Posted tagged ‘தடை செய்யப்பட்டுள்ள சிமி’

“மிக்க பாதுகாப்புள்ள மத்திய சிறை” எனப்படுகின்ற, போபால் மத்திய சிறையில், சட்டமீறல், சிறையுடைப்பு, கைதிகள் வெளியேற்றம் என நடந்திருப்பது பிரமிப்பாகவும், திகைப்பாகவும் இருக்கின்றது.

நவம்பர் 7, 2016

மிக்க பாதுகாப்புள்ள மத்திய சிறைஎனப்படுகின்ற, போபால் மத்திய சிறையில், சட்டமீறல், சிறையுடைப்பு, கைதிகள் வெளியேற்றம் என நடந்திருப்பது பிரமிப்பாகவும், திகைப்பாகவும் இருக்கின்றது.

iso-certified-bhopal-jailபோபால் மத்திய சிறை உள்-கண்காணிப்பு கேமராக்கள் ஸ்விட்ஸ் ஆப்செய்யப்பட்டது: போபால் மத்தியசிறை “பிளாக்.பி” [Block B] பகுதியில், சிமி தீவிரவாதிகளைக் கண்காணிக்க பொருத்தப்பட்ட உள்ளே நடக்கும் காட்சிகளை படமெடுக்கும் காமராக்கள் [CCTV cameras] அணைக்கப்பட்டிருந்தது பல கேள்விகளை எழுப்புகின்றன[1]. 50 காமராக்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது, குறிப்பிட்ட மூன்று காமராக்கள் பட்டு “ஸ்விட்ஸ் ஆப்” செய்யப்பட்டது மற்றும் கடந்த ஒருவாரமாக அந்நிலையிலேயே இருந்தது உள்-ஆட்களின் உதவியோடுதான் செய்யப் பட்டது உறுதியாகின்றது[2]. அந்த மூன்று கேமராக்களில் ஒன்று புதியதாக சமீபத்தில் தான் பொருத்தப்பட்டது. சாவிகளின் மாதிரிகளும் செய்யப்பட்டுள்ளன என்று சொல்லப்படுகிறது. இதைப்பற்றி ஊடகங்கள் கிண்டலடித்துள்ளன. ஆனால், சிறையிலிருந்து தப்பித்துள்ளது, ஒரு போலீஸ் கொலையுண்டது எல்லாம் கட்ட்டுக்கதையா என்ன? தீபாவளி நேரத்தில் நிறைய போலீஸார் விடுப்பில் சென்றிருந்தனர். அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தான், சிமி தீவிரவாதிகள் கான்ஸ்டெபிள் ரமாசங்கர் யாதவைக் கொன்று, இன்னொருவரைக் கட்டிப் போட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.

midnight-to-3-a-m-when-jail-official-rama-shankar-goes-to-check-the-barracks-the-eight-simi-members-overpower-him-and-slit-his-throat-with-a-steel-plateகண்காணிப்பு கேமரா வேலைசெய்யாத விசயத்தில் ஐந்து அதிகாரிகள் ஏற்கெனவே இடம் மாற்றம்: கண்காணிப்பு கேமரா வேலைசெய்யாத விசயத்தில் ஐந்து அதிகாரிகள் ஏற்கெனவே வேலையிலிருந்து இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்[3]. புதியதாக சுதிர் சாஹி என்றா அதிகாரி பொறுப்பேற்றுள்ளார். நந்தன் தூபே என்ற முன்னாள் டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ், இந்த கேமரா விவகாரத்தை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளார்[4]. இதில் அம்ஜத், ஜாகிர் ஹுஸைன் மற்றும் செயிக் மொஹம்மது என்ற குட்டு, ஏற்கெனவே தந்தியா பீல், கான்ட்வா மாவட்ட ஜெயிலிலிருந்து அக்டோபர்.1, 2013ல் தப்பித்தவர்கள் தாம்[5]. அதாவது அத்தகையவர் மறுபடியும் சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் போது, ஜெயில் அதிகாரிகள் எச்சரிக்கையாக இருந்து, அவர்களுக்கு எந்த உதவியும் கிடைக்கக் கூடாத அளவுக்குக் கண்காணிக்கப் பட்டிருந்திருக்க வேண்டும். ஆனால், இங்கு மெத்தனமாக இருந்ததால், அவர்கள் மறுபடியும் அத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், வெற்றியும் கண்டுள்ளனர்.

 they-take-the-keys-from-his-pocket-and-open-the-cell-they-carry-along-bed-sheets-which-they-tie-together-to-slide-down-the-prison-walls

அக்டோபர்.1, 2013 மற்றும் நவம்பர் 2016 சிறையுடைத்து வெளியேறிய முறை ஒரே மாதிரியாக உள்ளது[6]: ஸ்டீல் ஸ்பூன்கள், பாத்திரங்கள், பிளாஸ்டிக் பல் துலக்கிகள், ஸ்டீலினால் செய்யப் பட்ட நாக்கு சுத்தப்படுத்தும் தகடுகள் முதலியவற்றை, ஆயுதங்களாக மாற்றி பயன்படுத்தி, சிறை காவலாளியின் கழுத்தை அறுத்துக் கொன்று, கொடுக்கப்பட்ட, போர்வைகளை கயிறாகப் பயன்படுத்திக் கொண்டு தப்பிச் சென்றுள்ள முறை ஒரே மாதியாக உள்ளது[7]. சாவிக்கான அச்சுகள் தயாரித்துக் கொடுத்தது, போலி சாவுகள் தயாரிக்கப்பட்டது போன்றவையும் அதேபோல இருக்கின்றன. கைதிகள் முன் அனுபவத்தில் அதேபோல செயல்படுவார்கள் என்பதை எப்படி ஜெயில் அதிகாரிகள் புரிந்து கொள்ளாமல் இருந்தார்கள் என்பதும் மர்மமாகவே இருக்கின்றன. இக்காலத்தில் ஜெயில் நிர்வாகம், சிறை கைதிகளை கண்காணிப்பது, அவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது போன்றவற்றிற்கு, ஏராளமான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆகவே, அவையெல்லாம் தெரியாது என்று கூறி தப்பித்துக் கொள்ள முடியாது. ஆனால், சிறை அதிகாரிகள், கண்காணிப்பு போலீஸார், கேமரா பிரிவு ஆட்கள், மின்சார சப்ளை பொறுப்பாளர்கள் முதலியோர் மெத்தனமாக இருந்ததால் தான், அந்த சிமி பயங்கரவாதிகள், அதே முறையைப் பயன்படுத்தி, தப்பிச் சென்றுள்ளார்கள்.

they-run-towards-the-periphery-wall-where-they-find-another-jail-official-they-tie-his-hands-and-legs-and-make-good-their-escapeவெளியிலிருந்து சிமி கைதிகளுக்கு உதவியது, சிறை போலீஸார், கண்காணிப்பாளர்களை முதலியோரைகவனித்துக் கொண்டதுயார்?: இதனால், இவர்கள் கடந்த மாதங்களில் திட்டமிட்டே வேலை செய்து வந்துள்ளனர் என்று தெரிகிறது. ஆக உள்ளேயிக்கும் போலீஸார், ஜெயில் வார்டன், வேலையாட்கள் இவர்களில் யார் அவர்களுக்கு உதவியிருப்பார்கள் என்று ஆராய வேண்டியுள்ளது. மாநில உள்துறை அமைச்சர் புபேந்திர சிங், “உள்ளேயிருந்த ஆட்களின் உதவி இல்லாமல் அவர்கள் தப்பியிருக்க முடியாது…….இந்த ஜெயில் உடைப்பு மற்றும் கைதிகள் தப்பித்து சென்றவை எல்லாம் வெளியிருந்து பணவுதவியோடுதான் செய்யப்பட்டுள்ளது[8]. அவர்கள் மற்ற கைதிகளை விட அதிகமான சலுகைகளைப் பெற்று வந்துள்ளனர். அதுமட்டுமல்லாது, இத்திட்டம் இரண்டு அல்லது மூன்று மாதங்களாக தீட்டப்பட்டு வந்துள்ளது. அத்தகைய செயல் தேசத்துரோகமாகும்,” என்று கூற்றஞ்சாட்டுகிறார்[9].  அப்படியென்றால், எல்லா விளைவுகளையும் அறிந்து, துணிச்சலாக வெளியிலிருந்து சிமி கைதிகளுக்கு உதவியது, சிறை போலீஸார், கண்காணிப்பாளர்களை முதலியோரை “கவனித்துக் கொண்டது” யார் என்ற கேள்வி எழுகின்றது. மிக்க பாதுகாப்புள்ள மத்திய சிறை எனப்படுகின்ற, போபால் மத்திய சிறையில், இத்தகைய சட்டமீறல், சிறையுடைப்பு, கைதிகள் வெளியேற்றம் என நடந்திருப்பது பிரமிப்பாகவும், திகைப்பாகவும் இருக்கின்றது.

