Posted tagged ‘ஜெய்ப்பூர்’

ஐசிஸ் – தமிழக தொடர்புகள் – பரங்கிப்பேட்டையுடன் ஏன் ஐசிஸ் மற்றும் தீவிரவாதம் அதிகமாக சம்பந்தப்படுகிறது?

நவம்பர் 23, 2015

ஐசிஸ் – தமிழக தொடர்புகள் – பரங்கிப்பேட்டையுடன் ஏன் ஐசிஸ் மற்றும் தீவிரவாதம் அதிகமாக சம்பந்தப்படுகிறது?

பரங்கிப்பேட்டையில் அஷ்ரப் அலி கைது - மே 2014

பரங்கிப்பேட்டையில் தீவிரவாதி கைதுபரங்கிப்பேட்டை பக்கீரிமாலிமார் தெருவில் உள்ள பள்ளி வாசலில் வெளிமாநில வாலிபர் ஒருவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவல்[1]: ஹாஜா பக்ருத்தீன் உஸ்மான் அலி [Haja Fakkrudeen  Usman Ali] மற்றும் குல் மொஹம்மது மராச்சி மரக்காயர் இருவரும் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் என்றால், இங்கு ஏற்கெனெவே தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னையில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் மே.1, 2014 அன்று கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலின் 2 பெட்டிகளில் குண்டுகள் வெடித்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை பக்கீரிமாலிமார் தெருவில் உள்ள பள்ளி வாசலில் வெளிமாநில வாலிபர் ஒருவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து சிதம்பரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையிலான போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்து அந்த வாலிபரை பிடித்தனர். விசாரணையில், அவர் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி அஷ்ரப் அலி (வயது 39) என்பதும், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் வெடிபொருட்களை பதுக்கி வைத்திருந்த வழக்கில் தேடப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. பின்னர் அஷ்ரப் அலியை கடலூரை அடுத்த தூக்கனாம் பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று அவரிடம் விடிய, விடிய போலீசார் விசாரணை நடத்தினார்கள். தீவிரவாதி அஷ்ரப் அலிக்கு அடைக்கலம் கொடுத்து, அவருக்கு உறுதுணையாக இருந்த 9 பேரையும் போலீஸார் தங்கள் கட்டுப் பாட்டிற்குள் கொண்டுவந்தனர். இவர்களிடம் கடலூர் மாவட்டப் போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்[2].

Parangipettai mosque

ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அஷ்ரப் அலி[3]: விசாரணையில் அவருக்கும் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்புக்கும் தொடர்பு இல்லை என தெரியவந்தது. அஷ்ரப் அலி பிடிபட்ட தகவல் அறிந்து ராஜஸ்தான் மாநிலம் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு குசால்சிங், இன்ஸ்பெக்டர் புஷ்பேந்திரசிங் ரத்தோர் மற்றும் போலீசார் கடலூர் வந்தனர். விசாரணைக்கு பின்னர் மே.2, 2015 அன்று மதியம் கடலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அஷ்ரப் அலியை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது தீவிரவாதி அஷ்ரப் அலிக்கு ஜோத்பூர் கோர்ட்டு ஏற்கனவே பிடிவாரண்டு பிறப்பித்து இருப்பதால் அவரை ராஜஸ்தான் மாநிலத்துக்கு அழைத்து செல்வதற்கு அனுமதி வழங்கக்கோரி நீதிபதியிடம் ராஜஸ்தான் போலீசார் மனு கொடுத்தனர். இந்த மனுவை ஏற்றுக்கொண்டு அஷ்ரப் அலியை 5 நாட்களுக்குள் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி கிங்ஸ்லி கிறிஸ்டோபர் உத்தரவிட்டார். இதை அடுத்து தீவிரவாதி அஷ்ரப் அலியை போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் சென்னைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து விமானம் மூலம் ஜோத்பூருக்கு அழைத்து செல்லப்பட்டார்[4].

பரங்கிப்பேட்டையில் அஷ்ரப் அலி, தமீம் அன்சாரி, ஜாகீர் உசேன் கைது - மே 2014.

பாகிஸ்தான் .எஸ்.. உளவாளியான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரியாஷ் பட்டேல் என்பவனுக்கும் அஷ்ரப் அலிக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு: கைது செய்யப்பட்ட தீவிரவாதி அஷ்ரப் அலி பற்றிய திடுக்கிடும் தகவல்களை ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பேந்திரசிங் ரத்தோர் நிருபர்களிடம் கூறினார். அவர் கூறியதாவது: “இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுகிறவர்களை அழிக்க வேண்டும் என்பதற்காக இளைஞர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி ஆலோசனை வழங்குவது தான் தீவிரவாதி அஷ்ரப் அலியின் வேலை. ஜோத்பூரில் பல்வேறு இடங்களில் இதுபோன்று இளைஞர்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி இருக்கிறார். இதுபோன்று ஆலோசனை வழங்கும் அமைப்புக்கு அவர் தலைவராக இருந்துள்ளார். பாகிஸ்தான் .எஸ்.. உளவாளியான கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரியாஷ் பட்டேல் என்பவனுக்கும் அஷ்ரப் அலிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ரியாஷ் பட்டேல் சொல்வதைத்தான் அஷ்ரப் அலி செய்வான். அஷ்ரப் அலியும் அவனது கூட்டாளிகளும் போலியான முகவரி கொடுத்து செல்போன்களை பயன்படுத்தி இருப்பதை கண்டுபிடித்தோம். அந்த செல்போன் சிம்கார்டுகளை வைத்து ரியாஷ் பட்டேலுடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதை அறிந்து கொண்டோம்”.

