Posted tagged ‘ஜமாதே-இ-முஸ்தபா’

ராஸா அகடெமி சார்பில் நடத்தப் பட்ட முஸ்லீம் ஆர்பாட்டம் ரகளை, கலவரம், தீவைப்பில் முடிந்து இரண்டுபேர் கொல்லப்பட்டுள்ளனர்!

ஓகஸ்ட் 11, 2012

ராஸா அகடெமி சார்பில் நடத்தப் பட்ட முஸ்லீம் ஆர்பாட்டம் ரகளை, கலவரம், தீவைப்பில் முடிந்து இரண்டுபேர் கொல்லப்பட்டுள்ளனர்!

ராஸா அகடெமி ( Raza Academy) சார்பில் மயன்மார் (பர்மா) மற்றும் அசாமில் முஸ்லீம்களால்  மும்பையில் ஆஜாத் மைதானத்தில் நடத்தப் பட்ட ஆர்பாட்டம் ரகளை, கலவரம், தீ வைப்பில் முடிந்து இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர்[1]. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை சன்னி ஜமைதுல் உல்மா மற்றும் ஜமாதே-இ-முஸ்தபா (Sunni Jamaitul Ulma and Jamate Raza-e-Mustafa) போன்ற இஸ்லாமிய அமைப்புகளும் ஆதரித்துள்ளன.

மைதானத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கூடினர். அமைப்புகளின் தலைவர்கள் பேச ஆரம்பித்தனர். ஆனால், அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பிய போராட்டக் காரர்கள், திடீரென்று போலீஸார் மற்றும் ஊடகக்காரர்களின் மீது கல்லெறிய ஆரம்பித்தனர்.

ஆஜாத் மைதானத்தில் மட்டும் கூட அனுமதி பெற்ற முஸ்லீம்களில், திடீரென்று தெருக்களில் வந்து ரகளை செய்ய ஆரம்பித்தார்கள். வெளியே நின்று கொண்டிருந்த டிவி-செனல்களின் வண்டிகள், போலீஸ் வேன்கள் முதலியவற்றை அடித்து நொறுக்கி தீ வைத்தனர். பிறகு  CST ரெயில்வே டெர்மினலுக்குள் (CST Railway terminus) நுழைந்து கண்ணாடி ஜன்னல்களை உடைக்க ஆரம்பித்தனர்[2].

3 மணிக்கு ஆரம்பித்த கூட்டம், 3.30ற்கு கலவரமாக மாறியது. எதிப்பு போராட்டம் என்று ஆரம்பித்த முஸ்லீம்கள் எப்படி திடீரென்று கலவரத்தில் இறங்கினார்கள் என்று தெரியவில்லை. தெருக்களின் வந்து ரகளை செய்து வண்டிகளை அடித்து நொறுக்கியதில் 10 பெஸ்ட் பேரூந்துகள், 6 கார்கள், 20ற்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் முதலியன கொளுத்தப்பட்டு சேதமடைந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், புறவழி ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது[3].

கலவரத்தை அடக்க தாமதமாகத்தான் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆகாசத்தில் சுட்டு, பிறகு லத்தி ஜார்ஜ் செய்துள்ளனர். அவர்களின் அடையாளம் தெரியவில்லை. இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகச் சொல்லப் படுகிறது[4]. 16 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் செயின்ட் ஜார்ஜ், ஜி.எச். மற்றும் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு எடுத்துச் செல்லப் பட்டுள்ளனர்[5].  இப்பொழுது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று போலீஸ் அதிகாரிகள் கூறுகிறார்கள். முஹம்மது சயீத் என்ற அகடெமியின் பொது செயலாளர் (Mohammed Saeed, General Secretary of the academy) திடீரென்று தமக்கும் அந்த கலவரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அறிக்கை விட்டிருக்கிறார்[6].

[புகைப்படங்கள் மற்ற இணைத்தளங்களினின்று எடுத்து உபயோகப்படுத்தப் பட்டுள்ளன – நன்றி]

© வேதபிரகாஷ்

11-08-2012


[6] Meanwhile, Raza Academy distanced itself from the violence. “While we were protesting at the ground, some people got aggressive and started behaving violently,” Mohammed Saeed, General Secretary of the academy, said. “We never encourage violence and strongly condemn such acts,” he added.

http://www.indianexpress.com/news/16-injured-as-antiassam-riot-protest-turns-ugly-in-mumbai/987080/2