ஆம்பூர் கலவரம் – முஸ்லிம்கள் இந்துபெண்களை குறிவைப்பது ஏன் – அப்பிரச்சினை இல்லாதிருந்தால், இவ்வளவு நடந்திருக்குமா? (3)
பவித்ராவின் மறுபக்கம் (நக்கீரன்)[1]: மாயமான பவித்ராவை மையங்கொண்டே ஷகீல் அகமது மரணமும், ஆம்பூர் கலவரமும் வெடித்திருக்கிறது. தற்போது பவித்ரா கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார். பவித்ரா யார்? இவர் மாயமானது ஏன்? கண்டு பிடிக்கப்பட்டது எப்படி? என்று கேள்விகளை எழுப்பி பவித்ரா புராணம் பாடியியுக்கிறது நக்கீரன் பத்திரிக்கை. திருவண்ணாமலை மாவட்ட கண்ணமங்கலத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன்-செல்வி ஆகியோரின் மகள்தான் பவித்ரா. சிறுமியாக இருக்கும் போதே பவித்ராவை, குச்சிப்பாளையத்தில் இருக்கும் அவளது பாட்டி ராதாம்மாளிடம் வளர்க்கக் கொடுத்துவிட்டார்கள். அவர்தான் வளர்த்து 10 ஆம் வகுப்புவரை படிக்கவைத்தார். 10ஆம் வகுப்பில் ஃபெயிலான பவித்ராவுக்கு அதற்கு மேல் படிக்க ஆர்வம் இல்லை. ஒருவருடம் வீட்டிலேயே இருந்த அவரை, அவரது மாமா மகனான பழனிக்கு 7 வருடங்களுக்கு முன் கட்டிவைத்தனர்[2]. அப்போது பவித்ராவிற்கு வயது 17. அவரை விட பழனி 10 வயது மூத்தவர். திருமணமான 3 ஆம் வருடம் பவித்ராவிற்கு ரிஷிதா என்ற பெண் குழந்தை பிறந்தது. இதன்பின் வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்கவில்லை என ஊர்ப்பெண்கள் சிலர் வேலைபார்க்கும்ஷூ’ கம்பெனிக்கு வேலைக்கு போனார் பவித்ரா.
பவித்ரா திசை மாறியதைப் பற்றி மாலைமலரின் விவரங்கள்: “சுறுசுறுப்பான கேரக்டர் உடைய பவித்ராவுக்கு குழந்தையை கவனித்துக் கொண்டு வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. எனவே வேலைக்கு செல்லப்போகிறேன் என்று அடம் பிடித்தார். இறுதியில் ஆம்பூர் பகுதியில் உள்ள , ’டெல்டா ஷூ கம்பெனிக்கு வேலைக்கு போனார் பவித்ரா. டெல்டா ஷூ பிரைவேட் லிமிடெட், பரிதா குழுமத்தைச் செர்ர்ந்த கம்பெனி[3]. அங்கிருந்து அவரது பாதை மாறும் என்று பழனியும் நினைக்கவில்லை. அவரது பெற்றோரும் நினைக்கவில்லை. உடன் பணிபுரிந்த பெண்களும், பவித்ராவின் தோழிகளும் அவரது மனம் தடம் மாற வழிவகுத்தனர். “என்னடி உன் புருசன் இப்படி கன்னங்கரேல்ன்னு இருக்கார். உன்னைவிட இத்தன வயசு மூத்தவரோட எப்படி குடும்பம் நடத்துறே” என்று கேட்டுக் கேட்டே உசுப்பேற்றினர்”, மாலை மலர் இவ்வாறு கூறுகிறது.
