ஹைதராபாத் மாட்யூலும், ஐஎஸ் தொடர்புகளும் – ரம்ஜான் நேரத்தில் கலவரம் ஏற்படுத்தும், நகரங்களைத் தாக்கும் தீவிரவாத வெளிப்பாடுகள்!
பிடிபட்டவர்களின் விவரங்கள்: இதையடுத்து, ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் ஹைதராபாத்தைச் சேர்ந்த சிலர் கடந்த நான்கு மாதங்களாக ரகசியமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தனர்[1]. சந்தேகம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த அதிரடி சோதனையும், கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கைது செய்யப்பட்டவர்கள், சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர். ஹைதராபாத் நகரில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த இவர்கள் தயாராகி வந்துள்ளனர் என்றும். இதற்காக ஐஎஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து அந்த இளைஞர்கள் பணம் பெற்றுள்ளதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக மேலும் பலர் கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த இந்த தீவிரவாதிகள், நாட்டிலுள்ள பிற தீவிரவாத அனுதாபிகளை மூளை சலவை செய்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது[2].
- முகமது இப்ராஹிம் யாஷ்தானி [Mohammed Ibrahim Yazdani, 30],
- மொஹம்மது இலியாஸ் யஷ்தானி [Mohammad Illyas Yazdani, 24] (1)ன் சகோதரன்
- ஹபீப் முகமது [Habib Mohammed, 32],
- முகமது இர்ஃபான்,
- அப்துல் பின் அகமது,
- முஷாபர் ஹூசைன் [Muzaffar Hussain Rizwan , 29],
- ரிஸ்வான்,
- முகமதுல்லா ரஹ்மான்,
- அல் ஜிலானி அப்துல் காதர்,
- முகமது அர்பாஸ் அகமது
- அப்துல்லா-பின்-அமூதி [Abdullah- Bin-Amoodi, 31].
உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடைபெற்றதாக என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், ஆறுபேர் பிடிக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது[3].
முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு: சிறுபான்மையினர் வாக்குவங்கியைக் கருத்தில் கொண்டு ஹைதராபாத் நகரை பயங்கரவாதிகளின் புகலிடமாக மாற்றிவிட்டதாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மீது பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் கிருஷ்ண சாகர், ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: சிறுபான்மையினரின் வாக்குகளைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஹைதராபாத் நகரை பயங்கரவாதிகளின் புகலிடமாக முதல்வர் சந்திரசேகர ராவ் மாற்றிவிட்டார். பயங்கரவாதச் செயலுக்கு சதி செய்கிறார்கள் என்ற சந்தேகம் இருந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கையை எடுக்க மாநில அரசு தவறிவிட்டது. இதனால் தேசிய அளவில் ஹைதராபாத் நகருக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.
பிடிபடும் தீவிரவாதிகள் முஸ்லிம்கள் என்றாலும், இஸ்லாம் தீவிரவாத்தை ஆதரிப்பது இல்லை: முன்னர் தீவிரவாதம் விசயமாக, ஹைதராபாத் இளைஞர்கள் மாட்டிக் கொண்டதால், சில வழக்கமான அறிக்கைகள் விடப்பட்டன. ஹைதராபாத் முஸ்லிம் இளைஞர்கள் ஐஎஸ் போன்ற அமைப்புகளில் சேருவது, இங்கிருந்தே ஆன்-லைன் மூலம் வேலை செய்வது, வேலைக்கு ஆள் சேர்ப்பது போன்ற காரியங்கள் அதிகமாகி வந்ததால், முன்பே முஸ்லிம் இயக்கங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. அதனால், பதிலுக்கு 2014ல் ஜாமியா நிஜாமியா [Jamia Nizamia one of the oldest Islamic seminaries in south India] போன்ற இஸ்லாமிய நிறுவனங்கள் முஸ்லிம் இளைஞர்களுக்கு “தீவிரவாதத்திற்கு ஐஎஸ் துணைபோகிறது, அதனால் அதற்கு இஸ்லாத்தில் இடம் இல்லை,” ஐஎஸ்போன்ற இயக்கங்களுடன் சேரக்கூடாது என்று எச்சரித்தது[4]. ஆனால், இளைஞர்களும் அத்தகைய வேலைகளில் சேர்வது நிற்கவில்லை, தீவிரவாத செயல்களும் நின்றபாடில்லை.
