Posted tagged ‘ஜவாஹிருல்லாஹ்’

கோவையில் திடீரென்று  ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு கொண்ட 100 இளைஞர்களை கண்டு பிடித்து விட முடியுமா? (1)

நவம்பர் 7, 2022

கோவையில் திடீரென்று  ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு கொண்ட 100 இளைஞர்களை கண்டு பிடித்து விட முடியுமா? (1)

கோவை கார் குண்டு வெடிப்பிற்குப் பிறகு தொடரும் விசாரணை, சோதனை முதலியன: கோவையில் ஐ.எஸ். இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட 100 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிபுணர்கள் மூலம் உளவியல் ஆலோசனை வழங்க உள்ளதாக மாநகர போலீசார் தெரிவித்தனர், என்று செய்திகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. கோவை உக்கடம் சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த 23ம் தேதி கார் வெடிப்பில் ஜமேஷா முபின் (23) பலியானார். கோவை மாநகர தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி சதித்திட்டம் தீட்டியதாக ஜமேஷா முபினின் உறவினர்கள் முகமது அசாருதீன், அப்சர்கான் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். அவர்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தற்போது என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சிறையில் உள்ள 6 பேரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர். கோவை மாநகர தனிப்படை போலீசார் கோவையில் சந்தேக நபர்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். உக்கடம், ஜி.எம்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பல பேரின் வீடுகளில் சோதனை நடத்தி விசாரணை நடத்தினர்[1]. மேலும் போலீசார் நடத்திய விசாரணையின் படி, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் பால் ஈடுபாடு கொண்ட நபர்கள் குறித்த பட்டியலை போலீசார் திரட்டினர்[2].

யார் இந்த 53 அல்லது 100 பேர் இளைஞர்கள்?: 53, 100 பேர் என்றெல்லாம் குறிப்பிடப் படும் இந்த இளைஞர்கள் யார் என்று குறிப்பிடப் படவில்லை. அவர்களது பெயர்களும் தெரிவிக்கப் படவில்லை. நல்லது, ஏனெனில், விசாரணை நடந்து வரும் பொழுது, எல்லா விவ்ரங்களையும் வெளிப்படையாக சொல்லி விடமுடியாது. ஆனால், உலாமாக்களை வைத்து கவுன்சிலிங், ஆலோசனை என்றெல்லாம் குறிப்பிடும் பொழுது, அவர்கள் முஸ்லிம்கள் என்றாகிறது. ஏனெனில், உலாமாக்கள் அவ்வாறு மற்றவர்களுக்கு கவுன்சிலிங், ஆலோசனை சொல்ல மாட்டார்கள். ஆகவே, செக்யூலரிசத் தனமாக, இவ்விவரங்கள் ஊடகங்களில் எளியிடப் படுகின்றன என்பது தெரிகிறது. ஒன்று பாதுகாப்பு, ரகசியம் காக்கப் படவேண்டும் என்றால், அதற்கான முறைகளை அரசாங்கம் தொடந்து செய்து கொண்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட பகுதியில், முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர், அங்கு, சந்தேகிக்கப் படும் வகையில் ஏதோ நடக்கிறது எனும் போது, அதை கவனிக்கப் பட வேண்டும். தொடர்ந்து வெடிகுண்டு சம்பந்தப் பட்ட ரசாயனங்கள் விற்கப் படுகின்றன, வாங்கப் படுகின்றன என்றாலும், கவனிக்கப் படவேண்டும். குவாரி போன்றவற்றிக்கு என்று வாங்கி, மற்ற காரியங்களுக்கு உபயோகிக்கப் படுகின்றன எனும்பொழுதும், அவை கவனிக்கப் படவேண்டும். இவையெல்லாம் தாண்டித் தான், இத்தகைய வெடிப்புகள் நிகழ்கின்றன.

