Posted tagged ‘தகியா’

ஒன்பது நாட்களாக நடைப் பெற்று வந்த மொஹ்ஹரம் பத்தாவது நாளில் முடிவடைந்தது!

ஒக்ரோபர் 26, 2015

ஒன்பது நாட்களாக நடைப் பெற்று வந்த மொஹ்ஹரம் பத்தாவது நாளில் முடிவடைந்தது!

Zuljana-of-imam-hussain

Zuljana-of-imam-hussain

மொஹர்ரம் துக்க விழாவின் ஆரம்பம், சடங்குகள், சின்னங்கள்: மொஹ்ஹரம், என்றாலே தடுக்கப்பட்டது என்று பொருள். எதிர்மறையில் பிரயோகிக்கப்பட்டு வரும், இச்சொல் இஸ்லாத்தில் முக்கியமான பொருளுடன் விளங்கி வருகிறது. அஜதாரி [Azadari (Persian: عزاداری)] என்றால், அழுகை, ஒப்பாரி, துக்கம் என்று பாரசீக மொழியில் பொருள். மஜ்லிஸ் –இ ஆஜா [Majalis-e Aza] இமாம் ஹுஸைன் தியாகத்துடன் சேர்ந்த சடங்குகளை இணைத்து கூறினர். இவையெல்லாம் யஜீத் என்பவனுடைய கொடுமைகளுக்கு எதிராக செய்யப்படுகின்றன. துக்கத்துடன் மார்பை அடித்துக் கொள்வது, லட்ம்யா, லட்மயா, லட்மியா (மாரடித்தல்) எனப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மடம், மடம்-தாரி, சினா ஜன்னே (மாரடித்தல்) என்று வழங்கப்படுகிறது. மொஹம்மது நபியின் குடும்பத்தினர், இமாம் அலி மறைவுக்குப் பிறகு, 680லிருந்து, இதனைக் கடைபிடித்து வருகின்றனர். கர்பலா போரில் மொஹம்மதுவின் பேத்தி ஜேனாப் பின்ட் அலி [Zaynab bint Ali] மற்றும் இமாம் ஹுஸைனின் சகோதரி இவர்களின் இபின் ஜியாத் மற்றும் யதீத் முதலியோர்களுக்கு எதிராக ஒப்பாரிவைத்ததை மற்றவர்கள் பின்பற்ற ஆரம்பித்தனர். இமாம் ஜைநுல் ஆபிதீன் [Imam Zain-ul-Abideen] என்பவர் இமாம் ஹுஸைனின் சோக முடிவை எல்லோருக்கும் அறிவித்து பரப்பி, துக்கநாளாக அனுசரிக்க செய்தார். இவரதளத்தகைய போதனைகள் இராக், சிரியா, ஹேஜாஸ் போன்ற இடங்களுக்குப் பரவின.

ecorated-Zuljanah-on-Muharram-ul-Haram

ecorated-Zuljanah-on-Muharram-ul-Haram

மொஹர்ரம் அனுசரிப்பில் உள்ள சின்னங்கள், உருவங்கள், பழக்க-வழக்கங்கள், கிரியைகள், சடங்குகள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள்:

  1. சினி-ஜனி – மாரடித்தல்[sine-zani (beating the chest)], ஜன்கிர்-ஜனி [zangir-zani (beating oneself with chains)], தகே-ஜனி [tage-zani] முதலியவை துக்கத்தை அனுசரிக்கும் விதங்கள்.
  2. காமா-ஜனி / தட்பீர் – கத்தி, வாட்களால் காயப்படுத்திக் கொள்ளுதல் [Qama Zani/ Tatbeer (hitting oneself with swords or knives)]. பாடிக் கொண்டே அடித்துக் கொள்வதையும் பார்க்கலாம்[1]. இப்பாடலைக் கேட்டால், நிச்சயமாக எவரும் அசையத்தான் செய்வார்கள்[2].
  3. தஸ்தா-கர்தானி – துக்க அனுசரிப்பு ஊர்வலங்கள் [mourning-processions (dasta-gardani)].
  4. நகில் – பெரிய மரத்தால் ஆன உருவங்களைத் தூக்கிச் செல்லுதல் [இமாம் ஹுஸைனின் இறுதி ஊர்வலத்தைக் குறிக்கும்]
  5. தாஜியா / ராவ்ஜா கானி என்கிற உருவங்களை எடுத்துச் செல்லுதல் – கூடாரம், கோபுரம் போன்றவை. கூடாரத்தில் இமாம் ஹுஸைனின் குடும்பத்தார் எரித்துக் கொலை செய்யப்பட்டதால், கூடாரம் போன்றவை விழா முடிவில் எரிக்கப்படுகின்றன.
  6. ஆலம் ஊர்வலம் – கொடிகள், அல்லது வண்ணச்சிலைகளை கொம்புகளில் எடுத்துச் செல்வது. விளக்குகளும் சேர்ந்தவை உள்ளன.
  7. மடம், ஜஞ்சீர் மடம் – கூரிய ஆயுதங்களால் தம்மை துன்புருத்திக் கொள்ளுதல்.
  8. ஜுல்ஜன்னா [Zuljanna] என்கின்ற குதிரை உருவம் – அல்லது குதிரை [இமாம் ஹுஸைனை கர்பலா போருக்கு அழைத்துச் சென்ற குதிரை]. இதனைக் கொல்வதும் உண்டு, எரிப்பதும் உண்டு. ஊர்வலத்தில் செல்லும் போது, அக்குதிரைத் தொட்டு வணங்கவும், ஆசிர்வாதம் பெறவும் செய்கின்றனர்[3].
  9. மண்குழி, தீக்குழி முதலியன – இஸ்லாத்தில் இறந்தவர்களை புதைப்பது, என்ற பழக்கம் உள்ளது. ஆனால், கூடாரத்துடன் முஸ்லிம்கள் எரிக்கப்பட்டதால், அவர்களுக்கு மறுபடியுமஉடல் கொடுத்து, தீயில் காட்டி அடக்கம் செய்யும் வழக்கு உருவகப்படுத்தப் படுகிறது.
  10. தகியா ஊர்வலங்களில் உள்ள உருவங்களும், சில இடங்களில் எரிக்கப்படுகின்றன, சில இடங்களில் கடல், நதிகளில் போட்டு விடுகிறார்கள்.
Karbala, Imam Hussain horse