டெல்டா ஷூ கம்பெனியில், சமீல் அகமதுவிடம் தொடர்பு வைத்துக் கொண்டது: ஷூ கம்பெனிகள் சில பெண்கள் பல காரணங்களுக்காக பலருடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் பழக்கம் இருக்கிறது. அத்தகையோர் மற்றவர்களையும் தம்மை போல ஆக்க முயல்வது வழக்கம். அவ்விதத்தில் தான், பவித்ராவைப் பார்த்து இவ்வாறு கணைகளைத் தொடுத்தனர். அந்த கேள்விகள் பவித்ராவின் மனதில் அதுவரை தோன்றாமல் இருந்த கணவரின் வயதும் நிறமும் திடீரென தவறாக தெரிய தொடங்கியது. இதுவே கணவரிடம் இருந்து பவித்ராவை கொஞ்சம் கொஞ்சமாக பிரித்தது. தனது அழகை உயர்வாக நினைத்த அவர் அங்கு பணிபுரிந்த ஷமில் அகமதுவுடன் பழகினார். இது அவரை தவறான வழிக்கு கொண்டு சென்றது என்று ஊடகங்கள் குறிப்பிட்டாலும், ஒரு மணமான பெண்ணுடன் பழக எப்படி மணமான ஷமில் அகமது ஒப்புக்கொண்டார், இயைந்து நடந்தார் என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. ஓன்று இருவரும் திருமணம் ஆனவர்கள் மற்றும் வெவ்வேறு மதத்தினை சேர்ந்தவர்கள். மேலும், ஏற்கெனவே, லவ்-ஜிஹாத் போன்ற விவாதங்கள் நடந்து வருகின்றன என்பது தெரிந்திருக்கும். அதனையும் மீறி, இடங்கொடுத்திருக்கிறார் என்றால், ஷமீல் அகமதுக்கு ஏதோ உள்-நோக்கம் இருந்துள்ளது என்றாகிறது.
ஆம்பூரிலிருந்து ஈரோடுக்குச் சென்ற ஷமீல்–பவித்ரா: மாலை மலர் தொடர்கிறது, “மலர் கணவரையும், குழந்தையையும் முற்றிலும் மறக்க தொடங்கினார். ஷூ கம்பெனியில் பவித்ராவின் தவறான நடவடிக்கையை அறிந்த நிர்வாகம் அவரை வேலையை விட்டு தூக்கியது. ஷமில் அகமதுவையும் நீக்கினர். அதன்பின்னர் ஷமில் அகமது ஈரோட்டுக்கு வேலைக்கு சென்றார். அதன்பின் பவித்ராவை ஷமில்அகமது ஈரோட்டில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்க வைத்துள்ளார். பின்னர் பயத்தினால் பவித்ராவிடம் ரூ.300–ஐ கையில் கொடுத்து அவரை குச்சிபாளையத்திற்கு செல்லும்படி அனுப்பி வைத்து உள்ளார்[4]. அவரது நினைவாகவே பவித்ரா இருந்தார். அவருடன் செல்போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசிய படி இருந்தார். இதை அறிந்த அவரது கணவர் பழனி ஆத்திரம் அடைந்தார். ஒருநாள் செல்போனை பிடுங்கி எறிந்து உடைத்தார். இதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட வாக்குவாதத்தால் கணவருடனான விரிசல் அதிகமானது. தனது மனவிருப்பப்படி நடந்து கொள்வதற்காக கணவரையும், குழந்தையையும் விட்டு பிரிந்து போக பவித்ரா முடிவு செய்தார்”[5]. ஒரு வருடம் ஈரோட்டில் தனிகுடித்தனம் நடத்தியிருக்கிறார்கள் என்றால், எல்லோரிடத்திலும் அதிகமாகவே பொய் சொல்லியிருந்திருக்க வேண்டும்.
மனைவி பவித்ராவை தேடிய புருஷன் பழனி: மாலை மலர் தொடர்கிறது, “கடந்த 17.5.2015 அன்று வீட்டைவிட்டு சென்றார். பல இடங்களில் பவித்ராவை தேடினர். பழனியும் பவித்ரா பணிபுரிந்த இடங்களுக்கு சென்று விசாரித்தார். அப்போது ஷமில் அகமது, சரவணன், புகழேந்தி ஆகிய 3 பேருடன் பவித்ராவுக்கு பழக்கம் இருந்தது தெரிய வந்தது. அவர்களை பற்றி விசாரித்த பழனி அவர்களுடன் தனது மனைவி சென்றிருப்பாரா என்று தேடி அலைந்தார். கணவரையும், குழந்தையையும் பிரிந்த பவித்ராவோ நேராக ஈரோடு சென்றார். அங்கு ஷமில் அகமதுவை சந்தித்து பேசினார். தன்னுடன் இருக்க ஷமில் அகமது அனுமதிக்காததால் ரெயில் ஏறி பவித்ரா சென்னைக்கு சென்றார். அங்கு சரவணன், புகழேந்தி ஆகியோரின் உதவியை நாடினார். சினிமா வாய்ப்பு கேட்டும் அலைந்தார். ஒரு வழியாக அம்பத்தூரில் உள்ள துணிக்கடையில் ரூ.6 ஆயிரம் சம்பளத்துக்கு பவித்ரா வேலைக்கு சேர்ந்தார். அருகில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி இருந்தார்”[6]. மூன்று பேருடன் பழக்கம் எனும்போது, எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. நிச்சயமாக, இதை தீவிரமாக விசாரிக்க வேண்டியுள்ளது.