near-the-periphery-wall-they-find-some-wooden-logs-put-together-a-ladder-with-the-logs-and-the-bed-sheets-scale-the-wall-and-escapeஊடகங்களின் பாரபட்ச செய்தி வெளியீடு ஏன்?: உள்-கண்காணிப்பு கேமரா வேலைசெய்ததோ இல்லையோ, “தி இந்து” கார்ட்டூனிஸ்ட் நன்றாகவே வேலை செய்திருக்கிறார்[10]. நான்கைந்து படங்களில், சிமி-பயங்கரவாதிகள் எப்படியெல்லாம் நடந்துள்ளனர் என்று சித்தரித்துக் காட்டியுள்ளார்[11]. ஆனால், “என்கவுன்டர்” விசயத்தில் சிமி-பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, கிராமவாசிகளைப் பேட்டிக் கண்டு, அவர்கள் முரண்பாடாக நடந்ததை விவரிப்பதை, பெரிய கதையாக – செய்தியாக வெளியிட்டுள்ளது. அதேபோல, இந்த சிமி-பயங்கரவாதிகள் எப்படி அவ்வாறு ஆனார்கள் என்றும் வெளியிடலாமே? அதை செய்யாமலிருப்பதால் தான், அத்தகைய செக்யூலரிஸ ஊடகங்கள் நம்பிக்கைக்கு ஏற்றதா-இல்லையா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது. மனித உரிமைகள் ஆணையம், மதிய பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது எனும்போது, ஒரு கான்ஸ்டெபிள் கொலையுண்டது மற்றும் இன்னொரு போலீஸ் கட்டிப்போட்டது முதலியோரின் உரிமைகளைப் பற்றி ஏன் கவலைப்படுவதில்லை? தேசத்திற்கு எதிராக செயல்படும், தடை செய்யப் பட்ட இயக்கத்தினரின் கொலை செய்த விதம், குற்றங்களைத் தொடர்ந்து செய்து வரும் போக்கு, முதலியவற்றைக் கண்டு கொள்ளாமல், அவர்களை ஆதரித்து செய்திகளை வெளியிடும் போக்கு என்னவென்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

07-11-2016

the-locations-of-jailbreak-encounter-etc-illustrated

[1] Indian Express, Clues to Bhopal SIMI activist jailbreak ‘inside job’: Moulds, CCTV off, Written by Dipankar Ghose | Bhopal | Published:November 7, 2016 3:20 am

[2] http://indianexpress.com/article/india/india-news-india/bhopal-simi-activist-jailbreak-encounter-insider-job-3740874/

[3] The Hindustan Times, CCTV cameras weren’t working in Bhopal jail when SIMI prisoners escaped, Anirban Roy, Hindustan Times, Bhopal, Updated: Nov 01, 2016 16:04 IST

[4] http://www.hindustantimes.com/india-news/non-functinal-cctv-cameras-may-have-helped-simi-prisoners-escape-sources/story-gxnkltkV0kH5T8ow6zkC7K.html

[5] Amjad, Zaqir Hussain, and Sheikh Mehboob alias Guddu — were among the six who escaped from the district jail three years ago. escaped from the Tantya Bheel central jail in Khandwa district on October 1, 2013.

[6] The Hindustan Times, Bhopal jailbreak exposes security gaps in MP’s best-secured prison, Kalyan Das, Hindustan Times, Bhopal, Updated: Oct 31, 2016 21:49 IST

[7] The tactics used in both jailbreaks were almost identical. On both occasions, the SIMI men used steel spoons, utensils, toothbrushes and metallic tongue cleaners to make crude daggers to attack jail guards. One such weapon was used to slit the throat of head warder Ramashankar Yadav inside the B block of the Bhopal jail between 2am and 3am. Then again, they made a rope ladder with bed sheets — stringing pieces of wood in between for steps. The technique was used by a self-styled SIMI commander at Khandwa jail.

http://www.hindustantimes.com/india-news/bhopal-jailbreak-exposes-security-gaps-in-mp-s-best-secured-prison/story-k5gFUlt9PnTEI2wfhdbRVK.html

[8] Indian Express,  Bhopal encounter: Jailbreak not possible without insider help, says MP Home Minister, Written by Milind Ghatwai | Bhopal | Updated: November 2, 2016 12:26 pm.

[9] When contacted, Madhya Pradesh Home Minister Bhupendra Singh said it was “impossible to escape without inside collusion” and alleged that the jailbreak was facilitated by “funding from outside”. “It must have taken elaborate planning over two to three months because it is not possible to make duplicate keys so early and without help from an insider,” said Singh – Indian Express.

http://indianexpress.com/article/india/india-news-india/bhopal-encounter-simi-activists-jailbreak-not-possible-without-insider-help-says-mp-home-minister-bhupendra-singh-3733047/

[10] The Hindu, Death wish on a Bhopal night: Daring escape to nowhere, November 1, 2016.

[11] http://www.thehindu.com/todays-paper/tp-national/death-wish-on-a-bhopal-night-daring-escape-to-nowhere/article9289399.ece

8–சிமி குற்றவாளிகள் கொலை – ஸ்டீல் டம்பளர், தட்டு கத்திகளாக மாறியது எப்படி? என்கவுன்டர் வீடியோக்களை எடுத்தது யார் – எப்படி?

நவம்பர் 1, 2016

 

8–சிமி குற்றவாளிகள் கொலைஸ்டீல் டம்பளர், தட்டு கத்திகளாக மாறியது எப்படி? என்கவுன்டர் வீடியோக்களை எடுத்தது யார் – எப்படி?

people-gathered-on-hillock-where-the-smi-were-shot-dead-bodies-scatteredஊடகக்காரர்களின் பொறுப்பு முதலியனவெல்லாம் கூட தீவிரவாதிகளின் உரிமைகளைத் தான் ஆதரிக்கின்றன: இது தொடர்பாக மத்திய பிரதேச மாநில போலீஸ் ஐ.ஜி. யோகேஷ் சவுத்ரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சுட்டுக்கொல்லப்பட்ட 8 பயங்கராவதிகளிடமிருந்து துப்பாக்கிகள், மூன்று கூர்மையான கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்றார்[1].  பயங்கரவாதிகள் எந்தஒரு ஆயுதமும் வைத்திருக்கவில்லை என்று வெளியான தகவல்கள் வெளியாகியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஜெயில் காவலர் கொல்லப்பட்டது கூட அவருக்குத் தெரியவில்லை / கவலையில்லை, ஆனால், இதுபோல கேள்வி கேட்க தயாராக உள்ளார். யோகேஷ் சவுதாரி, “இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது,” என்றார்.  இதற்கிடையே என்கவுண்டர் நடத்தப்பட்ட வீடியோ என ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அப்படியென்றால், இவற்றையெல்லாம் யாரோ கவனித்துக் கொண்டிருக்கின்றனர் என்றாகிறது. அந்த அளவுக்கு யார் கவனிப்பது, வீடியோ எடுத்தது, தங்களது அடையாளங்களை மறைப்பது – இவற்றைச் செய்வது யார்?

people-gathered-on-hillock-where-the-smi-were-shot-deadஎன்கவுன்டர் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்.ஜி. யோகேஷ் சவுத்ரி: என்கவுட்னர் வீடியோக்கள் குறித்தளவை உண்மையா-இல்லையா என்பது பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்[2]. இந்த என்கவுன்டரில் 3 போலீசார் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக அவர்களை உயிருடன் பிடிக்க முயன்ற போலீசாரை பயங்கரவாதிகள் தான் துப்பாக்கியால் சுட்டனர். இதில் நடந்த என்கவுன்டரில் 8 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இல்லை அவர்களே தங்களை சுட்டுக் கொண்டனர் என்று கூட ஊடகக்காரர்கள் வாதிப்பார்கள் போலும். இது திட்டமிட்டு நடத்தப்படவில்லை. அந்த இடத்தில் நடந்த சூழ்நிலையை பொறுத்து எடுக்கப்பட்ட முடிவு. இருப்பினும் என்கவுன்டர் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும். என்றார். இந்த சிமி பயங்கரவாதிகள் தொடர்ச்சியான குற்றங்களில் ஈடுபட்டு உள்ளனர், அவர்கள் 2008, 2011-ல் போலீஸ் கான்ஸ்டபிளை கொலை செய்து உள்ளனர்[3]. பயங்கரவாதிகள் எப்படி சிறையில் இருந்து தப்பினர்கள், தப்பிய பின்னர் அவர்கள் எங்கு சென்றனர் என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் குறிப்பிட்டு உள்ளார்[4].

video-scenes-killing-simi-on-hillockஎன்கவுன்டர் வீடியோ வெளிவ்ந்தது எப்படி? யார் எடுத்தது?: என்கவுன்டர் வீடியோ பற்றி தான் இப்பொழுது ஊடக ஆராய்ச்சி அதிகமாகியுள்ளது[5]. திங்கட்கிழமை காலை 10.30 – 11.30 இடையில் இந்த சிமி-தீவிரவாதிகள் மற்றும் போலீஸார் மோதல் நடந்துள்ளது[6]. போலீஸார் எடுத்துள்ள வீடியோ தவிர மற்றவர்களும் வீடியோ எடுத்துள்ளதாக தெரிகிறது.