Karbala, Imam Hussain horse

பத்துநாட்கள் அனுசரிக்கப்படும் மொஹர்ரம்: ஹிஜ்ரி 1437 வருடத்தில் மொஹரா மாதம் பத்தாவது நாளன்று அசுரா, அஷுரா [பத்தாவது நாள்] என்ற துக்கநாள் ஷியா முஸ்லிம்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது[4]. பத்து நாட்களுக்கு இப்பண்டிகை உருவகமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த பத்து நாட்களில் கர்பலாவில் என்ன நடந்ததோ, அவற்றை ஷியா முஸ்லிம்கள் அப்படியே செய்து காட்டுவர். போர்க்களக்காட்சி, குதிரை, இமாம் ஹுஸைன் கூடாரங்கள் முதலியவை உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்படும். இதற்கான பிரத்யேகமான துக்கக்கரமான ஆடைகள் அணிவதும் உண்டு. இரானின் தெற்குப்பகுதியில் உள்ள கொர்ரம்பாதில் மண்தேய்க்கும் வருடாந்திர விழா கொண்டாடப்படும்.

Mourners-in-Khorramabad

Mourners-in-Khorramabad

நடுத்தெருக்களில் தீ வளர்க்கப்பட்டிருக்கும். ஆண்கள்-பெண்கள் பெரிய குழிக்களில் இருக்கும் ஈரமான சேற்றில் குதித்து, உடலை சேராக்கிக் கொண்டு, பிறகு அந்த தீயில் பாய்ந்து உலர்ந்து, எழுந்து வருவர்[5]. அதாவது, இமாம் ஹுஸைன், 72 கூட்டாளிகள் முதலியோர் எவ்வாறு கொலைசெய்யப்பட்டனரோ, அதேபோல, நடத்திக் காட்டுகின்றனர்[6]. அதற்கான ஏற்பாடுகள் முன்னமே தொடங்கிவிடும். கொர்ரம்பாத், கொர்ர ராம்பாத், குர்ரம்பாத், என பலவாறு அழைக்கப்படுகின்ற, இவ்விடத்தில், லோரிஸ்தான் என்ற ஊரில் நடக்கும் பாரம்பரிய துக்கவிழாவில் அனைத்தும் அடங்கியிருக்கும்[7].

A girl covered with mud stands close to a fire to dry herself Khorramabad, Iran

A girl covered with mud stands close to a fire to dry herself Khorramabad, Iran

இமாம் ஹுஸைனின் தியாகம் ஷியாப்சுன்னி பிரிவுகளை உண்டாக்கியது: 1300 வருடங்களுக்கு முன்னர் மொஹம்மது நபியின் பேரர் / பெயரர் இமாம் அலி [Imam Husayn ibn Ali] மற்றும் அவரது மகன்கள் ஹுஸைன் மற்றும் ஹஸன் போரில் [Battle of Karbala] உயிர்தியாகம் அடைந்த நாளை அவ்வாறு கடைப்பிடிக்கிறார்கள். இமாம் அலியின் உடல் எதிரிகளால் சின்னா-பின்னமாக்கப் பட்டது. இரண்டாவது உமையாத் காலிப்பான யஜித் – I [the second Umayad caliph Yazid I] படைகளால் அவ்வாறு உயிர்தியாகம் அடைய நேர்ந்தது. குறிப்பாக ஹுஸைன் 680 அன்று இப்பொழுதைய இராக்கில், பாக்தாத்திற்கு அருகில் உள்ள கர்பலாவில் உயிர்தியாகம் செய்ததை, அதே போல தாமும் அந்த துன்பத்தை அனுபவிக்கும் வகையில், உடலை வருத்திக் கொண்டு, தமது சிரத்தையை வெளிப்படுத்திக் காட்டுவர். அக்டோபர் 24, 2015 அன்றும் உலகில் பல நாடுகளில் அத்தகைய நோன்பு கடைபிடிக்கப்பட்டது. இதுதான், அதாவது ஹுஸைனின் பலிதானம் தான், இஸ்லாம் ஷியா மற்றும் சுன்னி / சுன்னி என்று இரண்டாவதாக பிரிந்ததற்கான காரணம் என்று எடுத்துக் காட்டுகின்றனர். பத்து நாட்களாக வழிபட்டு வந்து, அஷுரா தினத்தன்று ஊர்வலமாக முஸ்லிம்கள் கைகளில் ஆயுதங்களுடன் செல்வர். ஒவ்வொருவரும், தமது உடலை அதனால், சேதித்துக் கொள்வர். யஜீத் ராணுவம் இமாம் ஹுஸைன் மற்றும் அவரது 72 நண்பர்கள் மற்றும் உறவினர்களைத் தாக்கிக் கொன்றதுடன், அவர்களுடைய கூடாரங்களுக்கும் தீ வைத்துக் கொளுத்தினர். அந்த நிகழ்சியையும் அப்படியே தத்ரூபமாக நடத்திக் காட்டுவர்[8].

