Posted tagged ‘ஜமாத்-உல்-தாவா’

ஜாகிர் நாயக் உள்ளூர் தீவிரவாதம் வளர்த்த கூட்டத்தில் உள்ளது உண்மைதான் – தீவிரவாதிகள் ஈர்க்கப்பட்டனர் எனும்போது, இல்லை என்றால் மற்ற தொடர்புகள் சம்பந்தப்படுத்துகின்றன!

ஜூலை 24, 2016

ஜாகிர் நாயக் உள்ளூர் தீவிரவாதம் வளர்த்த கூட்டத்தில் உள்ளது உண்மைதான்  – தீவிரவாதிகள் ஈர்க்கப்பட்டனர் எனும்போது, இல்லை என்றால் மற்ற தொடர்புகள் சம்பந்தப்படுத்துகின்றன!

Holey_Attackers-IS released photos

01-07-2016 வெள்ளிக்கிழமை தாக்குதல் – 02-07-2016 சனிக்கிழமை ஐசிஸ் ஒப்புக்கொண்டது: பங்களாதேசத்தில் உள்ள தீவிரவாதிகள் அனைத்துல ரீதியில் செயல்பட்டு வரும் இயக்கங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது ஆராயப்பட்டு வருகின்றது. ஐசிஸ் அமைப்பே ஹோலே ஆர்டிசன் ஹோட்டலில் தாக்கியவர்களை அடையாளங்கண்டது என்று “சைட்” புலனாய்வு குழு [SITE Intelligence Group] உடைகளில் தோன்றும் ஜிஹாதிகளின் புகைப்படங்களை வெளியிட்டது[1]. வளைகுடா நாடுகளின் தீவிரவாத இயக்கங்கள் வெளியிடும் இணைதளங்களிலிருந்து அவை எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டன. ஐசிஸ் அந்த ஐந்து நபர்களை அடையாளம் கண்டது, மற்றும் புகைப்படங்களை வெளியிட்டது என்று கூறுகிறது[2]. இதனால், ஐசிஸ் தொடர்புகள் நிரூபிக்கப்படுகின்றன. உள்ளூர் ஜமாத்-உல்-தாவா எல்லோரையும் ஊக்குவித்து வருகின்றது. இவ்வாறு எல்லா குழுக்களும் சேர்ந்து வேலைசெய்து வருவது பங்களாதேசத்திற்கு பெரிய தலைவலியாக இருக்கிறது. இஸ்லாமிய நாடு என்றாலும், இவ்வாறு தீவிரவாதம் எல்லைகளைக் கடக்கும் போது உண்மைகள் வெளிவருகின்றன. இஸ்லாமிய நாடுகளுக்கே இஸ்லாமிய தீவிரவாதம் இப்படி இருந்தால், செக்யூலரிஸ போர்வை போற்றிக் கொண்டு போலித்தனமான “மதசார்பின்மையை” கடைபிடிக்கும் இந்தியாவின் கதியை அறிந்து கொள்ளலாம்.

Rohan Imtiyaz and the gang 01-07-2016 insired by Zakir Naik

03-07-2016 – அல்ஹுடா, ஜமாத்உல்தாவா மற்றும் இச்லாமிய ரிசெர்ச் பௌன்டேஷன் தொடர்புகள்:  கொலையுண்டவர்கள் மற்றும் பிடிபட்டவர்களின் பின்னணியை ஆராய்ந்த போது, அவர்கள் எப்படி தீவிரவாதிகளாக உருவானார்கள் என்று தெரிய வந்தது. பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டது மட்டுமல்லாது, ஜிஹாதித்துவ ஊக்குவிப்பை ஜாகிர் நாயக் மூலம் பெற்றதை ஒப்புக் கொண்டார்கள்:

  1. மீர் சமேஷ் மோபேஷ்வர்.
  2. ரோஹன் இம்தியாஸ்.
  3. நிப்ரஸ் இஸ்லாம்.
  4. கைரூல் இஸ்லாம்.
  5. ரிபான்.
  6. சைஃபுல் இஸ்லாம்.