அஷ்ரப் அலி கைது - பரங்கிப்பேட்டையில் - மசூதி தங்கினான்

மதபோதகர் போர்வையில் பரங்கிப்பேட்டை மசூதிக்கு வந்த அஷ்ரப் அலி:தமிழகத்தில் மதபோதனை செய்வதற்காக டெல்லியில் இருந்து ஒரு குழுவினர் கடந்த ஏப்ரல் 2–ந் தேதி டெல்லியில் இருந்து ரெயில் மூலம் தமிழகம் வந்தனர். அந்த குழுவில் அஷ்ரப் அலியும் எப்படியோ இணைந்து கொண்டான். மதபோதகர் போர்வையில் அவனும் தமிழகம் வந்துள்ளான். தமிழகம் வந்த அந்த குழுவில் 9 பேர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள். 3 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். இவர்கள் கடலூர் மாவட்டம் சிதம்பரம், பின்னூர் ஆகிய பகுதிகளில் மதபோதனை செய்துவிட்டு கடந்த 28–ந் தேதி பரங்கிப் பேட்டைக்கு வந்துள்ளனர். இதையடுத்து அஷ்ரப் அலியை பிடிப்பதற்காக நாங்கள் தமிழ்நாட்டு போலீஸ் உதவியை நாடினோம். சிதம்பரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாராம் மற்றும் போலீசார் தீவிரவாதி அஷ்ரப் அலியை பொறி வைத்து பிடித்துள்ளனர். அஷ்ரப் அலியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த இருக்கிறோம். அப்போது அவன் இதற்கு முன்பு எங்கெல்லாம் சென்று கூட்டம் நடத்தி சதி திட்டம் தீட்டி இருக்கிறான் என்பது தெரியவரும்”, இவ்வாறு அவர் கூறினார்[5].

அஷ்ரப் அலி கைது - பரங்கிப்பேட்டை

சிதம்பரம் பகுதியில் பல்வேறு பள்ளிவாசல்களில் தங்கியிருந்தார் தீவிரவாதி அசரப் அலி[6]: போலீஸாரால் தேடப்பட்டு வந்த அசரப்அலி புதுதில்லியிலிருந்து தமிழகத்திற்கு வந்த மதபோதகர்கள் குழுவினருடன் பல்வேறு பள்ளிவாசல்களில் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சிதம்பரம், பின்னத்தூர், லால்பேட்டை, பரங்கிப்பேட்டையில் உள்ள பள்ளிவாசல்களில் கடந்த ஏப்.20-ம் தேதி முதல் தங்கியிருந்தது போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அசரப்அலியுடன் பரங்கிப்பேட்டை பள்ளிவாசலில் தங்கியிருந்த 12 மத போதகர்களை போலீஸார் கடலூர் அருகே உள்ள தூக்கனாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் மதபோதகர்களுக்கும், தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பில்லை என உறுதி செய்த போலீஸார் மத போதர்கள் 12 பேரையும் சிதம்பரம் வ.உ.சி தெருவில் உள்ள பள்ளிவாசலில் ஒப்படைத்தனர். இவர்கள் அனைவரும் தில்லிக்கு புறப்பட்டு செல்ல வேண்டும் என போலீஸார் உத்தரவிட்டுள்ளனர்.

© வேதபிரகாஷ்

23-11-2015

[1] மாலைமலர், கைதான தீவிரவாதி அஷ்ரப் அலி பாகிஸ்தான் உளவாளியுடன் தொடர்புடையவர், பதிவு செய்த நாள் : சனிக்கிழமை, மே 03, 2014. 10:46 AM IST

 http://www.maalaimalar.com/2014/05/03104632/Pakistani-spy-arrested-militan.html

[2]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81/article5972545.ece

[3] http://www.dinamani.com/latest_news/2014/05/03/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1/article2203914.ece

[4] தினமணி, சிதம்பரம் பகுதியில் பல்வேறு பள்ளிவாசல்களில் தங்கியிருந்தார் தீவிரவாதி அசரப் அலி, By ஜி.சுந்தர்ராஜன், சிதம்பரம், First Published : 03 May 2014 06:55 PM IST.

[5] தமிழ்.இந்து, பரங்கிப்பேட்டையில் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதி கைது, Published: May 3, 2014 10:24 IST, Updated: May 3, 2014 10:24 IST

[6] தினமணி, சிதம்பரம் பகுதியில் பல்வேறு பள்ளிவாசல்களில் தங்கியிருந்தார் தீவிரவாதி அசரப் அலி, By ஜி.சுந்தர்ராஜன், சிதம்பரம், First Published : 03 May 2014 06:55 PM IST.

ஆம்பூர் மதரஸாவில் உபி தீவிரவாதி தங்கியிருந்தது எப்படி? மருத்துவமனைக்கு குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்தது ஏன் ? (2)

ஒக்ரோபர் 17, 2015

ஆம்பூர் மதரஸாவில் உபி தீவிரவாதி தங்கியிருந்தது எப்படி? மருத்துவமனைக்கு குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்தது ஏன் ? (2)

உபி தீவிரவாதி வேலூரில் கைது

உபி தீவிரவாதி வேலூரில் கைது

சையத் அகமது அலி  கொடுத்த வாக்குமூலம்[1]: விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு: “திரிபுரா மாநிலம் உன்னுகுட்டி கைலா ஜெகர் பகுதி, தலியார் கந்தி கிராமம்தான் எனது ஊர். என்னுடைய மனைவி பெயர் லுக்பாபேகம். எங்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். நான் எனது வீட்டின் அருகே காய்கறி வியாபாரம் செய்து வந்தேன். கடந்த 2000–ம் ஆண்டு எனக்கும் எனது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் எனது மனைவி போலீசில் புகார் கொடுக்க சென்றார். அதனால் நான் மண்எண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தேன். பின்னர் என்னை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். உடல்நிலை தேறியதும் நான் மீண்டும் காய்கறி வியாபாரம் செய்து வந்தேன். இந்த நிலையில் சிறிது நாட்கள் கழித்து எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அசாமில் உள்ள மருத்துவமனையிலும், பின்பு திரிபுரா மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றேன். அப்போது என்னை பரிசோதனை செய்த டாக்டர்கள் உனக்கு புற்றுநோய் உள்ளது என்றனர்.