KARBALA, IRAQ - NOVEMBER 13:Shia Muslims turn around a burning tent according to a ritual ceremony of the Ashura Day on November 13, 2013 in Karbala, Iraq. Muslims to celebrate the day of Ashura which is the tenth day of Muharram (the first month of the Islamic calendar), mourning the seven-century martyrdom of Prophet Mohammad's grandson Prophet Hussein (Husayn ibn Ali) who was killed in Battle of Karbala in Iraq 680 AD. (Photo By Stringer/Anadolu Agency/Getty Images)

KARBALA, IRAQ – NOVEMBER 13:Shia Muslims turn around a burning tent according to a ritual ceremony of the Ashura Day on November 13, 2013 in Karbala, Iraq. Muslims to celebrate the day of Ashura which is the tenth day of Muharram (the first month of the Islamic calendar), mourning the seven-century martyrdom of Prophet Mohammad’s grandson Prophet Hussein (Husayn ibn Ali) who was killed in Battle of Karbala in Iraq 680 AD. (Photo By Stringer/Anadolu Agency/Getty Images)

அஷுரா – பத்தாவது நாளன்று, கூடாரத்தை தீயிட்டு அழிப்பது. யஜீத் ராணுவத்தினர், எவ்வாறு கூடாரத்தை டீயிட்டுக் கொளுத்தினரோ அதேபோல செய்து காட்டுகின்ற சடங்கு.

A Shiite Muslim walks on fire at a ceremony during the Ashura festival at a mosque in central Yangon, Myanmar.

A Shiite Muslim walks on fire at a ceremony during the Ashura festival at a mosque in central Yangon, Myanmar.

கூடாரம், குதிரை, மண்குழி, தீக்குழி முதலியன: கொர்ரம்மாபாதில் பாரம்பரியமாகக் கொண்டாடப்படும், பத்துநாட்கள் துக்கவிழாவில் கூடாரம், குதிரை, கைகள், மண்குழி, தீக்குழி முதலியன இருக்கும். கூடாரங்கள் நாட்டுக்கு நாடு உருவத்தில் வேறுபட்டாலும், அதன் பின்னால் இருக்கும் இறையில் தத்துவம் ஒன்றகத்தான் இருக்கிறது. சில புகைப்படங்கள், இந்த தளத்திலிருந்து உபயோகப்படுத்தப்பட்டுள்ளது[9]. சிலர் இவையெல்லாம் இஸ்லாத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டவை அல்ல, இஸ்லாத்திற்கு முன்பாக இருந்த பழக்க-வழக்கங்கள் அவை, ஆதலால் அவற்றை ஊக்குவிக்கக் கூடாது என்றும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்[10]. சரித்திரரீதியில் அவையெல்லாம் உண்மை எனும்போது, ஒருவேளை, இக்காலத்தைய முஸ்லிம்கள் அவற்றை மறைத்தாலும், மறுத்தாலும், மறக்க நினைத்தாலும், பற்பல இடங்களில் பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வரும் விழாக்களில், சடங்குகளில், கிரியைகளில் அவை வெளிப்பட்டுவிடுகின்றன. இஸ்லாத்திற்கு முன்பிருந்தவை எல்லாமே “ஜஹல்லியா” இருண்டகாலத்தைச் சேர்ந்தது என்று ஒட்டுமொத்தமாக ஒதுக்கி வைக்க முடியாது. இந்த அண்டம், பேரண்டம் எல்லாமே இருந்து வந்துதான் உள்ளன. அவற்றில் உள்ளவை, இருந்து கொண்டுதான் இருக்கின்றன. மக்கள் இருக்கும் போது, அவர்களுடன், அந்தந்த சின்னங்கள், உருவங்கள், பழக்க-வழக்கங்கள், கிரியைகள், சடங்குகள், பண்டிகைகள், கொண்டாட்டங்கள் என்று இருந்து கொண்டுதான் இருக்கும்.

In this photo taken on Monday, Nov. 11, 2013, Myanmar Shia Muslim walks across burning embers during the Ashura festival in Yangon, Myanmar. Shia Muslims mark the Day of Ashura as a day of mourning for the death of the grandson of Prophet Muhammad. Devotees recite prayers, flagellate themselves and walk on fire to mark the day of mourning. (AP Photo/Khin Maung Win)

In this photo taken on Monday, Nov. 11, 2013, Myanmar Shia Muslim walks across burning embers during the Ashura festival in Yangon, Myanmar. Shia Muslims mark the Day of Ashura as a day of mourning for the death of the grandson of Prophet Muhammad. Devotees recite prayers, flagellate themselves and walk on fire to mark the day of mourning. (AP Photo/Khin Maung Win)