Ø  அப்படியென்றால், யார் எடுத்தது?

Ø  தீவிரவாதிகள் அங்குதான் இருக்கின்றனர் அல்லது போலீஸார் அங்கு வருவார்கள், இவ்வாறேல்லாம் நடக்கும், அப்பொழுது வீடியோ எடுக்க வேண்டும் என்று அவர்களுக்கு எப்படி தெரியும்?

Ø  அப்படியென்றால், “என்கவுன்டர்” பெயரில், இவர்களை சிறையிலிருந்து வெளியேற்றி, போலீஸாரை வைத்தே தீர்த்துக் கட்ட திட்டம் போட்ரது யார்?

Ø  அது யார் சார்பாக எடுக்கப்பட்டது?

Ø  போலீஸாருக்குத் தெரிந்து அல்லது தெரியாமல் எடுக்கப்பட்டதா?

Ø  அது ஊடகங்களுக்கு எப்படி கிடைத்தது?

ஊடகங்கள் எப்படி அவற்றை ஒலி-ஒளிபரப்பி விவதாங்களை உடனடியாக ஆரம்பி வைக்கலாம். உடனே தீவிரவாதிகளின் வழக்கறிஞர் அப்பிரச்சினையை எடுத்துக் கொண்டு அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கலாம்?

escaped-simi-killers-on-the-hillock-4-missingஸ்டில் டம்பளர், தட்டு கத்தியாக மாறியது, தலைமை கான்ஸ்டெபிள் கொல்லப்பட்டது எப்படி?: சிறையில் சிமி கைதிகளுக்குக் கொடுக்கப் பட்ட ஸ்டீல் டம்பளர், தட்டு முதலியன கூர்மையாக கத்திகளாக மாறியது எப்படி என்பதை யாரும் விள்ளக்குவதாக இல்லை. சிமிக்காரர்கள் அத்தகைய தொழிற்நுட்பங்களை சிறையிலேயே ஏற்படுத்டிக் கொண்டார்களா அல்லது வெள்ளியியிலிருந்து, அத்தகைய தொழிற்நுட்பங்கள் வரவழைக்கப்பட்டனவா என்றும் விவாதிக்கப்படவில்லை. சிறையிலேயே அவற்றை வளைத்து, வெட்டி, ராவி கூராக மாற்றியுள்ளனர் என்றால், எப்படி சாத்தியமாகும். பிறகு, சிறையிலேயே அவர்களுக்கு உதவ யாரோ இருக்கின்றனர் என்றாகிறது? அவர்கள் யார்? ராம்சங்கர் யாதவ் என்ற தலைமை கான்ஸ்டெபிள் தனது மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்திருந்தார்[7]. டிசம்பர் 9, 2016 அன்று திருமணம் நடக்கும் என்றும் மிகவும் சந்தோசமாக இருந்தார், ஆனால், கொலைகாரர்கள் அவரைக் கொண்டு விட்டார்கள்[8]. இவரது உரிமைகள் பற்றி யார் பேசுவார்கள், விவாதம் நடத்துவார்கள்?

5-lalhs-announced-on-the-escaped-simi-killersபொறுப்புள்ள முஸ்லிம்கள் கேள்விகளைத் தவிர்ப்பது: குண்டுவெடிப்புகள் நடந்திருப்பது, கொள்ளைகள் நடந்தது, ஜெயிலிருந்து ஆயுதங்களுடன் தப்பியோடியது, போலீஸார் கொல்லப்பட்டது, சாதாரண அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது இவையெல்லாம் பொய்யா? இவர்களது உரிமைகளைப் பற்றி யாரும் பேசமாட்டார்களா? உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரது உரிமைகள் என்னாவது? ஐசிஸில் சேரத்துடிக்கும் முஸ்லிம் இளைஞர்கள் உள்ளார்களே? அதேபோலத் தானே, இந்திய முஜாஹித்தீன் வேலை செய்து கொண்டு வருகிறது. பிறகு ஏன், எப்படி இந்திய முஸ்லிம்கள் அதனை ஆதரித்து வருகிறார்கள்? உள்ளூர் தீவிரவாதம் அதிகமாகி, பெருகிவருவது அவர்களுக்கு மகிழ்ச்சியாகவா இருக்கிறது? இன்னும் எத்தனை ஆண்டுகள் இத்தகைய குண்டுவெடுப்புகளை ஆதரித்துக் கொண்டிருப்பர்? தொடர்ந்து நடந்து வரும் இத்தகைய காரியங்களை ஏன் அவர்களது பெற்றோர்ருறவினர், மற்றோர் தடுப்பதில்லை? இவற்றையெல்லாம் விடுத்து, “சர்வதேச பயங்கரவாத அமைப்புகளால் கவரப்படாமல், இந்திய இளைஞர்கள் தங்களை தற்காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், பயங்கரவாத அமைப்புகளில் சேரும் அளவுக்கு முஸ்லிம் இளைஞர்களுக்கு அரசின் பாதுகாப்புப் படைகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. ” என்று வாதிடுவது, அத்தகையவரை ஊக்குவிப்பதாகத்தான் அமையுமே தவிர, அமைதியை உண்டாக்காது.

© வேதபிரகாஷ்

01-11-2016

escaped-simi-killers-on-the-mount-got-killed

[1] தினமலர், என்கவுன்டர் குறித்து முழுமையான விசாரணை: .பி. .ஜி.பேட்டி, பதிவு செய்த நாள்: திங்கள், அக்டோபர் 31,2016, 19:43 PM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 20:36 PM IST.

[2] http://www.dinamalar.com/news_detail.asp?id=1638739

[3] தினத்தந்தி, சிமி பயங்கரவாதிகள் கொல்லப்பட்டது போலி என்கவுண்டர் என்ற விமர்சனத்தை நிராகரித்தது போலீஸ் , பதிவு செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 9:05 PM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 9:05 PM IST.

[4] http://www.dailythanthi.com/News/India/2016/10/31210512/Police-rejects-criticism-of-fake-encounter-of-SIMI.vpf

[5] Indian Express, SIMI activists’ jailbreak: Video shows cop shooting at inmate on ground; in another, a talk of talks, Written by Milind Ghatwai | Bhopal | Updated: November 1, 2016 5:49 am

[6] http://indianexpress.com/article/india/india-news-india/bhopal-simi-activist-dead-video-jailbreak-undertrials-3731611/

[7] DNA, Bhopal jailbreak: Constable killed by SIMI activists was preparing for daughter’s wedding, Mon, 31 Oct 2016-09:45pm , PTI

[8] http://www.dnaindia.com/india/report-bhopal-jailbreak-constable-killed-by-simi-activists-was-preparing-for-daughter-s-wedding-2269076

8–சிமி குற்றவாளிகள் கொலை – தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், குரூரக் கொலைகாரர்கள், குண்டுவெடித்து அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் முதலியோரின் குற்றங்களை, பயங்கரத்தை மறைத்து உரிமைகள் பற்றி பேசுவது ஏன்?

நவம்பர் 1, 2016

8–சிமி குற்றவாளிகள் கொலைதீவிரவாதிகள், பயங்கரவாதிகள், குரூரக் கொலைகாரர்கள், குண்டுவெடித்து அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் முதலியோரின் குற்றங்களை, பயங்கரத்தை மறைத்து உரிமைகள் பற்றி பேசுவது ஏன்?

the-eights-simi-terrorists-but-got-killed-in-a-police-encounter8- சிமி பயங்கரவாதிகள் சிறையிலிருந்து தப்பி ஓட்டம்: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார் நகரில் 1977ம் ஆண்டு தோன்றிய இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு எனப்படும் ‘சிமி’ இயக்கம் [Students Islamic Movement of India (SIMI)] தீவிரவாத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் அவ்வியக்கத்தின்மீது மத்திய-மாநில அரசுகள் தடை விதித்துள்ளன. முஸ்லிம்கள் இன்றும் இவர்களை ஆதரித்து வருகிறார்கள் என்பது, அவர்களது பெற்றோர், உற்றோர், மற்றோர் மற்றும் அரசியல்வாதிகளின் அறிக்கைகள் முதலிய காட்டி வருகின்றது. அவர்கள் செய்துள்ள கொலைகள், கொள்ளைகள், குண்டுவெடுப்புகள், சிறையிலிருந்து தப்பிச் சென்றது, மறுபடியும் குற்றங்கள் செய்தது, பிடிபட்டது, சிறையில் அடைக்கப்பட்டது முதலியவற்றை மறைத்தே அவ்வாறு செய்து வருகின்றனர். இதற்கு டிவிசெனல்கள் இடம் கொடுத்து விவாதம் செய்வது தான் திகைப்பாக இருக்கிறது. தீவிரவாதத்தினால் பாதிக்கப் பட்டவர்களிடம், அவர்களுக்கு சார்பாக, அவர்களது உரிமைகளை ஆதரிப்பவர்களிடம், அவர்களின் வழக்கறிஞர்கள் முதலியோரைக் கூப்பிட்டு அத்தகைய விவாதம் நடத்துவதில்லை.

bhopal-central-jail-from-where-the-simi-terrorists-escapedசிறையில் இருக்கும், அந்த சிமிதீவிரவாதிகளின் யோக்கியதை[1]: சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் தொடந்து குற்றங்கள் செய்து வரும் இவர்களின் யோக்கியதை இதுதான்[2]:

1.       பிப்ரவரி 1, 2014 சோப்படான்டி, கரீம்நகர் மாவட்டம், ஸ்டேட் பாங்கில் ரூ 46 லட்சம் கொள்ளையடித்த வழக்கிலும் ஜாகிட் உஸைன் மற்ரும் செயிக் மஹபூப் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.