 

புதியதலைமுறை - ஆக்ரா, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகளில் தொடர்பு

புதியதலைமுறை – ஆக்ரா, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகளில் தொடர்பு

மே, ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் 2015 சென்னைக்கு வந்து சென்றது: அப்போது எனது பக்கத்து வீட்டுக்காரர் பையிம் ஜமான் என்பவரின் அக்காவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக அவர்களுடன் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு கடந்த மே மாதம் வந்தேன். அங்கு டாக்டர்கள் எனக்கு புற்றுநோய் இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக எனது தம்பியுடன் ஆகஸ்டு மாதம் வேலூருக்கு வந்தேன். அப்போது சி.எம்.சி. அருகில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கினேன். பின்பு வேலூர் சைதாப்பேட்டை பள்ளிவாசல் அருகே அறை எடுத்து தங்கினேன். அதைத்தொடர்ந்து உத்தரபிரதேசம் அலிகாரில் உள்ள மருத்துவமனையிலும், சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலும் சிகிச்சை எடுத்துக்கொண்டேன். இதையடுத்து சென்னையில் இருந்து மீண்டும் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற கடந்த 13–ந் தேதி இரவு பீகாரை சேர்ந்த ஹாலித்து என்பவருடன் காட்பாடிக்கு வந்தேன். பின்னர் ஹாலித் எதுவும் கூறாமல் என்னை விட்டு சென்று விட்டார். விடியும்வரை நான் சி.எம்.சி.க்கு எதிரே உள்ள பள்ளிவாசல் அருகே தங்கினேன். 14–ந் தேதி காலை 7–45 மணி அளவில் டாக்டரை பார்க்க நான் சி.எம்.சி.க்கு சென்றேன். அப்போது டாக்டரை பார்க்க விடாமல் காவலர்கள் என்னை தடுத்தனர். இதனால் நான் ஆத்திரமடைந்தேன். அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்க முடிவு செய்தேன். இதையடுத்து நான் காலை 8 மணி அளவில் சி.எம்.சி. மருத்துவமனைக்கு போனில் தொடர்பு கொண்டேன். அவர்கள் வேறு ஒரு தொலை பேசி எண்ணை கொடுத்து அதில் தொடர்பு கொள்ளுமாறு கூறினர். பின்பு நான் 8–15 மணி அளவில் எனது தொலைபேசி எண்ணில் இருந்து தொடர்பு கொண்டு மருத்துவமனையில் வெடிகுண்டுகள் உள்ளது எனவும், அவை சரியாக 10 மணிக்கு வெடிக்கும் என்று கூறி போனை துண்டித்தேன். இதே ஏற்கனவே நான் ஆக்ராவிலும், அலிகாரிலும், லக்னோவிலும், ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர், மும்பையில் உள்ள கண்ட்ரோல் அறைக்கும் போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளேன்”, இவ்வாறு அவர் கூறினார்.

UP Terrorist arrested in Ambur PTI 17-10-2015

UP Terrorist arrested in Ambur PTI 17-10-2015

விசாரணைக்குப் பிறகு ஜெயிலில் அடைப்பு: சென்னை, ஆம்பூர், வேலூர் என்று பல இடங்களுக்கு பலமுறை சர்வ சகஜமாக வந்து போவது, எப்படி என்பதும் வியப்பாக இருக்கிறது. தீவிரவாத செயல்கலில் ஈடுபட்டவர்கள் வந்து செல்கின்றனர் எனும் போது, நிச்சயமாக உள்ளூர் ஆட்கள் உதவி செய்கிறார்கள் என்றாகிறது. அதைத்தொடர்ந்து சையத் அகமது அலியை, துணை போலீஸ் சூப்பிரண்டு பன்னீர்செல்வம் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் பலத்த காவலுடன் அணைக்கட்டில் இருந்து வேலூர் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். இங்கு ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்–1 கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு மீனாசந்திரா முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்படி சையத் அகமது அலி வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