நாவாஸ் ஷெரிப்பின் மொஹர்ரம் சந்தேசம்அறிவிப்பு, இந்திய விரோதமாகத்தான் இருக்கிறது: ஆனால், பாகிஸ்தானின் பிரதம மந்திரி அதனையும் அரசியலாக்கி, “பாகிஸ்தானின் இஸ்லாமிய குடியரசை எவை பாதிக்கின்றன, அதன் ஒற்றுமையை குலைக்கின்றன என்பதனை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். தீர்த்து வைக்கப்படாத காஷ்மீர் பிரச்சினை, இப்பகுதியில் அமைதியைக் குலைப்பதாக உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் உள்ள மக்களின் உரிமைகள் மீறப்படுகின்றன”, என்றெல்லாம் கூறியிருக்கிறார்[11]. பாகிஸ்தானில் அடிக்கடி ஷியா முஸ்லிம்கள் கொல்லப்படுகின்றனர்; அவர்களது மசூதிகளில் குண்டுவெடிப்பு நடத்தி தரைமட்டம் ஆக்கப்படுகின்றன; அந்நிலையில் குரான் புத்தகங்களும் எரிக்கப்பட்டுள்ளது, பாதிக்கப்பட்டுள்ளன. அப்பொழுது, அவர்களது உரிமைகளைப் பற்றி இவர் கவலைப்பட்டாரா, இதே மாதிரியான கருத்தை வெளியிட்டாரா என்று தெரியவில்லை. பிரதம மந்திரியாக இருப்பதால், வருந்துகிறேன், கண்டிக்கிறேன் என்று சொல்லியிருக்கலாம், ஆனால், குண்டுகள் வெடிப்பது, மசூதிகள் இடிக்கப்படுவது, ஷியா முஸ்லிம்கள் கொல்லப்படுவது நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

© வேதபிரகாஷ்

26-10-2015

[1] http://www.dailymotion.com/video/x17k38t_bloodshed-at-panja-sharif-karbala-muharram_travel

[2] http://www.dailymotion.com/video/x295sgh_bas-ya-hussain-bas-ya-hussain-by-nadeem-sarwar-must-watch-online-dailymotion_music

[3] http://www.dailymotion.com/video/x17i464_everyone-taking-the-blessings-of-holy-horse-muharram_travel

[4] https://www.rt.com/news/319654-ashura-blood-muslim-cut/

[5] Karbala and other cities hosted reenactments of what Shi’ites refer to as Hussein’s martyrdom, complete with horseback warriors and the annual ‘mud rubbing’ ceremony took place in Khorramabad, southern Iran. Hundreds of men and women jumped into vats of wet mud before standing by huge bonfires lit in the middle of the streets to dry it on their skin and clothes. ‘Mud Rubbing’ is a traditional ceremony that is held in the city of Khorramabad every year to commemorate the Ashura day. Read more: http://www.dailymail.co.uk/news/article-3287819/Spilling-blood-religion-Tiny-Shi-ite-Muslim-boys-whip-sharp-blades-mourn-death-Prophet-Muhammad-s-grandson.html#ixzz3pd0lrpVo
Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook

[6] http://www.dailymail.co.uk/news/article-3287819/Spilling-blood-religion-Tiny-Shi-ite-Muslim-boys-whip-sharp-blades-mourn-death-Prophet-Muhammad-s-grandson.html

[7] http://www.payvand.com/news/09/jan/1090.html

[8] http://en.abna24.com/service/pictorial/archive/2015/10/25/716789/story.html

[9] http://www.huffingtonpost.com/2013/11/14/photos-ashura_n_4274307.html?ir=India&adsSiteOverride=in

[10] The Messenger of Allah,Muhammad S strictly forbade such display of sorrow and grief, as these were traditions from the days of pre-Islamic Jahiliyah (Ignorance). Many Bid’at (Innovations) have been associated with the day of ‘Ashurah (Tenth day of Muharram) by another group of ignorantMuslims who celebrate the day like ‘Id.  Some of the Bid’at (Innovations) are applying Kohl and Henna, shaking hands with each other and cooking grains(Hubub) or other special dishes. There is absolutely no evidence to this effect in any SahihHadith (Authentic Tradition ofMuhammad S) or Da’if (Weak)tradition, nor is any evidence of this being done by any of his Sahabah (Companions). None of the Khulafa (Caliphs) of theMuslims or anyone from the Tabi’in encouraged or recommended such things. http://www.islam4theworld.net/islamic_calendar/muharram.htm

[11] Meanwhile, in his message on the Ashuraday, the Prime Minister said on this day, “we must recognize the elements who are harming the Islamic Republic of Pakistan and want to shatter the unity of nation in pursuance of their selfish interests”. He said, “the unresolved Kashmir had become a problem for regional peace and also for the people of Jammu Kashmir, who were being subjected to grave human rights violations”.

http://financialspots.com/2015/10/25/shiite-muslims-around-the-world-mark-ashura/

கற்பழிப்பில் கூட மதம் பார்க்கும் முஸ்லிம்கள், முஸ்லிம்களை ஆதரிக்கும் முல்லாயம் சிங் யாதவ், தட்டிக் கேட்கத் தயங்கும் கூட்டணி சோனியா-பிரியங்கா பெண்மணிகள்!

ஏப்ரல் 27, 2014

கற்பழிப்பில் கூட மதம் பார்க்கும் முஸ்லிம்கள், முஸ்லிம்களை ஆதரிக்கும் முல்லாயம் சிங் யாதவ், தட்டிக் கேட்கத் தயங்கும் கூட்டணி சோனியா-பிரியங்கா பெண்மணிகள்! 