2.       மே.1, 2014 அன்று பெங்களூரு-கௌஹாத்தி எக்ஸ்பிரஸில் குண்டு வைத்து, ஒரு இளம்பெண் கொலைசெய்யப்பட்ட மற்றும் 12க்கும் மேற்பட்டவர் படுகாயம் அடைந்த வழக்கு.

இதே வழக்கில் –

1.       ஜாகிர் உஸைன் / சாதிக் / விக்கி [Zakir Hussain, alias Sadiq, alias Vicky (32)]

2.       செயிக் மஹபூப் / குட்டு [Sheikh Mehboob alias Guddu (30)]

3.       எஜாவுத்தீன் [Ejazuddin (32)]

3.       ஜூன் 2014ல் பூனாவிலுள்ள பரஸ்கானா மற்றும் விஸ்ரம்பாக் என்ற இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்தன.

4.       செப்டம்பர் 2014ல் பிஜ்னோர், உபியில் ஒரு தற்செயலாக நடந்த குண்டுவெடிப்பு. அப்பொழுது மெஹ்பூப் குட்டுவின் தாய் நஜ்மா அங்கிருந்தாள்.

5.       டிசம்பர் 2014ல் பெங்களூரில், சர்ச் தெருவில், ஒரு உணவகத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு [blast outside a restaurant in Bengaluru’s Chruch Street area in December 2014].

6.       பிப்ரவரி 2015ல், ஆர்.சி.புரத்தில் [Muthoot Finance in RC Puram] முத்தூட் நிதிநிறுவனத்தில் கொள்ளையடித்தனர்.

dinathanthi-graphics-about-jail-breal-and-simi-killingபோபால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தசிமிகைதிகள் தப்பிச் சென்றது: 2015ல் எஜாவுத்தீன் நல்கொண்டா அருகில் தெலிங்கானா போலீசாரால் கொல்லப்பட்டான். அவ்வகையில், பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட ‘சிமி’ இயக்கத்தினர் விசாரணை மற்றும் தண்டனை கைதிகளாக நாட்டில் உள்ள பல சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டனர். இந்நிலையில், போபால் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ‘சிமி’ கைதிகள் எட்டுபேர் 31-10-2016 அன்று அதிகாலை 2-3 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் சிறையில் இருந்த ஸ்டீல் தட்டு, மற்றும் டம்ப்ளரால் காவலரின் கழுத்தை அறுத்துக் கொன்றனர்[3].  இதைத்தொடரந்து அவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த போர்வையை பயன்படுத்தி மதில்சுவரை தாண்டி குதித்து, இந்த எட்டுபேரும் தப்பிச் சென்றதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன[4]. தப்பிச் சென்றவர்களை பிடிக்க மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்[5]. தடைசெய்யப்பட்ட ‘சிமி’ இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் 8 பேர் சிறையில் இருந்து தப்பிச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[6]. அவர்கள் இவ்வாறு தப்பிச் சென்றதே, திட்டமிட்டு செய்தது என்று தெரிகிறது. இனி, கைதிகளுக்கு ஸ்டீல் டம்பளர், தட்டு முதலியவை கொடுக்கலாமா-கூடாதா என்ற ஆராய்ச்சி நடத்த வேண்டும் போலிருக்கிறது.

the-eight-simiதப்பிச் சென்றவர்களை எச்சரித்தும், மறுத்ததால் போலீஸார் சுட்டதில் 8-பேர் கொலை: போபால் சிறையில் இருந்து தப்பி ஓடிய 8 சிமி தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்[7] இப்படி தமிழ் ஊடகங்கள் சுருக்கமாக செய்திகளை வெளியிட்டன. போபால் புறநகர் பகுதியில் பதுங்கியிருந்த 8 தீவிரவாதிகளை என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்தனர்[8] என்று நீட்டிச் சொல்கிறது இன்னொரு தமிழ் நாளிதழ். மத்திய பிரதேச தலைநகர் போபாலில் மத்திய சிறையில் காவலரை சுட்டுக்கொன்று ஞாயிற்றுக் கிழமை 30-10-2016 அன்றிரவு 8 தீவிரவாதிகளும் தப்பிச்சென்றனர். கொல்லப்பட்டவர்களில் இருவர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் என கூறப்படுகிறது என்கிறது இன்னொரு தமிழ் நாளிதழ்.  போபால் புறநகர் பகுதியில் உள்ள இன்கொடி என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் 8 பேரும் பதுங்கியிருந்தது தெரியவந்தது.  கிராமவாசி ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.  இதையடுத்து, போலீசார் அந்த இடத்தில் குவிக்கப்பட்டனர். தீவிரவாத தடுப்பு படை போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை சுற்றி வளைத்தனர்[9]என்று தினத்தந்தி விளக்குகுறது. பயங்கரவாதிகளை சரண் அடைந்து விடுமாறு எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், அதை ஏற்காமல் பயங்கரவாதிகள் போலீசாரை தாக்க முயன்றனர். இதனால், வேறு வழியின்றி போலீசார் துப்பாக்கியை பிரயோகித்தனர். அப்போது நடைபெற்ற  என்கவுண்டரில் பயங்கரவாதிகள்  8 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்[10]என்றும் தினத்தந்தி கூறியுள்ளது. இதனையடுத்து சிமி பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட என் கவுண்டரின் உண்மை தன்மை குறித்து கேள்விகள் எழுப்பட்டது.  ஊடகக்காரர்கள் அந்த 8-பேர் எப்படி அங்கு சென்றனர், ஊர்மக்கள் ஏன் போலீஸாருக்கு தகவல் அளிக்க வேண்டும் முதலியவற்றைப் பற்றி கூட விவாதம் நடத்தலாமே?

smi-terror-politicizedஅரசியலாக்கப் படும் என்கவுன்டர் வழக்குகள்: தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், குரூரக் கொலைகாரர்கள், குண்டுவெடித்து அப்பாவி மக்களைக் கொன்றவர்கள் முதலியோரின் குற்றங்களை, பயங்கரத்தை அரசியல்வாதிகள் நினைத்துப் பார்ப்பதில்லை என்று தான் தோன்றுகிறது. அவர்கள் முஸ்லிம்கள் அதனால், அவர்களை ஆதரிக்க வேண்டும், அப்படி செய்தால் ஆதாயம் கிடைக்கும் என்ற எண்ணாத்தில் தான் காங்கிரஸ், ஆப் போன்ற கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி சிமி பயங்கரவாதிகள் பாதுகாப்பு நிறைந்த சிறையில் இருந்து தப்பியது எப்படி என்பது தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றது.  அரவிந்த் கேசரிவாலும் அத்தகைய கோரிக்கை விடுத்துள்ளார். டிவிசெனல்களைப் பற்றி கேட்கவே வேண்டாம், ஒவைசியைக் வைத்து, உரிமை போராட்டமே நடத்திக் கொண்டிருக்கின்றன. இனி, பாகிஸ்தான் இந்திய வீரர்களைக் கொன்றதை மறந்து, இதை வைத்துக் கொண்டு கதையை ஓட்ட ஆரம்பித்து விடுவர். எல்லையில் நடந்த அக்கிரமங்களுக்கு இந்திய ராணுவம் பதில் நடவடிக்கை எடுத்தற்குக் கூட, எதிர்கட்சிகள் விமர்சனம் செய்து கொண்டிருக்கும் நிலையில் தான், இதுவும் நடக்கிறது. அப்படியென்றால், எதிர்கட்சிகள் சிமி-தீவ்ரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன என்று விளக்கம் கொடுக்கலாமா?

© வேதபிரகாஷ்

01-11-2016

the-eight-simi-clear-faces

[1] The Hindu, Cadres of an outlawed group, with long list of terror cases, Updated: November 1, 2016 01:10 IST.

[2] http://www.thehindu.com/news/national/cadres-of-an-outlawed-group-with-long-list-of-terror-cases/article9288680.ece?textsize=large&test=1

[3] தினத்தந்தி, போபால் சிறைச்சாலையில் இருந்து 8 சிமி இயக்கத்தினர் தப்பி ஓட்டம், பதிவு செய்த நாள்: திங்கள், அக்டோபர் 31,2016, 8:53 AM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 8:53 AM IST.