ஆம்பூர் மதரஸா - உதாரணம்

ஆம்பூர் மதரஸா – உதாரணம்

குற்றவாளிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் முதலியோர் பல மாநிலங்களுக்குச் சென்று வர யார் உதவுகிறார்கள்?: சையத் அகமது அலி உண்மையிலேயே மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வந்து போகலாம், போயிருக்கலாம். இப்பொழுது பார்ப்பதற்கே பாவமகத்தான் இருக்கிறான். ஆனால், அவன் தீவிரவாதியாக இருக்கிறான். குற்றவாளிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் முதலியோர்களுக்கு நோய் வரக்கூடாது, சிகிச்சை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதில்லை. ஆனால், உடல்நிலை ஆரோக்கியமாக மாறியதும், அவர்கள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவது தான் பிரச்சினையாக இருக்கிறது. இங்கும் தனக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஆனதால், குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்திருக்கிறான் என்பது வேடிக்கையாக இருக்கிறது. மருத்துவமனைகளில் காத்துக் கிடப்பது என்பது சர்வ-சகஜமான விசயம் தான். “அப்போது டாக்டரை பார்க்க விடாமல் காவலர்கள் என்னை தடுத்தனர். இதனால் நான் ஆத்திரமடைந்தேன். அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்க முடிவு செய்தேன்”, என்பது இன்னும் விசித்திரமாக இருக்கிறது. மேலும், தீவிரவாத-பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவன் எனும்போது, உ.பி, அசாம், மேகாலயா என்ற பல மாநிலங்களுக்குச் சென்று சிகிச்சைப் பெறுவது, மற்றும் தமிழகதுக்கு வந்து செல்வது என்பது, நிச்சயமாக மற்றவர்கள் உதவியுடன் வந்து செல்ல முடியாது. அதற்காக நிறைய பணமும் செலவாகிக் கொண்டிருக்கும். ஆனால் போலீஸ் பிடியில் சிக்காமல் பல்வேறு மாநிலங்களில் விதவிதமான கெட்டப்பில் சையது முகம்மது அலி சுற்றித்திரிந்து வந்தார் எனும்போது, தனது அடையாளத்தையும் மறைத்துள்ளார் என்றாகிறது. குற்றமுள்ள நெஞ்சு குறு-குறுத்துள்ளது. ஆனால், அதிலும் தன்னலம், அதாவது, மருத்துவ சிகிச்சைப் பெற வேண்டும் என்ற நிர்பந்தம் இருப்பதினால், அடங்கிப் போயிருக்கிறார். இங்கும், தன்னை எதிர்த்தபோது, வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கிறார்.

தினமலர் - வேலூர் கைது

தினமலர் – வேலூர் கைது

குற்றவாளிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் முதலியோர் மதரஸாக்களில் தங்க முடியுமா?: மதரஸாக்களில், பள்ளிவாசல்களில் தங்குவது என்பது அவ்வளவு சாதாரணமான விசயமா அல்லது யாராவது போன் செய்து அறிவித்தார்களா, கடிதங்களை கொண்டுவந்து, தங்கினார்களா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், இவையெல்லாமே நடந்தன எனும் போது, அவர்களுக்கு உள்ள பணபலம், நட்பு அல்லது வேறெந்த பலமோ உள்ளது என்பதைக் காட்டுகிறது. இன்றைய நிலையில் அறிமுகத்துடன் சென்றாலே, பலவித கேல்விகள் கேட்கப்படுகின்றன. லாட்ஜுகளில் அடையாள அட்டைகளை கேட்கிறார்கள், அவற்றை நகலும் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். முகவரி, செல்போன் நம்பர் போன்ற விவரங்களையும் எடுத்து வைத்துக் கொல்வதால், இவற்றையும் மீறி, தங்க வேண்டுமானால், மதரஸா, பள்ளிவாசல் போன்ற இடங்களில் தான் தங்க வேண்டும். அவ்வாறு தங்கினால், விவரங்கள் மறைக்கப்படும் அல்லது அவ்வளவு சுலபமாக மற்றவர்களுக்குக் கிடைக்காது. ஆகவே, ஒன்று முஸ்லிம்கள் என்ற நிலையில் அல்லது தீவிரவாதிகள் என்று தெரிந்தும், முஸ்லிம்கள் என்பதால் உதவுவது என்பதுள்ளது என்று தெரியவருகிறது. அதனால், குற்றவாளிகள், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் முதலியோர்களின் அடையாளங்கள் மறைக்கப்படுகின்றன. சித்தூரில் அல்-உம்மா தீவிரவாதிகள் தங்கியிருந்தது, சுற்றி வளைத்து பிடிக்கப்பட்டது, அப்பொழுதும், போலீஸாருடன் துப்பாக்கிச் சண்டையில், ஈடுபட்டது போன்ற விவரக்களும் வெளிவருகின்றன. ஆம்பூரில் சமீபத்தில் தான் கலவரம் ஏற்பட்டுள்ளது. போலீஸாரே தாக்கப்பட்டுள்ளனர். அந்நிலையில் தீவிரவாதிகள் அடிக்கடி வந்து செல்கின்றனர், மதரஸாக்களில் தங்க இடம் கொடுக்கப்படுகிறது என்பதெல்லாம் நிச்சயமாக வேறெந்த விசயத்தையோ மறைப்பதாக உள்ளது.

© வேதபிரகாஷ்

17-10-2015


[1]  தினத்தந்தி, சி.எம்.சி. மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: கைதான தீவிரவாதி கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பு, மாற்றம் செய்த நாள்: சனி, அக்டோபர் 17,2015, 5:00 AM IST; பதிவு செய்த நாள்: சனி, அக்டோபர் 17,2015, 1:46 AM IST.

ஆம்பூர் மதரஸாவில் உபி தீவிரவாதி தங்கியிருந்தது எப்படி? மருத்துவமனைக்கு குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்தது ஏன் ? (1)

ஒக்ரோபர் 17, 2015

ஆம்பூர் மதரஸாவில் உபி தீவிரவாதி தங்கியிருந்தது எப்படி? மருத்துவமனைக்கு குண்டுவெடிப்பு மிரட்டல் விடுத்தது ஏன் ? (1)