ராஜ் தாக்கரே, முல்லாயமிற்கு அம்மா, சகோதரிகள் எல்லோரும் இருக்கிறார்கள் அல்லவா என்று காட்டமாக கேட்டிருக்கிறார்.

ராஜ் தாக்கரே, முல்லாயமிற்கு அம்மா, சகோதரிகள் எல்லோரும் இருக்கிறார்கள் அல்லவா என்று காட்டமாக கேட்டிருக்கிறார்.

கற்பழிப்புச் சட்டத்தை மாற்றுவோம் என்ற முல்லாயம்: உத்தரபிரதேச மாநிலம், மொரதாபாத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் சமாஜ்வாடி கட்சித்தலைவர் முலாயம்சிங் கலந்து கொண்டு பேசினார்[1]. அப்போது அவர், “ பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்கள் சிறுவர்கள். அவர்கள் அப்படி-இப்படி என்றுதான் இருப்பார்கள். இளம் வயதினர் தவறிழைப்பது சகஜம். கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிப்பது சரியல்ல.  அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கக்கூடாது, மத்தியில் சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தால்,  கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு கடும்தண்டனை விதிக்கும் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவோம்” என கூறினார்[2].  இதனை கட்சி தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளனர். இந்தக்கருத்துசர்ச்சையைஏற்படுத்திஉள்ளது. வழக்கம் போல ஆஸம் கானும் பேசியிருக்கிறார். இதனால், உபி மக்கள் இத்தகைய அரசியல்வாதிகளை நம்பி ஆட்சியை ஒப்படைப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில், முசபர்நகர் கலவரமே, முஸ்லிம் இளைஞர்கள் இந்து பெண்களை கலாட்டா செய்தது முதல் மானபங்கம், கற்பழிப்பு என்று வளர்ந்ததால் ஏற்பட்டது என்பது நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்[3]. ராஜ் தாக்கரே, முல்லாயமிற்கு அம்மா, சகோதரிகள் எல்லோரும் இருக்கிறார்கள் அல்லவா என்று காட்டமாக கேட்டிருக்கிறார்.

Azmi-mullayam-rape-graphic

Azmi-mullayam-rape-graphic

முல்லாயம் ஏன் கற்பழிப்பில் கூட முஸ்லிம்களை ஆதரிக்கிறார்: முல்லாயம் ஒன்றும் இப்படி திடீரென்று பேசிவிடவில்லை. அவர் எப்பொழுதும் முஸ்லிம்களை தாஜா செய்வதில் வல்லவர். சென்ற வருடம் முஹ்ஹமது ஆஸம் கான் (உபி அமைச்சர்) கூட்டு கற்பழிப்பு வழக்குகள் எல்லாம் ஒரு மாதத்தில் முடிக்கப் படவேண்டும் என்றார்[4]. முசபர்நகர் கலவரங்களுக்கு இவருக்கு பங்கு உள்ளது[5]. கலவரத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களை கைது செய்ய வேண்டாம் என்று போலீசாருக்கு அழுத்தம் கொடுத்தார். ஆரம்பத்திலேயே, கற்பழிப்பில் ஈடுபட்ட முஸ்லிம்களை கைது செய்திருந்தால், கலவரமே நடந்திருக்காது. வழக்குகள் பொதுவாக ஆண்டுக்கணக்கில் நடக்கும். அவ்வாறு ஒருவேளை நீட்டித்தால், போலீசார் உண்மையினை சொல்லக் கூடும், சொன்னால், இவரது பங்கு வெளிப்பட்டு விடும். ஆனால் அவை மறைக்கப்பட்டது. மொஹம்மது ஆஸம் கான் என்ற பாராளுமன்ற விவகார அமைச்சர் பிப்ரவரி 2014ல், புதிய கற்பழிப்புச் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப் படாது என்று உறுதி அளித்தார்[6]. இவையெல்லாம், கற்பழிப்பிலபீடுபட்ட முஸ்லிம் இளைஞர்களை காப்பாற்றுவதற்குத்தான் என்று ஊர்ஜிதம் ஆகிறது. நிர்பயா வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்ட முஸ்லிம் இளைஞன் சிறுவன் என்று சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டிருக்கிறான்.

Mullayam, Abu Azmi rape islam - punishment - 2014.

Mullayam, Abu Azmi rape islam – punishment – 2014.

