விட்டார்கள். இதனால் தான், மறைந்திருக்கும் இந்திய விரோதி ஜிலானி, தைரியமாக வெளியே வந்து அரசிற்கு சவால் விடுகிறான். இந்தியா, குறிப்பாக, இப்பொழுதுள்ள அரசு, எப்படி ஜிஹாதி-தீவிரவாதத்தை “இந்திய முஜாஹித்தீன்” பயங்கரவாதத்தை எதிர்கொள்கிறது என்று பார்ப்போம்!

இவர்களுக்கு அங்கு லட்சக் கணக்கில் இந்துக்கள் கொன்று குவிக்கப்பட்டது தெரிவதில்லை……….

இந்துக்களின் தாயார்கள் ரத்தம், கண்ணீர் சிந்தியது தெரியவில்லை……………………..

அவர்களின் உயிப்பலிகள் நினைவில்லை………………………….

அவர்களின் ரத்தம் அதிகமாகவே 300 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு ஊறிக் கிடப்பது அறியவில்லை…………………..

சாவு சாவைத்தான் அழைக்கும், சாவு சாவோடுத்தான் வரும், சாவு சாவோடுத்தான் முடியும், இதுதான் இறப்பின் தத்துவம்……………அதாவது தீவிரவாதத்தின் -பயங்கரவாதத்தின்-ஜிஹாதித்துவத்தின் விளைவாக இருக்கும்………..

அடையாளம் தெரியாதபடி கோட், ஹெல்மெட் அணிந்தது: அடையாளம் தெரியாத இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டதில் இரண்டு அந்நிய சுற்றுப்பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. ஒருவருக்கு குண்டு வயிற்றில் பாய்ந்தது, மற்றவருக்கு தலையில் குண்டு உரசிக்கொண்டு சென்றது. டில்லியில் விரைவில் காமன்வெல்த் போட்டிகள் துவங்கவுள்ளதையடுத்து, டில்லியில் அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த ஜும்மா மசூதியின் மூன்றாவது நுழைவாயில் அருகே, சுற்றுலா வாகனம் ஒன்று நேற்று நிறுத்தப் பட்டிருந்தது. அதில், வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் இருந்தனர். காலை 11.30 மணியளவில் அந்த பகுதிக்கு, மோட்டார் சைக்கிளில் இரு மர்ம நபர்கள் வந்தனர். துப்பாக்கியை எடுத்து, அந்த சுற்றுலா வாகனத்தை நோக்கி சரமாரியாக சுட்டனர். ஏழு முதல் எட்டு ரவுண்ட் வரை அவர்கள் சுட்டதாகக் கூறப்படுகிறது[3]. பின்னர், மோட்டார் சைக்கிளில் ஏறி, அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில், சுற்றுலா வாகனத்தில் இருந்த தைவான் நாட்டைச் சேர்ந்த இருவர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மர்ம நபர்கள் தப்பி ஓடிய பின், அந்த இடத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்[4]. ஜமா மசூதி அருகில் இந்த நிகழ்ச்சி ஏற்பட்டதால், போலீஸார் அதிக பாதுகாப்பு நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

தடை செய்யப்பட்ட ரகத்தைச் சேர்ந்த துப்பாக்கியால் சுடப்பட்டது: மர்ம நபர்கள் தங்களிடமிருந்து 0.38 ரக துப்பாக்கியால் பல ரவுண்டு சுட்டுள்ளனர். இது தடை செய்யப்பட்ட ரகத்தைச் சேர்ந்தது. இலக்கே இல்லாமல் சரமாரியாக சுட்டனர். இருவரும் ஹெல்மட் மற்றும் ரெயின்கோட் அணிந்திருந்தனர். அவர்கள் யார் என்பதும், எதற்காக சுட்டனர் என்பதும் தெரியவில்லை[5]. இருவரையும் பிடிக்க டெல்லி முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற இடத்தில் நின்ற ஒரு நீல நிற மாருதி காரை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கைப்பற்றப்பட்ட கார் பாபி சர்மா என்ற நபருடையது என்றும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் காரை வேறொரு இடத்தில் பார்க் செய்ததாகவும், இங்கு கார் எப்படி வந்தது என்பது பற்றி தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார்.