இதனால், தான் பங்களாதேசம் ஜாகிர் நாயக்கைப் பற்றி விசாரித்து விவரங்களைக் கேட்டது. அந்நிலையில் அதன் உருது [the Jamaat-ud-Dawa urdu] இணைதளத்தை ஆயும்போது, அது அல்-ஹுடா [the Al-Huda International] இயக்கத்துடன் தொடர்புள்ளதை காட்டுகிறது. இதில் உள்ள சிந்தனைவாதிகள் தாம், ஜாகிர் நாயக்கின் பேச்சுகளால் ஊக்குவிக்கப்பட்டுள்ளார்கள். இதனால், இவை, இஸ்லாமிக் ரிசெர்ச் பௌன்டேஷன் [Dr Zakir Naik’s IRF or Islamic Research Foundation] இணைதளத்தை தமது இணைதளங்களுடன் இணைத்துள்ளன.  பதிலுக்கு, ஜாகிர் நாயக், இணைதளத்தை இணைத்ததால் மட்டும் ஹாவிஸ் சயீதுடன் தொடர்பு உள்ளது என்று சொல்ல முடியுமா என்று கேட்கிறார். சரி, ஆனால், இந்த பங்களாதேச ஜிஹாதிகள் “நீங்கள் தான் காரணம், ஊக்குவிப்பு” என்று காட்டியபோது, மறுக்காமல், அதற்கு நான் பொறுபேற்க முடியாது என்று நழுவினார். மேலும், இந்தியாவுக்கு வந்தால் கைது செய்யப்படலாம் என்று வராமலேயே டிமிக்கி கொடுத்து மறைந்து வாழ்கிறார். 05-07-2016லிருந்து ஜாகிர் நாயக் விவகாரங்களை  NIA விசாரிக்க ஆரம்பித்தது.

How-Indian-Media-Got-Mad-On-Zakir-Naik-And-Hafiz-Saeed-Links-Must-Watch

07-07-2016 – “26/11 மும்பை வெடிகுண்டு தீவிரவாதத்தின் சதிதிட்டம்” – ரஹீல் செயிக்: 2008ல் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களுக்கு “26/11 மும்பை வெடிகுண்டு தீவிரவாதத்தின் சதிதிட்டம்” தீட்டிய ஜமாத்-உல்-தாவா காரணம் என்று அறியப்பட்டுள்ளது. உலகளவில் தேடப்பட்டு வரும் தீவிரவாதிகளில் அவனும் ஒருவன். இந்தியா எத்தனை ஆதாரங்கள் கொடுத்தாலும், பாகிஸ்தான், தான் “தீவிரவாத நாடு” என்று ஒருவேளை அறிவிக்கப்படலாம் என்ற பயத்தில், அவனுக்கும், மும்பை தீவிரவாத குண்டுவெடிப்பிற்கும் சம்பந்தம் இல்லை, கொடுத்துள்ள ஆதாரங்கள் தேவையானதாக இல்லை என்றெல்லாம் சொல்லி காலந்தாழ்த்தி வருகிறது. ஆனால், தொடர்ந்து இவ்வாறு நடந்து வரும் தீவிரவாத செயல்கள் வெளிப்படுத்திக் கொண்டுதான் வருகின்றன. மும்பை குண்டுவெடிப்பில் 167 அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட சில நாட்களில் தான் இந்த இணைதளங்கள் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டன. இஸ்லாத்தைப் பற்றி, ஜிஹாதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால், இந்த இணைதளத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கிறது. இதனால் லஸ்கர்-இ-டொய்பா சம்பந்தமும் வெளிப்படுகிறது.

