தாவூத் ஜிலானி, தஹவ்வூர் ரானாவின் ஆவணங்கள் மறைந்து விட்டன என்றார்கள்!
இப்பொழுது கிடைத்துவிட்டது என்கிறர்கள்!
கசப்புக்காரன் கஸபும் இப்படித்தான் மாறி-மாறி பேசுகிறான்!
முதலில் இப்படி………………………………………..
ஹெட்லியின் விசா ஆவணங்கள் கிடைக்கவில்லை, ராணாவுடையது உள்ளது: அரசு
தட்ஸ்தமிழ் – 17 டிச., 2009
டெல்லி: மும்பை தீவிரவாத தாக்குதல் தொடர்பாக சிக்கியுள்ள ராணாவின் விசா ஆவணங்கள் கிடைத்து விட்டது. ஆனால் ஹெட்லியின் ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை என வெளியுறவு இணையமைச்சர் …
விசா காணோம் : பயங்கரவாதி ஹெட்லி விஷயத்தில் குழப்பம்
டிசம்பர் 18,2009,00:00 IST
http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5977
பிறகு இப்படி………………………………………………………………..
ஹேட்லியின் விசா ஆவணங்கள் கண்டுபிடிப்பு
தினமணி – 16 மணிநேரம் முன்பு
சிகாகோ, டிச.19- இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட டேவிட் ஹேட்லியின் (48) விசா ஆவணங்கள் சிகாகோவில் உள்ள இந்திய தூதரகத்தில் …
வெப்துனியா – 16 மணிநேரம் முன்பு
மும்பை தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாற்றில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதி ஹெட்லியின் அசல் விசா விண்ணப்பம் கைப்பற்றப்பட்டுள்ளதாக …
விசா காணோம் : பயங்கரவாதி ஹெட்லி விஷயத்தில் குழப்பம்
டிசம்பர் 18,2009,00:00 IST
http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5977

புதுடில்லி : “அமெரிக்காவில் கைதான பயங்கரவாதிகள் டேவிட் ஹெட்லி மற்றும் தகாவுர் ராணாவின் விசா ஆவணங்கள் காணாமல் போயின. இதில், ராணா தொடர்பான ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. ஹெட்லி தொடர்பான ஆவணங்கள் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை’ என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், “இந்த பயங்கரவாதிகள் இருவர் தொடர்பான விசா ஆவணங்கள் எதுவும் காணாமல் போகவில்லை’ என, சிகாகோவில் உள்ள இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது.
லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் தூண்டுதலின் பேரில், இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய, அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஹெட்லி என்பவனையும், அவனது கூட்டாளி தகாவுர் ராணா என்பவனையும், அந்நாட்டின் பெடரல் புலனாய்வு நிறுவனத்தினர் கைது செய்தனர். இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த பயங்கரவாதிகள் இருவரும் அடிக்கடி இந்தியா வந்து சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது.
இந்நிலையில், சிகாகோவில் உள்ள இந்திய துணை தூதரகம், இந்த பயங்கரவாதிகள் இருவருக்கும் விதிமுறைகளை மீறி விசா வழங்கியுள்ளதாகவும், அது தொடர்பான ஆவணங்கள் காணாமல் போய் விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக நேற்று நிருபர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் சசி தரூர் கூறுகையில், “”டேவிட் ஹெட்லி தொடர்பான விசா ஆவணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை; ராணாவுடையது கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. ஹெட்லி தொடர்பான விசா ஆவணங்களைத் தேடி வருகிறோம்,” என்றார். இதற்கிடையில், சிகாகோவில் உள்ள இந்திய துணை தூதரகம், “ஹெட்லி மற்றும் ராணா ஆகிய இருவரும் விசா பெற சமர்ப்பித்த ஆவணங்கள் காணாமல் போய்விட்டதாக நாங்கள் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. இருவருக்கும் விசா வழங்கியது தொடர்பான சம்பந்தப்பட்ட விவரங்கள் இந்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளன. எந்த ஆவணங்களும் காணாமல் போகவில்லை. இந்திய அரசு இதை நன்கு அறியும்’ என தெரிவித்துள்ளது.