உளவுத்துறை போலீசார் நடத்திய விசாரணை: என்.ஐ.ஏ இவ்வழக்கை எற்றுக் கொண்டதாக ஏற்கெனவே செய்தி வந்து விட்டது. ஆனால், உளவுத்துறை போலீசார் நடத்திய விசாரணையில் கோவை மாநகரில் 70 பேர் முதல் 100 பேர் வரை ஐ.எஸ். இயக்க செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு உள்ளது தெரியவந்தது[3]. தற்போது போலீசார் அவர்களை அடையாளம் கண்டுள்ளனர்[4]. அவர்களது பட்டியல், விவரங்களும் தயாரிக்கப் பட்டு வருகின்றன[5]. இதையடுத்து அவர்களுக்கு உலாமாக்கள், உளவியல் நிபுணர்கள் மூலம் உளவியல் ஆலோசனை வழங்க திட்டமிட்டு உள்ளனர்[6], போன்ற செய்திகளும் தொட்ர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. சாதாரணமாக, செய்திகள் வாசிக்கும் வாசகர்களுக்கு, மத்திய அல்லது மாநில உளவுத்துறை போலீசார், அல்லது என்.ஐ.ஏ அல்லது யார் விசாரணை நடத்துகிறார்கள் என்ற குழப்பம் ஏற்படலாம். ஒருவேளை விசாரணை நடக்கும் பொழுது, அவர்களால், முழுவிவரம் கொடுக்கப் படாதல் நிலை இருக்கலாம். அப்பொழுது, ஊடகங்கள் முரண்பட்ட செய்திகளை வெளியிடக் கூடாது.

ஏற்கனவே கைதான ஆம்பூர் மாணவன் வீட்டில் சோதனை[7]: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நீலிக்கொல்லையை சேர்ந்தவர் மீர் அனாஸ் அலி (22). இவர் தனியார் பொறியியல் கல்லூரில் 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஜூலை 30ம் தேதி இவரது வீட்டில் மத்திய உளவு துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது மீர் அனாஸ் அலி தனது லேப்டாப்பை உடைத்ததாக தெரிகிறது[8]. உளவுதுறையினர் அந்த லேப்டாப் மற்றும் அவரது இரு செல்போன்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக மீர் அனாஸ் அலி செயல்பட்டு வந்ததும், வெளிநாட்டு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்தததும் தெரியவந்தது. இதைதொடர்ந்து அவரை ஆம்பூர் டவுன் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், நேற்று ஆம்பூரில் உள்ள அனாஸ் அலி வீட்டிற்கு திருப்பத்தூர் மாவட்ட ஏடிஎஸ்பி புஷ்பராஜ் தலைமையிலான போலீசார் வந்து சோதனை செய்தனர். வீட்டில் இருந்த பென் டிரைவ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஆய்வுக்காக போலீசார் பறிமுதல் செய்தனர்.

அனாஸ் அலி வீட்டில் பொருட்கள் பறிமுதல் செய்யப் பட்டதா, இல்லையா?: ஆனால், தமிழ்.இந்து, இது போல செய்தி வெளியிட்டுள்ளது[9], “கோவையில் கார் சிலிண்டர் வெடித்த விபத்தை தொடர்ந்து இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் பரவியது. அவரது வீட்டுக்கு அருகில் ஏராளமானவர்கள் திரண்டதால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்றது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: மிர் அனாஸ் அலி 90 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளார். அவருக்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டுள்ளது.அவரது வீட்டில் வழக்கு தொடர்பாக வருவாய்த் துறையினர் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டது. இது குறித்த விவரங்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும். எங்கள் சோதனையில் எந்தவித தடை செய்யப்பட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை[10] என்றனர்.” அதாவது, தினகரன், “வீட்டில் இருந்த பென் டிரைவ் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஆய்வுக்காக போலீசார் பறிமுதல் செய்தனர்” என்றும், தமிழ்.இந்து, “எங்கள் சோதனையில் எந்தவித தடை செய்யப்பட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை,” என்று போலீஸார் சொன்னதாகவும் செய்திகள் வந்துள்ளன. கோவை கும்பலுக்கும், இவனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற நிலைதான் தெரிகிறது.

தென்னகத்தில் உள்ள தீவிரவாத இணைப்புகள், சம்பந்தங்கள், உரையாடல்கள் முதலியவை கண்காணிக்கப்பட வேண்டும்: தீவிரவாதம் தமிழகம், கேரளா, கர்நாடகா என்றெல்லாம் இணைந்துள்ளது என்பது கடந்த குண்டுவெடிப்புகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். விசாரணையின் போது, இந்த மூன்று மாநில போலீசார், என்ஐஏ போன்றோர் வந்து செல்வது அறிந்த விசயமே. இதே போல தெலிங்கானா-ஆந்திரா தொடர்புகலும் உள்ளன. இந்த மூன்று மாநில எல்லைகள் அருகிலுள்ள இடங்களில் காடுகள், மறைவான இடங்கள், ரிசார்ட்டுகள் என்றெல்லாம் இருப்பது தெரிந்த விசயமே. கனிமங்கள், மரங்கள் தொடர்ந்து கடத்தப் பட்டு, கேரளாவுக்குச் சென்று கொண்டிருக்கின்றன. ஐஎஸ் தீவிரவாத சார்பு கொண்டவர்கள், விருப்பம் மிக்கவர்கள், மனதளவில், சித்தாந்த ரீதியில் ஆதரிப்பவர்கள், …………………………..போன்றவர்கள் சமூக ஊடகங்களில் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்குள் இணைப்புகள், சம்பந்தங்கள், உரையாடல்கள் முதலியவற்றை கண்காணிக்க முடியுமா-முடியாதா என்பதை சாதாரண மக்கள் ஆராய்ச்சி செய்ய முடியாது.