பழனி போலீஸாரிடம் புகார் கொடுத்ததும், சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கலும்: மாலை மலர் தொடர்கிறது, “மனைவியை தேடி அலைந்த பழனிக்கு ஷமில் அகமதுவின் வீடு தெரிந்திருந்ததால் அங்கு சென்று “என் மனைவியை எங்கே” என்று கேட்டு தகராறு செய்துள்ளார். அது கைகலப்பாகவும் மாறியது. இருந்தபோதிலும் மனைவி பற்றி தகவல் தெரியாததால் 24.5.2015 அன்று பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் பழனி புகார் செய்தார். அதில் “எனது மனைவி மாயமானதில் சரவணன், புகழேந்தி ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக அறிகிறேன். எனவே அவர்களிடம் இருந்து எனது மனைவியை மீட்டுத்தாருங்கள்” என்று கூறி இருந்தார். சென்னை ஐகோர்ட்டிலும் தனது மனைவியை மீட்டுத்தருமாறு கேட்டு ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார்”. அழனி சென்னை ஐகோர்ட்டிலும் தனது மனைவியை மீட்டுத்தருமாறு கேட்டு ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தார் என்றதால், யாரோ அவருக்கு ஆலோசனை கொடுத்திருக்கிறார்கள் அல்லது உதவியிருக்கிறார்கள் என்றாகிறது.
17.5.2015 அன்று ஆம்பூர் வீட்டை விட்டுச் சென்ற பவித்ரா 04-07-2015 அன்று சென்னையில் பிடிபட்டது: மாலை மலர் தொடர்கிறது, “சந்தேகத்தின் பேரில் ஷமில் அகமதுவை பள்ளி கொண்டா போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணை முடிந்து திரும்பிய ஷமில் அகமது போலீசார் தாக்கியதாக கூறி ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார் தாக்கிய தால்தான் ஷமில் அகமது இறந்ததாக கூறி நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதனால் பவித்ராவை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். செல்போன் உதவியுடன் பவித்ரா சென்னையில் இருப்பதை அறிந்த போலீசார் அங்கு சென்றனர். கடந்த ஜூலை 4-ந் தேதி இரவு பவித்ரா போலீசில் பிடிபட்டார். அவருக்கு உதவிய சரவணன், புகழேந்தி ஆகியோரும் பிடிபட்டனர்”.
தன்னை கடத்தவில்லை என்று பவித்ரா நீதிபதியிடம் கூறியதால் சரவணனும் புகழேந்தியும் தப்பினர்: மாலை மலர் தொடர்கிறது, “சென்னையில் சரவணன், புகழேந்தியிடம் சென்று பவித்ரா உதவி கேட்டது ஏன் பவித்ராவுக்கு அவர்கள் உதவியது ஏன் என்பது தெரியவில்லை. பவித்ரா மாயமானது தொடர்பாக கொடுத்த புகாரிலும், ஆட்கொணர்வு மனுவிலும் “சரவணன், புகழேந்தி ஆகியோர் தனது மனைவியை கடத்தி சென்றிருக்கலாம்” என்று பழனி கூறி இருந்தார். ஆனால் யாரும் தன்னை கடத்தவில்லை என்று பவித்ரா நீதிபதியிடம் கூறியதால் சரவணனும் புகழேந்தியும் தப்பினர். இருந்தபோதிலும் சரவணனையும், புகழேந்தியையும் பவித்ரா தேடி சென்று வேலை கேட்டது எப்படி நடந்தது பவித்ராவுக்கும் சரவணன், புகழேந்திக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்ததா என்பது புரியாத புதிராகவே உள்ளது. இதுபற்றிய உண்மை நிலை என்ன என்பது பின்னர்தான் தெரியவரும்”. ஆம்பூரில் இவ்வளவு விவகாரங்கள் நடந்த நிலையில், எப்படி-ஏன் – எதற்காக இவ்விருவர், பவித்ராவை மறைந்து வாழ செய்ய வேண்டும்?
