மதானியின் கூட்டாளி – அப்துல் அஜீஸ் வங்கி மோசடி வழக்கு, ஜாமீன் மறுப்பு, சிறையில் அடைப்பு!
மக்கள் ஜனநாயக கட்சித்தலைவர் : ஜாமீன் மனு தள்ளுபடி[1]: கேரளாவின் மக்கள் ஜனநாயக கட்சியின் செயல் தலைவர் அப்துல்அஜீஸின் ஜாமீன் மனுவை, மதுரை சி.பி.ஐ., கோர்ட் தள்ளுபடி செய்தது. கேரளாவின் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல்மதானி. பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் உள்ளார். இக்கட்சியின் செயல் தலைவர் அப்துல்அஜீஸ். இவர், மும்பையில் உள்ள பேங்க் ஆப் இந்தியாவில் இருந்து பெறப்பட்டதாக போலி “டிடி’ தயாரித்து, மதுரை வடக்குமாசிவீதியில் உள்ள மகாராஷ்டிரா வங்கியில் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாக சி.பி.ஐ.,யினர் 1994ல் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த அப்துல்அஜீஸை, பெங்களூருவில் கடந்த செப்.,3ம் தேதி சி.பி.ஐ.,அதிகாரிகள் கைது செய்து, மதுரை சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி ஜெகநாதன் உத்தரவுப்படி, அப்துல்அஜீஸ் ரிமாண்ட் செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். சி.பி.ஐ., வக்கீல் ரோசாரியா சுந்தர்ராஜ் ஆட்சேபம் தெரிவித்தார். விசாரணை நடத்திய நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை.
ரூ. 95 லட்சம் வங்கி மோசடியில் மதானி உறவினர்: மதுரையில் உள்ள மகாராஷ்ட்டிரா பாங்கியில் கடந்த 1994-ம் ஆண்டு ரூ. 94 லட்சத்து 85 ஆயிரம் செக் மோசடி செய்யப்பட்டது. இது தொடர்பாக மதானி யின் உறவினரான அப்துல்அஜீஸ், மதுரை விளக்குத்தூண் பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மேலும் சச்சின்சிராஜ்கிலானி, பாலசுப்பிரமணி முத்து கிருஷ்ணன், ரானாமகாதேவ் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அப்துல் அஜிஸ் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடப் பட்டனர். இந்த மோசடி சம்பந்தமான வழக்கு மதுரை சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் ஜாமீனில் சென்றவர்கள் அப்துல்அஜீசை தவிர மற்றவர்கள் கோர்ட்டில் ஆஜராகி வந்தனர். கடந்த 1998-ம் ஆண்டு முதல் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக அப்துல்அஜீஸ் இருப்பதால் அவரை கைது செய்ய வாரண்டு பிறப்பிக்கப் பட்டது. இதையொட்டி அவரை சி.பி.ஐ. போலீசார் தேடி வந்தனர்.
மதுரை சிறையில் அடைப்பு: பலத்த போலீஸ் பாதுகாப்பு[2]: இந்த நிலையில் கர்நாடக போலீசார் மதானியை கைது செய்து பெங்களூருக்கு அழைத்து வந்தபோது அவருக்கு ஜாமீன் வாங்க அப்துல்அஜீஸ் பெங்களூர் சென்றிருந்தார். அவர் தேடப்படும் குற்றவாளி என தெரிந்த கர்நாடக போலீசார் அவரை கைது செய்து தமிழ்நாடு சி.பி.ஐ. போலீசாரிடம் ஒப்படைத்தனர். மதுரை கொண்டு வரப்பட்ட அப்துல்அஜீசை சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி ஜெகநாதன் வீட்டிற்கு நேற்று இரவு அழைத்து சென்று ஆஜர்படுத்தினர். அவரை 16-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மதானியின் உறவினர் அப்துல்அஜீஸ் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாலை 2 மணி அளவில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.
[1] தினமலர், மக்கள் ஜனநாயக கட்சித்தலைவர் : ஜாமீன் மனு தள்ளுபடி, செப்டம்பர் 18, 2010, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=87124
[2] மாலைச்சுடர், மன்னிக்கவும், நீங்கள் தேடிய கட்டுரை எங்கள் இணையத்தளத்தில் புழக்கத்தில் இல்லை.
ரூ. 95 லட்சம் மோசடியில் கைதான மதானி உறவினர், மதுரை சிறையில் அடைப்பு: பலத்த போலீஸ் பாதுகாப்பு , http://www.maalaimalar.com/2010/09/05173505/95-lakhs-cheating-madhani-caus.html
அண்மைய பின்னூட்டங்கள்