வேதபிரகாஷ்

07-11-2022


[1] தமிழ்.இந்து, கோவையில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள 53 இளைஞர்களை கண்டறிந்து போலீஸ் கண்காணிப்பு, செய்திப்பிரிவு, Published : 06 Nov 2022 06:48 AM, Last Updated : 06 Nov 2022 06:48 AM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/893049-police-surveillance-of-53-youths-in-coimbatore-for-pro-isis-stance-3.html

[3] தீக்கதிர், கோவையில் ஐஎஸ்ஐஎஸ் இயக்க ஆதரவான 50 இளைஞர்கள் கண்டுபிடிப்பு, வாவட்ட செய்திகள், நவம்பர் 5, 2022.

[4]https://theekkathir.in/News/districts/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D/turmeric-price-hike-makes-farmers-happy

[5] தமிழ்.முரசு, 60 இளையர்களுக்கு நல்வழிப் பயிற்சி, 7 Nov 2022 05:30

[6] https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20221107-99204.html

[7] தினகரன், கோவையில் ஐஎஸ் தீவிரவாத ஆதரவு வாலிபர்கள் சிக்கினர்: உளவியல் ஆலோசனை வழங்க திட்டம், 2022-11-06@ 00:37:1.

[8] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=811864

[9] தமிழ்.இந்து, ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருந்து கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம்பூர் இளைஞர் வீட்டில் சோதனை, செய்திப்பிரிவு, Published : 06 Nov 2022 07:00 AM; Last Updated : 06 Nov 2022 07:00 AM

[10] https://www.hindutamil.in/news/tamilnadu/893045-ambur-youth-house-raided-with-links-to-isis-2.html

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்!

மார்ச் 11, 2011

முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் போடும் அரசியல் நாடகங்கள்!

 

தனிப்பட்ட முறையில் முஸ்லீம்களின் மீது எந்த எதிர்மறையான நோக்கம் இல்லையெனெனும், அரசியல் ரீதியாக முஸ்லீம் லீக் இந்தியாவில் செய்து வரும் அரசியலை விமர்சித்து அலசும் கட்டுரை இது.

 

திராவிட கட்சிகளும், முஸ்லீம் லிக்கும்: ஜின்னா பெரியாருக்கு என்றுமே அரசியல் ரீதியில் உதவியது கிடையாது. ஆனால், பெரியார் தாம் தேவையில்லாமல், ஜின்னாவிடம் போய் கெஞ்சிக் கொண்டிருந்தார். ஒருமுறை ஜின்னாவே பெரியாருக்கு வெளிப்படையாக கடிதமும் எழுதி விட்டார். தான் முஸ்லீம்களுக்காகத்தான் போராட முடியுமே தவிர முஸ்லீம் அல்லாதவர்களுக்கு முடியாது என்று தெரிவித்தார்[1]. அதுபோல திகவிற்கு பிறகு திமுக முஸ்லீம் லிக்குடன் நெருக்கமாக இருந்தாலும், திமுக தான் முஸ்லீம்களுக்கு நண்பன் என்று காட்டிக் கொள்ள உபயோகப் பட்டதே தவிர, முஸ்லீம் லீக்கினால் திராவிட கட்சிகளுக்கு என்ன ஆதாயம் கிடைத்தது என்றதை அவர்கள் தாம் கூறிக்கொள்ள வேண்டும்.