உபி தீவிரவாதி வேலூரில் கைது

உபி தீவிரவாதி வேலூரில் கைது

ஆம்பூர் உமர் சாலையில் மதரஸாஎன்ற இடத்தில் கைதா அல்லது மதரஸாவில் கைதா? – தமிழ்.ஒன்.இந்தியாவின் உண்மை மறைப்பு செய்தி[1]: ஆம்பூரில் பதுங்கியிருந்த 2 வட மாநில தீவிரவாதிகளை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த 5 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அவர்கள்தான் என தெரிய வந்துள்ளது[2]என்கிறது தமிழ்.ஒன்.இந்தியா. வேலூர் மாவட்டம் ஆம்பூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் சுற்றித்திரிந்து கொண்டு இருப்பதாக ஆம்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது[3]. இதையடுத்து போலீசார் நேற்று மாலை ஆம்பூர் உமர் சாலையில் மதரஸா என்ற இடத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு பதுங்கியிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அவர் சரிவர பதிலளிக்காததால் போலீசார் அவரை ஆம்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். “ஆம்பூர் உமர் சாலையில் மதரஸா” என்று குறிப்பிடுவது வேடிக்கையாக இருக்கிறது. மதராஸவில் தங்கியிருந்த பயங்கரவாதி கைது என்று உண்மையை வெளியிட ஏன் மறைப்பு என்று தெரியவில்லை. மதரஸாக்கள் பயங்கரவாதத்திற்கு / தீவிரவாதங்களுக்கு உதவுகின்றன என்ற உண்மையினை மறைக்க அவ்வாறு செய்தியை வெளியிட்டிருக்கலாம். பி.டி.ஐ ஏற்கெனவே அவ்வுண்மையினை வெளியிட்டுள்ளது[4]. அச்செய்தி மற்ற ஆங்கில ஊடகங்களிலும் வெளியாகியுள்ளன[5].

ஆம்பூர் சாலை - உதாரணம்

ஆம்பூர் சாலை – உதாரணம்

.பி.போலீஸ் நிலையங்களில் வெடிகுண்டு மிரட்டல், வெடிகுண்டு வைத்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள்[6] / தீவிரவாதிகள்[7]: உத்தரபிரதேச ஆக்ரா தாலியான் காண்டி பகுதியை சேர்ந்தவர் சையது மாமூன் அலி. இவரது மகன் சையது முகம்மது அலி (வயது 37). இவர் மீது உத்தரபிரதேச மாநிலம் போலீஸ் நிலையங்களில் வெடிகுண்டு மிரட்டல், வெடிகுண்டு வைத்தது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளது. ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், தர்கா, மற்றும் நிறுவனம் முதலியவற்றிற்கு தீவிரவாத தாக்குதல் மிரட்டல் விடுத்ததால் வழக்குகள் பதிவாகி உள்ளன[8]. ஆக்ரா, ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகளிலும் தொடர்பு உள்ளது[9]. ஒரு இது தொடர்பாக சையது முகம்மது அலியை போலீசார் தேடி வந்தனர். ஆனால் போலீஸ் பிடியில் சிக்காமல் பல்வேறு மாநிலங்களில் விதவிதமான கெட்டப்பில் சையது முகம்மது அலி சுற்றித்திரிந்து வந்தார். இதனால் தீவிரவாதிகளுடன் சையத்துக்கு தொடர்பு இருக்கலாம் என்று அம்மாநில போலீசார் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அவரை அறிவித்தனர். மேலும் சையத்தின் குடும்பத்தினர், நண்பர்கள் என அவரை சுற்றியுள்ளவர்களின் செல்போன் எண்ணின் டவரை போலீசார் தினமும் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் சையத் தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் சுற்றித்திரிவது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக உள்துறைக்கு, உத்தரபிரதேச போலீசார் தகவல் கொடுத்தனர். உள்துறை அதிகாரிகள் உளவு துறை மூலம் வேலூர் மாவட்ட போலீசாரை உஷார்படுத்தினர்[10]. “புதிய தலைமுறை” டிவி பயங்கரவாதிகள் என்றே குறிப்பிடுகின்றது.

UP Terrorist arrested in Ambur தினத்தந்தி 17-10-2015

UP Terrorist arrested in Ambur தினத்தந்தி 17-10-2015

ஆம்பூர் மதரஸாவில் தங்கியிருந்த தீவிரவாதி கைது: எஸ்.பி. செந்தில்குமாரி உத்தரவின்பேரில் ஆம்பூர் டி.எஸ்.பி. கணேசன் தலைமையிலான போலீசார் சையது முகம்மது அலியின் அடையாளங்களை சேகரித்து, அவரை தேடி வந்தனர். இதற்கிடையில் ஆம்பூர் டவுன் போலீஸ் நிலையம் பின்புறம் உமர் ரோட்டில் சையத் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஒரு மதரஸாவில் தங்கியிருந்தான் என்று பி.டி.ஐ கூறுகிறது[11]. இதையடுத்து டி.எஸ்.பி. கணேசன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியை நேற்றிரவு தங்கள் வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து சையத்தை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை கைது செய்த அணைக்கட்டு காவல் போலீசார் ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், நேற்று முன்தினம் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது சையத் என்பது தெரியவந்தது. கடந்த 14–ந் தேதி அடுத்தடுத்து 2 முறை இந்தி, ஆங்கில மொழியில் மாறி, மாறி போனில் மிரட்டல்கள் வந்தன. இதுதொடர்பாக சைபர் கிரைம் போலீசார் சென்னை உள்பட பல்வேறு இடங்களை தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொண்டனர்[12].