[4] http://www.dailythanthi.com/News/India/2016/10/31085334/8-SIMI-activists-escape-from-Bhopal-jail-1-guard-killed.vpf

[5] மாலைமலர், சிறையில் இருந்து 8 ‘சிமிதீவிரவாதிகள் தப்பியோட்டம், பதிவு: அக்டோபர் 31, 2016 08:29.

[6] http://www.maalaimalar.com/News/TopNews/2016/10/31082923/1047882/8-SIMI-activists-escape-from-Bhopal-jail-1-guard-killed.vpf

[7] தினகரன், போபால் சிறையில் இருந்து தப்பி ஓடிய 8 சிமி தீவிரவாதிகள் சுட்டுக்கொலை, Date: 2016-10-31 11:47:00

[8] http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=255546

[9] தினத்தந்தி, போபால் சிறையில் இருந்து தப்பி ஓடிய 8 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொலை, பதிவு செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 12:05 PM IST; மாற்றம் செய்த நாள்: திங்கள் , அக்டோபர் 31,2016, 12:05 PM IST.

[10] http://www.dailythanthi.com/News/India/2016/10/31120513/8-SIMI-terrorists-who-earlier-today-fled-from-Bhopal.vpf

இந்திய முஸ்லிம்கள் ஏன் சிமி, இந்திய முஜாஹித்தீன், ஐஎஸ்ஐ, ஐசிஸ் போன்ற ஜிஹாதி இயக்கங்களுடன் சேர்ந்து தீவிரவாத குரூரங்களை செய்கிறார்கள்?

பிப்ரவரி 7, 2016

இந்திய முஸ்லிம்கள் ஏன் சிமி, இந்திய முஜாஹித்தீன், ஐஎஸ்ஐ, ஐசிஸ் போன்ற ஜிஹாதி இயக்கங்களுடன் சேர்ந்து தீவிரவாத குரூரங்களை செய்கிறார்கள்?

SMI founder Mohammad Ahmadullah Siddiqi

ரியாஸ் பட்கல், சுல்தான் அர்மாருடன் உரையாடியது (மே.2015)[1]: தமிழ்.ஒன்.இந்தியா தொடர்ந்து, “இன்னொரு உரையாடல் ரியாஸுக்கும், சுல்தான் அர்மார் என்பவருக்கும் இடையே நடந்ததாகும். இந்த அர்மாரும், ரியாஸின் சொந்த ஊரான கர்நாடக மாநிலம் பத்கலைச் சேர்ந்தவர்தான். அவர் அல் கொய்தாவுடன் இணைய எதிர்ப்பு தெரிவித்திருந்தார். காரணம், எப்படியும் ஒரு நாள் அல் கொய்தா அமைப்பானது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு ஆதரவாக மாறி விடும். எனவே ஐஎஸ் அமைப்பில் சேருவதே நல்லது என்று அவர் கூறியிருந்தார். மேலும் ஐஎஸ் அமைப்புதான் சுத்தமான ஜிஹாத்தை நடத்தி வருவதாகவும், அதனுடன் இணைவதே சரியானது என்றும் அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக ரியாஸுக்கும், அர்மாருக்கும் இடையே மோதல் முற்றி அதன் பின்னரே இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு உடைந்தது[2], என்று முடிக்கிறது.

Muslims still supporting SIMI 2010

பட்கலின் அப்துல் காதீர் சுல்தான் அர்மார், சிமிஇந்தியன் முஜாஹித்தீன் தலைவர், ஐசிஸ் போராளி சிரியாவில் சாவு (மார்ச்.14, 2015)[3]: கோபானெயில் சண்டையிட்டபோது அப்துல் காதீர் சுல்தான் அர்மார் உயிரிழந்தார் என்று டுவிட்டரில் தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த 14-ம் தேதி இந்த தகவல் வெளியிடப்பட்டு உள்ளது. கோபானெ, வடமேற்கு சிரியாவில் துருக்கியின் எல்லையில் உள்ளது. சுல்தான் ஈராக் மற்றும் சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக சண்டையிட்டபோது, கொல்லப்பட்டார் என்று டூவிட்டர் தகவல்கள் வெளியாகியது. 39-வயதான அப்துல் காதீர் சுல்தான் அர்மார், கர்நாடக மாநிலம் சேர்ந்தவர், தடைசெய்யப்பட்ட சிமி இயக்கத்தை சேர்ந்தவர், 10 வருடங்களுக்கு முன்னதாக தனது சகோதரர் சாய்ப்புடன் வீட்டைவிட்டு ஓடிவிட்டார். இந்திய முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் யாசின் பாத்கல் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, சுல்தான் ஆப்கானிஸ்தானில் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து சண்டையிடுவதாக உளவுத்துறை தகவல் தெரிவித்தது. ஜிகாதி அப்துல் காதீர் சுல்தான் அர்மார், ஐ.எஸ். தீவிரவாதத்திற்கு ஆள்சேர்த்தவர் என்றும் இங்கிலாந்து செய்தி இணையதளம் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டு உள்ளது[4].

Traning Muslim women online Mumbai

மும்பை பெண்களுக்கு தற்கொலை படையாக மாற ஆன்லைன் மூலம் ஐஎஸ் பயங்கரவாதிகள், பயிற்சி: மும்பை பெண்களுக்கு தற்கொலை படையாக மாற ஆன்லைன் மூலம் ஐஎஸ் பயங்கரவாதிகள், பயிற்சி அளித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மும்பை பயங்கரவாதி எதிர்ப்பு படையினர் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது[5].இது குறித்து மும்பை பயங்கரவாத தடுப்பு படையினர் கூறுகையில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சிலரிடம் விசாரணை நடத்திய போது சில அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது. இதில் ஐஎஸ் இயக்க தலைவன் அபு பக்கர் அல் பாக்தாதி, மும்பையைச் சேர்ந்த இளம் பெண்களுக்கு தற்கொலைப் படையாக மாற பயிற்சி அளித்தது தெரிய வந்துள்ளது. ஆன்லைனில் வீடியோ கான்பிரன்சிங் மூலம் இந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பாக்தாதியும், அவரது சகாக்களும் ஸ்கைப் உள்ளிட்ட பிற வீடியோ காலிங் சாப்ட்வேர்களை பயன்படுத்தி மும்பை இளம்பெண்களுடன் தொடர்பு கொண்டு, அவர்களை மூளை சலவை செய்து, பயிற்சி அளித்துள்ளனர். மும்பை மட்டுமின்றி இந்தியாவில் பல பகுதிகளை சேர்ந்த இளம்பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு எவ்வாறு தற்கொலைப்படையாக மாறுவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெண்கள் தான் அதிகம் என தெரிவித்துள்ளனர். இந்தியாவில் இளம்பெண்களை தற்கொலைப் படையாக ஐஎஸ் பயங்கரவாதிகள் மாற்றி வருவதை போன்று, பாகிஸ்தானில் பள்ளி ஆசிரியைகளுக்கு ஏகே 47 ரக துப்பாக்கிகளை இயக்குவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது[6].

SIMI activities continued subversively

 ஜனவர் 2016ல் நாடுகடத்தப்பட்டவர் மற்றும் இறந்தவர்களின் விவரங்கள்: ஜனவரி 28, 2016 அன்று யு.ஏ.இலிருந்து நாடுகடத்தப்பட்ட ஐஎஸ் சார்புடையவர்கள் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டனர்.

  1. அட்னன் ஹுஸைன், கர்நாடகா [Adnan Hussain, who hails from Karnataka],
  2. மொஹம்மது ப்ர்ஹான், மஹாராஷ்ட்ரா [Mohammad Farhan, from Maharashtra],
  3. செயியிக் அலி, ஜம்மு-காஷ்மீர் [Sheikh Azhar Al Islam, from Jammu and Kashmir]

இம்முவரும் என்.ஐ.ஏவால் கைது செய்யப்பட்டனர். இது தவிர ஏற்கெனவே, நூற்றுக்கும் மேலானவர்கள் துருக்கி, சிரியா முதலிய நாடுகளிலிருந்து நாடு கடத்தப் பட்டுள்ளனர். இதனால், இந்தியாவிலிருந்து எத்தனை பேர் ஐசிஸ் உடன் சேர்ந்துள்ளனர், போராடி வருகின்றனர், இறந்துள்ளனர் என்ற விவரங்கள் தெரியாமல் இருக்கின்றன. ஆனால், பெற்றோர்கள் எப்படி அமைதியாக இருக்கிறார்ர்கள் என்று தெரியவில்லை. இது தவிர இறந்தவர்கள் விவரங்களும் தெரிய வந்துள்ளன[7]:

  1. அதிம் வஸீம் மொஹம்மத், அடிலாபாத், தெலிங்கானா [Athif Vaseem Mohammad (Adilabad, Telangana)],
  2. மொஹம்மது உமர் சுபான், பெங்களூரு [Mohammad Umar Subhan (Bengaluru)],
  3. மௌலானா அப்துல் சுல்தான் ஆர்மர், பட்கல், கர்நாடகா [Maulana Abdul Kadir Sultan Armar (Bhatkal, Karnataka)],
  4. சமீம் பரூக்கி தங்கி, தானே, மஹாராஷ்ட்ரா [Saheem Farooque Tanki (Thane)],
  5. பைஸ் மசூத், பெங்களூரு [Faiz Masood (Bengaluru)]
  6. மொஹம்மது சஜித் என்கின்ற படா சஜித், ஆஸம்கர், உபி [Mohammad Sajid alias Bada Sajid (Azamgarh, Uttar Pradesh)].