கணவன், மகளை ஏறேடுத்துப் பார்க்காத பத்னி பவித்ரா: மாலை மலர் தொடர்கிறது, “தாய் பாசத்துக்கு ஏங்கும் மகளுக்காக காப்பகத்தில் பவித்ராவை சந்தித்து பேசவில்லை ஒரே வார்த்தையில் பதிலளித்த கணவர் பழனி சென்னையில் பிடிபட்ட பின்னர் ஐகோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட பவித்ரா தனது கணவரையும், குழந்தையையும் ஏறெடுத்து பார்க்கவில்லை. நீதிபதியிடம், “எனது கணவரிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்” என்று அவர் கேட்ட கேள்வி நீதிபதி உள்பட கணவரையும் தூக்கி வாரிப்போட்டது. நீதிபதி எவ்வளவோ கூறியும் அதை காதில் வாங்கிக் கொள்ளாத பவித்ரா விவாகரத்து கேட்பதிலேயே குறியாக இருந்தார். இதைத் தொடர்ந்து அவரை காப்பகத்தில் தங்க வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி சென்னை காப்பகத்தில் பவித்ரா தங்க வைக்கப்பட்டார்”. விவாகரத்து தான் குறி என்றிருக்கும் பவித்ராவின் போக்கு திடுக்கிட வைக்கிறது. கணவனைத் தவிர மூன்று பேருடன் தொடர்பு, சினிமாவில் நடிக்க முயற்சி என்றெல்லாம் பார்க்கும் போது, பவித்ராவின் மனநிலை என்ன என்பதை கவனிக்க வேண்டியுள்ளது.
அம்மா எப்போது வருவார் என்று கேட்டபடி இருக்கும் மகள் ரிஷிதாவும், கண்டு கொள்ளாமல் இருக்கும் தாய் பவித்ராவும்: மாலை மலர் தொடர்கிறது, “பவித்ரா தனது மகள் ரிஷிதாவுக்காக மனம் மாறி தன்னுடன் சேர்ந்து வாழ வருவார் என்ற ஆசையில் பழனி இருக்கிறார். விசாரணைக்காக வேலூருக்கு பவித்ரா அழைத்து வரப்பட்ட போது தனது மகளுடன் பழனி அங்கு சென்றார். ஆனால் 2 பேரையும் பவித்ரா கண்டுகொள்ளவே இல்லை. அப்போது தாய் பாசத்துக்காக ஏங்கிய ரிஷிதாவை பார்த்து பலர் மனம் கலங்கினர். தற்போது ரிஷிதா குச்சிபாளையத்தில் தனது பாட்டியின் அரவணைப்பில் உள்ளார் என்றபோதிலும் அம்மா எப்போது வருவார் என்று கேட்டபடிதான் ரிஷிதா இருக்கிறார். அவருக்காக பழனியுடன் பவித்ரா சேர்வாரா பவித்ராவை பழனி சந்தித்து பேசி மனம் மாற்றுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக பழனியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியபோது, “பத்திரிகைக்காரங்களா…” என்று கேட்டுவிட்டு பதில் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தார். ஆனால் இணைப்பை துண்டிக்காமல் இருந்த அவரிடம், “உங்கள் மனைவி பவித்ரா” என்று ஆரம்பித்ததும், “சார் எம்பாட்டுக்கு நான் என் வேலை பார்த்துக்கிட்டு இருக்கேன் சார். என்னை விடுங்க…” என்று கூறினார். “உங்கள் மகளுக்காக காப்பகத்தில் இருக்கும் உங்கள் மனைவியுடன் பேசினீர்களா” என்று கேட்டபோது, “இல்லை” என்று ஒரே வார்த்தையில் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். நீதிபதி உத்தரவுபடி வருகிற 20-ந் தேதி வரை காப்பகத்தில் இருக்க வேண்டிய பவித்ரா மகளுக்காக கணவருடன் இணைவாரா”., என்று முடித்துள்ளது.
© வேதபிரகாஷ்
07-08-2015
[1] நக்கீரன், பவித்ராவின் மறுபக்கம், பதிவு செய்த நாள் : 8, ஜூலை 2015 (10:1 IST) ; மாற்றம் செய்த நாள் :8, ஜூலை 2015 (10:1 IST)
[2] http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=146393
[3] http://www.farida.co.in/group_companies.php
[4] http://www.dailythanthi.com/News/Districts/Vellore/2015/07/06012707/Pavithra-how-police-came-to-redeem.vpf
[5] http://www.maalaimalar.com/2015/07/12194252/Pavithra-track-changed-and-why.html
[6] மாலைமலர், பவித்ரா தடம் மாறியது ஏன்? வெளிவராத புதிய தகவல், பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 12, 7:42 PM IST.
அண்மைய பின்னூட்டங்கள்