அபு ஆஸ்மி என்கின்ற அக்கட்சியின் இன்னொரு தலைவர் முஸ்லிம் என்ற ரீதியில் பேசியது: இந்த நிலையில் முலாயம்சிங் யாதவ் கருத்துக்கு நேர் எதிராக, அந்தக் கட்சியின் மராட்டிய மாநில தலைவர் அபு ஆஸ்மி,  மும்பையில் இருந்து வெளிவருகின்ற பிரபல மிட்-டே[7] என்கின்ற ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கருத்து வெளியிட்டார்[8]. ‘கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரணதண்ட னைகூடாது’ என்ற முலாயம் சிங்  யாதவ் கருத்து பற்றிய கேள்விக்கு அவர் விரிவான பதில் அளித்து கூறியதாவது: திருமண பந்தத்துக்கு அப்பால், எந்தவொரு பெண்ணும், மற்றொரு ஆணுடன் சம்மதித்தோ அல்லது சம்மதிக்காமலோ செக்ஸ் உறவு கொண்டால், அந்தப் பெண்ணை தூக்கில் போட வேண்டும்.  கற்பழிப்புக்கு ஆளாகிற பெண்ணுக்கும் தண்டனை விதிக்க வேண்டும்.  இஸ்லாமிய மதத்தில், கற்பழிப்புக்கு தூக்குதான் தண்டனை.  ஆனால் இங்கே பெண்களுக்கு எதுவும் நேர்வதில்லை.  பெண் குற்றவாளி என கண்டு கொண்டாலும் கூட. இந்தியாவில் நீங்கள் ஒரு பெண்ணின் சம்மதத்துடன் அவளோடு செக்ஸ் உறவு வைத்துக் கொண்டால் அதில் பிரச்சினை இல்லை.  ஆனால், அந்தப் பெண் புகார் செய்தால் அது பிரச்சினை ஆகிவிடும். இப்போதெல்லாம் இப்படி நிறைய விவகாரங்கள் வருவதைப் பார்க்க முடிகிறது.தங்களை ஒருவர் தொட்டால் இளம்பெண்கள் புகார் செய்கிறார்கள்.  அப்படி தொடாவிட்டாலும் புகார் கூறுகிறார்கள். இதனால், அது பிரச்சினையாகிறது.  அந்த ஆணின் மதிப்பை சீரழித்து விடுகிறது. சம்மதித்தோ, சம்மதிக்காமலோ கற்பழிப்பு என்று ஒன்று நடந்தால்,  இஸ்லாமில் கூறி உள்ளபடி தூக்கில் போட வேண்டும். இவ்வாறு அவர்கூறினார்.

Islam rape father-in-law  daughter-in-law 2014

Islam rape father-in-law daughter-in-law 2014

திருமணமானாலும் சரி, திருமணமாகாவிட்டாலும் சரி, ஒரு ஆணுடன் செல்கிறாள் என்றால், இருவரையும் தூக்கில் போட வேண்டும்: சரி, கற்பழிப்பு பிரச்சினைக்கு என்னதான் தீர்வு என்று கேட்டபோது அபு ஆஸ்மி, “ஒரு பெண்ணின் சம்மதத்துடன் செக்ஸ் உறவு நடந்தாலும் சரி,  திருமணம் ஆகியிருந்தால் அதை அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்[9].அபு ஆஸ்மியின் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன.  இப்படி அபு ஆஸ்மி சர்ச்சை கருத்துக்களை கூறுவது ஒன்றும் புதிதல்ல. டெல்லியில் துணை மருத்துவ மாணவி ஒருவர் பஸ்சில்  6 காமுகர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது அபு ஆஸ்மி,  “உறவினர் அல்லாத ஆண்களுடன் பெண் வெளியே போகக் கூடாது.  உறவு இல்லாத ஒரு ஆணுடன் இரவில் சுற்றித் திரிவதற்கு அந்தப் பெண்ணுக்கு என்ன அவசியம் வந்தது? இதை தடுத்து நிறுத்த வேண்டும்”, என கூறியது நினைவு கூரத் தக்கது. இந்த அபு ஆஸ்மியின் மறுமகள், ஆயிஸா தகியா ஆஸ்மி, ஒரு கவர்ச்சி நடிகை, அவரது புகைபடங்களை பார்க்கும் போதே அவர் எப்படி நடிக்கத் தயாராக உள்ளார் என்பது தெரியும். நடிக்கும் போது, பல ஆண்களுடன் சென்றிருப்பார், சினிமாவில் நடிக்கும் போது பல ஆண்களும் தொட்டிருப்பார்கள். இவற்றை இஸ்லாம் அனுமதிக்காது என்றால், எந்த முஸ்லிம் பெண்ணும் சினிமாவில் நடிக்க முடியாது. அம்மறுமகள், தனது தந்தை கூறியது பற்றி மிகவும் அசிங்கப் படுகிறேன், வெட்கப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்[10]. மகன் பர்ஹன் ஆஸ்மியும் அவ்வாறே கூறியுள்ளார்[11].

Mullayam-Ragul-rape-2014

Mullayam-Ragul-rape-2014

மகாராஷ்டிரா பெண்கள் ஆணையம் முன்பு ஆஜராகி எழுத்து மூலம் கொடுத்த பதில்:  திருமண பந்தத்துக்கு வெளியே பாலியல் உறவுவைத்து கொள்ளும் பெண்களை தூக்கில் போடவேண்டும் என்ற தனது கருத்தை மகாராஷ்டிரா பெண்கள் ஆணையத்தில் ஆஜராகி அபு ஆஸ்மி உறுதிப்பட தெரிவித்தார். பெண்கள் திருமணபந்தத்துக்கு வெளியே வேறு ஒரு ஆணுடன் உறவுவைத்தால்,  அந்த பெண்ணை தூக்கில் போடவேண்டும் என்று மராட்டிய மாநில சமாஜ் வாடி கட்சிதலைவரும், எம்.எல்.ஏ.வுமான அபு ஆஸ்மி சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டார்[12]. பெண்களின் மனதை புண்படுத்தும்படி பேசியதற்காக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அவருக்கு மகாராஷ்டிரா பெண்கள் ஆணையம் சம்மன் அனுப்பியது. அதன்படி,  அபு ஆஸ்மி நேற்று பெண்கள் கமிஷனில் அதன் தலைவர் சுஷிபென் ஷா முன்னிலையில் ஆஜரானார். அப்போது, எழுத்துப் பூர்வமாக அவர் விளக்கம் அளித்தார். அதில், திருமணபந்தத்துக்கு வெளியே செக்ஸ் உறவு வைத்து கொள்ளும் பெண்கள் நிச்சயம் தண்டிக்கப் படவேண்டும் என்ற தனது கருத்தை உறுதிப்பட தெரிவித்தார்[13]. பின்னர் அபு ஆஸ்மி செய்தியாளர்களிடம் கூறும்போது, ”எங்களது மதம் திருமணபந்தத்துக்கு வெளியே பெண்களை பாலியல் உறவுவைக்க அனுமதிக்காது. ஆணும்,  பெண்ணும் திருமணபந்தத்தை மீறியோ அல்லது பரஸ்பர சம்மத்துடன் உறவு வைத்தாலும் அவர்கள் இருவரும் தண்டிக்கப்பட வேண்டும்.  இது போன்ற சந்தர்ப்பங்களில், பெண்கள் சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள்.  தாமாக முன்வந்து ஆணுடன் பாலியல் உறவு வைத்து கொள்ளும் அவர்கள், பின்னர் ஆண்கள் மீது புகார் கொடுக்கிறார்கள்.  இதனால் பேரழிவு விளைவுகள் ஏற்படுகிறது”, என்றார்.