இவர்களது பெற்றோர்கள் ஏன் மௌனம் சாதிக்கின்றனர். பிடிபட்டவர்களின் பேற்றோர், தமது மகன் அல்லது மகள் அப்பாவி, ஒன்றும் தெரியாது, சும்மா கசூதிக்குச் சென்று வருவான், முச்லிம் தலைவர்களின் கூட்டத்திற்குச் சென்று வருவான், இஸ்லாம் பற்றிய புத்தகங்களைப் படிப்பான் என்று தான் சொல்லிவருகின்றனர். இதை டிவி செனல்கள் பிரமாதமாக போட்டு பிரச்சாரம் செய்து வருகின்றன. அதே போல, இறந்தவர்களின் பெற்றோர்களை அணுகி பேட்டிக் காண்பது தானே? அவர்கள் எப்படொ வெற்றிகரமாக, இந்தியாவிலிருந்து வெற்றிகரமாக சிரியாவுக்குச் சென்றனர், எப்படி சென்றார்கள், யார் பாஸ்போர்ட், விசா, எடுத்துக் கொடுத்தார்கள், பணம் கொடுத்தார்கள் என்ற விசயங்களை எல்லாம் ஆராய்ச்சி செய்வது தானே?

khilafat-e-rashida-is-the-only-solution

சிமி, அல்குவைதா, இந்திய முஜாஹித்தீன், ஐசிஸ் மாற்றங்கள்: இந்தியாவின் மாணவர்களின் இஸ்லாமிய இயக்கம் (Students’ Islamic Movement of India) அல்லது சிமி (SIMI) 1997ல் அலிகர், உத்திரப் பிரதேசத்தில் தொடங்கப்பட்ட  இஸ்லாமிய அமைப்பு ஆகும். இந்தியாவை இஸ்லாம் மயமாக்க வேண்டும், மேற்கின் செல்வாக்கத்திலிருந்து விடுதலை செய்துயைடைக்கால இஸ்லாமிய அரசை இந்தியாவில் மறுபடியும் நிறுவ வேண்டும் என்பதெல்லாம் இந்த இயக்கத்தின் நோக்கம் ஆகும். ஆகவே, ராமஜன்மபூமி-பாப்ரி மஸ்ஜித் பிரச்சினை இதற்கு காரணம் என்று சொல்லி வருவது அபத்தமான பிரச்சரம் ஆகும். இந்திய அரசு இவ்வியக்கத்தை தீவிரவாத இயக்கம் என்று அறிவித்து, 2002இல் தடை செய்தது. இவ்வியக்கம் அல்கைதாவை சேர்ந்து இருக்கிறது என்று அறியப்படுகிறது.  சிமி இந்தியன் முஜாகிதீன் என்று பெயர் மாற்றிக்கொண்டது. இந்திய முஜாஹிதீன் இயக்கம் அதே ஆண்டில் 2008ல் ஜெய்ப்பூர், பெங்களூர், அகமதாபாத் ஆகிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இப்பொழுது மேலே பட்கல் மற்றும் அர்மார் சகோதரர்கள் விளக்கியுள்ள உள்-விவகாரங்களினால், ஐசிஸ் நோக்கி முஸ்லிம்கள் நகர்ந்து விட்டார்கள். படித்த முஸ்லிம் இளைஞர்களுக்கு வேலை தருகிறோம், நன்றாக சம்பளம் தருகிறோம், தவிர என்னென்ன வேண்டுமோ, அனைத்தையும் தருகிறோம் என்று தான், இவர்களை வளைத்துப் போடுகிறார்கள். இதனால் தான், சமூக வளைதளங்களில் சுலபமாக தொடர்பு கொள்கிறார்கள். குடும்பத்திற்கு அட்வான்ஸாக லட்சங்களும் கொடுக்கப்படுவதால், குடும்பமும் ஒத்துழைக்கிறது எந்த உண்மையினையும் சொல்வதில்லை.

ஆயிஸா அன்ட்ரபி கத்திகளுடன்

குடும்பம் பலன் பெறுவதனால் உண்மையினை மறைப்பதால் தீவிரவாதம் வளர்கிறது: பிரச்சினை என்று வரும் போது, முதலில் எங்கள் பையன், பெண் மிகவும் நல்லவன், அப்பாவி, ஒன்றுமே தெரியாது என்று தான் சொல்கிறார்கள். பிறகு, ஐயோ அவன் அப்படியெல்லாம் செய்திருப்பான் என்று நினைக்கவில்லை என்கின்றனர். அதற்கும் பிறகு, அவன் அப்படி செய்திருந்தால், அவனை தூக்க்கில் போடுங்கள் என்கிறார்கள். முடாபிர் முஸ்தாக் செயிக்கின் மனைவி உஜ்மா கூட தனது கணவன் ஏதோ ஒரு இஸ்லாமிய / தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு கொண்டுள்ளான் ஆனால் பெயர் தெரியாது என்று சொல்லி சமாளிக்கிறார். வேலையை விட்டாலும், லட்சங்களில் பணம் வருகிறது என்பதும் தெரிந்திருக்கிறது. பிறகு, எப்படி அவ்வாறு பணம் வருகிறது என்று பார்த்தாலே தெரிந்து விடுமே? யாரும் சும்மா லட்சங்களில் பணத்தை வங்கி கணக்கில் தாராளமாக போடமாட்டார்கள். ஆகவே அப்பணம் எங்கிருந்து வருகிறது என்பதனை தாராளமாகவே கண்டு பிடித்து விடலாம். பட்கல் மற்றும் அர்மார் குடும்பங்கள் அடிகடி வீடுகளை மாற்றுவதே அவர்களுக்கு எல்லாமே தெரிந்திருக்கிறது என்றாகிறது. ஆகவே, குடும்பங்கள் மாற வேண்டும், அவர்களை மாற்ற வேண்டும். பேற்றோர், உற்றோர், மாற்றோர் அவர்களின் வித்தியாசமான போக்கைக் கண்டவுடன், கண்கானித்து திருத்த வேண்டும், மாற்ற வேண்டும். பிறகு வருத்தப்படுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை.

© வேதபிரகாஷ்

06-02-12016

[1] http://tamil.oneindia.com/news/india/kamal-s-vishwaroopam-made-riyaz-bhatkal-happy-the-im-split-explained-227090.html

[2] Read more at: http://tamil.oneindia.com/news/india/kamal-s-vishwaroopam-made-riyaz-bhatkal-happy-the-im-split-explained-227090.html

[3] தினத்தந்தி, சிரியாவில் கொல்லப்பட்ட ஜிகாதி, இந்தியாவில் தடைசெய்யப்பட்ட சிமி இயக்கத்தை சேர்ந்தவர்       , மாற்றம் செய்த நாள்: வெள்ளி, மார்ச் 20,2015, 5:48 PM IST; பதிவு செய்த நாள்: வெள்ளி, மார்ச் 20,2015, 5:48 PM IST.

[4] http://www.dailythanthi.com/News/World/2015/03/20174844/Indian-IS-recruit-killed-in-Syria-was-from-Bhatkal.vpf

[5] தினமலர், ஆன்லைன் மூலம் மும்பை பெண்களை தற்கொலைபடையாக மாற்றும் ஐஎஸ்.,, ஜனவரி.31.2016.08.58.