மருத்துவமனை கண்காணிப்பாளர் அமித் பானர்ஜி கூறுகையில், “இந்த தாக்குதலில் தைவான் நாட்டைச் சேர்ந்த சீஸ்வெய்ன் (Ze-Weiku 27), ஜிங்லோ (Chiang Ko 38) ஆகியோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில், சீஸ்வெய்னின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. ஜிங்லோவின் அடிவயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், அவர்களின் உடல்களில் குண்டுகள் எதுவும் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றார்.

டில்லி மாநகர துணை போலீஸ் கமிஷனர் கர்னல் சிங் கூறுகையில், “துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை, அந்த பகுதியைச் சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் துரத்திச் சென்றுள்ளார். இருந்தாலும், அவர்கள் தப்பி விட்டனர். அவர்கள் பயங்கரவாதிகளா அல்லது வேறு நபர்களா என்பது குறித்து விசாரணைக்கு பின்னரே தெரிவிக்க முடியும். அவர்களை தேடும் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது’ என்றார்.

டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் கூறுகையில், “வெளிநாட்டினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, மிகவும் சோகமான சம்பவம். இதற்காக, பொதுமக்கள் பீதி அடையத் தேவையில்லை; விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவர்’ என்றார்.காமன்வெல்த் போட்டிகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன், இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், டில்லி முழுவதும் உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகம் அறிக்கை : இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக மூத்த அதிகாரி கூறுகையில், “டில்லியில் நடக்கும் சம்பவங்களை அரசு தொடர்ந்து கூர்ந்து கவனித்து வருகிறது. துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, டில்லி மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்றார்.

இந்தியன் முஜாகிதீன் கைவரிசை?இதற்கிடையே, பி.பி.சி., மற்றும் பி.டி.ஐ., செய்தி நிறுவனங்களுக்கு  இந்தியன் முஜாகிதீன் அமைப்பு சார்பில் ஒரு இ-மெயில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், “காமன்வெல்த் போட்டிகளுக்காக நீங்கள் (அரசு) தயாராகும் நேரத்தில், நாங்களும் எங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறோம். காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்பவர்கள், இதன் விளைவுகளை சந்திக்க நேரிடும். டில்லி பாட்லா ஹவுசில் நடந்த போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது”, என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது[6]. எனவே, இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் கைவரிசையாக இருக்கலாமோ என, சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், டில்லி போலீசார் இந்த இ-மெயில் தொடர்பாக தங்களுக்கு எந்த தகவலும் தெரியவில்லை என்றனர்.

டில்லிஜும்மாமசூதி – ஒரு ரகசியமான இடம்: ஜமா மசூதியும் தொல்துறை ஆதிக்கத்தில் வந்தாலும் முஸ்லீம்கள் தாம் தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாமல், யாரும் உள்ளேயோ-வெளியேயோ வர-போக முடியாது. அவர்கல் தங்களது நடவடிக்கைகளை அரசு கவனிக்கக் கூடாது என்பதால், கண்காணிப்பு கேமரா வைத்ததை எதிர்ததது. முஸ்லீம்கள் என்பதால், அரசு மெத்தனமாக விட்டுக் கொடுத்தது. ஆகையால், டில்லி ஜும்மா மசூதியில் தற்போது கண்காணிப்பு கேமரா இல்லை என்பதால், தாக்குதல் நடத்தியவர்கள் குறித்த தகவல் சேகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. மும்பையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது.



[1] Sources said the email is being traced and analysed as its language, tone and tenor are similar to earlier Indian Mujahideen mails. Read more at: http://www.ndtv.com/article/cities/jama-masjid-firing-delhi-police-probe-indian-mujahideen-link-53229?cp

[2] http://www.thehindu.com/news/national/article699301.ece

[3] “The type of weapon has not been identified the calibre is .38. It is a prohibited type.” Read more at: http://www.ndtv.com/article/cities/firing-outside-jama-masjid-2-taiwanese-tourists-injured-53244?cp

http://www.ndtv.com/article/cities/firing-outside-jama-masjid-2-taiwanese-tourists-injured-53244

[4] http://www.dinamalar.com/News_Detail.asp?Id=88317

வெளிநாட்டினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி கைவரிசை: டில்லியில் பயங்கரவாதிகள் மிரட்டல், பதிவு செய்த நாள் : செப்டம்பர் 19,2010,23:54 IST; மாற்றம் செய்த நாள் : செப்டம்பர் 20,2010,01:13 IST

[5] http://www.dinakaran.com/bannerdetail.aspx?id=15771&id1=12

[6] http://timesofindia.indiatimes.com/india/A-warning-shot-before-Games/articleshow/6588147.cms