Posted tagged ‘ஜிஹாதி ஜேன்’

ஜிஹாதி ஜேனும் / ஃபாத்திமா ரோஸ், தாவூத் ஜிலானியும்!

மார்ச் 20, 2010

ஜிஹாதி ஜேனும் / ஃபாத்திமா ரோஸ், தாவூத் ஜிலானியும்: தாவூத் ஜிலானியின் பெண்களுடையதான தொடர்புகள் மர்மமாகவே உள்ளன. அவனுடைய பல அமெரிக்க மனைவிகள் மற்றும் மும்பை நடிகைகளின் தொடர்பு முதலியவற்றை அடுத்து ஜிஹாதி பெண்களுடைய தொடர்பும் வருவது வியப்பாகத்தான் உள்ளது. ஏனெனில், இந்த வழக்கும் அமெரிக்காவில் சமகாலத்தில்தான் நடந்து வருகிறது.

ஜிஹாதி ஜேன் [Jihad Jane] -எனப்படுகின்ற கோலீன் ல ரோஸ் [Colleen LaRose] என்ற அழகிய பெண்ணும் தாவூத் ஜிலானியின் கூட்டாளியாக ஃபிலடெல்ஃபியா நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டதில் தான் குற்றாமற்றவள் என்றே வாதிட்டாளாம்! ஆனால் எஃப்.பி.ஐ உளவாளிகள் அவள் ஜிஹாதிகளுடன் ஐரோப்பாவிற்குத் தீவிரவாத தாக்குதலை மேற்கொள்ளச் சென்றாள் என்கின்றனர். அதுமட்டுமல்லாது இணைதளத்தின் மூலம் ஜிஹாதிற்கு ஆட்களை வேலைக்கு சேர்த்து கொண்டாளாம்!

LaRose, an American woman from Pennsylvania and accused of using the Internet to recruit jihadist fighters and help terrorists overseas. (PHILADELPHIA) The Philadelphia-area woman who authorities say dubbed herself “Jihad Jane” online pleaded not guilty…

https://i0.wp.com/img.thesun.co.uk/multimedia/archive/01002/Jihad_Jane_682_1002325a.jpg

ரோஸுடைய வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருந்ததினால், ஒரு நிலையில் தற்கொலை செய்துகொள்ளவே துணிந்து விட்டாளாம். ஆனால், திடீரென்று அவள் முஸ்லீமாக மாறி இணைத்தளத்தின் மூலம் ஜிஹாதிற்கு ஆள் சேர்க்க அரம்பித்து விட்டாளாம், அதூ மட்டுமல்ல தானும் ஒரும் “ஷஹீத்” ஆகத் தயாராக இருக்கிறேன், ஒன்று என்னுடை குறிக்கோளை அடைவேன் அல்லது முயற்சி செய்துகொண்டே இறப்பேன் என்று சொல்லிக்கொண்டாளாம்! இதே நேரத்தில் நூறு மைகளுக்கு அப்பால், சிகாகோ நீதிமன்றத்தில் இன்னொரு அமெரிக்கன் தானும் ஜிஹாதிகளுக்கு உதவிசெய்து கொண்டே குற்றங்களை மறுத்து வருகிறான்[1].

பெண்-ஜிஹாதிகளின் நிலை வியப்பாக இருக்கிறது என்று அமெரிக்க மனோதத்துவ வல்லுனர்கள் கூறுகின்றனர். ஒருபுறம், முஸ்லீம்கள் அமெரிக்காவில் இஸ்லாம் வேகமாக வளர்கிறது என்கின்றனர். ஆனால், அதற்கேற்றவாறே ஜிஹாதி-தீவிரவாதமும் வளர்வது அவர்களுக்குக் கவலை அளிக்கக்குடிய வகையில் இருக்கிறதாம்! இந்நிலையில் இந்தியாவில் இதைப் பற்றி யார்ம் கவலைப் பட்டதாக / படுவதாகத் தெரியவில்லை!