கலவரங்கள் ஏற்படுத்துவது மற்றும் தீவிரவாத திட்டங்கள் செயல்படுத்துவது: இவர்களிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, என்.ஐ.ஏ., வட்டாரங்கள் கூறியதாவது: இந்த அமைப்புக்கு வெளிநாடுகளில் இருந்து ஹவாலா பணம் அதிக அளவில் கிடைத்து வருகிறது. அந்த பணத்தை வைத்து, இவர்கள் ஆயுதங்களை வாங்கியுள்ளனர். மேலும், வெடி குண்டு தயார் செய்யும் தொழில்நுட்பமும் இவர்களுக்கு தெரியும். பெங்களூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களை வெடி குண்டு வைத்து தகர்க்க, இந்த அமைப்பினர் திட்ட மிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது[5]. இதற்காக, மூன்று குழுக்களாக பயங்கரவாதிகள் செயல்பட்டு வந்த தகவலும் வெளியாகியுள்ளது. அதனால், கைது செய்யப்பட்ட அனைவரையும், காவலில் எடுத்து விசாரிக்க, கோர்ட்டின் அனுமதி கோரப் பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும், அவர்களை டில்லி அழைத் துச் சென்று விசாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள் ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, கைது செய்யப்பட்டவர்களை, 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க, ஐதராபாத் கோர்ட் உத்தரவிட்டது. கோவிலில் மாட்டிறைச்சி…:என்.ஐ.ஏ., அதிகாரி கள் கூறியதாவது: ஐதராபாத்தில் உள்ள, பிரசித்தி பெற்ற பாக்கியலட்சுமி கோவிலில், மாட்டிறைச்சியை வைத்து, மிகப்பெரிய மதக் கலவரத்தை ஏற்படுத்த, இந்த அமைப்பினர் திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது. விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான் போன்ற பண்டிகைக் காலங்களில், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில், இதற்கு முன்பும் கலவரங்கள் நடந்துள் ளன. அதுபோலவே, இந்தாண்டும் கலவரத்தை ஏற்படுத்த, இவர்கள் திட்டமிட்டு இருந்தனர்[6]. ஹைதராபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் 25-06-2016 சனிக்கிழமை அன்று மாலை தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அதிர்ச்சித் தகவல், அவர்களிடம் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது[7].அதற்கு முன்னோட்டமாக ஹைதராபாத் நகரின் பல்வேறு முக்கிய பொதுஇடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியிருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன[8].
பிரஸ்ஸெல்ஸ் குண்டுவெடிப்பில் உபயோகப்படுத்தப் பட்ட ரசாயனப் பொருள் வீட்டில் கண்டெடுக்கப்பட்டது: டிரையசிடோன் ட்ரிபராக்ஸைடு [ triacetone triperoxide (TATP)] ஹபீப் முஹமது இல்லத்திலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது[9]. பாரிசில் நடந்த குண்டுவெடிப்பில் இந்த ரசாயனப் பொருள் உபயோகப்படுத்தப்பட்டது. முகமது இப்ராஹிம் யஜ்தானி என்பவன் தான் ஹபீப் முகமதுவை தன்னில்லத்தில் இந்த குண்டை [ improvised explosive device (IED)] தயாரிக்கச் சொல்லியிருக்கிறான். அவனது வீட்டிலிருந்து ஆணிகள் முதலியனவும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஷபி ஆர்மர் அல்லது யூசூப் அல்-ஹிந்தி [Shafi Armar alias Yousuf Al Hindi] என்பவன் தான் சிரியாவிலிருந்து இவர்களை கட்டுப்படுத்தியுள்ளான்[10]. வழக்கமாக, இவர்களின் பெற்றோர், தங்களது மகன்கள் அப்பாவி, அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியுள்ளனர். ஆனால், டிரையசிடோன் ட்ரிபராக்ஸைடு போன்ற ரசாயனப் பொருட்களை ஏன் வீட்டில் வைத்திருந்தனர் என்பதற்கு பதில் சொன்னதாகத் தெரியவில்லை. இன்டெர்நெட் சென்டரில் வேலை பார்க்கிறான் என்றால், ஐஎஸ்சுடன் ஏன் தொடர்பு வைத்துள்ளான் என்றும் விளக்கவில்லை. அவர்கள் அத்தகைய வேலைகளை செய்வதை தடுக்க வேண்டுமே, ஆனால், அதைப் பற்றியும் விளக்கவில்லை.
© வேதபிரகாஷ்
01-07-2016
[1]http://www.dinamani.com/india/2016/06/30/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D/article3506835.ece
[2] http://tamil.oneindia.com/news/india/nia-busts-isis-module-hyderabad-11-arrested-explosives-rs-257035.html
[3] http://www.ndtv.com/hyderabad-news/isis-module-busted-in-hyderabad-says-nia-1425829
[4] http://www.thehindu.com/news/national/andhra-pradesh/hyderabad-seminary-warns-youth-against-islamic-state/article6388793.ece?utm_source=InternalRef&utm_medium=relatedNews&utm_campaign=RelatedNews
[5] தினமலர், ஐதராபாத், பெங்களூரை தகர்க்க பயங்கரவாதிகள் சதித் திட்டம், பதிவு செய்த நாள் : ஜூன் 30,2016,23:26 IST
[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1554333&
[7]http://www.dinamani.com/india/2016/07/01/%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86/article3508410.ece
[8] தினமணி, ஹைதராபாதில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்த ஐஎஸ் சதி: விசாரணையில் அதிர்ச்சித் தகவல், By ஹைதராபாத், First Published : 01 July 2016 03:19 AM IST
[9] The Hindu, Chemicals similar to Brussels bomb found in Hyderabad house, Vijaita singh, Updated: July 1, 2016 09:23 IST
[10] http://www.thehindu.com/news/national/chemicals-similar-to-brussels-bomb-found-in-hyderabad-house/article8793246.ece
அண்மைய பின்னூட்டங்கள்