புதியதலைமுறை - பயங்கரவாதிகள்

புதியதலைமுறை – பயங்கரவாதிகள்

ஆம்பூருக்கு அல்லது தமிழகத்திற்கு என்ன தொடர்பு?: எதற்காக சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு சையத் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதனால் சையத் தீவிரவாதிகளின் சிலிபர் செல் எனப்படும் உள்நாட்டு குழுக்களை சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் சையத்துடன் தொடர்புடைய நபர்கள் வேறு யாராவது? தமிழகத்தில் பதுங்கியுள்ளனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சையத் கைது செய்யப்பட்டது குறித்து உத்தரபிரதேச போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அம்மாநில போலீசார் வேலூருக்கு விரைந்துள்ளனர். பிடிபட்ட சையத் உத்தரபிரதேச போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவார் என தெரிகிறது. சையத் பிடிபட்டபோது அவரிடம் இருந்து 5 சிம்கார்டுகள், செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. செல்போன் எண் பட்டியலையும் சேகரித்த போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதியதலைமுறை - அணைக்கட்டு காவல் நிலையம்

புதியதலைமுறை – அணைக்கட்டு காவல் நிலையம்

விசாரணையில் வெளியாகும் குழப்பமான விவரங்கள்: காவல்நிலையத்தில் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ‘திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த முகமது மாமுன் அலி என்பவரின் மகன் சையது முகமது அலி என்றும் சிகிச்சை பெறுவதற்கு வேலூரில் தங்கியிருந்ததாகவும் அவன் தெரிவித்துள்ளான். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதற்கான எவ்வித ஆவணங்களும் அவனிடம் இல்லை. மேலும் அவனிடம் 5 சிம்கார்டுகள் இருந்தன. இவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். சிம் கார்டுகளை ஆய்வு செய்தபோது அதிலிருந்த ஒரு சிம்கார்டு மூலம் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அணைக்கட்டு காவல் நிலையத்திற்கு நேற்றிரவு போலீசார் அழைத்துச் சென்றனர். அங்கு விடிய விடிய விசாரணை நடத்தினர். எஸ்பி செந்தில்குமாரி நேரில் சென்று விசாரணை நடத்தியதில், சையது முகமது அலி ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பேசினான். இதனையடுத்து இந்தி தெரிந்தவர்கள் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடத்தியதில் வேலூர் சிஎம்சி அருகே உள்ள லாட்ஜில் தனது நண்பருடன் தங்கியிருந்தது தெரியவந்தது.

ஆம்பூர் குண்டுவெடிப்பு மிரட்டல் - கைது - உதாரணம்

ஆம்பூர் குண்டுவெடிப்பு மிரட்டல் – கைது – உதாரணம்

வேலூர் லாட்ஜுகளில் சோதனை: இதனையடுத்து, நேற்றிரவு வேலூரில் உள்ள ஒரு சில லாட்ஜ்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். லாட்ஜ்களில் தங்கியிருப்பவர்களின் விவரங்களை தீவிரமாக சேகரித்தனர். இதில் வட இந்திய நபருடன் தங்கியிருந்தவனை கைது செய்தனர். இருவரிடமும் நடத்திய விசாரணையில், இவர்களுக்கு ராஜஸ்தான், ஆக்ரா உள்ளிட்ட 3 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்பு இருப்பதாகவும், வேலூரில் வெடிகுண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியதாகவும் தெரிய வந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து மேலும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். வேலூரில் யார் அவர்களுக்கு உதவி செய்தது? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? இவர்களுக்கு வேறு எந்த அமைப்புடன் தொடர்பு உள்ளது? மேலும் இவர்களின் சதித்திட்டம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட சிம் கார்டுகளில் உள்ள செல்போன் எண்களை சைபர் கிரைம் பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து நடைபெறும் விசாரணையில் வேலூரில் இருந்து அவர்களுக்கு உதவி செய்த பலர் சிக்குவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நோயாளிகள் போர்வையில் தங்கியிருந்து வேலூரில் குண்டுகள் வைக்க சதித்திட்டம் தீட்டிய தீவிரவாதிகள் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© வேதபிரகாஷ்

17-10-2015

[1] தமிழ்.ஒன்.இந்தியா, வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஆம்பூரில் 2 தீவிரவாதிகள் கைது, Posted by: Mayura Akilan, Published: Friday, October 16, 2015, 16:59 [IST].

[2] Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/2-terrorists-nabbed-near-ambur-237880.html

[3] http://tamil.oneindia.com/news/tamilnadu/2-terrorists-nabbed-near-ambur-237880.html

[4] http://www.ptinews.com/news/6626972_Man-wanted-for-making-terror-threats-in-UP-held-in-TN.html

[5] Business Standard, Man wanted for making terror threats in UP held in TN, Press Trust of India , Vellore (TN) October 16, 2015 Last Updated at 22:22 IST.

[6] https://www.youtube.com/watch?v=PWxP66jhXx0

[7] மாலைமலர், சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஆம்பூரில் பிடிபட்ட வாலிபர் தீவிரவாதியா? – ரகசிய இடத்தில் விசாரணை, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, அக்டோபர் 16, 12:06 PM IST

[8] Syed Ahmed Ali had allegedly made terror threats to Taj Mahal in Agra, a dargah besides an institution in Lucknow. He had arrived here two days ago and stayed in a Madrasa in Ambur. http://www.business-standard.com/article/pti-stories/man-wanted-for-making-terror-threats-in-up-held-in-tn-115101601463_1.html

[9] தினகரன், ஆக்ரா, ஜெய்ப்பூரில் குண்டுவெடிப்பில் தொடர்பு: வேலூரில் கைதான தீவிரவாதியிடம் விசாரணை, அக்டோபர்.17, 20125. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=173391

[10] http://www.maalaimalar.com/2015/10/16120645/CMC-hospital-bomb-threat-Ambur.html

[11] Intelligence Bureau officials alerted Tamil Nadu police about the presence of Ali in Ambur in a Madrasa. “We immediately began our probe and with the help of local people we identified Ali…Now Uttar Pradesh police are on their way to take this man into their custody through court,” the official added.

http://www.business-standard.com/article/pti-stories/man-wanted-for-making-terror-threats-in-up-held-in-tn-115101601463_1.html

[12] http://www.dailythanthi.com/News/Districts/Vellore/2015/10/17014634/CMC-Hospital-bomb-threat.vpf

மும்பை மாபியா தலைவன் என்னைக் கொலை செய்ய இரண்டு ஆட்களை அனுப்பியுள்ளானாம், அதனால் நான் இந்தியாவிற்கு வரவில்லை!