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1445881

[7] http://indiatoday.intoday.in/story/3-isis-sympathisers-arrested-by-nia-after-deported-from-uae/1/583266.html

மும்பை குண்டுவெடிப்புகளில் லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி – சந்தேகிக்கப்படும் இயக்கங்கள்

ஜூலை 17, 2011

மும்பை குண்டுவெடிப்புகளில் லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி – சந்தேகிக்கப்படும் இயக்கங்கள்

 

குண்டு தயாரிப்பு விவரம்: உள்ளுக்குள்ளே வெடித்து நாசத்தை உண்டாக்கும் குண்டுகளை (IED = Internally explosive Devices) உருவாக்குதல், தயாரித்தல் (Ammonium Nitrate / RDX),”டைமர்” முதலிய மின்னணு கருவிகளை உபயோகித்தல் முதலிய முறைகளைப் பயன்படுத்தலில், குறிப்பிட்ட இஸ்லாமிய தீவிரவாதிக் குழுக்கள் வல்லுனர்களக இருக்கிறார்கள்[1]. கடந்த குண்டவெடிப்புகளில், இத்தகைய முறை கையாளப்பட்டுள்ளது. இப்பொழுதும் அதே முறை கையாளப்பட்டுள்ளது. மொத்தம் டிபன்-பாக்ஸுகளில் வைக்கப்பட்ட ஏழு குண்டுகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது[2]. வழக்கம் போல அவை துணிபைகளில் வைக்கப்பட்டு வெடிக்கப்பட்டுள்ளன. இந்த குண்டுவெடிப்புகள் பீதியை உண்டாக்கவில்லை, மாறாக அழிவை உண்டாக்கவே செய்துள்ளன[3]. லஸ்கர்-இ-தொய்பா, இந்திய-முஜாஹித்தீன் மற்றும் தடை செய்யப்பட்டுள்ள சிமி (இந்திய இஸ்லாமிய இளைஞர் கூட்டமைப்பு) முதலியோர்களின் கைவேலை தெரிகிறது என்று வெடிகுண்டு வெடிக்கப்பட்ட இடங்களினின்று பெற்ற ஆதாரங்களை வைத்து எடித்துக்காட்டியுள்ளனர்[4]. அவர்களை கண்காணித்து வருவதாக புலன் விசாரணை செய்யும் குழுக்கள் கூறுகின்றன[5]. மும்பையில் இஸ்லாமிய தீவிரவாதிகள் குண்டுவெடிப்புகள் நடத்தியுள்ளது ஒன்றும் புதியதல்ல. புனாய்வுத்துறை மும்பை மறுபடியும் தாக்குதலுக்குள்ளாகும் என்று தெளிவாக எச்சரித்து இருந்தது[6]. ஆனல் உள்துறை அமைச்சகம் இதை மறுக்கிறது.

 

வழக்கம் போல முரண்பட்ட வெளியிடப்படும் அறிக்கைகள்: ஆளும் சோனியா கட்சித் தலைவர்கள் சட்டப்படி திவிரவாதிகளுக்கு உதவும் வகையில் முன்னுக்குமுணாகப் பேசுவது, அறிக்கைகள் விடுவது தொடர்கிறது. அவை முழுவதுமாக பொய் அல்லது நீதிமன்ற அவமதிப்பு அல்லது வழக்கை திசைத்திருப்பும், பாதிக்கும் என்று தெரிந்தே செய்து வருகிறார்கள். மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக மத்திய உளவுத்துறையோ, மாநில உளவுத்துறையோ எச்சரிக்கை எதையும் செய்யவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். மும்பைக்கு 13-07-2011 நள்ளிரவில் வந்த ப.சிதம்பரம், குண்டுவெடிப்பு நடந்த இடங்களைப் பார்வையிட்டார். காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் அவர் பார்த்து நலம் விசாரித்தார். 14-07-2011 அன்று காலை ப.சிதம்பரமும், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவானும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ப.சிதம்பரம் கூறுகையில், “இதுவரை 17 பேரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு துண்டிக்கப்பட்ட தலை மீட்கப்பட்டுள்ளது. அது யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே பலி எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. 131 பேர் காயமடைந்து 13 மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 26 பேர் விடுவிக்கப்பட்டு விட்டனர். 82 பேரின் நிலைமை ஸ்திரமாக உள்ளது. 23 பேர் மிகவும் கடுமையான காயங்களைச் சந்தித்துள்ளனர். இவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

 

ஒன்றும் தெரியாமல் உள்துறை அமைச்சர் இருப்பதைவிட இல்லாமலேயே இருக்கலாம்: “நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து முன்கூட்டியே உளவுத் துறை எச்சரிக்கை எதுவும் எங்களுக்கு இல்லை. மாநில உளவுத்துறையோ அல்லது மத்திய உளவுத்துறையோ இதுகுறித்து எந்த எச்சரிக்கையையும் விடுக்கவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது. கிட்டத்தட்ட 30 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் நாட்டில் தீவிரவாதம் திரும்பியுள்ளது. மும்பை மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதலை சந்தித்துள்ளது. இதற்காக நான் பெரிதும் வருந்துகிறேன். தாதர், ஓபரா ஹவுஸ், ஜவேரி பஜார் ஆகிய இடங்களில் மூன்று குண்டுகள் வெடித்தன. மூன்று இடங்களையும் நான் நேரில் பார்த்தேன். அதில் இரண்டு இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. தாதரில் நடந்தது சிறிய அளவிலான குண்டுவெடிப்பு. மிகவும் திட்டமிட்டு இந்த தாக்குதலை தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இரவு முழுவதும் குண்டுவெடிப்பு நடந்த இடங்களை புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக அலசி ஆராய்ந்துள்ளனர். தடவியல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

 

அம்மோனியம்நைட்ரேட்உபயோகப்படுத்தப்பட்டிருப்பது: “மகாராஷ்டிர தடவியல் ஆய்வகம் பல முக்கிய தொடக்க நிலை ஆதாரங்களை சேகரித்துள்ளது. குண்டுவெடிப்பு நடந்த இடங்கள் அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளன. அங்கு யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ரிமோட் கன்ட்ரோல் மூலம் தாக்குதல் நடத்தப்படவில்லை. அம்மோனியம் நைட்ரேட் உபயோகப்படுத்தப்பட்டிருப்பது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது. யார் இந்த தாக்குதலுக்குக் காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. யாரையும் குறிப்பிட்டு நாங்கள் சந்தேகிக்கவில்லை. மாறாக, அனைவரையுமே சந்தேகிக்கிறோம். அனைத்து தீவிரவாத குழுக்களின் தொடர்புகள் குறித்தும் நாங்கள் விசாரிக்கிறோம். அனைத்து விதமான தகவல்களையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம். சமீபத்தில் புனேயில் இந்தியன் முஜாஹிதீனைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அதேபோல மும்பையில், சிபிஐ மாவோயிஸ்ட்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து மகாராஷ்டிர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில் இந்த குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம். மும்பையை மட்டும் குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதில்லை. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நகரத்தையும் அவர்கள் குறி வைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதில் மும்பை அதிக அளவில் குறி வைக்கப்படுவது பெரும் வேதனை தருகிறது”, என்றார் ப.சிதம்பரம்[7].

 

உள்ளூர் அல்லது வெளியூர் தீவிரவாத இயக்கமா? இருப்பினும் மும்பை எதிர்-தீவிரவாத குழு மெத்தனமாகவே இருந்துள்ளது. முந்தைய குண்டுவெடிப்புகளைப் போல, இப்பொழுது இந்திய-முஜாஹித்தீன் போன்ற எந்த தீவிரவாத இயக்கமும் ஈ-மெயில் அனுப்பி பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் இந்திய-முஜாஹித்தீன் 14 இளைஞர்களை இந்த மூன்று குண்டுவெடிப்புகளில் உபயோகப்படுத்தியுள்ளதாக யூகிக்கப்படுகிறது.  ராஞ்சியில் தேசிய புலனாய்வு பிரிவினர் சோதனையிட்டபோது, சிமியின் அங்கத்தினர்கள் அத்தகைய வேலைச் செய்ய திட்டமிட்டதாகத் தெரிகிறது. பெங்களூர் மற்றும் ஹைதரபாத் நகரங்களிலுள்ள அவர்களது கூட்டாளிகள் உதவியுள்ளார்கள். பிடிக்கப்பட்டுள்ள சல்மான் என்பவன் முன்னமே அவர்கள் அத்தகைய குண்டுவெடிப்புகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளான்[8]. சிறிய இடங்களை ரகசியமாகக் கண்காணிக்கும் கேமராக்களில் பிடிபட்டுள்ள காட்சிகளினின்று, குறிப்பிட்ட மூன்று நபர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவன் முழுவதுமாக அடையாளங்காணபாட்டுள்ளான். அவர்களுடைய படங்கள் வரையப்படபோகின்றன. இருப்பினும், இம்முறை அவர் வெளியிடப்படாது என்று சொல்லப்படுகிறது. முந்தைய 26/11 குண்டுவெடிப்புகள் போல 13/7 அன்றும் உள்ளூர்வாசிகள் உதவியுள்ளார்கள் என்று தெரியவந்துள்ளது[9].

 

சந்தேகிக்கப்படும் மூன்று நபர்கள்: மும்பையில் கடந்த 13ந் தேதி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய ஆதாரம் கிடைத்துள்ளது. குண்டுவெடிப்புக்கு முன்பு 3 மர்ம ஆசாமிகள் சந்தேகத்திற்குரிய முறையில் நடமாடியது தொடர்பான வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது[10]. இந்த தகவலை மகாராஷ்டிர முதலமைச்சர் பிரிதிவிராஜ் சவான் தெரிவித்திருக்கிறார். அமைச்சரவை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் இந்த தகவலை தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.தெற்கு மும்பை பகுதியில் தாதர், ஜாவேரி பஜார், ஓபரா ஹவுஸ் உட்பட 3 இடங்களில் கடந்த 13ந் தேதி நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 17 பேர் கொல்லப்பட்டனர். 133 பேர் காயமடைந்தனர்.