Raheel worked with IRF

ரஹீல் செயிக், ஹாவிஸ் மொஹம்மது சையீது, இஸ்லாமிக் ரிசெர்ச் பௌன்டேஷன் தொடர்புகள்:  2006ல் நடந்த மும்பை தாக்குதலின் சதிதிட்டத் தலைவன் ரஹீல் செயிக், அவன் ஜாகிர் நாயக்கினால் ஈர்க்கப்பட்டு, கவரப்பட்டான் என்று எடுத்துக் காட்டப்படுகிறது[3]. ஆனால், வஹாபி தீவிரவாத பிரச்சாரம் மற்றும் மற்ற தீவிரவாத தாக்குதல்களின் பின்னணியில் உள்ளவர்களின் இணைப்புகள் அதோடு முடிந்து விடவில்லை. இப்பொழுது பங்களாதேசத்தில் நடந்துள்ள தாக்குதலில் ஈடுபட்ட ஹோசன் இம்தியாஸ் மற்றும் ஹைதராபாதின் மாட்யூலின் முக்கியப் புள்ளி மால்வானி முதலியோரும் ஜாகிர் நாயக்கின் வஹாபி தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்டனர்[4]. இதனை அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். 2006ல் நடந்த மும்பை தாக்குதலின் சதிதிட்டத் தலைவன் ரஹீல் செயிக், மும்பையில் உள்ள இஸ்லாமிக் ரிசெர்ச் பௌன்டேஷனுக்குச் சென்றுள்ளான்[5]. பலமணி நேரங்களை அங்கு கழித்துள்ள அவன், ஐ.ஆர்.எப் தனது உந்துதல், தூண்டுதல், ஈர்ப்பு என்று சொல்லியிருக்கிறான்[6]. அதாவது தீவிரவாதிகளுக்கே தூண்டுதல் போன்ற பிரச்சரம் அப்படி அங்கு என்னக் கொடுக்கப் படுகின்றது என்று ஆராய்ச்சி செய்து தான் பார்க்க வேண்டும் போலிருக்கிறது. ரஹீல் செயிக்கின் சகோதரர்களான பைஸல் மற்றும் முஜம்மில் செயிக்குகளுக்கு சவுதி அரேபியா, துபாய், நேபாளம், பங்களாதேசம் போன்ற நாடுகளுடன் தொடர்புகள் இருந்தன. இவர்களும் 2006 குண்டுவெடிப்புகளில் சிக்கியுள்ளார்கள்[7]. புலனாய்வு குழுக்கள் இதனை செல்போன், வங்கி கணக்குகள் மற்றும் இதர போக்குவரத்துகளிலிருந்து அறிந்துள்ளார்கள். ரஹீல் பணத்தை சேகரித்து லஸ்கர்-இ-டொய்பாவுக்குக் கொடுத்து வந்ததான் மற்றூம் பாகிஸ்தானுக்கு சென்று வந்துள்ளான், அது இந்த திட்டத்தைத் தீட்டியதாகவும் புலனாய்வு அதிகாரிகள் கூறுகிறார்கள்[8].

© வேதபிரகாஷ்

24-07-2016

[1] SITE Intelligence Group released the photos on Saturday night and claims that they’ve collected the photos from online platforms used by the Middle East based terrorist group. According to earlier report by SITE Intelligence Group, Islamic State claimed responsibility for the assault in Holey Artisan Bakery, popularly known as Holey Bread, setting off a bloody standoff with the police in the capital Dhaka’s diplomatic zone. Around 9.30PM on Saturday (02-07-2016), SITE tweeted the photos of five young gunmen with the message ‘ISIS identified the five attackers involved in Bangladesh Attack and published their photos’. The undated photos show the young men holding guns in their hands are standing in-front of IS flag and clad in black dresses with smile on the face.

newsbangladesh.com, IS releases Holey Artisan gunmen photos, claims SITE, Staff Reporter, Inserted: 01:26, Sunday 03 July 2016, Updated: 16:17, Sunday 03 July 2016

[2] http://www.newsbangladesh.com/english/details/15846

[3] Hafiz Muhammed Saeed is the main architect of the 26/11 Mumbai terror attacks of 2008. Months after the worst terror strike in India which killed more than 167 innocent people, the two websites remained linked. “The connection with LeT does not end here. One of the masterminds of the 2006 Mumbai train blasts that killed 187 people – Rahil Sheikh was also influenced by Zakir Naik,” sources added.

India.today, Exposed: Zakir Naik’s link to 26/11 mastermind Hafiz Saeed, Ankit Kumar |  Gaurav C Sawant  | Posted by Sangeeta Ojha, New Delhi, July 7, 2016 | UPDATED 21:31 IST

[4] But the radicalisation link doesn’t end with 2006 train blast accused Rahil Sheikh. “Dr Zakir Naik with his hard line Wahabi Islam preaching is also alleged to have influenced terrorists like Rohan Imtiaz in Dhaka and the Malwani and Hyderabad Islamic State modules,” said an official.

http://indiatoday.intoday.in/story/exposed-zakir-naiks-link-to-26-11-mastermind-hafiz-saeed/1/710006.html

[5] ZeeTV.News, 2006 Mumbai train bombings mastermind Rahil Sheikh spent time at Islamic preacher Zakir Naik’s IRF: Report, Last Updated: Thursday, July 7, 2016 – 22:12

[6] http://zeenews.india.com/news/mumbai/2006-mumbai-train-bombings-mastermind-rahil-sheikh-spent-time-at-islamic-preacher-zakir-naiks-irf-report_1904682.html

[7] ZeeTV.News, Revealed: Zakir Naik’s 26/11 Mumbai terror attacks mastermind Hafiz Saeed connection – Know Explosive details, Last Updated: Thursday, July 7, 2016 – 23:43.

[8] http://zeenews.india.com/news/mumbai/revealed-zakir-naiks-links-with-26/11-mumbai-terror-attacks-mastermind-hafiz-saeed-here-are-explosive-details_1904687.html