Mullayam-Ragul-rape-death- 2014

Mullayam-Ragul-rape-death- 2014

பெண்கள் ஆணையம்  பதிலடி: அபு ஆஸம் தனது, முஸ்லிம் என்ற போக்கில் ஏதோ இந்திய சட்டங்கள் தனக்கு ஒவ்வாது என்பது போல வாதிட்டதை விமர்சித்து, பெண்கள் ஆணைய தலைவர் சுஷிபென்ஷா, ”இந்திய அரசியலமைப்பு சட்டம், உச்சநீதி மன்றம் போன்றவை குடும்ப வன்கொடுமை சட்டத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. முஸ்லிம் பெண்கள் உள்பட அனைத்து மதபெண்களுக்கும் பாதுகாப்பு அளித்து வருகிறது என்று கூறினார். நமது நாட்டில் உள்ள சட்டதிட்டங்கள் அனைத்தும் சாதி, மதம், இனம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் அனைத்து பெண்களுக்கும் சமமானது.  சமுதாயத்தில் உயர்மட்டத்தில் இருக்கும் தலைவர்கள் இதுபோன்ற பிற்போக்கு கருத்துக்களை வெளியிடக் கூடாது” என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்[14].  என்னத்தான் நாகரிகமாக இருந்தாலும், அடிப்படைவாதம் முஸ்லிம்களை ஆட்டிப் படைக்கும் போது, அவர்கள் இப்படித்தான் உள்ளார்கள் என்று வெளிப்படுகிறது. இருப்பினும் செக்யூலரிஸப் பழங்கள் இதனைத் தட்டி கேட்கவில்லை.

Sonia Imam secularism 2014

Sonia Imam secularism 2014

குவியும்கண்டனம்…என்று “தி இந்து” வெளியிட்டுள்ளது[15]: சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், மூத்த தலைவர் அபு ஆஸ்மி ஆகியோரின் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.  ஆண்களுக்கு கர்ப்பப்பை இருந்திருந்தால் இதை இயல்பானதாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று கூறுவார்களா? நமது ஆணாதிக்க,  சாதிய சமுதாயம் இப்படிப்பட்ட கருத்துகளை பேசக்கூடிய சௌகரியத்தை தந்திருக்கிறது. ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்ட பெண்களை சந்தோஷ கருவிகளாகத்தான் பார்ப்பார்கள் என்பதை இந்த கருத்துகள் வெளிப்படுத்துகின்றன. என்று கூறியுள்ளது. சமூகஆர்வலர் வ. கீதா  கூறியது, “இவர்கள் வேண்டுமென்றே கவனத்தை ஈர்ப்பதற்காக இப்படி பேசுகிறார்கள்.  பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை இயல்பாக எடுத்து கொள்ள வேண்டுமென்றால்,  இயல்பாக ஆண்கள் வக்கிர புத்தியுடையவர்கள், இம்சிக்கக் கூடியவர்கள் என்று கூறுகிறாரா? இவர்கள் பெண்களைப் பற்றி எப்போதுமே உயர்வாக பேசியதில்லை”. மருத்துவக் கல்லூரி மாணவி ஷில்பா கூறியது, “திருமண உறவுக்கு அப்பாற்பட்ட உடலுறவு கொள்ளும் பெண்களை தூக்கிலிட வேண்டுமானால், மனைவியைத் தவிரவேறு பெண்களுடனும், பாலியல் தொழிலாளிகளுடனும் உடலுறவு கொள்ளும் ஆண்களை என்ன செய்யவேண்டும் என்று கூறுகிறார்கள்? ஆண் தவறு செய்தால் “கொஞ்சம் அனுசரித்துப் போ” என்று கூறும் இந்த சமூகத்துக்கு பெண்ணை தூக்கிலிட வேண்டும் என்று கூறும் தகுதியில்லை”, என்றாராம்.