 

செல்போனில் பேசிக்கொண்டிருந்த அந்த மூவர்: இது தீவிரவாதிகளின் செயல் என்பது உறுதி செய்யப்பட்டது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிகளில் கடைகள் மற்றும் வீதிகளில் வைக்கப்பட்டிருந்த வீடியோ கேமராக்களில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். ஒபரா ஹவுஸ் அருகே கவு ஹள்ளி என்ற இடத்தில் வீடியோ கேமராவில் 3 பேர் அந்தப் பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடமாடியதுகண்டுபிடிக்கப் பட்டது. அவர்கள் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அல்ல என்பது தெரிந்தது. மேலும் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் செல்போன் மூலமே சுமார் 1 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். எனவே இவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்தியன் மொஜாகிதீன் அமைப்புதான் காரணமாக இருக்கும் என்று புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சந்தேகப்பட்டனர். ஆனால் இந்த தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் போலீசிடம் பிடிபடாமல் இருக்க செல்போனை கடந்த சில மாதங்களாக பயன்படுத்துவதில்லை. எனவே இந்த தாக்குதலை நடத்தியவர்கள் வேறு தீவிரவாத அமைப்பாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

மூவரில் ஒருவன் இறந்து விட்டானா? மற்றொரு இடத்தில் கிடைத்த வீடியோ காட்சிகளை போலீசார் பார்த்தனர். அதில் ஒருவர் ஒரு பையை எடுத்துக் கொண்டு வேகமாக வாகன நிறுத்த இடத்தை நோக்கி செல்கிறார். சிறிது நேரத்தில் அவர் சென்ற பகுதியில் குண்டு வெடிக்கிறது. அந்த இடத்தில் மின்சார ஒயர்கள் பின்னப்பட்டு ஒருவர் பிணமாக கிடந்தார். வெடிகுண்டை எடுத்துச் சென்றவராக அது இருக்கலாம் என்று தற்போது போலீசார் சந்தேகிக்கின்றனர். அவர் கொண்டு சென்ற பையை போன்று அந்தப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டது. எனவே அவர் பையில் வெடிகுண்டை எடுத்துச் சென்றவராக இருக்க வேண்டும் என்று புலனாய்வுத் துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். வெடிகுண்டை வைத்து விட்டு அவர் திரும்புவதற்குள் முன்கூட்டியே வெடித்து விட்டதால் அவரும் பலியாகி இருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

 

மும்பை குண்டுவெடிப்பு-குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து நடந்த தாக்குதல்? குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து மும்பையில் நேற்று வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது[11]. கடந்த 2006ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி மும்பை புறநகர் ரயில்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. அதில் 200க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த குண்டு வெடிப்புகள் குஜராத்திகள் அதிகம் வசிக்கும் பகுதிகளான மலட், கான்டிவ்லி, பொரிவிலி ஆகிய பகுதிகளைக் குறி வைத்து நடத்தப்பட்டது. 13-07-2011 மும்பையில் நடந்த குண்டுவெடிப்புகளும் குஜராத் சமுதாயத்தினர், குறிப்பாக வர்த்தகர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் நடந்திருக்கிறது. எனவே இந்த முறையும் குஜராத் வர்த்தகர்களை குறி வைத்து தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கனவே 2003ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி ஜவேரி பஜார், கேட்வே ஆப் இந்தியா ஆகிய பகுதிகளில் நடந்த தாக்குதல்களில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அதேபோல 2003ல் கட்கோபர், 2003 மார்ச்சில் முலுந்த், 2003 ஜனவரியில் விலே பார்லே ஆகிய பகுதிகளிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டன. இங்கும் குஜராத்திகள் அதிக அளவில் வசிக்கிறார்கள். 2003 சம்பவத்திற்குப் பின்னர் பேசிய மகாராஷ்டிர முதல்வர் சுஷில் குமார் ஷிண்டே, குஜராத்திகளை குறி வைத்து குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதாக தெரியவில்லை என்று கூறியிருந்தார்.

 

தீவிரவாதிகளின் இலக்கு ஏன்? அதேசமயம், குஜராத்திகளை குறி வைத்துத்தான் பெரும்பாலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்படுவதாக கூறுகிறார் மும்பை மாநகர குஜராத்தி சமாஜ் தலைவர் ஹேம்ராஜ் ஷா. இதுகுறித்து அவர் கூறுகையில், ஜவேரி பஜார் பகுதி கமிஷனர் அலுவலகத்திற்கு மிகவும் அருகில் உள்ளது. ஓபரா ஹவுஸ் பகுதியில் உள்ள கவ் காலி, தாதரில் உள்ள கபூதர்கானா ஆகியவை மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளாகும். மாலை நேரங்களில் இங்குமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த பகுதிகளைக் குறி வைத்து தாக்குதல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது என்கிறார் ஷா. சில்லறை வியாபாரிகள் நலச் சங்கத்தின் தலைவர் விரேன் ஷா கூறுகையில், ஓபரா ஹவுஸ், ஜவேரி பஜார் பகுதிகளில் தங்க மற்றும் வைர நகை வியாபாரிகள் பெருமளவில் உள்ளனர். இவர்கள் அனைவருமே குஜராத்திகள்தான். இங்கு குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதைப் பார்க்கும்போது குஜராத்திகளைக் குறி வைத்தே தாக்குதல் நடந்திருப்பதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது. அதேசமயம், மக்கள் நெருக்கமான பகுதிகளை தீவிரவாதிகள் குறி வைத்துள்ளதாகவும் கருத முடியும் என்றார்.

 

மும்பை குண்டுவெடிப்பின்போது தகவல் தொடர்பு செயலிழப்பு: சவாண்[12]: மும்பையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த அடுத்த 15 நிமிடங்களுக்கு உயர் அதிகாரிகள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தகவல் தொட ர்பு சாதனங்கள் அனைத்தும் முழு மையாக செயலிழந்து விட்டன என்று மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவாண் தெரிவித்தார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய சவாண் மேலும் கூறுகையில், குண்டு வெடிப்பு நடந்த அடுத்த 15 நிமிடங்களுக்கு எந்த ஒரு தகவல் பரிமாற்றமும் மேற்கொள்ள இயலவில்லை. இதனால் காவல் துறை உயர் அதிகாரிகளையோ, நிர்வாக உயர் அதிகாரிகளையோ தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

 

தீவிரவாதிகளுக்கு துணையாக அவ்வாறு நிறுவனங்கள் செய்துள்ளனவா? வேறு எந்த வகை சாதனங்களையும் தகவல் தெரிவிக்க பயன்படுத்த இயலாத நிலை இருந்ததால், நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. எனவே, இதுபோன்ற நேரங்களில் செயற்கைகோள் துணையுடன் இயங்கும் தொலைத் தொடர்பு சாதனங்களையோ அல்லது எந்த சூழ்நிலையிலும் பாதிக்காத வகையில் அமைந்த சாதனங்களையோ பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். இந்த நிலை மீண்டும் ஏற்படக் கூடாது. எனவே, இதுகுறித்து தேசிய பாதுகாப்பு அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியுள்ளேன் என்றார்.

 

26/11ற்கு பின்னரும் நவீனப்படுத்தப்படவில்லை என்று புலம்பும் மஹாராஷ்ட்ர முதல்வர்: அவர் மேலும் கூறுகையில், காவல்துறையினருக்கான சாதனங்களும் மேம்படுத்தப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும். ஆனால் இது தொடர்பாக அமைக்கப்பட்ட ராம் பிரதான் குழு பரிந்துரைத்த எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. காவல் துறையை நவீனப்படுத்துவதற்கான குழு பரிந்துரைகள் எதையும் நாம் நினைத்த அளவில் அமல்படுத்த இயலவில்லை என்றார். உளவுப் பிரிவினர் சரியான நேரத்தில் உரிய தகவல் தரவில்லை என்பதை ஏற்க முடியாது என்ற சவாண், அதுபற்றி கூறுகையில், ஆனால் அப்பிரிவின் திறனை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கூட இது தொடர்பாக விவாதிக்கப்பட்டது என்றார் சவாண்.


[1] இவர்கள் எல்லாமே முஸ்லீம்களாக இருப்பதனால், புலன் விசாரணைக் குழுக்கள், போலீஸ் முதலியோர் அரசியல் நிர்பந்தங்களினால், முரணான செய்திகளை ஊடகங்களுக்கு கொடுத்து, அதன் மூலம் வழக்கில் தீவிரவாதிகளுக்கு சந்தேகத்தின் அடைப்படையில் அல்லது போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை அடைகிறார்கள். பிறகு மற்ற வழக்குகளில் அவர்களை சிறையில் வைத்துள்ளார்கள். அல்லது பைலில் வெளியில் வந்ததும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் (துபாய், கடார்..) சென்று மறைந்து வாழ்கிறார்கள் மற்றும் தொடர்ந்து இத்தகைய தீவிரவாத செயல்களை செய்து வருகிறார்கள்.