 

முஸ்லீம் லீக்குகள் கட்சிகள் பிரிந்திருந்தாலும் சாதிக்கும் நிலை: முஸ்லீம்களுக்குள் இறையியல் ரீதியில், இனம், மொழி, பாரம்பரியம், கலாச்சாரம் என்று பலவித காரணிகளால் பற்பல வித்தியாசங்கள் இருக்கலாம். ஆனால், இந்தியாவில் பிரச்சினை என்று வரும்போது, ஒன்றாக வேலை செய்து வருகின்றார்கள். இந்தியா இரண்டாவதற்கு காரணம் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தான் என்று காட்டுவது சரித்திரம். என்னத்தான் இந்தியா செக்யூலரிஸத்தில் ஊறினாலும், பாகிஸ்தான் மதவாதத்தில் திளைத்தாலும், பாதிக்கப்பட்டுள்ளது இந்துக்கள்தாம் என்பது அந்தந்த நாட்டு சரித்திரங்கள் எடுத்துக் காட்டுகின்றன[2]. இந்தியாவில் முஸ்லீம்கள் எல்லா உரிமைகளையும் பெற்று இருக்கும் நிலையில், பாகிஸ்தானில் இந்துக்கள் மிருகங்கள் போல் வேட்டையாடப் படுகிறார்கள்[3]. இந்நிலையில், முஸ்லீம் கட்சிகள் பிரிந்துள்ளது போல காட்டிக் கொண்டு, இரண்டு அணியிலும் பங்குகளைக் கேட்டு தமது அரசியல் பலத்தைப் பெருக்கவே வழிகண்டு வருகின்றனர். ஆனால், வெளியில் ஒன்றையொன்று தாக்கிக் கொள்வது போலக் காட்டிக் கொள்கின்றன[4]. மொத்தத்தில் ஆறு இடங்களை முஸ்லீம் கட்சிகள் பெற்றுவிட்டன. வெற்றிபெற்றதும், அவர்கள் ஒன்றாகத்தான் வேலை செய்யப் போகிறார்கள்.

 

திராவிட கட்சி கூட்டணிகளில் முஸ்லீம் லீக்குகள்-கட்சிகள்: அதிமுக கூட்டணியில் முஸ்லீம் கட்சிகள் உள்ளன. திமுகவிலும் உள்ளன. “அதிமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும்என தமுமுக மாநில பொது செயலாளர் ஹைதர்அலி தெரிவித்தார்…………..மேலும் அதிமுக கூட்டணியில் தற்போது தேமுதிக வந்துள்ளது. அவர்களை நாங்கள் வரவேற்கிறோம்[5].  மனிதநேய மக்கள் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் சொந்த சின்னத்தில் போட்டியிட மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது[6]. தமிழகத்தில் அ.தி.மு.க., கூட்டணி வலுவாக உள்ளது என மனிதநேய மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லாஹ் கூறினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மனிதநேய மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜவாஹிருல்லாஹ் வந்தார். இரவிபுதூர்கடையில் நிருபர்களிடம் கூறியதாவது: “மனிதநேய மக்கள் கட்சி 2009ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கடந்த பார்லி., தேர்தலில் தனித்து போட்டியிட்டோம். 15 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். முதல் முறையாக சட்டசபை தேர்தலை சந்திக்கிறோம். அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்துள்ளோம். தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும் என்று விஜயகாந்த் கூறி வருகிறார். இதனால் அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., வருவதை நாங்கள் வரவேற்கிறோம். மனிதநேய மக்கள் கட்சிக்கு அ.தி.மு.க., கூட்டணியில் மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்படும். எங்கள் கட்சி தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் சொந்த சின்னத்தில் போட்டியிட உள்ளோம். 1991க்கு பிறகு சிறுபான்மை கட்சிக்கு மூன்று இடம் ஒதுக்கப்படுவது இது தான் முதல் முறை ஆகும்[7]. இருப்பினும், திமுகவில் உள்ள முஸ்லீம் கட்சிகள் வேறுவிதமாக பேசுகின்றன.

 

எங்களால்தான் திமுக- காங்கிரஸ் கூட்டணி பிழைத்தது: முஸ்லீம் லீக்[8]: சென்னை, மார்ச்.9, 2011: நாங்கள் ஒரு இடத்தை விட்டுக்கொடுத்ததால்தான் திமுக-காங்கிரஸ் இடையிலான கூட்டணி முறியாமல் காப்பாற்றப்பட்டது என அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தெரிவித்துள்ளது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக இரு கட்சிகளிடையே கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டபோது, அக்கட்சிகளின் நலன்விரும்பிகளுடன் தங்கள் கட்சி தொடர்புகொண்டதாக முஸ்லீம் லீகின் தேசியத் தலைவர் இ. அகமது தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள முஸ்லீம் லீக் சகாக்களுடன் ஆலோசித்து கருத்து வேறுபாடுகளைக் களைய என்னாலான முயற்சிகளைச் செய்தேன். தமிழக சகாக்களின் தாராளம் காரணமாக என்னால் அதைச் செய்ய முடிந்தது. இக்கட்டான நிலைமையும் முடிவுக்கு வந்தது என அகமது தில்லியில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். தேச நலன் கருதி மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்கவும், வலுப்படுத்தவும் தனது கட்சி எப்போதும் முயற்சித்து வருவதாக…………..”, அகமது குறிப்பிட்டார்.