priyanka attacking modi 2014

priyanka attacking modi 2014

கற்பழிப்பில் யுபி முதலிடம்: ஆனால், இவையெல்லாம் அபு ஆஸம், ஆஸம் கான், முல்லாயம் சிங் முதலியோருக்கு எட்டப் போவதில்லை. கற்பழிப்பு என்று வரும்போது, 2011லிருந்து வடவிந்தியாவில் உபியில் தான் அதிகமாக உள்ளது[16]. கற்பழிப்பில் முதலிடம் அல்லது உபி மாடல் என்று இதை யாரும் பேசுவதில்லை. பெண்களான சோனியா, பிரியங்கா முதலியோர் உபியில் பிரச்சாரம் செய்யும் போது, இதைப் பற்றிப் பேசுவது கிடையாது. மத்தியில் சமாஜ்வாடி கட்சி ஆட்சிக்கு வந்தால், கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு கடும்தண்டனை விதிக்கும் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவோம்” என கூறினார்[17]. இதனை கட்சி தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், ஊடகப் புலிகள் இதைப் பற்றி அலசுவதில்லை. கூட்டணி சோனியா-பிரியங்கா பெண்மணிகளும் இதனைத் தட்டிக் கேட்கத் தயங்குகின்றன. மோடி “ஸ்னூப்பிங்” செய்கிறார் என்று கிண்டலடித்த பிரியங்காவிற்கு, இந்த ரேப் சமாச்சாரம் பெரிதாகத் தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

27-04-2014

[1] Samajwadi Party chief Mulayam Singh Yadav has sparked an outrage with his latest comments on rape. According to news reports, the SP leader said in a Moradabad rally in Uttar Pradesh that, ‘men commit mistakes but they can’t be hanged for it.’ Yadav was referring to the Shakti Mills gangrape case where the men were sentenced to death by a court for raping a photo-journalist under the new rape law. Yadav said, “Boy and girl develop differences later on in the relationship, when that happens, the girl goes on gives a statement saying that she was raped… Now those three have been sentenced to death…Kya rape main phansi di jayegi (Will you hand out death sentences in rape)…Ladke hain galti ho jati hai (they are boys they make mistakes.) This kind of law should be changed and we will do that.”

[2] http://www.firstpost.com/topic/person/mulayam-singh-yadav-profile-15081.html

[3] http://headlinestoday.intoday.in/programme/up-gangrape-victims-akhilesh-government-uttar-pradesh-government-submission-supreme-court/1/343212.html

[4]The Uttar Pradesh Urban Development minister yesterday (P ress Trust of India  |  Varanasi  February 4, 2013)  said here that witnesses turning hostile in such cases should be treated at par with the guilty and should be tried by law. He said police should expeditiously file chargesheets in such cases to enable trials to be completed within a month.

http://www.business-standard.com/article/pti-stories/trials-in-gang-rape-should-be-finished-in-a-month-azam-khan-113020400283_1.html

[5] Khan, the Muslim face of Akhilesh Yadav’s cabinet, allegedly put pressure on cops that people from one community should not be arrested. Headlines Today | September 18, 2013

http://indiatoday.intoday.in/video/muzaffarnagar-riots-operation-riot-for-votes-azam-khan-uttar-pradesh-police/1/310384.html

[6] Parliamentary affairs minister Mohammad Azam Khan on Tuesday assured the House that the government would find means to ensure the new rape law was not misused. Azam was replying on the concern raised by BJP MLA Suresh Khanna that the new rape law was being misused to settle scores with political opponents.

http://timesofindia.indiatimes.com/city/lucknow/No-misuse-of-rape-law-assures-Azam-Khan/articleshow/31012831.cms

[7] http://www.mid-day.com/articles/shocking-women-having-sex-should-be-hanged-says-abu-azmi/15222050#sthash.nSilsAtR.dpuf

[8] http://www.maalaimalar.com/2014/04/12092118/molested-woman-punishment-abu.html

[9]மாலைமலர்,கற்பழிப்புக்குஆளாகிறபெண்ணுக்கும்தண்டனைவிதிக்கவேண்டும்: அபுஆஸ்மி, பதிவுசெய்தநாள் : சனிக்கிழமை, ஏப்ரல் 12, 9:21 AM IST

[10] Ayesha Takia Azmi, a Bollywood actor, who is married to Azmi’s son Farhan, said on Twitter that she and her husband were “deeply embarrassed” and “ashamed” on his father-in-law’s remarks.

http://indiatoday.intoday.in/story/abu-azmi-remark-on-women-ayesha-takia-azmi-farhan-azmi/1/355159.html

[11] http://zeenews.india.com/news/nation/shamed-by-father-in-law-abu-azmi-s-statements-ayesha-takia_923734.html

[12] http://tamil.oneindia.in/news/india/sp-leader-abu-azmi-explains-his-punish-women-too-remarks-women-199264.html

[13]  தமிழ்ஒன்இந்தியா,திருமணபந்தத்துக்குவெளியேபாலுறவுகொள்ளும்பெண்களைதூக்கில்தான்போடனும்அபுஆஸ்மி, Posted by: Mayura Akilan, Updated: Saturday, April 26, 2014, 10:00 [IST]

[14] http://www.dailythanthi.com/2014-04-25-SP-leader-Abu-Azmi-explains-his-punish-women-too-remarks-to-Maharashtra-womens-commission

[15] http://tamil.thehindu.com/india/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/article5902912.ece

[16] SP’s manifesto has also promised that it will seek to change the new rape-law if it does come to power. When it comes to rape, UP had the highest rapes in any state in North India for 2011. For SP leaders to believe that rape isn’t such a serious problem and that it is the law that needs to change, just highlights how difficult it will be to tackle rape in UP.

[17] http://www.firstpost.com/topic/person/mulayam-singh-yadav-profile-15081.html