மறுப்பு: அதே நேரத்தில், இந்த விவகாரம் தொடர்பாக எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்க வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் மறுத்து விட்டார். இது பற்றி அவர் கூறுகையில், “”சிகாகோவில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் இருந்து உண்மை விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. தற்போது இந்த விவகாரம் விசாரணையில் உள்ளது. எதற்கும் சில விதிமுறைகள் உள்ளன. இந்தப் பிரச்னை தொடர்பான எந்த கேள்விகளுக்கும் நான் பதிலளிக்க முடியாது,” என்றார். வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவிடம் இது பற்றி கேட்ட போது, “”சிகாகோவில் உள்ள துணை தூதர் அசோக் அட்ரியிடம் இருந்து அரசு அறிக்கை கேட்டுள்ளது. அறிக்கை கிடைத்தவுடன், இந்தப் பிரச்னையை எப்படி கையாள்வது என்பது முடிவு செய்யப்படும். மீடியாக்களில் வந்த செய்திகளின் அடிப்படையில், நான் இப்போதைக்கு எதையும் தெரிவிக்க முடியாது. இந்த விவகாரத்தில் அரசின் பொறுப்பு என்ன என்பது தெரியும்; அதை கட்டாயம் நிறைவேற்றுவோம்,” என்றார்.
இதற்கிடையில், சிகாகோ கோர்ட்டில், ராணா மற்றும் ஹெட்லிக்கு எதிராக அமெரிக்க புலனாய்வுத் துறையினர் வழக்கு பதிவு செய்ததை அடுத்து, அவர்கள் இருவரின் இந்திய விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன், ராணாவின் மனைவி சாம்ராஸ் ராணா அக்தர் மற்றும் அவரின் வர்த்தக கூட்டாளி ரேமாண்ட் சான்டர்ஸ் ஆகியோரின் விசாக்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பான சுற்றறிக்கை ஒன்று, அனைத்து நாட்டு தூதரகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. ஹெட்லிக்கு பல முறை இந்தியா வந்து செல்லும் வகையிலும், ஐந்து ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில், 2007ம் ஆண்டில் வர்த்தக விசா வழங்கப்பட்டுள்ளது. ராணாவுக்கு 2011 மார்ச் மாதம் வரை செல்லத்தக்க வகையில், ஒரு ஆண்டுக்கான வர்த்தக விசா வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இந்தியாவுக்கு வந்திருக்கும் போது, 180க்கும் குறைவான நாட்கள் தங்கியிருந்தால், போலீசிடம் தகவல் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.
அரசு அறிக்கை எங்கே? எம்.பி.,க்கள் கோரிக்கை: அமெரிக்காவில் கைதான ஹெட்லி மற்றும் ராணாவிடம் விசாரணை நடத்த, இந்திய அதிகாரிகளுக்கு அமெரிக்க புலனாய்வு நிறுவனத்தினர் அனுமதி வழங்கவில்லை. அப்படிப்பட்ட நிலையில், இந்த பயங்கரவாதிகள் தொடர்பான விசாரணையில், இந்தியாவுக்கு அமெரிக்கா எப்படிப்பட்ட ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. இது தொடர்பாக அரசு அறிக்கை வெளியிட வேண்டுமென, ராஜ்யசபாவில் நேற்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
பூஜ்ய நேரத்தில் இந்தப் பிரச்னையை எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கூறியதாவது: ஹெட்லி மற்றும் ராணா தொடர்பான அனைத்து விவரங்களையும், அவர்களிடம் நடத்தப்படும் விசாரணை விவரங்களையும் இந்தியாவுக்கு அமெரிக்கா தருகிறதா என்பதை தெரிவிக்க வேண்டும். மும்பை தாக்குதலுக்கு முன்னரே ஹெட்லி தொடர்பான விவரங்களை எப்.பி.ஐ., சேகரித்துள்ளது. இருந்தாலும், சமீபத்தில் அவன் கைதான பின்னரே பல முக்கிய விவரங்கள் வெளிவந்துள்ளன. ஹெட்லி தொடர்பாக தேசிய புலனாய்வு நிறுவனம் மேற்கொண்டுள்ள விசாரணையில், தெரியவந்த விவரங்களையும் விவரிக்க வேண்டும். எப்.பி.ஐ., அதிகாரிகள், ஹெட்லியை பிடித்த பின்னரே அவனுக்கு மும்பை தாக்குதலில் தொடர்புள்ளது தெரிய வந்துள்ளது. அதற்கு முன்னர், அவன் பெயர் சந்தேகத்திற்குரியவர்கள் பட்டியலில் இடம் பெறாதது ஏன்? யாரின் தூண்டுதலில் ஹெட்லி செயல்பட்டான். இந்த விவரங்களை எல்லாம் அரசு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு எம்.பி.,க்கள் கோரினர்.
Rana’s visa papers found, Headley’s being traced: Tharoor
http://news.in.msn.com/national/article.aspx?cp-documentid=3486746&page=0
New Delhi/Washington: The visa papers of one of two Mumbai conspirators now in US custody have been found and the other’s are being traced, the Indian government said Thursday.
Source: IANS
அண்மைய பின்னூட்டங்கள்