 

எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்துல் சமதின் மகள் பாத்திமா முசாபர்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கப்பட்ட 3 சீட்களில் ஒன்றை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுக்கும் கட்சி மேலிட முடிவை எதிர்த்து மூத்த பெண் தலைவர் குரல் கொடுத்துள்ளார்[9]. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பெண்கள் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா முசாபர். இவர் மறைந்த அப்துல் சமதின் மகளாவார். வரும் சட்டசபை தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திமுக கூட்டணியில் உள்ளது. அக்கட்சிக்கு திமுக 3 சீட் ஒதுக்கியிருந்தது. ஆனால் காங்கிரஸுக்கு 63 சீட் கொடுக்க தீர்மானித்ததால் சீட் பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கிய 3 சீட்களில் ஒன்றை திமுக வாங்கி காங்கிரஸுக்குக் கொடுத்துள்ளது.

 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தனது பெருமை மற்றும் தன்மானத்தை விட்டுக் கொடுத்துள்ளது: இதற்கு பாத்திமா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஒரு சீட்டை திரும்ப எடு்த்துக் கொள்ள அனுமதித்ததன் மூலம் கட்சி தனது பெருமை மற்றும் தன்மானத்தை விட்டுக் கொடுத்துள்ளது. கட்சி தலைமையின் இந்த முடிவு பாரபட்சமானது, ஒருதலையானது. இதற்கு பொறுப்பேற்று கட்சியின் தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான இ. அகமது, மாநில தலைவர் காதர் முகைதீன் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும். நாங்கள் திமுக மற்றும் காங்கிரஸ் மேலிடங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஒரு சீட்டை விட்டுக் கொடுத்துள்ள எங்கள் கட்சி மேலிடத்தின் முடிவு முஸ்லிம் சமுதாயம் மற்றும் கட்சியினர் இடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது”, என்றார். உண்மையிலேயே அவர்கள் ராஜினாமா செய்வார்களா அல்லது எதிர்த்து பிரச்சாரம் செய்வார்களா, ஆறு இடங்களிலும் சசதுர்யமாக வெல்வார்களா என்பது மே மாதத்தில் தெரிந்து விடும்.

 

முஸ்லிம் லீக் கட்சிகளின் இணைப்பு (10-03-2011): இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அமைப்புடன், திருப்பூர் அல்டாப் தலைமையிலான தமிழ்நாடு முஸ்லிம் லீக் ஆகிய இரு கட்சிகளின் இணைப்பு, தி.மு.க., தலைவர் கருணாநிதி முன்னிலையில் அறிவாலயத்தில் நேற்று நடை பெற்றது. இது குறித்து காதர் மொய்தீன், அல்டாப் ஆகியோர் கூறியதாவது: “முஸ்லிம் சமுதாயத்தின் நலனுக்காகவும், அரசியல் களத்தில் ஒருங்கிணைந்த சக்தியாக தி.மு.க., கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபடுவோம்”, என்றனர்[10]. 2002ல் நடந்த ஒரு நிகழிச்சி இங்கு நினைவிற்கு வருகின்றது.

 

