Posted tagged ‘ஜுன்டால் அப்சா’

நங்க பர்வதத்தின் மேல் ஏறத்தயாரான 10 பேரை இஸ்லாமிய தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்!

ஜூன் 25, 2013

நங்க பர்வதத்தின் மேல் ஏறத்தயாரான 10 பேரை இஸ்லாமிய தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்!

 

பாகிஸ்தானில் உள்ள நங்க பர்வதம் (26,660 feet, is the world’s ninth-highest mountain) இரண்டாவது உயந்த சிகரத்தைக் கொண்டுள்ளது, உலகத்தின் 9வது உயர்ந்த மலையாகும். இதன்மேல் ஏற வெளிநாட்டு பிரயாணிகள் சென்றனர். அப்பொழுது கில்கிட்-பலிஸ்தான் என்ற இடத்தில் ராணுவ உடையில் வந்த இஸ்லாமிய தீவிரவாதிகள் அவர்களை நோக்கி சுட ஆரம்பித்தார்கள். அதில் 10 பேர் கொல்லப்பட்டனர்.

 

தலிபானின் தொடர்பாளி இஷானுல்லா இஷன் (Taliban spokesman, Ehsanullah Ehsan) என்பவன் அந்த துப்பாக்கி வீரர்கள் ஜுன்டால் அப்சா (a Taliban affiliate named Jundul Hafsa) என்ற தலிபான் பிரிவை சேர்ந்தது மற்றும் மே 29 அன்று ஒரு அமெரிக்க விமான தாக்குதலில் வலி உர் –ரஹ்மான் என்ற தலிபான் தலைவர் கொல்லப்பட்டதற்குத்தான் இந்த பழி வாங்கும் நடவடிக்கை (an American drone attack that killed the Taliban deputy leader, Wali ur-Rehman, on May 29) என்று தொலைபேசியில் ஒப்புக்கொண்டுள்ளான்[1].

 

இந்த ஜுன்டால் அப்சா, லஸ்கர் -இ- ஜாங்வி (Lashkar-e-Jhangvi) என்ற கூட்டத்தின் புதியதாக முளைத்துள்ள இஸ்லாமிய ஜிஹாதிக் கூட்டம் என்று அறியப்படுகிறது. முன்பு ஷியைத் என்ற முஸ்லிம்கள் சென்று கொண்டிருந்த பேருந்தை தாக்கியது இந்த கும்பல்தான் என்று கூறப்படுகிறது. என்னத்தான் பெயரை மாற்றிக் கொண்டாலும், குணமோ, தீவிரவாதமோ மாறாமல், தீவிரம் அடைந்து கொண்டுதான் வருகிறது.

 

இந்நிலையில், எங்கு தமது பிழைப்பு போய்விடுமோ என்று, அயல்நாட்டு பிரயாணிகள், சுற்றுலா பிரயாணிகள் மீது நடத்தப்பட்டுள்ள தீவிரவாதத் தாக்குதலை உள்ளூர்வாசிகள் கண்டித்துள்ளனராம். ஆமாம், பிரான்ஸ் போன்ற நாடுகளே கண்டிக்கும் போது[2], உள்ளூர்வாசிகளுக்கு என்ன? இஸ்லாமாபாதிலும் கண்டன ஆர்பாட்டம் நடந்துள்ளதாம்[3]. ஆமாம், “நாங்கள் கொன்று கொண்டே இருப்போம், நீங்கள் வந்து கொண்டே இருங்கள்”, என்றால் என்ன அர்த்தம்?

 

இந்தியா வழியாக இமயமலையின் மீது ஏற்பவர்கள் கொல்லப்படுவதில்லை, அதஅவது, அந்த பேச்சிற்கே  இடமில்லை.  ஆனால், பாகிஸ்தான் வழியாக மலையேற முயன்றால், இப்படியான தீவிரவாதத் தாக்குதலும் இருக்கிறது என்பதனை அயல்நாட்டவர் புரிந்து கொள்வார்கள்.