Posted tagged ‘ஜீவனாம்சம்’

ரூ.15,000/- கொடுக்கும் மாலிக்கும், 5000 கொடுக்கும் குஞ்சும்!

ஏப்ரல் 8, 2010

ரூ.15,000/- கொடுக்கும் மாலிக்கும், 5000 கொடுக்கும் குஞ்சும்!

விவேக் ஜோக்கில் அடிக்கடி சன் – டிவி மற்ற எல்லா டிவிக்களும் ஓலிபரப்பி பரவசத்தில் ஆழ்த்தி, பிள்ளைகள் வேறு அதை ஒப்பிவித்து, மிகவும் பிரபலமான, “மனைர் குஞ்சு” ஒன்று உள்ளது.

அதில் ஏதோ ரூ.5000/- கொடுத்துவிட்டு கற்பழிப்பு செய்து, அதாவது கற்பழித்து விட்டு ரூ.5000 அபராதம் கொடுத்துத் தப்பித்துக் கொள்வது மாதிரியும், விவேக் குஞ்சை சுட்டு தண்டிப்பது மாதிரியும் இருக்கும்.

இப்பொழுது, பத்து நாட்களாக பொய்-மேல்-பொய் சொல்லி, இந்தியர்களுக்கு ஏதோ இதுதான் முக்கியமானப் பிரச்சினை போல, இந்த அசிங்கமான செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு, ஒளிபரப்பி அவந் அவளுடன் இருந்தான், இவள்-இவனுடன் படுத்தான், கர்ப்பம் ஏற்பட்டது, கரு-கலைந்தது……………………………என்றெல்லாம் விவரமாக போட்டுவிட்டு, இப்பொழுது, தலாக் செய்து விட்டார், ரூ. 15,000/- கொடுப்பார் என்று கதையை முடித்துரிப்பது, நடந்த நிகழ்ச்சிகளை விட மிகவ்ய்ம் கேவலமாக இருக்கிறது.

இதெல்லாம், தனிப்பட்ட மனிதர்களின் பிரச்சினை என்றால், ஊடகங்களில் வரச் செய்திருக்கக் கூடாது.

அவ்வாறு விளக்கம் எல்லாம் கொடுத்திருக்கக் கூடாது.

மேல்தட்டு, பணக்கார, நவீன-நாகரிக மாந்தர்களின் உலகம், அவர்கலது எண்ணப்படி ஆண்-பெண்கள் கூடுவார்கள், உறவு வைத்துக் கொல்வார்கள், பிரிந்து விடுவார்கள்……………………..என்றெல்லாம் இருந்தால், ஏன் அத்தகைய “படுக்கையரை” அசிங்கங்களை ஊடகங்களில் எடுத்து வந்து, இம்மாதிரி தேவையற்ற முறையில் ஆபாச-விளம்பரம் பெறுகிறார்கள்.

அதுமட்டுமல்ல , மத கலவரம் என்று ஊரே அடங்கிக் கிடக்கும் போது, எதற்கிந்த அடங்காத காம-கல்யாண-கிரக்க-குறுகிய-கலாட்டா செய்திகல், படங்கள்……எல்லாம்…………….எந்த உண்மையை மறைக்க?