அதிமுகவுடன் தங்கள் கட்சி வைத்திருந்த உறவு முறிந்து விட்டதாக இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர்சுலைமான் சேட் கூறினார் (05-05-2002). சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது[11]: வாணியம்பாடி சட்டசபைத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த அப்துல் லத்தீப் மறைவு காரணமாகவே தற்போதுஅத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. எனவே இந்தத் தொகுதியை இந்திய தேசிய லீக்கிற்கே விட்டுக் கொடுக்க வேண்டும் என்று முதல்வர்ஜெயலலிதாவிடம் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தேன். இதுபற்றிப் பரிசீலனை செய்வதாக அப்போது அவர் உறுதியளித்தார். ஆனால் பாரம்பரியமாகவே முஸ்லீம்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இத்தொகுதியில் முஸ்லீம்கள் அல்லாத ஒருவரைஜெயலலிதா தன்னிச்சையாக அறிவித்துள்ளார். எங்களுடைய எந்த ஆலோசனையையும் கேட்காமலேயே அவர் இம்முடிவை எடுத்துள்ளதால், அதிமுகவுடனானஎங்கள் உறவை நாங்கள் துண்டித்து விட்டோம். முன்பு பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டதாகக் கூறிய ஜெயலலிதா, தற்போது அந்தக் கட்சியுடன் உறவுவைத்துக் கொள்ளத் தயாராகிக் கொண்டிருப்பதும் எங்களுக்குப் பெரும் வேதனையை அளித்துள்ளது. வாணியம்பாடியில் எங்கள் கட்சி போட்டியிடுவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனிடம் கோரிக்கைவிடுத்துள்ளேன் என்றார்.

 

அரசியல் கட்சிகளிம் போலித்தனங்கள்: திராவிட கட்சிகளைப் போல, முஸ்லீம் லீக்குகள் / கட்சிகளும் உருமாறி விட்டனவா அல்லது அதுபோல நடிக்கின்றனவா? இந்தியாவில் உள்ள ஒரே மதவாதி கட்சி பி.ஜே.பி தான் என்று இந்த முஸ்லீம் லீக்குகள் / கட்சிகளே கூறுவதும் வேடிக்கையான விஷயம் தான். ஆனால், செக்யூலரிஸ கட்சிகள் என்று கூறிக் கொள்ளும் திமுக, அதிமுக மாறி மாறி பி.ஜே.பியுடன் கூட்டு வைத்துள்ளன. இப்பொழுதுகூட, காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டு சேரும் பட்சத்தில் மாறுபட்ட எண்ணங்கள் இருந்தன. காங்கிரஸைப் பற்றி கேட்கவே வேண்டாம். செக்யூலரிஸம் சொல்லிக் கொண்டு பி.ஜே.பியை விட, அதிகமாகவே மதசாட்ர்புள்ள கட்சிகளுடன் – முஸ்லீம் லீக், கிருத்துவ கட்சிகள், சீக்கிய கட்சிகள் – தொடர்ந்து கூட்டு வைத்திருந்து வந்துள்ளன. ஆகவே, இப்படி முஸ்லீம் லீக்குகள் / கட்சிகள் ஆளும் மற்றும் எதிர் கூட்டணிகளில் இருப்பது, அரசியலை மீறிய நிலையைத்தான் காட்டுகிறது.

வேதபிரகாஷ்

11-03-2011


[1] கே. வி. ராமகிருஷ்ண ராவ், ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் (3), ஜின்னா பெரியாருக்கு எழுதிய கடிதம், பம்பாய், ஆகஸ்டு 17, 1944, http://www.thinnai.com/?module=displaystory&story_id=209011514&format=print&edition_id=20090115

[2] இந்துக்களை ஒழித்துக் கட்டியதன் மூலம் பாகிஸ்தான் சிறுபான்மையினயை பிரச்சினையை அரவே ஒழித்துவிட்டடு போலும்!

[3] இதைப் பற்றி நான் எழுதியுள்ள கட்டுரைகளில் இணைதளத்தில் பார்க்கலாம்.

[5] தினமலர், 234 தொகுதிகளிலும் அதிமுக.,கூட்டணி பெறும் : தமுமுக பொது செயலாளர் பேட்டி, பிப்ரவரி 26, 2011, http://www.dinamalar.com/News_Detail.asp?Id=195519

[6] அதிமுக பொதுச் செயலாளருக்கு தமுமுக தலைவர் திருக்குர்ஆன் அளிக்கும் காட், http://pfikaraikal.wordpress.com/2011/02/22/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/

[7] தினமலர், மனிதநேய மக்கள் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் பேட்டி, பிப்ரவரி 26, 2011, http://www.dinamalar.com/news_Detail.asp?Id=195461

[8] தினமணி, எங்களால்தான் திமுக- காங்கிரஸ் கூட்டணி பிழைத்தது: முஸ்லீம் லீக், First Published : 09 Mar 2011 03:53:36 PM IST http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=388118&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=

[10] தினமலர்,  முஸ்லிம் லீக் அமைப்புகள் இணைப்பு,  மார்ச் 11, 2011,

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=203425