ஜனவரி 21, 2012

மும்பை மாபியா தலைவன் என்னைக் கொலை செய்ய இரண்டு ஆட்களை அனுப்பியுள்ளானாம், அதனால் நான் இந்தியாவிற்கு வரவில்லை!

ருஷ்டியின் வருகையும், முஸ்லீம்களின் எதிர்ப்பும்: பிரபல ஆங்கில எழுத்தாளரான சல்மான் ருஷ்டியை இந்தியாவுக்குள் விடக் கூடாது என்று முஸ்லிம் அமைப்புகள் தெரிவித்துள்ளதால் அவர் ஜெயப்பூரில் நடக்கும் இலக்கிய விழாவுக்கு சத்தமில்லாமல் வந்து செல்லவிருக்கிறார் என்றெல்லாம் ஊடகங்கள் ஊதி பார்த்தன. பிரபல பிரிட்டிஷ் இந்திய எழுத்தாளரான சல்மான ருஷ்டி வரும் 20 முதல் 24ம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் நடக்கும் இலக்கிய விழாவில் கலந்து கொள்ளவிருக்கிறார் என்று செய்து வந்ததும், முஸ்லிம்களின் உணர்வுகளை மதிக்காத ருஷ்டியின் விசாவை ரத்து செய்யுமாறு இஸ்லாமிய மத அமைப்பான “தாரூல் உலூம் தியோபான்ட்” பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் கடிதம் அனுப்பியது. பிரமரும், சோனியாவும் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தாருல் உலூம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று அதன் தலைவர் மௌலானா முப்தி அபுல் காசிம் நொமானி தெரிவித்துள்ளார்[1]. மேலும் சல்மான்ருஷ்டி மீது செருப்பு வீசினால் ரூ.1 லட்சம் பரிசளிக்கப்படும் என்று மும்பையில் உள்ள இஸ்லாமிய அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது (தலைக்கே சன்மானம் அறிவித்துள்ளபோது செருப்பு வீசுவதற்கு என்ன பணம் கொடுப்பது?). ஆனால் மத்திய அரசு இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அறிவித்தவாறு ருஷ்டி இலக்கிய விழாவில் கலந்து கொள்வார் என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பலதடவை வந்து சென்றுள்ளபோது, இப்பொழுது ஏன் ஆர்பாட்டம்? கடந்த 1998ம் ஆண்டு வெளிவந்த ருஷ்டியின் “சேட்டனிக் வெர்சஸ்” (சாத்தானின் வேத வாக்கியங்கள்) என்ற நூல் மூலம் முஸ்லிம்களின் மத உணர்வை அவமதித்ததற்காக அவருக்கு எதிராக பத்வா கொடுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2000ம் ஆண்டு அவர் பலத்த பாதுகாப்புடன் இந்தியாவுக்கு வந்து சென்றார். கடந்த 2007ம் ஆண்டு முஸ்லிம்களின் எதிர்ப்பையும் மீறி அவர் ஜெயப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொண்டார். இலக்கிய விழாக்களில் கலந்து கொள்வதில் வழக்கமாக உள்ளபோது, இந்தாண்டு ஏன், அதனை பிரச்சினையாக்கியுள்ளார்கள் என்று தெரியவில்லை. தெரியாமல் என்ன, உபியில் தேர்தல் நடக்கிறதே, எத்தனை தொகுதிகளில் 30% மேலாக முஸ்லீம்கள் உள்ளனர், பிறகு ஓட்டு பெரிதா, இலக்கியம் பெரிதா?

ஓட்டுவங்கி அரசியல் செய்யும் சோனியா-காங்கிரஸ்: உத்தர பிரதேசத்தில் உள்ள முஸ்லிம் வாக்காளர்களை மனதில் வைத்து அரசியல் கட்சிகள் ருஷ்டி விவகாரத்தை கையில் எடுத்துள்ளன. காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ராஷீத் மசூத் கூறுகையில், “முஸ்லிம்கள் ருஷ்டியை மன்னிக்கக் கூடாது. உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடக்கவிருக்கும்போது அவரது வருகை பிரச்சனையைக் கிளப்பும். அதனால் ஜெய்ப்பூர் விழாவை ரத்து செய்ய வேண்டும்”, என்றார். பயந்து போன, பாஜக துணை தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், “தேர்தல் நேரத்தில் ருஷ்டி வருவது சரியல்ல. அவருக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விசா வழங்குவது உகந்ததன்று“, என்று பாட்டு பாடியுள்ளார். ருஷ்டி வருகையை தடை செய்ய வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகமது ஹசன் தெரிவித்துள்ளார் அவர் வருவதால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளதாக ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெஹ்லாட் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்து தெரிவித்துள்ளார்.  அதெப்படி சொல்லிவைத்தால் போல மற்ற கட்சிகளில் மட்டும், முஸ்லீம்கள்தாம் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள், ஆனால், காங்கிரஸில் அமைச்சர்களே வந்து விடுகிறார்கள்!

தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தினரால் ஆபத்தாம் – கூறுவது உள்துறை-சிதம்பரம்: இந்நிலையில் சல்மான் ருஷ்டி உயிருக்கு சிமி இயக்கத்தை சேர்ந்தவர்களால் திடீர் ஆபத்து ஏற்படலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது[2]. ஆஹா, சிதம்பரம் தான் என்னமாய் வேலை செய்கிறார்? சிமி இயக்க தலைவர்களின் நடவடிக்கையை கண்காணித்த பிறகே இந்த உத்தரவை உள்துறை வெளியிட்டுள்ளது[3]. அதாவது, அந்த அளவிற்கு, அவாது திறமை உள்ளது. தடை செய்த பிறகும், அவர்கள் வேலை செய்வார்களாம், சிதம்பரம் பார்த்துக் கொண்டே இருப்பாராம்! மேலும் ருஷ்டி ஜெய்ப்பூருக்கு வருவதை அம்மாநில மக்கள் விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், காங்கிரஸ்காரர்கள் அங்கு பெண்களை கற்பழித்துக் கொண்டிருப்பதையும், கற்பழித்துக் கொலை செய்து கொண்டிருப்பதையும் பார்த்துக் கொண்டிருப்பார்களாம்!

கெலாட்டின் கலாட்டா, சிதம்பரத்தின் சில்மிஷம்: சிதம்பரத்தைச் சந்தித்த பிறகு கெஹ்லாட் செய்தியாளர்களிடம் கூறியதாவது,ருஷ்டி ஜெய்ப்பூருக்கு வருகிறாரா, இல்லையா என்ற அதிகாரப்பூர்வமான தகவல்கள் என்னிடம் இல்லை. ஆனால் அவர் வருவதை உள்ளூர் மக்கள் விரும்பவில்லை. இலக்கிய விழா ஏற்பாட்டாளர்களுடன் எனது தலைமைச் செயலாளர் தொடர்பில் உள்ளார். சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை எந்த மாநில அரசும் விரும்பாது. எனவே, இது குறித்து மத்திய அரசிடம் தெரிவித்துள்ளேன்”, என்றார்[4]. சல்மான் ருஷ்டி இந்தியா வருவது தொடர்பாக குழப்பம் நீடிக்கிறது[5]. இந்நிலையில் சல்மான் ருஷ்டி இலக்கிய விழாவின் துவக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் பிற நிகழ்ச்சிகளில் மட்டும் சத்தமில்லாமல் கலந்து கொள்ளவிருக்கிறார் என்று கூறப்படுகின்றது[6].  சல்மான் ருஷ்டி 20.1.2012 அன்று ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடக்க உள்ள இலக்கிய விழாவுக்கு வருகை தர உள்ளதால் அவருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து சல்மான் ருஷ்டி தங்கம் இடம் மற்றும் பயண விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. ஆனால், சல்மான் ருஷ்டி ஜெயப்பூர் இலக்கிய விழாவில் கலந்துகொள்ளவில்லை.

ருஷ்டி வரவில்லையாம்! இஸ்லாம் அடிப்படைவாதிகளால் ஆபத்து என்றால், இந்திய அரசாங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது? என்றுதான் மற்றவர்கள் நினைத்துக் கொள்வர்கள், கேட்கவும் செய்வார்கள். இந்தியாவில் அவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் அவர் தனது பயணத்தை ரத்து செய்துள்ளார்.

“Very sad not to be at jaipur. I was told bombay mafia don issued weapons to 2 hitmen to “eliminate” me. Will do video link instead. Damn”[7].

இதற்கிடையே ருஷ்டி டுவிட்டரில் கூறியிருப்பதாவது,இந்திய வருகையையொட்டி நான் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தேன். இதன் மூலம் மாநில நிர்வாகத்துக்கு எந்த இடைஞ்சலும் ஏற்படக்கூடாது என்பதால், அமைதியாக இருந்தேன்[8]. ஜெயப்பூருக்கு வர முடியாதது மிகவும் வருத்தமாக உள்ளது. மும்பை மாபியா டான் 2 அடியாட்களிடம் ஆயுதங்கள் கொடுத்து நான் இந்தியா வந்தால் என்னைக் கொல்லுமாறு உத்தரவிட்டுள்ளாராம்[9]. அதனால் நான் விழாவுக்கு வரவில்லை என்னுடைய வருகையால் சக எழுத்தாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், இந்தவிழாவில் கலந்து கொள்வதை ரத்து செய்துள்ளேன்”, என்று தெரிவித்துள்ளார்[10].

ஜிலானியும், ருஷ்டியும் – இஸ்லாம் அடிப்படைவாதம் வேலை செய்யும் விதம்: இந்திய-விரோதிகள் தலைநகரில் மாநாடு நடத்த அனுமதி தருகிறார்கள், பாதுகாப்புத் தருகிறார்கள். அருந்ததி ராய் போன்ற தேசவிரோதிகளும் கலந்து கொண்டு பேசுகிறார்கள். எதிர்ப்புத் தெரிவிப்பவர்களை கைது செய்கிறார்கள். பிறகு, ருஷ்டி விஷயத்தில் மட்டும் ஏன் வேறுவிதமாக நடந்து கொள்ள வேண்டும்? இது செக்யூலரிஸாமா? மதவாதமா, பிறகு யாரை அப்படி வளர்த்து வருகிறார்கள்? முஸ்லீம் அமைப்புகள் ஏன் ஜிலானியை எதிர்க்கவில்லை? ருஷ்டியும் முஸ்லீம், ஜிலானியும் முஸ்லீம் என்றால், இந்தியர்களாக இருக்கும் நிலையில், முஸ்லீம்கள், இருவரையும் எதிர்த்திருக்க வேண்டும். ஆனால், ருஷ்டியை கொலையும் செய்வோம், ஆனால், ஜிலானி விஷயத்தில் வாயை மூடிக் கொண்டிருப்போம் என்றால், அது என்ன “யிஸம்”?

வேதபிரகாஷ்

21-01-2012